Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

உன்னோடு யென் இதயம்...5

  • Thread Author
சித்தார்த் தன் உதவியாளனை போனின் மூலம் அழைத்து “என்ன பிராபகர் எல்லா ஏற்பாடும் செய்து விட்டாயா...?” என்று கேட்டதற்க்கு அந்த பக்கத்தில் இருந்த பிரபாகர் .

“எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன் சார். நான் உங்கள் பங்களாவின் வெளியில் தான் வண்டியோடு இருக்கிறேன் சார்.” என்றதற்க்கு .

“சரி நான் இப்போது வருகிறேன்.” என்று கூறி தன் தங்கையை பார்த்தான்.

அன்றும் பரினிதா ரோஸ் நிற புள்ஸ்கட்டிலும் கருப்பு நிறத்தில் டாப்பும் அணிந்துக் கொண்டு புன்னகையுடம் தன் அண்ணன் எதிரில் தன் ஸ்கட்டை இரு பக்கமும் பிடித்துக் கொண்டு விரித்து ஒரு சுற்று சுத்தி காண்பித்து.

“எப்படி இருக்கிறது அண்ணா.” அவளுக்கு அந்த ட்ரஸ் பார்ப்பதற்க்கு அழககா இருந்தாலும் பார்க்க சின்ன பெண் போல் தோன்றுவதால்.

“ குட்டிம்மா நீ ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வரலாம் இல்லையா …” என்றதற்க்கு உடனே பரினிதாவின் முகம் வாட்டத்திற்க்கு சென்றது.

“ஏன் அண்ணா இது எனக்கு நல்ல இல்லையா…?” என்ற தங்கையின் வருத்தமான கேள்விக்கு உடனே.

“சேச்சே உனக்கு இந்த ட்ரஸ் நல்லா இருக்குடா. என்ன ஒன்னு கொஞ்சம் வயது கம்மியா தெறிகிறது. அதனால் தான் உன்னை ஜீன் போட சொன்னேன்.” என்ற சித்தார்த்தின் வார்த்தையில் சிரித்துக் கொண்டே பரினிதா

“ அண்ணா நீங்கள் மட்டும் என்னவாம். இப்போ உங்களை பார்த்தால் எந்த காலேஜ் படிக்கிறீங்கன்னு தான் கேட்பாங்க . கலெக்டர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க.”

ஆம் பரினிதா சொல்வது சரியே சித்தார்த் எப்போது தோன்றுவதை விட இன்று இன்னும் இளமையுடன் காணப்பட்டான். அதற்க்கு காரணம் அவன் தன் வேலையின் பொருட்டு எப்போதும் கோட் சூட்டில் தான் இருப்பான்.

இன்று தன் தங்கையுடன் செல்வதால் ஜீனும் டீசர்ட்டும் போட்டிருந்தான். இந்த உடை அவனை இன்னும் இளமையுடன் காட்டியது. தன் தங்கையின் பேச்சிக்கு புன்னகைத்துக் கொண்டே

“உன்னுடன் வருவதால் தான் நான் இந்த ட்ரஸையே போட்டேன்.இல்லை என்றால் உன்னை என் பெண்ணா என்று கேட்டு விடுவார்களே…”

சித்தார்த்தின் பேச்சிக்கு “ அண்ணா “ என்று சிணுன்கிக் கொண்டே தன் அண்ணனின் கைய் பற்றி தன் பங்களாவின் வாசலில் காத்துக் கொண்டிருந்த அந்த ஏஸி பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

சித்தார்தோ ஏறாமல் தன் பி.ஏ விடம் “பிராபகர் நீ வரவேண்டாம்.இது ஆபிஸ் விஷயம் கிடையாது.இது என் சொந்த விஷயம் .அதனால் நீ வரவேண்டாம் பிரபாகர்.” என்ற சித்தார்த்தின் வார்த்தையை கேட்காமல் சித்தார்த்தின் மேல் உள்ள அக்கரையால் பிரபாகரும் சித்தார்த்துடன் உடன் சென்றார்.

சித்தார்த்தின் பங்களாவில் இருந்து கிளம்பிய பஸ் ஆசிரமத்துக்கு சென்று அங்கு ஆஸ்ரமத்து குழந்தகளை ஏற்றிக் கொண்டது.ஆஸ்ரமத்து நிர்வாகியும் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு தன் ஆஸ்ரமத்தில் இருந்து இரண்டு பெண்களைகளையும், இரண்டு ஆண்களையும் அனுப்பி வைத்தார்.

