Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

திரில்லர், டிராமா, லவ் - ஹாலிவுட்!

Active member
Staff member
Joined
Apr 22, 2024
Messages
115
திரில்லர், டிராமா, லவ்!

வணக்கம் மக்களே! இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான மோகம் கொண்ட விஷயங்கள் இரண்டு, ஒன்று சாப்பாடு, மற்றொன்று சினிமா!

தியேட்டர் சென்று பார்ப்பது ஒரு வித உணர்வு என்றால், வீட்டில் அமர்ந்து பார்க்கும் இந்த ஓ.டி.டி தளங்கள்(பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்) வேறொரு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

நானும் சாதாரண சென்னை பெண்ணாக வேலை செல்லும் வரை பார்த்தது தமிழ் படங்கள் மட்டுமே. வேலைக்காக வெளிநாடு சென்ற போது இருந்த வெட்டியான பொழுதுகளை, பல்வேறு வகையான படம் பார்த்து பொழுதுபோக்கினேன்.

கூட இருப்பவர்களை ‘இந்த வாரம் என்ன படம் பார்க்கட்டும்’னு டார்ச்சர் பண்ணி பார்த்த படங்கள் நிறைய… அதன்பின், ஓ.டி.டி தளங்கள் வந்ததும் மீண்டும் மீண்டும் சில படங்களை பார்த்தேன்.
அப்படி நான் பார்த்து பல முறை ரசிச்ச ஆங்கில படங்கள பத்தி தான் இங்க சொல்ல வந்துருக்கேன்.

தி பிரெஸ்டிஜ்(The Prestige) – நான் வெளிநாடு போயிட்டு பார்த்த முதல் படம். Chistopher Nolan – இந்த இயக்குனரை பத்தி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும், அவரோட படம் எதுவும் பார்த்ததில்ல, இது தான் பிர்ஸ்ட். 19 நூற்றாண்டுல ரெண்டு மேஜிக் கலைஞர்களுக்குள்ள நடக்கும் போட்டி, பொறாமை, ஈகோ அதால அவங்க சந்திக்குற விளைவுகள் தான் படத்தின் அடித்தளம். 2006 ல வந்தது இந்த படம். ரொம்பவே இம்பிரேஸ் பண்ணுச்சு. அடுத்து என்ன அடுத்து என்ன என போகும் இக்கதை! எப்போவும் நோலான் படம் புரியாதுனு பரவலா ஒரு பேச்சு உண்டு. பட், இந்த படம் அப்படியில்ல, நல்லாவெ புரியும். இதே தலைப்பை கொண்டு வந்த நாவலை பேஸ் பண்ணி எடுத்த படம் இது. Worth your time!


இன்செப்ஷன்( Inception) – மேல சொன்ன படத்த பார்த்துட்டு, நான் பார்த்த அடுத்த Chistopher Nolan படம் இது தான். படம் ஆரம்பத்துல ஒண்ணுமே புரியாம, படம் முடிஞ்சதும் அதே பீல் குடுக்குற கதை! Fantasy வகை படம் இது. பக்கா திரில்லர்! ஹீரோ Titanic பட ஹீரோ தான் – Leonardo Di Caprio. படத்தோட ஒன் லைன் எல்லாம் சொன்னா சத்தியமா புரியாது. டைரக்ட்டா படம் பாருங்க. நான் படம் பத்தி நிறைய படிச்சு தான் புரிஞ்சிக்கிட்டேன் கதைய.


ஷாஷேங்க் ரிடேம்ப்ஷன் (Shawshank Redemption) – IMDB : இது ஒரு பேமஸ் மூவிஸ் வலைத்தளம். இதுவர வந்த எல்லா படங்களையும் சேர்த்து இந்த படம் தான் பெஸ்ட் ரேடிங் இன்னிக்கு வரைக்கும்! அப்படி இந்த படத்துல என்ன தான் இருக்குன்னு பார்த்து அதிசயப்பட்ட படம்! தன் மனைவியையும், அவள் காதலனையும் கொன்றதா சொல்லி ஒரு ஹீரோ ஆன்டி(அவர் இல்லைன்னு மறுத்தும்) ஷாஷேன்க் சிறையில் அடைக்கப்படுறார். இன்னொரு ஹீரோ ரெட், அந்த சிறையில் பத்து வருஷமா பரோல் கிடைக்காம கொடுமையான சிறை தண்டனை அனுபவிக்கிறார். இவங்க நட்பு, ஆன்டி உண்மையிலேயே கொலை பண்ணாரா? இதான் கதை. அவங்க சிறை வாழ்க்கை தான் படம் முழுக்க. ஆரம்பத்துல ஸ்லோவா போனாலும், சில பல திருப்பங்களுக்கு அப்புறம் படம் ரொம்ப சூப்பரா இருக்கும். படத்தோட இறுதி கட்டங்கள் எல்லாம் யாருமே எதிர்பார்க்காத விஷயம் எல்லாம் நடக்கும்.

