Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது...18

  • Thread Author
அத்தியாயம்…18

இந்து மதியின் அண்ணன் ஆனந்துமே பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியில் தான் வேலை பார்க்கிறான்.. ஒர்க்பர்ம் ஒம் என்பதினால் தற்சமயம் சென்னையில் இருக்கிறான்..

கூடவே தங்கையின் கல்யாணம் வேலையும் கூட சேர.. வாரம் ஒரு நாள் பெங்களுரில் இருக்கும் தன் அலுவலகத்திற்க்கு செல்பவன்… கடந்த ஒரு மாதமாக செல்லவில்லை..

மாலை தேனீர் அருந்தி கொண்டு இருந்தவனின் கை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.. அழைத்த பெயரை பார்த்தவன் உடனே நிமிர்ந்து தன் தாய் தந்தையரை பார்த்தான்..

அவர்கள் இருவரும் கல்யாண வேலைகளை பற்றி ஏதோ மும்மூரமாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவன் மெல்ல அவர்களின் கவனத்தை ஈர்க்காது அழைப்பை ஏற்றவாறு வெளி வாசலுக்கு சென்றவன்.. குசு குசு என்று மும்மூரமாக பேசிக் கொண்டு இருந்தவனின் முகத்தில் போக போக முகம் குழப்பம் அடைந்தது…

பின்… “பயப்படாதே இதோ வந்துடுறேன்.. ஒன்னும் இல்ல… நான் வந்துடுறேன்…” என்று இவனுக்கு பேசியில் அழைத்தவர்களுக்கு தைரியம் சொன்ன ஆனந்த்…

சொன்னது போல உடனே பெங்களூர் கிளம்ப விடு விடு என்று கூடத்திற்க்கு வந்தவனிடம்.. அவனின் அம்மா.

“எங்கடா போயிட்டே.. காபி கூட குடிக்காது..” என்று கேட்ட அவனின் அம்மாவின் பேச்சை எல்லாம் காதில் வாங்கி கவனிக்கும் நிலையில் எல்லாம் அவன் இல்லை..

“ம்மா நான் உடனே பெங்களூர் போகனும்..” என்று பேச்சில் அவசரத்தை காட்டியவன். அதை செயலிலும் காட்டிய வாறு விடு விடு என்று தன் அறைக்கு சென்றவன் தன் உடைகளை எல்லாம் அடுக்கி கொண்டு மீண்டுமே கூடத்திற்க்கு வந்த ஆனந்தனின் அவசரத்தில், அமர்ந்திருந்த அவனின் தாய் தந்தை இருவரும் எழுந்து நின்று விட்டனர்..

மீண்டுமே அவன் அன்னை…. “சப்பாத்தி மாவு பிசைந்து வைத்து இருக்கேன் ஆனந்த் மூனு சுட்டு கொடுத்துட்டா வெளி சாப்பாடு உனக்கு தான் ஒத்துக்காதே…” என்று சொல்லி கொண்டே சமையல் அறைக்கு செல்ல பார்த்த அன்னையை பிடித்து தடுத்து நிறுத்திய ஆனந்த்..

“ம்மா அதுக்கு எல்லாம் எனக்கு இப்போ நேரம் கிடையாது.. நான் அவசரமா போகனும்…” என்று ஆனந்த் பெங்களூர் போவதிலேயே குறியாக இருந்தான்…

ஆனந்தின் தந்தை ஜெய பிரகாஷோ… “கல்யாணம் முடிந்து தான் இனி பெங்களூருக்கு போவேன் என்று சொன்ன…?” என்று கேட்ட தந்தையிடம்..

“ப்பா ஆபிசில் ஒரு பிரச்சனை… உடனே வர சொல்றாங்க.. இல்ல இல்ல நான் என் தங்கையின் கல்யாணம் முடிச்சிட்டு தான் வரேன் என்று சொல்ல முடியுமா….?” என்று என்று இல்லாது இன்று தன் தந்தையிடம் எரிந்து விழ..

மகனின் பேச்சில் தந்தை எதுவும் சொல்லாது அமைதியாகி விட்டார்..ஆனால் தன்னுள்ளே உழண்டு கொண்டு இருந்த இந்து மதி அண்ணனின் இந்த சத்தமான பேச்சில் தன் அறையில் இருந்து வந்தவள் என்ன இது என்பது போல தான் தன் அண்ணனை பார்த்தாள்.

