Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது...15

  • Thread Author
அத்தியாயம்…15

வீர ராகவுக்கு மனது முழுவதுமே ஒரு இறுக்கம்… அது அவனின் முகத்திலுமே தெரிந்தது…

இந்து மதியின் வீட்டில் இருந்து தன் வீட்டிற்க்கு வந்தவன் தன் பதவியின் அதிகாரம் கொண்டு அரை மணி நேரத்திற்க்கு எல்லாம் தெரிந்து கொண்டு விட்டான்… வாசு தேவ் இந்துமதியின் பிரச்சனையை..

அதுவும் வாசு தேவ் பள்ளியில் படிக்கும் போது இந்து மதி தான் காதல் சொன்னது.. அதை எட்மாஸ்ட்டரை வரை கொண்டு சென்று.. என்று இந்து மதியின் பெற்றோர் வரை இழுத்து வைத்ததுமே அவனுக்கு தெரிய வந்து விட்டது தான்…

வாசு தேவ்வை பற்றி யோசித்தவன்.. நீ அவ்வளவு நல்லவனாடா…? என்று தனக்குள் பேசிக் கொண்டவனுக்கு விடையாக அவனின் காவல் மூளை சொன்னது..

இல்ல அவன் முகம் படித்த படிப்பு வேலை அனைத்துமே நல்லவனாக காட்டினாலுமே , அவன் முழி சரியில்லை என்று தான் சொன்னது..

ஆராயலாம் என்று மீண்டுமே அவனை பற்றிய அனைத்து விசயங்களும் ஆராய்ந்து தெரிய வர அவனுக்கு மூன்றே மூன்று நாட்கள் தான் வீர ராகவனுக்கு தேவைப்பட்டது..

இதோ அவனை பற்றி அனைத்து விவரங்களும் புள்ளி விவரங்களோடு அவன் முன் இருக்கும் கணினியில் வந்து விட்டது..

படிப்பில் பத்தாம் பன்னிரெண்டாம் தேர்வில் மாநிலத்தில் முதலவனாக தேர்வு பெற்று தான் படித்த பள்ளிக்கே பெருமை சேர்த்த மாணவன் என்று தான் இருந்தது....

அது தான் அன்று இந்து மதியின் விசயத்தில் ஒரு தலை பர்சமாக தீர்வு சொல்லப்பட்டு விட்டதோ என்று நினைத்து கொண்டான்..

இருவருமே டீன் ஏஜில் உள்ளவர்கள்.. இன்னும் கேட்டால் வாசு தேவ்.. இடைப்பட்ட ஒரு வருடம் அவனின் தந்தை வேலையில் கொடுத்த மாற்றத்தினால் அவனின் ஒரு வருடம் படிப்பு பின் தங்கி அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சமயம். அவனின் வயது பதினெட்டாக தான் இருந்தது..

அதாவது இந்திய அரசாங்கத்தின் சட்டத்திட்டத்தின் படி வாசு தேவ்… ஓட்டு போடும் உரிமையை அடைந்த வயது தான் அப்போது.

ஆனால் இந்து மதி பதினைந்தாம் வயதில் இருந்த வெளிப்படையாக சொல்வது என்றால் சிறுமி தான்.. ஏதோ பள்ளியே அவனை கொண்டாடியதில் பார்க்கவும் அழகாக இருப்பவனிடம் காதல் கடிதம் நீட்டியுள்ளாள்..

ஆனால் இதை ஏன் இப்படி இவன் பெரிது படுத்தினான்.. அவனின் நல்ல பெயருக்கா… இல்லை இல்லவே இல்லை..

அவனுடன் படித்து கொண்டு இருந்த ஓரு பெண் அவனிடம் அப்போது காதல் சொல்லி இருந்த சமயம் அது..

அந்த பெண் மீது உண்மையான காதல் எல்லாம் இல்லை… இந்த பெண் முன் மூன்று பெண் மீது அந்த வயதிலேயே காதல் மலர்ந்து.. அது பிரக்கப்பும் ஆகி இருந்த சமயம் அது..

ஏன் பிரேக்கப் ஆகி விட்டது.? இதோ காரணம்.. நன்றாக படிக்கும் பையன்… அனைவருமே பாடத்தில் சந்தேகம் என்றால் அவனிடம் தான் செல்வார்கள்..

அதில் பெண்களும் அடக்கம்.. ஒரு சில பெண்களுக்கு மட்டும் வாசு தேவ் கூடுதல் சலுகையாக தன் வீட்டிற்க்கு அழைத்து அந்த பெண்ணின் சந்தேகத்தை தீர்த்து வைப்பான்.. முதலில் பாடத்திலும்.. அடுத்து படுக்கையிலுமாக..