படம் சொல்ல வருவது ஒரே கருத்து தான் – நம்பிக்கை, அதானே எல்லாம்!! ரொம்ப துவண்டு போன மாதிரி இருக்குறப்பொ இந்த படம் பார்த்தா கண்டிப்பா புது எனர்ஜி வரும். இதுவரை பல முறை பார்த்தும் சலிக்காத படம்!



பிரைட் & பிரேஜுடைஸ் (Pride and Prejudice) – இதே பெயரோட வந்த நாவலை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்ல. நாம படிச்ச பல நாவல், பார்த்த படங்களுக்கு இதுவே முன்னோடி! பணக்கார ஹீரோ, ஏழை குடும்பத்து ஹீரோயின். ஹீரோ ரொம்ப அந்தஸ்து பேர்வழி, அதனால் கொஞ்சம் முசுடு, பயங்கர ஈகோ. ஹீரோயினும் சலைத்தவளில்ல, அவளும் கொஞ்சம் ஈகோ, நிறைய சுயமரியாதை பார்க்கற பெண். இவங்களுக்குள்ள வர மோதல் பின் காதல், அவங்களுக்குள்ள இருக்குற ஈகோ, அந்தஸத்து எல்லாம் தாண்டி எப்படி ஜெயிக்கிறது தான் கதை. Evergreen Classic movie!! நாவலை வைச்சு நிறைய படங்கள் வந்தாலும் நான் பார்த்து ரசிக்கறது 2005 வந்த படத்தை தான். அதில் ஹீரோயினா நடிச்ச Keira Knightley அவ்ளோ அழகு! அவங்களுக்காகவே படம் பார்ப்பேன்…


தி ஷட்டர் ஐலேண்ட் (The Shutter Island) – ஆபத்தான குற்றவாளிகள அடக்கி வைச்சுருக்குற சிறை தீவு தான் ஷட்டர் ஐலேன்ட். இந்த தீவுல ஒரு பெண் குற்றவாளி காணாம போக, அதை விசாரிக்க வராரு நம்ம ஹீரோ Leonardo Di Caprio மற்றும் அவர் போலீஸ் நண்பர். அந்த தீவுல நடக்குற விசித்திரமான சம்பவங்கள் பார்த்ததும் தான் தெரியுது, இவங்களும் அந்த தீவுல மாட்டிக்கிட்டாங்கனு. அதுக்கப்புறம் என்ன நடக்குது தான் கதை.

நல்ல டிவிஸ்ட்ன்னு சில படத்துல சொல்லுவோம். படங்கள்ல வந்ததுலயே மிகச்சிறந்த டிவிஸ்ட்ல இந்த படமும் இருக்கும், கண்டிப்பா!! படத்தோட கிளைமேக்ஸ் பார்த்ததும் படத்தை பார்த்தா வேற ஒரு கோணத்துல முழு கதையும் புரியும்… Awesome thriller!


பிஎஸ். ஐ லவ் யூ (PS. I Love you) – இப்படியும் ஒரு கதை எழுத முடியுமான்னு யோசிக்க வைச்ச படம். ஏன்னா இந்த படமும் ஒரு நாவலை வைச்சு எடுத்த கதை தான். லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஹீரோ, ஹீரோயின் சண்டை போட்டாலும், குழந்தை இல்லனாலும் சந்தோஷமா இருக்காங்க. எதிர்பாராத விதமா, ஹீரோ கேன்சர்ல இறந்து போக, ஹீரோயின் வீட்டை விட்டு, ஹீரோ நினைவுகளை விட்டு வெளிவர முடியாம இருந்த நேரத்துல, ஹீரோ இறக்குறதுக்கு முன்னாடி எழுதி வைச்ச கடிதங்கள் ஒன்னு ஒன்னா கைக்கு வருது. அந்த கடிதங்கள் மூலமாக எப்படி ஹீரோயினை திரும்ப அவரில்லாத வாழ்க்கைக்கு பழகுறாங்க என்பது தான் கதை. Heartfelt love story! இது வரைக்கும் நான் பார்த்துலேயே ஒரு நல்ல காதல் கதை இதுன்னு சொல்லுவேன். ரொம்ப எதார்த்தமா அதே நேரம் நமக்கும் மனசை பாதிக்குற கதை…


