Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்...16

  • Thread Author
அத்தியாயம்….16

நேரம் ஆறு மணி ஆகிய பின்னும் இன்னுமே தண்ணீர் ஊற்றுவதற்க்கு உண்டான வேலையை ஆரமிக்கவில்லையா என்று பாக்கிய லட்சுமி தான் மாதுரியிடம் சொன்னது…

“வைபவ் கூச்சப்பட்டு வெளியில் நின்னுக்கிட்டு இருக்கானோ என்னவோ.. நீயுமே இப்படி மச மசன்னு நின்னுட்டு இருந்தா வேலை ஆகுமா..? போய் ப்ரியாக்கிட்ட சொல்….” என்று மருமகளை அனுப்பி பாக்கியலட்சுமி சங்கரிடம்…

“ப்பா சின்ன பையன் கூட இருந்து பாரு…” என்று சொல்ல சங்கரும் தலையாட்ட.. அதை பார்த்த பாக்கிய லட்சுமி ..

“அக்காவும் தங்கையும் நல்லா புருஷனை தலையாட்ட பழகி வைத்து இருக்கிங்கடி….” என்ன தான் இப்போது பெரிய மகனின் சூழலில் பாக்கிய லட்சுமி மனது மாறி இருந்தாலுமே, அந்த மாமியார் தனம் போகவில்லை போல..

மாதுரி போல அவள் தங்கை ஒன்றும் அமைதியானவள் இல்லையே.. அதனால்.. “ எல்லாம் என் தாய் மாமன் பொண்டாட்டியை பார்த்து தான் அத்த நாமுமே இப்படி தான் நம்ம புருஷனை வைத்து கொள்ளனும் என்று நினச்சி அது போல ஆனது.” என்றவளின் பேச்சு பாக்கிய லட்சுமிக்கு புரியவில்லை..

புரிந்து இவள் நம்மை தான் சொல்கிறாள் என்றதில்..

“அடியே வாய் ரொம்ப அதிகம் தான் கூடி இருக்குடி உனக்கு.. யப்பா நான் தப்பித்தேன் டி யம்மா.. நல்ல வேலை என் மருமகள் உன்னை போல வாயடி இல்ல.” என்று சொன்னவர் சங்கரிடம்.

“ஆனாலும் உன் அம்மா பாவம் தானப்பா…” என்று கிண்டலாக பேசிக் கொண்டு இருந்தார்..

அந்த சமயம் தான் மாதுரி மாமியார் சொன்னதற்க்கு ஏற்ப ப்ரியாவிடம் சொன்னவர்.. வைபவ் பற்றி கேட்டது…

அதற்க்கு ப்ரியா. வைபவ் எதற்க்கு கேட்கிறிங்க என்று கேட்ட போது தான்.. தன் பின் வந்து நின்ற தன் கணவனை திரும்பி பார்த்து நீங்க சொல்லவில்லையா…? என்பது போல பார்த்தாள்..

தமிழ் மாறனுக்கே தங்கையின் பேச்சு குழப்பத்தை தான் ஏற்படுத்தியது… நாம தெளிவா இவள் இருக்கும் போது தான் இவள் மாமியாரிடம் சொன்னோம்.. அவருமே சரி என்று தானே சொன்னாரு… நினைத்ததை தன் தங்கையிடம் கேட்டான்…

அதற்க்கு தான் தன் மாமியார் ஒரு கூறு இல்லாதவள் என்பது போல ப்ரியா பேசியது.. பேச்சு அதோடு விட்டு இருந்து இருந்தால் கூட பரவாயில்லை பிரச்சனை பெரியதாக ஆகி இருக்காது..

ஆனால் ப்ரியாவுக்கு அன்று நேரம் சரியில்லை போல அதனால் தான் ..

“அண்ணா எனக்கு ஒன்னு புரியல.. இது போல குச்சி கட்டுவது எல்லாம் தாய் மாமன் தானே செய்வது.. இப்போ எதுக்கு நீங்க என் மகன் கட்டனும் என்று அடம் பிடிக்கிறிங்க…?” என்று கேட்ட தங்கையை என்ன இது போல என்பது போல பார்க்க..