அண்ணன் தந்தைக்கு அடங்கிய பிள்ளை. பெரியவர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து பேசுபவனின் இன்றைய பேச்சில் அதிர்ந்து போக..

அவளின் அன்னை மகனிடம் ஏதோ பேச பார்த்தவரை தடுத்து நிறுத்திய ஜெய பிரகாஷ்.. அவனுக்கு ஏதோ ஒர்க் டென்ஷன் விடு….” என்றவர்.

மகனிடம்.. “லேப் டாப் பேகை விட்டுட்டு போற பாரு.. எடுத்துட்டு போ..” என்று சொல்ல.

தன் கையில் இருந்த ட்ராவல் பேகை கீழே போட்டு விட்டு… “ப்பா…” என்று அழைத்து அவரை அணைத்து கொண்டவன்..

“ப்பா சாரிப்பா.. சாரிப்பா..” என்று கட்டி அணைத்து கொண்ட தந்தையை விடாது மன்னிப்பு கேட்ட மகனின் முதுகை தட்டி கொடுத்தவர்.

“பரவாயில்லை ஆனந்த்… நீ டென்ஷனா போகும் போது நான் கல்யாண வேலை பத்தி பேசினது தப்பு தானே.. எனக்கு நல்ல படியா இந்துமதியின் கல்யாணம் முடியனுமே.. அந்த டென்ஷன் பா. சரி சரி உனக்கு நேரம் ஆச்சி பாரு… சீக்கிரம் கிளம்பு…” என்று இப்போது ஆனந்தின் தந்தை அவனை அவசரப்படுத்தினார்…

ஆனந்த் இப்போது தந்தை கேட்காமலேயே… “ ப்பா நான் போகும் வேலை முடிந்த உடனே நான் வந்து விடுவேன் ப்பா. நானுமே சீக்கிரம் வர தான் பார்ப்பேன் ப்பா… நீங்க கல்யாண வேலையில் ஒரி பண்ணிக்காதிங்க… “ என்று தந்தையிடம் சொன்னவன்.. தாயிடமும் தங்கையிடமும் விடைப்பெற்று சென்றவனின் முதுகையே தான் இந்து மதி பார்த்திருந்தாள்..

சிறிது நேரம் முன்பு தான். வாசு தேவ்வை பற்றி அண்ணனிடம் சொன்னால் என்ன..? என்று நினைத்து இருந்தாள். இப்போது அவனுமே சென்று விட அடுத்து என்ன செய்வது என்று தெரியாது முழித்து கொண்டு நின்று இருந்தவளின் கையில் இருந்த கை பேசிக்கு அழைப்பு வருகிறது என்பதை உணர்த்த அதில் இருந்து வெளிச்சம் வர. அதை பார்க்காது தெரிந்து விட்டது அழைப்பது வாசு தேவ் தான் என்பது…

பத்து நிமிடத்திற்க்கு ஒரு முறை தான் அவன் விடாது அழைத்து கொண்டு இருக்கிறானே..

தாய் தந்தை என்ன இது போன் வந்துட்டே இருக்கு என்று கேட்க போகிறார்கள் என்று பயந்து கொண்டு தான் அன்றைய நாள் முழுவதுமே கை பேசியை சைலண்டில் போட்டு இருந்தவள் கூடவே அதை கையிலும் வைத்து கொண்டாள்… தான் அழைப்பை எடுக்கவில்லை என்றால் வீட்டிற்க்கே வந்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு.

இங்கு பெங்களூரில் தன் எதிரில் இருந்த தன் தங்கை கிருஷ்ண வேணியை அடி வெளுத்து வாங்கி கொண்டு இருந்தாள்… இந்து மதியின் தோழியும், ஆனந்தின் காதலியுமான கவிதா.

“என்ன தைரியம் டி.. உனக்கு நீ அந்த அளவுக்கா மிஞ்சி போய் இருக்க.. என்ன தைரியத்தில் நீ போலீஸ் ஸ்டேஷன் வரை போன… பதினெழு வயசு டி உனக்கு.. அதுக்குள்ள. “ என்று திட்டி கொண்டு இருந்தவள்.. அதற்க்கு மேல் சொல்ல முடியாது தலை மீது கை வைத்து கொண்டு கவிதா அமர்ந்து விட்டாள்.

