Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....16

  • Thread Author
ஆசைகள் அடங்காது…16

கைகள் நடுங்க தன் கைய் பேசியையே பார்த்து கொண்டு இருந்த இந்துமதிக்கு அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்.. ? இரண்டு நாட்களுக்கு முன் வாசு தேவ் தன்னை அழைத்து சொன்ன…

சொன்ன.. அந்த வார்த்தை தவறு தன்னை மிரட்டிய… “ஒரு மணி நேரம் ஜஸ்ட்.. நீ கண்ணை மூடிக்க எல்லாத்தையும் நான் முடிச்சிகிறேன்.. அப்புறம் உன்னை தெரிந்தவன் போல கூட நான் காட்டிக்க மாட்டேன்.. ஏன்னா எனக்குமே எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சி.. பெண் பெரிய இடம்…அதனால உன் பின்னே சுத்தி என் வாழ்க்கையை கெடுத்துக்க நான் விரும்பல.. அதோட எனக்குமே ஒரு பெண்ணை ஒரு முறை தான்.. அடுத்து அடுத்து என்று நான் ரிஸ்க் எடுத்துக்க விரும்பல.. அதோட உனக்குமே மேரஜ் போல… இரண்டு பேருன்னா… பாவம் எனக்குமே மனசு ஒன்னு இருக்கும்மா..” என்று தன்னிடம் பேசிய பேச்சில் காலில் கிடக்கும் செருப்பை கழட்டி அடித்து விட தான் இந்து மதி நினைத்தாள்..

ஆனால் வாசு தேவ் அதற்க்கு அடுத்து பேசிய.. திரும்ப தான் அந்த வயதில் செய்த செயலை சொன்னவன் .

“கூடவே நீ என் கிட்ட பிரபோஸ் பண்ணும் போது என் கூட இருந்தவனை ஆபிசுக்கு வர சொல்லவா… நீ என் மீது எந்த அளவுக்கு ஆசையா இருந்த என்று இவங்களுக்கும் தெரியட்டுமே… ஆ உன்னை கட்டிகிறவனையும் கூப்பிடேன்.. தனி தனியா சொல்வது எதுக்கு வீணா நேரம் விரையம்….” என்று சொன்ன பேச்சில் இந்துமதி அமைதியாக இருக்கும் படியான நிலையில் தான் அவள் இருக்க வேண்டி இருந்தது.

பின் ஒரு நட்சத்திர ஓட்டலின் பெயரை சொல்லி அங்கு வா.” என்று சொன்னது எதற்க்கு என்று தெரியாதவள் இல்லையே.

கூடவே அடுத்து சொன்ன. “ உனக்கு மட்டும் தான் ஸ்டார் ஓட்டல் காசை செலவு செய்யிறேன்.. மத்த பெண்கள் எல்லாம் என் வீட்டிலேயே தான்… என்ன ஒன்னு அவங்களுக்கு ஒன்னுமே தெரியாது தான் என்னை காதலா நினச்சி என் கிட்ட வருவாங்கா. ஆனா நீ தான் எனக்கு எல்லாத்திலேயும் விதி விலக்கா வர போற.. ஆனா இதுவுமே நல்லா தான் இருக்கு.. சும்மா ஒரே மாதிரியா.. கொஞ்சம் போர் தான் அடிக்கும் லே… வெஜ் நான் வெஜ் என்று மாத்தி மாத்தி சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்..” என்று சொல்லி விட்டு வரவில்லை என்றால், அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும் வீர ராகவுக்குமே சொல்லி விடுவேன் என்று மிரட்டியவன்..

இதோ இன்று மாலை வர சொன்னவனின் காலை அழைப்பே அவளுக்கு ஒரு வித நடுக்கத்தை கொடுத்து விட்டது..

கண்டிப்பாக அவன் சொன்னது போல நான் நடக்க மாட்டேன்… அது மட்டும் உறுதி. ஆனால் உண்மை சொன்னால், வீட்டிலும். வெளியிலும், வீர ராகவ்.. அதன் மூலம் சாருகேசன் யாமுனா..? என்று அனைவருக்கும் தெரிய வந்து விடும் என்பது நிச்சயம்…

கண்டிப்பாக அதற்க்கு அடுத்து இவர்கள் தன்னை பார்க்கும் பார்வையும், பழகும் விதத்திலுமே வித்தியாசம் படும்..

