Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்...18

  • Thread Author
அத்தியாயம்….18

இதோ விழா முடிந்து ஐந்து நாட்கள் முடிவடைந்து அவர்களின் அன்றைய திங்கள் கிழமை எப்போதும் போல விடிந்தது… மாதுரி பெண்ணின் விழா முடிந்து ஐந்து நாட்கள் வீட்டில் வைத்திருந்து பெண்ணுக்கு அது போலான நாட்களின் கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளை கொடுத்தாள்..

அதனால் கடைக்கு மாலை இரண்டு மணி நேரம் மட்டும் தான் அவள் செய்ய வேண்டியதை செய்து கொடுத்து விட்டு வீட்டிற்க்கு வந்து விடுவாள்..

அந்த நேரத்தில் சிந்தியாவுக்கு துணையாக மாதுரியின் மாமியார் பாக்கிய லட்சுமி தான் இருந்தது…

மாதுரியின் அண்ணி சுகந்தி.. விழா முடிந்த அன்று இங்கு நடந்து முடிந்த பிரச்சனையில்…தன் நாத்தனாரிடம்.. “ மாதுரி நான் வேணா இங்கு இருக்கட்டுமா….?” ஒருத்தி என்ன செய்வாள்.. அதுவும் இப்போது நாத்தனார் கடை வைத்தும் நடத்துக்கிறாள் என்பது அவளுக்கு தெரியுமே.. ஒரு நாள் இரண்டு நாள் கடையை அடைக்கலாம்.. அதிக நாட்கள் என்றால், இந்த கடையின் வாடிக்கையாளர்கள் வந்து வந்து பார்த்து விட்டு சென்றால், மற்ற கடையை தேடி சென்று விடுவார்கள் என்று தன் வீட்டின் முன் சின்னதாக ஒரு பெட்டி கடை வைத்து இருக்கும் மாதுரியின் அண்ணிமார்கள் சுகந்தி லதாவுக்கு தெரியும்.. அதனால் தான் லதாவிடம்..

“நீ சமாளிச்சிப்பே தானே..” என்று தன் ஒரவத்தியிடம் கேட்டு விட்டு தான் தன் நாத்தனார் மாதுரியிடம் கேட்டது…
மாதுரிக்கு தன் தாய் வீட்டின் நிலை தான் அனைத்தும் தெரியுமே… பணகஷ்டம் என்பது அந்த அளவுக்கு இல்லை என்றாலுமே, அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பவர்கள் தான் மாதுரியின் தாய் வீட்டவர்கள்..

காஞ்சிபுரத்தில் மெயினில் தான் அவர்கள் வீடு உள்ளது… அதனால் தான் இவர்கள் வீட்டு முன் தான் அவளின் இரு அண்ணங்களும் மெக்கானிக் ஷாப் வைத்து நடத்துவது… இரு அண்ணங்களுக்கும் திருமணம் முடிந்த பின்னே… இரு பெண்களுமே கலந்து பேசி தான் மெக்கானிக் ஷாப் பக்கத்திலேயே சின்னதாக ஒரு கடை கட்டி அதை வீட்டு மருமகள்கள் மாறி மாறி பார்த்து கொள்வார்கள்…

வீட்டு பின் பக்கம் நிறைய இடம் உள்ளது அதில் இரண்டு கரவை மாட்டை வாங்கி வீட்டிற்க்கு போக மிச்சத்தை விற்பனை செய்து விடுவார்கள்… அதனால் வீட்டு பெண்களுக்குமே எப்போதுமே வேலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்..

மாதுரியின் அண்ணிகள் தாய் வீட்டுக்கு கூட அவ்வளவாக போக மாட்டார்கள்.. அப்படி ஏதாவது விசேஷம் என்று சென்றால் கூட விசேஷம் முடிந்ததுமே வீடு வந்து விடுவார்கள்..

மாதுரியின் அண்ணிகள் இரண்டு பேருமே அசலில் இருந்து தான் பெண் எடுத்தது.. அது என்னவோ இரண்டு அண்ணிகளுமே அவ்வளவு அனுசரனையாக வந்தது… ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்..

