அத்தியாயம்….11
தமிழ் மாறன்…” உனக்கு திருமண நாள் பரிசாக என்ன வேண்டும் கேள் மாதும்மா…” என்று கேட்டவனுக்கு தெரியும்.. மனைவி பெரியதாக எல்லாம் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது…
இது வரை அவன் தான் மனைவிக்கு வாங்கி கொடுத்து இருக்கிறான்.. அவள் கேட்டது கிடையாது.. மனைவி கேட்கும் அளவுக்கு தமிழ் மாறன் விட்டதும் கிடையாது..
அதுவும் சென்ற ஆண்டு வைரம் பரிசு அளித்த போது… மாதுரி… “ இது எல்லாம் ரொம்ப அதிகம் அத்தான்…” என்று தான் சொன்னாள்..
இவன் தான்.. “ நான் நல்லா சம்பாதிக்கிறேன்.. என் மனைவிக்கு வாங்கி கொடுக்கிறேன்.. இதில் எங்கு அதிகம் வந்தது…?” என்று இவன் தான் கேட்டது..
அதுவும் இப்போது தற்போது நிலமை மனைவிக்கு தெரியும் தானே… தங்களின் நிலை உணர்ந்து தான் ஏதாவது கேட்பாள் என்று நினைத்து மனைவி என்ன கேட்க போகிறாள் என்று மனைவியின் முகத்தை தான் தமிழ் மாறன் பார்த்து கொண்டு இருந்தான்..
ஆனால் மனைவியின் முகத்தில் ஒரு யோசனை… பின் நான் என்ன சொல்ல போகிறேன் என்ற ஒரு பாவனையில் தன் முகத்தை பார்த்து கேட்க வருவதும் பின் கேட்காது குனிந்து கொள்வதுமாக இருந்த மாதுரியின் இந்த பாவனையில் தமிழ் மாறன்.
“மாதும்மா என் கிட்ட கேட்க உனக்கு எல்லா ரையிட்சும் இருக்கு மாதும்மா… இப்போ தான் நமக்கு கல்யாணம் ஆகி நேற்று தான் நீ என் மனைவியா இங்கு வரல.. எனக்கு தெரியும் உன்னை பத்தி கேள்..” என்று தமிழ் மாறன் சொல்லியும் மாதுரி கேட்காது போக..
தமிழ் மாறனுக்கு சட்டென்று ஒரு யோசனை… விலை உயர்ந்ததாக கேட்க நினைக்கிறாளோ… இப்போது தன் நிலைக்கு எப்படி அதை கேட்பது என்று தயங்கு கிறாளோ என்று நினைத்து அதை கேட்டவன் பின் அவனே…
“இல்லையே.. அத்தனை நகை மொத்தமா. அதுவும் என் கிட்ட கூட சொல்லாம வித்திட்டு ஒரு கோடி கையில் கொடுத்தவள்… அப்படி விலை உயர்ந்ததுக்கு எல்லாம் ஆசைப்பட மாட்டாளே. நீ என்ன கேட்க நினைக்கிற தைரியமா கேள் மாதும்மா.” என்றதும்..
மாதுரி… “ நம்ம ரெயில்வே ஸ்டேஷன் கிட்ட இருக்கும் ஒரு கடை காலி ஆகி இருக்குலேங்க அத்தான்…” என்று சொன்ன மனைவியிடம்…
தமிழ் மாறன்.. “ ஆமாம்…” என்று சொன்னவனின் முகத்தில் கொஞ்சம் சோகத்தின் சாயல் காரணம்..
இவர்கள் வாங்கி இருக்கும்.. இப்போது பிரச்சனையில் மாட்டி கொண்டு இருக்கும் அந்த இடத்தின் எதிரில் தான் மாதுரி சொன்ன கடை காலியாக இருக்கிறது…
“அந்த கடைக்கு வாடகை எட்டாயிரமாம்…” என்று தயங்கி தயங்கி சொன்னவளின் பேச்சை தமிழ் மாறன் கவனிக்க ஆரம்பித்தான்..
அந்த கடைக்கு எட்டாயிரம் வாடகை என்பது தமிழ் மாறனுக்கு தெரியும்.. அட்வான்ஸ் ஒன்னரை லட்சம் என்பதும் அவனுக்கு தெரியும்… முன் அந்த கடை பில்டிங்ககன்சேஷன் ப்ளானிங்க செய்து கொடுப்பவர்கள் தான் அதை வாடகைக்கு எடுத்து இருந்தனர்…
ஐந்து ஆண்டாக எந்த வித லாபமும் பார்க்காது இருந்ததில் மெயின் இடம் விட கூடாது விட கூடாது என்று பாவம் ஐந்து ஆண்டுகளாக வாடகை கொடுத்தது தான் மிச்சம் என்று சென்ற மாதம் தான் அவர் அந்த கடையை காலி செய்தது.. என்று அனைத்துமே தமிழ் மாறனுக்கு தெரியும் தான்..
ஆனால் மனைவி ஏன் அந்த கடையை பற்றி விசாரித்து வந்து உள்ளாள் என்பது தான் தமிழ் மாறனுக்கு தெரிய வேண்டு உள்ளது..
அதுவும் தான் பரிசாக ஏதாவது கேள் என்றதற்க்கு அந்த கடை பற்றியதான பேச்சு எதற்க்கு என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.
சொன்னாள்.. “ பாப்பாவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரும் போது தான் எனக்கு தெரியும் அந்த கடை காலியா இருக்கு என்று…”
குழந்தைகளின் பள்ளியை மாற்றி விட்டதால், இப்போது மாதுரி தான் சிந்தியாவையும் ஷரத்தையும் பள்ளியில் இருந்து கொண்டு விடுவதும்.. அழைத்து கொண்டு வருவதும்..
தமிழ் மாறன் எப்போது வீட்டில் இருக்கிறான் இல்லை என்ற வரை முறை இல்லாது தான் இப்போது மனைவியின் நகை கொண்டு இடத்தை வாங்கிய அந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்க…
அதற்க்கு நேரம் காலம் இல்லாது கணவன் உழைப்பதால், மாதுரி தான் வீட்டு பொறுப்பையும், குழந்தைகளின் பொறுப்பையும் கையில் எடுத்து கொண்டு விட்டாள்..
முன்பும் தமிழ் மாறன் இது போல தான் காலம் நேரம் தெரியாது தான் உழைத்தது.. மாதுரியுமே கணவனை தொந்தரவு செய்யாது தான் வீட்டின் அனைத்து பொறுப்பையும் குழந்தைகளின் அனைத்து பொறுப்புக்களையும் பார்த்து கொண்டது..
ஆனால் அப்போது வீட்டு வேலைகளுக்கு அனைத்திற்க்கும் ஆட்கள் இருக்க.. அவர்களை வேலை வாங்குவது மட்டுமே மாதுரி செய்தது..அதுவுமே ஒரு பொறுப்பு தான்…
அதே போல குழந்தைகளுக்கு உண்டானது அனைத்துமே மாதுரி தான் பார்த்து கொண்டது.. பள்ளிக்கு கொண்டு செல்ல விட என்று பள்ளி பேருந்தை வைத்து கொண்டதால், அதன் வேலை அவளுக்கு இல்லை..
