Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்...17

  • Thread Author
அத்தியாயம்…17

உண்மையில் விமலனும் , வர்மனும் மாதுரி சிந்தியா பற்றியதான இந்த பேச்சு பிடிக்கவில்லை தான் … தங்கை கிருத்திகா தீபிகா இவர்களின் இந்த பேச்சில் இடையிட்டு என்ன இது என்பது போல தடுத்து தான் பார்த்தனர்…

ப்ரியா எப்படியோ ஆனால் அவர்களின் மனைவிமார்கள் கணவனின் பேச்சை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்ளாது தான் பேசிக் கொண்டு இருந்தனர்,.. காரணம் இவர்களின் வாழ்க்கையில் எப்படி காதல் அன்னியோனியம் இல்லையோ… அதே போல் தான் இது வரை பெரியதாக இவர்களுக்குள் சண்டைகள் என்பதும் இல்லை…

அதனால் என்ன இவர்கள் செய்வார்கள் என்பது போல் தான் பேசிக் கொண்டு இருந்தனர்..

ஆனால் தமிழ் மாறன் முதலில் ப்ரியாவின் அந்த காதல் விசயத்தை சொன்ன போது இது அனைவருக்கும் தெரியும் தானே…. ஆனால் முன் இந்த காதலை காதலித்தார்கள் திருமணம் செய்து கொண்டார்கள்… அப்படியான கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர்..

ஆனால் தமிழ் மாறன் வாய் மூலம் சொன்னதில் ஆமாம் படிப்பு முடியாது அப்படி என்ன காதல் கல்யாணம் இப்படியாக தான் நினைத்தனர்..

ப்ரியாவுக்கோ சொல்லவே தேவையில்லை.. அதுவும் மாதுரியின் தாய் வீட்டவர்கள் இருக்கும் போது தமிழ் மாறன் இப்படி பேசவும்.. அவளுக்கு மிகவும் தலை இறக்கமாக இருந்தது..

மாதுரி என்னை பார்க்கவில்லை… அவள் உத்தமி போலவும்.. நான் என்னவோ எதுக்கோ அலைந்து கொண்டு கல்யாணம் செய்து கொண்டது போலான இந்த பேச்சில் ப்ரியா அழுதே விட்டாள்..

அதுவும் தன் தாய் வீட்டவர்கள் தனக்கு ஆதரவாக யாரும் வராது போனதில் இன்னுமே அவளுக்கு மனது உடைந்து தான் போய் விட்டது..

அதுவும் குறிப்பாக அவளின் அன்னை பாக்கிய லட்சுமி. ..” நான் தான் வாயை மூடு வாயை மூடு என்று சொன்னேன் தானே… நீ கேட்டியா…?” என்று அண்ணனை அடக்காது தன்னை திட்டியதில் முதல் முறை தனக்கு யாரும் இல்லாது தனித்து போனது போலான ஒரு உணர்வு அவளுக்கு எழுந்தது… ஸ்ரீவச்சனும்.. .”நான் தான் வைபவை கூட்டிட்டு வரலாம்… உன் அண்ணன் நமக்கு எவ்வளவோ செய்து இருக்கார் என்று சொன்னேன் தானே… இப்போ பாரு உன்னோடு சேர்ந்து எனக்குமே அசிங்கமா போச்சி…” என்று கணவனுமே தன்னை கண்டித்ததில் ஒன்னுமே தனித்து தான் நின்று விட்டாள்..

ப்ரியா இப்படி என்றால் ப்ரியாவின் நிலையே மேல் என்பது போல் தான் தமிழ் மாறன்.. கிருத்திகாவையும் தீபிகாவையும் பார்த்து இப்படியான கேள்வி கேட்டதில், ப்ரியா தன் நிலை மறந்து கூட.. தீபிகா கிருத்திகாவை பார்த்தாள்...

பார்த்தவள் கண்களுக்கு அவர்களின் முகத்தில் தெரிந்த அந்த பதட்டத்தை பார்த்து என்னவாக இருக்கும் என்று அவளே யோசிக்கும் போது மற்றவர்கள் யோசிக்க மாட்டார்களா…? .

