அத்தியாயம்---25
ஆஷிக் சீப் கெஸ்ட்டாக அழைத்த அமைச்சரின் குடோனில் பரினிதா வாய் துணியால் அடைத்தும் ,கைய், கட்டிய நிலையிலும் மயக்கத்தின் பிடியில் மயங்கி இருந்தாள். அப்போது அங்கு வந்த அமைச்சர் தன் அடியாட்களிடம் “என்னங்கடா...குட்டியே தூக்கிட்டிங்களா….” என்று கேட்டாவாரே பரினிதாவின் அருகில் வந்து அவள் முகத்தை பார்த்தார்.
பரினிதாவின் முகத்தை பார்த்த அமைச்சர் இப்பெண்ணின் முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...என்று தன் நியாபக அடுக்கில் இருக்கும் நினைவுகளை தட்டி எழுப்பி யோசித்ததில் நினைவு வந்தவனாக தன் அடியாட்களின் ஒருவனிடம் “ஏய் அன்று *****ஸ்டார் ஒட்டலில் ஆஷிக் கூட பார்த்த பெண் தானே இவள்.” என்று கேட்டதற்க்கு.
“ஆம் தலைவா உங்களுக்கு தான் தெரியுமே...சித்தார்த் ஆஷிக் சகோதரியைய் தான் திருமணம் செய்துக் கொண்டான் என்று.இவள் சித்தார்த்தின் தங்கை தானே தலைவா...அதனால் அன்று இரண்டு பேரும் சேர்ந்து எங்காவது போய் இருப்பாங்க.” என்று தன் அடியாள் விளக்கம் அளித்தாலும் ஏனோ அமைச்சரின் மனம் அதை ஏற்க மறுத்தது.
பரினிதாவின் முகம் பார்த்தவாரே நாம் தவறு செய்து விட்டோமோ...என்று தான் நினைக்க தோன்றியது.இவள் சித்தார்த்தின் தங்கை அளவுக்கு தான் ஆஷிக்குக்கு சொந்தம் என்றால் பரவாயில்லை. ஆனால் அதையும் தாண்டி அவர்களுக்குள் உறவு ஏதாவது இருந்தால் தன் கதி அதோ கதி தான் என்று எண்ணிக் கொண்டான்.
அமைச்சரின் மனம் அன்று தான் பார்த்த போது ஆஷிக் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை பார்த்து விட்டு தானே...தன் ஆட்களிடம் அந்த பெண்ணை பற்றி விசாரிக்க சொன்னான். ஏன் என்றால் ஆஷிக்கை அந்த அமைச்சருக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக தெரியும்.
ஒரு பெண்ணிடம் நின்று பேசி அவர் பார்த்தது கிடையாது. அப்படி பட்டவன் ஒரு பெண்ணிடம் இவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறான் என்றால் அதை சாதரணமாக நினைக்க தோன்ற வில்லை.அதனால் தான் விசாரிக்க சொன்னார்.
பின் தான் விசாரிக்க சொன்னவனிடம் “டேய் அன்று இவளை பற்றி விசாரிக்க சொன்னனே...விசாரிச்சிங்களாடா.” என்று கேட்டதற்க்கு.
“விசாரிச்சோம் தலைவா அது தான் சொன்னனே...இந்த பெண் சித்தார்த்தின் தங்கை. ஆஷிக்கின் சகோதரி சித்தார்த்தை தான் திருமணம் செய்து இருக்கிறாள் என்று .” சொல்பவனை ஒரு கொலை வெறியோடு பார்த்து.
“ஏய் பண்ணாடை. ஊர் அறிந்த விஷயத்தை நீ எனக்கு விசாரிச்சி சொன்ன மாதிரி பேசுறே...நான் ஆஷிக்குக் இந்த பெண்ணுக்கும் பழக்கம் எந்த அளவு என்று விசாரிக்க சொன்னேன். அதை விசாரிச்சிங்களா…” என்ற அமைச்சரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தன் தலையை சொரிந்துக் கொண்டே…
“இல்லையே தலைவா…” என்றவனை ஓங்கி தன் காலால் எட்டி உதைத்தான்.
மெல்லிய முனகல் சத்தத்தில் தான் உதைத்தவனை பார்த்தார். இந்த எருமைமாடு இப்படி அழகாக முனகாதே என்று அவர் எண்ணமிடும் போதே...சத்தம் பரினிதாவிடம் இருந்து வருவதை பார்த்து அமைச்சர் அவள் அருகில் விரைந்து சென்றார்.
இந்த பெண்ணிடமே ஆஷிக்குக்கு இவளுக்கும் என்ன உறவு என்று கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்து பரினிதா அருகில் சென்று “ஏய் குட்டி எழுந்துடு.” என்று சொல்லியும் பரினிதா எழாமல் இருக்க பக்கத்தில் இருக்கும் ஆட்களிடம்.
“ஏய் இங்க படமா காட்டுறாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்க. போய் தண்ணி கொண்டா...தெளிச்சாவது எழுப்பி அவள் கிட்டயே விசாரிக்கலாம்.” என்று சொன்னதும் ஒரு அடியாள் ஓடி போய் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து அந்த அமைச்சரிடம் கொடுத்தான்.
அந்த அமைச்சர் அந்த தண்ணியைய் பரினிதாவின் முகத்தில் தெளித்ததும் கொஞ்சம் தெளிவு வந்தவளாக முதலில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். பார்த்தவள் மிக அருகில் அமைச்சரின் முகம் பார்த்து அலண்டவளாக தன் மற்றொறு கண்ணையும் திறந்து அமைச்சரை ஒரு பயத்துடன் பார்த்தாள்.
என்னதான் விளையாட்டு பெண்ணாக இருந்தாலும் பெண்ணுக்கே உண்டான பயம் மனதில் வந்து போனது. அதுவும் அமைச்சரின் முகமும்,பக்கத்தில் இருக்கும் ஆட்களின் முகமும் அவளுக்கு பயத்தையே ஏற்படுத்தியது. ஒரு மிரண்ட பார்வையோடு அமைச்சரை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அமைச்சர் பரினிதாவை மிரட்டவில்லை. ஒரு சமயம் தான் சந்தேகப்பட்டது உண்மையாக இருந்தால் இந்த பெண்ணை கடத்தியதுக்கே ஆஷிக் தன்னை சும்மா விட மாட்டான். இதில் இப்பெண்ணை மிரட்டி அதை இவள் ஆஷிக்கிடம் சொன்னால்,தான் தப்பும் சிறு வாய்ப்பும் அதோ கதி தான் என்று நினைத்து பரினிதாவை பார்த்து.
