Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

ஆசைகள் அடங்காது... 24...2 நிறைவு...

  • Thread Author
அத்தியாயம்….24…2 final

வாசு தேவ் எதையும் மறைக்கவில்லை.. மறைக்கவும் முடியாது என்பது வேறு விசயம்…காரணம் அவன் நண்பன் பிரசாந்த் தான் பதிவு செய்து வைத்திருந்ததை அனைத்துமே காவல் துறை வசம் கொடுத்து விட்டு இருந்தான்…

அதை அனைத்துமே கேட்ட சாருகேசனும், வீர ராகவ்வும்.. “ இது என்ன டா… அசிங்கம் பிடிச்ச வேலையா இருக்கு… அவன் ஜல்சா பண்ணதை கேட்பது உனக்கு அப்படி ஒரு சந்தோஷமா…? அப்போ உன்னால கேட்க மட்டும் தான் முடியுமா..? அதுக்கு தான் அவன் கிட்ட இந்த கருமாந்திரத்தை எல்லாம் கேட்டு ரசிச்சிட்டு இருந்தியா..?” என்று வீர ராகவ் கேட்க.

அதற்க்கு பிரசாந்த் ஒன்றும் சொல்லாது தலை குனிந்து அமர்ந்திருக்க.. ஆனால் சாருகேசவன்… “என்ன மச்சான் இப்படி ஒன்னுத்துக்கும் வேலைக்கு ஆகாதவன் என்று பொட்டுன்னு சொல்லிட்ட.. அது தான் அந்த நாதாரி உனக்கு ஆன்ட்டி தான் கிடைக்கும். எனக்கு தான் வகை வகையா கிடைக்கும் என்று பேசினானே… “ என்று பிரசாந்த் பதிவு செய்ததை கேட்டதை சொல்லி சாருகேசவன் நினைவு படுத்த.

“ஓ ஆமாம் லே…” என்று சொன்னவன்..

பின் பிரசாந்த்திடம்.. “ஆமா அவன் ஜல்சா பண்ணதை கேட்க பிடிக்கும் என்று சொன்ன. ஆனா இது எல்லாத்தையும் நீ ஏன் பதிவு செய்து வைத்து இருக்க…?” என்ற கேள்விக்கு பிரசாந்த் பதில் சொல்ல முடியாது திரு திரு என்று முழித்து கொண்டு இருந்தான்…

வாசு தேவ் மீது பிரசாந்துக்கு அப்படி ஒரு பொறாமை… தானுமே படித்து நல்ல வேலையில் தான் இருக்கிறோம்… ஆனால் இவனுக்கு மட்டும் எப்படி பெண்கள் அவர்களாக தேடி வந்து இவனிடம் விழுகிறார்கள்.. அதுவும் அனைத்துமே அழகான இளம் பெண்கள்..

தனக்கோ. தேடி தேடி சென்றாலும் அவன் சொல்வது போல தன்னை விட வயது முதிர்ந்தவர்கள் தான்.. அவர்களோடு உறவு வைத்து கொள்ளும் போதே பிரசாந்துக்கு தெரிந்து விடும்.. இவளுங்களுக்கு தான் எத்தனையாவது ஆளோ என்று..

அனைத்து பாதுகாப்புக்களோடு தான் அந்த பெண்களை பிரசாந்த் தொடுவான்… ஆனாலுமே இதழ் முத்தம் பின் டீப்பாக செல்வது எல்லாம் அவனுக்கு உமட்டிக் கொண்டு வரும்..

ஆனால் வாசு தேவ்வுக்கு காதல் என்று வருபவர்கள்… இவனுக்கு என்று வரும் போது அனைத்துமே அந்த பெண்களுக்கு புதியது தானே.. அதுவும் வாசு தேவ் ஒரு சிலதை அந்த பெண்களிடம் இருந்ததை அவன் சொல்லும் போது இவனுக்கே ஒரு மாதிரியாக தான் அந்த இடத்தில் இருப்பது போல பல முறை கற்பனை செய்து கொள்வான்..

ஒரே ஒரு முறை ஏதாவது ஒரு பெண்ணை வீடியோ போல் எடுத்து அதை வைத்து அந்த பெண்ணை என் பக்கம் அனுப்புடா என்று இதை பல முறை வாசு தேவ்விடம் சொல்லி விட்டான்..

அப்படி செய்து இருந்து இருந்தால் பிரசாந்த் வாசு தேவ்வை காவல் துறையிடம் மாட்டி விட்டு இருந்து இருக்க மாட்டானாக இருக்கும்.. ஏன் என்றால் இவனுமே தானே மாட்டிக் கொள்வான்..

ஆனால் இப்போது அப்படி தான் இல்லையே.. அதோடு அவனோடு தான் இருப்பதால் எங்கு தன்னையுமே இந்த போதை கேசில் மாட்டி விட்டு விட போகிறார்கள் என்று பிரசாந்த் மிகவும் பயந்து போய் விட்டான். ஏன் என்றால் அந்த போதை வஸ்த்துக்களை இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து எடுத்தது போல தானே காட்டி இருக்கிறார்கள் வீர ராகவ்வும் சாருகேசவ்வும்..

பிரசாந்துக்கு இதுவும் தெரியும்.. பெண்கள் பழக்கம் தான் வாசு தேவ்வுக்கு… இந்த போதை எல்லாம் ஏதோ வாசு தேவ்வை பழி தீர்க்க தான் இவன் மீது இதை போடுகிறார்கள்.. கூடவே ஏதோ பெரிய இடத்து பெண் மீது கை வைத்து விட்டான் போல.. அது தான் பெண்ணை இழுக்காது இது போல கேசில் போட பார்க்கிறார்கள்..

