Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்....13

  • Thread Author
அத்தியாயம்…13

அன்று மாதுரி எப்போதும் போலவே விடியலிலேயே கண் விழித்து விட்டாள்… தன் இடுப்பை சுற்றி இருந்த கணவனின் கையை கணவன் விழித்து விடாத வாறு மெதுவாக எடுத்து விட்டவள்…

தன் அவிழ்ந்து இருந்த கூந்தலை கோடாலி முடிச்சு போட்டு கொண்டே… “ம் இன்னுமே கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை என்று தான் நினைப்பு மாப்பிள்ளைக்கு…”

நேற்று இரவு கணவன் நடந்து கொண்டதை நினைத்து மாதுரி மெல்ல தான் முனு முனுத்தாள்…

தன் கையை மனைவி எடுத்து விடும் போதே லேசாக விழிப்பு வந்து விட்ட போதும்.. மனைவி எழுந்த உடன் என்ன செய்வாள் என்று அனுமானித்து இருந்த தமிழ் மாறன்.. தன் விழிப்பை வெளிகாட்டி கொள்ளாது மெல்ல கண் திறந்து தன் மனைவியின் இடுப்பை பார்த்தான்..

அவன் எதிர் பார்த்த திவ்ய தரிசனம்.. அவனுக்கு நன்றாகவே கிட்டியது…. கூடவே மனைவியின் பேச்சும் காதில் விழ… முனு முனுத்து கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்க பாதத்தை கீழே வைக்க முயன்றவளின் பாதம் தரையை தொடவில்லை…

காரணம் தரிசனம் கொடுத்த இடுப்பை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் தம் மீதும் போட்டு கொண்டான்.

“என்ன டி கிண்டல் வேண்டி இருக்கு…? ஆமா டி நான் மாப்பிள்ளை தான்… எனக்கு என்ன டி வயசு ஆகிடுச்சி… நீ தான் அவசரபட்டு பேமிலி ப்ளானிங்க செய்துட்ட… இப்போ நான் மனசு வைத்தா கூட சிந்தியா ஷரத்துக்கு தம்பியோ தங்கையோ என்னால் ஏற்பாடு செய்ய முடியும்.. பார்க்கிறியா…? பார்க்கிறியா..?” என்று கேட்டு கொண்டே மனைவியின் முகம் எங்கும் முத்தத்தை பதித்து கொண்டே கேட்டான்..

கணவனின் காதல் தாக்குதலில் இருந்து கடினப்பட்டு வெளி வந்த மாதுரி வெளி வந்த வேகத்தோடு கட்டிலை விட்டு இறங்கியவள் கொஞ்சம் தூரமாகவும் நின்று கொண்டாள்....

கணவனை பார்த்து கை எடுத்து ஒரு கும்பிடு போட்டவள்… “ என்னை மன்னிச்சிக்குங்க சாமீ.. நீங்க இளந்தாரி தான்.. நான் ஒத்துக்குறேன்..” என்று சொன்னவள் பின்..

“ஆனா மாப்பிள்ளை ஒன்னு நியாபகத்தில் வைத்து கொள்ளனும்… நம்ம பொண்ணு பெரிய பொண்ணா ஆக இப்போவோ அப்போவே போல இருக்கா… அது கொஞ்சம் உங்க நியாபகத்தில் வைத்து கொண்டா நல்லா இருக்கும்..” என்று சொன்னவளின் பேச்சில் மனைவியின் மீது இருந்த காதல் கொஞ்சம் தள்ளி நின்று மகளின் மீது இருக்கும் பாசம் முன் வந்து நின்று கொண்டது…

“என்ன டி சொல்ற… குழந்தை அவள்…”

தந்தைகளின் பார்வைக்கு மகள்கள் எப்போதுமே குழந்தைகள் தானே… அதனால் அப்படி சொன்னான்..

ஆனால் ஒரு தாய்.. ஒரு தாயாக மட்டும் அல்லாது தான் கடந்து வந்த பாதை… அதில் அவள் பயணப்பட்டது என்று அனைத்துமே முன் நிறுத்தி யோசிப்பதால், மகளின் உருவ மாற்றம் அன்னைக்கு நன்றாகவே தெரிந்தது..

அதனால் சிந்தியாவிடம் கடந்த ஆறு மாதமாகவே இதை பற்றி முன் கூட்டியே சொல்லியும் வைத்து இருக்கிறாள் தான்.

