Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்...15

  • Thread Author
அத்தியாயம்…15

நான்கு மணியளவிலேயே மாதுரியின் தாய் வீட்டவர்கள் வந்து விட்டனர்… வந்த இரண்டு அண்ணிகளும் அவள் தங்கையும் சும்மா எல்லாம் உட்காரவில்லை.. இழுத்து கட்டி கொண்டு தான் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்…

தமிழ் மாறன் தன் மைத்துனி கணவன் சங்கரின் உதவியோடு மொட்டை மாடியில் சேர் வரிசையாக வைப்பது பின் சேமினார் கட்டிக் கொண்டு இருப்பவர்களை வேலை வாங்குவது… எந்த பக்கம் லைட் வைத்தால், போட்டோவுக்கு பெண்ணின் முகம் நன்றாக தெரியும் என்று பார்த்து அவர்களிடம் இங்கு இங்கு வைங்க என்று அவன் சொல்லி கொண்டு இருந்தான்…

அதே போல ஒரு பக்கம் பங்கஷன் நடக்கும் போது அமர்வது போல பாதி இருக்கைகள் அந்த பக்கமும். சாப்பிடுவதற்க்கு ஏதுவாக அதற்க்கு உண்டான டேபுலை மொட்டை மாடியில் இந்த பக்கமும் என்று சரியாக அனைத்துமே செய்து முடித்து விட்டு தான் சகலை இருவருமே கீழே வந்தது..

கீழே வீட்டை தான் நடுவில் சுவர் எழுப்பி பிரித்தது… மொட்டை மாடி அப்படியே இருப்பதால், இடத்திற்க்கு பிரச்சனை இல்லாது பெரியதாக தான் இருந்தது….

கீழே வந்த இருவருக்கும் மாதுரியின் தங்கை தான் காபி கொடுத்தது… மைத்துனி குசும்பு போல தன் கணவனுக்கும் தமிழ் மாறன் அத்தானுக்கும் காபி கொடுத்த பின் சுதா..

“அத்தான் அக்கா போட்டது போல எல்லாம் என் காபி இருக்காது.. அதனால இன்னைக்கு ஒரு நாளுக்கு அட்ஜஸ்ட் செய்து கண்ணை மூடி குடித்து விடுங்க..” என்று கிண்டலோடு தான் கொடுத்தது..

அவளின் கணவன் தான் சகலை ஏதாவது சொல்லி விட போகிறார் என்று பயந்து… “ நீ சும்மா இருக்க மாட்டியா என்ன..? அவர் உன் கிட்ட நல்லா இல்லை என்பது போல சொன்னாரா என்ன.?” என்று தன் மனைவியை கண்டித்தான் தமிழ் மாறனின் சகலை சங்கர்…

ஏன் என்றால் தமிழ் மாறனுக்கும் சங்கரும் அந்த அளவுக்கு இது வரை பேசிக் கொண்டது கிடையாது.. இன்று கூட தன் இரு மச்சான்கள் வந்து இருந்தால், சங்கர் எப்போதும் போல ஒதுங்கி தான் நின்று கொண்டு இருந்து இருப்பான்..

இன்று அவர்கள் வராததினாலும், தமிழ் மாறன் மட்டும் தனியாக அனைத்துமே கவனித்து கொண்டு இருப்பதை பார்த்ததினால் தான் கூட நின்றது…

ஒரே வீட்டில் பெண் எடுத்து இருந்தாலும், தமிழ் மாறனின் வசதியை பார்த்து சங்கர் கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டு விட்டான்.. இத்தனைக்கு தமிழ் மாறன் இது வரை சங்கரை குறைவாக எல்லாம் பேசியது கிடையாது.. அதே போல சங்கர் ஒதுங்கி நின்ற போது வலிய சென்றும் பேசியது இல்லை..

தமிழ் மாறன் அதிகம் பேச மாட்டான்.. கொஞ்சம் கோபக்காரன்… இது மட்டும் தான் சங்கருக்கு தமிழ் மாறனை பற்றியதாக அவனின் கணக்கீடல்…

மனைவியின் இந்த பேச்சுக்கு தமிழ் மாறன் எதாவது சொல்லி விட்டால், கணவனாக அதை எப்படி நான் பொறுத்து கொள்வது.. இதனால் குடும்பத்தில் பிரச்சனை வந்தால், அதனால் தான் சங்கர் தன் மனைவியை அடக்கியது..