ஆஸ்ரமத்தில் இருந்து பஸ் புறப்பட்டதும் பரினிதா அந்த குழந்தைகளுடன் பிஸியாகி விட,சித்தார்த்தோ அதனை புன்னகையுடன் பார்த்திருந்தான். பின் சித்தார்த்தின் பி.ஏ பிரபாகரின் குரலில் தன் தங்கையிடம் இருந்து பார்வையை திருப்பி “என்ன சொன்னீங்க பிராபகர்.”

“இல்லே சார் நாம் இப்போ போகும் சொர்க்கபூமியின் ஒனர் உங்களை பார்க்கனும் என்று அவரின் மனேஜர் அப்பாயின்மண்ட் கேட்டு இருக்கிறார். காரணம் கேட்டதுக்கு பர்சனர் என்று சொன்னார்.அதனால் தான் நான் உடனே கொடுக்காமல் உங்களிடம் கேட்டு கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன் சார்.”

“அவரின் பெயர் என்ன...?”

“ஆஷிக் சார்.”

அந்த பெயரை கேட்டதும் ஒரு நிமிடம் அவராக இருக்குமோ என்று யோசித்தான். பின் இருக்காது.இவர் சொல்லும் ஆஷிக் பணக்காரன். ஆனால் என் வேண்டாம் மனமே வேண்டாம் இது தவறு.அவளுக்கு கண்டிப்பாக திருமணம் நடந்து இருக்கும் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகள் கூட இருக்கலாம். இப்போது அவளை மனதால் நினைப்பது கூட பாவம்.என்று தன் அறிவு எடுத்துரைத்தாலும் மனது கேட்காமல் திரும்ப திரும்ப கடைசியாக அவன் பார்த்த அவள் கலங்கிய முகமே கண் முன் வந்த அவனை இம்சித்தது.

தான் சொன்னதுக்கு சித்தார்த்திடம் பதில் இல்லாமல் போக “சார்” என்று திரும்ப அழைத்தார்.

அவர் குரலுக்கு சித்தார்த் பதில் அளிக்கும் முன் “ என்ன அங்கிள் இங்க வந்தும் ஆபிஸ் பேச்சி தானா…? இன்று ஒரு நாள் அதனை எல்லாம் மூட்டை கட்டி போடுங்க.” என்ற பரினிதாவின் வார்த்தைக்கு கட்டு பட்டு தன் வாயைய் மூடிக் கொண்டார்.

ஏன் என்றால் பிரபாகர் இந்த மூன்று மாதமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.சித்தார்த் தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை. அவரே தன் தங்கை சொல்லுக்கு கட்டு படும் போது நாம் அவர் கீழ் வேலை பார்ப்பவன் நாமும் கொஞ்சம் அடங்கி தான் ஆக வேண்டும் என்று முடிவுடன் அதற்க்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

இதனை பார்த்த பரினிதா “அங்கிள் நான் உங்களை ஆபிஸ் விஷயம் தான் பேச வேண்டாம் என்று சொன்னேன். பேசவே வேண்டாம் என்று சொல்ல வில்லை.இப்படி நீங்கள் பேசாமல் வந்தால் எங்களுக்கு போர் அடிக்கும் தானே…” என்ற பரினிதாவின் பேச்சில் பிரபாகர் பாவமாக சித்தார்த்தை பார்த்தார்.

அதனை பார்த்த சித்தார்த் “குட்டிம்மா பாவம் அவரை விட்டு விடு. உன் விளையாட்டுக்கு தான் நான் இருக்கிறேன் இல்லையா…? அவர் என் பாதுகாப்புக்கு வந்து இருக்கிறார் .” என்று கூறி சித்தார்த் பிரபாகரை காப்பாற்றுவதாக நினைத்து அப்படி கூறினார்.

ஆனால் பரினிதாவோ “உங்கள் பாதுகாப்புக்கா.இவர் எப்படி உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். ஏதாவது ஆபத்து வந்தால் எப்படி உங்களை காப்பாற்றுவார்.இவர் நடப்பதற்க்கே கஷ்டபடுகிறார் அப்படி இருக்கும் போது” என்பதற்க்கு மேல் பேச விடமால் தடுத்த சித்தார்த்.