ஆனால் அதை பற்றி கணவனிடம் சொல்லாது.. “ ஆமா ஆமா உங்க பொண்ணு எப்போதுமே உங்களுக்கு குழந்தை தான்..” என்று சொன்னவளை பிடிக்க வந்த கணவனிடம் அகப்படாது வெளி வந்து விட்டாள்..

இப்போது வேலை ஆரம்பித்தால் தான். பர பரப்பு இல்லாது செய்து முடிக்க அவளுக்கு சரியாக இருக்கும்.. தமிழ் மாறனுக்கும் அது தெரியும் என்பதினால் அவனுமே விட்டு விட,.

இதோ பிள்ளைகளுக்கு காலை மதியம் உணவு செய்து கட்டி வைத்து… இடை இடையே ஷிங்கில் விழும் பாத்திரத்தையும் துலக்கி வைத்து… என்று மாதுரியின் காலை வேலை எப்போதும் போல இறக்கை கட்டி தான் பறந்தது..

குழந்தைகள் அவர்கள் அறையில் யாரும் எழுப்பாது எழுந்து கொண்டவர்கள்… சிறிது அந்த நேரத்திற்க்குள் என்ன படிக்க முடியுமோ அதை படித்து விட்டு, சிந்தியா தன் பள்ளி பையில் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டவள்…

தம்பியும் அனைத்துமே சரியாக வைத்து உள்ளானா என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு.. தம்பி பள்ளி சீருடை தன்னுடையது எடுத்து மெத்தையின் மீது வைத்து விட்டு இருவருக்குமான டவளையும் எடுத்த சிந்தியா ஷரத்திடம்…

“ குளிக்க போடா…” என்று சொல்லி அவன் கையில் அவனின் டவளை கொடுத்து அனுப்பினாள்..

ஷரத்துமே எந்த அடமும் பிடிக்காது குளித்து விட்டு அக்கா எடுத்து வைத்த உடையை அணிந்து கொண்டு… சாப்பிட ஹாலுக்கு சென்று விட்டான்.

தம்பிக்கு அடுத்து சிந்தியா குளித்து முடித்தவள் தலையை மட்டும் வாராது அனைத்தும் செய்து முடித்து விட்டு சீப்போடு, நேற்று பள்ளிக்கு செல்லும் போது வாரி விட்ட ஜடையை பிரித்து விட்டு தன் அம்மாவின் முன் போய் நின்றாள்..

மாதுரியுமே அதற்க்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டதால், மகளுக்கு இரட்டை சடை பின்னி விட்டு, முன் பக்கம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க மகளை தன்னை பார்க்கும் படி செய்தாள்..

இன்று என்னவோ மகளின் அழகில் இன்னுமே கலை கூடி இருப்பது போல அந்த அன்னைக்கு தெரிந்தது.. சிந்தியா சாதாரணமாகவே அவள் அன்னை போலலே அழகான பெண் தான்…

முடியுமே மாதுரி போலவே வளர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இருப்பதினால் தான், அன்னைக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று அனைத்துமே செய்து கொள்பவளாள் இந்த தலை வாரிக் கொள்வதும், தலைக்கு குளிக்கும் போது மட்டும் அவளுக்கு அன்னை உதவி தேவையாக இருந்தன…

ஆனால் இன்று அதையும் தான்டி மகளின் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம்.. அது அழகான மாற்றமாக தான் அந்த அன்னைக்கும் தெரிந்தது..

அதனால் அம்மாவின் கையில் இருந்த சீப்பை வாங்கி கொண்டு அதை தன் அறையில் கொண்டு போய் வைக்க சென்ற மகளிடம்..

“செல்லம் அம்மா உன் கிட்ட சொன்னது எல்லாம் நியாபகம் இருக்காடா…?” என்று கேட்ட அன்னை எது சொல்கிறாள் என்பது புரியாததால் சிந்தியா திரும்பி தன் அன்னையை பார்த்தாள்..

மகளின் பார்வையில்… “ அது தான் டா… பேன்டிசில் ரெட்..” என்று சொல்லும் போதே சிந்தியாவுக்கு புரிந்து விட..

“ம் நியாபகம் இருக்கும்மா… நான் பயப்பட மாட்டேன் அழுக மாட்டேன்..மிஸ் கிட்ட சொல்லுவேன்…” என்று விட்டு மகள் போக..