அப்போது தான் பாக்கியலட்சுமி.. “ இன்னும் என்ன இங்கு மச மச என்று நின்னுட்டு இருக்கிங்க… ஏன்டி ப்ரியா வைபவ் எங்கே….?” என்று கேட்டவரிடம்…

“என் பையனை நான் கூட்டிட்டு வரலேம்மா…நீங்க தான் அப்போவே நம்ம பெரிய அண்ணனை மாதுரியை காட்டி இவளுக்கு குச்சி கட்ட ஒத்துக்கிட்டிங்க. அதுக்கு உண்டான பலனா கட்டினா நான் மாதுரியை தான் கட்டுவேன் என்று வந்து நின்னார்…

உங்களை போல எல்லாம் ஆரம்பத்தில் விட்டுட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று எல்லாம் என்னால நிற்க முடியாது…” என்றது தான் தமிழ் மாறனும் …

“பார்த்து பேசு… புரியுதா.. இப்போ நீ பேசிட்டு இருக்கிறது என் மனைவியையும் மகளையும்..” தன் ஒற்றை விரலை காட்டி மிரட்டினான்..

முதலில் எல்லாம் பார்வைக்கே அடங்கி போகும் ப்ரியா.. அதாவது அண்ணனினால் ஆதாயம் கிடைக்கு சமயத்தில் அடங்கி இருந்த ப்ரியா இனி அண்ணனிடம் இருந்து நமக்கு ஒன்றும் கிடைக்காது என்றதில் முன் அடங்கி இருந்ததையும் சேர்த்து வைத்து மொத்தமாக பேசி தன் பெரிய அண்ணன் உறவையே முற்றிலுமாக முறித்து கொள்ளும் படி ஆகி விட்டது.. ஒரு சமயம் அதற்க்காக தான் திட்டம் போட்டு பேசியதோ என்னவோ…

ப்ரியா அண்ணனிடம் இந்த மிரட்டலுக்கு… “ ஓ புரிந்து விட்டதா. நான் உங்க பொண்டாட்டி பொண்ணை பத்தி தான் பேசுறேன் என்று.. நான் என்ன இல்லாததையா அப்படி பேசினேன்… நடந்ததை தானே சொல்றேன்… நம்ம அம்மாவுக்கு அவங்க அண்ணன் மகளை தான் தன் பெரிய மருமகளா கொண்டு வர ஆசை. ஆனா நீ இவங்க அழகுல மயங்கி தானே கட்டுனா இவங்களை தான் கட்டுவ என்று நின்னது. இப்போ அதே போல என் மகனை உங்க பொண்ணை சீவி சிங்காரித்து என் மகன் முன்னாடி நிற்க வைத்து என் மகனை மயக்க தானே இந்த ப்ளான்…”

இவளின் இந்த பேச்சுக்கள் பேசும் போது இடை இடையே பாக்கிய லட்சுமி விமலன் வர்மன். ஏன் சுகந்தி கூட.. “ என்ன இது பேச்சு என்பது போல யோசித்து பேசு என்று தான் சொன்னது..”

ஆனால் ப்ரியாவுக்கு தான் சொல்ல வேண்டியதை சொல்லி தான் தீருவேன்.. இப்போது அனைவரின் முன்னும் சொல்லி விட்டால் தான் தனக்கு நல்லது…

உண்மையில் சிந்தியா பார்க்க அத்தனை அழகு.. அதுவுமே இப்போதே இவ்வளவு அழகு வளர வளர இன்னுமே தான் அழகு கூடி தான் போவாள். மகன் இப்போதே அந்த பெண்ணுக்காக குச்சி கட்டுறேன் வீடு கட்டுறேன் என்று பினாத்திட்டு இருக்கான். நாளை பின்னே தமிழ் மாறனை போல கட்டினா இவளை தான் கட்டுவேன் என்று வந்து நின்னா…. ஒன்னும் இல்லாத வீட்டில் இருந்து பெண் எடுத்து நான் என்ன பண்ண போறேன். இதற்க்கு இப்போதே முடிவு எடுப்பது தான் நல்லது என்று நினைத்து ப்ரியா திட்டம் போட்டு தான் இதை பேசியது..

பாவம் அவளுக்குமே இப்போதையே தமிழ் மாறனின் உண்மையான நிலமை தெரியாது… தன் மற்ற இரண்டு அண்ணன்கள் சொன்ன தமி இப்போ எல்லாம் மத்தவங்க இடத்தில் தான் வீடு கட்டி தரான்… அதுவும் அந்த இடம் வாங்குவதற்க்கு நிறைய இடத்தில் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கான் போல.. அது கட்ட கடனை அடைக்கவே காலத்துக்கும் அவன் சம்பாதிப்பது போய் விடும் போல.

அதனால் தான் மாதுரி கடை வைத்து இருக்கு… அதுல கிடைக்கும் பணத்தில் தான் குடும்பமே ஓடுது போல. என்று சொல்ல.. அதை வைத்து தன் பெரிய அண்ணனை விட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்று கொள்வது நல்லது என்று நினைத்து பேச.

