அத்தியாயம்….6
மாதுரி கணவனின் கலங்கிய கண்களை பார்த்து கலங்கி போனால் என்றால், தமிழ் மாறன் தன்னை பார்த்து பதைத்து போய் தன்னை பார்க்கும் மனைவியை பார்த்து தான்.. இனி நான் இவர்களுக்கு என்ன வாழ்க்கை கொடுக்க போகிறேன் என்று மனதில் பரிதவித்து போய் விட்டான்…
இனி நான் என்ன செய்வேன்…? என்று நின்ற போது காரியம் யாவிலும் கை கொடுப்பவள் தான் மனைவி..மனைவி சில சமயம் மந்திரியாகவும் கணவனுக்கு இருப்பாள் என்பதை காட்டினாள்…
மனைவி தன்னை பார்த்து என்னவோ ஏதோ என்று துடிப்பதை விட சொல்லி விடலாம் அனைத்தும் சொல்லி விடலாம்.. என்று தன் மனைவியின் கை பிடித்து கொண்ட தமிழ் மாறன்…
“மூன்று மாசம் முன்னே நம்ம ஸ்டேஷன் கிட்ட ஒரு நான்கு கிரவுண்டுக்கு இடம் வாங்கினேன் தானே…” என்று கேட்ட கணவனிடம் மாதுரி.. ஆமாம் என்று தலையாட்டினாளே தவிர வார்த்தைகளாக வரவில்லை…
காரணம் மாதுரிக்கு புரிந்து விட்டது.. அந்த இடத்தை வைத்து தான் பிரச்சனை என்பது… அப்படி பிரச்சனை என்றால், உண்மையில் அதை எதிர் கொள்வது என்பது கடினம் தான்… ஏன் என்றால் கணவன் தன் ஒட்டு மொத்தமாக இந்த தொழில் சம்பாதித்த அனைத்தையுமே அதில் தான் போட்டு இருக்கிறான்..
தமிழ் மாறன்… இது வரை தான் சம்பாத்தியத்தை தனக்கு என்று தனிப்பட்டு சொத்தாக இது வரை தனக்கு என்று வாங்கி போட்டது கிடையாது.. தொழிலில் எடுத்த பணத்தை தொழிலிலேயே தான் போட்டு வந்தான்..
வீட்டு செலவு,, இது போல சீர் குடும்ப செலவு, இதை தவிர்த்து மனைவிக்கு என்று நகைகள் என்று இது மட்டும் தான் தன் தொழிலில் இருந்து எடுப்பது… தனிப்பட்டு தனக்காக ஒரு சொத்தாக வாங்கியது கிடையாது.. மாதுரியுமே நமக்கு என்று தனித்து ஒரு வீடு வேண்டும் என்று இன்று வரை கேட்டது கிடையாது..
தன் தம்பிகள் இரண்டு பேருமே அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி அவர்கள் மனைவியோடு மனையில் அமர்ந்து கிரகபிரவேசம் செய்த போது கூட தமிழ் மாறன் தன் மனைவியிடம் கேட்டான் தான்.
“உனக்கும் இது போல ஆசை இருக்கா மாதும்மா..?” என்று கேட்ட போது மாதுரி சொன்னது இது தான்..
“எனக்கு இந்த வீடு இதை பற்றி எல்லாம் ஒன்னும் தெரியாது அத்தான்… நீங்க தான் இந்த தொழிலிலேயே இருக்கிங்க.. அதோட எனக்கு தெரியும்.. நீங்க இந்த தொழில்ல வரும் லாபத்தை தொழிலிலேயே தான் போடுறிங்க என்று… அது எப்போ எடுக்கனும் என்றும் உங்களுக்கு தான் தெரியும்…எனக்கு என்ன இதை பற்றி தெரியும் அத்தான்…?” என்று கேட்ட மனைவியிடம் தமிழ் மாறன் ஒன்றும் சொல்லவில்லை..
ஆனால் செய்து காட்ட நினைத்தான்.. ஒரு பெரிய இடம் வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் என்று..
அதன் தொட்டு தான் தன் ஒட்டு மொத்தமான பணத்தையும் இந்த நான்கு கிரவுண்டில் போட்டு வாங்கியது..
அந்த நான்கு கிரவுண்ட்டையும் தன் வசம் வைத்து கொள்ளும் திட்டம் கிடையாது தமிழ் மாறனுக்கு .. நல்ல தொழில் செய்பவன்… அப்படி செய்ய மாட்டான்..
