அத்தியாயம்…6
இந்துமதிக்கு தன் முன் இருந்த புகைப்படதில் தன் பார்வை பதிந்து இருந்தாலும், அவள் கவனம் அதில் இல்லை.
யமுனா இப்படி செய்வாள் என்று அவள் நினைத்து கூட பார்க்கவே இல்லை. அவள் நல்லதிற்க்கு என்று தான், அதுவும் “ திருமணத்திற்க்கு முன் நீயே மேல விழுந்து போனால், உன்னை வேறு மாதிரி எண்ண தோன்றும் என்று சொன்னாளே தவிர. திருமணத்திற்க்கு பின் கணவனை தள்ளி வை அவள் சொல்லவே இல்லையே..
அதை அவள் வேறு மாதிரி புரிந்துக் கொண்டு, தன் கணவனை விட்டு அவள் விலகி இருந்ததால், அவன் வேறு மாதிரி நினைத்து விவாகரத்து பத்திரம் நீட்டி, இவள் இந்த முடிவுக்கு வந்து.
இந்த ஒரு வாரம்.. அவளுக்கு சரியான தூக்கம் கிடையாது. சாப்பிட முடியவில்லை. ஏன் வேலையில் கூட கவனம் செலுத்த முடியாது, அவள் டி.எல் இரண்டு முறை அவளை அழைத்து சத்தம் போட்டு விட்டார்.
அதுவும் அவளின் மற்ற தோழிகள் சொன்ன. “ ஏன்டி யம்மீ அவள் கணவன் கிட்ட நீ சொன்னதை சொல்லிட்டா போலடீ.. எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. அவங்க வேற போலீஸ்சில் இருக்காங்க.” என்ற அவர்களின் பேச்சு இந்துமதிக்கு இன்னும் பயத்தை தான் கூட்டியது.
“நான் என்ன டீ சொன்னேன். கல்யாணம் முன் நீயே வலிய போய் பேசாதே, அவரும் பேசட்டும் என்று தானே சொன்னேன். அதோடு அன்னைக்கு அவர் போன் செய்தார். நான் எடுக்க வில்லை என்று சொன்ன போது கூட , அவரே அழைக்கும் போது நீ ஏன் இப்படி செய்யிறேன்னு தானே கேட்டேன்.
அவள் தான் கல்யாணத்திற்க்கு பின்னும் சுத்தல்ல விட போறேன்னு சொன்னா.” என்று பயந்து போனவளாக தான் இந்துமதியின் பேச்சு இருந்தது.
“ சரி அவள் தற்கொலைக்கு முயன்று ஒரு வாரம் சென்று விட்டது. அவங்க வீட்டில் இருந்து நம்மல யாரும் தொடர்பு கொள்ளவில்லை தானே.. அதை அப்படியே விட்டு விடலாம்.” என்று சொன்ன காவ்யா ..
பின் “ ஆனால் அவள் கன்சீவ் என்ற செய்தி வரும் வரை அவள் வீட்டு பக்கம் யாரும் தலையை வைத்து விடாதிங்க. நான் அவ்வளவு தான் சொல்வேன்” என்று சொன்னவளின் பேச்சில் இந்துமதிக்கு இன்னும் பயத்தை தான் கூட்டியது.
அவள் தோழி கவ்யா சொன்னது போல் விசயம் அறிந்த யமுனாவின் அன்னை.. “ என் பெண் கிட்ட இது மாதிரி எல்லாம் பேசி இருக்கு அந்த பெண். நான் போய் அவங்க வீட்டில் பேசுறேன் பார்.” என்று சத்தம் போட்டார் தான்.
ஆனால் யமுனாவின் தந்தை தான்.. “ சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க.. உன் பெண்ணுக்கு எங்கே போச்சு புத்தி. அந்த பெண் விசம் குடி என்று சொன்னா குடித்து இருப்பாளா..? இல்லை தானே. அப்போ இது மட்டும் எப்படி அப்படியே ஏத்துக்கிட்டா.. அவளுக்கும் மாப்பிள்ளையை சுத்தல்ல விட ஆசை. அது தான்.
விளையாட்டு வினையா முடிந்த பின் தான் அதன் தீவிரம் அவளுக்கு தெரியுது. சரி இனிமே அது பத்தியே பேசிட்டு இருக்க வேண்டாம்.