ஆனால் இப்போது வீட்டு பொறுப்பு என்பது காலை மதியம் மாலை என்ன சமையல் என்று யோசித்து அதை செய்வதுமே மாதுரி தான்… வீட்டு மேற்வேலைக்கு கூட மாதுரி ஆட்களை வைத்து கொள்ளவில்லை.. முன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையுமே ஆன்லைனில் தான் வாங்கி விடுவாள்..
இப்போது அதற்க்கு டோர் டெலிவரி என்று அதற்க்கு வேறு அதிகம் காசு ஆகிறது என்று தன்னிடம் இருக்கும் தன் இரு சக்கர வண்டியை வைத்து அனைத்துமே அவள் ஒருத்தியாக தான் செய்வது..
இதில் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்வது கொண்டு விடுவது.. என்று அது ஒரு தனி வேலை…
தனி குடித்தினம் என்று ஆன புதியதில் மாதுரி இது எல்லாம் செய்ய முதலில் ரொம்ப சிரமம் பட்டாள் தான்…
இன்னும் கேட்டால் இந்த வேலைகள் எல்லாம் தாய் இல்லாத பெண் என்பதினால் சின்ன வயதில் இருந்தே அவளுக்கு இது பழக்கப்பட்ட வேலைகள் தான்..
ஆனால் திருமணம் முடிந்து இந்த பத்து ஆண்டுகளில், செய்யாது விட்டது உடல் கொஞ்சம் வலைந்து அவள் வசம் வர கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது..
ஆரம்பத்தில் சிரமத்தால் மாதுரி டென்ஷன் கூட ஆனாள் தான். ஆனால் இப்போது அவளுக்கு அனைத்துமே பழகி விட்டதில் நேரம் அவள் கை வசம் ஆனதில், இந்த இருக்கும் நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் .. அதே சமயம் அதில் இருந்து வருவாயும் கிடைக்க வேண்டும் என்று யோசித்து பார்த்தவளுக்கு ஒரு எண்ணம்..
இவர்கள் தெருவின் பக்கத்து தெருவில் ஒரு சின்ன கடை.. மாலை வேலையில் மட்டும் தான் அந்த கடை திறந்து இருக்கும்..
மாவு அரைத்து விற்பது.. இது அனைவரும் விற்பது தானே.. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தான் மாதுரி தான் அது போலான கடை அதில் வைக்கும் எண்ணம் எனக்கு இருக்கு.. நீங்க அதுக்கு பர்மிஷன் கொடுக்கனும் என்று கேட்ட போது.. தமிழ் மாறன் கேட்டது.
ஆம் அந்த கடையை வாடகைக்கு எடுத்து மாவு கடை வைக்க எனக்கு ஆசை.. அதை நீங்க தான் வைத்து கொடுக்கனும் என்று கேட்ட போது தமிழ் மாறன் முதலில்..
“என்னை நம்பினா ஆகாது என்று நீ நினச்சிட்டியா மாதும்மா..?” என்று கேட்ட போது மாதுரி ஒன்றும் கோபம் படவில்லை..
நிதானமாக தன் கணவனுக்கு புரிய வைத்தாள்.
“அப்படி நான் நினைத்து இருந்தால், நீங்க எனக்கு வாங்கி கொடுத்த அந்த இருநூறு பவன் நகையை வித்து பேங்கில் போட்டு அதுக்கு வட்டியாவே எனக்கு அறுபது ஆயிரம் வரும்.. அதை வைத்து நான் எல்லாம் பார்த்து இருந்து இருப்பேன்.. அதை உங்க கிட்ட கொடுத்து இருக்க மாட்டேன்…” என்ற மனைவியின் பேச்சு தமிழ் மாறனுக்கு நியாயமானதாக தான் தோன்றியது…
ஆம் ஒரு கோடி மாதுரி தன் கணவனிடம் கொடுத்த போது… ஏது இது என்பது போல் தான் தமிழ் மாறன் கேட்டான்..
நகை விற்று விட்டேன் என்ற மனைவியின் பதிலில் உண்மையில் தமிழ் மாறன் ஒரு மாதிரி மனநிலையில் தான் உள் ஆனான்..
எத்தனை எத்தனை ஆசையாக அதை எல்லாம் அவனே வடிவமைத்து வாங்கி கொடுத்தான் என்று நினைவில் வந்து போது..
“ஏன் மாதும்மா ஏன். அதாவது உன் கிட்ட சேப்பா நீ வைத்து இருந்து இருக்க கூடாதா…?” என்று சொன்னவனிடம் மாதுரி இதை தான் சொன்னாள்…
“பன்னிரெண்டு வருஷம் முன்… மாமா கிட்ட இருபது லட்சம் கேட்டிங்க.. என்ன சொல்லி நீங்க அவர் கிட்ட பணத்தை கேட்டிங்க. ஒரே வருஷத்தில் அதை நீங்க அவர் கிட்ட திருப்பி கொடுத்து விடுவேன்.. அதுவும் வட்டியோட கொடுப்பேன் என்று தானே நீங்க மாமா கிட்ட சொன்னது..?” என்று மாதுரி கேட்ட போது தமிழ் மாறன்..
“ஆமாம்…” என்று சொன்னதற்க்கு மாதுரி..
“இப்போ உங்க கிட்ட நான் கொடுத்து இருப்பது ஒரு கோடி கிடையாது.. இரு நூறு சவரன்… அப்பா கிட்ட கேட்ட பணம் அதாவது பொதுவான பணம். அதில் உங்க தம்பிங்க தங்கை.. உங்க அம்மாவுக்கு கூட உரிமை இருக்கும் பணம் அது..
ஆனால் இது நீங்க எனக்கு வாங்கி கொடுத்த உங்களுக்கு மட்டும் உரிமையான நீங்க எனக்கு வாங்கி கொடுத்த நகையை வித்த பணம்… அதனால தான் என் அம்மா வீட்டில் போட்ட அந்த நகை மீது நான் கை வைக்க வில்லை… இது உங்களுக்கு மட்டுமே உரிமைப்பட்ட பணம்…
அன்னைக்கு உங்களுக்கு இருந்த அந்த நம்பிக்கை இன்னைக்கு உங்க கிட்ட இல்லையா….? அதுவும் அப்போ உங்களுக்கு இந்த தொழிலில் அனுபவ அறிவே சுத்தமா இல்லாத போதே.. அத்தனை நம்பிக்கை..
