Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது... 24..1

  • Thread Author

அத்தியாயம்…24…1

இந்து மதியின் அன்னைக்கு ஒரு வித வெட்கத்துடன் தன் அறையில் இருந்து வெளி வந்த தன் மகளை அப்படி பார்த்ததில், அப்போது தான் மனதில் ஒரு திருப்தி வந்தது…. இந்த இடம் முடிந்ததில் இருந்தே மகளின் முகம் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து ஒரு தாயாக அவரின் மனம் இதை தான் நினைத்து கொண்டது..

மகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்று… அதோடு இதுவுமே நினைத்தார் தான்.. அந்த வயதிலேயே காதல் என்று ஒரு பையனுக்கு கிரிட்டிங் கார்ட் கொடுத்தவள்..

அதுவும் இவள் கிரிட்டிங் கார்ட் கொடுத்த பையனின் அம்மா அன்று தன்னை பார்த்து பேசிய பேச்சுமே அவரின் நியாபகத்திற்க்கு வந்து சென்றது..

நான் ஒரு ஆம்பிளை பிள்ளையை எவ்வளவு ஒழுங்கா வளர்த்து வைத்து இருக்கேன்.. ஆனா நீங்க பெண்ணை.. அதுவும் என் மகனோட மூன்று வயசு சின்ன பெண்.. பார்த்து இப்போவே இப்படி இருக்கா. நாளை பின்ன படிச்சு வேலைக்கு போக வர ஆரம்பித்தால், என்ற வார்த்தையில் அன்று ஒரு அன்னையாக கூனி குறுகி தான் போய் விட்டார்..

மகளின் முகத்தில் கல்யாண கலை இல்லாததில் அந்த பெண்மணி சொன்னது வேறு நியாபகத்தில் வந்து விட. வேலை பார்க்கும் இடத்தில் மகள் யாரையாவது விரும்புகிறாளோ என்ற பயத்தில் மகளிடம் இரண்டு மூன்று வார்த்தையை வேறு விட்டு இருந்தார்..

இப்போது அதை நினைத்து அவர் மனது குற்றவுணர்ச்சியாகி போனது… அந்த பொறுக்கியை பெத்து விட்டு அந்த அம்மா அன்னைக்கு என்ன பேச்சு பேசினாங்க.. இதுல அந்த பொம்பளை சொன்னதை வேறு நினச்சிட்டு இருந்து இருக்கேன்.

இதுல அந்த பொம்பளை பெத்த பொறுக்கியினால் தான் என் பொண்ணு கஷ்டப்பட்டு கொண்டு இருந்து இருக்கா.. நினைக்க நினைக்க ஆற்றாமையாக இருந்தாலுமே, ஒரு மனது தன் புத்தி எங்கு போனது என்றும் நினைக்க தோன்றியது..

இவையாவும் நினைத்து கொண்டே தன் மகளையே பார்த்து கொண்டு இருந்தார் இந்து மதியின் அன்னை,,

இந்து மதியோ தன் அறையில் இருந்து ஒரு வித சிலிர்ப்போடு வெளியில் வந்தவள்… தன் அன்னையை பார்த்து விட்டவள் தன் முகத்தை சகஜமாக்க முயன்றாலுமே நொடியில் எல்லாம் அவளாள் வீர் கொடுத்த அந்த உணர்வின் தாக்கத்தை மாற்ற முடியவில்லை…

அதனால் தலை குனிந்து கொண்டே சமையல் அறைக்கு சென்றவள் என்ன இருக்கிறது என்று பார்த்தவள் வீர் பசியறிந்து விரைந்து என்ன சமைக்க முடியுமே என்று கட கட என்று அவுலை கொஞ்சம் எடுத்து நல்ல தண்ணீரில் ஊற வைத்தவள் அம்மா எதற்க்கு வெங்காயம் அரிந்து வைத்து இருக்கிறார் என்று தெரியாது..

அதனால் அதை எடுத்து சமைத்து கொள்ளலாமா என்று கேட்க தான் இந்து மதி கூடத்திற்க்கு வந்தது..

அம்மா இப்போதும் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்தவள்..