அதுவும் அந்த நாளை தேதி வாரியாக சொல்லி விட்டு… தமிழ் மாறன் “ ஒரு சிலதை எப்போதுமே சொல்ல கூடாது என்று தான் நான் நினச்சிட்டு இருந்தேன்.. ஏன் இன்ன வரை நான் என் மாது கிட்ட கூட நான் இதை பத்தி நான் சொன்னது கிடையாது…” என்ற கணவனையே பார்த்து கொண்டு இருந்த மாதுரி என்ன நினைத்தாளோ….

“என் கிட்ட கூட இது வரை சொல்லாத விசயம் என்றால், அதுவும் இவங்களை பற்றியதான விசயம் என்றால், நீங்க எப்போவும் சொல்லவே தேவையில்லை அத்தான்….” என்ற மாதுரியின் பேச்சில் தமிழ் மாறன் தன் மனைவியை பார்த்தான்.

சாதாரணமாக இருந்தால் மனைவியின் இந்த பேச்சை தமிழ் மாறன் கேட்டு இருந்து இருப்பான் தான்.. ஏன் என்றால் முன் அவன் படித்த பாடம் அவனுக்கு அதை தான் உணர்த்தியதும்..

ஆனால் மனைவியின் முகத்தை பார்த்த போது அழுது அழுது வீங்கி போய் இருந்த மனைவியின் முகத்தையும் அல்லவா பார்த்து விட்டான்.

அதுவும் ஒரு பக்கம் தன் மீது சாய்ந்து இருந்த மகள் அழுது அழுது அழுகையை அடக்கியதால் அது ஒரு நிலைக்கு மேல் ஓய்ந்து போனவளாக அவள் உடல் மட்டும் அசைய. அது கொடுத்த அதிர்வு அவனின் உடலுமே உணர்ந்ததில்..

ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் மிகவும் நல்லவனாக இருந்தால், அவனை முட்டாள் என்றோ… இல்லை பிழைக்க தெரியாதவன் என்றோ.. இல்லை இவனை அனைவருமே எளிதாக ஏமாற்றி விடலாம் என்றும் மிக எளிதாக அவனை பற்றி நினைத்து விடுகிறார்கள்.

தான் இருக்க தன் மனைவியை பற்றி… அதுவும் கிருத்திகாவும் தீபிகாவும் பேசியதில் ஒன்றை மட்டும் அவன் உணர்ந்தான்.. அது தான் நான் அதை பற்றி மூச்சு விட மாட்டேன் என்ற என் மீது அவர்கள் வைத்து இருக்கும் அந்த நம்பிக்கை..

நான் இவர்களுக்கு உணர்த்திய அந்த நம்பிக்கை தானே என் எதிரிலேயே தன் மனைவியையும், என் மகளையுமே தவறாக பேச வைக்கிறது…

இனி இவர்கள் என் குடும்பத்தை பற்றி யோசிக்க வேண்டும்.. இன்று நான் அமைதியாக இருந்தால், நாளை என்ன என்ன பேசுவார்களோ… சொல்ல முடியாது… இன்று நான் சொல்லாது விடுத்தால் என்னை பற்றி தவறாக கூட இவர்கள் திரித்து விட கூடும்…

அதை எல்லாம் என் மனைவி நம்ப மாட்டாள் தான்… அது எனக்கு நிச்சயம்.. ஆனால் இனி யாரின் முன்னும் நானும் என் குடும்பமும் தலை குனிந்து நிற்க கூடாது என்று முடிவு எடுத்தவனாக…

முதலில் கிருத்திகாவிடம் தான் கேட்டது… “ அண்ணனுக்கு காதல் சொல்லிட்டு உன்னால எப்படி தம்பியை கல்யாணம் செய்து கொள்ள முடிந்தது…?” என்று தான்.

அடுத்து தீபிகாவிடம்… கிருத்திகாவை காட்டி “ அவளாவது பரவாயில்லை… “ ஆனா நீ… ஒரு ஆம்பிள்ளைக்கு முத்தம் கொடுக்குற நீ எல்லாம் ஒரு பெண்… கூச்சமே இல்லாம அந்த வீட்டிலேயே வாழ வந்து எப்படி தினம் தினம் நீ என் முகத்தை பார்த்துட்டு இருக்க… ஆனா பாரு உன்னை பிடித்து தள்ளி விட்ட எனக்கு தான் முன் ஓன்னா இருக்கும் போது அக்கா தங்கை இருக்கும் போது எல்லாம் உங்க முகத்தை பார்க்க முடியாது… ஒன்னு என் போனை பார்த்துட்டு இருப்பேன். இல்லேன்னா என் பொண்டாட்டி முகத்தை பார்த்துட்டு இருப்பேன்..” என்று அவர்கள் செய்ததை போட்டு உடைத்து விட்டான்…