மாமா கிட்ட வாங்கிய பணத்தை ஒரு வருஷத்தில் திருப்பி கொடுத்து விடுவேன் என்ற அந்த நம்பிக்கை…. அதை கொடுத்தும் விட்டிங்க… அதோட அதில் இருந்த லாபத்தில் இன்னொரு வீடும் கட்ட தொடங்கி விட்டிங்க…
ஆனா இப்போ பன்னிரெண்டு வருஷம்..இந்த பிசினஸ்ஸில் உங்களுக்கு அனுபவம் இருக்கு… ஒரு ஒரே ஒரு சறுக்கல் உங்களின் அந்த நம்பிக்கையை எல்லாம் எடுத்து கொண்டு போய் விட்டதா.. அத்தான்…?” என்று கேட்ட மனைவியின் பேச்சில் அப்போது தமிழ் மாறன் வாய் அடைத்து தான் போய் விட்டான்…
“எனக்கு நம்பிக்கை இருக்குங்க. இது என்ன நகைங்க… இதோட இன்னுமே எங்களுக்காக நீங்க வாங்கி குவிப்பிங்க என்று எனக்கு நம்பிக்கை இருக்கு…
இனி உங்களோட கவனம் எல்லாமே… நம்ம பிசினஸில் தான் இருக்கனும்.. குழந்தைங்க இந்த வீடு எல்லாமே நான் பார்த்து கொள்வேன்” என்று சொன்ன மாதிரி இந்த நான்கு மாதத்தில் சொன்னது போலவே கணவனை எதற்க்குமே அவள் தொந்தரவு கொடுத்தது கிடையாது…
இன்னும் கேட்டால் அவள் ஒவ்வொரு மாதம் முடிவிலுமே அவள் ஒவ்வொரு பாடத்தை கற்றுக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்…
குழந்தைகள் கூட முன்பை விட அம்மாவை தொந்தரவு செய்யாது பள்ளிக்கு கிளம்பி விடுகிறார்கள்.. ஏன் சிந்தியா தன் அம்மாவுக்கு அவள் பள்ளியின் விடுமுறையின் போது வீட்டு வேலைகளில் உதவியும் செய்கிறாள்…
மாதுரிக்கு இதையும் தான்டி ஏதாவது செய்ய வேண்டும்.. இனி நேரத்தை நாம் விரையம் ஆக்க கூடாது … அதை ஆக்க பூர்வமாக மாற்ற வேண்டும்.. என்று யோசித்த போது தான் அந்த கடை காலி ஆகிறது என்பது தெரிந்தது..
கூடவே பக்கத்து தெருவில் இருக்கும் அந்த கடையின் விற்பனையை பார்த்து விட்டு அவளுக்கு எண்ணம் தானுமே அது போல செய்தால் என்ன…?
அதை கணவனிடம் சொன்னவள் பின்..
“நான் இது போல கடை எல்லாம் வைத்தால் உங்களுக்கு அவமானம் இது போல ஏதாவது.” என்று மாதுரி தயங்கும் போது தமிழ் மாறன் சிரித்தான்.
“அவமானமா…? நம்மை அசிங்கப்படுத்தனும் என்று நினைத்தால், கண்டிப்பா அவன் அசிங்கப்படுத்தி விடுவான் மாதும்மா… இது வரை எனக்கு அதுல அனுபவம் இல்லாது தான் இருந்தேன்.. ஆனா இந்த நாளு மாசத்தில் அதுலேயும் அனுபவம் படித்து விட்டுட்டாங்க…
காரை விற்றது வைத்து அத்தனை கேள்வி முன் கேட்டால், பின்… ரொம்ப ஆடினா இப்படி தான்… கார் வாங்க வேண்டியது தான் அதுக்கு என்று அவ்வளவு பெருசா வாங்கி பந்தா பண்ணா….” இப்படி தான் பேசுறாங்க…
“ நான் அத்தனை பெரிய கார் வாங்க காரணமே வேறு… அதை ஒவ்வொருத்தன் கிட்டேயும் போய் நான் சொல்லிட்டு இருக்கவா முடியுமா என்ன..? நீயே சொல்…
நீ சொல்வது போல இதுவுமே ஒரு வகையில் நல்லது தான் மாதும்மா.. அதனால நம்மலே கீழா பார்ப்பாங்க. இது எல்லாம் யோசிக்காதே… நீ சொன்னதை நான் செய்து தரேன்…
ஆனா அதுக்கு முன்னாடி .. வீட்டு வேலைகளையும் பார்த்துட்டு இதுவுமே உன்னால எல்லாம் பார்த்துக்க முடியுமா.? முதல்ல அதை நல்லா யோசிச்சிக்கோ…. அடுத்து இத்தனை நீ மெனக்கடலுக்கு உண்டான லாபம் வருமா..? அதுவுமே யோசிச்சிக்கோ… காரணம்.. மாவு பாக்கெட்டை கடைக்கு கடை விற்கிறாங்க.. அதுக்கு ஸ்டேஷன் கிட்ட கடை இருக்கனும் என்று தேவை கூட இல்ல… வீடு பக்கத்துல இருக்க கடைக்கு போய் வாங்கிப்பாங்க..” என்று தமிழ் மாறன் சொல்ல.
அதற்க்கு மாதுரி சொன்ன. “ நான் மாவு மட்டுமே விற்க மாட்டேன்.. கூட வடகறியும் சேர்த்து தான் விற்க போறேன்… நம்ம ஷரத்துக்கு வடகறின்னா எந்த பிரச்சனையும் செய்யாது சாப்பிடுறான் என்று அது செய்து செய்து எனக்கு அந்த டிஷ் செய்ய நல்லாவே வருது…” என்று மாதுரி சொன்னதை தமிழ் மாறன் ஏற்று கொண்டான்..
ஆம் மாதுரி வடகறியை மிக நன்றாகவே சமைக்கிறாள்.. அவனுமே அவளிடம் அதை பற்றி சொன்னான் தான்..
அதை தான் மாதுரியும் கணவனிடம்.. “ பக்கத்து தெருவில் மாவு கூட வடகறியும் தான் விற்கிறாங்க… வாங்க வரவங்க மாவு கூட அந்த வடகறியுமே வாங்கிட்டு போயிடுறாங்க.. ஒரு முறை நான் ஷரத்துக்காக வட கறி வாங்க எட்டு மணிக்கு போனா அதுக்குள்ள காலி ஆயிடுச்சி.. எனக்கு தான் கடைசியா கொடுத்தது..
நான் வடகறியை வண்டியின் சீட் கீழே வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்வதற்க்குள் மூன்று பேர்.. வட கறி கேட்டுட்டு இல்லேன்னு போயிட்டாங்க.
இதுல ஒருத்தர் இன்னொருத்தர் கிட்ட இங்கு மாவு வாங்கினா சைட் டிஷ் வேறு தனியா தேட தேவை இருக்காது என்று என் மனைவி இங்கு போய் வாங்கிட்டு வாங்க என்று சொன்னா.. இனி ஓட்டலுக்கு போய் ஏதாவது டிபன் தான் வாங்கிட்டு போகனும்…
இதுனா மாவு முப்பத்தி ஐந்து ரூபா… வட கறி சின்னதுன்னா முப்பது ரூபா பெரியதுன்னா ஐம்பது ரூபா… எப்படி பார்த்தாலுமே என்பத்தி ஐந்து ரூபாவில் டிபன் முடிந்து விடும்.. ஓட்டலுக்கு போனா இரு நூறு இருநூத்தி ஐம்பது ஆகும். என்ன செய்ய இனி சீக்கிரம் தான் வரனும் போல என்று அவங்க பேசிக்கிட்டத நான் கேட்டனுங்க.. அப்போ தான் இதை நாம செய்தா என்ன.?