கூட தான் இருக்க. தன்னையும் இதில் மாட்டி விட போகிறார்கள்.. என்ன தான் காவல் துறை போதை கேசில் பிடித்தாலுமே, பெண்கள் கேசில் போடவும் தான் துடித்துக் கொண்டு இருப்பார்கள்.. தான் இந்த ஆதாரத்தை எல்லாம் கொடுத்தால், தன்னை நல்லவன் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள் என்று தவறாக நினைத்து விட்டான்..

ஆம் தவறாக தான்.. பின் என்ன..? மைனர் பெண்ணை தொட்ட விசயமே ஷாக் அடித்தது போல வாசு தேவ் வகையாக தானே மாட்டிக் கொண்டு இருக்கிறான்… அது ஒன்றே போதுமே… ஆனால் இதுவும் தேவைப்படும் என்று பிரசாந்திடம் இருந்து இந்த ஆதாரத்தையும் வாங்கி கொண்டவர்கள்.

இப்போது இவனை குடையோ குடை என்று குடைய ஆரம்பித்து விட்டார்கள்.

“ஏன் ரெக்கார்ட் செய்த. சொல். அவனை பிளாக் மெயில் செய்ய தானே..” என்று வீர ராகவ் கேட்க.

“எதுக்கு பிளாக் மெயில் செய்ய நினைத்த..” என்றும் கேட்க.. பிரசாந்தினால் உண்மையா சொல்ல முடியும்.. ஒன்றும் சொல்லாது இருக்க..

சாருகேசவன் அனைத்தையும் பிட்டு பிட்டு வைத்து விட்டான்.. “ வீட்டை ஷேர் செய்வது போல பெண்களையும் ஷேர் செய்ய தான் இருக்கும்.. இவனுங்க போலவங்க எல்லாம் எதுக்கு இதை பதிவு செய்ய போறானுங்க…” என்று பல்லை கடித்து கொண்டு போலீஸ் ட்ரீட்மெண்டை கொஞ்சம் பிரசாந்துக்கு காட்டிய சாருகேசவன்..

வீர ராகவ்விடம்.. “ இந்த பரதேவி மேலேயும் ஏதாவது ஒன்று இரண்டு கேச போட்டு விட்டுடலாம்.. இவனுங்களுக்கு பொண்ணுங்க எல்லாம் எப்படி தெரியுது..” என்று பேசிக் கொண்டே பல்லை கடித்து கொண்டு குறி பார்த்து ஒரு எட்டு விட்டவன்.

“கேட்க பிடிக்குமோ. உன் அப்பா கிட்ட கேளுடா… அம்மா கிட்ட நீங்க எப்படி எப்படி நடந்து கொண்டிங்க…? என்று கெட்டு நீ பிறந்தவிதத்தை கேளுடா நான் பரதேசி…” என்று அடி வெளுத்து விட்டார்கள்..

இதை அனைத்தையுமே ஒரு மெளன சாமியார் போல அமைதியாக பார்த்து கொண்டு இருந்தான் வாசு தேவ்….

போதை பொருள் வைத்து இருக்கும் கேசு.. அதை மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் கேசு.. கிருஷ்ண வேணியை ஏமாற்றி கற்பழித்தது என்று அனைத்து கேசையும் போட்டதற்க்கு வாசு தேவ் எந்த மறுப்பும் சொல்லாது அனைத்தையும் ஏற்று கொண்டு விட்டான்..

வீர ராகவ்வே,… “சே. ரொம்ப போறிங்கா இருக்கு மச்சான். எல்லாத்துக்குமே ஆமா ஆமா நான் தான் செய்தேன்… நான் தான் செய்தேன் என்று இப்படி பொசுக்குன்னு ஒத்து கொண்டா.. நாம இத்தனை வருஷம் போலீஸ் ட்ரையினிங்கில் கத்துகொண்டது என்னத்துக்கு ஆகுறது டா….

பார்த்தியா அவனை… ஜென்டில் மேன் போல அவன் முகத்தையும் அவன் உடையையும்.. அமைதியா புத்தர் போல இந்த கேஸை என் மேல போடு ங்க. என்று இருக்கான்..” என்று வீர ராகவ் பல்லை கடித்து கொண்டு வாசு தேவ்வை அடிக்க.. அந்த அடியையும்.. அவன் ஏசு பிரான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிப்பது போல காண்பித்து கொண்டு இருக்க.

“என்ன டா இது..?” என்று தான் இருந்தது… நான் செய்யவில்லை என்று மறுத்தால் அடிக்கலாம்.. இவனோ தாங்கள் அந்த போதை கேஸ் பொய் கேஸ் தான். அதையுமே நான் தான் செய்தேன் என்று ஒத்து கொண்டால், இவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது.

அதனால் தான் அனைத்தையுமே சேர்த்து பிரசாந்த்தை ஒரு பிடி பிடித்து கொண்டது,..

வாசு தேவ்வுக்கு தான் எப்போது ஒரு எச் ஐ வி தொற்று உள்ள ஒரு பெண்ணோடு இருந்தேன் என்று தெரிய வந்ததோ.. அப்போதே மொத்தமாக அவன் செத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் தனக்கு இத்தனை பெரிய தண்டனை.. அதுவும் பெண்களை ஏமாத்திய விசயம். கிருஷ்ண வேணி… அதற்க்கு தண்டனை என்பது வேறு தனிப்பட்டு இந்த போதை.. நேற்று இருந்த பெண்.. அது கொடுத்த நோய் ஏன் ஏன் என்று புரியாது இருக்க..