மாதுரி சிரித்து கொண்டே திரும்ப தமிழ் மாறன் மனைவியின் வழி மறித்து கொண்டு முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்…

“என்னங்க…?” என்று கணவனின் பார்வையில் மாதிரி கேட்டாள்..

“என்ன என்னங்க.. என்ன டி குழந்தை கிட்ட சொல்லிட்டு இருக்க….?” என்று கடிந்து ஏதோ பேச ஆரம்பித்த கணவனை அசால்ட்டாக….

“ஆமா ஆமா தமிழ் மாறன் பெண்… பதிமூன்று வயதில் குழந்தை … ஆனா என் அப்பா பொண்ணான நான் மட்டும் அந்த பதிமூன்று வயதில் உங்களுக்கு குமரியா தெரிந்தா போல..” என்று கேட்டவள் கணவனை அசால்ட்டாக தள்ளி விட்டு சமையல் அறைக்குள் சென்றாள்..

தமிழ் மாறனோ கப் சிப் தான்… பின் அப்படி தான் இருந்து ஆக வேண்டும்.. ஏன் என்றால் மாதுரியின் பதிமூன்றாம் வயதில் இவர்கள் திருவிழாவுக்கு சென்ற போது விமலனை பார்த்து மாதுரி..

“அத்தான் உங்களை அண்ணன் கூப்பிடுறாங்க..” என்று தமிழ் மாறன் தம்பியை அழைத்த போது… பக்கத்தில் நின்று கொண்டு இருந்த தமிழ் மாறன் மாதுரியை முறைத்து கொண்டு இருந்தான்…

மாதுரி சின்ன வயதில் தமிழ் மாறனை பார்த்தாலே பயந்து போய் ஓடி விடுவாள்.. காரணம் இதோ இது போல தான் எப்போதும் அவளை பார்த்து முறைத்து கொண்டு இருப்பதினால்,

அன்றுமே தமிழ் மாறனை விட்டு ஓட தான் பார்த்தாள்.. ஆனால்… “ ஓய்…” என்று தமிழ் மாறன் அழைக்க… மெல்ல திரும்பி…

“என்ன அத்தான்..?” என்று பயந்த குரலில் கேட்டவளிடம்..

“இந்த அத்தான் எல்லாம் என்னை பார்த்து மட்டும் தான் நீ கூப்பிடனும்… விமலன் வர்மன்.. உன் அத்தை மகனுங்களை பார்த்து எல்லாம் அத்தான் என்று கூப்பிட கூடாது…” என்று கண்டிப்பது போல சொன்னவனின் பேச்சில்… மாதுரி பயந்தாலுமே…

“ அப்போ எப்படி கூப்பிடுறது அத்தான்…” என்று கேட்டாள்..

அவனோ…” ம் அண்ணன் என்று கூப்பிட்டுக்கோ.. உன்னை யார் வேணா என்று சொன்னா….” பெரிய மனது செய்து அவர்களை அண்ணன் என்று அழைக்க அனுமதி வழங்கினால் தமிழ் மாறன்…

அப்போது ஏன் எதற்க்கு என்று எல்லாம் மாதுரிக்கு புரியவில்லை.. நாளா பக்கமும் பலமாக தலையாட்டி அதை ஒத்து கொண்டு விட்டாள் தான்..

ஆனால் இவர்களின் திருமணத்திற்க்கு பின் புரிந்ததில் மாதுரி.. கேடி அத்தான்… “ என்று தான் மனதில் செல்லம் கொஞ்சிக் கொண்டாள்…

இப்போது அதை தான் சொல்லி விட்டு சென்றாள்..

தமிழ் மாறனும் கழுத்தை தடவி விட்டு கொண்டே மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல.

“காலையில் இருந்து நீ எனக்கு ஒரு காபி குடுத்தியா….?” என்று கேட்டவன் மனதில்..

“ம் அன்னைக்கு என் கிட்ட பயந்து போய் கிடந்தா.. இன்னைக்கு…” என்று முனு முனுக்க..

அவன் முன் காபியை வைத்தவள்.. “ம் இப்போ என்ன சொன்னிங்க….? என்ன சொன்னிங்க…? சொல்லுங்க…? சொல்லுங்க…?” என்று மனைவி கேட்ட பாவனையில்..