நோட்டிங் ஹில் (Notting Hill) – ஹாலிவுட்டில் புகழ் பெற்ற கதாநாயகி, ஒரு சாதாரண புக் கடை ஓனர். இவங்களுக்குள்ள வர லவ், மிஸ் அன்டர்ஸ்டாடிங், பிரிவு எல்லாம் தான் கதை. Julinana Roberts அசத்தி தள்ளிருப்பாங்க ஹீரோயின்னா! இவங்களுக்காவும், பட ஹீரோ Hugh Grantக்காவுமே இந்த படத்தை பார்க்கலாம். சூப்பர் ரோம் – காம் (ரோமாண்டிக் – காமெடி). சில படங்கள்ல பெரிய டிவிஸ்ட் எதுவும் இருக்காது, ஒரே மாதிரி கதை போனாலும், மனசை வருட மாதிரி இருக்கும். அப்படி ஒரு படம் தான் இது! நிறைய முறை பார்த்துக்கேன், இன்னமும் பார்ப்பேன்.

தி டேர்மினல் (The Terminal) – ஹீரோ டாம் ஹேக்ன்ஸ் படம் நிறைய பார்த்து, தீவிர விசிரியா நான் மாறினதும் பார்த்த இந்த படம் ரொம்பவே வித்தியாசமானது. சொந்த நாட்டுல போர் வெடித்ததுனால ஹீரோவோட பாஸ்போர்ட் நியூ யார்க் ஏர்போர்ட்ல செல்லாதது ஆக, அவரை நகரத்துக்குள்ள அனுமதிக்க முடியாம அங்கயே தங்க சொல்லுறாங்க ஏர்போர்ட் அதிகாரிகள். கிட்டத்தட்ட ஒரு வருஷம் மொழி தெரியாத ஏர்போர்ட்லயே இருக்குற ஹீரோ சந்திக்கிற சம்பவங்கள் தான் கதை. இதுவும் உண்மை சம்பவம் பார்த்து எடுத்த கதையே! செம்ம ஜாலியான படம், பார்த்ததும் கண்டிப்பா பிடிக்கும். ரொம்ப பிடிச்ச ஃபீல் குட் படம். சில சிரிப்புகளும், சில புன்னகைகளும், சில சோகங்களும் நமக்குள் கடக்குற கதை!


காட்ஃபாதர் 1 & 2 (Godfather 1 & 2) – நாயகன்லந்து நம்ம பார்த்துட்டு இருக்குற பார்க்கப் போற தாதாக்கள்/கேங்க்ஸ்டர்கள் படத்தோட மூலக் கரு இந்த கதை தான். இந்த படம் பார்த்த அப்புறம் தான் எத்தனை படங்கள், இந்த பட்த்துலந்து சீன் எடுத்துருக்காங்கனு தெரிஞ்சுது. நிறைய கேள்விப்பட்டு ரொம்ப எதிர்பார்த்து பார்த்த படங்கள் - காட்ஃபாதர் 1 & 2. ரெண்டுமே ஒன்னுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல. அசத்தலான கேங்க்ஸ்டர் மூவி! முதல் பார்ட் – அப்பா ஒரு தவிர்க்க முடியாத தாதா நிழ உலகில். அவரை கொலை முயற்சி செஞ்சு ஒடுக்குறப்போ, யாருமே எதிர்பாராத விதமா அவரோட ரெண்டாவது மகன் எப்படி அவனோட அப்பாக்காக பழி வாங்கி கடைசியில அவரோட இடத்துல உட்காரான்னு தான் கதை. ரெண்டாவது பார்ட்டும் இன்னும் சிறப்பா இருக்கும்!

இது தான் அல் பேசினோ (Al Pacino) நடிச்சு பேமஸ் ஆன படம். இந்த படத்தோட பார்ட் 3 கொஞ்சம் போரா இருக்கும்னு சொன்னதால அதை பார்க்கலை.

இந்த லிஸ்ட் போக நிறைய படம் பார்த்தேன், பட் அது எல்லாம் ஒன் டைம் வாச்சபிள் தான், சோ இங்க அதை பத்தி எழுதல. இதே போல மற்ற மொழிகள்ல பார்த்த படங்களை பத்தி இன்னொரு பதிவுல சொல்றேன்.

**************************************************************************************************


 

Author: Sinduja
Article Title: திரில்லர், டிராமா, லவ் - ஹாலிவுட்!
Source URL: Kathaiaruvi-https://kathaiaruvi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

SK.

New member
Joined
May 10, 2024
Messages
4
👍
 
Top