வீர ராகவ் அனைத்துமே புரிய வைத்து விட்டான்… தான் யார் என்று…

வாசு தேவ்வுக்கு அய்யோ என்று தான் இருந்தது.. வாசு தேவ் இந்து மதியை மறந்து விட்ட நிலையில் தான் இருந்தான்… என்று தான் சொல்ல வேண்டும்..

ஆனால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த பிரான்சில் இந்து மதியை பார்த்ததுமே.. இவள் மட்டும் தானே தன் கணக்கில் விடுப்பட்ட பெண்..

இந்து மதிக்கு முகம் மாறவில்லை. அதனால் வாசு தேவ் மிகவும் எல்லாம் யோசிக்காது சட்டென்று அடையாளம் கண்டு கொண்டு விட்டான்..

ஆனால் உடல் வனப்பு. பதினைந்து வயது பெண்ணுக்கும், இருபத்தி மூன்று வயது பெண்ணுக்கும் உடல் அளவில் பல மாற்றங்கள் இருக்க தானே செய்யும்.. அந்த மாற்றம் தான் வாசு தேவ்வுக்கு விடுப்பட்ட கணக்கை சரி செய்ய தூண்டியது எனலாம்..

தனக்கு லவ் கிரிட்டிங்க கார்ட் கொடுத்த பெண் தானே.. தன்னை அவளுக்கு பிடுத்து தானே இருந்தது.. அதை வைத்தே ஈசியாக வளைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டான்..

அதோடு நிச்சயம் ஆன பெண்.. தன்னை காட்டி கொடுக்க முடியாது… நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு இந்த விசயம் தெரிந்தால், கண்டிப்பாக திருமணத்தை நிறுத்தி விடுவான்.

இந்து மதியை எளிதாக தன் வசம் படுத்தி விடலாம் என்று நினைக்க வைத்தது அவளின் நிச்சயமும்.. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையையும் வைத்து தான்..

ஆனால் அந்த நிச்சயம் செய்த மாப்பிள்ளையினாலேயே தான் மாட்டி கொள்வோம் என்று வாசு தேவ் நினைத்தும் பார்த்து இருக்கவில்லை..

அவனுக்கு கல்பனாவோடான திருமணம்.. நின்றது.. பெண்கள் விசயம் வெளி வந்தது இது எல்லாம் கூட பெரியது இல்லை.. அவனுக்கு பெரிய விசயம்.. அந்த கிரிமி… இனி நான் வாதாடி என்ன சாதிக்க போகிறேன்..

சின்ன வயது முதலே… வயதிற்க்கு மீறி அனைத்துமே செய்த வாசு தேவ்.. கடைசியில் வயதுக்கு மீறி தான் தன் முடிவு எடுத்தான்… இனி நான் வெளியில் இருந்து என்ன செய்ய போகிறேன் என்று.

கல்பனாவும்..அவளின் அண்ணன் அப்பா என்று வந்து அப்படி ஒரு பேச்சு… என்ன தைரியம் டா. எங்க வீட்டு பெண்ணையே ஏமாத்த நினச்சி இருப்ப என்று…

இதில் வாசு தேவ் பெற்றோர்கள் வந்து.. “இனி நீ என் மகனே இல்லை.” என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்…

பிரசாந்தை விடு வித்து விடலாமா என்ற யோசனை வீர ராகவ்வுக்கு.. அவன் வாசு தேவ் பேசியதை அனைத்தையும் பதிவு செய்து வைத்து இருப்பதில் வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று நம்பினான்.

தவறு செய்தவன் கூடவே இருந்து இருக்கிறான்… அதை தடுக்காது.. அதை கேட்டு ரசித்தும் இருக்கிறான். இவன் மட்டும் யோக்கியனாகாவா இருந்து இருக்க போகிறான்.. இவனை விட்டால் இவன் பங்குக்கு இன்னும் சில பெண்களையும் தான் சீர் அழிப்பான்…

தவறு செய்பவரை விட… அந்த தவறுக்கு துணை போனவர்களையும் தண்டித்து தானே ஆக வேண்டும்.. அதனால் பிரசாந்திடம் தன் போலீஸ் ட்ரீட்மெண்டில் காம்பில் தான் வீர ராகவ் காட்டியது…

பிரசாந்துக்கு பிஞ்சி உடம்பு போல… சிறிது நேரம் தான் தேவைப்பட்டது.. அவனிடம் இருந்து உண்மைகளை வாங்க..

அனைத்தையும் சொல்லி விட்டான்… “ இதை காட்டி ஒரு பெண்னை என் கிட்ட அனுப்பு என்று கேட்க தான்..” என்றதும் சாருகேசவன் ஏதோ நாடகத்தை பார்ப்பது போல பார்த்து கொண்டு இருந்தவன் பிரசாந்தின் இந்த பேச்சில், அவன் பங்குக்கு எழுந்து வந்து அடி பின்னி எடுத்து விட்டான்..

அவன் மீது இரண்டு கேஸ்களை போட்ட பின் தான் இருவருமே ஒய்ந்தனர்.

அதோ இதோ என்று இருந்த திருமண நாள் நாளை எனும் போது தான் ஆனந்த் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தது.

கல்யாண வேலைகளை அனைத்தும் பார்த்தது வீர ராகவ் தான். அவனுக்கு துணையாக அனைத்திலும் தோள் கொடுக்கும் நண்பனாக சாருகேசவன் உதவினான்..

சாருகேசவனுக்கு முன்பு தான் இந்து மதியிடம் அத்தனை நல்ல அபிப்பிராயம் கிடையாது.. அதோடு முதலில் வீர ராகவ் தனக்காக பழி வாங்க தான் இந்து மதியை திருமணம் செய்து கொள்கிறானோ என்று நினைத்து கொண்டு இருந்த சாருகேசவன்.