ஆனால் தமிழ் மாறன் சங்கர் நினைத்ததிற்க்கு எதிர் பதமாக. “ சகல அவள் உங்களுக்கு மனைவி ஆவதற்க்கு முன்னவே எனக்கு மச்சினிச்சி… ஆ அதுக்கு முன் என் அத்தை பெண் அவள்.. என்னை கிண்டல் செய்ய அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு.

அதோட அவள் என்னை இப்படி பேச காரணம் கூட எங்க கல்யாணத்திற்க்கு முன் ஒரு முறை நான் நம்ம மாமியார் வீட்டிற்க்கு போன போது இந்து சில்வண்டு தான் எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தது…

அப்போ தான் மாதுவை மேரஜ் செய்யும் தாட் எனக்கு வந்த சமயம் அது… ஏதோ ஒரு காரணம் வைத்து அக்காவை பார்க்க வந்தா இவள் வந்து முன்ன நின்னா எனக்கு காண்டு ஆகுமா ஆகாதா. அதுல நீ கொடுக்கும் இந்த கழினி தண்ணீர் எல்லாம் எனக்கு வேண்டாம். போய் உங்க அக்காவே காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க சொல்லு என்று சொன்னேன்.. அதை வைத்து தான் இப்போ என் மச்சினிச்சி என்னை கிண்டல் செய்யிறா..” என்று தமிழ் மாறன் விளக்க..

சங்கர் அதற்க்கு பின் மாமன் மைத்துனி இடையில் தலையிடவில்லை…

அனைத்துமே இது போல கேலி கிண்டல் என்று சரியாக தான் சென்று கொண்டு இருந்தது.

ஆறு மணிக்கு தண்ணீர் ஊற்றுவதாக தான் அனைவரையும் அழைத்தது… மாதுரிக்கு உதவி செய்ய அவள் தாய் வீடு முன்னவே வந்து விட்டார்கள்..

பாக்கிய லட்சுமி இரண்டு நாள் முன் இருந்தே தன் மூத்த மகன் வீட்டில் தான் இருக்கிறார்… பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சரியாக ஐந்தரை மணிக்கு தான் வந்தார்கள்..

தண்ணீர் ஊற்ற அனைத்துமே தயார் நிலையில் இருந்தது… ஆனால் இன்னும் ப்ரியா குடும்பத்தினர் மட்டுமே வர வேண்டி இருந்தது..

தமிழ் மாறன் தன் அன்னையிடம் தான்.. “ போன் செய்து எங்கு இருக்காங்க என்று கேளும்மா…” என்று சொன்னது..

அதே போல பாக்கிய லட்சுமி மகளிடம் பேசியவர்.. பின் மகனிடம்.. “ இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவாங்கப்பா…” என்று மகனிடம் சொன்ன பாக்கிய லட்சுமி மாதுரியிடம்…

“தண்ணீரில் மஞ்சள் கரச்சிட்டியா.. ஜல்லடையில் முத்து பவழம் தங்கம் வைத்து தான் தண்ணீர் ஊற்றனும். அதை எடுத்து வெச்சிட்டியா…?” என்று கேட்க…

மாதுரியுமே…. “என் அம்மாவுடைய ஒரு ஜெயின் நான் போட்டுட்டு வந்தனே.. அது இருக்கு அத்தை.. அது எல்லாம் கலந்து தனே இருக்கு…” என்றதும்…

பாக்கிய லட்சுமியும்..” ஆமாம் ஆமாம்.. அதுவே ஜல்லடையில் வைத்து ஊத்து.. உங்க அம்மாவும் ஆசியும் பேத்திக்கு கிடைக்கட்டும்..” என்று விட்டு சாப்பிட்ட பின் கொடுக்கும் தாம்புளத்தை இப்போதே தயார் செய்ய தொடங்கி விட்டார் பாக்கிய லட்சுமி..

பாக்கிய லட்சுமி உட்கார்ந்த படி என்ன என்ன செய்ய முடியுமோ. அதை எல்லாம் செய்து கொண்டு இருந்தார்.. அதே போல வீட்டின் பெரிய மனுஷியாக .” இது இது செய்..” என்று மகனிடமும் மகளிடமும் சொல்லி கொண்டு இருக்க.

இதை எல்லாம் வந்த இந்த சிறிது நேரத்தில் பார்த்து கொண்டு இருந்த தீபிகாவுக்கும் கிருத்திகாவுக்கும் தாள முடியவில்லை..