“இன்னைக்கு சைட்டில் நிறைய வேலை இருக்கு டி.. உன் கிட்ட வெட்டியா பேச எல்லாம் எனக்கு நேரம் இல்லை…” என்று சொல்லி விட்டு அத்தனை சூடான காபியை வாயில் ஊத்தி கொண்டு குளியல் அறை நோக்கி ஓடியவனின் செவியில் மனைவி சிரிக்கும் ஓசை கேட்டது… அதில் தமிழ் மாறதினின் முகத்திலுமே புன்னகை ஒன்று வந்து போயின…

மாதுரி எதிர் பார்த்தது போல் தான் மூன்று மணி அளவில் அவள் கடை அப்போது தான் திறந்தது..

ராணியை… “ அரிசியை ஐந்து முறையாவது கழுவுங்க…” என்று சொல்லி விட்டு மற்ற இரண்டு பேரிடம் வெங்காயம் அரைய பூண்டு உரிக்க என்று எடுத்து கொடுத்து கொண்டு இருக்கும் போது தான் அவளின் கை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது…

“இஞ்சி தோளை நல்லா எடு முத்தம்மா…” என்று ஒரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டே மாதுரி தன் கை பேசியின் அழைப்பை ஏற்றாள்..

அழைப்புல் சொல்லப்பட்ட விசயத்தில் ஒரு நிமிடம் மாதுரியின் முகத்தில் பதட்டம் வந்தாலுமே, அடுத்த நொடியே அது மறைந்து போய் விட்டது.

“வந்துடுறேன் மேடம்…” என்று சொன்னவள் பின்.. “ டாட்டர் பயந்து இருக்காளா….?” என்று சிந்தியாவின் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு கொண்டே தன் வண்டியின் சாவீயை கையில் எடுத்தவளிடம்…

மாதுரி கேட்டதற்க்கு சிந்தியாவின் ஆசிரியர் என்ன சொன்னாரோ… மாதுரியின் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது…

“ஆமா மேடம்.. நான் முன்னவே இதை பத்தி அவள் கிட்ட சொல்லி வைத்து இருக்கேன்…” என்றவர்.. பின் தன்னையே பார்த்து கொண்டு இருந்த ரானியிடம்..

“சிந்தியா ஏஜ் அட்டெண் பண்ணிட்டா ராணி…” என்று சொன்னதுமே ராணியின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை… மாதுரி பேசுவதை வைத்தே ராணி கண்டு கொண்டு விட்டாள் தான்…

“சரி ராணி நான் போய் சிந்தியாவை கூட்டிட்டு வீட்டுக்கு போனா வர மாட்டேன்… உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் பாருங்க..” என்று விட்டு செல்ல பார்த்தவளை தடுத்து நிறுத்திய ராணி.

“என்ன மாதுரியம்மா… உன் பெண் பெரியவளான சந்தோஷத்தில் அந்த குழந்தையை கொடுத்தவரை மறந்து விட்டிங்கலே…” என்று ராணி கேட்டதும் தான் மாதுரி நாக்கை கடித்து கொண்டு அய்யோ என்று தலையில் அடித்து கொண்டவள்..

உடனே கணவனின் பேசிக்கு அழைப்பு விடுத்தாள்… சாதாரணமாக மாதுரி கணவனை தொந்திரவே செய்ய மாட்டாள்… கடையில் இருந்து ஏதாவது வாங்க வேண்டும் என்றால் கூட அவள் தான் வாங்குவாளே தவிர..

போன் செய்து… “நீங்க வரும் போது அப்படியே இதை வாங்கி கொண்டு வந்துடுங்க…” இப்படியான தொந்தரவுகளை மாதுரி கணவனுக்கு கொடுக்க மாட்டாள்…

தமிழ் மாறனுக்கு அன்று அதிகப்படியான வேலை தான்.. அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடித்து விட்டு… அனைத்தும் வாங்கியவர் பெயர்களுக்கு பத்திரவ பதிவும் செய்து முடித்து ஆயிற்று..

அதில் இருவர்… வீட்டின் இன்டியர்டெக்ரேஷனும் நீங்களே செய்து கொடுத்து விடுங்கள்…

“அடுத்த மாதம் கிரகபிரவேசம் வைத்து இருக்கேன்..” என்று சொல்லி விட்டார்..