அதனால் தான் சுகந்தி நான் இருக்கிறேன் என்று கேட்டதற்க்கு … “பரவாயில்லை அண்ணி நான் மேனஜ் செய்து கொள்வேன்… இப்போ நான் ஓகே தான்…”

இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் விழா முடிந்த அன்று பத்து மணியளவில் தமிழ் மாறன் வீட்டில் நடந்தது… ப்ரியாவும் தீபிகா கிருத்திகாவும் அப்படி ஒன்று சேர்ந்து பேசியதில் தான் மாதுரி தாங்க முடியாது கொஞ்சம் தளர்ந்து போனது.. அதுவும் தன் மகளையுமே இது போல சொல்லவும்.. அய்யோ என்ன இது என்று தான் இன்னுமே உடைந்து போய் விட்டாள்..

பின் கணவன் பேசியது அவர்கள் சென்றதும் தன் அண்ணன்கள் இருவர்களின் வருகை மாதுரிக்கு யானை பலத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அழுது ஒய்ந்து போய் இருக்கும் தங்கையின் தோள் தொட்டவர்கள்..

“என்ன டா ம்மா இது.. ம் உன் பெண்ணே பெரிய மனுஷியா ஆகிட்டா. நீ இப்படி ஒடஞ்சி போய் உட்காரலாமா…? நீ இப்படி உட்கார வேண்டும் என்று நினச்சி தான் அவங்க அப்படி பேசியதே… நீ இப்படி இருந்தா அவங்க நினச்சது சாதிச்சது போல தானே டா….

நான் உன்னை பத்தி உன் அண்ணி கிட்ட எல்லாம் அவ்வளவு பெருமையா சொன்னேன்.. பார்த்தியா என் தங்கை எந்த நிலையிலுமே நீந்தி கரை வந்துடுறா என்று.. நீ இப்படி அழலாமா….?” என்று கேட்ட இரு அண்ணன்களின் கை பிடித்து கொண்ட மாதுரி… தன் மூத்த அண்ணனின் அந்த கீரிசன் சட்டையிலேயே தன் முகத்தை துடைத்து கொண்டவள்..

“நான் அழல அண்ணா… நம்ம குட்டியையுமே… “ என்று ஆரம்பித்தவளை மேல பேச விடாது..

“தோ பாரு அவள் எவ்வளவு ப்ரைட்டா இருக்கா என்று… நீ தான் சரியான அழு மூஞ்சி. இல்ல..” என்று தன் மருமகளை பார்த்து கேட்க.. அவளும் சிரித்து கொண்டு ஆமாம் என்று தலையாட்டினாள்.

ஆம் அவளுக்கு தண்ணீர் ஊற்றும் முன்னவே தன் மகளை தனியாக அழைத்து சென்ற தமிழ் மாறன் என்ன பேசினானோ… திரும்பி வந்த மகளின் முகத்தில் அத்தனை தெளிவு…

இப்போது மகள்.. “ ப்பா அம்மாவையும் தனியா அழச்சிட்டு போய் பேசுங்க ப்பா.. அப்போ தான் ம்மா அழ மாட்டாங்க….” என்று சொன்ன மகளின் பேச்சில் அனைவருமே சிரித்து விட்டனர்…

மாதுரியுமே அப்போது தெளிந்து விட்டதில் சுகந்தியிடம் .. “ வேண்டாம் அண்ணி நான் சமாளித்து கொள்வேன்… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. ராணி என் கூட இருப்பா…”

அங்கு இருக்கும் குப்பைகளை ஒன்றாக கூட்டி கொண்டு இருந்த ராணியுமே… “ நான் பார்த்துக்குறேன் ம்மா நீங்க கவலை படாது போயிட்டு வாங்க…” என்று சொன்ன ராணி…

பின்.. “ பாப்பாவுக்கு சுத்தினது பின்ன.. நீங்க எல்லாம் ஒன்னா நில்லுங்க மாதுரியம்மா உங்களையும் சேர்த்து தான் சுத்தனும்… இது போல எந்த அம்மா வீடு கிடைக்கும்… சொல்லுங்க. அதுவும் அண்ணிங்க தங்கம்மா.. இத்தனை ஒத்துமையா நீங்க பேசுனதை கேட்டு என் கண்ணே கூட பட்டு இருக்குமா…” என்று சொன்ன ராணி சொன்னது போல மாதுரியை அவள் அண்ணன் அண்ணிகள் தங்கை குடும்பத்தோடு நிற்க வைத்து திருஷ்ட்டி கழித்த பின் தான் ராணி வீடு சென்றது…

