Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....22

  • Thread Author
அத்தியாயம்….22

வாசு தேவ் பெரிய அளவில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்து அவன் தற்போது கை வைக்க நினைத்த இரண்டு இடமும் பெரிதாக போய் விட்டதால், அதனின் பாதிப்பும் அவனுக்கு பெரியதாக தானே கிடைக்கும்…

கல்பனாவின் அண்ணன் தந்தையின் பதவி தெரிந்து தான் கல்பனாவை காதலித்தான்.. காதலித்தான் என்பதை விட அவளின் காதலை ஏற்றுக் கொண்டான் என்று சொன்னால் சரியாக இருக்கும்..

ஏன் என்றால் பெங்களூர் பிராஞ்சில் அவன் சேர்ந்த புதியதில் எப்போதும் போல அவன் அமைதியாகவே தான் தன்னை சுற்றி இருக்கும் பெண்களை நோட்டம் இட ஆரம்பித்தது..

பெண்களை தொட வேண்டும்.. தொட்டாலும் அந்த உறவு தொடர கூடாது.. இது தான் அவனின் பாலிசி.. அப்படி அவன் கவனித்ததில் கல்பனா எல்லாம் அவன் கணக்கில் இல்லவே இல்லை..

அவன் கணக்கில் இல்லை என்றதும், அப்போது அவளின் அண்ணன் தந்தையை பற்றி தெரியுமா…? என்று கேட்டால், அப்போது அவனுக்கு தெரியாது தான்.. கல்பனாவின் தோற்றம் அவனை கவர்ந்து இழுக்கவில்லை.. அவனின் தேர்வு எல்லாம் அத்தனை ரசனையாக தான் இருக்கும்.. என்பது வேறு விசயம்..

பெங்களூர் பிரான்சில் அவன் சாய்ஸ் ஒரு நார்த் இன்டியன் தான்… அவளும் வாசுவை பார்த்தாள்.. அவனின் கணக்குப்படி இன்னும் ஒரு வாரத்தில் தன்னிடம் அவள் காதலை சொல்வாள் என்று அவன் காத்திருந்த போது தான் ஆபிசில் ஒரு சிறு பிரச்சனை.. அங்கு போலீஸ் என்று வந்த போது அந்த அலுவலகத்தின் தலமை கல்பனாவை அழைத்து பேசும் போது தான் வாசுவுக்கு கல்பனாவின் பின் பலம் தெரிய வர.. பணத்திலும் வெல் செட்டில் என்றும் தான்.…

பணம் ப்ளஸ் மரியாதை. கல்பனாவும் தன்னை பார்க்கிறாள். சட்டென்று தன் தேர்வை மாற்றி விட்டான் வாசு தேவ்.

வாசு தேவ்வுக்கு இன்னொரு பழக்கமும் இருந்தது. அதாவது தன் தேர்வு என்று தேர்வு செய்த பின் அந்த பெண்ணை மட்டும் பார்த்து ஒடு விசேஷ சிரிப்பை சிரிப்பான். அந்த பின் நேரம் தாழ்த்தாது.. தன்னிடம் அவள் காதலை சொல்ல வேண்டும் என்று…

முதலில் அந்த நார்த் இன்டியன் பெண்ணை பார்த்து தன் விசேஷ சிரிப்பை சிரித்து விட்டதால், அந்த பெண்ணும் வாசு தேவ்வுக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்று நினைத்து..

நம் இந்து மதி தன் அறியா வயதில் செய்த தவறை அந்த பெண் எல்லாம் அறிந்த வயதில் செய்தாள்.. அது தான் அனைவரின் முன் நிலையிலும் தன் காதலை வாசு தேவ்விடம் சொல்லி விட்டாள்.. தன் காதலை ஏற்றுக் கொள்வான் என்ற அந்த நம்பிக்கையில் தான்..

அந்த அலுவலகத்தில் இருக்கும் பெரும்பாலும் பெண்கள் வாசு தேவ்வை பார்க்க.. வாசு தேவ் அவர்களின் முன் நிலையில் தன் காதலை ஏற்று கொண்டால் அது அந்த பெண்ணுக்கு பெருமை என்று நினைத்து கொண்டால் போல.

