Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது....23...2

  • Thread Author
அத்தியாயம்…23…2

இந்து மதிக்கு இரவு தூங்காது விழித்து இருந்ததில் கண்ணில் அப்படி ஒரு சோர்வு… காலையில் மகளை பார்த்த அவள் அம்மாவுக்கு மகளின் இந்த தோற்றத்தை பார்த்து மது துனுக்குறாலும் எதையும் காட்டி கொள்ளவில்லை.. காரணம் நேற்று இரவே ஆனந்த அவனின் பெற்றோர் இரண்டு பேரையும் அழைத்து அனைத்துமே ஒன்று விடாது சொல்லி விட்டான்.. தன் காதல் உள்பட..

பின் இதையும் சொன்னான்.. அதாவது அவனுக்கு வீர ராகவ் சொன்னதான… “ அந்த வயசு மதி செய்ததை நீங்க அத்தனை பெரிது படுத்தி இருக்க தேவையில்ல ஆனந்த்… சின்ன வயசு ஏதோ தெரியாம செய்து இருப்பா என்று கூப்பிட்டு காதலுக்கும் ஈர்ப்புக்கும் இருக்கும் உங்க பேரன்ஸ் அவள் கிட்ட சொல்லி இருக்கலாம்..

இந்த விசயத்தில் நான் உங்களை எதுவும் சொல்ல வரல. ஏன்னா நீங்களுமே அப்போ சின்ன பையன் தான்… உங்களுக்கும் அத்தனை விவரம் பத்தாது இருக்கலாம்.

ஆனால் உன் அப்பா அம்மா. நம்ம பசங்களை இது போல சின்ன விசயத்துக்கு ஓவர் ரியாக்ஷன் செய்வதினால் தான் அந்த பசங்க வளர்ந்து இது போல வெளியில் ஏதாவது பிரச்சனை வந்தா கூட வீட்டில் சொல்ல பயப்படுறாங்க… அது அவங்களுக்கு பின் நாளில் எவ்வளவு பாதகமா மாறி விடுது தெரியிதுங்கலா.. நான் இது போல கேஸ்களை நிறைய பார்த்து இருக்கேன் ஆனந்த்..

பெண்களுக்கு ஏதாவது ஆகி விட்ட பின்.. அய்யோ எங்க கிட்ட முதல்ல சொல்லி இருந்தா நாங்க ஏதாவது செய்து இருந்து இருப்பேமே என்று… ஆனா இதோட சின்ன விசயத்துக்கு உன் அப்பா அம்மா போல ஏதாவது செய்து வைத்து இருந்ததினால் தான் அந்த பெண்.. அவங்க கிட்ட சொல்லாம விட்டு இருந்து இருப்பா.. இப்போ சொல்றாங்கலே.. முதல்ல சொல்லி இருந்தா என்று சொல்லி இருந்தா…. நீ ஒழுங்கா போய் இருக்கனும் என்று அந்த பெண்ணையே திட்டி அந்த பெண் படித்துக் கொண்டு இருந்தா படிப்பை நிறுத்தி கல்யாணம் செய்து வைத்து இருப்பாங்க.. வேலைக்கு போய் கொண்டு இருந்தாலுமே வேலைக்கு போவதை நிறுத்தி அவசர அவசரமா இதை விட ஒரு பொறுக்கிக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவாங்க..

பெண்ணோ ஆணோ.. வெளியில் மனசுக்கு பிடிக்காத ஒரு விசயம் நடந்தா அதே முதல்ல வீட்டிற்க்கு சொல்ல வேண்டும் என்ற ஒரு மனநிலையை நாம கொடுக்கனும் ஆனந்த்..” என்று அத்தனை பேச்சு வீர ராகவிடம் இருந்து ஆனந்துக்கு கிடைத்தது.

அதை அப்படியே ஆனந்த தன் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டான்..

சொல்லாத விசயம்… “நீ இப்போ செய்த விசயம் சரியா ஆனந்த்..? உன் தங்கை பிரண்ட் தானே இந்த பெண்… காதலிக்கிற. அது தப்பு இல்ல. ஆனா இது உங்க தங்கைக்கு தெரியாதுலே..