“குட்டிம்மா பெரியவங்களை அப்படி சொல்லக் கூடாதுடா” என்ற அண்ணனின் வார்த்தைக்கு கட்டு பட்டு அதற்க்கு மேல் அவரை பற்றி எதுவும் பேசாமல் அக்குழந்தைகளுடன் குழந்தையாக ஐய்கியமானள்.

சித்தார்த் தன் பி.ஏ விடம் “சாரி சார் .” என்றதற்கு .

“பரவாயில்லை சார்.”

என்று வெளியில் சொன்னாலும் உள்ளுக்குள் நாம் வந்தது தவறோ இன்னும் போவதற்க்குள் இந்த பெண்ணிடம் எவ்வளவு பல்பு வாங்க போகிறோம் என்று தெரியவில்லையே என்று மனதுக்குள் நொந்து போனார்.

ஒரு மணி நேரத்தில் அவர்களின் பஸ் சொர்க்கபூமி வாசலில் நின்றது.சித்தார்தே ஒரு நிமிடம் அசந்து தான் போனான் அதனின் அழகை பார்த்து.சித்தார்த மனதுக்குள் இதனை கட்டியவன் பணம் படைத்தவன் மட்டும் இல்லை நல்ல ரசனை உள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சித்தார்த்தின் பி.ஏ பஸ் நின்றதும் ஒடி சென்று யாரிடமோ ஏதே பேசி விட்டு இவரிடம் ஒடி வந்து “வாங்க சார் நம்மை அந்த வழியாக போக சொன்னார்கள்.” என்றதற்க்கு.

பரினிதா “ஏன் நாம் வேறு வழியில் போக வேண்டும். அண்ணா நாம் எல்லோருடன் போனால் தான் நல்ல இருக்கும் அண்ணா.” என்றதற்க்கு சித்தார்த் எந்த மறுப்பும் சொல்லாமல் தன் பி. ஏ விடம்.

“பிரபாகர் நாம் மத்தவங்களோடையே போகலாம். எனக்கும் அது தான் பிடித்து இருக்கிறது.” என்றதற்க்கு.

“சார் உங்களின் பாதுகாப்பு.”

“அதற்க்கு அவசியம் இல்லை பிரபாகர். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போவது என்றாலும் போங்கள்.” என்றதற்க்கு.

“இல்லை சார் நான் உங்களுடனே இருக்கிறேன்.” என்று கூறி பிராபகர் சித்தார்த் உடன் சென்றார்,

சித்தார்த் தன் பி.ஏ விடம் சொல்லி சொர்க்கபூமி செல்வதற்க்கு ஏற்பாடு செய்திருந்ததான். அவன் பி.ஏ. வும் சித்தார்த்தின் பெயர் சொல்லாமல் ஆஸ்ரமத்து குழந்தைகளுடன் ஒரு வி.ஐ.பி என்று தான் சொல்லி இருந்தாரே தவிர. அந்த வி.ஐ.பி. கலெக்டர் என்று குறிப்பிடவில்லை.

ஏன் என்றால் பிரபாகர் இந்த சொர்க்கபூமி செல்வதற்க்கு ஏற்பாடு செய்யும் முதல் நாள் தான் ஆஷிக்கின் மனேஜர் சித்தார்த்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.ஆஷிக் பற்றி சித்தார்த்துக்கு தெரியவில்லை என்றாலும் பிரபாகருக்கு நன்கு தெரியும்.

சித்தார்த் தான் சென்னையில் பொறுப்பு ஏற்று மூன்று மாதமாகிறது. ஆனால் பிரபாகர் அந்த கலெக்டர் ஆபிஸில் பன்னிரண்டு வருடமாக இருப்பதால் ஆஷிக் பற்றியும் அவனின் அரசியல் பின் பலத்தையும் நன்கு தெரியும் என்ற காரணத்தால் தான் சித்தார்த்தின் பெயரை சொல்லாமல் ஒரு வி.ஐ.பி என்று சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்.

