அத்தியாயம்…8…2
வாசு தேவ் பேசிக் கொண்டு இருக்கும் போதே சுமதியின் மாமியார் இடை புகுந்து..
“வாசு அது என்ன எழுதி கொடு என்று கேட்டுட்டு… அந்த பத்திரத்தை கொடு… கைய்யெழுத்து போட்டு கொடுப்பார்… தத்து கொடுத்து விட்ட பின்னே…. தனக்கு இந்த சொத்து மீது உரிமை இல்ல என்று தெரியும் தானே… அது தான் வக்கீலுக்கு படிச்சி இருக்காரே.” என்ற சாந்தியின் பேச்சு முன் பாதி சாதாரணமாகவும் வக்கீல் என்று சொல்லும் போது ஒரு வித இடக்காகவும் தான் அந்த அம்மா சொன்னது..
சாந்தியின் இந்த பேச்சில் தன் அறைக்கு செல்ல பார்த்தவன் மீண்டும் கூடத்திற்க்கு வந்து அங்கு இருந்த இருக்கையின் சட்டமாக அமர்ந்து கொண்டான்..
தன் முன் விரித்து வைத்த அந்த பத்திரத்தை மூடியவன்.. “ இந்த பத்தி அப்புறம் பார்க்கலாம்… எப்போ பார் இடை இடையே இந்த அம்மா குரல் கேட்குதே… இந்த சொத்து பத்தி பேச இவங்க யாரு…? என்னை தத்து கொடுத்துட்டாங்க எனக்கு உரிமை இல்ல என்று சொல்றவங்களை நம்ம வசும்மாவும் விசுப்பாவும் என்னை தத்து கொடுத்துட்டு இவங்க குடும்பத்தை தத்து எடுத்து கொண்டாங்கலா என்ன…?” சாந்தியை விட இடக்கான பேச்சாக சாண்டில்யன் பேச்சு இருந்தது… அதுவும் சுமதியின் கணவன் மாமியாரை பார்க்கும் போது அந்த பார்வை.. அதை விட மிக மிக இடக்காக தான் தெரிந்தது..
இதற்க்கு சுமதியின் கணவன் விமல். “ நான் இந்த வீட்டு மாப்பிள்ளை…” என்று அழுத்தமாக சொல்லி கொண்டு.. அவன் எதிரில் உன்னை விட நான் தான் இந்த வீட்டிற்க்கு உரிமை பட்டவன் என்று சாண்டில்யனுக்கு உணர்த்துவது போல அமர்ந்தான்..
“ஓ வீட்டோடு மாப்பிள்ளையா.? என்று ஒரு மாதிரி இழுத்தது போல கேட்ட சாண்டில்யன்.
“ஆனா வீட்டோடு சம்மந்தி என்ற விசயம் நான் இது வரை கேள்வி பட்டது இல்லையே…” என்று தன் தாடை மீது ஒரு கை வைத்து யோசிப்பது போல கேட்டவனின் பேச்சு பாவனை அனைத்தும் வாசுதேவ்வுக்கு புதியதாக தெரிந்தது…
சாந்தி மீண்டும் ஏதோ பேச வரும் போது வாசு தேவ்.
“ப்ளீஸ் ஆன்ட்டி கொஞ்சம் அமைதியா இருங்க.. நான் சாண்டில்யன் கிட்ட பேசிக்கிறேன்…” என்று அவரை பேச விடாது தடுக்க..
இதற்க்கு மட்டும்.. “ ம் இது சரி…” என்றான் சாண்டில்யன்..
பின் வாசுதேவ் என்ன நினைத்தானோ…. “ சாண்டில்யா இந்த வீடு எங்க தாத்தாவுடையது…” என்ற வாசுவிடம்..
“நம்ம தாத்தா. உனக்காவது ஒரு வகையில் தான் அவர் தாத்தா ஆனா பாரு விசுப்பா வழியிலும் அவர் எனக்கு தாத்தா.. என் அம்மா ராஜ ராஜேஷ்வரி வழியிலுமே அவர் எனக்கு தாத்தா..” என்று அவனின் பேச்சை திருத்தினான்..
வாசு தேவ்வால் ஒன்றும் பேச முடியவில்லை.. பல்லை மட்டும் தான் கடிக்க முடிந்தது..
இப்போது சாண்டில்யனே… “ ஆ சொல்லு வாசு நம்ம தாத்தா. நம்ம தாத்தா என்ன செய்து வெச்சி இருக்காரு. உன் முகத்தை பார்த்தாலே தெரியுது.. அவர் உனக்கு நல்லது செய்யல என்று.. என்ன செய்து இருக்காரு. இந்த வீட்டை என் மீது மட்டும் எழுதி வெச்சிட்டு இருக்காரா.?” என்று கேட்டான்.
உண்மையில் இது வரை சாண்டில்யன். இந்த வீட்டை பற்றியோ… விசுப்பா வாங்கி போட்டு இருந்த இடம் சொத்து பற்றியோ யோசித்தது கூட கிடையாது..
