Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....20

  • Thread Author
அத்தியாயம்….20

அதே சமயம் சென்னையில் ஆனந்த் கிளம்பி சென்றதுமே இந்து மதி மீண்டும் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. தன் அறையின் கதவை சாற்றும் முன் அவளின் அம்மா தந்தையிடம்…

“அவன் என்னவோ தங்கைக்கு கல்யாணம் என்பதை மறந்துட்டு யாருக்கோ கல்யாணம் என்ற மாதிரி அவன் பாட்டுக்கு கிளம்பி போறான்.. இவள் என்னவோ கொஞ்ச நாளாவே என்னவோ போல சுத்திட்டு இருக்கா… இந்த கல்யாணத்தில் மட்டும் ஏதாவது பிரச்சனை வந்தா நான் உயிரோடவ இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க…” என்ற பேச்சு காதில் வாங்கி கொண்டு தான் தன் அறையின் கதவை சாத்தியது..

இந்து மதிக்கு இப்போது நன்கு புரிகிறது.. தான் அந்த வயதில் எத்தனை முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்பது.. சின்ன வயதில் ஒரு செயல் இப்படி தன் முன் வந்து நிற்கும் என்று அவள் துளியும் எதிர் பார்த்து இருந்து இருக்கவில்லை..

வீட்டின் சூழ்நிலையில் இந்த கல்யாணத்தில் மட்டும் ஏதாவது பிரச்சனை என்று வந்தால், கண்டிப்பாக அதை தன் பெற்றோர்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள்… அதுவும் அவளுக்கு புரிகிறது..

அதற்க்கு என்று அவன் கூட படுத்தால் தான் தனக்கு இந்த திருமணம் நடக்கும் என்றால், அப்படி பட்ட கல்யாணமே அவளுக்கு தேவையில்லை..

ஆனாந்திடம் வாசுவை பற்றி சொல்லலாம் என்று தான் சென்றது.. அவள் பள்ளியில் செய்த விசயம் தான் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியுமே.. அண்ணனிடம் சொல்லலாம் என்று நினைத்த இந்து மதிக்கு அப்பா அம்மாவிடம் சொல்லலாம் என்று தோன்றவில்லை..

அதற்க்கு காரணம் வயதானவர்கள் கண்டிப்பாக இதை கேட்டால் பயந்து போய் விடுவார்கள் கூட தனக்கு திட்டும் அடியும் விழும் அது நிச்சயம் தான்.. ஆனால் அதற்க்கு என்று அவள் பார்க்கவில்லை.. அதிர்ச்சியில் இவர்களுக்கு ஏதாவது ஆகி விட கூடாது என்று தான் அவள் பெற்றோர்களிடம் சொல்லவில்லை.

வாச் தேவ்வோ மெசஜூக்கு மேல் மெசூஜ் போட்டு கொண்டே இருந்தான்.. இரவு ஒன்பது மணிக்கு அறை எண் வர வேண்டும் என்பது போலான வாசகம் தான் மாறி மாறி அவளின் கை பேசிக்கு வந்த வண்ணம் இருந்தன…

ஏழு மணி கடந்த நிலையில் இந்து மதிக்கு கவிதாவின் நியாபகம்.. மற்ற தோழிகளின் தோழமை என்பது அவளின் கல்லூரியில் இணைந்தவர்கள்.. கவிதா மட்டுமே பள்ளி முதல் தொடர்கிறது..

அதனால் கவிதாவுக்கு வாசு தேவ்விடம் இவள் காதல் சொன்ன விசயம் என்று அனைத்தும் தெரியும்.. அன்று அவள் மட்டும் அவளோடு இல்லாது போனால் கண்டிப்பாக அவள் இன்னுமே உடைந்து போய் இருந்து இருப்பாள்..

இவள் நியாபகம் இத்தனை நாள் இல்லாது போயிற்றே என்று நினைத்து பெங்களூரில் இருக்கும் கவிதாவுக்கு அழைத்தாள்..

அப்போது தான் கவிதாவின் வீட்டற்க்கு ஆனாந்த் சென்றது … பேசியது கிருஷ்ண வேணி வாசு தேவ்வை பற்றியதான அவர் ஓடி எல்லாம் போகவில்லை என்று சொல்லி முடித்தது..