முதலில் பிரபாகர் சித்தார்த் சொர்க்கபூமி செல்வதை தடுக்க தான் எண்ணினார். உடனே இந்த ஏற்பாடு செய்வதே அவர் தங்கைக்காக அதனால் நாம் சொன்னாலும் அவர் கேட்க மாட்டார் என்று கருதியே அவரிடம் ஆஷிக் பற்றி ஒன்றும் சொல்லாமல் சித்தார்த்தின் உடன் செல்ல முடிவு செய்தார்.

அவருக்கு இந்த மூன்று மாதங்களில் சித்தார்த் மேல் ஒரு மதிப்பே ஏற்பட்டு இருந்தது. அவரும் எத்தனையோ கலெக்டரிடம் பி.ஏ. வாக வேலை பார்த்திருக்கிறார். ஆனால் சித்தார்த் மாதிரி நேர்மையான கலெக்டரிடம் வேலை பார்ப்பது இதுவே முதல் முறை.அதனால் சித்தார்தை இந்த சொர்க்கபூமியை விட்டு செல்லும் வரை அவருடனே இருக்க கருதி தான் சித்தார்த் தடுத்தும் அவருடன் வந்தார்.

சித்தார்த்திடம் பஸ்சில் வரும் போது ஆஷிக் பற்றி பேசியது கூட ஆஷிக்கின் மனேஜர் பர்சனல் என்று சொன்னதால் ஒரு சமயம் சித்தார்துக்கு தெரியுமோ என்ற காரணத்துக்காக தான் கேட்டார்.

ஆனால் சித்தார்த் தெரியாது என்று சொன்னதும் இது வேறு விஷயம் என்று முடிவு செய்து இந்த இடத்தை விட்டு போகும் வரை சித்தார்த்தை விட்டு எங்கும் போக கூடாது என்று முடிவுக்கு வந்தார்.

இங்கு ஆஷிக்குக்கோ சித்தார்த் தனக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் தன் மேனஜரிடம் சித்தார்தை பற்றி திட்டிக் கொண்டு இருந்தார்.அப்போது சொர்க்கபூமியின் நிர்வாகியிடம் இருந்து ஆஷிக்கின் மனேஜர் ஸ்ரீதருக்கு போன் வந்தது போன் பேசி முடித்த ஸ்ரீதர் ஆஷிக்கிடம்.

“சார் நம் சொர்க்க பூமிக்கு அந்த கலெக்டர் தன் தங்கை மற்றும் ஆஸ்ரமத்து குழந்தைகளுடன் வந்திருக்கிறார்.” என்று சொன்னதும் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கார் பார்க்கிங் நோக்கி நடந்துக் கொண்டே

“ இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை. ஆஸ்ரமத்து குழந்தைகளுடன் வருவதால் கண்டிப்பாக அந்த கலெக்டர் முன்னாடியே ஏற்பாடு செய்து விட்டு தானே வந்து இருப்பார்.” என்று கேட்டதற்க்கு.

“சார் அவர் தன் பி.ஏ மூலம் ஏற்பாடு செய்து இருக்கிறார்.அதுவும் கலெக்டர் பெயர் சொல்லாமல் பொதுவாக வி.ஐ. பி என்று கூறி ஏற்பாடு செய்திருக்கிறார் சார்.” என்ற அவர் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தன் காரில் அமர்ந்து சொர்க்க பூமியை நோக்கி பறந்தான்.

ஸ்ரீதர் சொர்க்க பூமி நிர்வாகிடம் இப்போது நம் முதலாளி அங்கு வருகிறார் என்று தெரிவித்து விட்டு அந்த கலெக்டரின் மேல் ஒரு கண் வைக்கு மாறு கூறினான்.

சொர்க்க பூமி வாசலிலேயே அத நிர்வாகி ஆஷிக்காக காத்திருந்தார்.அங்கு சென்ற ஆஷிக் அந்த நிர்வாகியிடம் “கலெக்டர் எங்கு இருக்கிறார்.” என்று கேட்டதற்க்கு

“சார் அவர் குழந்தைகள் விளையாடும் பகுதியில் இருக்கிறார். அவர் காலையில் இருந்து அந்த பகுதியை விட்டு எங்கும் போக வில்லை சார்.” என்ற அவர் பேச்சில் ஏன் என்று கேட்கும் விதமாக தன் புருவத்தை உயர்த்தியதற்க்கு.