“ம்மா ம்மா…” என்று இரண்டு மூன்று முறை அழைத்த பின் தான் தன் சுயத்துக்கு வந்தவர்.. என்ன நினைத்தாரோ… தன் மகளின் கை பற்றிக் கொண்ட அந்த அன்னை..

“சாரி இந்து.. ஒரு அம்மாவா. என் மகளை நான் புரிந்து இருந்து இருக்க வேண்டும்..” என்று இந்துமதியிடம் அவள் அம்மா மன்னிப்பு கேட்டு கொண்டு இருக்கும் போது தான். வீர ராகவ் இந்து மதியின் அறையில் இருந்து சாவகாசமாக ஈரமான தன் தலையை டவலைக் கொண்டு துடைத்து கொண்டே கூடத்திற்க்கு வந்து நின்றது.

இந்து மதிக்கோ தன் அறையில் இருந்து வீர் உரிமைப்பட்டவன் போல வந்ததை பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று விட்டவள் போலான ஓர் உணர்வில் அப்படியே சிலையாக நின்று விட்டாள்…

அவளின் நிலையை பார்த்தவனுக்கு லேசாக ஒரு புன்னகை.. அதுவும் கள்ளப்புன்னகை…. அவளை பார்த்து சிரித்து கொண்டெ தலையில் துவட்டி கொண்டு இருந்த டவலை எடுத்து மீண்டும் வாசம் பிடித்தவன் அவனின் மதியை பார்த்து ஒரு கண்ணும் சிமிட்ட…

அவனின் அந்த செய்கையை பார்த்து பட படத்து போய் விட்ட இந்து மதியோ… தன் அம்மா இதை பார்த்து விட்டார்களோ என்று பயந்து போய் தன் அன்னையை பார்த்தாள்..

அவளின் அன்னையும் அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவள்…

“உட்காருங்க மாப்பிள்ளை சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்..” என்று சொல்லும் முன்னவே வீர ராகவ் சாப்பிடும் டேபுலில் அமர்ந்து விட்டவன்..

“எங்கு சாப்பிட எதுவும் இல்ல.” என்று இருவரையும் பார்த்து கேட்டான்..

மாப்பிள்ளையை பார்த்து விட்டு அரக்க பறக்க ஜெய பிரகாஷ் ஓட்டலுக்கு சென்றவர். ஓட்டலில் இருக்கும் அனைத்தையும் வாங்கி வந்தவர் போல கைக் கொள்ளா வாங்கி வந்து விட்டவர்.

“சாப்பிடுங்க மாப்பிள்ளை.” என்று சொல்லி தன் மகள் மனைவியையும் அழைத்தார் சாப்பிட பரிமாற சொல்லி…

வீர ராகவனுக்கோ ஓட்டலில் இருந்து உணவை பார்த்து ஒரு விதமாக எரிச்சலாக வந்தது.. அந்த எரிச்சல் அப்பட்டமாக அவன் முகத்திலும் தெரிந்து விட்டது போல.

அதில் இத்தனை நேரம் சிலிர்ப்பில் சிலிர்த்து கொண்டு இருந்த இந்து மதியின் மனநிலை வீர ராகவ்வின் இந்த முக பாவனையில்… பதட்டத்துடன் அவன் அருகில் சென்றவள்..

“என்னங்க …” என்று கேட்டவளிடம் வெளிப்படையாகவே… ஓட்டல் உணவு வகைகளை காண்பித்து…

“எனக்கு சிம்பிளா இருந்தாலுமே வீட்டில் செய்ததை கொடு மதி.. அது நேத்துதா இருந்தாலுமே பரவாயில்லை…” என்று வீர ராகவ் சொன்னதும் இந்து மதி நொடியில் சமையல் அறைக்குள் சென்றவள்..

அம்மா அரிந்து வைத்து இருந்த அந்த வெங்காயம்.. அது எதற்க்காகவும் இருந்து கொண்டு போகிறது..

என்று கடையில் சீரகம் சிறிது கடுகு …கள்ளப்பருப்பு… உளுந்தப்பருப்பு… இஞ்சி சிறிதாக அரிந்து போட்டு முந்திரியையும் சேர்த்து தாலித்தவள் சிறிது கறிவேப்பில்லையும் போட்டு அதில் வெங்காயமும் போட்டு வதக்கி கொண்டு இருந்த போதே ஊர வைத்த அவுலை வடிக்கட்டி எடுத்துக் கொண்டாள்..

