Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்...20

  • Thread Author
அத்தியாயம்….20

அதே சமயம் தமிழ் மாறன் வீட்டிற்க்கு சென்று வந்த பாக்கிய லட்சுமியின் முகம் அத்தனை பூரிப்பாக இருந்ததை கிருத்திகா, தீபிகா பார்த்தாலுமே, ஒன்றும் கேட்டு கொள்ளவில்லை…

இப்போது எல்லாம் மற்றவர்களின் வம்பு பேச்சை கேட்கவோ.. பேசவோ.. அவர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட… அவர்களின் இருவரின் வாழ்க்கையே ஏதோ ஒரு குருட்டாம் போக்கில் தான் சென்று கொண்டு இருக்கிறது.. இதில் எங்கே மற்றவர்களின் வம்பை பார்ப்பதும்.. கேட்பதும்…

அப்படி இருந்தும்… இன்று “கிழவி இத்தனை சந்தோஷமா இருக்கு..?” கிருத்திகா தீபிகாவிடம் இப்படி தான் கேட்டது..

“விடு டி… இங்கு நம்ம பாடே பார்க்க ஆள் இல்லாம இருக்கு…” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது தான் விமலனும் வர்மனும் அங்கு வந்தது…

மகன்களை பார்த்த பாக்கிய லட்சுமி… “ வர்மா விமலா உனக்கு விசயம் தெரியுமா….? உன் அண்ணன் வாங்கின இடம் அவனுக்கே கிடச்சிடுச்சாம்…” என்று சொன்னதை இருவருமே நம்பவில்லை..

“ம்மா விளையாடாதிங்கம்மா.. கேஸ் போட்ட இடம் எல்லாம் கையில் கிடைப்பது.. அதுவும் இவ்வளவு சீக்கிரமா சான்ஸே இல்ல போங்க…” என்று அசால்ட்டாக தான் சொன்னான்..

“நான் ஏன்டா விளையாட போறேன்.. விளையாடும் வயசாடா எனக்கு…? அதுவும் என் மகனை பத்தியான விசயம் இது.. நான் இவ்வளவு சந்தோஷமா சொல்லிட்டு இருக்கேன்…” என்று கேட்ட பாக்கிய லட்சுமி அது எப்படி கை வந்தது என்பதும் சொல்ல..

இப்போது வர்மனும் விமலனும் ஒருவர் ஒருவர் பார்த்து கொண்டனர்.. அது என்னவோ இவர்கள் இருவருக்கும் இடையே அத்தனை ஒற்றுமை .. கருவறையில் இருந்தே ஒன்றாக இருந்ததா… இல்லை பிறந்த போதும்.. பள்ளி கல்லூரி என்று அனைத்துலுமே இருவரும் ஒன்றாக வருவது போவது என்பதினால், இவர்கள் இருவருக்குள்ளும் போட்டி பொறாமை எல்லாம் இது வரை இருந்தது கிடையாது..

கூட அக்கா தங்கை என்று இருவரும் கட்டி கொண்டதால், வந்த பெண் மூலம் பிரிக்கும் வேலை செய்யாது.. அவர்கள் இருவருமான அக்கா தங்கையுமே ஒற்றுமையாக இருப்பதினாலா என்னவோ… நிலம் கூட ஒரு இடத்தில் சேர்ந்து வாங்கியது.. என்று ஒற்றுமையாக தான் இருக்கின்றனர்..

இதோ பிரச்சனை என்று வரும் போது கூட தன் மனைவிமார்கள் அண்ணனிடம் காதல் சொன்னது கூட இருவரும் ஒன்று போல் தானே சொல்லி இருக்கின்றனர்..

அதில் கூட இருவருக்கும் ஒற்றுமையாகி விட.. இதை பற்றி தனித்தும் பேசிக் கொண்டனர்.. பின் இருவரும் சேர்ந்து தான்..

“விடு இனி ஆக போவது என்ன இருக்க போகுது….? ஆனா இனி இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு நாம வாங்கிய இடத்தில் வீடு கட்டிட்டு போயிடலாம்…” என்று இருவரும் பேசி முடிவு செய்து உள்ளனர்.