ஆதுவும் ஸ்டேஷன் கிட்ட என்றால் ட்ரையின் பஸ்ல இருந்து இறங்கும் போதே பெண்களுக்கு வீட்டுக்கு போகும் போதே வீட்டில் போய் என்ன செய்ய…?
என்ற யோசனை தான் ஓடும்… அப்போ நம்ம கடையை தான்டி போகும் போது கண்டிப்பா நம்ம கடையில் வாங்க சான்ஸ் இருக்கு.. ஏன்னா தனியா அதுக்கு ஒரு சைட்டிஷ்ஷை தேட தேவையில்லை பாருங்க..
மாவு வடகறியோடு நானே யோசித்து கூட சப்பாத்தியை தட்டி மட்டும் வைத்தால், அதையும் கூட வாங்க வாய்ப்பு இருக்குங்க… ஏன்னா சப்பாத்தி என்றாலே மாவு பிசையனும் தட்டனும்.. இதுக்கு சோம்பறி பட்டே.. சப்பாத்தி செய்யனும் என்றால் வீட்டு பெண்கள் அலறி விடுவாங்க. ஏன் நம்ம ராணி கூட சப்பாத்தி செய் என்றால் நான் இரண்டு டிபன் கூட செய்து வைக்கிறேன் ம்மா… இந்த சப்பாத்தி வேண்டாமே என்று சொல்லி முகத்தை தூக்கி வைத்து இருப்பா…
தட்டுன்னா சப்பாத்தி ஒன்னோடு ஒன்னு ஓட்டாது இருக்க இந்த சில்வர் பேப்பரில் வைத்து கொடுக்கலாம்.. அவங்க முன்னவே தரட்டி கொடுத்தா இன்னுமே அவங்க ஐசீனிக்கா இருக்கு என்று கூட வாங்கலாம்.. இதுக்கு சென்னா சைட்டிஷ் செய்து விடலாம்..” என்று மாதுரி சொல்ல சொல்ல.
தமிழ் மாறன் தன் மனைவியையே பார்த்து கொண்டு இருந்தான்.. எத்தனை விதமாக எல்லா பக்கமும் யோசித்து செய்ய நினைக்கிறாள்..
அதுவும் சென்னா எனும் போது சென்ற வாரம் மூன்று முறை அந்த சென்னாவை செய்தது.. எப்படி இருக்கு….? எப்படி இருக்கு….? என்று தன்னிடம் கேட்டு தெரிந்து கொண்டதும்.. அதோடு சென்ற வாரம் சப்பாத்தி நிறைய முறை செய்தது தான் வந்த போது தட்டிய சப்பாத்தியை சுடாது அதை மாதுரி இப்போது சொன்னது போல தான் ஒரு ஸ்டில் பேப்பரில் வைத்து கொண்டு இருந்தாள் தன்னை பார்த்த பின் தான் அதை சுட்டு கொடுத்தது..
கொடுத்து விட்டு… “ சாப்ட்டா இருக்கா அத்தான்…?” என்று கேட்டவளிடம்.
தமிழ் மாறன்.. “ ம் சாப்ட்டா தான் இருக்கு…” என்று சொன்னவனிடம் மாதுரி..
“நான் இதை ஈவினிங்க மூன்று மணிக்கே தட்டி இதில் வைத்து விட்டேனுங்க… ஏழு மணி நேரம் கழிச்சி சுட்டா கூட வரண்டு போகாது சாப்ட்டா இருக்கு.” என்று அன்று மகிழ்ச்சியோடு சொன்னவளின் பேச்சில் ஏன் என்று தெரியாது போனாலுமே மனைவியின் பேச்சுக்கு சிரித்தான்.
ஆனால் இன்று அனைத்திற்க்கும் உண்டான காரணங்கள் தமிழ் மாறனுக்கு புரிந்தது…
அவள் ட்ரையல் பார்த்து இருக்கிறாள் என்பது.. இத்தனை ஆர்வமாக இருக்கும் மனைவியை முடக்கி விட கூடாது என்று மாதுரி கேட்ட திருமண பரிசாக அன்றே குடும்பமாக கோயிலுக்கு சென்று ஓட்டலில் சாப்பிட்ட பின்.. அந்த கடைக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு தான் குடும்பமாக வீடு வந்து சேர்ந்தான்…
***********************************************************************
அத்தியாயம்…..12
கிருத்திகா தன் கணவன் விமலனிடம்.. “ ஏனுங்க உங்க அண்ணி நம்ம ஸ்டேஷன் கிட்ட மாவு கடை இன்னைக்கு காலையில் திறந்து இருக்காங்கலாம்.. நீங்க என்ன என்று கேட்க மாட்டிங்கலா…” என்று சொன்ன போது…
பாக்கிய லட்சுமி… “ இவன் இன்னது.. என்னது என்று எதுக்கு கேட்கனும்..” என்று கேட்ட வாறு மருமகளின் முன் நின்றான்..
இந்த முறை பாக்கிய லட்சுமிக்கு மருமகள் வாயில் இருந்து எல்லாம் விசயம் தெரிய வரவில்லை… மாதுரி மூலமாகவெ தெரிந்து கொண்டு விட்டார்..
தெரிந்து கொண்டு விட்டார் என்றால், மாதுரி வந்து இவரிடம் சொல்லவில்லை… அன்று தன் மூத்த மகனின் திருமண நாள் அன்று தங்கள் வீட்டின் முன்னவே அனைவரும் சென்ற பின் அமர்ந்து விட்டார்..
காலையில் மகனின் புல்லட்டில் மகனும் மருமகளும் குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றது கவனித்து விட்டார்… அப்போது சென்ற ஆண்டு மாதுரி வைர நகைகளை போட்டு கொண்டு அனைவரோடும் கோயிலுக்கு சென்று வந்தது அவரின் நியாபகத்தில் வந்தது…
அவர்கள் குடும்பத்திலேயே முதல் முறை மாதுரி தான் வைரம் போட்டுக் கொண்டது… அவ்வளவு பெரிய காரில் மகன் அருகில் வைரத்தோடு அமர்ந்து கொண்டு சென்ற அந்த கோயில் பயணத்தின் போது… எப்போதும் போல அப்போதுமே இவளுக்கு வந்த வாழ்வை பாரு என்று தான் நினைத்தார்..
இத்தனை திறமையாக மகனை நான் வளர்ந்து ஆளாக்கி வைத்தால், இவள் உரிமையா மகன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வரா..