“குட்டி பயப்படதே...நான் ஒன்று கேட்பேன் அதற்க்கு உண்மை சொன்னால் உன்னை கண்டிப்பாக விட்டு விடுவேன்.” என்ற அமைச்சரின் அந்த குட்டி பரினிதாவுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. தன் அண்ணனும் அவளை குட்டிம்மா என்று தான் அழைப்பார். ஆனால் அதில் ஒரு பாசம் மறைந்து இருக்கும்.
பின் நினைவு வந்தவளாக ஆஷிக்கின் அழைப்பும் தன் மனதில் மின்னி மறைந்தது. ஆஷிக்கும் தன்னை குட்டிம்ம்மா...பேபிம்மா...என்று தானே அழைப்பான். அந்த அழைப்பில் தன் அண்ணன் போல் இல்லாமல் வேறு ஏதோ இருந்ததே...என்று இப்போது அவன் அழைப்பை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாள். அது என்ன என்று தெரிய விட்டாலும் அது அவளுக்கு பிடித்தே இருந்தது.
இவள் முகத்தையே பார்த்திருந்த அமைச்சரை பார்த்த பக்கத்தில் உள்ள அடியாள் “தே...குட்டி அய்யா கேட்குறாங்களே… அதற்க்கு பதில் சொல்லாமல் என்ன பிராக்கு பார்த்துட்டு இருக்கிறே…” என்ற அந்த அடியாளின் பேச்சில் பரினிதா விதிர்த்து போனவளாக பயத்திடன் தலையாட்டினாள்.
அதற்க்கு அமைச்சர் “ஏய் சும்மா இருலே ஏற்கனவே ஆஷிக்குக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாமல் பயந்துட்டு இருக்கேன் நீ வேறே… நான் சந்தேகப்பட்ட மாதிரி இருந்தால் நம் கதி அவ்வளவு தான். இவள் அண்ணன் நான் கட்டிய பிள்டிங்கை முறையா கட்டவில்லை என்று சொல்லி அதை இடிக்க நோடிஸ் அனுப்பினான். அதை தடுக்க இந்த பெண்ணை தூக்கவே முதலில் யோசித்தேன். என்னடா அந்த கலெக்டர் பைய்யன் ஆஷிக்கின் சகோதரியை கல்யாணம் செய்துகிறானே...இந்த பென்ணை தூக்கினா அவன் சும்மாவிடுவனா என்று.
இப்போது இந்த பெண்ணை பார்த்துட்டு என் அண்டா சடச்சரமே அலண்டு போய் கிடக்கிறேன். அதனால் எது என்றாலும் நானே பொறுமையா விசாரிக்கிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என்று சொல்லி விட்டு பரினிதாவிடம்.
“குட்டி உனக்கு ஆஷிக் உன் அண்ணன் அவன் சகோதரியைய் திருமணம் செய்ய போது தானே தெரியும். அது தவிர உனக்கும் ஆஷிக்குக்கும் வேறு சம்மந்தம் இல்லையே…?” என்று கேட்டு விட்டு ஒரு வித பதட்டத்துடன் அவள் முகத்தை பார்த்தான்.
பரினிதா அந்த அடியாளின் அதட்டலுக்கு அமைச்சர் பேசியதிலேயே பாதி விஷயம் தெரிந்து விட்டது. தன் அண்ணனை தன்னை காட்டி மிரட்டி காரியம் சாதிக்க பார்க்கிறார்கள் என்றும். ஆனால் அதையும் தாண்டி ஆஷிக் மேல் இவர்களுக்கு பயம் உள்ளதும் என்றும் தெரிந்த பரினிதாவுக்கு இப்போது கொஞ்சம் பயம் அகன்றது.
இவர்கள் ஆஷிக்கின் மேல் உள்ள பயத்தால் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று நினைத்து இப்போது அந்த அமைச்சரை பார்த்தாள். எதுவும் பேசாமல் தன்னையே பார்த்திருந்த பரினிதாவை பார்த்த அந்த அமைச்சருக்கும் கோபம் தான் வந்தது.
இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு “குட்டி நான் கேட்டதுக்கு ஏதும் சொல்லலியே….” என்ற அமைச்சரிடம் துணி அடைத்த வாயில் இருந்து முதலில் போட்ட மாதிரி தான் மெல்லிய சத்தம் எழுப்ப முடிந்தது. அந்த சத்தமும் வரக்காரணம் வாயில் துணி அடைத்தவன் சரியாக அடைக்காததால் தான் அந்த சத்தமும் போட முடிந்தது.
அப்போது தான் பரினிதா வாயில் இருந்த துணியைய் பார்த்தவன் அதை எடுத்தவாரே “நான் ஒரு முட்டாள். துணி அடைத்து விட்டு பேசு பேசுன்னா எப்படி பேசும்.” என்று சொல்லிக் கொண்டே துணியைய் எடுத்து போட்டு விட்டு பின் கைய் கட்டையும் அவிழ்த்தான்.
வாயில் இருந்து துணி எடுத்ததும் தொண்டை காய்ந்ததால் பேச முடியாமல் சைகையில் தண்ணி வேண்டும் என்று கேட்டதுக்கு பக்கத்தில் இருக்கும் தண்ணியை அந்த அமைச்சர் எடுத்து பரினிதாவுக்கு கொடுத்தார்.