பின் இத்தனை நடந்தும் அவளையே நண்பன் திருமணம் செய்ய காரணம்.. வீர ராகவ்வுக்கு இந்து மதியை அத்தனை பிடித்து இருக்கிறது என்பதை அவனின் ஒரு சில நடவடிக்கையின் மூலம் புரிந்து கொண்ட பின் நண்பனுக்காக இந்து மதியை ஏற்று கொள்ள பழகிக் கொண்டு இருந்த வேளையில்..

வாசு தேவ்வை பற்றி தெரிந்ததில் இருந்து சாருகேசவன் இந்து மதிக்காகவே திருமண வேலைகளை ஆவளோடு பங்கு ஏற்று கொண்டான்..

பெங்களூரில் இருந்த ஆனாந்துக்கு தான் தான் வீட்டிற்க்கு ..ஒரே மகன்… தான் தன் தங்கையின் திருமணத்தில் உதவி செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலை..

அதை பேசியில் பேசும் போது தன் தாய் தந்தையிடம் சொல்லி வருத்தப்பட்ட போது.. அவர்கள்..

“நீ அங்கு கவிதா அந்த குட்டி பெண் கிருஷ்ணாவை பார்த்துக்கோப்பா. இங்கு மாப்பிள்ளையும் அவர் நண்பனும் தான் எல்லா வேலையையும் செய்யிறது… நானே சும்மா தான் இருக்கேன்னா என்று பார்த்து கொள்ளுங்கள்.. அதோடு நீங்க இங்கு வரும் போது கவிதாவும் கிருஷ்ண வேணியும் இனி அங்கு போகாட அளவுக்கு இப்போவே மொத்தமா குடிச்சிட்டு கூடிட்டு வந்துடுப்பா. ..கல்யாணம் செய்த பின் திரும்ப அங்கு போற மாதிரி எல்லாம் இருக்க கூடாது..” என்று அவளின் தாய் திட்ட வட்டமாக சொல்லி விட்டார்..

ஆம் ஆனாந்த் பெறோர்களுக்கு அனைத்து விசயமும் தெரியும்.. கவிதா இந்தவின் தோழி என்ற பட்சத்தில் அவளின் குடும்ப விசயங்கள் ஒரளவுக்கு தெரியும் தான்.

ஆனால் இப்போது நாளைய இந்த வீட்டின் மருமகள் என்ற பட்சத்தில் அனைத்தும் தெரிந்ததில்..

“ஆம்பிள்ளை நீ என்ன செய்வ ஆனாந்தா. இந்த சமயம் ஒரு சின்ன பெண்ணுக்கு பொம்பளை துணை இருக்கனும்…நான் வேணா அங்கு வரட்டும்மா…?” என்று கிருஷ்ண வேணியின் தற்போதைய நிலை தெரிந்து கேட்டார்..

“இல்லேம்மா கவிதாவே ஆபிஸ் லீவ் போட்டிட்டு மேனஜ் பண்ணிக்கிறா… நானுமே துணை இருக்கேன் தானேம்மா… எனக்கு இப்போ அங்கு உங்களுக்கு உதவியா இருக்க முடியலையே என்று தான் இருக்குமா. ஒன்னுக்கு இரண்டு கல்யாணம் வேலை.. நான் ஒன்னும் செய்யாம மண மேடையில் வந்து உட்கார போறேன். அது தான் ஒரு மாதிரியா இருக்கு…”

என்ன தான் வீர ராகவ்வும் சாருகேசவனும் பார்த்து கொள்கிறார்கள் என்றாலுமே, அந்த வீட்டின் ஆண் மகனாக தான் ஒரு வேலையையும் பார்க்காததோடு.. கூடவே அந்த நாளிலேயே எனக்கும் கவிதாவுக்குமே கல்யாணம் நடக்கனும்..” என்று சொன்னதில் அவர்களுக்கு வேலை பளூவை கொடுத்து விட்டது போல மனது குத்தியது..

ஆம் ஒரே நாளில் இரு திருமணங்கள் தான் இப்போது நடக்க இருக்கிறது…. இரண்டு தினங்கள் முன் தான் இந்த தீர்மானத்தை எடுத்து இருந்தான் ஆனாந்த்.. அப்படி எடுக்க விட்டு இருந்தது அங்கு இருந்த நிலமை..

கிருஷ்ண வேணியின் குழந்தைக்கு தந்தை வாசு தேவ் தான் என்ற ஆதாரம் எல்லாம் நிருபித்த பின்.. குழந்தையை கலைத்து விட தான் கவிதாவும் ஆனாந்துமே சேர்ந்து முடிவு எடுத்து இருந்தனர்..

கிருஷ்ண வேணி சின்ன பெண்.. அவளுக்கு இனி தான் எல்லாமே.. படிப்பு வேலை… அதன் பின் கல்யாணம் அதன் பின் தான் குழந்தை என்று இருக்க வேண்டும்,,

இதில் கிருஷ்ண வேணிக்கு குழந்தை என்று ஒன்று வந்து விட்டால், மற்றது அனைத்துமே நடக்காது கூட போய் விட கூடிய சூழ்நிலை வந்து விடும்..

அதனால் குழந்தையை கலைத்து விட நினைத்து இருக்க. ஆனால் ஏற்கனவே கிருஷ்ண வேணிக்கே அதிக நாட்கள் சென்று தான் தன் நிலையே அவளுக்கு தெரிய வந்தது…

இதில் வாசு தேவ் தான் குழந்தையின் தந்தை என்று சட்டத்திற்க்கு ஆதாரம் சேகரித்து பின் தான் மருத்துவரிடம்.. குழந்தையை அபார் ட் செய்து விடுங்க என்று அவர் முன் சென்றது..