“சார் அவர் தன் தங்கை மற்றும் ஆஸ்ரமத்து குழந்தைகளை அழைத்து வந்திருப்பதால் அங்கயே இருக்கிறார் சார்.நானும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து விட்டேன். நீங்கள் மத்த இடத்தை பாருங்கள் என்று சொன்னதுக்கு அவர் வேண்டாம் நான் இங்கயே இருக்கிறேன் என்று கூறிவிட்டார்.” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே அந்த நிர்வாகியை நோக்கி அந்த சொர்க்க பூமியின் ஊழியன் ஒருவன் வந்த அந்த நிர்வாகியின் காதில் ஏதோ சொன்னார்.

அந்த நிர்வாகியோ ஆஷிக்கை பார்த்து தர்ம சங்கடத்துடன் நெளிந்துக் கொண்டே “சார் என் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் சார்.” என்று சொன்னதும்.

“சரி அவர்களை கவனித்து விட்டு நீ குழந்தைகளின் பிரிவுக்கு வா.” என்று சொல்லிக் கொண்டே ஆஷிக் குழந்தைகளின் பகுதிக்கு சென்றான்.

அங்கு குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த பரினிதாவின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே தன் பி.ஏ விடம் பேசிக் கொண்டிருந்தான் சித்தார்த்.

அப்போது பரினிதா தன் பின் துரத்திக் கொண்டு வந்த சிறுமியின் கையில் அகப்படாமல் இருக்க அவளை பார்த்துக் கொண்டே ஒடி வந்ததால் தன் வேக நடையுடன் வந்த ஆஷிக்கின் மேல் மோதிக் கொண்டாள்.

ஆஷிக்கோ என்ன நடந்தது என்ற யோசிக்கும் திறன் அற்று சிலையாக நின்றான். ஆஷிக் சித்தார்த்தை பார்க்கும் நோக்கத்தில் விரைந்து வந்ததால் தன் எதிரில் ஒடி வந்த பரினிதாவை கவனிக்கவில்லை.

அதனால் பரினிதாவின் முகத்தை அவன் பார்க்கவில்லை.ஆனால் பரினிதாவின் பூ உடல் தன் மேல் மோதியதும் அவன் இதுவரை உணராத புது அனுபவத்தை பெற்றான். அனைவருக்கும் குழந்தையாக தெரிந்தவள் அவனுக்கு மட்டும் அவன் ஒரு முழுமையான ஆண் மகன் என்பதை உணர வைத்தாள். தான் வந்த நோக்கமான சித்தார்த்தை மறந்து அவள் முகம் பார்க்க தன் மார்பில் இருந்து அவள் முகத்தை பிரித்து எடுத்தான்.

ஆம் அவள் போனிடேரியல் அவனின் கோட் பட்டனில் மாட்டி விட்டதால் அதனை பரினிதா மிக மூம்முரமாக எடுக்கும் வேலையில் இருந்ததால் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க வில்லை.ஆஷிக்குக்கோ அவள் முகத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்பதால் தன் கோட் பட்டனிலிருந்து அவள் முடியை சட்டென்று இழுத்து விட்டான்.

அவன் இழுத்து விட்டதில் பரினிதாவுக்கு வலி ஏற்பட்டு விட தலை நிமிர்ந்து அவனை பார்த்து “என்ன அங்கிள் இப்படி இழுத்து விட்டுட்டிங்க நான் எடுத்துட்டு தானே இருந்தேன்.” என்ற அவள் பேச்சில் மீண்டும் சிலை நிலைக்கு சென்றான்.

சிறிது நேரம் பிராபகரின் பேச்சில் பரினிதாவை கவனிக்க தவறிய சித்தார்த் அவளை பார்க்கும் போது அவள் ஒரு ஆணோடு பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து அவளை நோக்கி சென்றான்.

பிரபாகர் எங்கு இவர் செல்கிறார் என்று பார்க்கும் போது அங்கு ஆஷிக்கும், பரினிதாவையும் நோக்கி தான் செல்கிறார் என்பதனை யூகித்து பார்த்து பிரபாகரும் சித்தார்த் பின் சென்றார்.

இங்கோ பரினிதாவின் அங்கிள் என்ற அழைப்பில் சிலையாக நின்ற ஆஷிக் சற்று நிதானித்து அவளை சற்று ஆராய்ந்து பார்த்தான். பார்த்ததும் அவனுக்குள் கொஞ்சம் ஏமாற்றம் பரவியது.அந்த ஏமாற்றம் அவள் அழகு குறித்து இல்லை. அவள் வயதை குறித்து தான்.