அவளாள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை… அவளுமே இருபத்தி மூன்று வயது உடைய பெண்.. கல்லூரி படிப்பு முடிந்த உடனே சென்னையில் வேலையும் கிடைத்து விட.

தாய் தந்தையரை இழந்து அத்தை குடும்பத்தின் துணையில் வாழும் கவிதாவுக்கும் அவள் தங்கை கிருஷ்ண வேணிக்கும். .. இந்த வேலை கிடைத்தது அத்தனை ஆசுவாசம் கிட்டியது..

பின் இருக்காதா தன் அத்தை தங்கள் பெற்றோர் விட்டு சென்ற அவர்களின் வீட்டை தொட்டு தான் தனக்கும் தன் தங்கைக்கும் ஆதரவு கொடுத்தது..

ஒரு வகையில் அத்தை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏனைய உறவுகள்… வயது வந்த பெண்… அதோடு சின்ன பெண்ணிங்களின் பொறுப்பை ஏற்றால் நாளை பிரச்சனை வர கூடும் என்று விலகி விட.

ஒன்று விட்ட இந்த அத்தை தான் தங்களின் பொறுப்பை எடுத்து கொண்டது.. அவர்கள் இருந்தது வாடகை வீடு.. அதனால் சொந்த வீடான இவர்கள் வீட்டிற்க்கு அவர்கள் குடிபுக…


அத்தை குடும்பத்தினர் தங்களின் மீது பாசம் அக்கறை என்று காட்டா விட்டாலும், கொடுமை எல்லாம் படுத்தவில்லை… என்ன என்று ஏற்கனவே அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்க கூட இவர்கள் இருவரையும் சேர்த்து ஏழு பேருக்கு சமைப்பது… சமைத்த பின் பாத்திரம் விழுவது… துணி துவைப்பது. அது வாஷிங்க மிஷின் பார்த்து கொள்ளும் என்றாலுமே,

அது சாயம் போகும் துணிகளை எடுத்து விட்டு போடுவது காய வைப்பது பின் அதை எடுத்து மடித்து வைப்பது என்று அதற்க்கும் வேலைகள் இருக்க தானே செய்யும்..

அப்போது கவிதாவுக்கு பதினைந்து வயது என்றால் கிருஷ்ண வேணி ஒன்பது வயது சிறிய பெண்…அதனால் அவளை எடுப்புடி வேலையாக வெங்காயம், பூண்டு தோள் உரித்து கொடுப்பது..

அருகில் இருக்கும் கடைக்கு போய் வருவது என்று அவள் பார்க்க.. கவிதா சாமன் துளக்கி.. துணி காய போட்டு விட்டு பள்ளிக்கு சென்றால், வந்த பின் அந்த துணியை எடுத்து மடித்தும் வைத்து விடுவாள்..

அத்தை அத்தை மகளுமே வேலை பார்ப்பதால், கவிதாவுக்கு அது பெரியதாக படவில்லை.. அதனால் கவிதாவின் சிறிய வயது வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லவில்லை என்றாலும், பிரச்சனை இல்லாது தான் சென்றது.

அதுவும் எது வரை என்றால் அத்தையின் இரண்டாம் மகன் கல்லூரி படிப்பு முடிந்து ஒரு வேலைக்கு செல்லும் வரை தான்..

முதலில் தன்னை ஆர்வமாக பார்ப்பதையும், தன்னிடம் பேசும் ஒரு சில பேச்சுக்களையும் வைத்து பார்த்து ஒரு சமயம் தன் அத்தை மகன் தன்னை விரும்புகிறானோ என்று தான் முதலில் நினைத்தாள்..

அப்போது அவள் கல்லூரியின் இரண்டாம் வருடம் இருந்த சமயம் அது… காதல் என்று சொன்னால் படிப்பு முடிந்து தான் பின் என்ன என்றாலுமே நான் யோசிக்க வேண்டும் என்று சொல்ல தான் நினைத்து கொண்டு இருந்தாள்..