எப்போதும் இவர்களின் எந்த முடிவும் மனைவிமார்களிடம் சேர்ந்து கலந்து ஆலோசித்து தான் எடுப்பார்கள்.. ஆனால் சமீபகாலமாக அதாவது தன் மனைவிமார்கள் தன் அண்ணனிடம் காதல் சொன்ன விசயம் தெரிந்ததில் இருந்து , இருவரும் தான் பேசி முடிவு எடுப்பது..

அதன் படி தான் தாங்கள் வாங்கிய இடத்திற்க்கு உண்டான பில்டிங்க ப்ளான் மட்டுமே செய்து இருந்தனர்.. அதை அப்ரூடுக்கு அனுப்ப வேண்டும்… அதை பற்றி தான் பேசி கொண்டு வீடு வந்தது…

யாரிடம் கட்டிடம் கட்ட கொடுக்கலாம் என்று தான் வரும் வழியில் இருவரும் பேசிக் கொண்டும் வந்தது.. ஆனால் அந்த பேச்சில் இருவரில் ஒருவர் கூட தமிழ் மாறனிடம் கொடுக்கலாம் என்று சொல்லவில்லை..

முன் அவன் தங்களை விட நிறைய சம்பாதிக்கிறான் என்ற பொறாமை… இப்போதுமே அதே பொறாமை தான்.. ஆனால் அது வேறு ஒன்றை நினைத்து.

என்ன தான் ஆண்டுகள் கடந்து விட்டது.. குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வாழ்க்கையை நினைத்து முடிவு எடுத்தாலுமே, நம் மனது ஒரு குரங்கு தான்..

எதை மற மற என்றும்.. நினைக்க கூடாது நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ… அதையே தான் நினைக்கும்..

இதோ இருவருக்கும் தங்களின் மனைவியை பார்த்தாளே… இவள் தன் அண்ணனிடம் காதல் சொன்னவள் தான் நியாயபகத்தில் வந்து தொலைக்கிறது..

கூட இருவரும் இதை பற்றி பேசிக் கொள்ளும் போது ஒருவன் மற்றவனிடம்.. “ நம்ம புலம்பனும் என்று தான் தமிழ் சொல்லி இருக்கான்.. முன் பணம் அவன் கிட்ட நிறைய இருந்தது.. இப்போ இல்ல. ஆனா நம்ம மெல்ல மெல்ல செட்டில் ஆகிட்டு வரோம் இல்ல. அதை நினச்சி நம்ம சந்தோஷத்தை போக்க தான் அப்படி சொல்லி இருக்கான். உண்மையே என்றாலும் இப்போ அவன் சொல்ல என்ன அவசியம்… அதனால அவன் நினைப்பை நாம பொய்யாக்கி நாம நிம்மதியா இருக்கனும் புரியுதா. புரியுதா.” என்று சொல்லி சொல்லியே இருவரும் நிம்மதி இழந்து தான் இருக்கின்றனர்..

அதனால் தான் இந்த இடத்தை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாம்.. அம்மா தமிழோடு இருந்தாலும் பரவாயில்லை. இப்போ தான் நம்ம பிள்ளைகள் வளர்ந்து விட்டாங்களே… என்று நினைத்து தான் வீடு கட்ட திட்டம் இட்டது..

இப்போது தமிழ் மாறனுக்கு அந்த இடம் கிடைத்து விட்டது என்று அம்மா சொன்னதும் நம்ப முடியாது பின் அம்மா சொன்ன விளக்கத்தில் நம்பிய இருவரும் ஒரு சேர தன் மனைவிமார்களை தான் பார்த்தது…

முன் எல்லாம் கிருத்திகா தீபிகா இருவரும்.. எதற்க்கு எடுத்தாலும்.. “ உங்க அண்ணனை பாருங்க.. உங்க அண்ணனை பாருங்க..” என்று தான் சொல்லுவார்கள்..

அதாவது முன் தமிழ் மாறன் பிசினஸ்ஸில் பணம் சம்பாதிக்கும் சமயத்தில், அப்போது எல்லாம் அதை வர்மனும் விமலனும் பெரியதாக எடுத்து கொண்டது கிடையாது.. அனைத்து பெண்களுக்கும் இருக்கும் பொறாமை… ஒரு வீட்டில் ஒருவர் அதிகம் சம்பாதித்து மற்றவர் குறைந்து சம்பாதித்தால், சொல்ல தானே செய்வர் என்று நினைத்து விட்டு விட்டனர்..