அதனால் இந்த காதல் சொன்னது அந்த அலுவலகத்தில் இருக்கும் காண்டினில் தான். அங்கு நம் கல்பனாவுமே தான் இருந்தாள்..அந்த பெண் வாசு தேவ்விடம் காதல் சொல்ல இவன் மறுத்ததை கல்பனா பார்த்தாள்.. அதில் கல்பனாவுக்கு வாசு மீது இன்னும் நம்பிக்கை ஆகி.

அவளுமே அன்றே தன் காதலை சொல்லி விட்டாள்.. நாட்கள் நகர்த்துவதில் அவளுக்கு விருப்பம் கிடையாது.

கல்பனாவின் காதலை ஏற்று கொண்டு விட்டான் வாசு தேவ்.. அத்தனை அழகான பெண்ணை விடுத்து தன்னை தேர்வு செய்ததில் கல்பனாவுக்கு பெருமை வேறு..

அதை எல்லாம் சொல்லி தான் கல்பனா தன் அண்ணன் தந்தையிடம் தன் காதலுக்கு அனுமதி பெற்று அதை நிச்சயம் வரை கொண்டு சென்றதும்..

இன்று அது அனைத்துமே உடைந்து போய் விட்டதில், அதுவும் ஒரு சின்ன பெண்ணிடம்.. வாசு தேவ்விடன் ஏமாந்தாலும் ஒரு போலீஸ்க்காரன் ரத்தம் அவள் உடம்பிலும் ஒடுகிறது தானே..

தன் அண்ணன் தந்தையிடம். “ அவனை சும்மா விடாதிங்க.. அண்ணன் கலெக்ட்டர்.. அப்பா ஐ.ஜி. என்னையே ஏமாத்த நினச்சி இருக்கான்னா மத்த பெண்கள் நிலை… இருக்கும் கேசை எல்லாம் அவன் மேல போட்டு விடுங்க. இதை வீர ராகவ்விடமும் தான் கல்பனா சொன்னது..

அதற்க்கு வீர ராகவன் . “ கண்டிப்பா போடுவோம் தான்.. ஆனால் இவனுக்கு தனிப்பட்டு இன்னொன்னும் நான் வைத்து இருக்கேன்..” என்று சொன்னான்.

அது என்ன என்று யாரிடமும் சொல்லாது இங்கு சென்னையில் தன் நண்பன் சாருகேசவனை அழைத்து தன் திட்டத்தை சொன்னவன்..

“நான் சொன்னதை செய்து விடு… “ என்று விட்டான்..

சாருகேசனோ.. “ஏய் என்ன டா இப்படி சொல்ற. நாம போலீஸ் டா.. வில்லன் போல இருக்கு டா. நீ சொல்றது..? மைனர் பெண்ணை ஏமாத்திட்டான்.. அந்த பெண் உன் மச்சான் லவ்வரோட சிஸ்டர்.. அது வரை எல்லாம் சரி தான்.. ஆனால் அது மட்டும் பார்த்து செய்தால் போதாதடா..? நீ செய்ய சொல்றது ரொம்ப பெரிய விசயமா இருக்கு டா” என்று கேட்ட நண்பனிடம் வீர ராகவ். எதையும் மறைக்கவில்லை..

ஒன்று விடாது அனைத்தையும் சொல்லி விட்டான்...

“இப்போ சொல்.. எனக்கு வர போற பெண்ணை கூப்பிட்டு இருக்கான்.. அவனை சும்மா விட சொல்றியா…?” என்று கேட்ட வீர ராகவிடம்..

“இப்போ தான் நீ ஏன் இப்படி செய்ய சொன்ன என்று புரியுது.. உன் இந்து மதி எதுக்கு என் மனைவி கிட்ட அப்படி சொன்னா என்றும் எனக்கு புரியுதுடா மச்சான்.. படிக்கும் போது சின்ன பெண்.. ஏதோ ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது சொல்லிட்டா.. ஆனா அதை வைத்து இந்த ராஸ்க்கல்.. அதுவும் அப்போவே அந்த வயசுலேயே அத்தனை வேலை அவன் பார்த்து இருக்கான்…

இவனை விட்டா இன்னும் என்ன என்னவோ செய்து வைப்பான். கண்டிப்பா அவனை சிறப்பா கவனித்து விடலாம். நீ கவலை படாதே…” என்று சொன்ன சாருகேசவன் சென்னையில் வீர ராகவன் சொன்னது போலவே சொன்ன வேலையை செய்ய தொடங்கி விட்டான்.