ஆனால் ஒரு நாள் அவள் தங்கை கிருஷ்ண வேணி கண்கள் கலங்க இரவில் மொட்டை மாடிக்கு வா என்று தன்னை ரகசியமாக அழைத்த போது கூட

கவிதா அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை.. இது போல சில சமயம் நடப்பது தான்… அத்தை மாலை சிற்றுண்டியாக போண்டா… பணியாரம் ஏதாவது செய்தால், இவளுக்கு இரண்டு கொடுத்து விட்டு அவர் மகளுக்கு நாங்கு கொடுத்து விட்டால் போதும்..

இவள் வரும் வரை அவளின் முகம் அழுகையில் தான் கரையும்..

அதே போல இவளிடம் சொல்லி ஒரு மூச்சு அழுத பின் தான் அவள் சாதாரணமாக ஆகுவாள். அதே போல என்று நினைத்து கொண்டு தான் தங்கை முன் செல்ல கவிதா பின் சென்றாள் மொட்டை மாடிக்கு.

ஆனால் அவள் சொன்ன விசயமான.. இவள் விரும்புகிறானோ என்று சந்தேகம் கொண்ட அவளின் அத்தை மகனின் பெயரை சொல்லி.

“அந்த பொறுக்கி என்னை இங்கு எல்லாம் தொடுறான் அக்கா…” என்று சொல்லி விட்டு தன்னை அணைத்து கொண்டவளை தானுமே அணைத்து கொள்ள வேண்டும்..

அவளின் அழுகையை நிறுத்த வேண்டும்… அவளுக்கு தைரியம் சொல்ல வேண்டும் என்று தெரியாது சிலையாக நின்று விட்டாள்.. பாவம் அவளும் என்ன தான் செய்வாள்…

அவளுமே அப்போது பத்தொன்பது வயதே ஆன சின்ன பெண் தானே… என்ன செய்வது என்று தெரியாது தங்கையை விட கவிதா பயந்து தான் விட்டாள்…

என்ன இது. புதிய பிரச்சனை… இந்த பிரச்சனையை நான் என்ன செய்ய வேண்டும்.. வெளியில் போகிறவன் இது போல செய்தாள்.. காலில் இருக்கும் செருப்பை கழட்டி அடிக்கலாம்.. வீட்டில் சொல்லலாம்…

ஆனால் வீட்டில் இருக்கும் ஆணே இது போல செய்தால், என்ன செய்வது இரவு முழுவதுமே இதோ யோசனை தான் கவிதாவுக்கு,..

மறு நாள் கொஞ்சம் லேட்டாக தான் எழுந்தாள்.. எழுந்தவள் பார்த்தது தன் அருகில் இருக்கும் படுக்கையை தான்.. அங்கு தங்கை இல்லாது போல சட்டென்று பதறி போய் எழுந்தவள் அவசர அவசரமாக தங்கள் அறையில் இருந்து வெளியில் வந்தவள் கண்ணுக்கு தன் தங்கை எங்கும் தென்படாது போக.

சமையல் கட்டுக்கு சென்றவள்.. “அத்த வேணி எங்கே…?” என்று கேட்டவளிடம்…

“மாடியில் துணி காய போட அனுப்பி இருக்கேன்.” என்று சொன்னவர்… பின்.. “ என்ன நீ இவ்வளவி லேட்டா எழுந்து வர..?” என்ற அத்தையின் கேள்விக்கு பதில் சொல்லாது கவிதா மாடியை நோக்கி ஓடினாள்…

அவள் பயந்தது போல் தான் கிருஷ்ண வேணியின் மிக பக்கமாக நின்று கொண்டு அவர்கள் அத்தையின் இரண்டாம் மகன் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதும்.. கிருஷ்ண வேணி அவனை பயந்த பார்வை பார்த்து கொண்டு இருப்பதையும் பார்த்தவள்..

“வேணி…” என்று குரல் கொடுத்து கொண்டே தங்கையின் அருகில் சென்ற கவிதாவை பார்த்ததுமே அவளின் அத்தை மகன் கிருஷ்ண வேணியை விட்டு கொஞ்சம் விலகி நின்றவன்.

கவிதா கேட்காமலேயே.. அவளின் அத்தை மகன்… “ டெஸ்ட்லே என்ன மார்க் எடுத்த.. படிப்பு எல்லாம் எப்படி போகுது என்று கேட்டுட்டு இருந்தேன் கவி…” என்று சொன்னவனின் பேச்சை காதில் வாங்காதவள் தங்கையின் கை பிடித்து கொண்டு விடு விடு என்று கீழே சென்றவள் சமையல் அறையில் இருந்த தன் அத்தையின் முன் வந்து தான் நின்றாள்..