ஆம் தமிழ் மாறன் திருமணத்திற்க்கு முன்.. அக்கா தங்கையான கிருத்திகாவும், தீபிகாவும் இருவருமே ஒரே நாளில் தனி தனியாக தன் காதலை தமிழ் மாறனிடம் சொல்லி இருந்தார்கள்…

உண்மையில் தமிழ் மாறனிடம் சொல்ல தூண்டியது… அவர்களின் தாய் லட்சுமியினால் என்று தான் சொல்ல வேண்டும்…

அப்போது பாக்கிய லட்சிமியின் அண்ணன் உயிரோடு இருந்த சமயம் அது… தமிழ் மாறன் சரியான வேலை இல்லாது குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சென்ற போது பாக்கிய லட்சுமியின் அண்ணன்..

“என்ன பாக்கியா.. மத்த பசங்களை போலவே நீ பெரிய மாப்பிள்ளையையுமே ஐடி படிக்க வைத்து இருந்து இருக்கலாமே.. இப்போ பாரு…மூன்று வருஷம் வேலை பார்த்தும் இருபத்தி ஐந்து ஆயிரம் தான் சம்பளம்.. வயதும் இருபத்தி ஐந்து ஆக போகுது… என் பெரிய பெண்ணுக்கும் கல்யாண வயசு ஆகுது.. கல்யாணம் செய்யனும்… அடுத்து வேறு ஒருத்தி இருக்கா.. இருவருக்கும் ஒரு வயது தான் வித்தியாசம்.. இப்போ பார்த்து செய்தா தான் சரியா இருக்கும்…ஆனா தமிழ் இப்படி சம்பாதித்தா…” என்ற அண்ணனின் பேச்சு பாக்கிய லட்சுமிக்கு புரிய தான் செய்தது…

அண்ணன் தங்கை இருவருமே முன் பேசியது.. கிருத்திகா இல்லை தீபிகா இருவரில் ஒருவரை தான் தமிழ் மாறனுக்கு திருமணம் செய்து வைப்பது போல.

இது லட்சுமிக்கும் தெரியும்.. முன் எல்லாம் அதற்க்கு ஆட்சபேனை செய்யவில்லை.. காரணம் தமிழ் மாறனின் தோற்றம். பார்க்க அத்தனை அம்சமாக இருப்பான். படிப்பும் நன்றாக உள்ளது.. எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்… கொடுத்தால் நல்லது தான் என்பது தான் அவரின் எண்ணமும், அதனால் கணவன் இதை சொல்லும் போது எல்லாம் அதை ஏற்பது போல தான் இருந்தார்..

ஆனால் தமிழ் மாறன் வேலைக்கு சென்று முதல் மாதம் சம்பளமாக பதினைந்தாயிரம் வாங்கிய போது என்ன இது என்று தான் ஆனது லட்சுமிக்கு…

அதுவும் அடுத்த வருஷமே விமலனும், வர்மனும் படிப்பு முடித்து விட்டு கேம்பஸிலேயே வேலை கிடைத்து ஆரம்பமே முப்பது ஆயிரம் வாங்கியவர்கள் இரண்டாம் வருடத்தில் இருவரும் வேறு வேறு ஐடி கம்பெனிக்கு சென்று ஐம்பது ஆயிரம் சம்பளத்தை வாங்கிய போது லட்சுமியின் பார்வை அவர்கள் பக்கம் சென்றது…

அதில் கணவனிடம்…. “பேசாம நம்ம இரண்டு பெண்களையும் வர்மனுக்கும், விமலனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாமுங்க…. அக்கா தங்கை உங்க தங்கை வீட்டுக்கே வாழ போகட்டுமே…” என்று சொன்ன போது…

கணவன். “ நான் பாக்கியா கிட்ட பெரிய மகனுக்கு தானே கொடுப்பதா சொல்லி இருக்கேன்..” என்று சொன்னவரிடம்..