ஆளாக்கி விட்ட நான் பின் சீட்டில்.. என்ன தான் இருந்தாலுமே மகன் மனைவிக்கு தானே முக்கியத்தும் கொடுக்கிறான் என்று அன்று அப்படி தான் நினைத்தார்…
இன்று குழந்தைகளை பள்ளிக்கு விட்டு வீட்டிற்க்கு வருவார்கள் என்று கேசரியை கிளரி அதை ஒரு டிபன் பாக்ஸ்ஸில் வைத்து மகன் மருமகளுக்காக காத்து கொண்டு இருந்த போது அவர் நினைத்தது போலவே வந்தார்கள்..
சரி இதை கொடுக்கலாம் என்று வீட்டை பூட்டும் வேலை தான் ஈபி கணக்கு எடுப்பவன் வர. அதை எடுத்து கொடுத்து விட்ட பின் பேசியில் மகன் அழைத்து விட்டு கேஸ் வரும் என்றதில் காத்திருந்து அதையும் வாங்கி வைத்த பின் பூட்டிக் கொண்டு தன் மூத்த மகன் வீட்டிற்க்குள் நுழையும் போது தான் மாதுரி அந்த கடையை பற்றி பேசியது..
இருந்து மருமகளின் பேச்சை அனைத்துமே கேட்டு விட்டு தான் அப்போது தான் வருவது போல சென்று கேசரி கொடுத்து விட்டு அவர்கள் செய்து வைத்து இருந்த சிறுபருப்பு பாயசத்தை குடித்து முடித்து… தான் கேட்டதை பற்றி எதுவும் கேட்காது அமைதியாக திரும்பி விட்டார்..
ஆனால் மாதுரி கொடுத்த பாயசத்தை ருசித்தவருக்கு தன் நாத்தனாரின் கை பக்குவம் அப்படியே மகளுக்கு வந்து விட்டது என்று தான் நினைத்தது…
சீனிவாசம் மூச்சுக்கு மூச்சு… “ என் தங்கை இது செய்தா இப்படி இருக்கும்.. அது செய்தா அப்படி இருக்கும்..” என்று தன் தங்கையின் சமையலை பற்றி தான் புகழ்ந்து பேசுவார்..
அது உண்மை தான். அதில் சந்தேகமே கிடையாது.. பாக்கிய லட்சுமிக்குமே அவர் நாத்தனாரின் கை பக்குவம் பிடிக்கும் தான்.
ஆனால் கணவன் எப்போதுமே தான் எந்த ஒரு உணவை சமைத்தாலுமே… “இதே இதை என் தங்கை செய்து இருந்தால்..” என்று சொல்லும் சீனிவாசன்..
“நாம கூட போன திருவிழாவுக்கு போன போது அவள் சமைத்தாலே பாக்கியம் நீ கூட சாப்பிட்டியே…” உண்மை தான்..
ஆனால் அதை என் சமையலோடு கம்பேர் செய்ய வேண்டுமா…? ஒரு சில ஆண்கள் இப்படி தான் பேச தெரியாது பேசி விடுவது…
இதில் தான் தன் கணவனுக்கு தன்னை விட அவர்கள் பெரியவர்களா என்று நினைத்து கணவன் மீது கோபம் பட்டால் கூட பரவாயில்லை.. தன்னை விட உயர்ந்தவர் என்று கணவன் யாரை குரிப்பிடுகிறாரோ.. அவர்கள் மீது தேவையில்லாது விரோதத்தை வளர்த்து கொள்வது..
அப்படி தான் பாக்கிய லட்சுமிக்கு தன் நாத்தனார் என்றாலே பிடிக்காது போய் விட்டது… இப்போது மருமகள் அதே பதத்தில் சமைத்தது..
கூடவே தன் திறமையை வைத்து கணவனை முன்னேற செய்ய நினைப்பது இதை எல்லாம் நினைத்து கொண்டவருக்கு சொல்ல முடியாது மனதில் ஒரு தாக்கம்…
அன்று மாலையே இரு சக்கர வாகனத்தில் தன் அம்மா வீட்டில் இருந்து போட்டு விட்ட நகையோடு சிரித்த முகமாக மகனின் பின் அமர்ந்து சென்ற மாதுரியை பார்த்தவருக்கு ஏனோ கண்கள் கலங்கி போயின… மனதார வாழ்த்தினார்….
நீ இன்று அடி எடுத்து வைக்கும் எந்த விஷயமும்… நல்ல படியாக வளர வேண்டும் என்று…
அதனால் கிருத்திகா விமலனிடம்.. மாதுரி கடை வைக்க இருப்பதை அவமானமாக பேசிய போது கேட்டு விட்டார்..எத்தனை நாள் தான் அமைதியாக இருப்பது..
விமலனுக்கு மனைவி வந்து பேசியதே புரியவில்லை என்றால், இதில் அம்மாவுமே எதோ வந்து பேசியதில் இருவரையும் பார்த்து..
“ யாராவது ஒருத்தர் என்ன என்று சொல்லுங்க.” என்று கேட்டதும் பாக்கிய லட்சுமி அமைதியாக கிருத்திகா விளக்கமாக…
“ உங்க அண்ணி மாவு கடை இன்னைக்கு திறந்து இருக்காங்க….” என்று சொன்னதுமே..
விமலன்.. “ என்னது மாவு கடையா..? ஏன்…? எதுக்கு…? இப்போ அவன் கட்டி கொண்டு இருக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பே பாதிக்கு மேல புக் ஆகிடுச்சே… இது கட்டி முடித்ததுமே அவன் கைக்கு கணிசமான தொகை வந்துடும்மே…. எதுக்கு இது போல அசிங்கம்மா கடை அது இதுன்னு… நாம இங்கு எத்தனை வருஷமா இருக்கும்.. இது நமக்கு அசிங்கம் தானே..” என்று விமலன் பேச.
விசயம் கேள்விப்பட்டு வர்மன்.. ஏன் இது கேள்விப்பட்டு தாய் வீடு வந்த ப்ரியா கூட…
தன் இரு அண்ணங்களிடம்.. “ அந்த அளவுக்கா அண்ணன் நிலை ஆகிட்டுச்சி…?” என்று தான் கேட்டு விட்டு சென்றாள்..
யார் என்ன சொன்னாலுமே நடப்பது நடந்தே தீரும்…அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது…
நாம சூரிய உதையம் பார்க்காது போனால் சூரியன் விடியாது போகுமா.? அதே போல எனக்கு இருட்டு என்றால் பயம் என்று சொன்னால் சூரியண் தான் மறையாது நிலைத்து நிற்குமா.?
அதே போல தாம் எண்ணம் நன்றாக இருந்தால் நடப்பது நல்லதாகவே நடக்கும் என்பது போல.