இரவு முழுவதும் தான் யோசனி பயம் எல்லாம்… தன் தங்கை சிறிய பெண்.. அவளிடம் பேசும் பேச்சா…

“நான் செய்யிறதை யாரிடமும் சொல்லாத. சொன்னா அவ்வளவு தான்… உனக்கு செய்வதை உன் அக்காவுக்குமே செய்வேன்… அதோட இனி நான் இது போல தொடுவதோடு இன்னுமே என்ன வேணாலும் செய்வேன்… கத்த கூடாது .. அப்படி கத்துனா நீயும் உன் அக்காவும் வீட்டை விட்டு தான் போகனும்… இங்கு என்றால் நான் மட்டும் தான். நீயும் உன் அக்காவுமே இந்த வீட்டை விட்டு வெளியில் போனா.. போறவன் வரவன் எல்லோரும் மேல கை வைப்பான்…”

தங்கையிடம் அந்த பொறுக்கி பேசிய பேச்சுக்கள் இவள் படிக்கட்டு ஏறிக் கொண்டு இருந்த போதே பேசியது இவள் காதில் வாங்கி கொண்டு தான் சென்றாள்..

யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியில் அனுப்புவது… அத்தையில் எதிரில் கோபமாக வந்து நின்றவல்.

“அத்த இது யார் வீடு.?” என்று கவிதா எடுத்த உடனே தன் அத்தையிடம் இதை தான் கேட்டது.

என்ன இது புதுசா கேள்வி…? என்று நினைத்து கவிதாவை பார்த்த அவளின் அத்தை…

“இது என்ன கேள்வி கவிதா..? உங்க வீடு தான்..” என்று சொன்னவர்.. அடுத்து..

“இந்த கேள்விக்கு என்ன அவசியம் கவிதா…” என்றும் கூடவே கேட்டார்..

கவிதா தன் தங்கையை கை பிடித்து இழுத்து கொண்டு போகும் வேகத்தை பார்த்த அவளின் அத்தை மகனும் கட கட என்று இறங்கி வந்தவன் அவனுமே சமையல் கட்டின் வாசலில் நின்று கொண்டு ஒரு வித பதட்டத்துடன் தான் கவிதா பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான்.. தான் பேசியதை கேட்டு இருந்து இருப்பானோ என்று…

கேட்டு விட்டாள் என்பதை நிருபிக்கும் வகையாக தான் கவிதாவின் அடுத்த பேச்சு இருந்தது…

“அதை உங்க மகன் கிட்ட சொல்லுங்க அத்த…” என்ற பேச்சில் வாசலில் நின்று கொண்டு இருந்த தன் மகனை பார்த்தவர்..

“என்ன டா இது.. கவிதா என்னவோ கேட்க சொல்றா… நீ என்ன சொன்ன…?” என்று கேட்ட அவளின் அத்தை அப்போது கூட ஏதோ வீட்டை பற்றி உரிமையா பேசி இருக்கான் தன் மகன் என்று தான் நினைத்தார்.

ஆனால் கவிதா அடுத்து சொன்ன. இல்லை இல்லை செய்து காட்டிய… பக்கத்தில் நின்று கொண்டு இருந்த அத்தை மகளின் அங்கங்களை தொட்டு காட்டி..

“இதை எல்லாம் உங்க மகன் இவளை தொடுவானாம். இதுக்கு மேல கூட போவானாம். ஆனா இவள் வாயை திறக்க கூடாதாம்.. அப்படி திறந்தா என்னையுமே இது போல செய்வாராம்.. ம் இன்னொன்னு சொல்லனும்.. என் கிட்ட வேறு மாதிரி ரூட் போட்டுட்டு இருக்காரு.. அது வேற தனி விசயம்.. ஆ இன்னொன்னு முக்கியமா சொன்னாரே.. அப்படி வாயை திறந்தா எங்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விட்டு விடுவாராம்… பின் வரவன் போறவன்….” என்று அந்த வார்த்தையை சொல்ல கூட கவிதாவினால் முடியவில்லை.