வதக்கிய வங்காயத்தில் உப்பும் சேர்த்து அது பொன்னிரமாக வதங்கி வந்த பின்..வடிகட்டி வைத்த அந்த அவுலை கொட்டி வதக்கி கொண்டே.. குளிர்சாதனப்பெட்டியில் இருந்த நேற்று இருந்த வாழக்காய்… சிறிது சாம்பார்.. அடி திப்பி ரசம் அனைத்துமே ஒன்றாக கலந்து இன்னொரு ஸ்டவ்வில் வைத்து சூடு செய்யும் போதே அவுல் உப்புமா ரெடியாகி விட… அனைத்தும் சேர்த்து சூடு செய்தவை சுண்டகறியாக மாறிய பின்… சுட சுடாக எடுத்து வந்து வீர ராகவ்வுக்கு கொடுத்தாள்..

வீர ராகவ் எத்தனை நாள் சாப்பிடாது இருந்தானோ.. அத்தனை விரைவாக சாப்பிட்டு முடித்தவன் முன் சூடாக ஒரு பில்டர் காபியையும் வைக்க.. அதையுமே ரசித்து குடித்து முடித்தவன் முகத்தில் அத்தனை திருப்தி.. அதோடு இந்து மதியின் உணவை பாராட்டவும் செய்தான்..

“அவல் உப்புமா என் அம்மாவும் செய்வாங்க.. ஆனா அந்த சைட்டிஷ் வித்தியாசமாவும் இருந்தது, ரொம்ப சுவையாவும் இருந்தது… என் வேலையினால் நான் ரொம்ப வெளியில் தான் சாப்பிடுவேன்.. வீட்டில் சாப்பிடுவது ரொம்பவே கம்மி.. அந்த நாளிலுமே வெளியில் வாங்கி வந்தால், உண்மையில் எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கும் மதி.. சிம்பிளா இருந்தாலுமே அப்போ வீட்டு சாப்பாட்டை தான் விரும்பி சாப்பிடுவேன்…” என்று சொன்னவன்.

பின்… “ இனி நான் வீட்டில் சாப்பிடும் போது இந்த சைட்டிஷ் இருப்பது போல பார்த்து கொள் மதி…” என்று விட்டு தன் தட்டில் மிச்சம் இருந்ததையும் தன் ஒரு விரல் கொண்டு நக்கி சாப்பிட்ட பின் தான் கை கழுவ சென்றது..

கை கழுவிக் கொண்டு வந்தவன்.. தான் சொன்னதற்க்கு எதுவும் சொல்லாத மதியிடம்..

“என்ன மதி சமைத்து கொடுக்குறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல காணும்.. “ என்று சொன்னவன்.. பின்..

“இந்த டிஷ் செய்யிறது ரொம்ப கஷ்டம்மா. அப்போ என்றால் நீ வேலைக்கு போகாத நாளா பார்த்து செய்… போதும்..” என்று விட.

அவனின் இந்த பேச்சில் இந்து மதி அப்படி ஒரு சிரிப்பு.. இந்து மதியின் அம்மா அப்பாவுக்குமே சிரிப்பு வந்து விட்டது தான்..

ஆனால் நாளை மாப்பிள்ளையாக போகிறவர்.. அப்படி வெளிப்படையாக சிரித்தால் நன்றாக இருக்குமா. அதனால் அடக்கி கொண்டு இருந்தாலுமே, அவர்களும் சிரிக்கிறார்கள் என்பது அவர்கள் முகமே காட்டி கொடுத்து விட்டது..

அதை பார்த்த வீர ராகவன். தான் என்ன சொன்னோம்.. ஜோக் கூட அடிக்கவில்லையே என்று நினைத்தாலுமே அவர்களின் அந்த சிரிப்பை வீர ராகவன் மன நிறைவோடு தான் பார்த்து நின்றான்.