அதை மெல்ல பருகியபடியே இந்த ஆள் எதற்க்கு தனக்கும் ஆஷிக்குக்கும் உள்ள உறவை இப்படி பதட்டத்துடன் கேட்கிறார்.அதுவும் முதலில் ஆஷிக்கின் சகோதரியை அண்ணன் திருமணம் செய்தும் கடத்த துணிந்த இந்த ஆள் இப்போது வேறு எந்த புது உறவுக்காக பயப்படுகிறார் என்ற நினைவு ஓடும் போதே ஒ அப்படி இருக்குமோ நானும் ஆஷிக்கும் விரும்புகிறோம் என்று தவறாக நினைத்து விட்டானா...என்று யோசித்துக் கொண்டே தண்ணியை குடித்து முடித்து அந்த பாட்டிலை கீழே வைத்து விட்டு அமைச்சரை பார்த்து.
“நீ ஒரு வடிகட்டிய முட்டாள் தான். இதில் உனக்கு சந்தேகம் வேறா…” என்று தெனாவட்டாக கேட்டு அமைச்சரை கேலியாக ஒரு பார்வை பார்த்தாள்.
அவளின் அந்த பேச்சில் பக்கத்தில் இருக்கும் ஆட்கள் ஆவேசத்துடன் ஏய் என்று சத்தமிடும் போதே அமைச்சர் அவர்களை அடக்கி விட்டு பரினிதாவிடம் “ அப்போ நீ...நீங்க ஆஷிக்கை.”
அமைச்சர் சொல்லாமல் நிறுத்திய வார்த்தையைய் பரினிதா பூர்த்தி செய்தாள். “நானும் ஆஷ்க்குக்கும் திருமணம் செய்துக் கொள்ள போகிறோம்.” என்று சொல்வதை கேட்டுக் கொண்ட அந்த இடத்துக்கு ஆஷிக்கும், சித்தார்த்தும் வந்து சேர்ந்தனர்.
பரினிதா அமைச்சரிடம் பேசியதை கேட்ட ஆஷிக் அந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சிந்தவனாய் அவளை பார்த்தான். பின் இருக்கும் இடம் கருதி அங்கு பரினிதாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த அமைச்சரின் சட்டையை பிடித்து மேலே தூக்கிவிட்டு காலால் ஓங்கி ஒரு உதை உதைத்தான்.
அந்த உதையில் அமைச்சர் ஒரு மூலையில் போய் விழுந்தவனை திரும்பவும் ஆஷிக் நெருங்கும் வேலையில் சித்தார்த் ஆஷிக்கை தடுத்து நிறுத்தினான்.பின் ஆஷிக் பக்கத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் வேண்டிய நடவடிக்கை எடுக்கும் மாறு சொல்லி விட்டு பரினிதாவை நோக்கி சென்றான்.
சித்தார்த்துக்கு முன்னே பரினிதாவிடம் சென்று அவள் கைய் கட்டியதால் ஏற்பட்ட சிவப்பை தடவிய வாரே…”ரொம்ப வலிக்குதா...பேபிம்மா.” என்று தனக்கே வலிப்பது போல் அந்த குரலில் அப்படி ஒரு வலியோடு கேட்டான்.
சித்தார்த்துக்கு இப்போது ஆஷிக்கின் பேபிம்மாவின் அழைப்பில் ஒரு உரிமை இருப்பதாக தோன்றியது. அதுவும் அவர்கள் வரும் போது பரினிதா அமைச்சரிடம் சொன்ன ஆஷிக்கை திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்ற பேச்சும், அவன் நினைவில் வந்து சென்றன.
பரினிதா ஆஷிக்கிடம் சிரித்தவாரே “வலி எல்லாம் இல்லை மாமா. இங்கு அவர்களை பார்த்தும் முதலில் பயமாகத்தான் இருந்தது. பின் அவர்களே உங்களிடம் பயப்படுவதை கேட்டதும் என் பயம் போய் விட்டது மாமா.” என்று சொல்லி சிரிப்பவளை பார்த்து அவனுக்கு பரினிதாவை பயப்பட வைத்த அந்த அமைச்சரை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் போல் இருந்தது.
பரினிதாவின் தலையை தடவி விட்டு அவள் கைய் பிடித்து சித்தார்த்தின் அருகில் அழைத்து வந்தான். சித்தார்த் அடப் பாவிங்களா...நான் அவள் அண்ணன் அந்த நினைவு கூட இல்லாமல் என் எதிரிலேயே தலையைய் தடவுவது என்ன…? கைய் பிடித்து அழைத்து வருவது என்ன…? என்று நினைத்துக் கொண்டே ஆஷிக்கின் கைய் பிடியில் இருந்த பரினிதாவின் கையைய் பார்த்தான்.
சித்தார்த்தின் பார்வையைய் பார்த்த ஆஷிக் தானும் ஒரு பெண்ணின் சகோதரன் என்ற நினைவில் பரினிதாவின் கையைய் விட்டு சித்தார்த் அருகில் வந்து அவன் காதில்.
“கைய் விட்டது டெம்ரவரி தான். அடுத்த தடவை நான் கைய் பிடித்தால் அது நிறந்தரமான பிடியாக தான் இருக்கும்.” என்று சொன்னவன் “வாங்க போகலாம் சாயந்திரம் நடக்க இருக்கும் ரிசப்ஷனுக்கு தேவையான ஏற்பாடு செய்ய வேண்டாமா….” என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த ஒரு போலீஸ்காரனின் மேல் சாவகாசமாக கைய் போட்டவாரே பேசிக் கொண்டு போகும் ஆஷிக்கை சித்தார்த் வியந்து பார்த்தான்.
ஆம் வியந்து தான் பார்த்தான் சித்தார்த். பரினிதா கடத்தப்பட்டால் என்று கார் டிரைவர் சொன்னதும் ஒரு நிமிடம் தன் உலகமே சுற்றுவது போல் இருந்தது.அப்படியே பக்கத்தில் உள்ள ஹோபாவில் தோய்வுடம் சரிந்தான். ஆஷிக்குக்கும் ஒரு நிமிடம் உறைந்து போய் விட்டான்.
அடுத்து என்ன என்று யோசிக்கும் சிந்தனை அற்றவனாக இருந்தவனை பாட்டிம்மாவின் பேச்சித்தான் அவனை யோசிக்க வைத்தது. “சித்து இது அமைதியாக இருக்கும் சமயம் அல்ல. மாலையில் ரிசப்ஷன் இருக்கு அதற்க்குள் நம் பரினிதாவை மீட்டாக வேண்டும். இந்த விஷயம் வெளியில் சென்றால் பெண் பிள்ளை காது மூக்கு வைத்து கதை கட்டி விடுவார்கள்.” என்ற பேச்சி தனக்கே சொன்னது போல் இருந்தது ஆஷிக்குக்கு.