இனி அந்த பேச்சை விட்டு தள்ளு. இப்போ நம்ம பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்காங்களே அதை மட்டும் பார்.” என்று சொல்லி தன் மனைவியின் வாயை அடைத்து விட்டார்.
இந்துமதிக்கு அதன் பின் எந்த பிரச்சனை இல்லை என்றாலும், மனதில் பயம் அவ்வப்போது எட்டி பார்த்து கொண்டு தான் இருந்தது. அதுவும் அவள் கணவன் போலீசில் பெரிய பதவியில் இருக்கும் போது, வேறு ஏதாவது பிரச்சனை வருமோ என்று..
இந்த இடை வேளையில் இந்துமதியின் அம்மா சாந்தி வீர ராகவன் புகைப்படத்தை காண்பித்து.. “ உனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை.” என்று காட்டவும்,.
முதலில் “ அம்மா இன்னும் ஒரு வருடம் போகட்டும். இப்போ வேண்டாம்.” என்று தான் சொன்னாள்.
ஆனால் சாந்தி தான் .. “ உன்னோட ஐந்து வயது பெரியவன் உன் அண்ணன் இருக்கான். உனக்கு கல்யாணம் செய்த பின் தான் அவனுக்கும் பார்க்கனும்.. “ என்ற அம்மாவின் நிதசர்னமான பேச்சில்,
அவள் இருக்கும் சூழ்நிலையில் படத்தை கூட சரியாக பார்க்காது ஒத்துக் கொண்டாள். அண்ணனுக்கு இப்போது இருபத்தி எட்டு வயதாகிறது. தன்னை வைத்து அவன் கல்யாணம் ஏன் தள்ளி போக வேண்டும்.
மத்தியதர வர்க்கத்தினர் நினைப்பு படி வீட்டில் பெண்ணை வைத்து கொண்டு மகனுக்கு திருமணம் செய்ய யோசிப்பர். அதுவும் இரண்டு படுக்கை அறை மட்டுமே கொண்ட ஒரு வீடாக இருந்தால், அதில் பல வித பிரச்சனைகளும் வர வாய்ப்பு இருப்பதால் தான் இந்த எண்ணம்.
அதுவும் இவளிடம் கேட்டு தான் இடமே பார்க்க ஆரம்பித்தது. இப்போது வேண்டாம் என்று சொன்னால் சரியாக இருக்காது என்று நினைத்து..
மாப்பிள்ளை போலீஸ் என்று அன்னை சொன்னதுமே யமுனாவின் பிரச்சனை கண் முன் வந்து விட்டதால் வீர ராகவனின் படத்தை கூட சரியாக பாராது அந்த இடத்திற்க்கு சம்மந்தம் சொல்லி விட்டாள்.
படத்தை பார்த்து இருந்தாலுமே, வீர ராகவனை அடையாளம் தெரிந்து இருக்குமா என்பது சந்தேகம் தான்.
அதோடு அந்த கல்யாண வீட்டில் போலீஸ் மாமாவை மட்டும் கல்யாணம் செய்ய கூடாது தொப்பை இடிக்கும் என்று சொன்னவள் தான். அதே போலீஸ் மாமாவை திருமணம் செய்ய சம்மதித்து விட்டாள்.
இது போல் பேச்சுக்கள் அனைத்தும், அந்த நேரத்துக்கு தோழிகளை சிரிக்க வைக்கவும், அந்த இடத்தை கல கலப்பாக்கவும் செய்யும் முயற்ச்சியே தவிர.. அது எல்லாம் மனதில் வைத்து கொண்டு பேசுவது கிடையாது.
விளையாட்டு பேச்சுக்கள் என்றாலும்,பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பெரியவர்கள் சொல்வார்கள். பேசாத வார்த்தைக்கு, நாம் ஏஜமான். பேசும் வார்த்தைக்கு அது தனக்கு எஜமான் என்று..
வீர ராகவன் சாருகேசனிடம். “ என்ன இப்போ எப்படி போகுது லைப்.?” என்ற கேள்விக்கு,
சாருகேசன் வெட்கப்பட்டு கொண்டே. “ நல்ல பெண் தான்டா. “ என்ற அவன் வெட்கப்பட்டு கொண்டு சிரித்த சிரிப்பிலேயே வீர ராகவ் உணர்ந்து கொண்டான். அவன் தன் மனைவியோடு வாழ ஆரம்பித்து விட்டான் என்று.