ஒரு சில பெண்கள் என்றால் அவன் விரும்பிய பெண்களை தான்…அதில் ஒரு பெண் விசயம் முற்றி அந்த பெண் வீடு இவன் வீடு என்ற வரை வந்து உள்ளது..

அதாவது வாசு தேவ் அந்த பள்ளியில் படிப்பு முடித்த சமயம் என்பதால், பள்ளி வரை செல்லவில்லை… அதோடு பெண் விவகாரம்.. வெளியில் தெரிந்தால் தங்கள் பெண் வாழ்க்கை தான் கெட்டு போகும் என்று பெண் வீட்டவர்களும் விட்டு விட்டனர்.. காரணம் தங்கள் வீட்டு பெண் தான் காதல் சொல்லி இருக்கிறாள்.. தன் பெண் தான் அவனை தேடி

அனைத்து தகவல்களின் தொகுப்பாக அவன் முன்.. அந்த வயதிலேயே… அப்படி செய்தவன்.. இப்போது என்று நினைக்கும் போது தான் வீர ராகவ் முகத்தில் அத்தனை இறுக்கம்..

கண்டிப்பாக அவன் இந்து மதியிடம் பேசும் பேச்சும்.. பார்வையும் தவறாக தான் இருக்கும்.. இதுவுமே வீர ராகவ்வுக்கு உறுதி..

முன் இந்து மதி காதல் சொன்னதை வைத்து கண்டிப்பாக பிளாக் மெயில் செய்து இருப்பான் என்று..

அவனின் இப்போதைய கோபம் எல்லாம் வாசு தேவ்வை விட இந்து மதியின் மீது தான் இருந்தது..

தன்னிடம் சொல்லவில்லையே என்று… நான் .. அதுவும் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி… தன் பதவி கொண்டு கூட தன் உதவியை அவள் நாடவில்லையே என்று கோபமாக இருந்தவன்..

இந்துமதியை பின் பார்த்து கொள்ளலாம்.. முதலில் வாசு தேவ்வை பார்க்கலாம் என்று அவன் விசயத்தை முதலில் முடிக்க பெங்களூர்க்கு சென்றான்.

இதே குற்றவாளி .. இல்லை அரசாங்க வேலையாக இருந்தால், பேசியில் மூலம் அங்கு இருக்கும் காவலரை வைத்து சுலமாக முடித்து இருந்து இருக்கலாம் தான்.

ஆனால் இது தனிப்பட்ட விசயம்.. அதோடு வீணாக இதில் இந்து மதியின் பெயரும் வந்து விடுமோ என்று நினைத்து தான் அவனே சென்றது..

வீர ராகவ் முதலில் வாசு தேவ்வை முடித்து விட்டு இந்து மதியிடம் பேசலாம் என்று அவன் நினைக்க.

வாசு தேவ்வோ… முதலில் இந்து மதியை அனுபவிப்பது தான் இப்போது முதல் வேலை.. கல்பனா கிணற்று தண்ணீர்… என்று இருந்தாலுமே அது எனக்கு தான்… ஆனா இந்துமதி.. கல்யாணம் வேறு ஆக போகுது.. நானே அவளை கன்னி கழித்தவனாக இருக்க வேண்டும். மத்தவங்க தொட்டவளை தொட்டு.. உடம்புக்கு ஏதாவது இழுத்து வைத்து கொண்டால், அதில் எல்லாம் வாசு தேவ் சுத்தம் தான்..

படித்தவனோடு… முதல் மாணவன் ஆயிற்றே… அதனால் தானோ அனைத்திலுமே முதலாவதாக இருக்க வேண்டும் என்று… கன்னி பெண்களை மட்டும் தான் அவன் தொடுவது..

ஆனால் பாருங்கள்.. அவன் நிச்சயம் செய்த கல்பனாவிடம் மட்டும்.. அத்தனை ஒழுக்க சிகாமணியாக தான் பேசுவான்.. நடந்து கொள்வான்…

கல்பனா கூட இவனின் தோற்றம். வேலை. அவன் பழகும் முறை பார்த்து அவளே தான் வாசு தேவ்விடம் தன் காதலை சொன்னாள்..

வாசு தேவ்வும் அதை ஏற்றுக் கொண்டு விட்டான்.. அவளை மட்டும் காதல் என்ற போர்வைக்குள் மட்டும் வைத்து கொண்டவன்..

தன் படுக்கை போர்வைக்குள் நுழைத்து கொள்ளாது குடும்பம் என்ற வட்டத்திற்க்குள் நுழைத்து கொள்ள வேண்டி.. தன் பெற்றோரிடம் சொல்லி முறைப்படி நிச்சயம் செய்து இன்று வரையும் மிக கண்ணியத்தோடு தான் அவளிடம் காட்டி கொண்டு இருகிறான்..