ஆனால் இந்த வீடு விசுப்பாவின் அப்பா வாங்கியது என்பது மட்டும் தெரியும்.. அது கூட விசுப்பாவின் அக்காவான இவனின் அன்னை ராஜராஜேஷ்வரி.. பேச்சில்..
இந்த இடம் அவரின் அப்பா வாங்கியது.. முதலில் இந்த மூன்று அறை மட்டும் தான்.. என்பது போலான பேச்சுக்கள் மூலம் மட்டும் தான் தெரியும்.. மற்றப்படி இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட அவன் நினைத்தது கிடையாது..
இவனின் தந்தை சோமசுந்தரம் வைத்து விட்டு போன சொத்து.. இத்தனை வருடங்கள் இவன் சம்பாதித்தது வாங்கி போட்ட இடம் ஷேர் என்று அதுவே ஏகப்பட்டதுக்கு இருக்கும் போது இதை எல்லாம் அவன் ஏன் யோசிக்க போகிறான்.
ஆனால் சமீபமாக யோசித்தான்.. தன் ஜாதக விசயத்தில் செய்த குலறுபடியில் யோசித்தான். ஏன் ஏன் என்று யோசிக்கும் போது முதன்மையாக வந்து நின்றது இந்த சொத்துக்கள் தான்.
அதுவும் அவன் வக்கீல் தொழிலில் இது போல சொத்துக்காக எத்தனை விதமான கேசுகளை இவனே எடுத்து நடத்தி இருக்கிறான்…
அதனால் இப்படியாக யோசிக்க. அதுவும் சரி தான் என்பது போல வாசு தேவ்.
“நம்ம தாத்தா இந்த சொத்தை உன் பெயரில் மட்டும் எழுதி வைத்தது தப்பு தானே சாண்டில்யா. அதுவும் உன்னை தத்து கொடுத்த பின்னே. இப்படி செய்து வைத்து விட்டு போனது தப்பு தானே…. எனக்கு இந்த வீடு வேண்டும் சாண்டில்யா. அதற்க்கு பதிலா.. விசுப்பா வாங்கி போட்ட சொத்து எது வேண்டும் என்று சொல்.. இல்ல நான் இந்த இந்த இடத்தில் வாங்கி போட்டு இருக்கேன்..” என்று விசுப்பா வாங்கி வைத்த இடங்கள் இவன் வாங்கிய இடங்கள் எங்கு எங்கு உள்ளது.. அதன் மதிப்பை சொன்ன வாசுதேவ்… இதுல என்ன வேண்டும் என்று கேளு கொடுத்துடுறேன்.. இல்ல எல்லாமே வேண்டுமா எடுத்துக்கோ.. ஆனா இந்த வீடு எனக்கு வேண்டும் சாண்டில்யா…” என்று கூறினான்..
வாசுதேவ்வின் இந்த பேச்சில் சாண்டில்யன் யோசிக்க ஆரம்பித்தான்.. சொத்துக்காக இல்லை… காரணம் இந்த வீட்டை விட… தனக்கு வாசுதேவ் கொடுக்க நினைக்கும் சொத்தின் மதிப்புகள் மிக அதிகம். அதுவும் வாங்கிய இடங்கள் அனைத்துமே முக்கியமான இடத்தில்.. அப்போ எதுக்கு என்று யோசிக்கும் போதே..
மீண்டும் சாந்தி… “ வாசு நீ எப்படி அப்படி சொல்வ.. உன் அப்பா வாங்கிய சொத்தில் உனக்கு மட்டுமே உரிமை கிடையாது என் மருமகளுக்கும் உரிமை இருக்கு.. புரியுதா… நீ வாங்கியதை கொடுத்து விட்டு வேணா இந்த வீட்டை வாங்கி கொள்ளலாம்…” என்று சொன்னார்.
சாண்டில்யன் இப்போது சாந்தியின் பேச்சை நிறுத்தவில்லை.. பேச விட்டு கவனித்தான்.. வாசுக்கு இந்த வீடு மட்டும் தான் குறி.. அது ஏன் என்று தெரியல.. ஆனா இந்த அம்மாவுக்கு எல்லா சொத்து மீதும் குறி.. எல்லா சொத்தும் என்றால் தன்னுடையதுமே இதில் அடக்கமோ என்று இவன் யோசிக்கும் போதே.. ஆமாம் என்பது போல தான் சாந்தியின் அடுத்த பேச்சு இருந்தது.
இது வரை அமைதியாக இருந்த மாளவிகாவின் அப்பா.. இவனின் தாய் மாமனும் தான்…
“ஏம்மா நீ ஏனும்மா இடை இடையே குறுக்கா வர. மாப்பிள்ளை தான் பேசிட்டு இருக்காருலே..” என்று சொன்ன போது சாந்தி.
“இல்ல தெரியாம தான் கேட்கிறேன்.. இப்போ சொத்தை சாண்டில்யனுக்கு எழுதி கொடுத்தாலுமே… அவர் எல்லா சொத்தும் உங்க எல்லொருக்கும் தானே வந்து சேரும்…” என்றதும்..