லட்சுமி… “ தோ பாருங்க நம்ம இரண்டு பெண்ணுங்களே இருபத்தி ஐந்து ஆயிரம் சம்பாதிக்கிறாங்க.. நீங்க இவங்களை விட கம்மியா சம்பாதிகிறவனை என் பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளையா ஆக்குவீங்கலா… நான் சொல்வது போல பேசுங்க… உங்க தங்கை கிட்ட நாசுக்காவே இது போல சொல்லி வைங்க. புரியுதா..” என்று சொல்ல..

அவருமே அதை தான் தங்கையிடம் மறு ஒலிப்பரப்பு செய்தது.. அதில் பாக்கிய லட்சுமியே… “ சரி அண்ணா அப்போ வர்மனுக்கோ விமலனுக்கு கிருத்திகாவை நான் எடுத்து கொள்கிறேன்…”

எல்லா பெண்களும் விரும்புவது போல. தன் தாய் வீட்டு உறவு தனக்கு எப்போதுமே தேவை என்று தன் மற்ற மகனுக்கு எடுத்து கொள்கிறேன் என்று சொன்னது..

ஆனால் பாக்கிய லட்சுமியின் அண்ணனோ.. “ அக்கா தங்கையை ஏன் பிரிக்கனும் பாக்கியா இரட்டையர்களுக்கே என் இரண்டு.. பெண்களையும் கொடுத்து விடுகிறேன்.. உன் பிள்ளைகளும் பிரியாது ஒத்துமையா இருப்பாங்க…” என்று மனைவி செய்ய சொன்னதை கச்சிதமாக செய்து முடித்து விட்டார் பாக்கிய லட்சுமியின் அண்ணன்…

அதன் ஆதங்கத்தில் தான் பாக்கிய லட்சுமி தன் கணவனிடம் பெரியவனையும் சின்னவனுங்க படித்த படிப்பையே படிக்க வைத்து இருக்கலாம் என்று சொன்னது.

அதற்க்கு சீனிவாசன்.. பெரியவன் திறமையானவன் கண்டிப்பா அவன் ஜெயிப்பான் என்று சொன்னவரிடம்.. பாக்கிய லட்சுமி.. தானும் தன் அண்ணனும் பேசியதை கூறினார்…

அதற்க்கு சீனிவாசன்… “ நம்ம பசங்களுக்கு விருப்பம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளட்டும்.. எனக்கு என் உறவு உன் உறவு இதுல வேற்றுமை எல்லாம் இல்ல பாக்கியா..” என்று சொன்னவரிடம்..

“இல்லேங்க சின்னதுல இருந்தே நான் பெரியவன் முன்னாடி கிருத்திகா தீபிகா கிட்ட உங்க இரண்டு பேரில் ஒருத்தி தான்டி என் மூத்த மருமகள் என்று சொல்லி இருக்கேன்.. நம்ம மூத்த மகன் மனசுல தேவையில்லாத ஆசையை வளர்த்து வைத்து விட்டு இருந்தா…” என்ற இந்த பேச்சுக்கு மட்டும் சீனிவாசன் திட்டவட்டமாக..

“அப்படி எல்லாம் இல்ல பாக்கியா.. நீ மத்த இரண்டு பசங்களுக்கு உன் அண்ணன் பெண்களை எடுக்கிறது என்றால் தாரளமாக எடு…” என்று விட்டார்..

ஏன் என்றால் சீனிவாசனுக்கு அப்போதே தன் பெரிய மகனுக்கு தன் தங்கை மகளை பிடிக்குமோ என்ற லேசாக ஒரு சந்தேகம் இருந்தது..

ஆனால் அதை உறுதியாக எல்லாம் தெரியாது.. தெரிந்தது அவனின் கன்செக்ஷனுக்கு மாதுரியின் பெயரை வைத்த போது தான்..

ஆனால் பாக்கிய லட்சுமி இதை பற்றி தன் மற்ற மகன்களிடம் வாய் திறக்கவில்லை… எந்த ஒரு தாயிக்குமே தன் மூத்த மகனின் திருமணம் பேசாது இளைய மகன்களின் திருமணத்தை பற்றி எப்படி பேசுவார்..

அந்த சமயம் தான் தமிழ் மாறன் தன் தந்தையிடம் தன் தொழிலுக்கு என்று இருபது லட்சத்தை கேட்டு வாங்கியது… இதுவுமே பாக்கிய லட்சுமியின் அண்ணன் வீட்டிற்க்கு தெரியும்..