அவள் முகத்தை பார்க்கும் போது அவன் கண்ணுக்கும் அவள் வயது பதினேழு இல்லை பதினெட்டு இருக்கும் என்று தான் கருத தோன்றியது. இருந்தும் அவளிடம் பேச விரும்பி அவன் வாய் திறப்பதற்க்கும்.

“குட்டிம்மா என்னடா செல்லம்” என்று கேட்டுக் கொண்டே அவள் தோள் மீது கைய் வைத்து பேசிய ஆடவனை பார்த்து அவனுக்கு கொலை வெறியே வந்தது.பின் அவன் முகம் எங்கயோ பார்த்திருப்பது போல் இருக்கிறதே என்று ஆஷிக் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த பிரபாகரை பார்த்து ஆஷிக் சித்தார்த்தை அடையாளம் கண்டு கொண்டான்.

ஆஷிக் கலெக்டர் ஆபிஸ் செல்லும் போது பிரபாகரை பார்த்து இருக்கிறான். அதனால் சித்தார்த்தை தாம் போட்டோவில் பார்த்தது நினைவுக்கு வந்தது.கூடவே சித்தார்தின் தங்கை பரினிதா காலேஜ் மூன்றாமாண்டில் இருப்பதும் தான். அதற்க்குள் பிரபாகர் சித்தார்த்தின் காதில் ஆஷிக் பற்றி சொன்னதும்.

சித்தார்த் ஆஷிக்கை பார்த்து பேசும் முன் ஆஷிக் சித்தார்த்தின் கைய் பற்றி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அது என்னவோ ஆஷிக்கின் மனதில் முன் சித்தார்த் பற்றி தான் போட்ட திட்டத்தை இப்போது செயல் படுத்துவதற்க்கு அவன் மனது இடம் கொடுக்கவில்லை.

சித்தார்த்தும் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு தன் தங்கையையும் அறிமுகப்படுத்தினான். அதற்க்கு ஆஷிக் கைய் கொடுக்கும் முன் பரினிதா அவன் முன் தன் கைய் நீட்டியிருந்தாள்.

ஒரு புன்னகையுடன் அவள் கைய் பற்றி விடுவித்த ஆஷிக் தன் கவனத்தை சித்தார்த்திடம் திருப்பினான்.

“நீங்கள் முன் பதிவு செய்யும் போது உங்கள் பெயரை சொல்லியிருந்தால் நான் பணம் வாங்கியிருக்க மாட்டேன் .” என்ற பேச்சிக்கு சித்தார்த் பதில் அளிக்கும் முன் பரினிதா.

“அப்போ என் ப்ரண்ட்ஸ் இங்க வரும் போது என் அண்ணன் பெயர் சொன்னா நீங்க காசு வாங்க மாட்டிங்களா…?” என்ற கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று முழித்திருந்தான்.

உடனே சித்தார்த் “ குட்டிம்மா உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். என் பெயரை எதற்க்கும் யூஸ் பண்ணக் கூடாது என்று.”

‘நான் எங்க அண்ணா யூஸ் பண்ணேன்.இந்த அங்கிள் தான் சொன்னார்.அதனால் தான் நான் அப்படி கேட்டன்.” என்ற அவள் பேச்சைக் கேட்ட ஆஷிக் அவளின் அங்கிள் என்ற வார்த்தை மனவருத்தத்தை கொடுத்தது.

ஆஷிக் எப்போதும் தன் உருவத்தை பற்றி கவலை பட்டது கிடையாது.அவனுக்கே தெரியும் தன்னை பார்ப்பதற்க்கு தன் வயதோடு இரண்டு மூன்று வயது கூடுதலாக தான் தெரிகிறது என்று. ஆனால் அதுவும் தனக்கு நல்லதுக்கு தான் என்று கருதிக் கொள்வான்.

என்ன தான் அவன் திறமையனவானக இருந்தாலும் இந்த தொழிலுக்கு வந்த புதிதில் சின்ன பைய்யன் எப்படி செய்வானோ என்று யோசித்தனர். பின் இவன் அவர்களிடம் சென்று தன் பிளானை விளக்கிய பிறகு தான் இவன் திறமையை பார்த்து இவனின் கட்டும் பிளாட்டை வாங்கினர்.

