அத்தியாயம்…19
கணவன் சொன்ன செய்தியை மாதுரியினால் உடனே நம்ப முடியவில்லை… “ உண்மையா.. நிஜமா…?” என்று வேறு வேறு விதமாக தான் கணவனை கேட்டாள் பெண்ணவள்…
பின் இருக்காதா ஆரம்பத்தில் தன் கடை எதிரில் இருக்கும் அந்த இடத்தை பார்த்து பார்த்து மனம் வருந்திக் கொண்டு இருந்தவள்.. அந்த ஏரியாவில் இருப்பவர்கள் அனைவருமே அந்த இடத்தை ஒரு குப்பை கிடங்காக பயன் படுத்துவதை பார்த்து மனது பொறுக்காது…
ட்ரையின் பிடிக்க வந்த ஒருவன்… தன் கையில் இருந்த குப்பை கவரை அதில் வீசி விட்டு செல்வதை பார்த்து விட்டு…
“மாதுரி ஏம்பா உங்க வீட்டு குப்பையை எடுத்து அடுத்தவங்க இடத்தில் இப்படி தான் வீசி விட்டு போவிங்கலா…?” என்று கேட்டதற்க்கு..
“இப்போ இது யார் இடமும் இல்லை… பொது இடம் தான்.. இது உங்க கைக்கு வந்த பின்னே வேணா பார்க்கலாம்…” சொன்னவனின் பேச்சு இது உங்க கைக்கு வராது என்பது போல் தான் இருந்தது…
அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும்.. அந்த இடத்தை தாங்கள் வாங்கி இருப்பதும், அதில் கேஸ் சென்று கொண்டு இருப்பதும்.. அவள் கண் எதிரிலேயே அதில் குப்பைகளை கொண்டு வந்து போடுவதை பார்க்க தான் முடிந்ததே தவிர வேறு எதுவுமே அவளாள் செய்ய முடியவில்லை..
ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த அந்த நம்பிக்கையானது போக போக.. இந்த இடம் நம் கைக்கு கிடைக்காது என்ற மன நிலைக்கே அவள் வந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்…
இப்போது பணத்திற்க்கு ஒன்றும் கஷ்டம் இல்லை.. அதே போல கணவன் அவன் கட்டி முடிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு அனைத்திலுமே ஒரு வீட்டை தன் பெயரில் பதிவு செய்வதிலும், ஒரளவுக்கு முன் போல நிலை வந்து விட்டது என்பதும் அவள் அறிவாள் தான்.. ஆனால் அதை முன் போல அவள் வெளிக்காட்டி கொள்ளவில்லை..
முன் எல்லாம் இந்த கண் படுவது இதில் எல்லாம் மாதுரி நம்பிக்கை இல்லாது தான் இருந்தாள்.. அது என்னவோ பொருளாதாரத்தில் பெரிய அடி பட்ட உடன். தான் ஊர் கண் பார்க்க அப்படி நகைகளை வாங்கி அதை மற்றவர்கள் பார்வைக்கு போட்டு காட்டிக் கொண்டதால் தான் இந்த நிலமையோ… அதே போல கார்… அவ்வளவு பெரிய கார் வாங்கி மற்றவர்களின் பார்வைக்கு பளிச் என்று கண் படும் படி இருந்து இருக்க கூடாதோ என்ற எண்ணம் இப்போது மாதுரிக்கு..
இது ஒரு மூட நம்பிக்கை தான்.. இருந்தும் அவள் பட்ட கஷ்டங்களின் விளைவு.. இப்படியாக இருக்குமோ அப்படியாக இருக்குமோ என்று தான் அவள் யோசனை சென்றது..
அதனால் தான் இப்போது ஒரளவுக்கு மீண்டு விட்ட போதும் அதை வெளியில் காட்டி கொள்ளாது இருக்கிறாள்…
ஆனாலுமே அந்த இடம் தன் கணவனின் பன்னிரெண்டு வருட உழைப்பு அல்லவா…? தன் இடமான குப்பை மேட்டை பார்க்க பார்க்க அவள் மனது அடித்து கொள்ளும் மாதுரிக்கு..
அந்த இடம் தங்களுக்கு கிடையாது என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு இருந்த மாதுரிக்கு கணவன் சொன்ன செய்தி மகிழ்ச்சியும்.. நம்பாதன்மையும் தான் ஒருங்கே வந்தது..
