Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்..5

  • Thread Author
அத்தியாயம்…..5

முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த மாதுரியின் தாய் வீட்டவர்கள் அதிர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் என்ன என்பதும் போல அவர்களுக்குள் நினைத்தும் கொண்டனர்…

மாதுரியின் அண்ணி சுகந்தி ஏதோ தன் கணவனிடம் சொல்ல வர மனோகர் தன் வாய் மீது கை வைத்தவன்..

“இப்போது எதுவும் பேசாதே…” என்று மெல்ல சொல்ல.. மற்றவர்களும் சரி என்பது போல அமைதியாக இருந்து விட்டனர்…

காஞ்சிபுரம் வரை போக வேண்டும்.. மாதுரியின் தாய் வீட்டவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தாயிற்று.. அது தான் ப்ரியாவின் மாமியார் வீட்டவர்கள் அத்தனை உபசரிப்பு உபரிசரித்து தானே இவர்களை சாப்பிட அனுப்பியது…

மாதுரியின் இரண்டாவது அண்ணன் பிரபாகர் கூட… “என்ன அண்ணா… இத்தனை முறை நம்மை விசாரிக்கிறாங்க…முன் இது போல எல்லாம் நம்ம இவங்க கவனிக்க மாட்டேங்கலே…” என்று தன் அண்ணன் மனோகரிடம் கேட்டான்..

முன் என்றால் மாதுரியை தமிழ் மாறன் திருமணம் செய்வதற்க்கு முன் சொல்வது… முதலில் தமிழ் மாறனின் தங்கை ப்ரியாவின் திருமணம் முடிந்த பின் தானே தமிழ் மாறன் திருமணம் செய்து கொண்டது..

சம்மந்தி சீனிவாசனின் தங்கை வீட்டவர்கள் என்று ப்ரியாவின் சீமந்தத்திற்க்கு இவர்களுக்கு அழைப்பு விடுத்தனர் தான்.. அதுவும் பேசியில் அழைத்து பத்திரிக்கையை போஸ்ட்டில் அனுப்பி விட்டனர்..

தன் தாய் மாமனின் முகத்திற்க்காக அப்போது யாருக்கும் திருமணம் ஆகவில்லை.. தாய் இறந்து விட்டதால் தகப்பனோடு வந்து இருந்தனர் தான். அப்போது சும்மா பார்த்ததிற்க்கு ஒரு சிரிப்பு… அனைவரையும் சாப்பிட அனுப்பும் போது..

“நீங்களும் போய் சாப்பிட்டு வாங்கலேன்…” அவ்வளவு வரை தான் இவர்களின் உபசரிப்பு அன்று இருந்தது..

இன்று இவர்களின் இந்த உபசரிப்பில் மனோகர் மனைவி சுகந்தியும், பிரபாகரன் மனைவி செல்வியும்…

“ம் பரவாயில்லை மாதுரி அண்ணியின் நாத்தனார் மாமியார் வீட்டவங்க நல்ல மாதிரியா தான் இருக்காங்க…” முன் எப்பேற்ப்பட்ட வர வேற்பு கொடுத்தனர் என்பது இவர்களுக்கு தெரியாது அல்லவா அதனால் இப்படி சொல்ல.

அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டனர்.. இவர்கள் என்ன என்று சொல்லுவார்கள்…

இப்போது தான் அனைத்தும் புரிந்து போக மாதுரியின் வீட்டவர்கள் அமைதியாக இருந்தனர்.. ஆனால் பிராபகரன் நினைத்து கொண்டான் தங்கையிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று.. ஆனால் யாரும் பேசாதே.. தன் தங்கைக்கு மட்டும் அல்லாது தன் தங்கை கணவனுக்கும் புரிய போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை…

சாப்பிட்டு முடித்து இங்கு அமர்ந்துக் கொண்டது கூட ஒரு வகையில் நல்லது தான் என்று மனோகர் நினைத்து கொண்டான்..

குழந்தைகளை வைத்து கொண்டு காஞ்சிபுரம் வரை போக வேண்டும் பொழுதோடு ஊர் போய் சேர தான்.. ப்ரியாவின் மாமியார் சுகுனா..

