அத்தியாயம்….21
அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு தான் தன் தம்பி பெண் குழந்தைகள் மூன்று பேரையும் கொண்டு வந்து சேர்த்து இருந்தான்… இந்த பள்ளி பேருந்து இந்த இடத்தில் விபத்து ஏற்ப்பட்டு விட்டது.. அதுவும் எந்த வழி பாதை பேருந்தும் என்று தெரிந்து விட…
அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களுமே அங்கு குவிந்து விட்டனர்.. வேலைக்கு போகும் அன்னையர்கள் மட்டும் வர காணு,ம்..
அதற்க்குl காவல் துறை, தீயணைப்பு துறை என்று வந்து விட்ட போதிலும், தங்கள் குழந்தையை பார்த்த நொடி சற்றென்று கையில் எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு இருந்தனர்..
காவல் துறையினால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.. ஆம்புலன்ஸ் வந்து கொண்டு இருக்கிறது என்று சொன்ன போது..
“எப்போது எப்போது…? என்று பெற்றோர்கள் கொதித்து எழுந்து விட்டனர்.. காரணம் அந்த வழி பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை ஓட்டும் முறை சரியில்லை ..குழந்தைகள் பயப்படுகிறார்கள்..
ஒரு சில பெற்றோர்கள்… அவர் தண்ணீர் அடித்து ஓட்டுகிறார்… அருகில் சென்றால் மது வாடை வருகிறது என்று சொல்லியும்.. இப்போது அப்போது என்று கல்வி நிர்வாகம் இழுத்து அடித்து கொண்டு.. இவர்கள் புகார் கொடுத்த அதே ஓட்டுனரை வைத்து தான் பேருந்தை இயக்கி இருக்கின்றனர்…
அந்த கோபத்தில் பெற்றோர்கள் கொந்தளித்து போய் விட்டனர்.. இதில் சிறு பிள்ளைகள் வலியில் துடிக்க… காவல் துறையினர் வீட்டிலுமே குழந்தைகள் இருக்கின்றது அல்லவா.. அதனால் ரூல்ஸ் என்று எதுவும் பாராது குழந்தைகள் பிழைத்தாள் போதும் என்று தான் விட்டார்…
தமிழ் மாறன் மூன்று குழந்தைகளையும் ஆட்டோவில் ஏற்றும் போது ஒரு காவல் அதிகாரி தான் உதவி செய்தது….
“நன்றி சார்..” என்று சொல்லி விட்டு பெரிய மருத்துவமனைக்கு விட சொன்ன தமிழ் மாறன் முதலில் தன் மனைவி மாதுரிக்கு தான் அழைத்தான்..
எடுத்த உடனே விசயத்தை சொன்னவன்… “ நீ எல்லோரையும் இந்த ஆஸ்பிட்டலுக்கு அழச்சிட்டு வந்துடு மாது.. பார்த்து சட்டுன்னு எல்லாம் சொல்லாத…” என்று சொல்லும் போதே தமிழ் மாறன் குரல் கர கரத்து தான் போய் விட்டது…
கணவனின் குரல் மாற்றத்தில் மாதுரி.. “ அத்தான் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே…?” என்று கேட்டவளுக்கு தமிழ் மாறன் பதில் சொல்லவில்லை…
“சீக்கிரம் வா மாது.. மூன்று குழந்தைங்க. அம்மா அப்பா கூட இருந்தா குழந்தைங்க தைரியமா இருக்கும்…” தமிழ் மாறன் பேசி கொண்டு இருக்கும் பொதே…
ஒரு குழந்தை பெரிப்பா சாரு அசையல… அசையல…” என்று சொன்ன குரைலும் வலி இருந்துமே தன் இரட்டை பிறப்பில் ஒரு பெண் சத்தம் இல்லாது இருக்க.. ஒன்பது வயது பெண்ணுக்கு ஏதோ புரிந்து விட்டது போல..
மாதுரிக்குமே கேட்டு விட. அவளிடம் இருந்தும் ஒரு கேவல்.. பின் சிறிதும் தாமதிக்காது… மாதுரி தன் கடையில் இருந்து தன் வண்டியை எடுத்தவள் தன் மாமியார் இருக்கும் அந்த வீட்டிற்க்கு தான் சென்றாள்..