அதில் .. “உண்மையா தான் சொல்றிங்கலா அத்தான்…” என்று கேட்டவளின் கன்னம் பற்றி கொண்ட தமிழ் மாறன்.
“நான் என்னைக்கு உன் கிட்ட பொய் சொல்லி இருக்கேன் மாதும்மா…” என்றவனின் பேச்சில் இல்லை என்று தலையாட்டியவளின் கண்கள் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் கலங்கி போய் விட்டன…. கூடவே ஒரு விம்மலும்.. பின் இருக்காதா….
மாதுரியின் இந்த அளவுக்கு அதிகமான மகிழ்சிக்கு காரணம்.. ஒன்று கணவனின் உழைப்பு என்றால், மற்றொன்று… அந்த இடத்தை பற்றி தெரிந்தவர்கள் அனைவருமே அவளிடம் வந்து அய்யோ இப்படி ஆகிடுச்சே… என்று கேட்டவர்களில் முக்கால் வாசி பேர்.. உண்மையான வருத்ததில் கேட்கவில்லை என்பது அவள் உணர்ந்து தான் இருந்தாள்..
ஆரம்பத்தில் யாராவது அவளிடம் வந்து பேசினாலே.. அய்யோ அந்த இடத்தை பத்தி பேசுவார்களோ… என்ன கிண்டலாக சொல்வார்களோ தன் மனம் நோக வைப்பார்களோ என்று நினைத்த காலம் எல்லாம் அவள் கண் முன் வந்து போக.
எக்கி கணவனின் கன்னத்தில் முத்தம் இட்ட மாதுரி..
“மாறா ரொம்ப சந்தோஷமா இருக்கு மாறா…” என்று தன் மகிழ்ச்சியை சொல்லியவளிடம்..
“இப்போ நான் எப்படி வெளியில் போவேன்… அதுவும் மாறா என்று வேறு கூப்பிட்ட பின்.. வீட்டில் யாரும் இல்ல… நீயும் நானுமே நான் போகனுமா..?” என்று காதல் மொழி பேசிய கணவனிடம்.
“நானுமே ரெடி தான் மாறா.. ஆனா முதல்ல எப்படி இந்த இடம் நமக்கு என்று தீர்ப்பு ஆச்சி அதை முதல்ல சொல்லுங்கப்பா…” என்று கேட்டவளிடம்..
தமிழ் மாறன்… “ ஒரு வாரம் முன் நாம இடம் வாங்கியவங்க வந்து என் கிட்ட ஒரு பத்திரம் கொடுத்தாங்க… அது என்ன பத்திரமுன்னா… அந்த இடம் வாங்கிய பணம் அவங்க அப்பாவுடைய பணம் கிடையாது. என்று நிருபிக்கும் பத்திரம்…” என்று சொன்ன கணவனின் பேச்சு மாதுரிக்கு புரியவில்லை…
அதை சொல்லவும் செய்தாள்… அதன் பின் தமிழ் மாறன் விளக்கமாகவே… “ அதாவது நாம இடம் வாங்கினவங்க அம்மாவுக்கே பரம்பரை சொத்து நிறைய இருக்கு… ஆனா அந்த காலத்தில் எல்லாம் ஆம்பிளை பிள்ளைக்கு தானே பரம்பரை சொத்து கொடுப்பாங்க… அதனால பெண்ணான இவங்களுக்கு இருக்கும் பணத்தில் ஒரு இடம் புதியதாக அந்த அம்மா பெயருக்கு வாங்கி இருக்காங்க.. ஆனா பாரு இந்த அம்மா என் பெயருக்கு வேண்டாம் என் கணவர் பெயருக்கு பத்திர பதிவு செய்து கொடுங்க என்று சொல்லி இருக்காங்க.. மகள் சொன்னது போலவே செய்தாலுமே, அந்த அம்மாவோட அப்பா என்ன நினைத்தாரோ.. நாளை பின்ன இதனால தன் ஆம்பிள்ளை பிள்ளைங்களுக்கு பிரச்சனை வந்து விட கூடாது என்று…
என் சொத்தில் என் மகளுக்கு பாகம் கொடுக்காத காரணத்தினால் என் மகன்கள் எல்லாம் சேர்ந்து கொடுத்த பணத்தில் தான் என் மகள் விருப்பத்திற்க்கு ஏற்ப.. வாங்கிய இடம் கூட தெள்ள தெளிவா குறிப்பிட்டு மாப்பிள்ளை பெயரில் இந்த இடத்தை எங்க பணத்தினால் வாங்கி கொடுத்து இருக்கேன் என்று எழுதி அதையுமே பதிவு செய்து வைத்து இருக்காரு…. அது தான் இப்போ நமக்கு கை கொடுத்து இருக்கு..