இந்து மதி ஒரு விதத்தில் அந்த வாசு தேவ்வினால் மன அழுத்தத்திற்க்கு ஆளாகினாள் என்றால், மகளின் ஒட்டாத தன்மையில் இவர்களுமே மனதில் வேதனை பட்டு தானே இருந்து இருப்பார்கள்.. இருந்துமே மகளை தவறாக நினைத்து இருந்து இருக்க கூடாது தான் என்று இதையும் நினைத்தவன்.. மனது விட்டு சிரித்தவர்களை ரசித்து பார்த்து கொண்டு இருந்தவனிடம்..

இந்து மதி சிரிப்புக்கு இடையே…. “ உங்களுக்கு பிடித்த உணவை நீங்க எப்போ கேட்டாலும் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் போதுமா…” என்று சொல்லி விட்டு இன்னும் சிரிக்க.

இப்போது வீர ராகவன் சுதாகரித்து விட்டான்… இப்போது இது சமைக்க அத்தனை எளிமையானதா என்று எல்லாம் கேட்கவில்லை…

“என்ன டிஷ் அது…?” என்று தெரிந்து கொள்ள வேண்டி கேட்டான்..

சொன்னால் நேற்று மீதம் ஆனாதை ஒன்றாக சேர்த்து வைத்து சாப்பிடுவது என்று.. வீர ராகவ்வுக்கு ஆச்சரியமாக இருந்தது…

இந்து மதியின் அப்பா அம்மா தான் பழையதை போட்டு விட்டோம் என்று கோபப்பட போகிறானோ என்று இப்போது பயந்து போய்.. அதை சொல்லி மன்னிப்பும் கேட்க…

“.இதுல என்ன அத்த இருக்கு..ஆனா ரொம்ப நல்லா இருந்தது. என் வயிறு கேடாது எது என்றாலும் கொடுத்தால் போதும் நான் சாப்பிட்டு கொள்வேன்…”

பின் இந்து மதியும் வீர ராகவ்வும் அங்கு கூடத்தில் அனைவரின் முன்னும் தான் பேசி கொண்டு இருந்தார்கள்.. என்ன பேசினார்கள் என்று மற்றவர்களுக்கு என்ன அவர்களுக்கே தெரியுமா என்று கேட்டால் தெரியாது தான்.. அத்தனை ரகசியப்பேச்சுக்களாக தான் பேசிக் கொண்டு இருந்தது…

இதை பார்த்த இந்து மதியின் பெற்றோர்கள்..

இவர்கள் இருவரின் செயல்களையும் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தனர் இந்துமதியின் அம்மாவும் அப்பாவும்..

இதுவரை இவர்கள் சரியாக பேசி கூட இவர்கள் பார்த்தது இல்லை.. இன்னும் கேட்டால் நேற்று வரை இந்து மதியின் அம்மாவுக்கு மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது… இந்து மதிக்கு வீர ராகவ்வை பிடிக்கவில்லையே என்று..ஆனால் இன்று இவர்களின் செயல்களை பார்த்தால் என்னவோ ஆண்டு ஆண்டு காலமாக கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டு இருப்பது போல தான் இவர்களின் இருவரின் செயல்களும் இருப்பது போல இருக்கிறது என்று பார்த்தவர்களுக்கு அத்தனை திருப்தியும் மனநிறைவும்...

இதோ அதே மனநிறைவுடனே வீர ராகவ்… “இந்து மதியை கூட்டிட்டு போறேன்.. இன்னைக்கே கூட்டிட்டு வந்து விட்டு விடுவேன்..” என்று அனுமதி எல்லாம் கேட்காது ஒரு தகவலாக சொல்லி விட்டு மட்டும் இந்து மதியை அழைத்து கொண்டு செல்ல..

அவர்களின் ஜோடி பொருத்ததை பார்த்தவர்களுக்கும் மனது நிறைந்து தான் போனது…

வீட்டில் இருந்து வீர ராகவ் காதல் மன்னனாக தான் இந்து மதியை அழைத்து கொண்டு சென்றது..