இவன் தொழில் தொடங்கிய மூன்று ஆண்டு தான் அப்படி விளக்க வேண்டி வந்தது.பின் இவன் பேசமால் இவன் கட்டிய பிள்டிங் பேசியது. பின் இவன் தோற்றத்திலும் முதிர்ச்சி வந்ததும். அவன் அதற்க்கு கவலை படாமல் தன் தொழிலுக்கு நல்லது தான் என்று கருதி விட்டு விட்டான்.

ஆனால் இப்போது முதன் முதலாக தன் வயது கூடுதலாக தெறிவதை நினைத்து வருந்தினான்.பிரபாகருக்கு ஆஷிக் வயது தெரியும் என்ற காரணத்தால் பரினிதா அங்கிள் என்ற அழைப்பில் சங்கடப்பட்டு பரினிதாவிடம் பேச தொடங்கும் முன் சித்தார்த் பரினிதாவிடம்

“உனக்கு அவரை பார்த்தா அங்கிள் மாதிரியா தெரிகிறது. உனக்கு உன் வயதோடு இரண்டு வயது கம்மியாக தெரிகிறது என்ற காரணத்தால் மத்தவங்களை அங்கிளா ஆக்கிடுவாயா…?” என்று கேட்டான்.

சித்தார்த் பார்த்துக் கொண்டு தானே இருந்தான் பரினிதாவின் அங்கிள் என்ற அழைப்பில் ஆஷிக்கின் முகம் போன போக்கை. என்ன தான் தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் ஒரு இளம் பெண் அங்கிள் என்ற அழைப்பை எந்த ஆண் மகனும் விரும்ப மாட்டான் என்று ஒரு ஆணாக தெரிந்ததால் சித்தார்த் ஆஷிக்காக பேசினான்.

உடனே பரினிதா ஆஷிக்கிடம் அது தான் முக்கியமானது போல “அப்போ உங்க வயது என்ன…?” என்று கேள்வி எழுப்பினான்.

ஆஷிக் இது வரை தேவையில்லாத கேள்விக்கு எல்லாம் பதில் அளித்தது கிடையாது இருந்தும் பரினிதாவின் கேள்விக்கு தன் பிறந்த ஆண்டோடு தேதி மாதம் வரை கூறினான்.

ஆஷிக் பற்றி சித்தார்த்துக்கு வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் பிரபாகருக்கு ஆஷிக்கின் குணநலன் தெரியும் என்ற காரணத்தால் அவனை சந்தேகத்தோடு பார்த்தார். ஆஷிக் தேவையில்லாமல் ஒரு நிமிடம் கூட இவர் செலவு செய்ய மாட்டாரே…இப்போது ஏன் இவர் இங்கு இவ்வளவு நேரம் பொறுமையுடன் இருந்து பேசுகிறார்.

சித்தார்த்திடம் காரியம் ஆக வேண்டும் என்றால் அவரிடன் தானே அவன் மொத்த கவனமும் இருக்கும் பின் ஏன் இந்த சிறு பெண்ணின் கேள்விக்கு மூஞ்சு சுலிக்காமல் பதில் அளிக்கிறார். அதுவும் வயது மட்டும் கூறாமல் அவர் பிறந்த தேதி மாதம் வரை குறிப்பிட்டது அவரை யோசிக்க வைத்தது.

பிரபாகர் தன்னை சந்தேகத்தோடு பார்ப்பதை பார்த்த ஆஷிக் என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டார். ஒன்றும் இல்லை என்று வெளியில் தலையாட்டிய பிரபாகர் நம்மிடம் ஒரு கேள்விக்கு வாயல் கேட்கமாட்டார். ஆனால் ஒரு வயது பெண் கேட்டால் மட்டும் தன்னுடைய ஜாதகத்தையே கொடுத்துடுவாரே என்று அவர் எண்ணம் ஒடும் போதே ஒரு சமயம் அப்படி இருக்குமோ என்று ஆஷிக்கை பார்த்தார்.

அப்போது ஆஷிக் தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்த பரினிதாவையே பார்த்திருந்தான்.அதனை பார்த்த பிரபாகருக்கு ஒரு பயமே மனதில் வந்தது.
 
Top