என் அம்மா சொத்தின் மூலம் தான் அந்த இடம் வாங்கியது.. அப்போ அந்த இடம் என் அம்மா பிள்ளையான எங்களுக்கு மட்டுமே உரிமையானது..
என் அப்பாவின் மூலம் பிறந்த அவங்க இந்த சொத்தில் உரிமை கோர முடியாது.. எங்களுக்கு மட்டும் உரிமைப்பட்டதை தான் நாங்க அதை நாங்க தமிழ் மாறனுக்கு விற்றோம்… இதில் யாருக்கு என்ன உரிமை இருக்கு… இது தான் நம் வக்கிலீன் வாதம்.. இன்னைக்கு தான் தீர்ப்பு வந்தது.. போன வாரமே நம்ம வக்கீல் கண்டிப்பா இது உங்களுக்கு சாதகமா தான் வரும் என்று சொன்னாரு.. நான் வரட்டும் பின் உன் கிட்ட சொல்லிக்கலாம்.. நாளைய பின்… நமக்கு எதிரா ஏதாவது வந்தா.. திரும்ப உன்னை ஏமாற்றத்தில் தள்ள விரும்பல டா….” என்று சொன்னவன்.
“ம் எனக்கு நீயே ட்ரீட் கொடுக்குற என்று சொன்னியே கொடு கொடு…” என்று தமிழ் மாறன் சொல்லி கொண்டு இருந்த வேளையில் தான் பாக்கிய லட்சுமி அங்கு வந்தது..
“எதுக்கு தமிழ் ட்ரீட் யார் கொடுப்பது.” என்று கேட்டு கொண்டே…..
பாக்கிய லட்சுமியின் இந்த கேள்வியில் சிரித்த மாதுரி.. தன் மாமியாரிடம். “ உங்க மகனே சொல்லுவாங்க அத்த. நான் போய் ஏதாவது ஸ்வீட் செய்யிறேன்…” என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் போக….
தமிழ் மாறன் நடந்ததை சொல்ல. பாக்கிய லட்சுமிக்கு அப்படி ஒரு பூரிப்பு… பின். என் பேத்தி பெரியவள் ஆன ராசி தான் தமிழ்… அந்த இடம் திரும்ப உன் கைக்கு கிடச்சி.. நீ பழைய நிலமைக்கு வந்து இருக்க…” என்று ஆனந்தத்துடன் சொல்ல…
அவசரத்திற்க்கு கேசரியை செய்து கொண்டு வந்து மாமியார் முன் வைத்த மாதுரி… “ உடனே அது என்ன அத்த ராசி எல்லாம் இழுத்துட்டு.. உங்க மகனின் உழைப்பு மத்தவங்களை ஏய்த்து சம்பாதிக்காத பணம். அதனால திரும்ப அவர் கைக்கு வந்து இருக்கு அவ்வளவு தான் அத்த…” என்றவளின் பேச்சில்..
“இப்போ நான் என் பேத்தி ராசியை சொன்னா உனக்கு என்ன வந்தது…?” என்ன நடந்தாலுமே பாக்கிய லட்சுமி மாமியார் தானே… என் பேச்சை நீ மறுப்பியா என்பது போல் தான் பேசினார்.. அவர்…
ஆனால் மாதுரி சொன்னது இது தான்… “ அந்த இடம் இது போல ஆனதில் உங்க பெண்.. ஒரு சில வீட்டில் குழந்தைகள் வளர வளர செல்வம் பெருகும்.. ஒரு சில பிள்ளைகள் வளர வளர அவங்க தத்திரம் அப்பனை தாக்கி இப்படி தான் தாழ்த்தி விட்டு விடும் என்று சொன்னாங்க அத்த. என் பிள்ளைகளை உச்சியில் வைத்து கொண்டாடவும் தேவையில்லை.. அதே போல அதல பாதளத்தில் தள்ளி விடவும் தேவையில்லை.” என்று விட்டாள்.