அதுவும் மாதுரி இந்த மாதிரி நிலையிலும்… அழகான சிறிய பார்டர் வைத்த மஞ்சள் சிகப்பிலான அந்த பட்டு புடவையில் மிக அழகாக மாதுரியின் உடலில் பொருந்தி.. பார்க்க அப்படி லட்சணமாக இருந்தாள்..

சிரித்த முகத்துடன் வர வேற்று உபசரித்து கொண்டு இருப்பவளை பார்க்க பார்க்க.. அது என்னவோ.. மாதுரியை பார்த்தாலே கிருத்திகாவுக்கும் தீபிகாவுக்கு பத்திக்கொள்ளும்…

முன் தமிழ் மாறன் தான் அனைத்தும் செய்கிறான் என்று தன் வயிற்று எரிச்சலை காட்டாது இருந்தனர்.. இனி என்ன… மனதில் பட்டதை கேட்டு விட வேண்டியது தான் என்று நினைத்து தான் மகளின் விசேஷத்திற்க்கு அழைத்த போது மாதுரியிடம் அவர்களின் நிலை சுட்டி காட்ட வேண்டி என்று அப்படி தாழ்த்தி பேசியது.

ஆனால் அதையே எப்படி சாமர்த்தியமாக தங்களை நோக்கி திருப்பி விட்டு சென்று விட்டாள்..

இரண்டு நாள் முழுவதுமே இரண்டு பேருக்கும்.. இதை நினைத்து தான் பேசி பேசி வீட்டில் மாதுரியை திட்டிக் கொண்டு இருந்தனர்…

இன்றும் இப்படி பார்த்ததில், அதுவும் தமிழ் மாறன் என்ன தான் வேலையாக இருந்தாலுமே, இடை இடையே மனைவியின் பக்கம் பார்வையை செலுத்தி கொண்டு இருப்பதை பார்த்து அக்கா தங்கை இருவருக்குமே பொறாமையாக தான் இருந்தது…

அதுவும் அனைவரும் ஒன்றாக இருந்த சமயத்தில் குழந்தைகளை தனி அறையில் படுக்க வைத்து விட்டு இவர்கள் புதியதாக திருமணம் ஆன இளம் ஜோடிகள் போல இருந்ததை இவர்கள் பார்த்து கொண்டு தானே இருந்தார்கள்…

மாதுரியின் உடலில் காணப்பட்ட சிறு சிறு காயங்களை வைத்து கண்டு கொண்டார்கள். அதுவும் காலை பொழுதில்… முதல் இரவு முடித்து விட்டு வெளி வரும் புது பெண் போல் தான் மாதுரியின் முகம் அவர்கள் படுக்கை அறையை விட்டு வரும் போது ஜொலிக்கும்.. அதிலேயே அக்கா தங்கைகள் கண்டு கொண்டு விடுவார்கள்… அதை அனைத்துமே பார்த்து தான் இருவருக்கும் மாதுரியின் மீது அத்தனை பொறாமை

ஏன் என்றால் அவர்களின் கணவன்மார்கள் அவர்களிடம் இது போல காதலோடு இல்லாததே அதற்க்கு காரணம் ஆகும்…

வேலை வேலை அதை எப்படி எதில் இன்வெஸ்மெண்ட் பண்ணுவது என்று படுக்கை அறையில் கூட இது பற்றியதாக தான் இருக்கும்..

அதுவும் வர்மனுக்கு குழந்தை இல்லாது ட்ரீட்மெண்ட் இருந்த சமயத்தில் மருத்துவர்.. இந்த சமயம்.. இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தால், குழந்தை பிறக்கும் என்று நாள் கூட குறித்து அவர்கள் சேர்ந்ததில் வர்மனுக்கு அந்த ஆசையே விட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

கிருத்திகா…. ஒரு முறை கணவனிடம்… “ நமக்கு ஒன்னும் வயசு அவ்வளவு ஆகவில்லை… நாம ஒன்னா இருந்தே ஆறு மாசம் ஆகுது.” என்று இவளே கேட்ட போது வர்மன் சொன்னது இது தான்.