அதுவும் வீர ராகவ்… சட்டப்படி கூட ஏதாவது செய்ய கூடும்… உண்மை சொல்லாது. அது முடியவே முடியாது… என்று மனதில் அத்தனை குழப்பம் பயம்.. என்று குழம்பிய மன நிலையில் இருந்த இந்துமதி வீட்டில் அவளின் திருமணத்திற்க்கு ஏன்று ஏற்பாடு படு ஜோராக நடந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளுக்கு கவலையும் பயமும் ஏற்பட்டது..

திருமணம் நடக்காது போனால், என்று அதை நினைக்கும் போதே… அவளுக்கே மனது ஒரு மாதிரியாக தான் ஆனது..

உண்மையை சொன்னால் வீர ராகவை இந்து மதிக்கு பிடித்து தான் இருந்தது.. இன்னும் கேட்டால் அதிகம் தான் அவனிடம் பேசவில்லை என்றாலுமே, ஆளுமையான அவனின் உருவமும் , கணீர் என்று பேசும் பேச்சும்.. பேச்சில் மட்டுமே தன் மீது அக்கறை காட்டுபவன்.. பார்வையினால் தன்னை தவறாது பார்க்காது என்று இப்போது வாசு தேவ்வுக்கும் வீர ராகவுக்கு இருக்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருப்பது அவளுக்கு மிக தெளிவாகவே தெரிகிறது தான்..

ஆனால் அந்த வயதில் இது எல்லாம் தெரியவில்லையே… கண்ணுக்கு அழகாக. பள்ளியில் படிக்கும் பெண்கள் அனைவரும் அவனை பார்க்க. அவன் தன்னை பார்த்தது அவனுக்கு அப்போது பெருமையாக தானே இருந்தது..

ஆனால் இப்போது அவனின் பார்வையை புரிந்து கொண்டவளுக்கு, அன்றுமே அவன் மற்ற பெண்களை திருட்டு தனமாக கீழ் பார்வை பார்த்தது ஏன் என்று புரிந்தது..

மனதில் தவறான எண்ணம் இல்லாதவர்கள் மட்டும் தான் ஒரு பெண்ணிடம் கண்ணை பார்த்து பேச முடியும்.. அது போல வாசு தேவ் ஒரு நாளும் பேசவில்லை என்பது இப்போது புரிகிறது தான்..

ஆனால் அந்த வயதில் இதை அனைத்துமே பிரித்து பார்க்க தெரியவில்லையே… இது சொன்னால் புரிந்து கொள்வார்களா.? நாங்கு நாட்கள் முன் அம்மாவே தன்னை நம்பாது அப்படி பேசிய பின் மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பது கூட முட்டாள் தனமானது தானே… என்று பல வித குழப்பங்கள் இந்து மதியின் மனதிற்க்குள்..

இதே குழப்பத்தில் இருக்க வாசு தேவ்விடம் இருந்து வந்த அழைப்பு நின்று விட.. இவளுமே பேசியை சைலண்டில் போட்டு விட்டு கூடத்திற்க்கு வந்தாள்..

சொல்லி விட வேண்டும்.. அனைத்துமே சொல்லி தான் ஆக வேண்டும்.. திருமணத்தின் முன் நாளோ.. இல்லை திருமணம் அன்றோ….. இல்லை திருமணம் முடிந்தும் வீர ராகவனுக்கு தெரிய வந்தால், கண்டிப்பாக அதை பெரியதாக எடுத்து கொள்ளாது கடந்து போக மாட்டான்.. காரணம் அவனுமே ஒரு ஆண் மகன் தானே.. என்று தனக்கு தானே பேசி ஒரு முடிவு எடுத்தவளாக தன் திருமணத்தை நிறுத்த முடிவு செய்து அதை பற்ற பேச தான் இந்து மதி கூடத்திற்க்கு வந்தது.