அப்போது கவிதாவின் பேசிக்கு இந்துமதியிடம் இருந்து அழைப்பு வர.. அதை கையில் எடுக்காது கவிதா அழைப்பது யார் என்று தன் பக்கத்தில் இருந்த பேசியை பார்த்தாள்.. ஆனாந்துமே யார் அழைப்பது என்று எட்டி பார்க்க..

அதில் இந்து மதி என்று இருக்க ஆனந்த் உடனே கவிதாவிடம். “ என் தங்கையா..?” என்று கேட்க.. கவிதாவுமே ஆம் என்பது போல் தலையாட்டியவளுக்கு ஆனந்து..

“எடுக்காதே..” என்று விட்டான்.. ஆனாந்துக்கு கிருஷ்ண வேணியின் விசயம் முடித்து விட வேண்டும் என்ற எண்ணம்..

காரணம் காவல் நிலையத்தில் கிருஷ்ண வேணி வாசு தேவ் பேசியின் எண் இப்போது உபயோகத்தில் இல்லை… என்றதினால் அதை விசாரித்து யார் என்று சொல்கிறோம்… என்று கவிதாவிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்..

கிருஷ்ண வேணி மைனர் என்பதினால், வாசு தேவ்வை விட்டு விட மாட்டார்கள் தான்.. ஆனால் அதே சமயம் கிருஷ்ண வேணியின் பெயரும் வெளியில் வந்து விட வாய்ப்பு உள்ளதால், கிருஷ்ண வேணி அனைத்தும் சொன்னால் தான் ஏதாவது யோசித்து செய்ய முடியும் . இடையில் தன் தங்கையின் அழைப்பை கவிதா ஏற்று நேரத்தை கடத்த ஆனந்த் விரும்பவில்லை…

ஆனால் இந்து மதியோ. இங்கு ஆனந்த் கிருஷ்ண வேணியிடம் பேச விடாது வாறு தொடர்ந்து அழைப்பு விடுக்கவும்..

ஆனந்துக்கு அங்கு தன் தங்கைக்கு பிரச்சனையோ என்ற பதட்டத்தில் கவிதாவிடம் கடைசியாக வந்த பேசியின் அழைப்பை எடு என்று கூறினான்.

அது என்னவோ கவிதாவுக்கு சட்டென்று இந்து மதி படிக்கும் காலத்தில் வாசு தேவ்வுக்கு காதல் சொன்ன விசயம் நியாபகத்தில் வந்தது…

தன் தங்கை சொல்லும் நபரின் பெயருமே வாசு தேவ் தானே… என்று நினைத்து கொண்ட் அவள்..

ஆனந்திடம்… “ நமக்கு இந்த வாசு தேவ் என்ற பெயரே ராசி இல்லை போல ஆனந்த்… இந்து படிக்கும் போதும்…” எனும் போதே ஆனந்த் கவிதாவை முறைத்தான்..

“இப்போ எதுக்கு அதை பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க…?” என்று கிருஷ்ண வேணியை கண் காட்டி அதட்டல் போட…

கவிதா அதன் இன் தான் இந்து மதியின் அழைப்பை ஏற்றது…

இங்கு சென்னையில் இருந்து அழைத்தோ இந்து மதியோ… ஐந்து முறை அழைத்தும் எடுக்காது போக அவளின் அழைப்பை கட் செய்யாது என்ன நினைத்தாளோ உடனே வீர ராகவ் பேசிக்கு அழைப்பு விடுக்க… வீர ராகவ் உடனே இந்து மதியின் அழைப்பை ஏற்று விட்டான்..

இத்தனை நேரம் வீர ராகவ் இந்து மதியின் இந்த அழைப்பிற்க்காக தானே காத்து கொண்டு இருந்தது.

இந்து மதியின் கை தானாக வீர ராகவை அழைத்தாலுமே என்ன பேசிவது என்று தெரியாது பேசியை இந்த காதிலும் அந்த காதிலும் பதட்டத்தில் மாற்றி மாற்றி வைத்ததில் அவளின் கை பேசியானது கான்பிரான்ஸ் கால் அழைப்புக்கு சென்று விட்டது.. கான்பிரான்ஸ் மற்றோரு அழைப்பில் கவிதாவும் இருந்தாள். இது இந்துமதிக்கு தெரியாது போயின.

இந்து மதியின் பேசியில் நடந்த விசயம் அவளுக்கெ தெரியாத போது வீர ராகவ்வுக்கு எப்படி தெரியும்..



அதனால் வீர ராகவ்… “ மதி மதி.. மதி..” என்று கத்தியவன் பின்..