“மாசம் மாசம் அந்த டாக்டர் சொன்ன தேதியில் இருந்து இருந்து எனக்கு என்னவோ அதுவும் ஒரு வேலை போல தான் ஆகிடுச்சி.. இப்போ அந்த வேலைக்கு உண்டான பலனா குழந்தை தான் வந்துடுச்சே அது தான் எனக்கு தோனுது…” என்ற கணவனின் இந்த பேச்சில் கிருத்திகா விக்கித்து தான் போய் விட்டாள்…

அதிலும் அப்படி ட்ரீட்மெண்ட் செய்து குழந்தைக்கும் உடல் உபாதை என்று ஒன்றன் பின் ஒன்றாக இருக்க… சுத்தமாக அதில் விருப்பம் இல்லாது போய் விட்டது…

கிருத்திகாவுக்கு இப்படி என்றால், தீபிகாவுக்கோ இரட்டையர்கள் இரவில் அவர்களை சமாளிக்கவே பெரும் பாடாக இருக்க. எங்கு இருந்து இரவில் காதல் மொழி பேசிக் கொள்வது..

எப்போதுமே தனக்கு கிடைக்காத ஒன்று… தான் அனுபவிக்காத ஒன்றை.. மற்றவர்கள் அந்த மற்றவர்கள் தனக்கு பிடித்தவர்கள் என்றால் கூட பரவாயில்லை பிடிக்காத ஒருவர் இரண்டு பங்காக அனுபவிக்கும் போது.. கண்டிப்பாக அதை பார்த்து பொறாமை படுவார்கள்…

அவர்களின் அந்த மகிழ்ச்சியை தகர்க்க ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கூட நினைப்பார்கள்.. அதுவும் கூட சேர்த்தியாக தங்களுக்கு ஆதரவாக இருந்த அத்தை இப்போது எல்லாம் மாதுரி சார்பாக பேசுவதும் பிடிக்கவில்லை..

அங்கு குழந்தைகளை பார்க்க தன்னால் முடியவில்லை என்று அத்தனை சாக்கு சொல்பவர்கள் இங்கு இத்தனை வேலைகள் எடுத்து கட்டி செய்வதை பார்த்தும் அக்கா தங்கைக்கு பொறுக்க முடியவில்லை…

ஏதாவது செய்ய வேண்டும்.. ஏதாவது செய்ய வேண்டும். என்று நினைத்து கொண்டு இருந்த சமயம் தான் ப்ரியா தன் கணவன் ஸ்ரீவச்சனோடு.. ஐந்தே முக்கால் மணிக்கு அங்கு வந்து சேர்ந்தது…

அப்போது கூட வைபவ்.. பின் வருகிறான் போல என்று தான் நினைத்தனர்.. தமிழ் மாறனும் மாதுரியும் முதலில் வந்தவர்களை வர வேற்று தண்ணீர் கொடுத்து என்று உபசரித்து கொண்டு இருக்கும் போது தான் மாதுரியின் தங்கை..

“பாப்பாவுக்கு அந்த ட்ரஸ்.” என்று ஏதோ பேசி அந்த இடத்தில் இருந்து மாதுரியை அழைத்து கொண்டு சென்றது.. அதே சமயம் செய்த சாப்பாட்டை மாடியில் வைக்க சகலை கொண்டு செல்ல.. தமிழ் மாறனும் கூட செல்ல.

பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல மகனை அழைக்காது வந்த நாத்தனாரின் பக்கத்தில் கிருத்திகாவும் தீபிகாவும் வந்து அமர்ந்து கொண்டனர்..

ப்ரியாவுமே ஒரு பச்சோந்தி தானே.. முதலில் செய்யும் தமிழ் மாறன் அண்ணனை பிடித்து கொண்டு இருந்தவள்… இனி தமிழ் மாறனால் தனக்கு ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தன் தாய் வீட்டு தொடர்பாக இருக்கும் மற்ற அண்ணன் உதவி தேவை.. அதற்க்கு கிருத்திகா தீபிகாவிடம் நன்றாக பழகி ஆக வேண்டும் என்று தான் அவளுமே.

“என்ன நீங்க எப்போ வந்தது… நீங்க இங்கே தானே இருக்கிங்க. மாதுரியை காட்டி இவள் வைத்து இருக்கும் அந்த மல்ட்டி நேஷனல் கடை எப்படி போகுது…” என்று கிண்டலாக கேட்டாள்…

முன் எப்படியோ.. ஆனால் இப்போது வைபவ் வருகிறானா இல்லையா என்பது தெரிய வேண்டி இருந்ததால், அக்காவும் தங்கையுமே ப்ரியாவுக்கு ஒத்து ஊதுவது போல.