வந்தவளின் காதில்… அவளின் அன்னை… சாப்பாடு பற்றி பேச… அதுவும் ஒரு பெரிய லிஸ்ட்டாக கொடுத்தவர்..

இதை செய்து கொடுக்கும் கேட்டரிங்கையும் கூற… அவரிடம் இத்தனை அயிட்டம் கொடுத்தால், அது எவ்வளவு ஆகும் என்று,. ஒரு வருடம் முன் இதே கேட்டரிங்கை வைத்து ஒரு திருமணத்தை முடித்த இவர்கள் வீட்டு உறவு முறை சொல்லி இவளுக்கு தெரியும்.

அதோடு எத்தனை பேருக்கு உணவு என்று அண்ணம் சொன்ன எண்ணிக்கையில் இந்து மதி அசந்து தான் போய் விட்டாள்..

எதற்க்கு இத்தனை பேர்.. செலவு… இத்தனை செலவு செய்து அத்தனை பேர் முன் நிலையில் தன் திருமணத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால், அவளாள் நினைத்து கூட பார்க்க முடியவில்லை…

சொல்ல வேண்டும் சொல்லி தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் முன் சென்று அமர்ந்தவளை நிமிர்ந்து பார்த்த அவளின் அன்னை பின்…

அவளின் தந்தையிடம் திருமணத்தின் வேலைகளான. இது வரை யார் யாருக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்து இருக்கிறோம்.. யார் யாருக்கு எல்லாம் வைக்க வேண்டும்..

இதில் நேரில் சென்று வைப்பவர்கள் கொரியர் மூலம் பத்திரிக்கை அனுப்புவது என்று அவர்கள் பேச்சுக்கள் அனைத்துமே அவளின் திருமணம் பற்றிய பேச்சுக்களாகவே இருந்தது.

அதை கேட்க கேட்க இந்து மதியின் மனதிற்க்கு அவ்வளவு கஷ்டமாகி போனது.. தன் திருமணத்தை எவ்வளவு ஆவளாக எத்தனை செலவு செய்து நடக்க நினைக்கிறார்கள்..

இவ்வளவு செலவுகள் இவர்களின் வசதிக்கு அப்பார்ப்பட்டது தான்.. அதுவும் அவளின் அன்னை செலவு செய்ய அத்தனை பார்ப்பவர். அவரே இத்தனை செய்யும் போது.

“வேண்டாம்.. இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் ..” என்று சொல்வதை எத்தனை கொடுமையான விசயம்..

அதுவும் வீர ராகவை தனக்கு பிடித்தும் இருக்கும் போது. வேண்டாம் என்று சொல்லும் வலி.. ஆனாலுமே சொல்லி தான் ஆக வேண்டும் என்று நினைத்து தன்னை திடப்படுத்தி கொண்டவளாக..

தன் அப்பாவிடம்.. “ப்பா…” என்று சொல்ல ஆரம்பிக்கும் போது அவளின் அண்ணன்..

தன் கை பேசியில் இருக்கும் ஒரு லிங்கை காட்டி….

“அப்போ இந்த வாஷிங்க மிஷின்… பிரிஜ்… “ என்று அவன் ஒரு பக்கம் பேச…அன்னை மீண்டுமே வெள்ளி பாத்திரம் எல்லாமே இருக்கு,. பூஜை பொருளை கூட வாங்கிட்டேன். ஆனா குத்து விளக்கு கொஞ்சம் சின்னதா இருப்பது போல எனக்கு தோணுது… சபையில் அது நிறக்க தெரியாது…” என்ற அம்மாவின் பேச்சில் இந்து மதிக்கு அய்யோ என்று ஆனது தான்..

ஆனால் சொல்லி தான் ஆக வேண்டும்.. தயங்கி நின்றாள் நாளை அனைவரின் முன்னும் தலை குனிந்து தான் நிற்க வேண்டும்.. இப்போதே பாதி பேருக்கு மேல் பத்திரிக்கை வைத்தாயிற்று… அதே போல செலவும் நிறைய தான் செய்து இருக்கிறார்கள்.. ஆனால் இதை பார்த்தால் நாளை எனும் போதே..