அதற்க்கு அடுத்து அவர்கள் அந்தரங்கத்தை பற்றி கேளாது. “ அன்னைக்கு நீ தண்ணீ போட்டு கலாட்டா செய்வது கூட தாங்கிப்பேன் மச்சான் .. ஆனால் இது போல் வெட்கப்படுவதை என்னால் பார்க்க முடியல.” என்று கிண்டல் செய்தவனை இப்போது சாருகேசன்..
“ ஆ அம்மா சொன்னாங்க. உனக்கு பெண் பார்த்து இருக்காங்க.. நீயும் ஓகே சொல்லிட்ட என்று. நான் இதை பத்தி நீயா சொல்வேன் என்று எதிர் பார்த்தேன்..
ஆனால் என்னை ஓட்டுவதில் தான் இருக்க. அதை பத்தி வாய திறக்க மாட்டேங்கிற. என்ன மேட்டர்.?” என்ற நண்பனின் கேள்விக்கு, என்ன சொல்வது என்று தெரியாது ஒரு நிமிடம் தடுமாறி பின் நிதானத்துக்கு வந்தவனாக.
“ சொல்ல கூடாது எல்லாம் இல்ல. உன்னை தான் பார்க்க முடியாது சிஸ்டர் கூட பிஸியா இருந்தியா.? அது தான் ஏன் டிஸ்டப் செய்யனும் என்று, நீ எங்கு போயிட போற பின் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.”என்ற நண்பனின் பேச்சை சாருகேசன் நம்ப தயாராக இல்லை.
வீர ராகவன் ஒரு நிமிடமே தடுமாறினாலும், அதை சரியாக கவனித்து விட்ட சாருகேசன் “ வீர் என்ன பிரச்சனை.?” என்று கேட்டவிடம்.
“ பிரச்சனையா ஒன்றும் இல்லையே.” என்று மறுத்து சொன்னவனிடம்..
கேள்வியை மாற்றி.. “ பெண் யார்.?” என்று கேட்டான்.
எப்போது என்றாலும் சொல்லி தானே ஆக வேண்டும் என்று.. “ எல்லாம் உனக்கு தெரிந்த பெண் தான்.” என்ற வீர ராகவனின் பேச்சில்,
“ எனக்கு தெரிந்த பெண்ணா யாருடா அது..?” என்ற கேள்விக்கு,
“ இந்துமதி.” என்று சொன்ன போது கூட சாருகேசன். “ யார் இந்துமதி .? என்று தான் கேட்டான்.
ஏன் என்றால் சாருகேசனிடம் அவன் மனைவி யமுனா முதலில் சரியாக பேசவில்லை. இப்போது அனைத்தும் சரியாகி விட்டாலும்,யமுனா அவள் தோழிகளை பற்றி பேச முயச்சிக்கவில்லை. அது கணவனுக்கு பிடிக்காது என்று அவளுக்கு புரிந்ததால்.
ஏன் என்றால் கணவனிடம் தான் நெருங்காது அவனை நெருங்க விடாது செய்ததால் தான், கணவன் தனக்கு அவன் மீது விருப்பம் இல்லை என்றதோடு, தனக்கு வேறு யார் மீதாவது விருப்பமோ என்று நினைத்து தான் தன்னை விவாகரத்து செய்ய நினைத்தான் என்று அன்று தற்கொலைக்கு முயன்ற அன்று மயக்கம் தெளிந்த பின் அவன் சொன்னதில்,
தோழிகளிடம் நடந்த பேச்சுக்களை அனைத்தும் சொன்னவள் கூடவே தான் செய்ய நினைத்த கல்யாணம் ஆன பின்னும் அவனை நெருங்க விட கூடாது என்பதையும், அவள் தான் சொன்னாள் என்று இந்துமதியின் பெயரை தான் சொன்னாள்.
அதன் பின் சாருகேசன் அவள் தோழிகளை பற்றி பேசவில்லை. இவளும் பேச முயற்சிக்கவில்லை.
யமுனா சாருகேசனை மிகவும் பிடித்து தான் திருமணம் செய்தாள். அதனால் தான் அவன் அழைக்காத போதும் அவளே அழைத்து பேசியது.