ஒரு கிரவுண்ட் தனக்கும்.. மிச்சம் இருக்கும் அந்த மூன்று கிரவுண்ட் இடத்தில் ஒரு கிரவுண்ட் இடத்தை வங்கியில் அடமானம் வைத்து இரண்டு கிரவுண்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடித்து பின் அந்த ஒரு கிரவுண்டையும் மீட்டு.. அதில் தன் இரு தம்பிகளுக்கும் தங்கைக்கும் மூன்று போஷனாக கட்டி கொடுக்க திட்டம் தீட்டி தான் அந்த இடத்தை தமிழ் மாறன் பதினெட்டு கோடி கொடுத்து வாங்கியது..
ஆம் பதினெட்டு கோடி தான்… இது அதிகம் தான்.. அகல கால் வைப்பது போல தான்… இருந்தும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் தான் தமிழ் மாறன் அதை வாங்கியது..
அவன் திட்டம் போட்டப்படி நடந்து இருந்தால் கண்டிப்பாக அவன் அனைத்தும் செய்து முடித்து இருப்பான் தான்… ஆனால் வாங்கிய இடமே இப்போது பிரச்சனை என்று நிற்கும் போது அதை வைத்து அவன் என்ன செய்ய முடியும்..?
ஆம் பிரச்சனை தான்…அந்த இடம் ரெயில் நிலையம் ஒட்டி உள்ள இடம் ஆகும்.. அதை வாங்க அத்தனை போட்டி தான் நடந்தது… ஸ்டேஷனை ஓட்டி இடம் என்றாலே… அதன் மதிப்பு அதிகம் தானே….இடத்தின் சொந்தக்காரர் தமிழ் மாறனுக்கு தெரியும்..
அதே ஊர் என்பதினால், அவரை மட்டும் இல்லாது அவர்கள் குடும்பத்தையே தமிழ் மாறனுக்கு தெரியும் என்பதினால் தான் அவர்கள் தமிழ் மாறனுக்கு விற்றது…
தெரியும் என்றால் அந்த சொத்தின் உரிமைப்பட்டவர் இறந்து விட்டார்.. அவரின் வாரிசான மூன்று ஆண்கள் ஒரு பெண் கையெழுத்து இட்டு இவன் பெயருக்கு பதிவு செய்து கொண்டான். தமிழ் மாறன் விற்கும் இடத்தை எப்போதுமே பவர் தான் வாங்குவான்.
ஆனால் இதில் தனக்கு சொந்தமாக ஒரு பகுதி வைத்து கொண்டு பின் கொஞ்சம் இடத்தை வங்கியில் வைத்து பணம். என்று நிறைய ஐடியாக்களை வைத்து இருப்பதால் தன் பெயரில் பதிவு செய்து கொண்டான்… தெரிந்த குடும்பமாக… அந்த இடம் பற்றி தெரிந்து இருந்தாலுமே அனைத்து லீகலும் பார்த்து தான் தன் பெயரில் பதிவு செய்து கொண்டது..
பின் வங்கியில் பணம் வாங்க அந்த டாக்குமெண்ட் வைத்து பணம் வாங்க முயலும் போது தான் அதில் இருந்து ஒரு பூதம் ஒன்று கிளம்பி வந்து உள்ளது.
அதாவது இறந்தவர் நிறைய லாரிகளை வைத்து தான் தொழில் செய்து கொண்டு வந்தார்…
சில சமயம் ஏதாவது ஒரு லாரியை அவரே எடுத்து கொண்டு வெளி மாநிலத்திற்க்கு பொருட்களை கொண்டு செல்வதும் உண்டு.. அப்படி குண்டூரில் அடிக்கடி லாரி எடுத்து கொண்டு சென்றதில், அங்கு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை திருமணமும் முடித்து அந்த பெண்ணுக்கும் மூன்று ஆண்குழந்தைகளை தந்து உள்ளார்… அந்த உத்தமர்..
அது இன்று வரை முதல் குடும்பத்திற்க்கு தெரியாது. தெரியாது பார்த்து கொண்டவர் சொல்லாது போய் சேர்ந்து விட்டார்…
அந்த குண்டூர் குடும்பம் ஆறுமாதமாக வராது போனதில் விசாரித்து அறிந்தது கணவன் இறந்து விட்டார் என்பது..இரண்டாம் மனைவிக்கு தெரியும் போல முதல் மனைவி இருக்கிறாள்.. அவளுக்கு நான்கு குழந்தைகள் இருப்பது என்று..