ஆஷிக் யாராய் இருக்கும் என்று சிந்தனை ஓடும் போதே...சித்தார்த் தன் பாட்டிம்மாவிடம் “பாட்டிம்மா அந்த வினோத் நம்பர் இருக்கா தாங்க.” என்று கேட்டதிலேயே சித்தார்த் எதற்க்கு கேட்கிறான் என்று புரிந்துக் கொண்ட ஆஷிக்
“இல்லை இது அவன் வேலையாக இருக்காது.” என்று திட்டவட்டமாக சொன்னவனை பார்த்து ஆரு “அண்ணா ஒரு வேலை அந்த மத்திய மந்திரி” என்று சொன்னவளிண் பேச்சைக் கேட்ட ஆஷிக் சட்டென்று தன் போனை எடுத்து யாரையோ அழைத்து பேசிய ஆஷிக்.
பின் “இல்லை அந்த மந்திரி இல்லை.” என்று சொன்னவன் சித்தார்த்திடம் “சித்தார்த் சமீபத்தில் யாரேனும் பெரிய இடத்தை பகைத்துக் கொண்டீர்களா…” என்று கேட்டவனின் பேச்சிக்கு.
சிறிது நேரம் யோசித்து விட்டு “என் பதவியில் நிறைய பெரிய மனிதர்களின் பகையைய் நான் சம்பாதித்து தான் இருக்கிறேன். யாரை என்று சொல்ல...அதுவும் இல்லாமல் நான் அவர்களுக்கு சாதகமாக செய்ய விட்டால் இடம் மாற்றம் தான் செய்வார்கள். இப்படி என் குடும்பத்துக்கு எதுவும் செய்தது கிடையாது.” என்று சொல்பவனை இவன் இவ்வளவு நல்லவனாக இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று தான் நினைக்க தோன்றியது.
தானே முதலில் இதனை தானே செய்ய எண்ணினான் என்று நினைக்கும் வேலையிலேயே ஏதோ நினைவு வந்தவனாக சித்தார்த்திடம் “சித்தார்த் அமைச்சரின் பெயர் சொல்லி அவர் உங்களிடம் ஏதாவது விஷயம் முடித்து கொடுக்க கேட்டு உங்களிடம் வந்தாரா…”
“இல்லை உதவி இல்லை. ஆனால் அவர் கட்டிய ஒரு ஏழு அடுக்கு மாடி கட்டிடம் வரம்பு மீறி கட்டி இருந்தார். அதை இடிக்க நோட்டிஸ் அனுப்பினேன்.” என்று சொன்னது தான்.
ஆஷிக் ஸ்ரீதருக்கு அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்து “ நான் சொன்னதை விசாரித்து எனக்கு தகவல் சொல். சீக்கிரம் என்று சொன்னவன்.அந்த கார் டிரைவரிடம் இப்போ சில ஆல்பத்தை எடுத்து வருவார்கள் அந்த ஆல்பத்தில் இருப்பவகள் யாராவது பரினிதாவை கடத்தியவர்களில் இருக்கிறார்களா என்று பார்த்து சொல்.” என்று கூறிவிட்டு வாசலை பார்த்து காத்திருந்தான்.
சிறிது நேரத்துக்கு எல்லாம் வேர்க்க விரு விருக்க ஸ்ரீதர் கையில் ஒரு ஆல்பத்தோடு சித்தார்த்தின் வீட்டுக்கு வந்தடைந்தான். ஸ்ரீதரின் தலை வாசலில் கண்டதும் ஸ்ரீதர் ஹாலில் வருவதற்க்குள் ஆஷிக் விரைந்து சென்று அவரிடம் இருந்த ஆல்பத்தை பெற்றுக் கொண்டு கார் டிரைவரை அருகில் வரும் படி சைகை செய்தான்.
டிரைவர் அருகில் வந்ததும் தன் கையில் உள்ள ஆல்பத்தை அமர்ந்த வாரே தானே ஒவ்வொறு பக்கமாக புரட்டி காண்பித்தான். ஒவ்வொறு பக்கம் புரட்டும் போது டிரைவரின் முகபாவத்தையே பார்த்திருந்த ஆஷிக் ஆல்பத்தின் ஐந்தாம் பக்கத்தை தான் புரட்டும் போது டிரைவரின் வெறித்த பார்வையில் அடுத்த பக்கத்தை திருப்பாது என்ன இவனா…? என்று ஆக்ரோஷத்துடன் கேட்டான்.
அவன் கோபக்குரலுக்கு அந்த டிரைவர் பயந்து ஆம் என்று தலையாட்டினான் என்றால் ,அங்கு இருந்த மற்றவர்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர். ஆனால் இது பற்றி யோசிக்கவோ,விசாரிக்கவோ, நேரம் இது அல்ல என்று புரிந்த அனைவரும் ஆஷிக்கிடம் பரினிதாவைம் கடத்தியவர்கள் யார் என்று தெரிந்துக் கொள்வதற்க்ககா பார்வையை செலுத்தினார்கள்.
ஆஷிக் டிரைவர் காட்டிய போட்டோவை தன் போன் மூலம் படம் எடுத்து ஒரு மூன்று நம்பருக்கு அனுப்பி வைத்து அந்த நம்பரில் இருந்து வரும் செய்திக்கு காத்திருந்தான்.ஆஷிக்கின் நடவடிக்கை மூலமே அவனின் நடவடிக்கையை அறிந்துக் கொண்ட சித்தார்த் அமைதியுடன் இருந்தான்.
பின் சிறிது நேரம் சென்றதும் ஆஷிக்குக்கு ஒரு போன் வர அதை சட்டென்று ஆன் செய்து காதில் வைத்து .
“ சொல் மூர்த்தி அது யாரோடு அடியாள் என்று தெரிந்ததா…” அந்த பக்கத்தில் என்ன சொன்னானோ முகம் எல்லாம் சிவந்து போனை அணைத்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திடம்.