அமர்ந்து இருந்தவன் எழுந்து கொண்டவனாக… “ அப்போ பைனலா என் சொத்தையும் குறி வெச்சு தான். அந்த ஜாதகம் ட்ராமா ம்…” என்று சாண்டில்யன் கேள்வியில் சாந்தி திரு திரு என்று முழித்தவர் பின் அதிர்ந்தார் போல வாசுதேவ்வை பார்த்தார்.. அந்த பார்வை சொன்னது வாசு தேவ்வுமே. இதற்க்கு உடந்தை என்பது..
நான் இவர்களுக்கு என்ன செய்தேன்….? என்ன தான் வெளியில் வீர்ராப்பாக பேசி கொண்டு இருந்தாலுமே, இவர்களின் இந்த செயலால் நான் தானே தனித்து நிற்கிறேன்…
சாந்திக்காவது சொத்து ஆசை என்று வைத்து கொண்டாலும்.. வாசு ஏன் இப்படி செய்தேன்.
கேட்டன்… “ ஏன் வாசு.. ஏன் இந்த வீட்டுக்கா. நீ கேட்டு இருந்தா நான் கொடுத்து இருந்து இருப்பேனடா….?” என்று என்ன தான் தன் பலவீனத்தை யாருக்கும் காட்ட கூடாது என்று நினைத்து பேசினாலும், கடைசி வார்த்தை பேசும் போது அவன் குரல் கர கரத்து தான் விட்டது.
வாசு தேவ் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை.. பின் பேசினான்… நீண்டு பேசினான்… சாண்டில்யன் கோர்ட்டில் கூட இத்தனை ஆவேசமாக பேசி இருந்து இருப்பானா என்பது சந்தேகம் தான் அந்த அளவுக்கு பேசினான்..
“உன்னை விட நான் எதில் குறைந்து போய் விட்டேன் சாண்டில்யா.. சொல்.? நான் எதில் குறைந்து போய் விட்டேன்…?” என்று கேட்டவனிடம்..
“நீ குறைந்தவன் என்று யார் சொன்னது…?” என்று சாண்டில்யா கேட்டது தான் தாமதம்..
“ யார் சொல்லலே. யார் சொல்லலே.. உன் அப்பா என் அப்பா உன் அம்மா என் அம்மா… ஏன் இப்போ அந்த சொத்தை உன் மீது எழுதி வெச்சிட்டு நீ தான் அவருக்கு முக்கியம் என்று காட்டிட்டு போய் இருக்காரே… நீ சொன்னது போல நம்ம தாத்தா…” என்று பேசியவனின் குரலில் அத்தனை ஆவேசம்…
சாண்டில்யன் புரியாது வாசுதேவ்வை பார்த்தான். இவனுக்கு மன நோய் ஏதாவது பிடித்து விட்டதா என்று வேறு சந்தேகம் வந்து விட்டது..
ஆனால் இல்லை என்று தான் அவன் பேச்சின் மூலமே அவன் சொன்னான்…
“உன் அப்பாவும் உன் அம்மாவும்… இங்கு வந்து உங்க குழந்தைகளில் ஒருவரை கொடு என்று அத்தை கேட்டாங்க… என் அப்பாவும் அப்பாவும் ஒகே தான் சொன்னாங்க.
ஆனா பாரு குழந்தையை தத்து எடுப்பது என்றால் எப்போவுமே சின்ன குழந்தைகளை தான் தத்து எடுப்பாங்க.. ஏன்னா அது தான் தத்து எடுத்தவங்களை அப்பா அம்மாவோ நினைக்கும்.. அவங்களோட க்ளோஸ் ஆவதும் எளிது..
அப்படி பார்த்து ராஜி அத்தையும் சோமு மாமாவும் மாளவிகாவை தானே தத்து எடுத்து இருக்கனும்.. சரி பெண் வேண்டாம் என்றால், ஆண் உன்னை விட நான் தானே சின்னவன். அவங்க என்னை தானே தத்து எடுத்து இருக்கனும்..
ஆனா அவங்க எனக்கு சாண்டில்யா தான் வேண்டும் என்று தான் அத்தையும் மாமாவும் கேட்டாங்க. சரி அது விடு… அவங்களுக்கு என்னை விட உன்னை பிடிச்சி இருக்கு என்று கூட விட்டு விடலாம்..
ஆனா என் அப்பா அம்மா உன்னை கேட்டதும்.. என் அம்மா என்னது சாண்டில்யாவா. அண்ணி வாசுவை வேணா தத்து எடுத்துக்கோங்கலேன்…
நான் கேட்டேன் சாண்டில்யா. அப்போ நான் கேட்டேன்.. இவங்களுக்கும் நான் வேணாமா அவங்களுக்கு நான் வேணாமா.
சாரி பிரன்ஸ். இவ்வளவு தான் முடிந்தது.. நாளை பெரியதாக தருகிறேன் வாசகர்களே..