“இரண்டு நாள் லீவ் விட்டுட்டாங்க பாவம் அதனால எத்தனை கோடி லாஸ் ஆகுமோ…” என்று உச்சி கொட்ட.. என்னவோ அது பெரிய ஜோக் என்பது போல அவர்களே சிரித்தும் கொண்டனர்.

பின் மெல்ல கிருத்திகா தான்.. “ வைபவ் தான் குச்சி கட்ட போறான் என்று அத்தை சொன்னாங்க.. அப்படியா…?” என்று கேட்டாள்..

இத்தனை நேரம் சகஜமாக பேசிக் கொண்டு இருந்த ப்ரியா.. இந்த கேள்விக்கு பதில் அளிக்காது மெளனம் காத்தாள்..

தீபிகா மெல்ல.. “ என்ன ஆனாலும் சொல்லு ப்ரியா.. சின்ன வயசுல மாதுரியை பத்தி நாம எத்தனை எத்தனை கிண்டல் பேசி இருக்கோம்.. அது எல்லாம் நீ மறந்துட்டியா…?” என்று நைச்சியமாக பேச.

ப்ரியா அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல இருவருக்கும் மட்டும் கேட்கும் படி…

“அது தமிழ் அண்ணன் அவனுங்க மச்சான் வர முடியாது வைபவ் தான் அந்த சடங்கு செய்யனும் என்று சொன்னதுமே.. என் வீட்டில் இருக்கும் இந்த மாமியார் கிழவி உடனே சரி சொல்லிடுச்சி… அது எனக்கு பிடிக்கல தான்.. இதே சாக்கா வைத்து ஒன்னும் இல்லாத இந்த பெண்ணை என் மகன் தலையில் கட்ட நினைத்தா…

அப்போ கூட சரி என்று தான் நினைத்தேன்.. நையிட் ட்யூஷன் முடிச்சி வீட்டுக்கு வந்த வைபவ் கிட்ட இது போல டா சிந்தியாவுக்கு.. நீ புதன் கிழமை ட்ஷனுக்கு போக வேண்டாம்… மாமா வீட்டிற்க்கு போகனும்..” என்று சொன்னதுக்கு அவன் முகத்தில் வந்த அந்த சந்தோஷத்தை நீங்க பார்த்து இருந்து இருக்கனும்..”

இது வரை என்ன இது சொல்ல வேண்டியதை சொல்லாது நீட்டி முழக்கி கொண்டு இருக்கிறாளே என்று சலிப்பாக கேட்டு கொண்டு இருந்த அக்கா தங்கை இருவரும் ஒரு சேர.

“அப்படியா..?” என்று ப்ரியாவிடம் கேட்டு விட்டு இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டு ஒரு சிரிப்பும் சிரித்து கொண்டனர்…

ப்ரியா சொல்லும் ஆர்வத்தில் பாவம் இதை கவனிக்காது… “ ஆமாம்… அப்போவே எனக்கு சந்தேகம் அவன் ரூமுக்கு போனவன்.. சாப்பிட கூப்பிடும் போது தான் வெளியில் வந்தான்.. பின் திரும்ப ரூமுக்கு போனவன் காலையில் காபி குடிக்க வந்தது.. அதுவும் எப்போதுமே அவன் ரூமை தாழ் போடவே மாட்டான்.. அன்னைக்கு பார்த்து அவன் ரூமை லாக் பண்ணியதில் எனக்கு ரொம்ப சந்தேகம் வந்துடுச்சி…

காலையில் தான் தாப்பால் போடாது இருந்தான் நான் என்ன செய்தேன் அவன் குளிக்கும் சமயம் அவன் ரூமுக்கு போனேன்… அவன் டேபுல் எல்லாம் ஆராய்ந்தேன் ஒன்னும் கிடைக்கல…

ஏதோ ஒரு இதுவுல அவன் ஸ்கூல் பேக் செக் செய்தா என் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவின் ஆல்பத்தில் இருக்கும் சிந்தியாவை போட்டோ எல்லாத்தையும் வெட்டி எடுத்து ஒரு அட்டையில் ஒரு பூ படம் வரைந்து ஒவ்வொரு இதழிலும் சிந்தியாவின் முகத்தை மட்டும் எடுத்து ஒட்டி வைத்து இருக்கான்..