ராணியின் பேச்சை மட்டும் அல்லாது மாதுரி தன் தாய் வீட்டவர்களோடான இந்த பேச்சுக்களை எல்லாம் பாக்கிய லட்சுமியுமே தானே கேட்டு கொண்டும் பார்த்து கொண்டும் இருந்தார்…

இதை பார்த்தவருக்கு… தன் பிள்ளைகள் இது போல ஒற்றுமையாக இல்லையே… அதுவுமே இன்று கொஞ்சம் ஒட்டிக் கொண்டு இருந்த அந்த உறவுமே மொத்தமாக வெட்டிக் கொண்டு போனது போலான நிலையில் தானே ஆகி விட்டது.

கூடவே இன்னுமே அந்த வீட்டிற்க்கு போகவில்லை.. பாக்கிய லட்சுமிக்கு போகவே அத்தனை பயமாகவே இருந்ததும். மகன்கள் தங்கள் மனைவிமார்கள் தன் அண்ணனிடம் காதல் சொன்ன விசயத்தை எப்படி எடுத்து கொள்வார்களோ… அதனால் என்ன என்ன பிரச்சனைகள் எல்லாம் அந்த குடும்பத்தில் வருமோ என்ற பயமும் இருந்தது…

ஆனால் போய் தானே ஆக வேண்டும்… ஆனால் பெரிய மகனிடம் பேச வேண்டும் என்று தான் பாக்கிய லட்சுமி காத்து கொண்டு இருந்தார்.. அப்போது தான் அனைத்துமே பார்த்தது..

ப்ரியாவின் மகன் வரவில்லை என்று தெரிந்ததும் மாதுரியின் இரண்டு அண்ணிமார்களுமே தன் கணவன்மார்களை உடனே வர வழைத்து அனைத்துமே விறு விறு என்று செய்த விதத்தை எல்லாம் பார்த்த பாக்கிய லட்சுமிக்கே மலைப்பாக தான் இருந்தது…

இதோ இப்போது நான் இருக்கேன் என்ற பேச்சில், இத்தனை நேரம் அமைதியாக இருந்த பாக்கிய லட்சுமி… “ நீங்க ஊருக்கு போம்மா. நான் இங்கு பார்த்துக்குறேன்…” என்று சொன்ன பாக்கிய லட்சுமியின் இந்த குரலும்.. சொன்ன பாங்கும் அங்கு அனைவருக்கும் புதியது தான்.

இருந்தும் அதை சொல்லாது மனோகரன்.. “ அத்தை பார்த்துக்குறேன் என்று சொல்லிட்டாங்க.. அப்புறம் என்ன கவலை … மாதுரி எங்க உதவி தேவைப்பட்டால் எதை பத்தியும் யோசிக்காது எங்களை கூப்பிடனும் புரியுதா…” என்று தன் தங்கையிடமும், தங்கை கணவனிடமும் சொல்லி விட்டு தான் அனைவரையும் அழைத்து கொண்டு சென்றது..

அவர்கள் அனைவரும் சென்ற பின்னும் அம்மா அமைதியாக இருப்பதை பார்த்த தமிழ் மாறன் தான்..

“என்ன ம்மா என் மீது கோபமா…?” என்று கேட்டான்…

அதற்க்கு பாக்கிய லட்சுமி… “ கோபம் எல்லாம் இல்லே தமிழ். பயம் தான்..” என்று சொன்னவர்.. அடுத்து என்ன சொல்லி இருப்பாரோ… தங்களின் பேச்சையே கவனித்து கொண்டு இருந்த குழந்தைகளை மனைவியிடம் கண் காட்ட..

மாதுரியுமே… “ வாங்க தூங்கலாம்.. ரொம்ப டையாடா இருக்கிங்க பாரு…” என்று சொல்லி முன்னவே சிந்தியாவுக்கு உடை மாற்றி இருந்ததால், அவள் அணிந்து இருந்த சின்ன சின்ன தன் நகைகளை மட்டும் கழட்டி அதை பத்திரம் படுத்தியள் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு மதுரி ஹாலுக்கு வந்த போது பாக்கிய லட்சுமி…

“எனக்கு இது எல்லாம் முன்னவே எதுவும் தெரியாது தமிழு…” என்று சொன்னவர் பின்… அனைத்துமே சொல்லி விட்டார்..