பெங்களூரில் கிருஷ்ண வேணியை வாசு தேவ் ஏமாற்றியதற்க்கு தகுந்த ஆதாரம் வைத்து வாசு தேவ்வை லாக் செய்த வீர ராகவ்.. சென்னையை நோக்கி பயணம் ஆனான்.

வீர ராகவன் சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கும் அதே வேளையில் சென்னையில் வாசு தேவ் அவன் பதிவு செய்து இருந்த அந்த நட்சத்திர ஒட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

இந்து மதியிடம் சொன்ன நேரத்திற்க்கு ஒரு மணி நேரம் முன்னவே வந்து விட்டான்.

“மாப்பிள்ளைக்கு அவ்வளவு அவசரம்…” அதே ஒட்டலில் ரிசப்ஷன் பகுதியில் காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த சாருகேசவன் இவன் வந்து சேர்ந்த விசயத்தை வீர ராகவனிடம் சொன்ன போது வீர ராகவன் இப்படி சொன்னது…

“ஆமா ஆமா.” என்று சொல்லி சிரித்த சாரு கேசவன்..

“ஆனா மச்சான்.. நீ சொன்னது போல மாப்பிள்ளை சும்மா அம்சமா தான்டா இருக்கான்… பார்க்கவும் டீசண்டா… சும்மா படித்த கலையோட..” என்று பாராட்ட..

“என்னடா பெண்கள் தான் அவனை பார்த்து மயங்குவாங்க நீயே மயங்குற…” என்று இருவரும் கிண்டல் பேசிக் கொண்டு இருந்த வேளையில்.

வாசு தேவ்.. வர வேற்ப்பு பெண்ணிடம் சென்று தான் முன் பதிவு செய்து இருந்த அறை எண் சொல்லி தன் ஐடியை காண்பித்து… தன் அறையின் சாவீயையும் கேட்டான்..

அவன் ஐடி கார்ட்டை பார்த்த உடனே அந்த வர வேற்ப்பு பெண்ணின் பார்வை சட்டென்று சாரு கேசனிடம் சென்று மீண்டும் வாசு தேவ்வை பார்த்தவள்…

“ஜஸ்ட். ஒரு டென் மினிட்ஸ். வெயிட் பண்ணுங்க ரூமை க்ளீன் பண்ணிட்டு இருக்காங்க… “ என்று அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்த அந்த வர வேற்ப்பு பெண்.. அவன் குடிக்க ஒரு கூல் ட்ரிங்கஸையும் வர வழைத்து அவனுக்கு கொடுக்கவும் செய்தாள் சாருகேசன் சொன்னது போலவே..

தனக்கு கொடுக்கப்பட்ட அந்த ட்ரிங்கஸையும் அந்த வர வேற்ப்பு பெண்ணையும் பார்த்த வாசு தேவ்.. இது தன் தோற்றத்திற்க்கு அந்த பெண் கொடுக்கும் பரிசு என்று நினைத்து பெருமைப்பட்டு கொண்டவனின் கண்கள் அந்த வர வேற்ப்பு பெண்ணை பார்வையிட.

அவனின் கைய்யோ…

தன் கை பேசியில் இருந்து. இந்து மதிக்கு.. “ வந்து விட்டேன்… நீ எங்கு இருக்க என்று மெசஜை தட்டி விட்டு கொண்டு இருந்தது…

அதற்க்கு பதிலாக இந்து மதியின் கை பேசியில் இருந்து யமுனா…“ ஆன்த வே…” என்று டைப் செய்து விட்டவள் இந்து மதியின் கையை பிடித்து கொண்டவள்..

“ஒன்னும் பிரச்சனை இல்ல. புரியுதா…?” என்று தன் தோழிக்கு தைரியம் சொல்லி கொண்டு இருந்தாள் யமுனா..