அதற்க்கு பின் பாக்கிய லட்சுமி வாய் திறப்பார்.
இங்கு இந்த பேச்சு நடந்து கொண்டு இருக்கும் அதே வேளையில் ஸ்ரீ வச்சன் பர பரப்புடன் அவன் வீட்டிற்க்கு சென்றவன்..
“ப்ரியா ப்ரியா…” என்று கத்திக் கொண்டே தான் தன் காலணியை வெளியில் கழட்டி விட்ட வாறு வீட்டிற்க்குள் நுழைந்தான் ஸ்ரீ வச்சன்..
அவன் இத்தனை கத்தி அழைத்து அந்த பெயருக்கு சொந்தக்காரியோ… அங்கு தான் ஹாலில் அமர்ந்து டி. வி பார்த்து கொண்டு இருந்தாள்…
“நான் இத்தனை தடவை கூப்பிடுறேன் உன் காதில் விழலையா…?” என்று கேட்ட கணவனிடம் ப்ரியா.
“ஐந்து நாளா நானுமே தான் உங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்… அப்போ நான் பேசினது உங்க காதில் விழுந்ததா..?” என்று பதில் கேள்வி கேட்டாள் ப்ரியா…
ஆம் சிந்தியாவின் தண்ணீர் ஊற்றும் விழாவுக்கு சென்று பாதியில் வந்ததில் இருந்து ஸ்ரீ வச்சன் மனைவியிடம் பேசவில்லை…
காரணம்… “ பையன் சின்ன பையன்.. ஏதோ வயசு கோலாறில் செய்துட்டான்.. இதை நாம பக்குவமா அவன் கிட்ட பேசி புரிய வெச்சி இருக்கலாம். இது போல என்று உன் மத்த அந்த இரண்டு அண்ணிங்க கிட்ட சொல்லுவீயா… அவங்க இதை வைத்தே எப்படி பேசினாங்க பார்த்தே தானே….
உன் மகன் குச்சி கட்ட பிடிக்கலேன்னா.. வேறு ஏதாவது காரணம் சொல்லி இருந்து இருக்கலாம். இப்போ பாரு அசிங்கப்பட்டது யாரு….?” என்று பேசியவன் இல்லை இல்லை சண்டை இட்டவன் தான். அதற்க்கு அடுத்து மனைவியிடம் பேச்சு வைத்து கொள்ளவில்லை…
இதற்க்கு அவள் மாமியாரும் ஆதாரவு தந்தார்… “ நான் உன் அண்ணன் கிட்ட வைபவை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன்.. அப்போ என் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்கு… கூட என் பேரனையும் உங்க பிறந்த வீட்டு முன்னாடி அசிங்கப்படுத்தி வந்து இருக்க… என் பேரனுக்கு என்ன தெரியும்.. நீ அவன் முன் பேசினதை வைத்து தானே… இப்படி செய்து இருக்கான்.. நாளைய பின்னே அவன் வளர்ந்த பின்னே.. இது வைத்து பேசி நாளைக்கு அவனை கிண்டல் செய்ய மாட்டாங்க…”
மருமகள் பிடிக்காது.. ஆனால் மருமகள் பெத்த குழந்தைகளை மட்டும் பேரன் பேத்தி என்று கொண்டாடும் வகையாக சுகுனா தன் பேரனுக்காக மருமகளை திட்டி கொண்டு இருக்க.
இந்த ஐந்து நாட்களாக ஆள் ஆளுக்கு திட்டியதில் இப்போது ப்ரியாவுக்குமே கோபம் ஏறி விட்டது.. அதில் கணவன் அழைத்ததை சட்டை செய்யாது போக..
ஸ்ரீ வச்சனுக்கோ வந்த ஆத்திரத்தில் டீவி ரிமோட்டை கீழே தூக்கி போட்டவன்.. “ இப்போ நான் உன் பெரிய அண்ணன் பத்தி தான் பேச வந்தேன்..” என்று சொல்லி கூட ப்ரியா அவ்வளவு ஆர்வம் காட்டாது தான்..
“என்ன என் பெரிய அண்ணனுக்கு…?” என்று அசட்டையாக தான் கேட்டது.