அப்போது பாக்கிய லட்சுமி அவர்கள் வீட்டு வாசலில் தான் அமர்ந்து கொண்டு இருந்தாள்.. மூத்த மருமகள் பதட்டத்துடன் வருவதை பார்த்த பாக்கிய லட்சுமிக்கு ஏதோ சரியாக படவில்லை…
கூட இன்னுமே தன் பேத்திகள் வராது போனதில்.. அடி ஆத்தி என்று எழுந்து நிற்க….மாதுரியும்…
“அத்த குழந்தைகளுக்கு ஒன்னும் இல்ல.. சின்ன விபத்து தான்… மாறன் அத்தான் தான் அழச்சிட்டு போறாரு.. நீங்க வர்மன் விமலன் அத்தானுக்கு சொல்லிடுங்க…” என்ற பேச்சு எல்லாம் பாக்கிய லட்சுமியின் காதில் விழவில்லை..
பின் மாதுரி தான் ஒரு வழியாக அவளே அழைத்து சொன்னது.. சிறிது நேரத்தில் எல்லாம் அனைவருமே மாதுரி சொன்ன மருத்துவமனைக்கு வந்து விட்டனர்..
மாதுரியுமே ஒரு ஆட்டோ பிடித்து தன் மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டாள்…
மாதுரி ராணிக்கு அழைத்து கடையை மூடி விடு.. நீ என் வீட்டிற்க்கு போ சிந்தியா ஷரத் வீட்டில் தனியா இருப்பாங்க…” என்று தன் குழந்தைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டு மருத்துவமனையில் காத்து கொண்டு இருக்க…
இரட்டையரில் ஒரு குழந்தை இறந்து விட்டது.. மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அந்த மருத்துவர் சொல்லி விட்டார்…
தீபிகா திக் பிரம்மை போல் நின்று விட்டாள்,, வர்மனுமே.. பின் ஓ என்று சத்தம் போட்டு அழுது தலையிலும் வாயிலும் அடித்து கொண்டு… என்ன தான் அழுதாலுமே இறந்தவர்கள் வர போவது இல்லை தானே..
ஆனால் முடியவில்லை.. இறந்த குழந்தைக்காக அழுவதா. இல்லை இருக்கும் குழந்தையின் நிலையை பார்த்து அழுவதா என்றான நிலை..
இதில் விமலன் குழந்தை பிறக்கும் போதே கொஞ்சம் நோஞ்சான குழந்தை.. இந்த விபத்து அந்த குழந்தையை இன்னுமே பெரிதாக பாதித்து விட்டது…
ஒரு குழந்தை இறந்து கிடக்க, இரண்டு குழந்தைக்கு அங்கும் இங்கும் என்று அனைத்தும் அலைந்து திரிந்து பார்த்தது தமிழ் மாறன் தான்..
அன்று தான் அவன் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பின் ஒரு வீடு பதிவு செய்தனர்.. அந்த பணம் அவன் வங்கி கணக்கில் அப்படியே இருக்க..பணத்தை தண்ணீராக வாரி இரைத்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
எதற்க்கும் தன் தம்பியிடம் செல்லாது அனைத்துமே அவன் தான் பார்த்து கொண்டது..
இறந்த குழந்தையை மறு நாள் வீட்டிற்க்கு கொண்டு வந்து அந்த குழந்தைக்கு செய்ய வேண்டியது அனைத்துமே செய்து முடித்து மருத்துவமனையில் இருக்கும் குழந்தையை பார்த்து.. அந்த நாட்கள் நரகத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்..
இரண்டு நாட்கள் கடந்த நிலையில் தான் மற்ற இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் இனி கவலை இல்லை என்று மருத்துவர் சொன்னது.. ப்ரியாவுமே மருத்துவமனைக்கு வந்து விட்டாள்..
பின் அப்படி இப்படி என்று ஒரு மாதகாலம் மருத்துவமனையில் தான் கழிந்தது.. குழந்தைகள் ஒரு நிலைக்கு தேறி வர.. அந்த காலம் தேவையாக இருந்தது..
அதற்க்குள் இறந்த குழந்தையின் இறப்பை ஏற்றுக் கொண்டு விட்டனர்… இறப்பு இறப்பு தான்.. அது நரக வேதனை தான்.. ஆனால் இறந்த குழந்தையை பற்றி யோசித்து அழ கூட நேரம் இல்லாது இருக்கும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியான நிலை.
அதுவும் விமலன் குழந்தை பிறக்கும் போதே.. கொஞ்சம் வீக்.. இப்போது அவளுக்கு இன்னுமே கவனிப்பு தேவைப்பட…. இருக்கும் குழந்தையை தக்க வைத்து கொள்ள தான் அனைவரும் முயன்றனர்..