பின் தமிழ் மாறன் அந்த இடத்தை வாங்கி முடங்கிய சமயத்தில் இரட்டையர் இருவரும் அதை வைத்து மனைவிகளிடம் கிண்டல் கூட செய்து இருக்கின்றனர்.

“இப்போ என்ன சொல்றிங்க.. சம்பாதிக்க தெரிந்தால் மட்டும் போதாது.. அதை இன்வெஸ்சும் பண்ண தெரிந்து இருக்கனும்…” என்று கூட சொன்னார்கள்..

அதாவது முன் தவறாக தெரியாத விசயங்களை எல்லாம் இருவருக்கும் இப்போது வேறு ஒரு கோணத்தில் யோசிப்பதால் தான்… தமிழ் மாறனுக்கு அந்த இடம் கிடைத்து விட்டதில் இரட்டையர்கள் மகிழ்ச்சி அடையவில்லை… அதற்க்கு மாறாக பொறாமை.. அதுவுமே கிடையாது… மனைவிமார்களின் மாற்றத்தை பார்க்க தான் முயன்றனர்.. அதில் தெரிந்த ஆச்சரியம்.. பின் அதிர்ச்சியை பார்த்து தான் இருவரும் மனதை தேற்றி கொண்டனர்..

பின் தன் அன்னையிடம்.. “ இப்போவாவது அந்த மாவூ கடையை மூடுவாங்கலா உங்க பெரிய மருமகள்..” என்று கிண்டல் அடித்து விட்டு தான் சென்றனர்..

ஆனால் இருவருக்குள்ளும்.. தமிழ் மாறனை எந்த ஒரு விசயத்திலும் முந்த முடியவில்லையே என்ற அந்த இயலமை எழுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை..

இதில் ப்ரியா வேறு மாதுரி வருமானவரி கட்டுவதை பற்றி சொல்ல தன் இரு அண்ணன் இரட்டையர்களை தான் அழைத்தது.

வர்மன் தான். தங்கையின் அழைப்பை ஏற்ற உடன்… “ இப்போ உனக்கு என்ன வேண்டும்..” என்று வள் என்று விழுந்தான்..

அன்று சிந்தியாவின் விழாவில் இவள் வாயை மூடிக் கொண்டு இருந்தால், தமிழ் தன் மனைவி இவனிடம் காதல் சொன்னதை சொல்லி இருந்து இருக்க மாட்டான் என்று தான் நினைக்க தோன்றியது அவனுக்கு..

ஒரு சில விசயங்கள் தெரியாது போவது தான் மனதிற்க்கு நிம்மதியை தரும்.. அதனால் அந்த எரிச்சலில்.. தான் என்ன என்று கோபமாக கேட்டது..

அந்த கோபத்தில் காரணத்தை ப்ரியா வேறாக புரிந்து கொண்டவளாக.. “ ண்ணா உங்களுக்குமே விசயம் தெரியுமாண்ணா…” என்று கேட்க…

வர்மனோ… அந்த இடம் விசயம் என்று நினைத்து.. “ ம் தெரியும் தெரியும்..” என்று விட்டெத்தியாக தான் சொன்னான்..

அதில் ப்ரியா… “ ண்ணா இந்த மாதுரி ரொம்ப உஷார் ண்ணா.. இப்போ இத்தனை வருமானம் வருது… அத்தனை கட்டிய வீட்டிலும் ஒன்னு ஒன்னு அவ பெயருக்கு அண்ணன் வாங்கி கொடுத்து இருக்கார்… இதை பத்தி யார் கிட்டவாவது மூச்சு விட்டாளா பார்த்திங்கலா ண்ணா… இதுல இவள் வேறு தனியா அத்தனை சம்பாதிக்கிறா.. நான் கூட மாவூ கடை என்று கீழா தான் நினச்சிட்டு இருந்தேன் ண்ணா இதுல இத்தனை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு தெரியாது போயிடுச்சி ண்ணா… இதை எல்லாம் எப்படி நம்ம கிட்ட இருந்து மறைப்பா.. அவள் சம்பாத்தியத்தில் நமக்கு உரிமை இல்ல. ஆனா தங்கைக்கு செய்ய கடமை அண்ணனுக்கு இருக்கு தானே.”