ஆனால் இப்போது வந்து நின்ற இரண்டாம் குடும்பத்து பிள்ளைகள் கேட்டது இதை தான்… சட்டம் என்ன சொல்கிறது… திருமணமே ஆகாது குழந்தை பிறந்தாலுமே அந்த குழந்தையின் பொறுப்பு அந்த ஆணுக்கு உண்டு என்று தானே சட்டம் சொல்கிறது..
இதோ இவர் தான் எங்கள் தந்தை என்று அவர்களின் பிறப்பு சான்றிதழ் முதல் அவர்களை பள்ளிக்கு சேர்க்கும் போது தந்தையாக மாசிலாமணி என்று அவரே கைய்யெப்பம் இட்டு சேர்த்த சான்று என்று அனைத்தும் கொண்டு வந்து கொடுத்து…
தந்தையின் சொத்தில் எங்களுக்கும் பாகம் உள்ளது என்றும், அந்த சொத்தை எங்கள் கைய்யெப்பம் இல்லாது விற்றதில் செல்லவே செல்லாது என்றும் வழக்கு போட்டு உள்ளனர்… இது தான் பிரச்சனை…” என்று தமிழ் மாறன் மாதுரியிடம் உள்ள பிரச்சனை உள்ளப்படி சொல்ல.
மாதுரிக்கு அதை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது.. புரிந்ததும்.. “ இனி என்ன அத்தான் ஆகும்..” குரல் நடுங்க கேட்டாள்…
“என்ன ஆகும் என்னால சரியா சொல்ல முடியல மாது… வாங்கினவங்க கிட்ட பணம் வாங்க முடியாது.. என் பெயரில் இருக்கு… இப்போ வாங்கினவங்க சொல்றது… கேஸ் போட்டால் எங்களால முடிந்த வரை எல்லாம் பார்த்து செய்யிறோம் இது தான்… இப்போ நான் இவங்களை ஏமாத்தி என் கிட்ட வித்துட்டாங்க என்றும் சொல்ல முடியாது… ஏன்னா அவங்க அப்பாவுக்கு ஒரு குடும்பம் இருந்தது என்பது அவங்களுக்கே ஒரு ஷாக் தான்.. அதோடு நான் இவங்க மேல கேஸ் போட்டாலும்.. அதுவுமே வருஷ கணக்கா இழுத்து கொண்டு தான் போகும்… அதுக்கு நான் இவங்க போட்ட கேஸையே பேஸ் பண்ணிக்கலாம்.. இப்போ நான் ஒரு லாயரை பார்த்துட்டு தான் வரேன்…அந்த இரண்டாம் குடும்பத்து பசங்க.. பணம் எதிர் பார்க்கிறாங்கலா என்று கூட பேசி பார்த்தாச்சி. ஆனா அவங்க எதிர் பார்ப்பது பணம் இல்லையாம். அந்த இடத்தின் ஷேர் தானாம்… விசாரித்து தான் வந்து இருக்காங்க..” என்று சொன்னவன்.
“ஆனா ஒன்னு மட்டும் உறுதி… உடனடியா அந்த இடத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டே ஆர்டர் வாங்கிட்டாங்க… பார்க்கலாம் எத்தனை ஆண்டு இந்த கேஸ் இழுக்குதுன்னு…” என்று ஒரு பெரும் மூச்சோடு சொல்லி முடிக்க…
கணவனின் கையை இறுக பற்றிக் கொண்டவள்..
“நீங்க ஸ்டாங்கா இருங்க… இதை நினைத்து நீங்க உடம்பை கெடுத்துக்காதிங்க… அடுத்து என்ன என்று யோசிக்கவும் செய்யவும் நீங்க நல்லா இருந்தா தான் செய்ய முடியும்..” என்ற மாதுரியின் பேச்சில் தமிழ் மாறனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது போல இருந்தது.
இதே மாதுரியின் இடத்தில் வேறு ஒரு பெண்ணாக இருந்து இருந்தால் கண்டிப்பாக இத்தனை கோடி ஒரே இடத்தில் போட்டு முடங்கியதில் அடுத்து என்ன என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருந்து இருப்பார்கள்.. ஆனால் மனைவியின் இந்த நிதானம் தமிழ் மாறனுக்கு யானை பலத்தை கொடுத்தது..