ஆனால் தனித்து பேச எந்த வித தொந்திரவும் இல்லாத ஒரு இடத்தில் தன் காரை நிறுத்திய வீர ராகவ் நொடியில் அன்னியனாக மாறி இந்து மதியை அப்படி கேள்வியாக கேட்டு அடுக்கி தள்ளி விட்டான்..

“அந்த பொறுக்கி உன் கிட்ட வாலாட்ட உடனேயே நீ என் கிட்ட தானே நீ சொல்லி இருக்கனும்..?” என்று கேட்டவனிடம் இந்து மதிக்கு இப்போது பயம் எல்லாம் இல்லை.. அதே போல தன்னை பற்றி சொன்னால் தவறாக நினைத்து கொள்வான் என்ற எண்ணமும் இப்போது இல்லாது இவன் தனக்கு உரிமைப்பட்டவன். தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில்..

“அப்போ நீங்க என்னை தப்பா நினச்சிக்குவிங்க என்ற தான் உங்க கிட்ட நான் சொல்லலே.. ஏன்னா என் அம்மா அப்பாவே என்னை என்னவோ நான் பெரிய தப்பு செய்தது போல தான் என்னை பார்த்தாங்க… என்னை பேசினாங்க. ஒரு கட்டத்துக்கு பின் நான் தப்பு தானா…? என்று என்னை நானே கொஞ்ச நாள் நினச்சிட்டு இருந்தேன்.. அப்படி இருந்தது அவங்களுடைய பேச்சு.. என் அண்ணன் தான் கொஞ்சம் என் பக்கம் பார்த்து பேசினது..

அது கூட இது சின்ன வயசு ஒரு ஈர்ப்பு அப்படி எல்லாம் சொல்லலே.. இனி அந்த தப்பு செய்ய மாட்டாள்… இப்படி தான் சொன்னது.. ஆனா ஒன்னு அவனால தான் நான் படிப்பு முடிச்சி வேலைக்கு எல்லாம் போவது… இல்லேன்னா என் அம்மா நான் பன்னிரெண்டாவது படிச்சி முடிச்சதும் கல்யாணம் செய்து வைக்கும் எண்ணத்தில் தான் இருந்தாங்க.. என்னை பத்தி எல்லாம் தெரிஞ்ச என் அம்மாவே என்னை அப்படி தான் என்பது போல தான் நினச்சாங்க.

உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்…? அதோட யமுனா விசயத்தினாலேயே உங்களுக்கு என் மேல ஒரு கெட்ட அபிப்பிராயம் இருக்கு என்று எனக்கு தெரியும். இதுல இது வேற சொன்னா.. அதோட நீங்க என்னை கல்யாணம் செய்துக்குறதே உங்க பிரண்ட் சாருகேசவனுக்காக என்னை பழிவாங்கவோ என்ற பயமும் இருந்த போது எப்படி உங்க கிட்ட அந்த பொறுக்கி என் கிட்ட பேசுனதையும், நடந்து கொண்டதையும் சொல்ல முடியும்..?” என்று கேட்டவளின் கேள்வி நியாயமானது தான்..

ஆனால் உண்மையில் இந்து மதி தன் சிறு வயதில் அவள் செய்ததை சொல்லி இருந்தாள். நொடியில் இந்து மதியின் மனநிலையை வீர ராகவ் புரிந்து கொண்டு இருந்து இருப்பான்..

இந்து மதி யமுனாவிடம் ஏன் நாமே வலிய போய் பேச கூடாது என்று சொன்னால் என்பதையும் தெரிந்து இருக்கும்..

ஆனால் இந்து மதி சொன்னதிலும் தப்பு இல்லை தானே.. அப்பா அம்மாவே மகளை புரிந்து கொள்ளாத போது என்னை பற்றி இவளுக்கு என்ன தெரியும்.. தன்னிடம் அனைத்துமே சொல்ல.

அதோடு யமுனா விசயம் வேறு இருக்க… வீர ராகவ் இந்து மதியின் சார்பாக யோசித்ததில் மனது கொஞ்சம் அமைதி அடைந்தவன்..

இப்போது வீர ராகவ் தன் மனதை அவனின் மதியிடம் முழுவதுமாக திறந்தான்..