காரணம்.. கல்பனாவின் தந்தை பெங்களூர் சிட்டியில் ஐ.பி. எஸ்… அண்ணன் கலெக்ட்டர்… சொத்து பத்தும் எக்கச்சக்கம்… என்றாவது திருமணம் செய்து செட்டில் தான் ஆக வேண்டும். ஆவது வெல் செட்டிலாக ஆகலாம் என்று தான் கல்பனாவிடம் மட்டும் பழகுவதில் இத்தனை ஒழுக்கமும்… அவளை மட்டுமே தன் வீட்டிற்க்கு அழைத்து வராது தூர நின்று காதலிக்கிறான்..

அதை பற்றி தான் சென்னையில் அவனோடு தங்கி இருக்கும் பிராசந்த் … கூட.. “என்ன வாசு உன் பியான்ஸி போன் மேல போன் போடுறாங்கா நீ எடுக்காது போனை சைலன்ட்ல போட்டு வைச்சி இருக்க…. பொன் முட்டை இடும் வாத்து என்று நீ அடிக்கடி சொல்லுவ. “ என்று கிண்டலாக பேசியனுக்கு பதில் அளிக்கும் நிலையில் அவன் இல்லை..

ஒரு கையில் சிகரெட்டையும் இன்னொரு கையில் கை பேசியை வைத்து கொண்டு இருந்த வாசு தேவ்… அவ்வப்போது சிகரெட்டை ஒரு இழு இழுப்பதும்… இன்னொரு கையில் இருந்த கைய் பேசியை பார்ப்பதுமாக இருந்தவன் தோள் மீது வை வைத்த பிரசாந்த்..

“என்ன மச்சான். புது கிளியா..?” என்று ஒரு மாதிரியாக கேட்டவன். ஒரு மாதிரியாகவும் சிரித்து வைத்தான்.. பின் அவனே.

“ நான் வேறு முட்டாள் மாதிரி கேள்வி கேட்கிறேன் பாரு புது கிளியா என்று…?.. நீ தொடும் பட்சி எல்லாமே புதுசு தானேடா…” என்று சொன்னவனின் கண்ணில் ஏகாத்திற்க்கும் பொறாமை..

அதோடு… “ கொடுத்து வைத்தவன் மச்சான் நீ… உன் முகத்துக்கு தானா தேடி போய் வந்து விழுறாங்க… நீ எந்த மெனக்கெடும் கூட செய்ய மாட்டேங்குற…” என்று அங்கலாய்ப்பாக கூறியவன்..

“அது எப்படி மச்சான்.. இத்தனை வருஷம் மாட்டாம எல்லாம் செய்யிற…?” என்று கேட்டவனின் குரலில் இருந்த பொறாமை வாசு தேவ்வுக்கு நன்றாகவே தெரிந்தது.

அதில் அவனுக்கு ஒரு கர்வம் வந்து விட்டது.. தான் நல்லவன் என்று அனைவரின் முன்னும் மதிப்பு மிகுந்தவனாக வலம் வருவதில் ஒரு பெருமை என்றால்,

தன்னை போல இருப்பவனிடம்.. “ நான் பார்… “ என்று தன் ஆண்மைக்கு கிடைக்கும் வெற்றியை தன்னை போல இருப்பவனின் காட்டுவதிலும் வாசு தேவ்வுக்கு ஒரு பெருமை இருக்க தான் செய்தது.

அதில் இந்து மதியின் அழைப்புக்கோ.. இல்லை மெசஜூக்கோ ஆவளோடும். ஒரு வித டென்ஷனோடும் காத்து கொண்டு இருந்த வாசு தேவ்,, பிரசாந்திடம்…

“அதுக்கு எல்லாம் மச்சம் வேண்டும் மச்சான். நீயே என்னை காலேஜ் டேஸ்ல இருந்து பார்த்துட்டு வர.. நான் போய் ஒரு பெண் கிட்ட வலிய போய் பேசி இருக்கேனா. நீயே சொல்.?” என்று இது ஒரு பெருமை என்பது போல் கேட்டவனிடம் பிரசாந்த்,..

“இல்லை..” என்று உண்மையை தான் சொன்னான்.. பிரசாந்துக்கும் அது தானே பொறாமை…

வாசு தேவ் தன் லீலைகளை பெருமையாக…. “ அது தான்டா என் ஸ்பெஷாலிட்டியே.. நாம வலிய போனா பெண்களுக்கு சந்தேகம் வந்துடும்.. நமக்கு வேண்டும் என்று ஒரு பெண்ணை முடிவு செய்து விட்டா.. அந்த பெண் கிட்ட தான் நாம கண்ணியம் காண்பிக்கனும்.. அப்புறம் பாரு.. கிளி தானா வந்து தோள் மீது உட்கார்ந்து கொள்வதை…” என்று சொன்னவனிடம் பிரசாந்த் ஆதங்கமாக..