“ அந்த அமைச்சரின் ஆட்கள் தான் கடத்தியிருக்கிறார்கள். நீங்கள் அவன் கட்டிய அடுக்கு மாடியை இடிக்க நோடீஸ் விட்டீங்க இல்லையா அதற்க்காக .”என்று சொன்னவனிடம்.
பாட்டிம்மா இப்போ எங்கே வைத்திருப்பார்கள் ஆஷிக் என்று பயந்து தான் கேட்டார். என்ன தான் தைரியமாக தொழில் செய்தாலும் ஒரு வயது பெண் கடத்தப்படுவது சாதரண விஷயம் இல்லையே...இது வெளியில் தெரிந்தால் கண்டிப்பாக கதை கட்டி விடுவார்கள்.
அதனால் எவ்வளவு சீக்கிரம் பரினிதாவை மீட்கிறோமோ...அவ்வளவு நல்லது என்று உணர்ந்தவராக ஆஷிக்கிடம் கேட்டார்.
பாட்டிம்மாவின் பயம் அறிந்தவனாக “கவலை வேண்டாம் பாட்டிம்மா….அவனுக்கு மூன்று குடோன் இருக்கு மூன்றிலும் விசாரிக்க சொல்லி விட்டேன். மேலும் அவள் கடத்தப்பட்டது யாருக்கும் தெரியாது.” என்று சொன்னவனை பாட்டிம்மா ஆச்சரியத்துடன் பார்த்தான்.
இந்த ஒரு மணி நேரமாக அவன் நடவடிக்கையை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.பரினிதா கடத்தப்பட்ட செய்தி அறிந்து ஒரு நிமிடம் செய்வதறியது நின்றாலும் அடுத்த நிமிடமே….அவன் அடுத்து அடுத்து எடுத்த நடவடிக்கை அதில் இருந்த வேகம் கோபம் அனைத்தும் பார்த்ததில் அவருக்கு விளங்கி விட்டது ஆஷிக்குக்கு பரினிதாவின் மேல் விருப்பம் என்று.
பாட்டிம்மாவுக்கு ஆஷிக்கின் திறமையை பார்த்து மலைத்தே போனார் என்று தான் சொல்ல வேண்டும். பதவியில் இருக்கும் தன் பேரன் செய்ய முடியாதது கூட தன் திறமையால் செய்து முடித்து விட்ட ஆஷிக்கை நினைத்துஅவருக்கு பெருமையாக தான் இருந்தது.
அதுவும் தான் கேளாமலேயே இந்த விஷயம் வெளியில் செல்லாது என்று சொன்னது அவரை அசத்தியே விட்டது.அவர் இப்படி எண்ணமிடும் போதே திரும்பவும் ஆஷிக்க்குக்கு அழைப்பு வந்தது அதனை எடுத்து பேசிமுடித்த ஆஷிக் சித்தார்த்திடன்.
“ பல்லாவரம் குடோனில் தான் வைத்திருக்கிறார்கள்.” என்று சொன்னது தான்.
உடனே தன் ஆபிசுக்கு போன் செய்யும் சித்தார்த்தை தடுத்த ஆஷிக் “போலீஸை கூப்பிட வேண்டாம். இதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றவனிடம்.
“தப்பு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும் ஆஷிக்.” என்று சொல்பவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று இவன் யோசிக்கும் போதே…
பாட்டிம்மா “வேண்டாம் சித்தார்த் இது ஒரு பெண்ணின் விஷயம் ஆஷிக் எப்படி செய்கிறாறோ அப்படி செய்யட்டும்.” என்ற பேச்சில் ஆஷிக் வியப்புடன் அவரை பார்க்கும் போது ஒரு புன்சிரிப்புடன்.
“பரினிதாவை கூட்டிட்டு வாப்பா. பிறகு அனைத்தும் பேசிக் கொள்ளலாம்.” என்பதிலேயே தன் விருப்பம் அவருக்கு தெரிந்து விட்டது என்றும் அதற்க்கு அவர் பச்சை கொடியும் காட்டி விட்டார் என்று தெரிந்துக் கொண்ட ஆஷிக்.
“நன்றி பாட்டிம்மா.” என்று கூறிவிட்டு சித்தார்தோடு பல்லாவரம் குடோனுக்கு சென்றான்.
அத்தியாயம்---26
குடோன் இருக்கும் இடத்திற்க்கு ஒரு இருபது அடி முன் ஒரு கார் இவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தது. ஆஷிக் தன் வண்டியை அதன் பக்கத்தில் நிறுத்தியதும் காரில் இருந்து இரு போலீஸ் காரர்கள் இறங்கி வந்து ஆஷிக்கிடம்
“எல்லா ஏற்பாடும் செய்தாச்சி சார். உள்ளே ஏழு பேர் இருக்கிறார்கள். இப்போ போனா சரியா இருக்கும் சார்.” என்ற அந்த போலீஸ்காரனை சித்தார்த் அதிசயத்துடன் பார்த்தான்.
தன்னிடம் போலீஸ் வேண்டாம் என்று சொன்னவன் இங்கு தாங்கள் வருவதற்க்கு முன்னே போலீஸை வரவழைத்து விட்டான் என்றால் அந்த போலீஸ் காரன் ஒரு கலெக்டர் என்னை கண்டுக் கொள்ளாமல் ஆஷிக்கின் அனுமதி வாங்குகிறானே என்று நினைத்துக் கொண்டே …
அந்த போலீஸ் காரனிடம் “நீ எந்த ஸ்டேஷன் .” என்று கடுமையுடம் கேட்டான்.
அதற்க்கு அந்த போலீஸ் பதில் அளிக்காமல் ஆஷிக்கை பார்க்க ஆஷிக் அந்த போலீஸ் காரனை “நீ போ முருகா…” என்று அனுப்பி விட்டு சித்தார்த்திடம் கூலாக “அவன் போலீஸ் இல்லை. என்னிடம் வேலை பார்ப்பவன்.” என்று சொன்னவனிடம் கடுமையாக ஏதோ சொல்லும் சித்தார்த்திடம்.