அதாவது தமிழ் மாறன் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சென்ற போது கிருத்திகாவையும் தீபிகாவையும் வர்மன் விமலனுக்கு கொடுக்கிறோம் என்று அண்ணன் சொன்னதை சொன்னவர்.. அதை வீட்டில் சொல்லவில்லை என்றும் சேர்த்து சொல்ல.

தமிழ் மாறன்.. “ ம்மா இப்போ அந்த பேச்சு எல்லாம் எதுக்கு விடுங்க..” தன் மனைவி வருவதை பார்த்த தமிழ் மாறன். தங்களுக்கே திருமணம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகிறது.. இதோ இன்றும் தங்கள் மகளும் பெரிய மனுஷி ஆகி விட்டதற்க்கு தான் தண்ணீர் ஊற்றியது… இப்போது இது என்ன பேச்சு என்பது தமிழ் மாறனின் எண்ணம்…

பாக்கிய லட்சுமி மகன் சொன்னதை வைத்தே… “ நீயுமே பழையதை சொல்லாது விட்டு இருந்து இருக்கலாமே தமிழ்… உன் தம்பிங்க உன்னை போல எல்லாம் இல்லேப்பா அவசரக்குடுக்கை… எந்த புருஷன்மாருக்கு தான் தன் மனைவி ஒருத்தனிடம் காதல் சொன்னதை ஏத்துப்பான்.. அதுவும் தன் அண்ணனிடமே…. அவங்களுக்கும் குழந்தை எல்லாம் இருக்கு தானே தமிழ்… கோபத்தில் ஏதாவது ஏடா கூடமாக ஏதாவது செய்து வைத்து விட போறாங்க என்று பயமா இருக்கு தமிழ்..” என்ற இந்த பேச்சை கேட்டு கொண்டு தான் மாதுரி அங்கு வந்தது…

வந்தவள் ஒன்றே ஒன்று தான் தன் மாமியாரிடம் கேட்டாள்… “ அவங்களுக்கு குழந்தைங்க இருக்கு அத்தை… அவங்களை பார்க்க சொல்றிங்க… ஆனா பாருங்க அவங்க எல்லோருமே என் குழந்தையையே தான் அப்படி பட்ட வார்த்தைகள் சொன்னது… அதை நீங்க கவனிக்க வில்லைங்கலா.?” என்று கேட்ட மருமகளிடம் சொல்ல அவரிடம் பதில் இல்லாது போகலாம். ஆனால் மருமகளுக்கு இன்னும் இன்னுமே மாமியாரிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தது போல…

“முன் உங்க பெரிய மகன் நல்லா சம்பாதிக்கிறார். என்று எல்லாமே அவரை பார்க்க வெச்சிங்க.. இப்போ உன்னை போல உங்க தம்பி இல்ல என்று பேச்சையும் பொறுத்து போக சொல்றிங்க… முன்னாவது போனது பணம் மட்டும் தான் அத்த… நாங்க அதை திரும்ப சம்பாதித்து கொள்வோம்.. ஆனால் இப்போ அவங்க எங்க கிட்ட இருந்து பரிக்க நினைப்பது என் நடத்தை மட்டும் கிடையாது.. என் பெண் சின்ன பெ…” அதற்க்கு மேல் மாதுரியினால் பேச கூட முடியவில்லை…

அண்ணன் கொடுத்த தைரியம்.. அனைத்துமாக தன் கணவன் முன் நின்றது அவளுக்கு கொடுத்த அந்த தைரியம் கொடுத்த அவளின் மனமானது மகளையுமா அந்த பேச்சு பேச வேண்டும் என்று நினைத்த நொடி அதை சொல்ல கூட முடியாது அழுது விட..

தமிழ் மாறன். “ மாதும்மா என்ன டா இது விடு… நாய் மலையை பார்த்து குலைத்தால் மலைக்கு ஒரு இழுக்கும் இல்ல மாதும்மா.. புரியுதா..” என்று ஆறுதலாக மனைவியின் தோள் பற்றி சொல்ல..

எப்போதுமே மாமியார் முன் எல்லாம் கணவன் பக்கத்தில் நெருக்கமாக கூட நிற்காத மாதுரி இன்று பாக்கிய லட்சுமி முன் நிலையிலேயே.

“மாறா.” என்று அழைத்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள்.