அப்போது கூட பாக்கிய லட்சுமியின் அண்ணி லட்சுமி பெரியதாக எடுத்து கொள்ளவில்லை… ஆனால் இது என்ன நம்ம மாப்பிள்ளைக்கும் பங்கும் தானே அதுல இருக்கு என்று லட்சுமி தன் கணவனிடம் கேள்வி கூட கேட்டார் தான்.. அப்போது அவர் வர்மனும் விமலனும் தான் தன் மாப்பிள்ளை என்று முடிவே செய்து விட்டார்..

ஆனால் அடுத்த ஆண்டே அந்த இருபது லட்சத்தை கொடுத்து விட்டே தமிழ் மாறன் கூடவே விற்க பெரிய அளவில் வீடு எழும்பி நிற்பதை அன்றே பாக்கிய லட்சுமி மிக பெருமையாக பேசியில் தன் அண்ணனை அழைத்து சொன்னார்..

என்ன தான் அண்ணனாக இருந்தாலுமே, தன் மூத்த மகனை குறைவாக பேசியது அந்த தாய்க்கு பிடிக்கவில்லை.. அதனால் உடனே சொல்லி விட..

அவரோ தன் மனைவியிடம்.. “ பார்த்தியா நீ தான் ரொம்ப அவசரப்பட்டு என் தங்கை கிட்ட நம்ம இரண்டு பெண்ணையும் விமலனுக்கும், வர்மனுக்கும் பேசி முடிவு செய்ய சொல்லிட்ட… எனக்கு எப்போதுமே தமிழை ரொம்ப பிடிக்கும்.. ம் இப்போ என்ன செய்யிறது.. யாருக்கு கொடுத்து வைத்து இருக்கோ…” மனைவியிடம் ஆதங்கப்பட்டவர்.. ஒரு பெரும் மூச்சும் விட்டு கொண்டார்..

ஆனால் லட்சுமி ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்டு விடும் எண்ணம் எல்லாம் இல்லை. “ ஏன் இப்போ மட்டும் என்ன குறைந்து போயிடுச்சி.. இப்போ என்ன நம்ம இரண்டு பெண்களுக்கும், வர்மன், விமலன் கூட நிச்சயமே செய்து விட்டோம்…” என்று பேசும் லட்சுமியை அதிர்ச்சியாக பார்த்த அவர் கணவன்.

“என்ன லட்சுமி சொல்ற.. உன் பேச்சு கேட்டு நான் ஒரு வருஷம் முன்னே என் தங்கை கிட்ட பேசி விட்டேனே இதை பத்தி…” என்று சொன்ன கணவரிடம்..

“ இதை பத்தி ஒரு வருஷம் முன் தான் பேசியது.. ஆனா பாருங்க நம்ம இரண்டு பெண்களை ஒருத்தியை அந்த வீட்டிற்க்கு மூத்த மருமகளாக போவதை பற்றி எப்போவிலிருந்தே பேசியது… புரியுதுங்கலா..” என்ற மனைவியின் பேச்சு பாவம் அந்த வெள்ளந்தி ஆளுக்கு புரியவில்லை தான் போல..

லட்சுமி தான் பொறுமையாக தன் கணவனிடம்… “ தோ பாருங்க.. அவங்க இரண்டு பேருக்கும் கொடுப்பதை பற்றியதான அந்த பேச்சு . பேசியது நீங்களும் உங்க தங்கையும் மட்டும் தான் புரியுதுங்கலா…” என்று சொல்ல.

அப்போதும் புரியாது இருக்க. இந்த பேச்சை கேட்டு கொண்டு இருந்த கிருத்திகாவும் தீபிகாவும் தான் தன் தந்தையிடம்..

“ப்பா பா அம்மா சொல்றது புரியலையா.? நீங்களும் அத்தையும் பேசியது எங்க யாருக்கும் தெரியாது… அதாவது நீங்க எங்களிடம் கேட்காம தான் வர்மனுக்கும் விமலனுக்கும் எங்களை திருமணம் செய்து கொடுப்பதை பற்றி பேசினிங்க. அதே போல பேசினதை நீங்க வீட்டிலும் சொல்லவில்லை..” என்று சொல்ல.. பாவம் அப்போது தான் அவருக்கு புரிந்தது..

ஆனால் அப்போது கூட.. “ இது தப்பு இல்லையா.? என்று தான் கேட்டார்..