“உங்கள் நியாயம்,நீதி,நேர்மை,கடமை,பற்றி எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போ பரினிதாவை கூட்டிட்டு போய் உங்க பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு ரிசப்ஷன் வேலையைய் வேறு பார்க்க வேண்டும்.” என்று சொன்னவன்.
முருகனிடம் “என் காரை பாலோ செய்.” என்று சொல்லி விட்டு தன் காரை எடுத்தான்.
பின் ஆஷிக்கின் நடவடிக்கை அனைத்தும் அதிரடியாக தான் இருந்தது. அந்த அமைச்சரை ஒரு போலீஸ்காரர் கையில் விலங்கு மாட்ட அந்த அமைச்சர் ஆஷிக்கிடம் “எல்லா கட்சியாளும் உன் பாக்கெட்டில் இருப்பதாலும், இப்போ கலெக்டருக்கே உன் சகோதரியை கொடுத்துட்டதாலும் தானே இவ்வளவு ஆடுகிறாய். என் வக்கீல் என்னை பெயில் எடுப்பார். பிறகு நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.” என்பவனை பார்த்து ஒரு நக்கலாக சிரித்தவாரே…
“நீ சுப்ரீம் கோட்டுக்கே போனாலும் உனக்கு பெயில் கிடைக்காதுடா…” என்று சொல்லி விட்டு அந்த போலீஸ் உடையில் இருப்பவனிடம் ஏதோ சொல்லி விட்டு சித்தார்த்தை பார்த்தான்.
இவை அனைத்தையும் ஒரு திரைப்படம் போல் பார்த்த சித்தார்த் இவன் நல்லவனா… கெட்டவனா...என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழித்திருந்தவனின் காதில் ஆஷிக் “நான் எப்படி இருந்தாலும் நீ உன் தங்கையை எனக்கு தான் கொடுத்தாக வேண்டும். இது உங்க வீட்டு சீப் மினிஸ்டரோட விருப்பம். அப்புறம் இன்னொறு விஷயம் இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் டெல்லியில் ஜார்ஜ் எடுத்துக்க வேண்டி வரும். அதற்க்கு உண்டான ஏற்பாட்டை நான் செய்து விட்டேன். நீங்கள் இங்கு கலெக்டராக இருந்தால் உங்களுக்கும் பிரச்சனை எனக்கும் பிரச்சனை அது தான் .
அது மாதிரியே ஆருக்கு அவள் வேலை பார்த்த பத்திரிக்கை ஆபிசையே வாங்கி விட்டேன். அவளுக்கு பத்திரிக்கை தான் பிடித்தமானது அதனால் தான்.” என்று பேசுபவனை ஒரு புன்சிரிப்போடு பார்த்து.
“ஆரு உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள். ஆனால் நீ அதை எல்லாம் தாண்டி விட்டாய். ஆனால் உனக்கும் பரினிதாவுக்கும் செட்டாகுமா என்று தான் தெரியவில்லை.” என்பவனிடம் “ முதலில் கட்டி கொடுங்கள் பிறகு நாங்கள் எப்படி செட்டானோம் என்று காட்டுகிறேன்.” என்ற அவனின் பேச்சுக்கு சித்தார்த் பதில் அளிக்கும் முன்னே ஒரு போலீஸ் காரனிடம் இவ்வளவு நேரம் கதை அளந்து விட்டு அப்போது தான் அங்கு வந்து சேர்ந்த பரினிதா சித்தார்த்திடம் “அண்ணா எனக்கு அந்த போலீஸ் காரர் மீது டவுட்டாக இருக்கிறது.” என்ற பரினிதாவின் பேச்சிக்கு
சித்தார்த் ஆஷிக்கிடம் “ நீ ஏற்பாடு செய்த போலீஸ் பரினிதாவே சந்தேகப்படும் அளவுக்கு இருக்கிறது.” என்பவனிடம்.
“அது என்ன பரினிதாவா சந்தேகப்படும் அளவுக்கு. என் பேபிம்மா புத்திசாலி அது தான் எவ்வளவு கச்சிதமாக போலீஸ் மாதிரி நான் ஏற்பாடு செய்தாலும் சட்டென்று அவள் தெரிந்துக் கொண்டாள்.” என்றவனுக்கு அப்போது தான் நான் வரும் போது இவள் அந்த அமைச்சரிடம் நானும் ,ஆஷிக்குக் திருமணம் செய்துக் கொள்ள போகிறோம் என்று கூறியது நியாபகத்துக்கு வந்தது.
அதை பற்றி அவன் கேட்க்கும் முன்பே பரினிதா “அய்யோ அப்போ அவர்கள் போலீஸ் இல்லையா….இது தெரியாமல் நான் என் போன் நம்பரை அவர்களிடம் கொடுத்து விட்டேனே….” என்று பயந்து போய் சொன்னாள்.
இது வரை பயம் அறியாமல் தான் இருந்தாள். ஆனால் தான் கடத்தப்பட்டதும் அந்த கொஞ்ச நேரம் என்ன செய்வார்களோ...என்ற அந்த நினைவே அவளுக்கு மிக பயங்கரமாக இருந்தது. பின் ஆஷிக்கை பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிந்ததும் கொஞ்சம் பயம் போனாலும், ஆஷிக்கும்,அண்ணாவும் வரும் வரையில் மனதில் ஒரு நடுக்கம் இருந்துக் கொண்டு தான் இருந்தது.
அதனால் தான் இப்போது யாரோ ஒருவருக்கு போன் நம்பர் கொடுத்து விட்டோமே இதனால் ஏதாவது பிரச்சனை வருமே என்று பயந்து போய் உரைத்தாள்.
அவள் பயத்தை அறிந்துக் கொண்ட ஆஷிக் “கவலை படதே பேபிம்மா அவர்கள் நம் ஆள் தான். இருந்தாலும் இனி இது போல் உன் போன் நம்பரை கொடுக்க கூடாது சரியா…” என்று ஒரு குழந்தைக்கு சொல்வதை போல் சொல்லும் அவனை சித்தார்த் இவனா கொஞ்சம் நேரம் முன் அமைச்சரை பார்த்து அவ்வளவு ஆக்ரோஷமாக கத்தினான் என்று சந்தேகம் ஏற்பட்டது.