“நம்ம குழந்தையை மாறா. அது தான் மனது ஆறவில்லை.. எப்படி எப்படி அவங்களால் இப்படி எல்லாம் பேச முடியுது. என்னை பார்க்கும் போதே எப்போதுமே அவங்க கண்களில் பொறாமையை நான் பார்த்து இருக்கேன் மாறா.. ஆனா இன்னைக்கு அதுக்கு உண்டான காரணம் எனக்கு தெரிந்தது.. சரி என்னை பார்த்து அப்படி சொன்னது…” என்ற மனைவியின் பேச்சை தமிழ் மாறன் முழுவதுமாக கூட முடிக்க விடவில்லை..

“உன்னை பார்த்து கூட யாரும் சொல்ல கூடாது… அதே போல தான் என் பெண்ணையுமே.. இதை நீ உன் மண்டையில் ஏத்தி வைத்து கொள்.. இனி ஒரு முறை உன்னை பத்தி ஏதாவது இது போல பேசினா அழுதுட்டு எல்லாம் இருக்க கூடாது… புரியுதா.. நல்லா கேட்கனும்… இனி ஒரு முறை உன் பக்கம் திரும்பி பார்க்க கூட அவங்க பயந்து சாகனும்.. ஆனா இனி வர மாட்டாங்க என்று தான் நினைக்கிறேன்…” என்று சொல்ல்ச..

இருவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த பாக்கிய லட்சுமிக்கு தோன்றியது இது தான்.. தன் ஆசைப்படி தன் பெரிய மகனுக்கு தன் அண்ணன் மகள்களில் ஒருவளை கட்டி வைத்து இருந்தால், கண்டிப்பாக தமிழ் சந்தித்து கொண்டு இருக்கும் இந்த பணப்பிரச்சனைக்கு இவனை விட்டு சென்று இருப்பாள்…

மாதுரியை போல அனைத்திற்க்கும் கணவனின் கை கோர்த்து நடந்து இருந்து இருக்க மாட்டாள் என்று நினைத்தவர்.. பின் அவர் அவர் செய்த பலனை அவர் அவர் தான் அனுபவிக்க வேண்டும்.. என்று நினைத்து மாதுரியிடம் முதன் முதலில் மன்னிப்பு கேட்டார் பாக்கிய லட்சுமி..

“என்னை மன்னிச்சிக்கோம்மா.. நீ சொன்னது போல நான் எப்போதும் போல மத்தவங்களை தான் பார்க்கிறேன்… இவன் எல்லாம் சமாளிச்சி கொள்வான் என்று… தப்பு தான் மாதுரி…” என்று மன்னிப்பு கேட்ட மாமியாரிடம் மாதுரி ஒரு பேச்சுக்கு கூட பரவாயில்லை என்று எல்லாம் சொல்லவில்லை..

பாக்கிய லட்சுமியும் ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்டு தான் தன் மற்ற வீட்டிற்க்கு ஒரு பயத்தோடு சென்றது…

அவர் பயந்தது போல் தான் இரு மருமகள்களுமே கணவன்மார்களிடம் கெஞ்சி கொண்டு இருந்தனர்…

அவர்களுமே என்ன செய்வது குழந்தைகள் உள்ளது.. இது வெளியில் சொல்லும் விசயமா என்று விட்டு விட்டனர் தான். ஆனால் முன்னவே கணவன் மனைவிகளுக்கு இடையில் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லாது தான் இருந்தனர்.. இப்போது அதை விட அதிகமாக கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி அதிகம் ஆயிற்று..

ஆனால் இங்கு தமிழ் மாறன் மாதுரிக்கு இடையில் இன்னுமே நெருக்கம் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்…

அனைவரும் சென்ற பின் தான் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கிடைத்தது..

“ மாதும்மா உன் கிட்ட இத்தனை நாள் மறைத்ததில் உனக்கு என் மீது கோபம் ஏதும் இல்லையே….?” என்று கேட்ட போது இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவள்..

தன் கணவனின் மார்பில் முகம் புதைத்து கொண்டவள் அங்கு கணவனுக்கு முத்தம் வைக்க…

“மாதும்மா வியர்வை டா…” என்று சொன்னவனிடம்..

“ம் பரவாயில்லை அழுக்கு நல்லது தான் போல. இதுவுமே ஒரு காதல் தான்…” என்று சொன்னவள் கணவனை நிமிர்த்து பார்த்தவள்..