பாக்கிய லட்சுமி மகளின் இந்த பேச்சுக்கு முதல் முறை அழுகையே வந்து விட்டது. சின்ன பெண்… தன் பேத்தியை பற்றி என்ன இது பேச்சு… என்று திட்ட..

அப்போதுமே ப்ரியா நான் இல்லாததை பேசவில்லை.. தமிழ் மாறன் மாதுரியை தான் கட்டுவேன் என்று நின்று தானே கட்டி கொண்டது.. அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று எல்லாம் பார்த்தானா…? அது தான் வாதமாக இருந்தது…

அது ஒரு வகையில் உண்மையும் கூட. ஆனால் தமிழ் மாறன் தான் மாதுரியை தான் திருமணம் செய்வேன் என்று நின்றானே தவிர… மாதுரியை பொறுத்தவரை இது பக்கா பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் தான்..

அதை தான் தமிழ் மாறன் சொன்னான்… மாதுரி என்னை மயக்கவில்லை நான் தான் பயங்கினேன்… அதுக்கு அழகு என்று சொல்ற. ஆனால் அழகு மட்டுமே பார்த்து நான் கட்டி இருந்தா நான்கு ஆண்டுகளுக்கு முன் மற்ற உறவுகள் விலகியது போல அவளுமே விலகி போய் இருந்து இருப்பா எல்லாத்திலுமே கூட அவள் நின்னு இருந்து இருக்க மாட்டாள்….”

இதை முதலில் நிறுத்து நிதானமாக தான் பேசினான் தமிழ் மாறன்.. இன்று மகளின் விழா.. இதோ தங்கள் அறையில் இருந்து பயந்து கொண்டு வெளியில் பார்த்து கொண்டு இருக்கும் தன் மகளை பார்த்த தமிழ் மாறன். இதை பெரியதாக விரும்பவில்லை…

மகளுக்கு இது வரை பேசியதை வைத்து என்ன புரிந்து கொண்டு இருக்கிறாள் என்பது புரியவில்லை…

அதுவும் தாயை பற்றி மயக்கி.. நான் விரும்பி… சொல்லலாம் தான்… உன் அம்மாவை அத்தனை பிடித்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்று நான் என் மகளிடமும் மகனிடமும் சொல்லலாம்.. சொல்லுவான். ஏன் என்றால் அவன் காதல் அழகில் மயங்கி போய் வந்த காதல் இல்லை… அழகு பொறுமை.. இதை அனைத்தையும் தான்டி… பார்த்ததுமே ஒரு பிடித்தம் வரும் அந்த அவனின் அந்த பிடித்த மாதுரியிடம் தமிழ் மாறனுக்கு வந்தது…

இதோ அவனின் பிடித்தம் தவறு இல்லை என்று கடந்த நான்கு ஆண்டாக அவனுக்கு புரிய வைத்து கொண்டு இருக்கிறாள் அவனின் மனைவி... இதை தன் குழந்தைகளிடம் சொல்வதில் தமிழ் மாறனுக்கு அசிங்க எல்லாம் கிடையாது..

ஏன் என்றால் அவனின் காதல் அசிங்கமானதோ… அவமானமோ கிடையாது.. இன்று வரையுமே அவனின் காதலை நினைத்து தன் காதல் மனைவியை நினைத்து அவனுக்கு பெருமை தான்..

ஆனால் ப்ரியா சொல்லும் விதம் தன் குழந்தைகளின் மனதில் ஏதாவது தவறாக பதிந்து விட கூடாது என்று தான் தமிழ் மாறன். வேண்டாம் பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக பேசியது..

ப்ரியாவுக்கு இப்போது என்ன சொல்வது என்று இருக்க கிருத்திகா இதோடு சண்டை முடிவுக்கு வந்து விட போகிறது.. இத்தனை நேரம் சிரித்த முகத்துடன் வலைய வந்த மாதுரி கண்கள் கலங்கி போய் கணவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டு இருக்கும் அந்த காட்சி அவளுக்கு எப்படி தெரிந்ததோ… ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது.. மாதுரி கண்கள் கலங்கி என்ன அனைவரின் முன்னும் அவள் கதறி அழ வேண்டும் என்று நினைத்து விட்டாள் போல..

ஆனால் தமிழ் மாறன் மனைவியை அந்த நிலைக்கு விட்டு விடுவானா என்ன.?