தனக்குள் தானே போராடியவளாக… “ப்பா ம்மா ண்ணா நான் உங்க கிட்ட பேசனும்..” என்று இந்து மதி சொல்லவும்.

இத்தனை நேரம் அவளின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தவர்கள் இந்து மதியின் இந்த பேச்சில், அதுவும் பேசும் போது அவள் முக பாவனை காட்டிய விதத்தில்..

அனைவரும் அவளை என்ன என்பது போல் தான் பார்த்தனர்… அதுவும் அவளின் அன்னை அவளை பார்த்த அந்த பார்வை… ஏதாவது ஏடா கூடாமாக சொல்லி விடுவாளோ… அவர் தான் மகளையும், மகனையும் கவனித்து கொண்டு இருக்கிறாரே… இருவரின் முகமும் சரியில்லை என்பது.. என்ன குண்டை தூக்கி போட போகிறாளோ மகள் என்று அவர் நினைக்க..

அவர் நினைத்தது போல் தான் இந்து மதி… “ என் கல்யாணம்… என்று சொல்லும் போதே இந்து மதியின் அண்ணனின் கை பேசிக்கு அழைப்பு வந்தது அழைத்தவன் வீர ராகவன்.

வேறு யாராவது இருந்தால், தங்கையின் பேசுவதை கேட்டு இருந்து இருப்பான். அழைப்பது மாப்பிள்ளை ஆயிற்றே …அதனால் உடனடியாக ஏற்றவன்..

வீர ராகவன் சொன்ன. “ உன் தங்கை ஏன் செல்லை எடுக்கல. நான் எத்தனை முறை கூப்பிட்டே இருப்பேன்.. அவள் வீட்டில் தானே இருக்கா..?” என்று கேட்டவனின் குரலில் கொஞ்சம் பர பரப்பு தெரிய.

ஆனந்த்… “ வீட்டில் தான் இருக்கா மாப்பிள்ளை செல்லை அவள் ரூமில் வைச்சிட்டா. இங்கு எங்க கூட ஹாலில் இருப்பதால் கேட்கல போல…” என்று ஆனந்த் விளக்கம் கொடுக்கும் போதே… வீர ராகவன்.

“நான் திரும்ப அவள் செல்லுக்கு கூப்பிடுறேன்.. அவளை எடுத்து பேச சொல்..” என்று சொன்ன வீர ராகவன் ஆனந்த் அழைப்பை அணைத்தவன் இந்து மதியின் கை பேசிக்கு அழைத்தான்..

இந்து மதியின் வீடு பெரிய வீடு எல்லாம் கிடையாது. அறையில் பேசியின் சத்தம் கூடத்திற்க்கு கேட்பது போலான அளவில் தான் அவளின் வீட்டின் அளவு இருந்தது..

இத்தனை முறை அழைத்தான் சத்தம் கேட்கவில்லையே என்று நினைத்த அவளின் அம்மா.

“என்ன டி போனை சுச் ஆப் பண்ணிட்டியா…?” என்று கோபத்துடன் கேட்டார்..

“இல்லேம்மா சைலண்டில் தான்..” என்று இந்து மதி இழுக்க.. அவளின் அண்ணன்..

“போ போய் எடு.. இந்நேரம் மாப்பிள்ளை திரும்ப கூப்பிட்டு இருப்பார்.. போ போ.. மாப்பிள்ளை குரலில் டென்ஷன் தெரியுது..” என்றதில் இந்து மதி சட்டென்று எழுந்து தன் அறைக்கு சென்றவளின் காதில்..

அவளின் அம்மா அப்பாவிடம்.. “ இந்த கல்யாணத்தில் உங்க மகள் ஏதாவது எடுக்கு மடக்கு செய்தா பாருங்க. நான் மனுஷியா இருக்க மாட்டேன்..” என்ற வார்த்தை காதில் வாங்கி கொண்டே தான் தன் அறைக்கு சென்றாள் இந்துமதி..


 
Active member
Joined
May 12, 2024
Messages
198
Naan ninaichen.. Veera antha time attendance poduvan nu… ippo avan kitta ellathaiyum solluwala ava?
 
Top