“ உங்க அளவுக்கு எல்லாம் நான் உங்களை விரும்பி கல்யாணம் செய்துக்கல எனும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க… இரண்டு மாமன் பொண்ணுங்க.. வலிய வந்து கூட.. அதுவும் உங்க அம்மாவுக்கு உங்களுக்கு அவங்கள ஒருத்திய தான் கல்யாணம் செய்து வைக்க ஆசை என்று தெரிந்தும்.. நீங்க என்னை கல்யாணம் செய்து இருக்கிங்க…” என்று சொன்னவளின் பேச்சில் அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்த தமிழ் மாறன்.

“கல்யாணத்துக்கு முன் நீ என்னை காதலிக்காது நான் மட்டும் உன்னை காதலித்து இருக்கலாம். ஆனா கல்யாணத்திற்க்கு பின் என்னை விட நீ தான் டி என் மீது அதிகமா காதல் வைத்து இருக்க.. அதுவும் உனக்கே தெரியாது.. என் மீது உனக்கு அவ்வளவு லவ்..” என்று மனம் நிறைந்து சொன்னான் தமிழ் மாறன்.

அன்று மாலை தான் வீட்டில் மற்றவர்களால் வீட்டில் அத்தனை சண்டை நடந்தது… ஆனால் எதுவுமே அவர்கள் இருவரையும் பாதிக்கவில்லை….

மற்றவர்களை தங்கள் வாழ்க்கைக்குள் புகுத்தாது தங்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

உழைத்த பணம் எப்போதுமே வீண் ஆகாது என்று சொல்லுவார்கள் அது போல தான் பெண் பெரியவள் ஆன பின் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் பெண்ணிடம்.. அத்தனை பத்திரம் சொல்லி தன் கணவனோடு இரண்டு குழந்தைகளையும் அனுப்பி விட்டு மிச்சம் இருக்கும் வேலைகளை அனைத்தும் முடித்த மாதுரி காலை உணவையும் உண்ட பின்…

வடகறிக்கு பருப்பு ஊரை வைத்து விட்டு வடகறிக்கு தேவையான வெங்காயத்தை தோள் உரித்து கொண்டு இருந்தாள் மாதுரி.. இன்னும் சிறிது நேரத்தில் ராணி அனைவர் வீட்டிலும் வேலைகளை முடித்து விட்டு வந்து விடுவாள்…

மற்ற இரண்டு பெண்களையும் பாதி நாளுக்கு தான் வேலைக்கு அமர்த்தி இருக்கிறாள்.. அதனால் அவர்கள் மதியத்திற்க்கு மேல் தான் கடைக்கே வந்து விடுவார்கள்…

அதனால் நேரம் இருக்கும் போது அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று எல்லாம் மாதுரி காத்து கொண்டு இருக்காது செய்து கொண்டு இருந்த போது தான் மீண்டுமே தமிழ் மாறன் வீட்டிற்க்கு வந்தது..

வந்தவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி… அந்த நேரத்தில் மாதுரி கணவனை எதிர் பார்க்கவில்லை என்ன என்று பயந்து போய் தான் கணவன் முகத்தை பார்த்தாள் பெண்ணவள்..

அங்கு கண்ட மகிழ்ச்சியில் பயம் விலகி விசயம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் எழ… மனைவியை தூக்கி சுத்தி விட்டு இறக்கிய தமிழ் மாறன்..

“ மாதும்மா நம்ம இடத்தில் இருந்த பிரச்சனை எல்லாம் விலகிடுச்சி.. இனி நம்ம அந்த இடம் நமக்மே….அதுல நாம என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் டா.. செய்யலாம் மாதும்மா செய்யலாம்…”

இத்தனை நாள் தவறு தவறு இத்தனை ஆண்டுகள் அவர்கள் பட்ட கஷ்டத்திற்க்கு எல்லாம் அன்று அவர்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது…


 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
226
Awesome mam. Maadhuri, Nalla kettae un maamiyarai. Naakkai pudingakkara maadhiri.

Tamizh and Maadhuri, stay happy as always.
 
Last edited:
Well-known member
Joined
May 12, 2024
Messages
246
Pesama Maran family antha idatha vittu vereya veedu katti ponal nallam… inime avanga uravu vendave vendam… Hi Bye oda niruthina sari
 
Top