ஒரு வேளை ஆஷிக் தான் பரினிதாவை நன்றாக பார்த்துக் கொள்வானோ...அந்த நம்பிக்கையில் தான் பாட்டிம்மாவும் அவ்வாறு பேசினார்களோ...என்று தோன்றியது. ஆம் பாட்டியின் பேச்சியில் இருந்தே ஆஷிக்குக்கு மறைமுகமாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை அவனுமே அறிந்துக் கொண்டான்.
சரி என்னை பொறுத்த வரை என் தங்கை நன்றாக இருக்க வேண்டும். அவ்வளவு தான் என்ற வகையில் சித்தார்த் ஆஷிக்கை பார்த்து “வா போகலாம் மச்சான் .” என்று அழைப்பு விடுத்தான்.
ஆஷிக்குக்கு பரினிதா எதற்க்கு அந்த அமைச்சரிடம் அப்படி சொன்னாள் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. இருந்தும் அதை பற்றி கேட்காது நிதானமாக கேட்கலாம் என்று முடிவு எடுத்தவனாக சித்தார்த்திடம் “வா சித்தார்த் போகலாம்.” என்று சொல்லி விட்டு பரினிதாவை கூப்பிட அவளை பார்த்தால்.
அவள் போன் நம்பர் கொடுத்த அந்த போலி போலீஸ் காரனின் போனை வாங்கி அவள் நம்பரை டேலிட் செய்து கொடுத்து விட்டு ஆஷிக்கின் அருகில் வந்து நின்று “ நீங்க பார்த்துப்பீங்க இருந்தும் கொஞ்சம் பயமாக இருந்தது. அது தான்.” என்று இழுத்தவளின் பேச்சியில் இருந்தே இந்த கடத்தல் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தி விட்டது என்று அறிந்துக் கொண்ட ஆஷிக்.
மனதில் அந்த அமைச்சரை இருடா முதலில் இந்த பங்ஷன் நல்லபடியா முடியட்டும் அப்புறம் இருக்குடா உனக்கு கச்சேரி என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் வேலையிலேயே சித்தார்த் ஆஷிக்கிடம்.
“இப்போ அந்த அமைச்சரை எங்கே அழைச்சிட்டு போக சொல்லி இருக்கே…?” என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதிலேயே இவன் ஏதோ வில்லங்கம் தான் செய்ய போகிறான் என்று அறிந்தவனாக.
“வேண்டாம் ஆஷிக். அவனை என்னிடத்தில் ஒப்படைத்து விடு.” ஆஷிக் கேள்வியோடு பார்க்க.
“நான் இதில் பரினிதா பெயர் வராமல் பார்த்துக் கொள்வேன்.” என்றவனிடம்.
“இல்லை அவனை நானே நன்றாக பார்த்துக் கொண்டால் தான் எனக்கு திருப்தி.” என்று சொல்பவனிடம் சித்தார்த் ஏதோ சொல்ல வர பரினிதா தன் அண்ணாவிடம்.
“மாமா சொல்வது தான் சரி அண்ணா. அந்த அமைச்சர் உங்க தங்கை என்று தான் கடத்தினார். ஆனால் என்னை பார்த்ததும் ஆஷிக்குக்கு நீ என்ன உறவு என்று பயந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் மாமாவின் செல்வாகை. அண்ணா இந்த காலத்தில் ஜென்டிச் மேனாக இருப்பதை விட. வில்லன் கலந்த ஹீரோ தான் செட்டாகும்.” என்று பேசுபவளை பார்த்து ஆஷிக் மனதுக்குள் நான் உனக்கு செட்டானால் போதும் பேபிம்மா...என்று கூறிக் கொண்டான் என்றால்.
சித்தார்த் இவன் ஏற்கனவே ஆடிக் கொண்டு தான் இருக்கிறான். இவள் என்ன என்றால் அவனுக்கு சலங்கையும் சேர்த்து கட்டி விடுகிறாளே என்று நினைக்கும் வேலையில் பாட்டிம்மாவிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்து தான் அய்யோ பரினிதா கிடைத்து விட்டதை நான் இன்னும் பாட்டிம்மாவிடம் சொல்ல வில்லையே என்று பதட்டத்துடன் போனை பார்க்கும் வேலையில்
பரினிதா தன் அண்ணாவிடம் “அண்ணா நான் பாட்டியிடம் சொல்லி விட்டேன் .” என்று கூறி அவன் வயிற்றில் பாலை வார்த்தாள்.
அதற்க்கு ஆஷிக் “என் பேபிம்மா என்ன அறிவு பார்த்தியா சித்தார்த். நமக்கு கூட வீட்டில் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை பார்த்தியா….ஆனால் பரி நீ க்ரேட்டா…” என்ற ஆஷிக்கின் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டு இருப்பவளை சித்தார்த்தின் ஒத்தை வார்த்தை கடும் வெயிளில் தள்ளியது போல் இருந்தது.
“முதலில் அவளை அந்த எட்டு அரியஸை முடிக்க சொல். அப்போ நான் ஒத்துக் கொள்கிறேன் அவள் க்ரேட் என்று.” சொல்லும் சித்தார்த்தை பரினிதா கொலை வெறியோடு பார்த்தாள்.
இவன் என் அண்ணனாக போய் விட்டான் இல்லை என்றால் நடப்பதே….வேறு. பின் அவளும் தான் என்ன செய்வாள் எப்போதும் தன் அரியஸை பற்றி பேசியே மக்கள் மனதில் இருக்கும் தன் இமேஜை சரிக்க நினைத்தால் அவளுக்கு கோபம் வர தானே செய்யும்.
அவள் கோபமுகத்தை பார்த்த ஆஷிக் “சரி விடு பேபிம்மா…தெரியாமல் சொல்லிட்டார். உன் அண்ணன் தானே பெரிய மனது பண்ணி அவரை மன்னித்து விடு.” என்றதற்க்கு.