“இப்போ கடைசி நிமிஷத்தில் தான் என்னை கூப்பிட்ட. இப்போ கூட அந்த வாசு தேவ் பொறுக்கி உன் கிட்ட பிரச்சனையை செய்வது பற்றி என் கிட்ட சொல்லனும் என்று உனக்கு தோனலையா மதி…?” என்று வீர ராகவ் இதை கோபமாக தான் கேட்டது..

வீர ராகவ் குரலை கேட்டதுமே கவிதா பேசியை அணைக்க தான் நினைத்தாள்.. ஆனால் வீர ராகவ் சொன்ன அந்த வாசு தேவ் என்ற பெயர்… கவிதா அந்த அழைப்பை கட் செய்ய விடாது செய்து விட்டது..

ஏன் என்றால் ஆனந்த் தங்கை இத்தனை முறை தனக்கு அழைத்ததை பார்த்து அவனுமே யோசனையுடன்..

“ எடு அவளுமே கொஞ்ச நாளா சரியில்லை என்று அம்மா சொல்லிட்டு இருந்தாங்க…” என்று ஆனந்து சொன்னதும் வீர ராகவ் வாசு தேவ் பெயர் சொன்னதுமே பேசியை அணைக்காது…

ஸ்பீக்கரில் போட்டு விட்டு ஆனந்தும் கேடும் படி செய்ய..

அடுத்து வீர ராகவ் பேசிய அனைத்து பேச்சும்..

“உனக்கு என்ன பிரச்சனை..? என்ன பிரச்சனை.? என்று உன் கிட்ட அத்தனை முறை கேட்டேன் தானே… அந்த பொறுக்கி உன் கிட்ட இப்படி நடந்துக்குறான் என்று சொல்றதுக்கு என்ன இந்து… நான் ஒரு போலீஸ் ஆபிசர்.. அதோட நாளைக்கு உன் கணவனாகவும் ஆக போறவன்… இதில் இரண்டில் ஒன்று நினச்சி இருந்து இருந்தா கூட உண்மையை என் கிட்ட நீ சொல்லி இருந்து இருக்கனும் தானே.. அவ்வளவு தான் என் மீது உனக்கு இருக்கும் நம்பிக்கையா…?”

தன்னை அழைத்தும் எதுவும் சொல்லாது இருக்கிறாளே என்ற கோபத்தில் வீர ராகவ் அனைத்தும் சொல்லி கத்தி விட்டான்…

இதை அனைத்தும் கேட்ட ஆனந்த்…. “வீரா மாமா நீங்க என்ன சொல்றிங்க…?” என்று கேட்ட குரலில் அத்தனை பதட்டம்…

வீர ராகவ்வுக்கு ஒன்றும் புரியவில்லை.. ஒரு சமயம் இந்து மதியின் பேசியில் இருந்து அழைத்தது ஆனந்தா..? அதை நினைத்து வீர ராகவ்வுக்கு இன்னுமே தான் கோபம் கூடியது..

அப்போ கடைடியா கூட இவள் தன்னை அழைக்கவில்லையே என்பதை நினைத்து… வீர ராகவ்வின் நிலை இப்படி என்றால் இந்து மதியின் நிலையோ அதற்க்கு மேலாக தான் இருந்தது…

என்ன இது அண்ணன் குரல் என்று ஒரு சந்தேகத்தில் தன் கையை பார்த்தவளுக்கு கவிதாவின் பேசிக்கு கான்பிரான்ஸ் கால் இணைந்து இருப்பது தெரிந்தது…

ஆனால் கவிதாவின் பேசியில் அண்ணன் குரல் எப்படி….? என்று யோசிக்கும் போதே ஆனந்த் அனைத்துமே சொல்லி விட்டான்… தான் கவிதாவை காதலிப்பதில் தொடங்கி தற்போது கிருஷ்ண வேணியின் பிரச்சனை வரை.. சொன்னவன்..