தமிழ் மாறன் கடைசியாக. மனைவியிடம்… “ வேறு யாராவது வைத்து பார்த்துக்கலாம்.. இது எல்லாம் பின் பார்க்கலாம்.” என்று குழந்தைகளை கண் காட்டி சொன்னான்.

ஆனால் ப்ரியாவுக்குமே பின் பேச என்ன இருக்கு..? இன்னக்கே எல்லாத்தையும் முடித்து கொள்ள வேண்டும் என்று இருந்தது..

கிருத்திகாவுக்கும் தீபிகாவுக்குமே இந்த சண்டை இதோடு முடிந்து போவதில் விருப்பம் இல்லை..

அதனால் கிருத்திகா… மெல்ல . “ ப்ரியா பயப்படுவதிலும் அர்த்தம் இருக்கு…” என்று சொன்னவன் வைபவ்.. கிரிட்டிங்க கார்டில் எழுதியதை அனைவரின் முன்னும் சொல்லி விட்டான்..

ப்ரியாவுக்கு தான் மகன் செய்ததை சொல்லாது இந்த உறவை வெட்டி விட பார்த்தாள்.. ஆனால் கிருத்திகா சொல்லி விடவும்… அவளை ப்ரியா முறைத்து பார்க்க..

கிருத்திகாவோ… அவள் காதில்.. “ உன் நினைப்பு எனக்கு தெரியும் டி… இது சொன்னால் தான் நீ நடப்பது நடக்கும்.. இல்லேன்னா இந்த வீட்டு பெண் தான் உன் மருமகள்.. என்ன ஒன்னும் இல்லாத வீட்டு பெண்ணை உன் வீட்டுக்கு எடுத்துக்க ஆசையா என்ன…?”

என்ன பேசினால் ப்ரியா பொங்கும் என்று தெரிந்து.. அதை சொல்ல அவ்வளவு தான் ப்ரியா சண்டைக்கு வா சண்டைக்கு வா என்பது போல் தான் ப்ரியா..

“இப்போ என்ன சொல்ல வர்றிங்க அண்ணா நீங்க… தான் மயங்கினிங்க.. மாதுரி மயக்கல அது தானே…”

ப்ரியா மீண்டும் மீண்டும் அந்த மயங்கி மயங்கி என்று சொன்ன அந்த வார்த்தை தமிழ் மாறனுக்கு கோபத்தை கொடுத்தது என்றால், அதை தூண்டும் விதமாக கிருத்திகாவும் தீபிகாவும்.. சொன்ன…

“ஏன்னா சிந்தியாவுமே அவள் அம்மா போல அழகு தானே.. அதுக்கு தான் ப்ரியா பயப்படுறா… அவள் பயப்படுவதும் நியாயம் தானே.. இப்போவே அந்த பையன் இது போல எழுதி வைத்து இருக்கான்..” என்று சொன்ன தீபிகா.

கூடவே… “ நானும் தான் பார்ப்பேனே… சிந்தியா எப்போதுமே வைபவ் கையை பிடிச்சிட்டு தானே சுத்திட்டு இருப்பா…”

இந்த வார்த்தையை கேட்டு கொண்டு இருந்த சிந்தியாவுக்கு என்ன புரிந்ததோ… கதவு ஓரமாக யாரும் தொட கூடாது.. உன்னையும் தொட விட கூடாது என்று சொல்லி இருந்த தன் அம்மாவின் பேச்சை கேட்டு நின்று கொண்டு இருந்த அந்த குழந்தை ஓடி வந்து தன் தந்தையின் கையை பிடித்துக் கொண்டது..

அக்கா அழுகவும் அவன் தம்பி ஷரத்துக்கு என்ன புரிந்ததோ.. அவனுமே அக்காவின் கை பிடித்து கொண்டு அழுக..

உண்மையில் தமிழ் மாறன் ஒரு ஆண்மகனாக தன்னை கீழாக உணர்ந்த சமயம் அது அவனுக்கு…

ஒரு கை பிடியில் மனைவி.. கலங்கி போனவளாக இருக்க.. தன் மறு கையில் தன் மகள் சின்ன பெண்.. இந்த சமயத்தில் ஒரு பெண்ணா இயற்க்கை கொடுத்த வலியே புதியதாக சமாளித்து கொண்டு இருக்கும் பெண் கலங்கி போய் இருக்கிறாள்.. அதை ஒரு தகப்பனாக அதை நான் ஒரு கைய்யாலக தனத்துடன் அதை நான் பார்த்து கொண்டு இருப்பதா…?