அவர் தீர்த்து சொல்லி விட்டார்.. மாதம் நான்கு தொட உள்ளது. அபார்ட் செய்தால் பெண்ணுக்கு தான் பிரச்சனை என்று.. அதோடு அவள் வயதையும் குறிப்பிட்டு.. கண்டிப்பாக தாய் தான் பாதிப்புக்கு ஆளாகுவாள் என்று கிருஷ்ண வேணியை பற்றி அனைத்தும் தெரிந்த அந்த மருத்துவர் சொல்ல…

கவிதாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டவளை ஆனாந்த் தான் தேற்றியது.

கவலை படாதே.. இதுக்கும் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று சொன்னவன்..

வீர ராகவ்விடம் இந்த நிலையை சொன்ன போது அவன் கொடுத்த ஆலோசனை தான் இது..

அதாவது… “ குழந்தையை அழிக்க முடியாது என்றால், அடுத்த ஆப்ஷன் குழந்தையை பெத்து கொள்ள வேண்டியது இது தான்..

அதே சமயம் நாம் கிருஷ்ண வேணியின் எதிர்காலத்தையும் நாம் பார்க்கனும்..” என்று வீர ராகவ் சொல்லி கொண்டு இருக்கும் போதே..

ஆனாந்த்,.. “குழந்தையை ஆநாதை விடுதியின் விடுவதா…?” என்று சட்டென்று கேட்டு விட்டான்..

இப்போது வீர ராகவ் சொல்ல வந்த தன் ஆலோசனையை விடுத்து.. “ உனக்கு அது போல தான் எண்ணம் இருக்கா ஆனாந்த்…?” என்று கேட்டவனிடம்..

ஆனாந்திடம் இருந்து உடனே மறுப்பாக. “ இல்ல இல்ல… நீங்க அது போல ஏதாவது சொல்றதா இருந்தால் வேண்டாம்.. என்று தான் சொல்ல வந்தேன்…” என்றதும் தான் வீர ராகவன்..

பின் தன் ஆலோசனையான. “நீயும் கவிதாவும் கல்யாணம் செய்துட்டு அந்த குழந்தையை தத்து எடுத்துக்கோங்க..” என்று சொன்னதுமே ஆனாந்துக்கு இந்த ஐடியா பிடித்து விட.

உடனே அவனிடம் இருந்து.. “சூப்பர் அத்தான்…நான் இதை யோசிக்கவே இல்லையே…” என்று சட்டென மகிழ்ந்து போய் விட.

வீர ராகவ் .. “ ஆனாந்த் உடனே யெக்சைட் ஆகிடாதிங்க.. முதல்ல இதை பத்தி உங்க வீட்டில் தெளிவா பேசிடுங்க.. அப்புறம் கிருஷ்ண வேணி கிட்டேயும் தெளிவா பேசலாம் தப்பு இல்ல… பதினெட்டு வயசு ஆக இன்னும் இரண்டு வருஷமோ இல்ல மூன்று வருஷம் எல்லாம் இல்லையே.. இன்னும் இரண்டு வாரம் தானே இருக்கு.. அதனால எல்லாம் சொல்லி தெளிவு படுத்திக் கொள்ளுங்க.. இதனால கிருஷ்ண வேணி படிப்பு வேலை எதிலும் பாதிப்பு ஏற்பாடாது..” என்று சொன்னவன்..

இதையும் சொன்னான்.. “ ஆனால் கிருஷ்ண வேணிக்கு மேரஜ் ஆகும் போது வரும் பையனிடம் நீங்க எல்லாம் தெளிவா சொல்லிட்டு மேரஜ் செய்யிறது தான் எல்லோருக்கும் நல்லதும்..” என்று விட்டான்..

வீர ராகவ் சொன்னப்படி தான் அனைத்தும் பேசி முடிவு செய்து இதோ.. தங்கை திருமணத்தின் போதே தன் திருமணத்தையும் வைத்து கொண்டு விட்டான்.

ஆனால் இதில் யாரும் எதிர் பார்க்காத ஒரு விசயம்.. இது அனைத்திற்க்கும் ஆனாந்தின் பெற்றோர்கள் சம்மதித்து தான் பெரிய விசயம்..

இந்து மதி இதை பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக வீர ராகவ்வை பார்க்கும் சமயத்தில் தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.

ஆனால் இந்த ஆலோசனை சொன்ன வீர ராகவ்வுக்கு இந்து மதியிடம் இருக்கும் அந்த மகிழ்ச்சி அவனிடம் இல்லை..

அதை கவனித்த இந்து மதி கூட… “ என்ன வீர்.. நீங்க தான் இந்த ஐடியா கொடுத்தது என்று அண்ணா சொன்னாங்க.. நான் என் அம்மா அப்பாக்கு கூட இது ஒகே தான் என்று சொல்றேன் நீங்க ஒன்னும் சொல்ல மாட்டேங்குறிங்கலே…” என்று வீர ராகவ்வை ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டே.. கேட்டவளின் அந்த பார்வையில் வீர ராகவ் சிரித்து விட்டவன்..

பின்.. நீ என் மீது இன்னும் கொஞ்ச நாளில் நம் கல்யாணன் என்று இருக்கும் இந்த நிலையில் என் மீது காதல் பார்வை தான் பார்க்க வேண்டும்.. இது போல ஆராய்ச்சி பார்வை எல்லாம் நான் தான் பார்க்க வேண்டும்..” எனும் போதே இந்து மதி வீர ராகவ்வை முறைத்தாள்..

“ஏன்மா கோபப்படுற. நான் சொன்னது ஆராய்ச்சி பார்வை உன் மீது இல்ல.. குற்றவாளி மீது..” என்று சொன்னவன்.