மாதுரி நினைத்தது போல கடை திறந்தார்… பெரிய கிரைண்டர் வைத்து தான் முதலில் ஒரு இருபது கிலோ மாவு அரைத்து.. அதற்க்கு வடகறி ஒரு கிலோ கள்ளப்பருப்பு ஊர வைத்து ஆட்டி ஆவி கட்டி அதை செய்து விற்பனைக்கு வைத்தவளுக்கு மாவு பாதி தான் விற்பனை ஆனது.. ஆனால் வடகறி… ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்து போயின..
அடுத்த நாள் மாவை பாதியாக குறைத்து கொண்டு வடகறியை அதிகம் அக்கினால் கூடவே ட்ரையல் பார்த்த சப்பாத்தி… உண்மையில் மாதுரி நினைத்ததை விட உடனே விற்று விட்டது…
இதில் காத்திருந்து மாதுரி சப்பாத்தி தரட்டி சொல்லி வாங்கி கொண்டு போகும் பெண்களை பார்த்த மாதுரி தனக்கு துணையாக ராணியை அழைத்து கொண்டு விட்டாள்.
நீ மதியம் வரை தானே எல்லா வீட்டிலும் வேலை பார்க்கிற. எனக்கு ஒரு மூன்று மணி நேரம் எனக்கு வேலை செய்து கொடு. உனக்கு ஐந்து ஆயிரம் சம்பளம் போட்டு கொடுக்கிறேன்… என்று அவளை அழைத்து கொண்டு விட்டாள்.
பின் அனைத்துமே மாதுரிக்கு ஏறு முகமாக தான் ஆனது.. ஆனால் எதையும் அவள் வெளிக்காட்டி கொள்ளவில்லை..
குடும்பத்தார்களுக்கு மட்டுமே இன்ன செலவு.. என்ன வரவு.. அதற்க்கு நான் இத்தனை எல்லாம் செய்கிறேன் என்று சொல்வது.. குடும்பம் என்றால் கணவன் மட்டும் அல்லாது தன் இரு குழந்தைகளையும் சேர்த்து தான்.
சிந்தியாவுக்கு இப்போது பன்னிரெண்டு வயது… ஷரத்துக்கு ஐந்தரை வயது ஆகிறது..
ஆம் மூன்று வருடங்கள் நெடிய மூன்று வருடங்கள்.. அவர்கள் கடந்து வந்து உள்ளனர்…
அவர்கள் கடந்து வந்த பாதை ஒன்றும் மலர் பாதைகள் கிடையாது.. அதுவும் ஒருவர் நன்றாக வாழ்ந்து விட்டு பின் அவர்கள் நிலை கொஞ்சம் தாழ்ந்தால் போதும்… அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதனின் வலி புரியும்…
மாதுரி என்ன தான் மற்றவர்கள் நினைப்புக்கு நான் ஆள் இல்லை என்று நினைத்து.. குடும்பம் பொறுப்பில் மட்டும் கிடையாது குடும்பத்தின் செலவுக்கு கூட கணவனை தொந்தரவு செய்ய கூடாது என்று நினைத்து தான்.. அத்தனை யோசித்து.. இது சரி வருமா…? சரி வராதா…? என்று ஆயிரம் முறை சரி பார்த்த பின் தான் மாதுரி செய்ய நினைத்ததை கணவனிடம் கூறியது..
இது சரி வரவில்லை என்றால், ஏதாவது செய்ய வேண்டும்.. அதில் மட்டும் மாதுரி உறுதியாக இருந்தாள்..
காரணம் அன்று இரு பிள்ளைகளுக்கு பள்ளியில் டாம் பீஸ் கட்டும் கடைசி தினம். தான் நகை விற்று கொடுத்த பணம் இப்போது கணவனிடம் இல்லை என்பது அவளுக்கு தெரியும்..
ஏன் என்றால் இடம் ஒரு கோடி.. மிச்சம் இருபது லட்சம் வங்கி கடன் முப்பது லட்சம் தன் நண்பனின் உதவிக் கொண்டு வாங்கியது அவளுக்கு தெரியும்…
ஐம்பது லட்சத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட பேஸ் மெண்டே அத்தனை பணம் உள் இழுத்து கொண்டு விடும் என்பது அவளுக்கு தெரியும்..
இன்னும் கேட்டால் அப்போது தமிழ் மாறன் குடியிருப்பு கட்ட ஆரம்பிக்கும் போதே இவனிடம் முன் வீடு வாங்கியவரின் தங்கையே ஒரு வீட்டை புக் செய்து அதற்க்கு முன் பணமும் கொடுத்து விட்ட போதும்..
குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட இன்று கடைசி நாள் என்று மனைவி கேட்ட போது ஒரு நிமிடம் மனைவியின் முகத்தை பார்த்த தமிழ் மாறனின் முகபாவனையை பார்த்தே மாதுரிக்கு புரிந்து விட்டது.. தற்சமயம் கணவனிடம் பணம் இல்லை என்று..
ஆனால் அவளும் என்ன செய்வாள்.. வீட்டுக்கு வேறு செலவு என்றால் பரவாயில்லை அவள் சமாளித்து விடுவாள்..
ஆனால் குழந்தைகளின் கல்வி விசயத்தில் என்று யோசிக்கும் போதே அவள் கையில் அம்மா வீட்டில் இருந்து கொண்டு வந்த தன் வளையல் மீது தான் அவள் கண்கள் சென்றது.
மாதுரி கணவனின் பார்வையை புரிந்து கொண்டது போலவே தமிழ் மாறனும் மனைவியின் பார்வையை புரிந்து கொண்டு விட்டான் போல.
“மாதும்மா..” என்று அவள் பெயரை தான் தமிழ் மாறன் அழைத்தான்.. உடனே மாதுரி.. “ இல்ல இல்ல அது மீது வை வைக்க மாட்டேன்..” என்று சொல்லி விட்டாள்..
தமிழ் மாறன்… “ ஈவினிங்க நான் குழந்தைகளை கூட்டிட்டு வரேன் மாதும்மா. அப்படியே பீஸ் கட்டி விடுகிறேன்..” என்று சொன்னவன் சொன்னது போலவே செய்து விட்டான் தான்..
ஆனால் மாதுரிக்கு தான்.. கணவன் யாரிடம் கடன் வாங்கி அதை கட்டி இருப்பானோ.. இது வரை கொடுத்தவன்… முதல் முறை கேட்கும் போது எத்தனை சங்கடப்பட்டு இருப்பான்…
தன் கணவன் மற்றவர்கள் முன் அது போல நின்று வாங்கி வந்து இருப்பான் என்று அவளாள் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. அப்போது தான் மாதுரி முடிவு செய்தாள்..
வீட்டு பொறுப்பை மட்டும் தான் கையில் எடுத்து கொண்டால் மட்டும் போதாது… பொருளாதாரத்திலுமே கை கொடுக்க வேண்டும் என்று…
தான் படித்து முடித்ததுமே திருமணம் செய்து கொண்டு விட்டோம்.. படித்த அந்த படிப்புக்கு வேலை செய்யவே இல்லை.. பத்து வருடங்கள் கழித்து எனக்கு வேலை வேண்டும் என்று நிற்க முடியாது.. அத்தனை படிப்பு படித்து திறமை வாய்ந்த இளைஞசர்களே வேலை இல்லாது இருக்கும் போது தனக்கு யாரும் வேலையை தூக்கி கொடுக்க முடியாது..