இங்கும் அதே பெயர் வாசு தேவ் தான்.. கவிதா கூட இப்போ அதை தான் சொன்னாள் என்று சொன்னவனுக்கு ஒரு துளி கூட சந்தேகம் ஏற்படவில்லை.. இரண்டு வாசுவுமே ஒருவராக இருக்க கூடும் என்று.. ஏன் என்றால் வாசு தேவ் பெங்களூரில் இருந்து தான் சென்னைக்கு வந்து உள்ளான் என்பது ஆனந்துக்கு கவிதாவுக்கும் தெரியாது தானே…

ஆனால் வீர ராகவுக்கு… அதில் தன் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு… உடனே வீர ராகவ் ஆனந்திடம் … “ கவிதா பெங்களூரில் எங்கு. இருக்காங்க…?” என்று கேட்க.. ஆனந்த் கவிதா இருக்கும் இடத்தை சொன்ன உடனே வீர ராகவ்விடம் ஒரு பர பரப்பு தொற்றி கொண்டது…

“எந்த அப்பார்ட்மெண்ட்….” என்று ஒரு எதிர் பார்ப்புடன் தான் வீர ராகன் இதை கேட்டது.

அவனின் அந்த எதிர் பார்ப்பை மெய்யாக்கும் விதமாக கவிதா இருக்கும் இடத்தின் பெயரை ஆனந்த் சொன்ன உடனே… வீர ராகவ் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு எழுந்தவன்.

“இப்போவே நான் கவிதா இருக்கும் அப்பார்ட்மெண்ட்க்கு வரேன் ஆனந்த்.” என்று சொன்ன வீர ராகவனின் தோணியில் இருந்து ஆனந்த்…

“ அப்போ அந்த வாசு தேவ் தான்.. இந்த வாசு தேவ்வுமா..?” என்று கிருஷ்ண வேணியை பார்த்து கொண்டே கேட்க.

வீர ராகம்.. “ யெஸ்…” என்ற பேச்சை ஸ்பீக்கர் போனில் இருந்து கிருஷ்ண வேணியுமே கேட்டு கொண்டு தான் இருந்தாள்…

இதை யாருமே எதிர் பார்க்கவில்லை… ஆனந்த் வீர ராகவ் உரையாடலை இந்து மதியுமே கேட்டு கொண்டு தானே இருக்கிறாள்…

சிறிது நேரம் மூன்று பக்கத்தில் இருந்துமே பேச்சு இல்லை.. அமைதியாக இருக்க. அந்த அமைதியை இந்து மதி தான் அகற்றினாள்..

திக்கி திணறி அனைத்துமே சொல்லி விட்டாள் வாசு தேவ் தன்னை மிரட்டியதை… இது அனைத்துமே வீர ராகவ்வுக்கு தான் முன்பே தெரியுமே… ஆனால் ஆனாந்துக்கு இது அதிர்ச்சி தானே கொடுக்கும்..

இந்து மதியின் பேச்சையுமே கிருஷ்ண வேணி கேட்டுக் கொண்டாள்…

கவிதாவுக்கு இன்னுமே தான் பயம் கூடியது.. கிருஷ்ண வேணிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பதினெட்டு வயது ஆகிறது… கிருஷ்ண வேணி சொன்னது போல அவன் ஒரு வேளை நல்லவனாக இருந்தால், கவிதாவுக்கு அதில் நம்பிக்கை இல்லை தான்..

ஆனால் அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் இரண்டு மாதம் கழித்து தங்கையை அவனுக்கே திருமணம் செய்து வைத்து விடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தவளுக்கு.. இந்து மதிக்கு பிரச்சனை கொடுப்பவனும், தன் தங்கைக்கு குழந்தை கொடுத்தவனும் ஒருவனே என்று தெரிந்ததில் தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டாள்..

வீர ராகவ் இந்து மதியிடம்… “ வாசு தேவ்வுக்கு போன் போட்டு… அவன் சொன்னது போல வரேன் என்று சொல்..” என்ற பேச்சில் இந்து மதிக்கு புரிந்து விட்டது வீர ராகவ் தன் பேசிக்கு வரும் அழைப்பு அனைத்துமே அவனுக்கும் தெரிந்து இருக்கிறது என்பது..

இன்னொன்றும் புரிந்து விட்டது…வாசு தேவ்வை கட்டம் கட்ட தான்.. தன்னை இப்படி சொல்ல வைக்கிறான் என்பதும்.. பார்க்கலாம் வாசு தேவ். .. வீர ராகவ் இட்ட வட்டத்திற்க்குள் வந்து நிற்பானா என்று…
 
Active member
Joined
May 12, 2024
Messages
223
Guess pannathu than… rendu porukkiyum ore aalu than… 😡😡😡
Vasu kku Krishna Veni ya kodukka vendam…

Veera kattam katittan…
 
Top