“உன் கிட்ட உண்மையை சொல்லனும் என்றால், நான் சாருகேசவன் கல்யாணத்தில் உன்னை பார்த்ததுமே நான் ப்ளாட் மதி… ஆனா அதற்க்கு பின் நீ பேசினது.. பின் யமுனா விசயம்.. என்று ஒன்றன் பின் ஒன்றாக உன்னை தப்பாவே நினைக்க வெச்சதில், இது நமக்கு சரிப்பட்டு வராது என்று உன் பக்கம் சாய நினச்ச என் மனசை இழுத்து நிறுத்தி கொண்டேன்..” என்று வீர் சொல்லவும் அவன் மதியின் முகம் இத்தனை நேரம் இருந்த மலர்ச்சி மறைந்து சோர்ந்து போக.. அது அவளின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது..

அதை வீர ராகவ்வும் கண்டு கொண்டான். அதில் இத்தனை நேரம் எதிர் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவன்.. அவள் அருகில் அமர்ந்தவன் அவள் தோள் மீதும் கை போட்டு கொண்டு… தன் தாடையை அவளின் இன்னொரு தோள் பக்கம் பதித்துக் கொண்டவன்.

“என் மதிக்கு முகம் ஏன் மதியிழந்து போயிடுச்சி..” என்று கேட்டவனுக்கு இந்து மதி பதில் அளிக்கவில்லை.

ஆனால் அவனை திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.. அதில் மதியின் தோள் மீது தன் மோவாயை வீர் பதித்து கொண்டு இருந்ததினால் இருவரின் முகமும் பக்கம் பக்கம் என்பதை விட மிக நெருக்கத்தில் இருவரின் முகமும் இருந்தது..

ஆனால் அதை இருவரும் உணரவில்லை.. காரணம் இந்து மதியிடம் பேச்சு இல்லாத போதும் அவள் கண்கள் கலங்கி போய் கண்ணீர் இப்போது வரவா..? அப்போது வரவா என்று துடித்து கொண்டு இருக்க. அதற்க்கு இணையாக அவளின் உதடுகளும் போட்டி போட்டு கொண்டு துடித்து கொண்டு இருந்ததை பார்த்த வீர ராகவ்..

அவளின் தோள் மீது இருந்து தன் முகத்தை எடுத்து கொண்டவன். மதியின் முகத்தை தன் நெஞ்சில் பதித்து கொண்டவனாக.

“ஏய் மதி என்ன இது..? இப்போ நான் என்ன சொன்னேன் என்று இப்படி கண் கலங்குது..?” என்று வீர ராகவ் அதட்டினாலுமே, அதில் அவன் இந்து மதியின் மீது இருந்த அன்பும்.. உரிமை உணர்வும் தான் அதிகமாக வெளிப்பட்டது..

அதை இந்து மதியுமே உணர்ந்தாள் தான்.. ஆனாலும்.. தன்னை பிடித்து இருந்துமே தன் செயல் தானே தன்னை விட்டு அவனை விலகி இருக்க நினைத்தது.. தான் அப்படி தானே நடந்தும் கொண்டேன். என்று நினைத்ததில் இந்து மதிக்கு வீர ராகவ்வுக்கு தான் பொருத்தம் இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை சடுதியில் மனதில் தோன்றியது..

அதை அவனிடம் சொல்லவும் செய்தாள்… “ உங்க பிராட் மைண்ட்க்கு நான் உங்களுக்கு சரியா வர மாட்டேன்.. வீர்..” என்று சொன்னதில், வீர ராகவ்..

“அதுக்கு…” என்று ஒரு மாதிரியாக கேட்டதுல் இந்து மதி என்ன சொல்வது என்பது போல அவனை திரும்பி விழி விரித்து பார்த்தவளுக்கு உண்மையில் அவளுக்குமே அவனிடம் என்ன பேசுவது என்பது தெரியவில்லை.

ஆனால் மனது இதை தான் நினைத்தது. தான் அவனுக்கு பொருத்தம் இல்லை என்று.. ஆனாலும் அவனை மறுக்கவும் முடியவில்லை..