இவர்களை சாப்பிட அழைக்க. அப்புறம் சாப்பிடுகிறேன் என்று ஒரு பார்மால்ட்டிக்கு கூட மறுக்காது போய் சாப்பிட்டு விட்டு வந்து விட்டனர்.. ஆனால் போகும் முன் தங்கையிடம் சொல்லி விட்டு செல்லலாம் என்று பார்த்தால், மாதுரி மேடையிலேயே இருப்பதால் எப்படி கூப்பிடுவது என்று தயங்கி கொண்டு இங்கு அமர்ந்து விட்டனர்..

மேடையை விட்டு கீழே இறங்கினால் சொல்லி விட்டு செல்லலாம் என்று நினைத்து.. ஆனால் இறங்கியவள் நேராக தன் கணவனிடம் சென்று பின் இருவரும் சாப்பிடும் இடத்திற்க்கு செல்வதை பார்த்து விட்டு…

சரி சாப்பிட்டு விட்டு வரட்டும்.. சொல்லி விட்டு செல்லலாம்.. பஸ் தான் நிறைய இருக்கே என்று நினைத்து கொண்டனர்… அப்போது தான் தீபிகாவும் கிருத்திகாவும் தன் அன்னை லட்சுமியிடம் பேசிக் கொண்டு இருந்ததை கேட்டது…

பின் இருக்கையில் இவர்கள் இருப்பது தெரியாது இன்னுமே தான் அவர்கள் குசு குசு என்று பேசிக் கொண்டு இருந்தனர்…

சாப்பிடும் அறையில் இருந்து சாப்பிட்டு முடித்து விட்டு மாதுரியும், தமிழ் மாறனும்.. இவர்களை நோக்கி வருவதை பார்த்து விட்ட லட்சுமி.

“ஏய் வருதுங்க வருதுங்க..” என்று மகள்களை எச்சரிக்கை செய்த லட்சுமி…

தமிழ் மாறனும்.. மாதுரியும் இவர்களை நெருங்கும் சமயம்..

“என்ன மாதுரி சாப்பிட்டியா..? என்று சிரித்து கொண்டு கேட்டவர் தமிழ் ஷரத்தை தூக்கி வைத்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு.

“என்ன தமிழ் குழந்தையை எங்க கிட்ட கொடுத்துட்டு போய் சாப்பிட்டு இருக்கலாம் தானே… இது தான் எனக்கு உன் கிட்ட பிடிக்காத விசயம். எல்லோருக்கும் நீ ஓடி ஓடி செய்வ.. ஆனா யாரையும் நீ ஒரு வேலை வாங்க மாட்ட..” என்ற தன் மாமியிடம்..

“பரவாயில்லை..” என்று மெல்ல சொன்னவன் பின் இவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தவர்களிடம்.

“என்ன எல்லோரும் சாப்பிட்டாச்சா…?” என்று தமிழ் மாறன் கேட்கவும் தான் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இரு மூன்று பேரும் சட்டென்று திரும்பி பார்த்தனர்..

பார்த்ததும் மாதுரியின் தாய் வீட்டவர்கள் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு மூன்று பேருக்கும் அபுக்கு என்று ஆகி விட்டது..

ஐய்யோ என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு திருட்டு முழியும் முழித்து கொண்டனர்..

அதை பார்த்த மாதுரியின் தாய் வீட்டவர்களுக்கு மகிழ்ச்சியாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…

அதில் சிரித்த முகத்துடனே பிரபாகரன்.. “ ம் சாப்பிட்டாச்சி மச்சான்.. உங்க கிட்ட சொல்லிட்டு போக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்..” என்று சொல்ல.

அதற்க்கு மனோகரன்.. .”அப்படி வெயிட் பண்ணதும் நல்லதா தான் போச்சி…” என்று ஒரு வித கிண்டலுடன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருப்பவர்களை பார்த்து கொண்டே சொன்னான்..

தமிழ் மாறனுக்கு அது ஏன் என்று புரியவில்லை என்றாலும். தன் தம்பி மனைவிகள் அவர்கள் தாயை வைத்து தான் ஏதோ என்று புரிந்து கொண்டதால், அது என்ன ஏது என்று தோன்டி துருவாது அதை விடுத்து…

“கார் புக் செய்து விடவா…” என்று தன் மாமியார் வீட்டவர்களை பார்த்து கேட்க..

அதற்க்கு அவர்கள் வேண்டவே வேண்டாம்… பஸ் டர்மனஸ்.. பஸ் காலியா தான் இருக்கும் நாங்க பஸ்லயே போய்க்கிறோம் மச்சான்.” என்று விட்டு சொன்னது போலவே பேருந்தை பிடிக்க சென்று விட்டனர்..