பின் நடந்த குளறு படியால் இதோ அவனிடம் அனைத்தும் மறைத்து , தன்னை நல்ல படியாக காட்டிக் கொள்ள தன் தோழி இந்துமதியை மொத்தமாக கெட்டவளாக காட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளானாள்.
அவளும் தவறான எண்ணத்தில் இந்துமதியை கெட்டவளாக ஆக்க சொல்லவில்லை. தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள தான் சொன்னாள்.
கூடவே இவர் இந்துமதியை தவறாக நினைத்தால், அதில் அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பாவம் தெரியாது மொத்த பழியையும் அவள் மீது போட்டு விட்டு அவள் தப்பித்துக் கொண்டாள்.
தான் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் தன் தோழியை வீர ராகவ் வாழ்க்கையோடு இணைக்க போகிறது என்று தெரியாது.
தன்னிடம் தன் மனைவி யமுனா சொன்னதை சொல்லி விட்டான்.
“ யார்டா அந்த பெண் இந்துமதி.? என் வாழ்க்கையில் கும்மி அடிக்க. கல்யாணம் ஆனா கூட தள்ளி இரு என்று சொல்லி இருக்காடா..” என்று அன்று சாருகேசன் பெயரோடு தான் சொன்னான்.
சொன்னவன் அந்த பெயரை மறந்து விட்டான். கேட்டவன் மறக்கவில்லை. அதுவும் சாருகேசன் திருமணம் அன்று அந்த பெண்ணை பிடித்து தான் அவள் பக்கம் சென்றது.
பின் அவள் பேச்சில், திரும்பி விட்டான். மீண்டும் அவள் பேச்சு அவனுக்கு கோபத்தை மூட்டியது. அதுவும் யமுனா திருமணம் முடிந்து அவள் செய்த முட்டாள் தனத்திற்க்கு அந்த பெண் தான் காரணம் எனும் போது.
யமுனவின் தற்கொலை முயற்சி மட்டும் வெற்றி பெற்று இருந்தால், பிரச்சனை ஒரு உயிர் இழப்போடு எந்த தவறும் செய்யாத தன் நண்பன் மனதளவில் பாதிக்க படுவதோடு, சட்ட ரீதியாகவும் அவன் பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டி வரும் என்று .
அதுவும் காவலனே எனும் போது பத்திரிக்கை சும்மா விடுமா.. ஊதி ஊதி பெரியதாக்கி விட மாட்டர்கள்.
இந்திமதி மீது கோபம் என்பதை விட அவளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அது எப்படி என்று அவன் நினைக்கும் போது தான் தன் அன்னை இப்படி என்று சொல்வது போல் இந்துமதியின் புகைப்படத்தை தன்னிடம் காட்டினார்களா என்று நினைத்து உடனே திருமணத்திற்க்கு ஒத்துக் கொண்டது.
சாருகேசனுக்கு இந்துமதியின் பெயர் நியாபகத்தில் இல்லாது போய் விட யார் என்று கேட்டவனிடம்..
“ யமுனாவின் பிரண்ட்.” எனவும் தான் அவனின் நியாபகத்திற்க்கு வந்தது.
அதில் அதிர்ந்து வீர ராகவை பார்த்து..” பழி வாங்கவாடா கல்யாணம் செய்துக்குற.?” என்று சாருகேசன் கேட்டான்.
அதற்க்கு சிரித்து கொண்டே வீர ராகவ். “ நீ என் பிரண்ட் தான். அதுக்குன்னு உனக்காக என் வாழ்க்கையை பாழாக்கி கொள்வேனாடா.. உன் கல்யாணத்து அன்னைக்கு நான் அந்த பெண்ணை பார்த்தேன். பிடித்து விட்டது. இதோ கல்யாணத்தில் வந்து நிற்குது.” என்று வீர ராகவ் சொன்னதும் உடனே நம்பவில்லை
“ப்ராமிஸ் .” என்று சாருகேசன் கேட்க.. “மதர் ப்ரமிஸ்” என்று தன் அன்னை மீது அவன் சத்தியம் செய்யவும் தான் சாருகேசன் நம்பினான்.
இருந்தும் இந்துமதியோடு இவன் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்.. என்ற பயம் இருந்தது. கூடவே தன்னால் அந்த பெண்ணிடம் நல்ல மாதிரி பேச முடியுமா என்றும் தான்.