ஆம் சாரு கேசவன் தன் மனைவி யமுனாவை இந்து மதியின் வீட்டில் விட்டு விட்டு தான் வீர ராகவ் சொன்ன விசயத்தை செய்ய சென்றது.. யமுனாவை இந்துமதிக்கு துணையாக இருக்க சொன்னதுமே வீர ராகவன் தான்.. இந்து மதியின் பெற்றோரிடம்…

சாருகேசவன் தான் வெளி ஊர் செல்வதால் இங்கு விட்டு செல்கிறேன் என்று மட்டும் சொல்லி கொண்டான்…

அந்த நட்சத்திர ஒட்டலில் அந்த குளிர்ந்த வர வேற்பு கூடத்தில், குளிர் சாதனத்தை பருகி கொண்டே கண்ணுக்கும் குளிச்சியாக வர வேற்ப்பு பெண்ணை பார்த்து கொண்டே பருகி கொண்டு இருந்தவனை.

பத்து நிமிஷம் என்று சொன்னதை அரை மணி நேரம் சென்ற பின் தான் மீண்டும் அந்த வர வேற்ப்பு பெண் வாசு தேவ்விடம்..

“உங்க ரூம் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கு சார்…” என்று சொன்னதும் வாசு தேவ் போகவே மனது இல்லாது தான் பதிவு செய்து இருந்த அறைக்கு சென்றான்..

சென்றவன் தன் அறையின் கதவு அடைத்து அந்த மெத்தையின் மீது படுத்தது வரை தான் அவன் நியாபகத்தில் தெளிவாக இருந்தது.

பின் அனைத்துமே ஒரு மங்கலான பிம்பமாக. அது நிகழ்வா…? இல்லை கனவா….? என்று பிரித்தறியா முடியாதது போல் அவன் நினைவு அடுக்கில் பதிவு ஆனது..

அதாவது வாசு தேவ்.. என்ன இவள் இன்னும் வரவில்லை என்று சலித்து கொண்டு இருந்த போது அந்த வர வேற்ப்பு பெண்.. இவனின் அறையின் கதவை திறந்து இவன் அறைக்குள் வருவது போலவும்.. தன் அருகில் அமர்வது.. பின் நடந்தது அனைத்துமே எழுத்தில் வடிக்க முடியாத நிகழ்வுகள் தான் நடந்து முடிந்தது…

பின் அவன் தன் நிலைக்கு வந்த போது காலை பத்து மணி அளவில் தான்… அதுவும் அவன் அறையின் காலிங் பெல் ஓசையிலும், அதை தொடர்ந்து அந்த அறையின் கதவு தட்டப்படும் சத்தத்திலும் தான் வாசு தேவ்வுக்கு முழிப்பு வந்தது..

முழிப்பு வந்தாலுமே, அவன் மூளை ஏதோ ஒரு மந்தமான நிலையில் தான் இருந்தது… முதலிக் தான் எங்கு இருக்கிறோம்…. இவள் யார்….?கடைசியாக தான் இந்து மதி வரவில்லை என்பதே அவனின் நியாபகத்திற்க்கு வந்தது.. பக்கத்தில் அந்த பெண் இன்னுமே அரை குறை ஆடையோடு படுத்து கொண்டு இருந்தாள்..

பெண் அவனுக்கு புதியது கிடையாது தான். ஆனால் பார்த்த உடனே… இது போல நடந்தது அவன் வாழ்க்கையில் புதியது தான். அவன் வாழ்க்கையில் நடந்தது இது மட்டுமா புதியதாக நடந்து முடிந்தது.. இனி நடப்பது அனைத்துமே நடப்பது அனைத்துமே இவன் வாழ்க்கையில் நடக்காதது தான் நடக்க இருக்கிறது என்பது தெரியாது.. தன் பக்கத்தில் தூங்கி கொண்டு இருந்த பெண்ணை அடையாளம் கண்டு கொண்டு விட்டவன் அவளை எழுப்பிபினான்..

“யாரோ கதவை தட்டுறாங்க யார் என்று தெரியல.. நீ இங்கு வந்தது ரூம் சர்வீஸ் எப்படி இருக்கு கேட்க தான் என்று சொல்லிடு என்ன.?” என்று சொன்னவன் அந்த பெண்ணின் பதிலை எதிர் பாராது கதவை திற்க்க கதவின் அந்த பக்கம் ஒரு போலீஸ் கூட்டமே நின்று கொண்டு இருந்தது.






 
Active member
Joined
Aug 16, 2024
Messages
298
வாசுதேவன் லீலைகள் ஒவ்வொன்றாக வரப் போகிறது.
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
191
Vasu, nee sollaratha namba, police enna un veetu aala. Nee ini ovuaru section laiya matta porae. Enjoy Rasa
 
Last edited:
Top