அப்போது தான் அனைத்து உறவுகளும் மண்டபத்தை விட்டு சென்று விட்டு வீட்டு உறவுகள் மட்டும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்…

தமிழ் மாறன் எப்போதும் போல அமைதியாக தன் கை பேசியில் ஏதோ பார்த்து கொண்டு இருந்த போது தான் அவன் கை பேசிக்கு ஒரு அழைப்பி வந்தது..

அழைப்பை ஏற்ற தமிழ் மாறன்… “ம் சொல்லுங்க சார் என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்கிங்க..?” என்று கேட்ட போது.. அழைப்பு விடுத்தவர் என்ன சொன்னாரோ… அதை கேட்டு கொண்டு இருந்த தமிழ் மாறனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறலாயிற்று….

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ… மாதுரி கவனித்து விட்டவள்.. கணவன் கை மீது கை வைத்தவள்..

“என்னங்க என்ன விசயம்.? ஏதாவது பிரச்சனையா..?” என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாது இருந்தவன் பின்..

தன் தம்பிகளிடம். “நீங்க எல்லோரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ. எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு நான் போகனும் .” என்று சொல்லி கொண்டே அவசரமாக அந்த மண்டபத்தை விட்டு வெளியேறியவனின் முதுகை தான் அனைவரும் பார்த்தனர்..

பின் என்ன அவசரமோ…என்று சொன்னவர்கள் பின் அதை விடுத்து எப்படி வீட்டிற்க்கு போவது என்று மற்றவர்கள் அதை பற்றி பேசி கொண்டு இருக்க. மாதுரி மட்மே கணவனின் முகம் மாற்றம் எதனால்..? ஏதாவது பிரச்சனையா…?” என்று மனது அதிலேயே நிலைத்து நின்று விட்டது…

எப்படியோ விமலன் வர்மன் இரண்டு கார்களை புக் செய்து வீடு வந்து சேர்ந்து விட்டனர்… பாக்கியலட்சுமி தான்..

“நம்மளை வீட்டிற்க்கு வந்து சேர்த்துட்டு அவன் போய் இருக்கலாம் தானே.. இந்த கார் ட்ரைவர் காரா ஓட்டினான்.. பள்ளத்திலேயே விட்டு தூங்கி கொண்டு இருந்த குழந்தைங்க எழுந்துடுச்சிங்க… விமலனின் இரட்டை பெண்கள் முழித்து விட்டதை சொன்னார்…

பின் இருக்காதா தமிழ் மாறன் வைத்து கொண்டு இருப்பது விலை உயர்ந்த கார்.. அதில் போவதே தெரியாது.. அதோடு தமிழ் மாறனின் ட்ரைவிங்கும் அப்படி இருக்கும்..

ஆனால் அதற்க்கு மாதுரி தன் மாமியாரின் பேச்சுக்கு ஒன்றும் சொல்லாது தன் குழந்தைகளை அவர்கள் அறையில் தூங்க வைத்து விட்டு மற்றோரு அறைக்கு வந்தவளுக்கு தூக்கம் வரவில்லை…

கையில் பேசியை எடுத்தவள் கணவனுக்கு அழைக்கலாமா.? என்று யோசித்தாள்.. மாதுரி எப்போதுமே கணவனை அடிக்கடி அழைத்து தொந்திரவு எல்லாம் கொடுக்கமாட்டாள்..

அதே சமயம் தமிழ் மாறனும்.. வீட்டிற்க்கு வராத நாட்களில் இல்லை நேரம் கழித்து வருவது என்றால் மனைவியிடம் அழைத்து சொல்லி விடுவான்..

இப்போது அழைக்கலாமா….? வேண்டாமா…? கார் ஓட்டிக் கொண்டு இருந்தால் தொந்திரவு கொடுப்பது போல இருக்குமா…? என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவளின் யோசனையின் நாயகன் தமிழ் மாறனே வந்து விட்டான்..

வந்தவனின் முகம் இன்னுமே ஒரு மாதிரியாக தான் தெரிந்தது.. மாதுரிக்கு என்ன ஏதூ என்று கேட்க மனது துடித்தாலுமே, கணவனின் சோர்ந்த முகத்தை கருத்தில் கொண்டு முதலில் தண்ணீர் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தவள் பாலை காசி கணவன் குடிக்கும் பதத்திற்க்கு இளம் சூட்டில் ஆற்றி கணவன் கையில் கொடுத்தவள்..