“அது எல்லாம் சரி தான். ஆனா ஒரு பெண்ணை கூட என்னை தொட விட மாட்டேங்குறியே ஏன்டா.? நீ தொட்ட பெண்ணை மத்தவங்க தொடுவது பிடிக்கலையா..?” என்று பிரசாந்த் கேட்டதற்க்கு..

“ஏன்டா அவளுங்க என்ன என் பெண்டாட்டியா. நான் மட்டுமே உரிமை கோரி இருக்க… அதே போல நான் தொட்ட பொண்ணுங்க. கல்யாணம் செய்யாது அப்படியே இருந்துட போறாங்கலா என்ன…?” என்று ஒரு மாதிரியா கேட்கவும்..

பிரசாந்த்..” பின் என்ன டா மச்சான். உன் தோளில் அமர்ந்த பெண்களை என் தோளுக்கு மாத்தி விடுவதற்க்கு எது தடுக்குது உனக்கு… உன் கிட்ட இருக்கும் போது வீடியோ எடுத்து வைத்தா போதும்.. நாம சொல்றது எல்லான் கேட்க போறாங்க.. நானுமே கொஞ்சம் அனுபவிச்சிப்பேன் தானே…” என்று தன் நெடுநாள் ஆசையை கூறியவன். தோள் மீது வாசு தேவ் தான் தோள் போட்டு.

“ மச்சான் நான் இத்தனை பெண்களை தொட்டும் இது வரை போலீஸ் கம்பிளையிண்ட் என்று போனது இல்ல… ஒரே பெண்.. அது கூட அப்போ நான் சின்ன பையன். அது கூட வீடு வரை தான் போலீஸ் கேஸ் எல்லாம் ஆகல…?” என்று சொல்லி கொண்டு வந்தவனின் பேச்சை…

பிரசாந்த்… “ அது தான் டா எப்படி..?” என்று கேட்டவனுக்கு..

“ம் ஒரு பெண்ணை ஒரு முறை தான் தொடுவேன்.. அதுவும் காதல் சொல்லி காதலியா.. பெண்களுக்கு எங்கு தொட்டா ஷாக் அடிக்கும் என்று தெரியும்.. நான் தொடும் பொண்ணுங்க எல்லாமே அவளுங்களும் என் கிட்ட விருப்பமா இருப்பது போல தான் எல்லா விசயமும் நான் நடத்தி முடிச்சிப்பேன்.. பின் தொட்ட பின் கொஞ்சம் கொஞ்சமா விலகி. பிரேக்கப் செய்து விடுவேன். அதாவது லவ் பண்ணி நாம இரண்ரு பேருக்கும் ஒத்து போகாது போல தான் ப்ரேக்கப் பண்ணிப்பேன்.. இது எல்லாம் நான் அந்த பெண்ணை ஏமாத்துன லிஸ்ட்டிலேயே சேராது.. இன்னும் கேட்டா அந்த பெண்ணே உணர மாட்டாள் நான் அவளை ஏமாத்த தான் அவளை காதலிச்சது போல நடிச்சேன் என்பதை எல்லாம்..
இப்படி நான் எல்லாமே பக்காவா ப்ளான் பண்ணி செய்துட்டு வந்து நான் நல்லவன் என்ற இமேஜையும் காப்பத்திட்டு வந்துட்டு இருக்குறேன்.. நீ உன் ஆசைக்கு என்னை பலி கொடுக்க பார்க்குற பார்த்தியா.. உனக்கு திறமை இருந்தா நீயே பிடிடா.. ஆனா உனக்கு எல்லாம் இப்போ நீ சுத்திட்டு இருக்கியே. ஆன்ட்டி அது தான் கிடைக்கும்..” என்று தன் ஆண்மையின் பெருமைகளை பேசி விட்டு..

தன் கை பேசியை எடுத்து கொண்டு தூரம் போனான்.. நீ கூப்பிடலேன்னா என்ன..? நான் கூப்பிடுறேன்.. இன்னைக்கு புக் செய்த ரூம் வேஸ்ட்டா போக கூடாது.. ஸ்டார் ஒட்டல். பணத்தின் அருமை தெரிந்தவனாக வாசு தேவ்வே இந்து மதியை அழைத்தான்…

தனக்கு வந்த அழைப்பை கை நடுக்கத்தின் இடையில் அகப்பட்டு கொண்டு இருந்த தன் கையை பேசியையே இந்து மதி பயத்துடன் பார்த்தாள் என்றால்.

வாசு தேவ் பேசியதை அனைத்தையும் ரெக்கார்ட் செய்து வைத்து இருந்த பிரசாந்த் தான் பதிவு செய்து வைத்திருந்த கை பேசியை ஒரு வித வன்ம சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்…




 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Prashanth Raghav set pannina aala iruppano?? I mean Raghav avanai vilaikku vangi iruppan
 
Top