“ சரி உங்களுக்காக நான் மாமா நான் அவரை விட்டுகிறேன். ஆனால் ஒன்று இனி அவர் என் படிப்பை பற்றி பேசக் கூடாது என்ன.” என்று ஆஷிக்கை பார்த்து பரினிதா பேரம் பேச ...அவள் பேச்சில் மயங்கியவனாக அவள் காதருகில் “சரி இனி உன் அண்ணன் இனி உன் படிப்பை பற்றி பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதற்க்கு நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்ன…?” என்று அவளிடம் அவள் பேசிய பேரத்துக்கு மறு பேரம் பேசினான்.
இனி அவள் படிப்பு பற்றி பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் ஆஷிக்கை அந்த பெருமாளையே பார்த்த மாதிரி பயபக்தியுடன் பார்த்து வைத்து “எப்படி…? எப்படி…?” என்று அவனை போலவே ரகசியமாக காதில் கேட்டு வைத்தாள்.
அவள் மூச்சு காற்று தன் காதில் மோதியதில் அவன் மயிர்கள் எல்லாம் சிலிர்த்து எழ இருக்கும் இடம் கருதியும்,மாலை நடக்க இருக்கும் ரிசப்ஷன் வேலை மலை அளவில்
காத்திருப்பதிலும் தன் உணர்ச்சியை அடக்கிய படி… “இன்று பங்ஷன் முடியட்டும் பேபிம்மா...நாளை உன் வீட்டில் வந்து அனைவரின் முன்னிலையிலும் சொல்கிறேன் என்ன..? ஆனால் அதற்க்கு நான் ஏதாவது கேட்டால் நீ ஆமாம் என்று சொல்ல வேண்டும் சரியா…?” என்று அவள் வீக் பாயிண்டை பிடித்து தான் நான் அவளை மணக்க முடியும் என்று நினைத்து அவளிடன் கேட்டான்.
ஏன் என்றால் இவளிடம் நான் காதலை சொன்னால் கண்டிப்பாக அதையும் இவள் விளையாட்டாக தான் எடுத்துக் கொள்வாள்.அதனால் தான் இந்த ஐடியாவில் அவளை மணக்க திட்டம் தீட்டினான்.
என்ன தான் பரினிதாவின் பாட்டி மறைமுகமாக தனக்கு பரினிதாவை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாலும், பரினிதா சரி என்றால் தான் தனக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள். அதனால் தான் பரினிதாவிடம் முதலிலேயே இப்படி பேசி அவளை தன் வழிக்கு கொண்டு வந்தான்.
பரினிதாவை திருமணம் செய்து கொண்டு பின் தன் காதலை அவளுக்கு புரிய வைத்து விடலாம் என்று எண்ணியே இந்த திட்டதை வகுத்தான்.அவளும் ஆஷிக்கின் திட்டத்துக்கு சரி என்று தன் தலையை ஆட்டி வைத்தாள்.
சித்தார்த் சிறிது தள்ளி ஆஷிக், பரினிதாவின், பேச்சி காதில் விழாத . அளவுக்கு நின்று இவர்களின் பேச்சை ஒரு ஊமை நாடகம் போல் பார்த்துக் கொண்டு இருந்தவன் பரினிதாவின் தலையாட்டாளை பார்த்து அட பாவி இன்னும் அவள் கழுத்தில் தாலியே கட்டவில்லை அதற்க்குள் இவன் பேச்சிக்கு தலையாட்ட வைத்து விட்டானே….என்று நினைத்தவன் இவனே...இப்படி என்றால் இவன் சகோதரி என்று எண்ணமிடும் போதே….
“அதோ கதி தான்.” என்று ஆஷிக் சித்தார்த்திடம் சொன்னான்.
“இப்போ எதற்க்கு அப்படி சொன்னே…”
“நீ எதை நினைத்தாயோ….அதற்க்கு தான் சொன்னேன்.” என்று சொன்னவன்.
“சரி சீக்கிரம் போகலாம் வா….எனக்கு இனி தான் நிறைய வேலை இருக்கிறது.” என்று சொல்லி விட்டு தான் அனுப்பிய ஆள் கொண்டு வந்து கொடுத்த ஐஸ்கீரிமை பரினிதாவிடம் கொடுத்து “டையடாக இருக்கிறாய் பார்.இதை சாப்பிட்டு விட்டு வா போகலாம்.” என்று சொன்னவனை மகிழ்ச்சியுடன் பார்த்த பரினிதா அதனை வாங்கி ஆசையுடம் சாப்பிட ஆராம்பித்தாள்.
அதனை காதல் பொங்க பார்த்திருந்த ஆஷிக்கிடம் “ ஐஸ்கீரிம் வாங்க எப்போது ஆளை அனுப்பினாய்.” என்றதற்க்கு…
“என் பேபிம்மா…நானும், ஆஷிக்கும் கல்யாணம் செய்துக் கொள்ள போகிறேன் என்று அந்த பொறுக்கியிடம் சொன்னதை கேட்டதுமே நான் ஆளை அனுப்பி விட்டேன். ஏன் என்றால் நல்ல விஷயத்தை இனிப்போடு தான் கொண்டாட வேண்டும். அதனால் தான் ஐஸ்கீரிம் வாங்கி வர சொன்னேன். ஐஸ்கீரிம் இனிப்போடு என் பேபிம்மாவுக்கும் பிடித்தது பாரு அதனால் தான் அதையே.. வாங்க வரச் சொன்னேன்.”
என்பவனை பார்த்து “உன்னிடம் நான் கத்துக் கொள்ளவது நிறைய இருக்கிறது.”
“இனி நம் உறவு நீண்டு இருக்கிறதே….பொறுமையாக நான் உனக்கு சொல்லி தருகிறேன். இப்போது இன்று மாலை நடக்கும் விசேஷத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.” என்று சொல்லி விட்டு பரினிதாவிடம்.
“சாப்பிட்டு விட்டாயா...பேபிம்மா வா போகலாம்.” என்றவன் அருகில் சென்று சரி என்று தலையாட்டியவளை பார்த்த சித்தார்த் இனி நாம் பரினிதாவை பற்றி கவலை பட தேவை இல்லை.ஆஷிக் பார்த்துக் கொள்வான் என்ற மனநிறைவுடன் அந்த இடத்தை விட்டு ஆஷிக் பரினிதாவுடன் அகன்றான்.