கூட கீழே. இன்று உனக்கு இந்த பின்னும் ஓலை தான்… நாளை நமக்காகவும் நம் குழந்தைகளுக்காகவும் வீடு கட்டி கொடுக்கும் முதல் படி என்று வேறு எழுதி வைத்து இருக்கான்..” என்று ப்ரியா சொன்ன நொடி கிருத்திகாவும் தீபிகாவும் சட்டென்று சிரித்து விட்டனர்…

பதினைந்து வயது ஆகிறது வைபவுக்கு… இந்த வயதில் இப்படி எழுதி இருக்கிறான் என்றால் சிரிப்பு வர தானே செய்யும் சிரித்தார்கள்.. அதில் தப்பு இல்லை ஆனால் அதை வைத்து குடும்ப அரசியல் செய்ய பார்க்க நினைத்தது தான் தவறு..

வைபவுமே சின்ன பையன் தான்.. அதுவும் முன் எல்லாம் முன் என்றால் அவனின் பதினொன்னாம் வயது வரை அவன் எதிரிலேயே சிந்தியாவோடு ஜோடி சேர்த்து பேசிய அன்னையின் பேச்சு கேட்டு வளர்ந்த வைபவுக்கு டீன் ஏஜ் கொடுத்த அந்த ஆர்வத்தில் இது போல செய்து விட்டான்.. கூப்பிட்டு வைத்து பேசி இருந்து இருக்கலாம்.. ஆனால் இது எல்லாம் பக்குவப்பட்டவர்கள் செய்வது. அது ப்ரியாவிடம் எதிர் பார்க்க கூடாது தானே..

அது கூட முன் நாம் தான் சிந்தியாவோடு மகனை சேர்த்து வைத்து பேசியதை எல்லாம் மறந்து விட்டு… அந்த சின்ன பெண் தான் தன் மகனை மயக்க பார்க்கிறாள் என்று நினைத்தது அதை அப்படியே தன் அண்ணனிடம் கேட்டது எல்லாம் வந்த வகையில் பார்த்தாலும் அது நியாயம் ஆகாது தானே….

இதோ நியாயத்தின் எதிர் பதமான அநியாயத்தின் முதல் கட்டமாக ப்ரியாவின் அருகில் வந்த மாதுரி..

“அண்ணி வைபவ் வெளியில் இருக்கானா அண்ணி.?” என்று கேட்டதற்க்கு ப்ரியா.

“ அவனை ஏன் கேட்கிற….?” என்று கேட்டவளின் கேள்வி பாவம் மாதுரிக்கு புரியவில்லை..

அப்போது தான் வைபவ் எங்கு என்று கேட்க வந்த தமிழ் மாறன் காதிலுமே தங்கையின் பேச்சு விழ.. புருவ சுழிப்புடன்..

“உங்க வீட்டிற்க்கு வந்த போது உன் மாமியாரிடம் நான் எதுக்கு வைபவ் தேவை என்று சொல்லிட்டு தானே வந்தேன்.. அவங்களுமே சரி என்று தானே சொன்னாங்க..” என்று தமிழ் மாறன் விளக்கமாக சொன்னாலுமே தங்கையின் பாவனையும் அவள் பேசும் தோரணையும் தமிழ் மாறனுக்கு சரியாக படவில்லை..

எதோ வில்லங்கமாக சொல்ல போகிறாள் என்று தமிழ் மாறன் சரியாக தான் யூகித்தான்..

ஆனால் தன் மனைவியையும் இப்போது தான் இளம்குறுத்தான தன் மகளையும் ஆள் மயக்கி என்பது போல பேசுவாள் என்று அந்த அண்ணன் நினைத்து பார்க்கவில்லை….
 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
226
Arumai. Very eager to see how they react when they know the real financial status of Tamizh. Great going Viji ma. Eagerly waiting for next epi.

Iva paiyanai keduthu vechutu, inga pesa vanthutala????
 
Last edited:
Active member
Joined
Aug 16, 2024
Messages
321
இவ்வளவு மட்டுமா பேசுவார்கள் இவர்கள் இன்னும் அதிகமாக பேசுவார்கள்.
 
Well-known member
Joined
May 11, 2024
Messages
211
பெரியவங்களை தான் பேசுவாள் என நினைச்சேன். சின்ன பொண்ணையும் விட்டு வைக்கலையா.
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
246
Vaibhav vandhu surprise ah irangidanum… epdi irukkum Priya ku…
Ava magalukku than 20 lakhs ku nagai pottan annan… antha nandri unarvu kooda illa 😡😡😡

Last epi la Vimalan wife Kritika nu irunthuthu…

Intha epi la Varman wife Krithika nu irukku… change pannunga
 
Top