இதோ வீடும் வந்து விட்டனர்… மருத்துவமனைக்கு மட்டும் தமிழ் மாறன் செய்த செலவு நாற்பது லட்சம்… பணத்தை பற்றி இன்னுமே தமிழ் இவ்வளவு ஆச்சு என்று வாய் திறக்கவில்லை…
கிருத்திகாவும் தீபிகாவும் வேலையை விட்டு விட்டனர்… குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டி… மாதுரி தான் கடையை கூட அடைத்து விட்டு, அந்த வீட்டிற்க்கும், இந்த வீட்டிற்க்கும் நடையா நடந்து கொண்டு இருந்தாள்..
குழந்தைகளும் மெல்ல மெல்ல தேறி வரவும் ஆரம்பித்து விட்டனர்… பள்ளி பேருந்து விபத்திற்க்கு காரணம் ஓட்டுனர் மது அருந்தி விட்டு ஓட்டியதினால் தான்.. ஓட்டுனர் பிழைத்து கொண்டு விட்டான்…
பள்ளி நிர்வாகம்… இறந்த குழந்தைக்கு நஷ்ட ஈடு கொடுக்க முன் வந்தது.. என்ன தான் பணம் கொடுத்தாலுமே, குழந்தைக்கு ஈடாகுமா….?
அந்த பணத்தை கையில் கூட தொடவில்லை.. வர்மனும் தீபிகாவும்… “ ப்ளீஸ் வேண்டாம் எடுத்து கொண்டு போயிடுங்க…” என்று கதறி அழுது விட்டாள்…ப்ரியா அப்போது அங்கு தான் இருந்தாள்…
“ ஏன் வேண்டாம் என்று சொல்லிட்டிங்க.. ஆஸ்பிட்டல் செலவுக்காவது ஆகும் இல்ல.. தமிழ் அண்ணன் தான் அத்தனை செலவு செய்தது.. முன் போல எல்லாம் எதுவும் இல்ல. அது தெரியும் லே.. கொடுக்க வேண்டாம்…” என்று ப்ரியா சொன்ன போது தான் மற்றவர்களுக்கு தமிழ் தான் அனைத்து செலவையும் செய்தது கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே வந்தது..
கொடுக்க வந்தனர்.. ஆனால் தமிழ் மாறன் அதை வாங்க வில்லை.. வேண்டாம் என்று மறுத்து விட்டான்…
வாங்கி இருக்கலாம் இப்போது வேண்டாம் மெல்ல மெல்ல கொடு என்றாவது சொல்லி இருக்கலாம்.. ஆனால் அவன் சொல்லாததிற்க்கு காரணம்..
வர்மன் விமலன் இரண்டு பேரும் சேர்ந்து வாங்கிய அந்த இடமானது சாலை விரிவு படுத்துவதில் அடிவாங்குகிறது..அது இன்னுமே தம்பிகளிடம் அவன் தெரியப்படுத்தவில்லை..
தமிழ் மாறன் இதே லைனில் இருப்பதால் முன்னதாகவே அவனுக்கு தகவல் வந்து விட்டது..
விமலன் தான்.. “ இல்லே தமிழ் வாங்கிக்க.” என்று சொன்ன போது கூட மறுத்துவிட்டான்.
வர்மனுக்கும் விமலனுக்கும் இத்தனை பணத்தை கொடுக்காது இருப்பது என்னவோ போல் தான் இருந்தது… தாங்கள் அவன் கஷ்டப்படும் போது துணை இல்லாதது ஏனோ அவர்கள் மனதை குத்தியதோ என்னவோ…
இதில் தீபிகா..எப்போதுமே.. “ இரண்டு குழந்தை.. சமாளிக்க முடியவில்லை…? எப்போதும் புலம்புவது வேறு அவள் நியாபகத்தில் வந்து மனதை வாட்டியது…
காலங்கள் சென்றது.. ரணமும் கொஞ்சம் ஆறியது குழந்தைகளும் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்தனர்.. இப்போது பள்ளியை மாற்றி விட்டனர்.. சிந்தியா ஷரத் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்து விட்டு மாதுரி போலவே… அக்கா தங்கை இருவரும் தான் அவர்களே மாறி மாறி சென்று குழந்தைகளை அழைத்து வருவது…
அந்த இடம் பற்றி கூட தெரிந்து விட்டது.. சாலையில் அடி படுகிறது என்று,.. முன் என்றால் எப்படி இதற்க்கு ரியாக்ட் செய்து இருப்பார்களோ.. ஆனால் அந்த ஒரு மாத அந்த மருத்துவமனை வாசத்தில், அங்கு பார்த்த காட்சியில்…
பணம் அவர்கள் கண் முன் வரவில்லை.. அதுவும் தமிழ் ஒன்று இல்லை இரண்டு இல்லை நாற்பது லட்சம் செலவு செய்தது.. அது பெரியதாக அவர்களை அசைத்து பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்…
அத்தனை பணம் கொடுத்து வாங்கி இப்படி ஆனதில் வருத்தம் தான்.. . ஆனால் முடங்கி போய் விடவில்லை…
ப்ரியா தான். “ என்ன நேரமோ… குழந்தை தான் போயிடுச்சி.. இடமுமா.. போகனும்…” என்று சொல்லி எரியும் தீயில் எண்ணையை ஊற்றினாள்..