இது அவளை ஏமாத்துவது போல தானே… அவள் இருக்கும் வீட்டிற்க்கு நீ வந்து போயினும் இருக்க.”

வீர ராகவின் இந்த பேச்சுக்கு ஆனந்த் ஏதோ சொல்ல வர.

“நீ தப்பு செய்த என்று நான் சொல்லலே ஆனந்த்… நீ நல்ல விதமா வந்து போனாலுமே, உன் தங்கைக்கு தெரியாது தானே.. கவிதா உனக்காக தான் இங்கு வேலைக்கு சேர்ந்து இருக்கா என்று..

இதே உன் தங்கை உன் பிரண்டை உனக்கு தெரியாது லவ் பண்ணி.. அவனுக்காக அவன் இருக்கும் இடத்திற்க்கு வேலைக்கு மாற்றக் வாங்கி போய்.. அது உனக்கு கடைசியில் தெரிய வந்தா.” என்று வீர ராகவ் சொல்லும் போதே ஆனந்தின் மனது அதை ஏற்று கொள்ள முடியவில்லை…

அதை உணர்ந்த வீர ராகவன்… “ இந்த வயசுல எல்லாம் பக்குவப்பட்ட இந்த வயசுல நீ இப்போ இதை எல்லாம் செய்ததை உங்க அப்பா அம்மா ஏத்து கொண்டால், அப்போ மதி அந்த வயசுல உண்மையில் ஒன்றும் புரியாத அந்த வயசுல.. அதை பெரிது படுத்தாது விட்டு இருந்து இருக்கலாம் தானே…” என்று வீர ராகவ் பேசிய பேச்சில் ஆனந்த்..

தன் அப்பா அம்மாவிடம் தீர்த்து சொல்லி விட்டான்.. நீங்க இந்துவை பற்றி தப்பா ஒரு வார்த்தை பேச கூடாது… தப்பு எல்லாம் நம்ம மேல தான்.. அவன் இந்துவை எத்தனை டார்ச்சர் கொடுத்து இருந்து இருப்பானோ…” இந்த வார்த்தையை ஆனந்த் உணர்ந்து சொன்னது…

கிருஷ்ண வேணியை வைத்து வாசு தேவ்வை எடைப்போட்டவன் மனது அவன் இந்துவிடம் என்ன என்ன பேசி இருந்து இருப்பான்.. அது தான் தங்கையின் முகமே சரியில்லாது இருந்தது என்று ஒரு பக்கம் கவலைப்பட்டாலும் இன்னொரு பக்கம் மனது திருப்திப்பட்டு கொண்டு விட்டது..

நல்லவேளை தன் தங்கை அந்த வயதில் அவள் செய்த அந்த செயல் அவமானப்பட்டதோடு நின்று போய் விட்டது.. ஒரு வேளை என்று நினைக்கும் போதே கிருஷ்ண வேணியின் முகம் தான் கண் முன் வந்து நின்றன..

அதனால் ஆனந்த் தன் அன்னையிடம். “ இந்துவை பார்த்துக்கோங்க. அவள் கிட்ட இதை பத்தி எதுவும் பேசாதிங்க. நம்ம எல்லோரையும் விட வீர் அவர் கிட்ட பேசினா தான் அவள் சரியாவா.. அவர் பேசுவது தான் சரி,.” என்று விட்ட பின்.,

இந்து மதியின் அன்னை அதை பற்றி பேச்சு எடுக்காது சாப்பிட வைத்து பேச்சு கொடுத்து கொண்டு இருந்தாலுமே இந்து மதியின் மனது ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…

ஆனந்த சொன்னது போலவே வாசு தேவ்வை கவனிக்கும் விதத்தில் கவனித்து விட்டவன் தன் வீடு கூட செல்லாது வந்தது இந்துமதியின் வீட்டிற்க்கு தான்..

இந்து மதியுமே வீர ராகவ் அனைத்தும் முடிந்து இங்கு வருவான் என்று நினைத்து இருந்தான் தான்.ஆம் அனைத்தும் தான்.. வாசு தேவ் அரெஸ்ட் ஆனது மீடியாவிலும் தெரியப்படுத்தி விட்டார்கள்..