லட்சுமி தெளிவாக சொல்லி விட்டார்… “ நான் நினைப்பது இது தான்.. பெரிய மகனை விட்டு மத்த மகனுக்கு பெண் கொடுப்பதை பத்தி நீங்க பேசியதை உங்க தங்கை அவங்க மகன்களிடம் சொல்லி இருக்க மாட்டாங்க.. வேண்டும் ஆனால் உங்க மச்சான் கிட்ட வேணா சொல்லி இருக்கலாம்… “

பெண்மணி புத்திசாலி தான்.. சரியாக யூகித்து தான் அனைத்தும் சொன்னார்.. திட்டமும் இட்டார்..

“ தோ பாருங்க இப்போ நாம உங்க தங்கை வீட்டிற்க்கு போறோம்… எனக்கு எதுவுமே தெரியாதது போல தமிழுக்கு நம்ம மகள்களை கொடுப்பதை பத்தி பேசுறேன்.. உங்க தங்கை நீங்க பேசியதை பத்தி கேட்டா நான் வீட்டில் இதை பத்தி சொல்லலே என்று சொல்லுங்க.. நானுமே. அப்போ தான் இது தெரிவது போல அதிர்ச்சியாகி உங்க தங்கை எதிர்க்கவே உங்களை திட்டுறேன்.. பெரியவன் மனசுல ஆசையை விதைத்து விட்டு மாத்துறது தப்பு.. என்பது போல பேசுறேன்…” என்று கணவனிடம் கட்டளை இட்ட லட்சுமி..

தன் இரு மகள்களை பார்த்து.. “ தோ பாருங்க டி.. நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு வாங்க… உங்க இரண்டு பேரில் ஒருத்தி தான் அந்த வீட்டிற்க்கு மூத்த மருமகளா போகனும்…” என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினார்.

பாவம் முதலில் இருந்த தமிழ் மாறனுக்கு யாரை திருமணம் செய்து வைப்பது என்று ஒன்றாக சொல்லி இருந்து இருக்கலாம்..

முதலில் இருந்தே உங்க இரண்டு பேரில் ஒருத்தி உங்க இரண்டு பேரில் ஒருத்தி என்று சொல்லி சொல்லியே பேசியதில்..

இவர்கள் இரண்டு பேருமே யாருக்குமே தெரியாது ஒரு புதிய திட்டத்தை தீட்டி தான் அவர்களின் அத்தை வீட்டிற்க்கே சென்றது..

அதாவது இரண்டு பேருமே தமிழ் மாறனிடம் காதல் சொல்வது என்று… ஆனால் இதை ஒருவருக்கு ஒருவர் சொல்லி கொள்ளவில்லை என்பது தான் விசேஷமான ஒரு செய்தி…

இதோ லட்சுமி திட்டம் இட்டது படியாக அத்தை வீட்டிற்க்கு வந்த கிருத்திகாவும் தீபகாவும் தமிழ் மாறன் அத்தான் வரவுக்காக காத்து கொண்டு இருந்தனர்…

லட்சுமியும் கணவனிடம் சொன்னது போல் தான் தன் நாத்தனாரிடம்.. “என்ன அண்ணி உங்களுக்கும் எங்க தமிழ் மாப்பிள்ளைக்கு அடுத்து இன்னும் இரண்டு பசங்க இருக்காங்க.. எனக்குமே இரண்டு பெண்கள் இருக்காங்க. வயசு வித்தியாசமும் அதிகம் இல்லை.. அடுத்து அடுத்து இரண்டு பேருக்குமே திருமணம் செய்யும் வயசு தான். இப்போ தான் மாப்பிள்ளை செட்டில் ஆயிட்டாருல அண்ணி… சீக்கிரம் கல்யாணத்திற்க்கு தேதி குறித்து விடலாமா…?” என்று கேட்க..

பாக்கிய லட்சுமி தான் என்ன இது என்பது போல் தன் அண்ணனை பார்த்தார்.. அந்த அண்ணனோ மனைவி சொன்னதை தப்பாது நாடகமாக நடத்தியதில் பாக்கிய லட்சுமியும் நம்பி விட.