தமிழ் மாறன் தான்… “ கெட்டதிலும் ஒரு நல்லதா.. அதில் வீடு கட்டிய பின்.. சாலை விரிவு செய்யல லே… அது நினச்சி சந்தோஷப்பட்டுக்க.. பணம் எல்லாம் நாம பார்த்து சம்பாதிக்கிறது.. உங்களுக்கு வயசு இருக்கு.. கிருத்திகாவும் தீபிகாவும் இரண்டு மூன்றி வருஷம் ப்ரேக் எடுத்து கூட திரும்ப வேலையில் ஜாயின் பண்ணலாம்.. இத்தனை வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் கண்டிப்பா திரும்ப நல்ல வேலை கிடைக்கும்..” என்று தைரியம் அளித்தான்..
மீண்டும் ப்ரியா தான்.. “ ம் சொல்லுவாங்க சொல்லுவாங்க. ஏன்னா அவங்க இடம் கையில் கிடச்சிடுச்சிலே.. அது தான் இந்த பேச்சு…” மகளின் பேச்சுக்கு பாக்கிய லட்சுமி தான் .. நீ சும்மா இருக்க மாட்டே…” என்று அதட்டியது..
ஆனால் மற்றவர்கள் அவளின் பேச்சை எல்லாம் சட்டை செய்வதாக இல்லை…
வாழ்க்கை மீண்டுமே சகஜ நிலைக்கு வந்த பின் தமிழ் மாறன் மீண்டும் தன் மனைவியின் முன் வந்து நின்றவன்…
“மாதும்மா அந்த இடத்தில் என்ன செய்யலாம்.. இப்போ அதன் மதிப்பு இருபத்தி ஐந்து கோடி டா…” என்று சந்தோஷத்துடன் சொன்னான்…
மாதுரிக்குமே மகிழ்ச்சி தான்.. மாதுரியும் தமிழ் மாறனும்.. இந்த மருத்துவமனை வாசம் அதை சார்ந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பின் அவர்கள் செய்த முதல் வேலை.. குப்பை மேடா இருந்த தங்களின் அந்த இடத்தை சுத்தம் செய்து அதற்க்கு ஒரு காம்பவுண்ட் சுவர் எழுப்பியது தான்…
கணவன் தன்னிடம் அந்த இடத்தில் என்ன செய்யலாம் என்று கேட்ட போது… மாதுரி… “ நீங்க என்ன செய்ய நினைக்கிறிங்க…?” என்று தான் கேட்டது..
தமிழ் மாறனுமே தான் நினைத்ததான.. “ எனக்கு பெரிய திருமண மண்டபம் கட்ட ஆசை… ஒரு பெரிய சொத்தா இருக்கும்.. நம்ம குழந்தைகளுக்கு நாளை பின்ன ஒரு நிரந்தர வருமானமும் வரும்…” என்று சொல்ல..
மாதுரி.. “ அதற்க்கு எத்தனை கோடி ஆகும்..?” என்று கேட்க..