“முதல்ல இதை குடிங்க..” என்று சொன்ன மனைவியின் முகத்தை பார்த்தானே தவிர அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை.. அதோடு அவள் கையில் இருந்த பாலையும் அவன் வாங்கி கொள்ளவில்லை…

மாதுரிக்கு புரிந்து விட்டது.. பிரச்சனை என்று… காரணம் குழந்தை தூங்கிய பின்.. இது போல கணவன் வெளியில் சாப்பிட்டு விட்டு வந்தால் கணவனை அப்படியே தூங்க எல்லாம் விட்டு விட மாட்டாள்..

இளம் சூட்டில் பால் கொடுத்து வீட்டில் என்ன பழம் என்றாலும் அதை சிறிது துண்டுகளாக்கி கணவனை சாப்பிட வைத்த பின் தான் தூங்க விடுவாள்..

தவறு தவறு மனைவி இது போல பால் பழம் என்று கொடுத்தாலே தமிழ் மாறனுக்கு வேறு நியாபகம் வந்து விடுமாம்..

அப்படி தான் தமிழ் மாறன் மனைவியிடம் சொல்வது…

“இது போல கையில் பாலோடு உன்னை பார்க்கும் போது எல்லாம் நம்ம பஸ்ட் நையிட் தான் மாதும்மா நியாபகத்திற்க்கு வருது.. நீயுமே அன்னைக்கு பார்த்த மாதிரி தான் இன்னைக்குமே இருக்க.. அதனால நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் அச்சு என்றோ… இல்ல நமக்கு ஒன்பது வயசுல ஒரு பொண்ணு இருக்கு என்பதோ மறந்து போயிடுது என் செல்லக்குட்டி…” என்று சொல்பவன் கல்யாணம் ஆன அன்று நடந்து கொண்டது போலவே தான் நடந்து கொள்வான்..

மாதுரி தான் கணவனின் கையில் இருப்பவள் கொஞ்சம் இடை வேளை கிடைத்ததும் மூச்சு வாங்கி கொண்டு.

“ ஏன் இருக்காது மாறன்… அது தான் குழந்தைகளை பக்கத்து அறையில் படுக்க வைக்க சொல்லிட்டிங்களே… அப்போ உங்க நினைப்பு எல்லாம் அப்படி தான் இருக்கும். அந்த உயரத்துக்கு உங்க பொண்ணு நமக்கு இடையில் படுத்தா உங்களுக்கு புரியும்.. நமக்கு இத்தனை வயசுல பொண்ணு இருக்கு.. இன்னும் இரண்டு இல்ல மூன்று வயசுல நம்ம பொண்ணு பெரிய மனுஷியாவும் ஆகும் அளவுக்கு இருக்கா என்று நீங்களும் உங்க வயசுக்கு தக்கன நடந்துப்பிங்க…” என்று கணவன் தன் உதட்டை விடும் இடைவேளையில் இதை அனைத்தும் மூச்சு வாங்கி சொல்லி முடிக்க..

தமிழ் மாறன் இன்னுமே தன் மனைவியிடம் நெருக்கத்தை காட்டியவனாக..

“என்ன டி வயசு ஆகிடுச்சு.. இப்போ சொல் எனக்கா வயசு ஆகிடுச்சி…” என்று சொல்லி மாதுரியே கை எடுத்து கும்பிட்டு..

“சாமி என்னை மன்னிச்சிடுப்பா நீங்க இப்போ தான் இளமையின் ஆரம்ப படிக்கட்டில் நிற்கிறுங்க..” என்று சொன்ன பின் தான் விடுவான்..

அப்போது கூட. “ அது என்ன டி.. நம்ம பொண்ணு பெரிய பொண்ணா ஆகிட்டா நீ எனக்கு பொண்டாட்டி இல்லை என்று ஆகிடும்மா என்ன. அப்போவுமே நீ எனக்கு பொண்டாட்டி தானே டி…பொண்ணு பெரியவள் என்ன… அவளுக்கு கல்யாணம் முடிந்து நாம பேரன் பேத்தி எடுத்தாலுமே நான் உனக்கு புருஷன் தான்டி. நீ எனக்கு பொண்டாட்டி தான்.. அதுல எந்த மாற்றமும் இல்ல.” என்று சொன்ன கணவனை பார்த்து ஒரு கள்ளப்புன்னகை சிந்தும் மாதுரி.