இனி பணம் வராது என்று ஒதுங்கி நின்ற தங்கையின் உரிமை.. பணம் இருக்கு என்று தெரிந்ததில் உரிமை என்று பேச.

வர்மனுக்கு ப்ரியாவின் பேச்சு புரியவே இல்லை.. ஆனா உரிமை இருக்கு என்ற பேச்சில் திரும்ப சுரண்ட பார்க்கிறா போல.. இவளை எல்லாம் திருத்த முடியாது.. மறுபடியும் பெரிய அண்ணனுக்கு சொம்பை தூக்க ஆரம்பித்து விடுவாள் என்று தான் நினைத்தான்..

வர்மனும் விமலனும் குடும்ப பொறுப்பில் இருந்து விலகி கொண்டார்களே தவிர… தமிழ் மாறனிடம் இருந்து பணத்தை எல்லாம் எதிர் பார்க்கவில்லை..

தமிழ் மாறனே வலிய. டூர் ஓட்டல் என்று அழைத்தால் போவார்கள் அவ்வளவே…

அதனால் ஒரு பெரும் மூச்சு விட்டு கொண்ட வர்மன்.. “ இப்போ நீ என்ன சொல்ற… மாவு கடை நல்லா போகுதா. போகட்டும் உனக்கு என்ன.. அவங்க கஷ்டப்படுறாங்க… சம்பாதிக்கிறாங்க. உனக்குமே பணம் வேண்டும் என்றால் இது போல ஏதாவது செய்.. மத்தவங்க சம்பாதியத்ததை பிடுங்கி போக பார்க்காதே…” என்று சொன்ன வர்மனின் பேச்சில் மற்றதை எல்லாம் விடுத்து விட்டு..

தன் கணவன் சொன்னதை முழுவதும் சொல்லி முடிக்க… வர்மனிடம் அமைதி… ஒருவருக்கு நல்ல காலம் வந்தால் இது தான் போல என்று நினைத்தவன்.

அதை சொல்லவும் செய்தான்… “ அந்த இடம் கூட இப்போ தமிழுக்கு வந்து விட்டது.” என்று சொன்ன நொடி இங்கு ப்ரியா நெஞ்சின் மீது கை வைத்து அமர்ந்து விட்டாள்..

இந்த தருமி சொல்வானே.. அய்யோ அய்யோ சொக்கா சொக்கா எனக்கு இல்ல அது எனக்கு இல்ல என்பது போல தான் ப்ரியா வீட்டில் தன் மாமியார் கணவனிடம் ஏன் தன் பிள்ளைகளிடம் கூட புலம்பி கொண்டு இருந்தாள் ப்ரியா.. அப்படி புலம்ப விட்டு விட்டாள் நம் மாதுரி..

பின் என்ன வர்மன் சொன்ன செய்தியில் நெஞ்சின் மீது கை வைத்து அமர்ந்து விட்ட ப்ரியா…. பின் தெளிந்தவளாக…. தன் கணவனிடம்..

“ ம் வாங்க நாம தமிழ் அண்ணா வீட்டிற்க்கு போயிட்டு வரலாம்..” என்று அழைத்ததில்… கணவன் அவளை பார்த்து முறைத்தான் என்றால்,

அப்போது தான் பள்ளியை விட்டு வந்த மகன் மகளிடம்… “ ஆ கிளம்புங்க. நாம தமிழ் மாமா வீட்டிற்க்கு போகலாம்..” என்று அழைத்தவளை பார்த்து பிள்ளைகள் குழம்பி போய் திரு திரு என்று பார்த்தனர்.

பின் இருக்காதா… சென்ற வாரம் தான்.. வைபவுக்கு அத்தனை அடி கொடுத்தாள் ப்ரியா.. அவள் அடித்த அடியில் தமிழ் மாமா ஒருவர் இருக்கிறார் என்பதையே பிள்ளைகள் மறக்கும் படி செய்து விட்டாள் ப்ரியா அவள் கொடுத்த அந்த அடியாலும் பேச்சாலும்.. இன்று வந்து போகலாம் என்றால்…

பிள்ளைகள் இருவருமே. “ வேண்டாம் நாங்க வரவில்லை என்று சொல்லி விட்டார்கள்..

பெரியவர்கள் போல் இல்லையே பிள்ளைகள்.. பச்சோந்தி போல அப்போ அப்போ மனதை மாற்றி கொள்ள.