தமிழ் மாறன் இதுவுமே செய்வான் தான்.. அது கேட்பவர்களுக்கு மட்டுமே.. ஒரு சிலர் லோன் வாங்கி வீட்டை வாங்குவதால் இந்த அதிகப்படியான செலவை இழுத்து கொள்ள மாட்டார்கள்.. இவனுமே இதை செய்யுங்கள் என்று இழுக்க மாட்டான்.

கேட்டவர்களுக்கு மட்டுமே செய்வான்.. அது போல செய்து கொடுத்தவர்களின் வீட்டின் வேலையை பார்த்த இவர்…

“நான் செய்வதா எண்ணம் இல்ல தான்.. ஆனா பாருங்க நீங்க அது செய்த பின். இன்னுமே அழகா இருக்கு சார்.. எங்க குடும்பத்திலேயே நான் தான் சார் முதல் முதல்ல சொந்தமா வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்ய போறேன்.. சொந்தம் எல்லாம் எங்க குடும்பத்தை அவ்வளவு கீழா தான் பார்ப்பாங்க… அவங்களுக்கு இது என் வீடு என்று பெறுமையா காமிக்கணும் சார்…” என்ற இந்த பேச்சில் நேரம் போதாது என்ற போதுமே இரவு பகல் வேலை செய்து முடித்து கொடுத்து விடலாம் என்று அந்த வேலையை எடுத்து கொண்டு விட்டான்..

வீட்டு கிரகபிரவேசத்துக்கு இன்னும் ஐந்து நாட்களே தான் உள்ளது…

சமையல் அறையின் மேடைக்கு ஏற்றது போல கப்போர்ட் அளவு செய்யாது அதிகப்படியாக செய்து விட்டதை கவனித்து வேலையாட்களிடம் தமிழ் மாறன் சத்தம் போட்டு கொண்டு இருந்த போது தான் மாதுரியின் அழைப்பு வந்தது..

முதலில் யார் அழைப்பது என்று கூட எடுத்து பார்க்காது டென்ஷனில் கத்தி கொண்டு இருக்க… மீண்டுமே அழைப்பு வரவும் தான். தன் கை பேசியை தமிழ் மாறன் எடுத்து பார்த்தது….

அழைத்தது மனைவி என்றதுமே வேலையாட்களை விட்டு கொஞ்சம் தள்ளி வந்தவன் அழைப்பை ஏற்றதும்..

“மாதும்மா ஏதாவது பிரச்சனையா.?” என்று தான் தமிழ் மாறன் கேட்டது.. ஏன் என்றால் மாதுரி சாதாரணமாக எல்லாம் அவனை அழைக்க மாட்டாள்…

“பிரச்சனை எல்லாம் இல்லேங்க.. சந்தோஷமான விசயம் தானுங்க. நம்ம பொண்ணு பெரியவள் ஆகிட்டாலாம். இப்போ தான் ஸ்கூலில் இருந்து போன் வந்தது…” என்று மாதுரி சொன்னதற்க்கு தமிழ் மாறனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாது போக..

மாதுரி தான். “ அத்தான் அத்தான்.” என்று அழைக்க…

“ம் மாதும்மா… ம்..” என்று சொன்னவன் பின் ஒரு நிமிடம் கழித்தே…

“குழந்தை டி.. ரொம்ப வலிக்கும்லே…” என்று சொன்ன கணவனிடம் மாதுரி…

“இது எல்லா பெண்களும் பேஸ் பண்ணி தான் ஆகனும் அத்தான்… அது எல்லாம் நம்ம பொண்ணு சமாளிச்சிடுவா…” என்று சொன்னவள்..

“நான் இப்போ போறேன்.. நீங்களும் வரிங்கலா…?” என்று கேட்டவளிடம் தமிழ் மாறன்..

“இது என்ன கேள்வி.. இதோ நானும் கிளம்புறேன்…” என்று சொன்னவன்…

என்ன என்ன செய்ய வேண்டும் என்று வேலை செய்பபர்களிடம் சொல்லி விட்டு மனைவிக்கு முன் மகளிடம் பள்ளிக்கு முன் நின்று விட்டவன் பள்ளியின் உள் செல்லாது மனைவிக்காக காத்துக் கொண்டு இருந்தான்…








 
Top