“நல்ல வேலை ஷரத் பிறந்த உடன் நான் பேமிலி ப்ளானிங்க செய்து கொண்டேன்.. இல்லேன்னா நம்ம பேரன் பேத்திக்கு சித்த சித்தப்பா என்று கூப்பிடும் ஆளு வந்துடும்…” என்ற மனைவியின் பேச்சை கேட்டவன். வர வர பார்க்க மட்டும் இல்லடி உன் பேச்சுமே அழகு கூடிட்டு தான் போகுது போ. அப்போ நாம் மயங்க தானே செய்வேன்.”

அப்படி பேசும் கணவன்.. ஒன்று எதுவும் பேசாது தன்னையே பார்த்து கொண்டு இருந்தாலும் மாதுரிக்கு கணவனி அந்த பார்வையில் காதம் மயக்கம் இது தெரியவில்லை… ஒரு வித பரிதவிப்பு. தான் தெரிந்தது..

அதில் கையில் இருந்த பாலை அங்கு இருந்த டீப்பாவின் மீது வைத்து விட்டவள்..

கணவனின் தோள் பற்றி படுக்கையில் அமரவைத்து விட்டு தானுமே கணவன் பக்கத்தில் அமர்ந்தவள்.. கணவனின் கன்னம் பற்றி தன்னை பார்க்க வைத்த மாதுரி…

“என்னப்பா…?” என்று கேட்டு கொண்டே கணவனின் கண்களை பார்த்தவளின் முகம் இப்போது அதிர்வை காட்டியது. தன் கணவனின் கண்கள் கலங்கி கொண்டு இருக்கிறதா. கணவன் அழுகிறானா…? தந்தை இறந்த போது கூட மனதில் துக்கம் அத்தனை இருந்துமே முகம் இறுக்கத்துடம் நின்று கொண்டு அந்த வீட்டின் மூத்தமகனாக அனைத்தும் பார்த்து கொண்டு இருந்தவன்..

தான்.. “ அழுது விடுப்பா… துக்கத்தை வைத்து கொண்டு இருக்க கூடாது அழுதுடுங்க.. அழுதுடுங்க.” என்று அத்தனை முறை சொல்லியும் அழுகாதவனின் கண்கள் இன்று கலங்கி போய் இருப்பதை பார்த்து..

“ப்பா என்னப்பா என்ன .? என்ன பிரச்சனையா இருந்துட்டு போகட்டும் ப்பா.. நீங்க நீங்க உடைய கூடாதுப்பா…”

கணவனை இது போல மாதுரியினால் பார்க்கவே முடியவில்லை.. சென்ற வாரம். தன்னை அப்படியான கேள்வி கேட்டவனின் மீது கோபம் இருந்தாலுமே…இத்தனை அறிவாக வெளியில் தொழில் செய்து என்ன பிரயோசனம்..? இப்படி வீட்டில் ஏமாந்து கொண்டு இருக்கிறானே.. என்ற ஆதங்கம் தான் கணவன் மீது கோபத்தையும் மீறி இருந்தது…

மாதுரிக்கு கணவன் மீது அத்தனை காதல் என்பதை விட..கணவன் தன் மீது வைத்து இருக்கும் அந்த காதலுக்கு அவள் அடிமையாகி போனாள் என்று தான் சொல்ல வேண்டும்…

தன் கணவனை கோபமாக. பாசமாக அன்பாக.. ஏன் தினம் தினம் இரவுகளில் தன்னை கொஞ்சி தீர்க்கும் போது காதலனாக. தன் மீது இருக்கும் அந்த மயக்கத்தை தன் கண்களில் காட்டி தன்னை நாடும் அந்த பார்வைக்கு மாதுரி அடிமையாகியவளுக்கு…

இது வரை கணவன் கண்களில் பார்க்காத அந்த கலக்கம். கண்ணீரை பார்த்தவளுக்கு மனது பகீர் என்று தான் அடித்து கொண்டது..

அதில் பிரச்சனை என்ன ஆனாலும் பரவாயில்லை. கணவன் உடைய கூடாது.. என் கணவன் உடையவே கூடாது.. இது தான் நினைத்தது மாதுரி.