பின் சிரித்து கொண்டே. மீசையை நீவி விட்டு கொண்டே… “ஆமா நீ என்ன மதி நினச்ச…” என்று வீர ராகவ் கேட்பதிலேயே அவனின் மதிக்கு புரிந்து விட்டது..

தான் எதை நினைத்து இவனை முறைதோம்மோ. அதை தான் சொல்லி இருக்கிறான்.. ஆனா இப்போ மாத்தி பேசுகிறான் என்று நினைத்து அவனை முறைத்து விட்டு.

பின் தான் முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டதற்க்கு

வீர ராகவ்… சிறிது நேரம் யோசித்து விட்டு.. பின் “ இப்போ கூட என்ன தான் ஆண் பெண் சரி சமம் என்று பேசினாலுமே… ஒரு சில விசயங்களில் ஆண் வேறு பெண் வேறு என்று தான் வீட்டில் நடத்தப்படுறாங்கலே…” என்ற வீர ராகவ்வின் கேள்விக்கு இந்து மதி புரியாது அவனை பார்த்தவள்..

“எங்க வீட்டில் என்னையும் என் அண்ணாவையும் வேறா ட்ரீட் பண்றாங்கலா வீர்…?” என்று வீர ராகவ் நினைத்ததை இந்து மதி சரியாக கேட்டு விட.

அதில் வீர் மதியை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்தவன்.. பின்.. “ நீ அந்த வாசு கிட்ட அந்த க்ரீட்டிங்கை கொடுத்த போது ரொம்ப சின்ன பெண்… உண்மையில் உன் வீட்டில் உன் கிட்ட இதை பத்தி பொறுமையா பேசி ஒருந்து இருந்தாலே..

உன் மனசுல நீ அன்னைக்கு பட்ட அந்த அவமானம் உன் மனசை விட்டு கொஞ்சம் நீங்க இருக்கும்.. இந்த பெண் மனசு காதல் இருந்தாலும் சொல்ல கூடாது என்று இந்த ஏடா கூடம் எண்ணம் எல்லாம் உனக்கு வந்து இருந்து இருக்காது..

ஆனால் அவங்க அதை செய்யாததோடு என்னவோ நீ பெரிய தப்பு பண்ணிட்டத்து போல உன்னை உணர வைத்து அவங்க இருக்காங்க..

அன்னைக்கு கூட நீ என் கிட்ட சொன்னியே.. அண்ணனால தான் தான் காலேஜ் படிச்சு வேலைக்கும் போறேன். இல்லேன்னா என் அம்மா என்னை ப்ளஸ் டூ முடித்த உடனே மேரஜ் செய்து அனுப்பி இருந்து இருப்பாங்க என்று… அப்படி நீ என்ன தப்பு பண்ணிட்ட.. அவங்க உன் மனசுல புகுத்தினது தானே நீ யமுனா கிட்ட அப்படி பேச வைத்தது..

அதுல அவங்க இரண்டு பேர் லைப்.. எப்படி மாற இருந்தது..? யமுனா சூசைட் அட்டமெண்ட் செய்ததில் அவளுக்கு ஏதாவது ஆகி இருந்து இருந்தா…?”

வீர ராகவ் இதை சொல்லும் போதே இந்து மதியின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி தெரிந்தது..

“நல்ல வேளை ஒன்னும் அது போல ஆகல. ஆனா உன் அண்ணன்.. காதலிக்கிறது தப்பு இல்ல. ஆனா அந்த பெண் உன் பிரண்ட்.. அதோடு அந்த வீட்டிற்க்கு போக வர. இப்போ அந்த பெண் தங்கை இப்படி ஆகி இருக்கா.. என்ன தான் வாசு தேவ் தப்பானவன் இருந்தாலுமே, இவள் தன் வயசை மறச்சி.. காதலிச்சது கூட தப்பு இல்ல.. ஆனா அதையும் தான்டி.. அன்னிக்கு நீ செய்தது இப்போ கிருஷ்ண வேணி செய்ததை விட பெரிய தப்பு எல்லாம் இல்ல.

அதே போல இப்போ கிருஷ்ண வேணி வயசை விட. அப்போ உனக்கு வயசு கம்மி தான் மதி.. அப்படி இருக்க இப்போ உன் அம்மா அந்த பெண்ணுக்கு உதவி செய்யிற அளவுக்கு எல்லாம் பேசுறாங்க. அது நல்லது தான்.. ஆனா அதை உன் கிட்ட காட்டலையே.. “ என்று வீர ராகவ் சொல்ல சொல்ல இந்து மதிக்குமே புரிந்தது தான்..

அதுவும் வாசு தேவ் தன்னை மிரட்டியதில் தான் ஏதோ போல இருந்ததை கூட தன் அம்மா.

“இந்த கல்யாணம் நடக்கலேன்னா.” என்று தன்னை சந்தேகம் படும் படியாக தானே பேசியதும். புரிந்தது தான். ஆனால் என்ன தான் சட்டம் கொண்டு வந்தாலுமே இன்னுமே உணர்வு பூர்வமான மாற்றங்கள் வரவில்லை என்பது தான் நிதர்சனம்.. இது எல்லாம் சட்டம் கொண்டு வராது.. அவர் அவர் மனது தான் உணர்ந்து செயல் பட வேண்டும்.

அதை தான் இந்து மதி வீர ராகவ்விடம் சொன்னது..

இந்த பேச்சுக்கக் நடந்தது.. இந்து மதியின் வீட்டின் பின் பக்கம்.. அது ஒரு மாலை வேளை… மாலை சிற்றுண்டி செய்த இந்து மதியின் அன்னை அதை சுட சுட மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டி தட்டில் கொண்டு வந்தவர் காதில் வீர ராகவ்வின் பேச்சு அனைத்தும் விழுந்து விட.