“நல்ல வேல இதை பத்தி நான் என் இவர் கிட்ட மட்டும் தான் சொன்னேன்..” என்று சீனிவாசனை காட்டியவர்…

லட்சுமியிடம் நீங்க சொன்னது போலவே செய்து விடலாம் அண்ணி.. என்றும் சொல்ல.. அதை கேட்ட கிருத்திகாவுக்கும், தீபிகாவுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கையில் தான் வீடு வந்த தமிழ் மாறனை தனியாக சந்தித்து கிருத்திகா…

“அத்தான்…” என்று அழைக்க.. தமிழ் மாறனும்… சாதாரணமாக என்ன கிருத்திகா என்று மாமா பெண் என்ற முறையில் தான் கேட்டது…

“இல்ல எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்…” என்றவளின் பேச்சு தமிழ் மாறனுக்கு பாதி புரிந்தது…

கிருத்திகாவுக்கோ.. தன்னை இல்லை தீபிகா. தீபிகாவுக்கு முன் தமிழ் மாறன் தன்னை கை காட்டினால் தனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்..

அதற்க்கு தீபிகாவுக்கு முன் தான் முந்திவிட வேண்டும் என்ற எண்ணம்.. அதன் தாக்கத்தில் சட்டென்று… “ ஐ. லவ். யூ அத்தான்..” என்று சொல்லி விட்டாள்..

உடனே தமிழ் மாறனிடம் இருந்து.. “ எனக்கு அந்த தாட் இல்ல கிருத்திகா… இனி இதை பத்தி பேசாதே.” என்று விட்டான்.

அதற்க்குள் யாரோ வரும் அரவம் கேட்க. கிருத்திகாவுக்கு அவமானமாக இருந்தாலுமே, இது யாருக்கும் தெரிய கூடாது என்று நினைத்தாள்..

அதனால் அவளும் ஓடி விட்டாள்.. அடுத்து தீபிகாவை பார்க்கலாம்… தீபிகா எப்போதுடா தமிழ் மாறனை தனியாக பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்க அதற்க்கு தோதாக ப்ரியா தமிழ் மாறன் அறைக்கு காபி கொண்டு செல்ல.. அப்போது ப்ரியா நிறைமாத கர்பினி…

அவள் கையில் இருந்த காபியை தீபிகா வாங்கி கொண்டு… “நான் போய் கொடுக்கிறேன் ப்ரியா… நீ போய் ரெஸ்ட் எடு…” என்று சொல்லி அனுப்பி விட்டு தமிழ் மாறன் அறைக்கு வந்தவள் பார்த்தது இருப்பில் ஒரு டவல் மட்டும் கட்டிக் கொண்டு இருந்த தமிழ் மாறனை தான்..

தமிழ் மாறனோ கிருத்திகா சொன்ன காதலில் எரிச்சல் அடைந்தவன்… தன் அறைக்கு வந்து தலைக்கு குளித்தவன்….

“தன் மனதில் மாதுரி தான் இருக்கிறாள் என்பதை எப்படி வீட்டில் சொல்வது. கொஞ்சம் நாளாக தன் அண்ணன் மகளை தான் இந்த வீட்டிற்க்கு மூத்த மருமகளாக கொண்டு வரனும் என்ற பேச்சு இல்லாது இருந்தது.. இவனுமே பரவாயில்லை என்று இருக்கு இந்த கிருத்திகா காதல் சொன்னதில், தான் மாதுரியை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பதை சொல்லி விட வேண்டும்… இன்னும் நிறைய நாள் எல்லாம் சொல்லாமல் விட கூடாது.. அது வீணான ஆசைக்கு வழி வகுக்கும் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டே தன் தலையை துவட்டிக் கொண்டு இருந்த மனதில்..

தமிழ் மாறனுக்கு உதித்தது தான்.. கன்செக்ஷன் வைக்க வேண்டும்.. அதை பதிவும் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தான்.. ஆனால் அதற்க்கு பெயரை எல்லாம் யோசிக்கவில்லை.. இப்போது முடிவு செய்து விட்டான்.. மாதுரி என்று இப்படி யோசித்தவனின் முகம் இன்னுமே அழகாக..