ஸ்ரீ வச்சனும்.. “ நானும் வரவில்லை குழந்தைகளும் வர மாட்டார்கள்.. நீயும் போகாது இருப்பது தான் நல்லது…” என்று கணவன் சொன்னான் தான்..

ஆனால் ப்ரியா எங்கு கேட்டாள்.. அன்று அண்ணனிடம் தானே வாங்கி கட்டிக் கொண்டது.. இன்னும் மாதுரியிடம் வாங்குவதில் மிச்சம் இருக்கிறது போல. அதை வாங்க அவசர அவசரமா வேறு புடவை..

அதுவும் குறிப்பாக தமிழ் மாறன் வாங்கி கொடுத்த புடவையை கட்டி கொண்டு தெரிந்த ஆட்டோவை வர வழைத்து போகும் வழியில் ஆட்டோவை நிறுத்தி சிந்தியா ஷரத்துக்கு பிடித்த ஸ்வீட் காரம் வாங்கி கொண்டவள் மறக்காது மாதுரிக்கு இரண்டு முழம் பூவையும் வாங்கி கொண்டு தமிழ் மாறன் அண்ணன் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்..

அவள் சென்ற நேர மணி ஒன்பது.. இப்போது எல்லாம் மாதுரி அதிக நேரம் கடையில் இருப்பது கிடையாது.. செய்ய வேண்டியதை செய்து விட்டு… வீடு வந்து விடுவாள்.. இப்போது இன்னொரு பெண்ணையும் வேலைக்கு சேர்த்தும் கொண்டாள்…

பணம் முக்கியம் தான். அதோடு குடும்பம் அதை விட மிக மிக முக்கியம் என்பதை நன்கு உணர்ந்தவள் மாதுரி.. அதுவும் சிந்தியா இப்போது தான் பெரிய பெண்ணாகியிருக்கிறாள்..

அன்னையாக இப்போது தன்னுடைய அரைவணைப்பு அவளுக்கு தேவை என்பதினால், ஏழரை மணிக்கு எல்லாம் வீடு வந்து விட.

பிள்ளைகளுக்கு உண்டான சத்தான உணவை செய்து முடிக்கும் சமயம் தமிழ் மாறனும் வந்து விட்டான்.. அவனுக்கு அந்த இடத்தை பற்றி மனைவியிடம் பேச வேண்டி உள்ளது..

தமிழ் மாறன் வந்த சிறிது நேரத்தில் ப்ரியாவும் வந்து சேர.. இவளின் வருகையை மாதுரி எதிர் பார்த்து தான் இருந்தாள்..

அவள் ஒரு பச்சோந்தி என்பது தான் அவளுக்கு நன்கு தெரியுமே… அந்த இடம் தங்கள் கை வந்த விசயம் தன் மாமியார் மூலம் தன் மச்சினங்களுக்கு போய் சேர்ந்து இருக்கும்.. அவர்களுக்கு தெரிந்தால், கண்டிப்பாக ப்ரியாவுக்குமே விசயம் சென்று விடும் என்பது மாதுரி தெரிந்து தான் வைத்து இருந்தாள்..

வந்தவள் எதுவுமே நடவாதது போல.. தமிழ் பக்கத்தில் அமர்ந்து கொண்டவள்..

“நீ சொன்னது போல எனக்கு புத்தி இல்ல தான் ண்ணா… புத்தி இல்லாது தான் என்ன பேசுறது என்று தெரியாது பேசிட்டேன்.. நீர் அடித்து நீர் விலகுமா அண்ணா…” என்று பேசிக் கொண்டு இருந்த ப்ரியாவின் பேச்சில்

மாதுரி இடை புகுந்தாள்… “ என் கணவர் உன் கிட்ட எப்போ புத்தி உனக்கு இல்ல என்று சொன்னார்… அப்படி அவர் சொல்லி இருந்தா என் கிட்ட சொல்லுங்க. நான் நல்லா அவரை கேட்கிறேன்… உங்களுக்கு புத்தி அதிக அளவில் வேலை செய்யுது… அதனால தான் இதோ இப்போ வந்து நிற்கிறிங்க என்று.. வேண்டும் என்றால் பச்சோந்தி வேண்டும் என்றால் சொல்லலாம்..” என்று சொன்ன மாதுரியை அடித்து விடலாம் என்று தான் ப்ரியாவின் மனது நினைத்தது..