அந்த பேச்சில் இருந்த நியாயத்தில் சிலையாக நின்று விட்டார்… ஏதோ ஒரு சத்தத்தில் இந்து மதியும் வீர ராகவ்வும் திரும்பி பார்க்க. அங்கு மதியின் அன்னை நின்று இருந்த கோலமே சொன்னது.. தாங்கள் பேசியதை அவர் கேட்டு விட்டார் என்பதை..

வீர ராகவ் ஒன்றும் சொல்லவில்லை.. அவனுக்கு தான் பேசியது தவறு இல்லை என்ற எண்ணம்.. இந்து மதிக்குமே அதே எண்ணம் தான். ஆனாலுமே அவளுக்கு அன்னையாக போய் விட்டாரே.. இப்படியான ஒரு நிலையில் மதியினால் விட்டு விட முடியாது அவளின் அம்மாவின் அருகில் சென்றவள்..

“ம்மா.” என்று அழைத்து அவரின் கை பிடிக்கும் முன்பே. மகளின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவர்.

“என்னை மன்னிச்சிடு இந்து.. மாப்பிள்ளை சொன்னது போல தானே நான் நடந்து இருக்கேன்.. சின்ன பெண் எதோ தவறுதலா செய்துட்ட நான் உன் கிட்ட நல்ல மாதிரி பேசி இருந்து இருக்கனும்.. ஆனா ஆனா நான்..” என்று சொன்னவன் தலை குனிந்து கொள்ள..

இந்து மதியினால் பேச்சுக்கு கூட. “ பரவாயில்லை..” என்று சொல்ல முடியவில்லை…காரணம் சின்ன வயதில் அவள் பட்ட ரணம் அத்தனையது.. காலம் தான் அனைத்து காயத்தையும் ஆற்றும்.. அதை நாமும் நம்புவோம்..

வாசு தேவ்வுக்கும் பிரசாந்துக்கும் அவர்கள் செய்த பலனாக சட்டம் தண்டனை கொடுக்கும் வேலையை அது பார்த்து கொள்ளும்..

இங்கு இந்து மதி வீர ராகவ் ஜோடிக்கும்.. கவிதா ஆனாந்த் ஜோடிக்கும் நல்ல முறையில் திருமணம் நடந்து முடிந்தது…

ஐந்து வருடங்கள் சென்ற நிலையில்…

தோழிகள் ஆறு பேர்… யமுனா திருமணம் முடிவான போது கொடுத்த அதே நட்சத்திர ஒட்டலில் தான் அனைவரும் கூடி இருந்தனர்..

என்ன ஒன்று இந்த முறை தோழிகள் மட்டும் அல்லாது அவர் அவர் துணைகளோடும் ஒரு சிலர் குட்டிகளோடும் சந்தித்து கொண்டனர்.

இன்று இங்கு இவர்கள் சந்தித்து கொள்வதற்க்கு இரண்டு காரணங்கள்.. ஒன்று.. தோழிகள் ஆறு பேரும் சேரும் தினமாக இன்றைய நாளை தேர்ந்தெடுத்தது என்றால், மற்றோரு காரணம். கிருஷ்ண வேணிக்கு இன்று ஜோடி சேர்க்கும் நாளாகவும் அமைத்து கொண்டு விட்டனர்..

கிருஷ்ண வேணிக்கு ஜோடியாக சேர இருப்பது ஆறு தோழிகளில் ஒருத்தியான ரேவதியின் தம்பி… கமலேஷ் தன் அக்கா மூலமாக கிருஷ்ண வேணியை பற்றி அனைத்துமே தெரிந்து கொண்டவன்..

அவன் படித்து முடித்து வேலை கிடைத்ததும் வீட்டில் அவன் திருமணம் பற்றிய பேச்சு எழுந்த போது.. அவன் தீர்த்து சொல்லி விட்டான்..

“ நான் கவிதா அக்கா வேணியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று.. “

முதலில் மறுத்த பெற்றவர்கள் பின் வளர்ந்த மகனை பகைத்து கொண்டு என்ன செய்ய முடியும் என்று ஒத்து கொண்டு விட்டனர்…

அதனால் இதில் மேலும் ஒரு அங்கமாக கிருஷ்ண வேணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் ஒரு நிகழ்வாக அங்கு நடைப்பெற்று கொண்டு இருந்தது.

இதில் அறு தோழிகளின் கணவன்மார்களில் தனித்தீவாக அமர்ந்து கொண்டது வீர ராகவ்வும் சாருகேசவனும் தான்..

வீர ராகவ் மடியில் மூன்று வயது பெண் குழந்தை அமர்ந்து கொண்டு இருக்க… சாருகேசவன் மடியில் நாங்கு வயது ஆண் குழந்தை அமர்ந்து கொண்டு இருந்தான்..

சாருகேசவனும் வீர ராகவ்வும் வாரம் ஒரு முறையாவது குடும்பமாக பார்த்து கொள்வதால், இருவரின் குழந்தைகளுக்கே நல்ல பரிச்சயம் இருந்ததினால், அவர்கள் இருவருமே எதோ பேசுவதும்.. பின் சாப்பிடுவதும் விளையாடுவதுமாக இருந்து கொண்டதால், இந்த இரு ஆண்களும் பேசிக் கொள்வதில் எந்த இடையூறும் இல்லாது பேசினர்.