அதோடு தான் வீட்டு பொறுப்பை ஏற்றதினால் தான் கணவன் வீட்டு கவலையும் குழந்தைகளை பற்றிய கவலையும் இல்லாது இருக்கிறான்…
அதனால் வீட்டில் இருந்தே ஏதாவது ஒரு வருமானத்திற்க்கு வழி செய்ய வேண்டும் என்று பார்த்து திட்டம் இட்டு செய்த இந்த கடையானது அவளை கை விடவில்லை..
கை விடவில்லை என்பதையும் தான்டி.. அவள் எதிர் பார்த்ததிற்க்கு மீறியே அதில் இருந்து அவளுக்கு வருமானம் வருகிறது…
ராணியை மட்டும் வைத்து கொண்டு மாதுரியினால் முடியாது போக இன்னுமே இரண்டு பெண்மணிகளை கூட வைத்து கொண்டு விட்டாள் மாதுரி..
அதோடு பக்கத்து கடையும் காலியாகி விட.. அதையும் சேர்த்து வாடகைக்கு எடுத்து கொண்டு விட்டாள்…
ஆம் அத்தனைக்கும் வருமானம் வந்து கொண்டு இருந்தது.. மூன்று பேருக்கு ஊதியம் கொடுத்து தன் வீட்டு செலவுகளை பார்த்து கொண்டதோடு… தனித்து சேமிக்கவும் தொடங்கி விட்டாள்..
தன் வருமானத்தில் இருந்து அனைத்து செலவுகளும் போக மீதி லாபத்தை மூன்றாக பிரித்தாள்.. அனைத்து செலவுகளும் என்றால் வீட்டு செலவுகள்.. குழந்தைகளின் படிப்பு செலவுகளும் சேர்த்து தான்..
மாதுரி வீட்டு செலவு முழுவதுமே மனைவியே பார்த்து கொள்வதை கூட தமிழ் மாறன் விட்டு விட்டான்..
ஆனால் குழந்தைகளின் பள்ளி கட்டணம்.. அதையுமே மனைவி கட்டி விட்டாள் என்றதில், தமிழ் மாறன். “ ஏன் மாதும்மா…?” என்று தான் கேட்டான்.. கோவித்து கொள்ளவில்லை..
“ஏன் அத்தான். அவங்க நம்ம குழந்தைகள் இதில் யார் கட்டினா என்னங்க… ? நான் கட்டியதால் உங்களுக்கு ஒரு மாதிரி..” என்று இழுக்கும் போதே தமிழ் மாறன்..
“நீ அப்படி நினைக்கிறியா மாதும்மா…?” என்று தான் கேட்டான்… பின்..
“இல்ல நீயே எல்லாத்தையுமே பார்த்து கொண்டால், எனக்கு குடும்ப பொறுப்பே இல்லாமல் போய் விட போகுதுடி.. அப்புறம் உனக்கு தான் கஷ்டம் சொல்லிட்டேன்…” பேச்சை விளையாட்டாக தமிழ் மாறன் திசை திருப்பினான்…
“யாரு உங்களுக்கு குடும்ப பொறுப்பு இல்ல… அது ஓவரா தான் இருக்கு. முன் தான் நீங்க என்ன செய்யிறிங்க.. என்ன வருமானம் என்ன செலவு என்று என் கிட்ட ஒன்னும் சொன்னது கிடையாது..
ஆனால் இப்போ தான் எல்லாம் என் கிட்ட ஓப்பித்து விடுறிங்கலே…” என்று மாதுரியின் பேச்சை கேட்ட தமிழ் மாறன் சிரித்து விட்டான்..
“மாதும்மா.. அது கூட எனக்கே தோனல மாதும்மா கடை வைத்து ஒரு மாதம் முடிவில் என் கிட்ட செலவு இவ்வளவு ஆச்சு… இதுல மிச்சம் இத்தனை ஆச்சு… வீட்டு செலவுக்கு இவ்வளவு வேண்டும்.. அடுத்த மாதம் கடைக்கு தேவையாம செலவுக்கு இவ்வளவு தேவை… இது மிச்சம் என்று என் கிட்ட சொன்ன போது தான் மாதும்மா என் மண்டையில் குட்டினது போல உரைத்தது.. நான் இது வரை ஒன்னுமே உன் கிட்ட சொன்னது கிடையாது என்று…” தமிழ் மாறன் சொல்ல..
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த சிந்தியா தான்… “ம்மா போதும்மா போதும்.. ஒவரா போகுது.” என்று கிண்டல் செய்தாள்..
மாதுரியின் கடையில் இருந்து நிறைய தான் சம்பாதித்தாள்.. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாதது போல் தான் மாதுரி பார்த்து கொண்டாள்..
முன் செய்த தவறை செய்யவில்லை… தன் வருவாயில் இருந்து அவசர தேவைக்கு வங்கியில் டெப்பாசிட் செய்து விடுபவள். பின் எஸ்.ஐ.பியில் மாதம் தோறும் நீண்ட வருடங்களின் சேமிப்பாக தன் மகன் பெயரிலும் மகள் பெயரிலும் சேமிக்க தொடங்கியது போக.. ஆறு மாதம் கழித்து இந்த செலவுகளும் போக மீதம் தன் வங்கியில் இருக்கும் பணத்தில் தங்க நாணையங்கள் வாங்கி வைத்து கொண்டாள்..
நகைகளாக வாங்கி மற்றவர்களின் பார்வையில் விழ கூடாது என்பதிற்க்காக….
அதனால் அவர்களின் வருவாய் யாருக்கும் தெரியாது போயிற்று… வருவாய் கொடுத்த அந்த கடை சில சங்கடங்களையுமே மாதுரிக்கு கொடுத்தது தான்.
முதல் சங்கடம்.. தன் கடையின் எதிரில் இருக்கும் அந்த காலி மனையை பார்க்கும் போது எல்லாம் முதலில் மனதே பிசைந்தது போல் தான் மாதுரிக்கு இருந்தது…
அந்த மண்ணில் அவள் கணவன் போட்டது… தன் கணவனின் பன்னிரெண்டு வருடம் உழைப்பு அல்லவா…. பார்க்க பார்க்க மனது வலிக்க தான் செய்தது..
அதை விட தனக்கே இப்படி வலிக்கும் போது கணவனுக்கு அது எந்த அளவுக்கு வலி கொடுக்கும்.. பார்த்தாள்.. ஏதாவது ஒரு காரணத்திற்க்காக கணவன் தன் கடை முன் அவன் வண்டியை நிறுத்தும் போது மாதுரி தன் கணவன் முகத்தையே தான் பார்த்தாள்..