ஆனால் கணவன் சொன்ன செய்தியில் ஷோப்பாவில் அமர்ந்து இருந்தவள் வெடுக்கென்று எழுந்து கணவன் அருகில் வந்து நின்றவள் ..
“ உண்மையாவா…?” என்று நம்பிக்கை இல்லாது தான் கேட்டாள்..
கேட்டவள் பின்.. “ எப்படிங்க முடிந்தது.. அதுவும் இந்த நாளு வருஷத்தில் ஆறு வீடு… அது அடுக்கு மாடி குடியிருப்பே என்றாலுமே.. ஒவ்வொரு வீடும் ஐம்பது லட்சம் வைத்தாலுமே மூனு கோடிங்க..” என்று கை விரல் கொண்டு எண்ணி கணக்கு சொன்னவள்..
“நம்ம இந்த இடத்தின் மதிப்பு என்னங்க.. வீடு… “ என்று கணக்கு போட்டவள் ஒன்னரை கோடியை கூட தான்டலேங்க…” என்று ஆதங்கப்பட்டு கொண்டாள்..
இப்படி ஒரு சிலர் இருக்க தான் செய்கிறார்கள்.. அதாவது தன்னை விட ஒரு படி உயர்ந்து விட கூடாது.. அது உடன் பிறந்த பிறப்பாக இருந்தால் கூட. ப்ரியா தமிழ் மாறனிடம் வாங்கும் வரை வாங்கி கொண்டு இருந்தாலுமே கூட பிறந்த அனைவர்களையும் விட பொருளாதாரத்தில் தான் கீழாக இருக்கிறோம் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது.
அதுவும் விமலன் வர்மன் மனைவிகள் அனைவருமே சம்பாதிக்கிறார்கள்… அவர்களே சீக்கிரம் முன்னுக்கு வந்து விடுவார்கள்… பெரிய அண்ணன் கிட்ட கூட நாம போகவே முடியாது என்று தான் மனதில் நினைத்து கொள்வாள்..
பெரிய அண்ணன் நிலை தாழ்ந்ததில் ப்ரியா மனதிற்க்குள் கொஞ்சம் சந்தோஷப்பட்டு கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போது தமிழ் மாறன் அந்த பெரிய லாஸ்க்கு பிறகும் கூட கட்டியது எல்லாமே சொந்தமாக அவனே இடம் வாங்கிய அடுக்கு மாடி குடியிருக்கு அதிலும் அவன் கட்டியதில் அனைத்திலுமே ஒரு வீடு தன் மனைவி பெயரில் தான் பதிவு செய்து இருக்கிறான் என்று தெரிந்ததுல் விழி பிதிங்கி போய் கணவனை பார்த்தவள்..
“எப்படிங்க …?” என்று கேட்டாள்…
“இதுக்கே நீ இப்படி சொல்றியே… மாதுரி.. அந்த மாவு கடை வைத்து இருப்பதை பத்தி நீயும் உங்க மத்த அந்த இரண்டு அண்ணிகளோடு சேர்ந்து கிண்டல் செய்து கொண்டு இருந்தியே…. அதில் இருந்து வரும் லாபம். இந்த வீட்டின் வாடகைகள் எல்லாம் சேர்ந்து மாதுரிக்கு இவ்வளவு டாக்ஸ் வருது… அதை கட்டுவது பத்தியும்.. கட்டும் டாக்ஸ் ரொம்ப அதிகம்… அடுத்து வருஷம் கம்மி செய்ய. இந்த இந்த ஸ்கீம்ல எல்லாம் பணத்தை போடுங்க என்று அந்த ஆடிட்டர் உன் அண்ணன் கிட்ட சொல்லிட்டு இருந்ததை என் காதல கேட்டுட்டு தான்டி வந்தேன்… “ என்று சொன்ன ஸ்ரீ வச்சன் மாதுரி பெயரில் கட்டிய டேக்ஸ் அமெளண்ட் அளவை கேட்டு..
“டேக்ஸே அவ்வளவு என்றால், அப்போ எவ்வளவு வருமானம் வரும் அவங்களுக்கு…?” என்று கேட்டு தன் நெஞ்சின் மீது கை வைத்து அமர்ந்து கொண்ட ப்ரியாவுக்கு… அந்த இடம் பற்றியும் தெரிய வந்தால்….?