போதை மருந்து சப்ளை செய்தவன் என்ற குற்றத்திற்க்காக கைதி செய்து உள்ளான் என்றும்.. நிறைய பெண்களை ஏமாற்றி உள்ளான் என்பதும் ஆதர பூர்வமாக கைதான விசயம் மீடியாவின் மூலம் இந்து மதி அறிந்து கொண்டது..

நேற்று இரவு வீர ராகவ் இந்துமதியிடம் பேசியது அவ்வளவு.. சாருகேசவன் யமுனாவை இங்கு விட்டு சென்றதுமே யமுனாவுக்குமே இந்த விசயம் தெரிந்து விட்டது என்று இந்து மதி உணர்ந்து விட்டாள்.

அதில் இந்து மதிக்கு அவள் முகத்தை பார்க்க முடியாது போக யமுனா தான்.. “ இது எல்லாம் ஒரு விசயமும் இல்ல இந்து… இன்னும் கேட்டா முன் உன் மீது இருந்த கொஞ்ச கோபம் கூட இப்போ என் கிட்ட இல்ல… ஏன்னா உன் அனுபவத்தை வைத்து தானே நீ கேசவன் முன் கீழா தெரிய கூடாது என்று அப்படி சொன்னது…புரியுதா.” என்று சொல்லி எப்படியே அதில் இந்து மதி தெளிந்தாலுமே, வீர ராகவ் அழைக்காதது இந்து மதி ஒரு மாதிரியான மனநிலையில் தான் இருந்தாள்..

காலையில் இருந்து மீடியாவில் வாசு தேவ் பற்றிய செய்திகளை பார்க்க. ஒரு பக்கம் தான் எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து இருக்கோம் என்று நிம்மதி அடைந்த அதே சமயம் இனி வீர ராகவ்வை எப்படி பார்ப்பது.. என்னை பற்றி என்ன நினைப்பார்.. இதுவே தான் இந்து மதியின் மனதில் ஓடிக் கொன்டு இருந்தது.. நல்ல வேலை எப்போதும் நச்சரிக்கும் அம்மா எதுவும் கேள்வி கேட்காது இருப்பதில் மனது அமைதி அடைந்தது..

இதோ வந்து விட்டான். வந்தவன் தன்னை பார்த்து அந்த சிரிப்பு.. ஆர்ப்பட்டமாக எல்லாம் அவன் தன்னை பார்த்து சிரிக்கவில்லை. ஒரு மெல்லிய சிரிப்பு தான்..

ஆனால் அவளுக்கு அது கொடுத்த தைரியம்.. அது சொல்ல வார்த்தைகள் கிடையாது என்பது போல அவன் பார்த்த அந்த ஒற்றை பார்வையிலும், அந்த மெல்லிய சிரிப்பிலும், அவளின் கலக்கம் எல்லாம் பறந்தோடி போய் விட்டது…

அதுவும் யமுனாவிடம்.. “தேங்கஸ் சிஸ்டர்… மதி கூட துணைக்கு இருந்தது..” என்று தனக்காக தன் தோழியிடம் நன்றி தெரிவித்ததில், இந்து மதிக்கு அப்படி ஒரு நம்மதி..

அதில் இத்தனை நேரம் இருந்த அந்த பதற்றம் குறைந்து கொஞ்சம் இலகுவாகவே வீர ராகவ்வை பார்க்க முடிந்தது..

யமுனாவை வீர ராகவனோடு வந்த சாருகேசனோடு அனுப்பி விட்ட பின் தான்..

“நேற்றில் இருந்து நான் சாப்பிடல மதி.. வீட்டில் என்ன இருக்கோ அதை சூடு பண்ணி வை.. அதுக்கு முன்ன நான் குளிக்கனும்.. உன் அப்பா வேஷ்ட்டி ஒன்னு கொடுத்து விட்டு நீ போ…” என்று சொன்ன போது தான் இந்து மதி வீர ராகவ்வை ஊன்றி கவனித்தது.