இது வரை கோபத்தில் தைரியத்தோடு தன் அத்தையிடம் பேசிக் கொண்டு இருந்த கவிதா.. இதை சொல்லும் போது தன்னிரகத்தில் அவளுக்கு அழுகை வெடித்து வந்தது.

தன் தங்கையை காட்டி.. “ இவள் சின்ன பெண் அத்த. உங்க மகளோடு ரொம்ப சின்ன பெண்.. இவள் கிட்ட இப்படி..” என்று பேசியவளுக்கு அதற்க்கு மேல் பேச முடியவில்லை.

இதை எல்லாம் கேட்ட அவளின் அத்தைக்கு அப்படி ஒரு அதிர்ச்சி… என்ன இது என்பது போல தன் அதிர்ச்சி மாறா பார்வையை தன் மகன் மீது அத்தை செலுத்த.

உடனே அந்த அத்தை மகன் ரத்தினம். “ ம்மா பொய் சொல்றாம்மா.” என்று சொன்னவன்.. அதற்க்கு அடுத்து என்ன பேசி இருப்பாங்களோ.

“பொய்யா. இது போல பொய் சொல்ல இவங்களுக்கு என்ன காரணம் இருக்க போகுதுடா.?” என்று கோபமாக கேட்ட அவளின் அத்தை.

அவனின் தங்கையை அவன் முன் நிறுத்தியவள்..

“இவள் இவள் மட்டும் பெண் இல்ல….” கவிதா கிருஷ்ண வேணியை காட்டி சொன்னவர்…

“ இவளுமே பெண் தான்…” என்று தன் மகளை சொன்னவர்..

“தொடு.. தொடுடா அந்த சின்ன பெண்னை தொட ஆசைப்பட்ட லே.. இவளுமே பெண் தான் தொடு.. பத்தலேன்னா நானுமே…” என்ற அம்மாவின் வாயை மூடியவனின் கையை தட்டி விட்ட அந்த தாய்…

“சீ என்னை தொடாதே…” என்றவர்.. அன்றே மகனை அந்த வீட்டை விட்டு அனுப்பியவர்..

பின் ஒன்று இரண்டு வருடங்கள் கழித்து கவிதாவே அனைத்தையும் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கை வந்த பின் அவளின் அத்தை குடும்பமும் சென்று விட்டது.

சென்னையில் இருந்தால் ஏன் அத்தை உங்களை விட்டு விட்டு போனாங்க.. முன் மகனை அனுப்பினாங்க ஏன் ஏதாவது பிரச்சனையா..? மற்றவர்கள் வீட்டு பிரச்சனைகளை ஆராய அக்கம் பக்கம் கேட்க.

இதோ வேலை பெங்களூர் என்றதில் கவிதா மகிழ்ச்சியாகவே மாற்றலகி வந்து விட்டாள்..

கூடுதலாக தன் காதலன் வேலை பார்க்கும் அலுவலகம் என்றதில் கவிதாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்..

ஆம் இதன் நடுவில் இந்துமதியின் அண்ணன் மீது கவிதாவுக்கு காதல் வந்து விட்டது… ஆனந்த் தங்கை கல்யாணம் முடிந்து தான் நம் கல்யாணம் என்றதில் கவிதா இந்து மதியின் கல்யாணத்தை ஆவளோடு இந்து மதியை விட இவள் காத்து கொண்டு இருக்க.

இங்கு அவளின் தங்கையோ.. பதினெழே வயது ஆனவள்.. தன்னந்தினியாக காவல் நிலையத்திற்க்கு சென்று இருக்கிறாள்..

என்னை காதலித்து குழந்தை கொடுத்தவன் போன இடம் தெரியவில்லை என்று… ஆம் இப்போது கிருஷ்ண வேணி குழந்தை உண்டாகி இருக்கிறாள்..

அக்கா தன் கல்யாணத்திற்க்கு காத்து கொண்டு இருக்க. தங்கை சீமந்தமே செய்ய ரெடியாகி விட்டாள்…




 
Active member
Joined
May 12, 2024
Messages
198
Ithu ennada pudhu kuzhappam?
Krishna Veni nilaikku karanam Vasu va iruppano??? 🙄🙄🙄

Appadi parthal Vasu Indhu kku annan murai varuvan 🥴🥴🥴
 
Top