அப்படி நினைத்த மாதுரி.. அதை கடைசி வரை செய்து முடித்து காட்டி விட்டாள்.. அத்தனை பெரிய இழப்பு சந்தித்து தமிழ் மாறன் அத்தனை வருடங்கள் தொழில் செய்து சம்பாதித்த பணத்தை எல்லாம் மொத்தமா போன போது கூட கணவனி அனைத்திற்க்கும் துணை நின்று கணவனை தலை நிமிர செய்து விட்டவள்.. தானுமே எழுந்து நின்றாள்… முன்பை விட இரண்டு படங்காக தான் அவர்களின் எழுச்சி இருந்தது..

ஆனால் அதை அடைய அவர்கள் பட்ட கஷ்டம்… பட்ட அவமானங்கள்.. முன் ஏதோ ஒரு பேச்சாக தமிழ் மாறன் சொன்ன வார்த்தையை இன்று அதை வேறு அர்த்தம் பூசி கொண்டு…. அதை வைத்து பேசிய பேச்சுக்கள்..

இதை அனைத்தையும் விட… அவர்கள் குழந்தைகள்…. ஒரு தாயாக மாதுரி அதை பார்த்து தான் துடி துடித்து போய் விட்டாள்..

பிறந்ததில் இருந்து பணப்பிரச்சனை என்ன என்று தெரியாது இருந்த பிள்ளைகள் அதை புதியதாக சந்தித்த போது.. முதலில் மிரண்டு தான் போய் விட்டனர்.

ஆனால் ஒரு நல்ல தாய் தகப்பன்.. நூறு ஆசியர்களுக்கு சமம் என்பதை தமிழ் மாறனும் மாதுரியும் ஒரு நல்ல பெற்றோர்களாக அந்த சமயத்தில் நிரூபித்து தான் விட்டார்கள்…

ஆம் ஒரு சிலதை சொல்வது எளிது பேசுவது எளிது.. ஆனால் அதை எதிர் கொள்வது என்பது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது…

அதுவு மாதுரியாவது வீட்டு அரசியலை கொஞ்சம் கண்டு கொண்டாள் தான். ஆனால் அவளுமே அதை முழுவதுமாக தெரிந்து கொண்டாளா… இல்லை என்று தான் மாதுரி மற்றவர்கள் அவளிடம் முன் பேசியதற்க்கும், பின் தன்னை நடத்தியதையும் பார்த்து அவள் உணர்ந்து கொண்ட போது ஒரு சில சமயங்களில் அவள் தடு மாறி தான் போனாள்..

ஆனால் தன் குடும்பம்.. தன் கணவன் தன் குழந்தைகளை நினைத்து.. இவர்கள் முன் தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.. என்று வைராக்கியத்தை இழுத்து பிடித்து கொண்டு தான் அந்த கடினமான காலங்களை அவள் கடந்து வந்தது…

மாதுரிக்கே இப்படி இருக்கும் போது. தன் குடும்பம்.. தன்னுடையது தன்னிடையது என்று எதிலும் வேற்றுமை பாராது இருந்த தமிழ் மாறன். தன்னுடையது என்று நினைத்தது எல்லாம் ஒன்றும் இல்லையடா.. பத்து வயதில் கூட பிறந்தவர்கள் பங்காளி எனும் போது உன் மகளுக்கே இன்னும் ஒரு வருடம் சென்றால் பத்து வயது ஆக போகிறது.. இப்போது நாம நாம நம்முடையது என்று பேசிட்டு இருப்பியா நீ.. என்று முகத்திற்க்கு நேராக கேட்ட போது… அதை ஜீரணிக்க தமிழ் மாறன் தடுமாறும் போது எல்லாம் நம் மாதுரி தான் கணவனின் அந்த தடுமாற்றத்தில் விழுந்து விடாது தாங்கி பிடித்து கொண்டவளின் காதல் திருமணம் முடிந்து தன் கணவன் தன்னிடம் காட்டிய அந்த காதலை இரண்டு மடங்காக அவள் தன் கணவன் மீது காட்டினாள்…








 
Active member
Joined
Aug 16, 2024
Messages
321
என்னதான் நடந்தது.நல்ல அனுபவம் போல ஆசான் இல்லை என்று சும்மாவா சொன்னார்கள்.
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
246
Maranukky ithu oru paadam… inime sontha thambi thangachi ya iruntha kooda oru alavu than…
Hope Madhuri family avangalai kavanippanga
 
Top