தன் நிலமைக்கு ஏற்ப புரிந்து கொண்டு நடக்கும் மனைவிக்கும், தன் குழந்தைகளுக்கும் நான் என்ன நியாயத்தை செய்கிறேன்… அதுவும் தன் உறவுகளே… தன் குடும்பத்தை அழ வைத்து அசிங்கப்படுத்தி பார்த்து கொண்டு இருக்கும் போது…

தன் பெண்ணின் முகத்தை பற்றி… “ தோடா செல்லம் அழ கூடாது.. என் அம்மூ எப்போதுமே அழ கூடாது புரியுதா. அப்பா நான் இருக்கேன் லே அழ கூடாது.. நீ அழுதா அப்பாவுக்குமே அழ வருதுடா.. தோ பாரு சின்ன பையன் நீ அழ பயந்து போய் தம்பியும் அழறான்..” என்று சொன்னதுமே சிந்தியா தன் கண்ணீரை துடைத்து கொண்டவள்..

“நான் அழலேப்பா நான் அழலே…” அவளையும் மீறி வரும் அந்த கண்ணீரை துடைத்து கொண்டே அந்த குழந்தை சொன்ன விதமானது…

தமிழ் மாறனை நான் இனி எதை பற்றியும் யோசிக்க கூடாது என்ற முடிவினை எடுக்க வைத்தது.

தன்னிடம் பேசிய மூன்று பெண்களான. தன் தங்கை தன் தம்பிகளின் மனைவிகளை பார்த்து கேட்ட தமிழ் மாறனின் கேள்வியானது..

இது தான்… ப்ரியாவிடம் கேட்டான்.. “ மயக்குறது மயங்குறதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா….? படிக்க அனுப்பினா அதை செய்யாது… பஸ் ஓட்டறவனை பார்த்தது.. அவனை உன்னை பார்க்க வைத்தது.. வீட்டில் காலேஜ் போறேன் என்று சொல்லிட்டு அவன் கூட ஊரை சுத்தினது.. படிப்பை கூட முடிக்காது கல்யாணத்துக்கு அலைந்து செய்து கொண்டது..

ஆனா பாரு என் மாது.. என்னை பார்க்கல.. நான் திரும்ப திரும்ப இதை தான் சொல்வேன் அவள் என்னை பார்க்கல.

அவளுக்கு நான் சொந்த மாமா பொண்ணு தான்… என் கிட்ட ஒரு வயதுக்கு மேல முகம் கொடுத்து கூட பேசினது கிடையாது… எனக்கும் பிடித்து கூட அவள் படித்து முடிக்கும் வரை வெயிட் பண்ணி…

அதுவும் என் விருப்பத்தை அவள் கிட்ட சொல்லி எல்லாம் நான் அவள் கூட ஊர சுத்தல பெரியவங்க கிட்ட முறையா பேசி தான் அவளை கல்யாணம் செய்து கொண்டேன். இப்போ சொல்லு யார் ஆள் மயக்கி…? என் மனைவி போல தான் என் மகளுமே அழமு மட்டும் கிடையாது குணத்திலுமே, என் மகளுக்கும் அவள் அழகுக்கும் குணத்திற்க்கு என்னை போலவே ஒருத்தன் அவள் தான் வேண்டும் என்று கேட்டு வருவான் அவளுக்கு நான் கல்யாணம் செய்து கொடுப்பேன்.. ஆனா அது கண்டிப்பா உன் மகன் இல்லை புரியுதா…?” என்று தங்கையிடம் பேசிய தமிழ் மாறனின் பார்வை தீபிகா கிருத்திகா பக்கம் திரும்பியது.

“நீங்க இரண்டு பேரும் என்ன சொன்னிங்க.. ப்ரியா பயப்படுவது நியாயமா…? அவள் நியாயம் இருக்கட்டும் இப்போ நான் உங்க இரண்டு பேரு நியாயத்தை பார்க்கலாமா..?

பதினைந்து வருஷம் முன்ன… என் அப்பா கிட்ட வாங்கின இருபது லட்சம் கொடுத்த அன்று அந்த நாள் உங்க இரண்டு பேருக்கும் நியாபகம் இருக்கா…?” என்று கேட்டதுமே இரண்டு பெண்களும் பதை பதைத்து தான் போயினர்..

இதில் கிருத்திகா தீபிகாவின் பதட்டத்தை பார்த்து அந்த நாள் பத்தி தமிழ் மாறன் சொன்னதுக்கு நாம் பயப்படுறோம் இவள் ஏன் பயப்படுகிறாள் என்று நினைக்க… தீபிகாவுமே அதையே தான் நினைத்தாள்…








 
Top