சட்டை இல்லாதவனை பார்த்த போதே கிறங்கி கொண்டு இருந்த தீபிகா தமிழ் மாறனின் அந்த முக அழகில் கவரப்பட்டு எதை பற்றியும் யோசிக்காது எக்கி அவன் கன்னத்தில் முத்தம் வைக்க…

தமிழ் மாறன் ஏதோ ஒரு நினைவில் இருந்தவன் சட்டென்று தன் கன்னத்தில் முத்தம் இட்டத்தை கிரகிக்கவே அவனுக்கு சிறிது நேரம் பிடித்தது.. புரிந்த நொடி தீபிகாவை பார்த்தவன் சட்டென்று அரைந்தும் விட்டான்..,

“தொலச்சிடுவேன்… ஜாக்கிரதை சீ நீ எல்லாம் ஒரு பெண்.. இனி என் ரூமுக்கு வந்தே அவ்வளவு தான்… என் மாமன் முகத்திற்க்காக பார்க்கிறேன்.. ஓடி போயிடு…” என்று விரட்டி விட்டான்.

அன்று இது தான் நடந்தது.. இப்போது புரிகிறதா ஏன் கிருத்திகாவும் தீபிகாவும் மாதுரி மீது ஏன் பொறாமை படுகிறார்கள் என்று…

அனைத்தும் கேட்ட வர்மனுக்கும் விமலனுக்கும் தன் அண்ணன் முகத்தை பார்க்க முடியவில்லை…

மாதுரியை பார்த்து இவர்கள் இரண்டு பேரும் பொறாமை படுவது இருவருக்குமே தெரியும் தான்.. ஏன் அவர்களே மாதுரியை பற்றி நல்லவிதமாக பேசி விட்டால் போதும்.. ஒரு மாதிரியாக தான் பேசுவார்கள்..

அதற்க்கு உண்டான காரணம் இப்போது புரிய…. தமிழ் மாறன் கேட்டதையே தான் விமலனும் வர்மனும் கிருத்திகா, தீபிகாவை பார்த்து கேட்டனர்..

“எப்படி ஒருவனிடம் காதல் சொல்லி அதே வீட்டில் அவன் தம்பியை கல்யாணம் செய்ய உங்களால் முடிந்தது என்று..?” என்று கேட்டு விட்டு இருவரும் செல்ல… அவர்கள் பின் கிருத்திகாவும், தீபிகாவும் ஓட.. ப்ரியாவை அவள் கணவன் இழுத்து கொண்டு போக…

பாக்கிய லட்சுமி தன் கண் முன்னவே அவரின் குடும்பம் துண்டு துண்டாக பிரிந்து போவதை பார்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியாது செய்வது அறியாது நின்று விட்டார்..

ஆனால் சிந்தியாவின் விசேஷம்.. மாதுரியின் தாய் வீட்டை வைத்து கொண்டு சிறப்பாகவே செய்து முடித்து விட்டாள் சிந்தியா…

ஆம் சிந்தியாவின் தண்ணீர் ஊற்றும் வைபோகம் வைபவ் வரவில்லை என்றதுமே மாதுரியின் இரண்டு அண்ணிகளும் தத்தம் கணவன் மார்களை அழைத்து விட்டனர்..

இங்கு நிலமையை சொன்னவர்கள் இருவரில் ஒருவர் கண்டிப்பாக வர வேண்டும் என்றும் தீர்த்து சொல்லி விட்டனர்..

அதில் மனோகரன் செங்கல்பட்டு வரை ரிப்பேர் செய்த வண்டியை நீங்கஏ கொண்டு வந்து கொடுங்க அதுக்கு உண்டான பேமெண்டையும் கொடுத்து விடுகிறேன் என்றதில் மனோகரன் அப்போது செங்கல்பட்டில் தான் இருந்தான்..

ஆனால் உடை அழுக்காக வண்டி ரிப்பேர் செய்யும் உடையிலேயே இருக்க. அதை தயக்கத்துடன் சொல்லவும்..

சுகந்தி… “ யோவ் இங்கு உன் தங்கை முகத்தில் கரியை பூசுறாங்க. உனக்கு உன் ட்ரஸ் கரியா இ ருக்கு என்று சொல்றியா ஒழுங்கா வா.. உங்க மச்சான் ட்ரஸை கூட போட்டுக்கலாம்..” என்றதில் மனோகரம் அரை மணி நேரத்தில் வந்து விட்டான் என்றால் பிரபாகரன்… விசயம் கேள்வி பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து ரிப்பேர் செய்து வைத்து இருந்த காரை எடுத்து கொண்டு வந்து சேர்ந்ததில் சிந்தியாவின் தண்ணீர் ஊற்றும் விழா தடங்கல் இல்லாது நடந்து முடிந்தது….








 
Top