அதுவும் அவர் அவர் கணவன் மார்களை அந்த பெண்கள் படுத்தும் பாட்டை பார்த்து அது சம்மந்தமாக தான் அவர்களின் பேச்சு இருந்தது…

அதிலும் ரேவதி… தன் தோழிகளிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவள் மகள் அவளை பேச விடாது இடையூறு செய்ய.. அதற்க்கு அந்த குழந்தையை தண்டிக்காது அந்த குழந்தையை தன் கணவன் பக்கம் ஏதோ அரிசி மூட்டையை போடுவது போல அந்த கணவன் மடியில் போட்டவள்..

“அப்படியே அவங்களை மாதிரியே வளர்ந்து வைத்து இருக்காங்க…” இங்கு ரேவதி அவங்க என்று சொன்னது அவளின் மாமியாரை தான்..

இன்னொரு தோழியான காவ்யா தன் நாத்தனார் பற்றி என்று பேசிக் கொண்டு இருந்தனர்..

ஆனால் ஐந்து வருடத்திற்க்கு முந்தைய அந்த பெண்களின் பேச்சாக அது இல்லை.. ஐந்து வருடங்கள் முன் அத வயதிற்க்கே உரிய பேச்சுக்கள் சிரிப்புக்கள் என்று கலாட்டாவாக கலைக்கட்டி பேசுவதும் சிரிப்பதும்.. யார் பார்க்கிறார்கள் பார்க்கவில்லை என்று கூட சட்டை செய்யாது அவர்கள் தனி உலகில் சஞ்சரித்து கொண்டது போல இல்லாது..

பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருக்கும் தன் கணவன் மார்களின் காதில் விழாத அளவுக்கு தான் அவர்கள் பேச்சு இருந்தது.. காரணம் பேசுவது அவர்கள் மாமியார் நாத்தனார்… ஒரவத்தி ஏன் சமயத்தில் கணவன்மார்களின் தலையையும் தானே அங்கு உருளப்பட்டு கொண்டு இருந்தது..

இதில் மடி மீது இருக்கும் தன் பிள்ளைகளை காட்டி வேறு.. “ விஷம் இது.. நாம பேசுவதை அப்படியே அவன் பாட்டி கிட்ட ஒப்பித்தாலும் ஒப்பித்து விடுவான்…” என்று சொல்லி நேக்காக குழந்தைகளிடம்..

“ டாடி கிட்ட இரு டா செல்லம்.. டாடி உனக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுப்பாங்க.. சாக்லெட் வாங்கி தருவாங்க..” என்று சொல்ல் குழந்தைகளே தந்தையிடன் தாவுவது போல செய்து விட்டும் தங்கள் பேச்சுக்கள் அங்கு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இதில் சைட் சீனாக கிருஷ்ண வேணி கமலேஷ் ஒரு பக்கம் இருவரும் பார்த்து கொண்டு இருக்க… கிருஷ்ண வேணியின் குழந்தை சரத் கவிதாவின் மடியில் சமத்தாக அமர்ந்து கொண்டு கிருஷ்ண வேணியை பார்த்து..

“சித்தி சித்திக்கு கல்யாணம்.” என்று சொல்லி சிரித்தவன் கமலேஷை பார்த்தும் வெட்கத்துடன் சிரித்தவன்.. தன் அன்னை என நினைத்து கொண்டு இருக்கு கவிதாவின் துப்பாட்டவில் தன் முகத்தை மறைத்து கொண்டான்..

இது வரை வயதிற்க்கு உரிய பார்வையை பார்த்து கொண்டு இருந்த கமலேஷ்… அவனி வேணியிடம்…

“நீ சித்தி இல்ல அம்மா என்று சொல்லிவிடலாம்.. நம் கூடவே இருக்கட்டுமே.” என்று சரத் காதினில் விழாத வாறு தான் இதை சொன்னான். காரணம் சரத் வேணியை பார்த்து சித்தி என்று அழைத்த போது அவளின் முகத்தில் புன்னகை இருந்தாலுமே அதையும் தான்டி ஒரு சோகம் அதில் இழை ஒடியதை அவன் கவனித்ததினால்,

அவனின் வேணி மறுத்து விட்டாள்… “ என் மகன் கெளரவமா வளர வேண்டும்..” என்று.. இந்த பேச்சும் சரத் காதில் விழாது தா பேசியது..

சரத்திற்க்கு ஒரு காலத்தில் உண்மை தெரியவரலாம்.. அது தெரிய வரும் போது தெரியட்டும்.. இது தான் அனைவரின் எண்ணமும்..

ஆசைகள் அடங்காது… அடங்காது தான்… அந்த அந்த வயத்திற்க்கு ஆசைகள் மாறலாம். வயதில் காதல் பின் கணவன் தன்னை தான் முதன்மையாக கருத வேண்டும் என்ற ஆசைகள்.. பின் குழந்தை படிப்பு செல்வம் என்று அனைத்திலுமே தன் குழந்தைகள் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசைகள்.. ஏன் வயது ஆனாலும் கூட மற்ற மருமகள் மகனோடு ஏன் பேத்தி பேரங்கங்களையும் வைத்து தான் அவர் அவர் வயதில் அதற்க்கு ஏற்றது போல ஆசைகள் வடும். அந்த ஆசைகள் ஒரு போதும் அடங்காது தான்..

ஆனால் அந்த ஆசைகள் மற்றவர்களை பாதிக்காத வரை அனைத்து ஆசைகள் நல்ல ஆசைகளே…

நிறைவு.
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
189
கிருஷ்ணவேணியை மன்னிக்க காரணமே இந்துவை தப்பா நடத்தியதால் ஏற்பட்ட பிரச்சனையால் தான்
 
Active member
Joined
May 12, 2024
Messages
223
Nice ending…
Nanum ninaichen Krishnaveni kku nalla husband kidaikkanum endu…

Adhe pola Siddharth kum nalla girl ah pathu mudichi vainga… antha Shruthi venam 🫣🫣🫣
 
Top