ஆனால் அறிவு வேண்டாம்.. வேண்டாம் பொறுமை பொறுமை என்று சொல்ல.

“என்ன அண்ணி இப்படி பேசுறிங்க… அண்ணன் தங்கை அடிச்சிபோம் சண்டை போட்டுப்போம்.. பின் சேர்ந்துப்போம்… இது என்ன ஊரில் உலகத்தில் நடக்காததா என்ன…? எனக்கு அம்மா வீடு என்றால் அது இது தானே… நீங்க உங்க அம்மா வீட்டுக்கு நெருக்கமா இருப்பது போல தானே எனக்கும்..” என்று சொன்ன நொடி…

மாதுரி நாத்தனாரை அடிப்பது போல பாய்ந்து விட்டாள் தான்..

ஆனால் அடிக்கவில்லை… “ உனக்கும் எனக்கும் கம்பேர் பண்ணாதே.. புரியுதா. நான் என் அம்மா வீட்டை அம்மா வீடா மட்டும் தான் பார்க்கிறேன்.. உன்னை போல தங்கத்தை அள்ளி போகும் தங்க சுரங்கமா பார்க்கல..” என்று மாதுரி சொன்னதுமே…

ப்ரியா.. “ அங்கு என்ன இருக்கு நீங்க வாங்கிட்டு வர.. அது தான்..” என்று விட்டாள்.. என்ன தான் அடக்கினாலுமே பிறவி குணம் என்று ஒன்று இருக்கிறது தானே.. அது எங்கு போய் விடும்…

“அப்போ இருந்தா அள்ளலாம். அது தான் இருக்கும் போது ண்ணா இது வேண்டும்..ண்ணா அது வேண்டும் என்று வாங்கிட்டு… இனி எதுவும் தேறாது என்று விலகி நின்னுட்ட.. முன் பேச்சை வைத்து எங்கு என் பெண்ணை எடுப்பது போல ஆகி விடும் என்று தான்.. அன்னைக்கு அத்தனை பேச்சு.. அதுவும் அவள் குழந்தை.” எனும் போதே இத்தனை நேரம் ஆவேசத்துடன் பேசி கொண்டு இருந்த மதுரிக்கு தொண்டை அடைத்து கொண்டது..

அமர்ந்து இருந்த தமிழ் மாறன் எழுந்து தண்ணீர் கொடுத்து… “ மாதும்மா நீ யாராலுயும் இது போல அடிக்கடி எமோஷனல் ஆக கூடாது.. அது நம்ம உடம்புக்கு நல்லது இல்ல. இனிமே தான் நமக்கு ஒரு சந்தோஷமான எதிர்காலம் இருக்கு… இனி நாம நம்ம பிள்ளைங்க எப்படி மகிழ்ச்சியாவும், நிம்மதியாவும் இருக்கலாம் இதை பத்தி மட்டும் தான் நீ யோசிக்கனும். புரியுதா..” என்று மனைவியிடம் பேசியவன்.

ப்ரியாவின் பக்கம் திரும்பி… “ நீ எனக்கு தங்கை இந்த உறவு என்னைக்கும் மாறாது.. ஆனா முன் போல..” என்று சொல்ல வந்தவன் பின் என்ன நினைத்தானோ அந்த பேச்சை பாதியில் நிறுத்தியவன்.

ப்ரியாவிடம்… “ அழுக்கு நல்லது தான் போல ஒரு சில கஷ்டங்களும் நல்லது தான். அப்போ தானே யார் உண்மையானவங்க. யார் பொய்யானவங்க என்று எனக்கு அடையாளம் காட்டி கொடுக்குது…

உண்மையில் எனக்கு இந்த பிரச்சனை வராது இருந்து இருந்தால், அப்போ தான் என் ஒய்ப் எது செய்வது என்றாலும் கொஞ்சம் பார்த்து செய்ங்க. என்று சொன்னது… உண்மையில் அன்னைக்கு நான் அவளை பார்த்து கேட்ட கேள்வி… இன்னைக்கு நினச்சாலுமே… வேண்டாம் வேண்டாம்…” என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்ட தமிழ் மாறன்….