கணவனே.. அவனின் பார்வை அந்த காலி மனையின் பக்கமே பார்க்காது தன்னையும் தன் கடையையும் மட்டுமே பார்த்து பேசி விட்டு செல்பவனின் செயலை பார்த்த பின்… கூடிய மட்டும் தன் கணவனை தன் கடை பக்கம் வராதவாறு பார்த்து கொண்டு விட்டாள்..
கூடவே கடவுளிடம் கோரிக்கையையுமே தான் வைத்தாள்…
“என் கணவனின் உழைப்பு என் கணவனுக்கு கொடுத்து விடு…” தினம் தினம் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு அவள் வேண்டும் வேண்டுதல் இதுவாக தான் இருக்கும்…
மாதுரிக்கு ஏதோ ஒரு நம்பிக்கை என் கணவர் யாரையும் ஏய்த்து பிழைத்தது கிடையாது… என் கணவரின் உழைப்பின் பலன் அவருக்கு கிடைத்து விடும் என்று… அதனால் அது கூட அவளுக்கு அவ்வளவு பெரிய பிரச்சனையாக வில்லை…
கணவன் குடும்பம் அங்கேயே இருந்த காரணத்தினால், அனைவருக்குமே அவளை தெரிந்து இருக்கிறது…
மாவு வாங்கி கொண்டு… மாதுரியின் மனது நோக… “ ஆனா இப்படி கட கட என்று ஏறவும் தேவை இல்லை.. இப்படி ஏறிய வேகத்துக்கு இறங்கவும் தேவையில்லைப்பா…” என்று பேசுவதே மாதுரியின் மனதை புண்படுத்த தான் என்பது மாதுரிக்கு புரிந்து தான் இருந்தது…
ஆனாலுமே முகத்தில் அதை காட்டாது… “ என்ன செய்வது காலம் ஒரே போல இருக்காது தானே… மாற்றம் ஒன்றே மாறாதது… பார்க்கலாம்…” என்று விடுவாள் தான்..
ஆனால் அவர்கள் சென்ற நொடி மாதுரியின் முகம் வேதனையை காட்டும்.. இதை எதையுமே கணவனிடம் அவள் காட்டி கொள்ள மாட்டாள்..
இது எல்லாம் கடை வைத்த ஆரம்ப கட்டத்தில் தான்.. இப்போது எல்லாம் இல்லை.. எத்தனை நாட்களுக்கு தான் கேட்டதே அவர்களும் கேட்டு கொண்டு இருப்பார்கள்…
கேட்பவர்களுக்கும் சலிப்பு தட்டும் தானே...அவர்களுக்கும் இவர்களை விட வேறு யாராவது பற்றி பேச ஏதாவது ஒரு விசயம் கிடைத்தால், அதை பேச ஆரம்பித்து விடுவார்கள்.. இவர்களை பற்றி யோசிப்பது கூட நேரம் விரையம் என்று தான் விட்டு விட்டாள் மாதுரி..
தமிழ் மாறனும்.. இந்த இடைப்பட்ட நாட்களில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டை ஒன்று மட்டும் வைத்து கொண்டு அனைத்தையும் விற்று விட்டு… அதை தனக்கு வைத்து கொண்டான்… இதை மனைவிக்கு மட்டுமே தெரியப்படுத்தி கொண்டான்…
அதில் இருந்து கிடைத்த பணத்தில் மனைவிக்கு ஐம்பது சவரனாவது வாங்கி கொடுக்கிறேன் என்று தான் தமிழ் மாறன் மனைவியிடம் சொன்னது..
ஆனால் மாதுரி கணவனிடம் தீர்த்து சொல்லி விட்டாள்… “நான் வாங்கி கொள்கிறேன்.. ஆனால் இப்போது கிடையாது…” என்று…
அதனால் அந்த வைர நகைகள் மட்டும் மீட்டு கொடுத்து விட்டான்.. மாதுரி அதை வாங்கி கொண்டாள்.. ஆனால் அதை போடாது பத்திரமாக வங்கி லாக்கரில் வைத்து விட்டாள்..
தமிழ் மாறனும் அதில் இருந்து கிடைத்த பணத்தில் இது வரை தன் ஏரியாவில் மட்டுமே இடம் வாங்கி கட்டி கொடுத்து கொண்டு இருந்தவன்..
மற்ற இடத்திலும் இடம் வாங்கி கட்ட ஆரம்பித்து விட்டான்.. முன் எல்லாம் தனித்து வீட்டை தான் அதிகம் கட்டி விற்றான்.. இன் மற்றவர்கள் நிலத்தில் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று பேசி கட்டியும் கொடுத்து கொண்டு இருந்தான்..
ஆனால் இப்போது தமிழ் மாறன் கட்டுவது எல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் மட்டும் தான்…
அதே போல மற்றவர்களுக்கு கட்டி கொடுப்பதை விட்டு விட்டு, தான் இடத்தை வாங்கியதில் மட்டுமே கட்டி விற்றான்… இப்போது எல்லாம் இடத்தை வாங்கும் முன் பத்திரத்தை மட்டுமே அலசி ஆராயாது விற்பவர்களின் குடும்பத்தை பற்றி ஒரு டிடெக்டீவ் வைத்து விசாரித்த பின் தான் வாங்குவது…ஒரு படிப்பினை தானே நமக்கு உண்டான பாடத்தை கற்று கொடுக்கிறது..
அதே போல தான் கட்டிய குடியிருப்பில் ஒரு வீட்டை தனக்கு என்று வைத்து கொண்டான்… இது அவன் மனைவிக்கு மட்டுமே தெரிவித்தான்..
இதனால் இவர்களுன் குடும்ப வளர்ச்சி மற்றவர்களுக்கு தெரியாது போயிற்று.. இதில் தமிழ் மாறனின் தம்பி மனைவிகள் மாதுரியின் கடை வைத்து வீட்டில் கிண்டலாக பேசியும் கொள்வார்கள்…
“நம்மை போல ஐடி படித்து இருந்தால் நல்ல வேலை கிடைத்து இருக்கும்.. அவள் படிப்புக்கு இது போல கடை வைத்தால் தான் உண்டு..
இதுல அத்தான் சம்பாத்தியத்தில் நோகாம இருந்து இருந்து உடம்பு வளையல போல.. வேலை செய்ய மூன்று பேரு.. முன் போலவே பந்தாவுக்கு பக்கத்து கடையையுமே எடுத்து கொண்டு… வந்த பணம் வாடகை கொடுக்கவும், அந்த மூன்று பேருக்கும் சம்பளமும் கொடுக்கவுமே சரியா போய் விடும்…” என்று பேசிக் கொண்டனர்..
அந்த சமயம் தான் சிந்தியா பெரிய பெண்ணாக ஆனது… தன் மகளின் விழாவில்
தமிழ் மாறனுக்கு இன்னுமே நீ கற்று கொள்வது இருக்கிறதுடா என்பது போல தான்… அந்த விழாவில் மற்றவர்கள் நடந்து கொண்ட விதத்தை வைத்து தமிழ் மாறன் தெரிந்து கொண்டது..