இந்த திருமணம் முடிவானதில் இருந்து அவளின் மனது இரு மனதாக தான் இருந்தது.. அதில் வீர ராகவ்வை தனக்கு பிடித்து இருக்கிறதா என்று யோசிப்பதை விட வேறு வேறு பிரச்சனைகளை யோசித்ததில், வீர ராகவ் பற்றி தனிப்பட்டு எல்லாம் யோசிக்காது இருந்து விட்டாள்..

ஆனால் கடந்த இந்த நாட்களில் வீர ராகவ் தனக்கு எத்தனை பிடித்தம் இருக்கிறது என்று அவள் மனது உணர்ந்ததில் அவனை இழக்கவுமே அவளுக்கு மனது இல்லை.. அவளின் மனது அல்லாட்டத்தை அவள் முகம் காட்டி கொடுக்க.

வீர ராகவ் அவள் கன்னம் இரண்டையும் தன் இரு உள்ளங்கையில் அடக்கி கொண்டவன்… “ உன்னை பத்தி தப்பான அபிப்பிராயம் இருந்த போதே… உன் போட்டோவை என் அம்மா காண்பித்து.. “இது நான் உனக்கு பார்த்த பெண்.. பிடித்து இருக்கா …? என்று கேட்ட போது.. என்னால் மறுத்து சொல்ல முடியல.. உன்னை என்னால விட முடியல.

இப்போ உன்னை பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.. நீ பேசிய வார்த்தை எதுக்காக என்று எல்லாம் தெரிந்த பின்.. உன்னை விட்டு விடுவேனா…? சொல்.. இனி இது போல எல்லான் பேசுறது என்ன மனசுல கூட உன்னை பத்தி தாழ்வா எல்லாம் நினைத்து கொள்ள கூடாது.” என்று கண்டித்து சொல்ல.

இந்து மதிக்கு வீர ராகவ்வின் இந்த பிடித்தம் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. அதன் விளைவு… தன் கன்னத்தை பிடித்து கொண்டு இருந்த அவனின் உள்ளங்கையில் திரும்பி தன் இதழை அதில் பதித்தவள்.

அவனின் கண்களை பார்த்து… “ ஐ. லவ்.. யூ வீர்.. இப்போ தான் எனக்கு புரியுது… ஈர்ப்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம்..” என்று சொன்னவளின் செயலிலும் பேச்சிலும்.. அத்தனை காதல் தெரிந்தது..

வீர ராகவ்வுக்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை தான். அவனுக்குமே மனது லேசானது போல ஒரு உணர்வு தான்..

அதே மனது நிறைவுடன்.. ஓட்டலில் சாப்பிட்டு பின்… ஷாப்பிங்காக. துணிக்கடையில் இந்து மதிக்கு பிடித்தது போல வீர ராகவ் அவளுக்கு மெத் மெத் என்ற ஒரு மைசூர் சில்க் புடவையை எடுத்து கொடுத்தவனிடம்..

இந்து மதி.. “ எனக்கு சில்க் சாரியோட காட்டன் சாரி தான் வீர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் இந்த கோட்டா கட்டான் சாரி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..” என்று சொல்லி கொண்டே வந்த இந்து மதியின் பேச்சு பாதியில் நின்று விட்டது..

காரணம் வீர ராகவ் இந்து மதி பேச பேச அவன் கண்கள் மட்டும் சிரித்து கொண்டு இருக்க. இவன் ஏதோ ஏடா கூடமாக தான் நினைக்கிறான் என்று தெரிந்து கொண்டவளாக வீர ராகவை முறைத்து பார்க்க.

வீர ராகவோ அவனின் மதியின் முறைப்பை எல்லாம் சட்டை செய்யாது.. கோட்டா காட்டன் கட்டி கொண்டு நீ என்ன பள்ளியில் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க போறியா… இது நான் உனக்கு நம்ம பள்ளியறையில் கட்ட வாங்கினது.. அங்கு நான் உனக்கு சொல்லி கொடுப்பேன். அதுக்கு இந்த புடவை தான் வசதி..” என்று சொன்னவனின் பேச்சில் இந்து மதி சிணுங்கி வெட்கம் பட்டாலுமே.. அவனின் இந்த பேச்சு அவளுக்கு பிடித்து தான் இருந்தன…




 
Top