அவன் முகம் அப்படி கலைத்து போய் காணப்பட்டது… யார் என்ன நினைக்கிறார்கள் என்று கூட யோசிக்காது தன் தந்தையின் அறைக்கு சென்றவள் தன் அப்பாவின் வேஷ்ட்டி அப்பாவுக்கு பெரியதாக இருப்பதால் புதியதான சட்டையை போடாது வைத்து இருந்ததை எடுத்து கொண்டு தன் அறைக்கு வீரை அழைத்து சென்றவள் குளியல் அறையில் புதிய டவல் புதிய சோப் என்று அனைத்தையும் எடுத்து வைத்தள் வீர ராகவ்வுக்கு ஏதுவாக சூடு நீரை குளிக்கும் பதத்தில் எடுத்து வைத்து விட்டு.

இது வரை அந்த சின்ன குளியல் அறையில் அவளோடு கூட இருந்த வீர ராகவ்விடம்..

“ம் இப்போ குளிங்க. நான் உங்களுக்கு என்ன இருக்கு என்று பார்த்து ஏதாவது செய்து வைக்கிறேன் என்று சொல்லி விட்டு செல்ல பார்த்த இந்து மதியின் கை பற்றி இழுத்து கொண்டவனின் முகத்தை மிக மிக நெருக்கத்தில் பார்த்த இந்து மதியின் மனது இப்போது பூபாளம் இசைத்தது..

இது வரை பயம் பதட்டம் என்று இருந்தவள் வீர ராகவ்வை பார்த்த நொடி ஒரு நிம்மதி வந்தது என்பது உண்மை.. ஆனால் அதை தான்டி வேறு ஒன்றும் அவள் நினைக்கவில்லை..

அதுவும் வீர ராகவ் பசி என்றதில் வேறு எதுவும் நினையாது தான். இதோ இது வரை இத்தனை சின்ன குளியல் அறையில் இப்படி ஒன்றாக இருக்கிறோம் என்பது கூட உணராது நின்று கொண்டு இருந்தவள். இப்போது இத்தனை நெருக்கத்தில் வீர் முகத்தை பார்த்தவளின் கண்கள் படபடக்க தொடங்கியது..

வீர ராகவ்வோ முதல் முறை.. அவனின் மதியை எந்த ஆராயும் நோக்கத்துடன் இல்லாது தன்னவளாக மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தன்…

ஒன்றும் செய்யவில்லை. அவள் பட படத்த கண்களில் ஒரு சின்ன முத்தம்.. அவ்வளவு தான்.

சொன்னவன் பின் போ என்பது போல சைகை செய்தவனின் செயலில் நம் இந்து மதி தான் ஏமாந்து போய் விட்டாள்.. நம் மீது இன்னும் கோபம் போகவில்லையா.? என்று நினைத்து கொண்டவள் திரும்பி அவளை சமாதானம் படுத்தலாம் என்று இந்து மதி வீர ராகவ்வை பார்த்த போது..

காலையில் அவல் குளித்து விட்டு துடைத்த ஈரமான டவல் வீர ராகவ் தன் கையில் வைத்து கொண்டு இருந்ததை தான்..

தான் அவனை பார்த்ததும் தன்னை பார்த்து கொண்டே அந்த ஈரமான டவலை அவன் நாசியின் அருகில் கொண்டு சென்று.. மூச்சை இழுத்து பிடித்து விட்டு அதன் வாசனையை உணர்வது போலான அவனின் செயலும்.. அதோடு என்னவோ அற்புதமான வாசனையை அவன் நாசி உணர்ந்தது போல அதை கண் மூடி அனுபவித்தவனின் செயலையும் விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தவளின்..

அவள் எடுத்து வைத்திருந்த புதிய டவல் புதிட சோப்பை எடுத்து இந்து மதியிடம் திருப்பி கொடுத்தவன்.

அங்கு இருந்த சோப்பையும் தன் கையில் இருந்த டவலையும் காட்டி..

“எனக்கு இதுவே போதும்…” என்று சொன்னவன் மீண்டுமே தன் டவலை அவன் நாசியின் அருகில் கொண்டு சென்ற போது என்னவோ அவன் தன் மேனியின் வாசனையை நுகர்வது போன்று இந்து மதியின் உடல் முழுவதுமே சிலிர்த்து விட்டது.
 
Active member
Joined
May 12, 2024
Messages
223
Enna Veeta veetukkullaiye vandhuttan 🤣🤣🤣
 
Top