“அதற்க்கு குறைந்தது.. ஒரு ஐந்து கோடியாவது வைத்தால் தான் திருமண மாளிகை எழும்பும் என்று சொன்னான்…
“மொத்தமா அத்தனை பணத்திற்க்கு என்ன செய்வீங்க….? இருக்கும் பணத்தை எல்லாம் அதில் முடக்கி விட்டால், திரும்ப உங்க பிசினஸ்ஸுக்கு எதில் இருந்து எடுப்பிங்க…?’ என்று மாதுரி கேட்க. அதற்க்கு உண்மையில் தமிழ் மாறனிடம் பதில் இல்லை…
மாதுரி என்று சொன்னால், “ ஸ்டேஷன் கிட்ட இருக்கு… இப்போ காம்பாவுண்ட் கட்டி விட்டோம் மேல ஒரு ஷூட் அடிச்சா மட்டும் போதும்.. டூ வீலர் பார்க்கிங்க வைத்து விடலாம்.. இன்வெஸ் மெண்ட் அதிகம் இல்லை. ஒரு டூவீலருக்கு இருபத்தி ஐந்து ரூபாய்… வாங்குறாங்க.. நாம இருபது ரூபாய் மட்டும் வாங்கலாம்.. ஆ ஒன்னு மட்டும் கட்டாயம் செய்யனும்.. ஒரு மூலையில் கண்டிப்பா ஒரு டாய்லெட் கட்டிடனும்.. இந்த கடையை கட்டு விட்டுறவங்க… அதில் வாடகை எடுக்குறவங்க இடையில் வேறு எங்காவதா போய் வர முடியும் என்று யோசிக்கிறத இல்லை..” அவள் அனுபவம் அவளை அப்படி பேச வைத்தது..
மனைவியின் பேச்சையும் அவளின் ஐடியாவையும் தமிழ் மாறன் வியந்து தான் பார்த்து கொண்டு இருந்தான்..
ஆம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒன்றிலே போட்டு விட்டால், பின் அவன் எதை வைத்து அடுத்த கட்டிடம் கட்டுவது.. இது இருக்கும் இடத்தில் வருமானம் பார்த்து நல்ல ஐடியா தான் என்று. மாதுரி சொன்னதையே தான் செய்தான்..
நாங்கு கிரவுண்டில், முன்னூறு வண்டி விடும் அளவுக்கு இடம் வசதி இருந்தது.. அதுவும் மறறவர்களோடு ஐந்து ரூபாய் குறைவு என்றதில் மற்ற ஸ்டாண்டில் விடுபவர்கள் கூட இங்கு தான் விட்டனர்…
வண்டியை எடுக்க விட.. என்று ராணியின் தம்பியை வேலைக்கு அமர்த்து கொண்டனர்…
செலவு எல்லாம் போக அதில் இருந்து வருமானம் ஒன்னரை லட்சம் கையில் நிற்க…
மாதுரி.. “ இதில் ஏதற்க்கும் கை வைக்காதிங்க. இதுல இருந்து சேர்த்து பின் உங்க விருப்படியே கல்யாண மண்டம் கட்டுங்க என்று விட்டாள்…
இதன் நடுவில் பாக்கிய லட்சுமிக்கு பைபஸ் செய்யும் படி ஆகி விட்டது.. அதற்க்குமே தமிழ் மாறன் தான் செலவு செய்தது..’அதாவது தமிழ் மாறன் மருத்துவ செலவு என்றால் இன்றுமே கணக்கு பார்க்காது தான் செய்தான்…
ஆனால் மற்றதில் பார்த்து தான் செலவு செய்வது… நெருங்கிய ஒரு உறவு முறை திருமணத்திற்க்கு குடும்பமாக அனைவரும் சென்ற போது சிந்தியாவும் சென்றாள்..
வைபவ் வருவான் என்று தெரிந்தே தான் போனது.. அனைவரும் பார்க்க தான் கொண்டு வந்த ராக்கியை அவன் கையில் கட்டி விட்டவள்.. பின் அவன் கை பிடித்து கொண்டவள் ப்ரியாவிடம்…
“அப்போவும் நான் இப்படி தான் பிடித்தேன் அத்தை…” என்று விட்டாள்..
ப்ரியாவுக்கு தான்.. “ ஏன்டி இதை கட்டின.. உனக்கு அவன் அத்தை மகன் தானே..” என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்து விட்டாள்… காலம் மாறும்.. திரும்ப தன் மகனை சிந்தியாவுக்கு கட்டி வைத்து விடலாம் என்று நினைத்து இருந்தாள் போல. காலம் மாறும் தான்.. ஆனால் ஒரு சிலர் எப்போதும் மாற மாட்டார்கள்.. அதில் ப்ரியாவும் ஒருத்தி… ஆனால் காலங்கள் ஒரு சிலதை மாற்றி அமைத்து விடுகிறது..
காதல் என்பது இளமையில் கட்டிலுல் சுகிப்பது மட்டும் கிடையாது.. கஷ்டத்திலும்.. நஷ்ட்டத்திலும் கூட இருந்து தானும் கரை சேர்ந்து தன் குடும்பத்தையும் கரை சேர்ப்பதில் தான் அடங்கி இருக்கிறது காதல். மாதுரியின் காதல் அது போலானது தான்…
நிறைவு….