“அது தான் எங்களுக்கு வந்த முதல் சண்டை.. அதுல நான் மாதுவை பத்தி என்ன இது இப்படி பேசுறா என்று கொஞ்சம் தப்பா கூட நினச்சிட்டேன்… எனக்கு மட்டும் கடவுள் அந்த கஷ்டம் கொடுக்காது போனால், கண்டிப்பா நீ என் கிட்ட சுரண்டிட்டு இருப்ப மாது என் கிட்ட கேட்பா… அதனால நான் இன்னும் இன்னும் தான் அவளை தப்பா நினச்சி இருக்க கூடும்…

யார் தப்பு யார் சரி என்று உணர்த்த இந்த இடைப்பட்ட காலம் கஷ்டம் என்று நான் நினச்சிக்கிறேன்... இன்னொன்னு முக்கியமா சொல்லனும் மாதுவோட திறமை வெளி வந்ததை இதை வெச்சி தானே…” என்று கணவன் மனைவி இருவரும் சூடாக கேட்டு தான் அனுப்பினர்.

ப்ரியா வந்ததினால் அந்த இடத்தில் என்ன செய்யலாம் என்று அன்று பேச முடியாது போய் விட்டது.. இப்படியே மூன்று நாட்கள் சென்று விட..

இன்றாவது பேசலாம் என்று தான் மாதுரியிடம் மாலை சீக்கிரம் வீட்டுக்கு வா என்று சொன்ன தமிழ் மாறன் அவனுமே தன் புல்லட்டில் வீடு வந்து கொண்டு இருந்த போது தான் ஒரு பள்ளி வாகனம் கவிழ்ந்து கிடப்பதை பார்த்தது…

அதன் பக்கத்தில் மக்கள் கூடி இருந்தனர்.. பள்ளி வாகனத்தில் இருந்து அவர்களால் முடிந்த மட்டும் கைக்கு கிடைத்த குழந்தைகளை எல்லாம் வெளியில் இழுத்து விட்டு கொண்டு இருந்தனர்..

அதை பார்த்த தமிழ் மாறனும் தன் வண்டியை நிறுத்தி விட்டு உதவி செய்து கொண்டு இருந்தான்..

முதலில் எந்த பள்ளி பேருந்து என்று எல்லாம் தமிழ் மாறன் கவனிக்கவில்லை.. குழந்தைகள்… விரைந்து செயல் பட வேண்டும்.. இது மட்டும் தான் அவன் எண்ணமாக இருந்தது..

ஆனால் ஒருவர் அந்த பேருந்தில் இருந்து வெளியில் இழுத்த ஒரு பெண் குழந்தை.. முகம் முழுவதும் ரத்தம்..

“ பெரி ப்பா…” தன் மெல்லிய குரலில் வலி முகுந்து அழைத்த அந்த அழைப்பில் ஒரு குழுந்தையின் கை பிடித்து கொண்டு இருந்த தமிழ் மாறன் அதிர்ச்சியுடன் திரும்ப பார்க்க… தமிழ் மாறன் கை பிடித்து கொண்டு இருந்த குழந்தையோ…

“பெரிப்பா வலிக்குது..” என்று சொல்ல.. இப்போது அவன் பார்வை தான் கை பிடித்து கொண்டு இருந்த குழந்தையின் பக்கம் சென்றது…












 
Well-known member
Joined
Jul 14, 2024
Messages
239
Viji ma
Oru request
Vashanika nnu oru friend registration pannittu wait pannurangha
Unghalukku therinchavangha taan nnu nenaikkuren
Neengha innum accept pannala pola
Avangha oru story complete pannittangha
Please reply her
🙏🙏🙏
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
321
ப்ரியாவை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.இப்படியும் சில ஜென்மங்கள் வேறென்ன சொல்ல என்றே தெரியவில்லை. அந்த குழந்தைக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது.பெரியவர்கள் செய்ததற்கு குழந்தைகளுக்கு தண்டனை கிடைத்தது விடக் கூடாது.
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
996
Viji ma
Oru request
Vashanika nnu oru friend registration pannittu wait pannurangha
Unghalukku therinchavangha taan nnu nenaikkuren
Neengha innum accept pannala pola
Avangha oru story complete pannittangha
Please reply her
🙏🙏🙏
கண்டிப்பா பார்க்கிறேன் பா
 
Top