ஆனால் மனைவி போலவே அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா..
காலை பத்து மணியளவில் குடும்பத்தினர் அனைவருக்கும் விசயம் தெரிந்தது.. முதலில் பதினெட்டு கோடியா கோடியா.. என்று வாயை பிளந்தவர்கள்..
பின் எப்படி அத்தனை பணத்தை கொடுத்து இடத்தை வாங்கின… ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது… ஒரே முட்டா உச்சாணி கொம்பில் உட்கார நினைத்தால், இத்தனை கோடி போட்டு சொத்து வாங்கினதை சொன்னாரா…? பார்த்திங்கலா என்ன கமுக்கமா வாங்கி போட்டு இருக்காரு.. மாதுரி கூட மூச்சு விடல பார்த்தியா… வீட்டுக்கு தெரியாது வாங்கி போட்டு சந்திரி பண்ணாது இருக்க பார்த்தாங்க. அது அந்த கடவுளுக்கே பொறுக்கல போல. என்று ஆள் ஆளுக்கு இது போலான பேச்சுக்களை தான் பேசினர்..
உண்மையில் தமிழ் மாறன் இது வரை இந்த தொழில் ஆரம்பிக்கும் முன்.. இருபது லட்சம் தன் தந்தையிடம் கேட்டான். ஒரு வருடத்தில் அதை திருப்பி கொடுத்து விடுவேன் என்று கேட்டான் தான்…
ஆனால் அது எதற்க்கு என்ன செய்ய போகிறேன் என்று எல்லாம் சொல்லவில்லை… சொன்னது போலவே வாங்கிய பணத்தை கொடுத்து விட்டான்..
அது தான் இன்று வரை தொடர்கிறது… எங்கு வாங்கினான் எங்கு கட்டி விற்கிறான்.. என்ன லாபம் என்று தமிழ் மாறன் இது வரை யாரிடமும் சொன்னது கிடையாது.. ஆனால் நல்ல வருமானம் இதை மட்டும் தெரிந்து வைத்து உள்ளனர்.
அனைத்தும் நல்ல மாதிரியாக போன போது பெரியதாக எடுத்து கொள்ளாதவர்கள் இப்போது அதை வைத்தே ஆள் ஆளுக்கு பேச…
தமிழ் மாறன் எப்போதும் போல அமைதியாக தன் கைய் பேசியில் லாயர் கேட்ட டாக்குமெண்சை அனுப்பி வைத்து கொண்டு இருந்தான்..
குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு அனுப்பி விட்டனர்.. பெரியவர்கள் மட்டுமே வேலைக்கு விடுப்பு விடுத்து விட்டில் இருக்கின்றனர். விசயம் தெரிந்து அந்த வீட்டு பெண் ப்ரியா மாப்பிள்ளை ஸ்ரீ வச்சனுமே இங்கு வந்து விட்டனர்..
இப்படி தமிழ் மாறனை பற்றி பேசிக் கொண்டு இருக்க அவன் இப்படி அமைதியாக இருபதை பார்த்து விமலன்.
“அண்ணா நாங்க இப்போ பேசிட்டு இருப்பது உங்களை பத்தி தான்.. நீங்க எனக்கு என்ன வந்தது. என்பது போல இப்படி உட்கார்ந்துட்டு இருக்கிங்க..?”
தமிழ் மாறன் எப்போதுமே அப்படி தான் உட்கார்ந்து கொண்டு இருப்பான்.. ஆனால் முன் கையில் பணம் இருக்கும் போது அந்த அவனின் செயல் ஆளுமையாக தெரிந்தது.. இன்று பணம் இல்லாத போது திமிர் தனமாக தெரிகிறது போல…
விமலனின் இந்த கேள்விக்கு தன் கை பேசியில் இருந்து பார்வையை நிமிர்த்தி அவனை பார்த்தான்… இப்போ என்ன செய்யனும் என்பது போலான பார்வையை பார்த்தானே தவிர.. அதை வார்த்தையினால் கேட்கவில்லை..
தமிழ் மாறனின் இந்த நடத்தையில் வர்மன்… “இந்த திமிர் தனம் தான் உங்களை இங்கு வந்து நிறுத்தி இருக்கு….” என்று சட்டென்று வார்த்தைகளை விட்டு விட.
அதற்க்கு இத்தனை நேரம் இவர்களின் பேச்சுக்களை பல்லை கடித்து கொண்டு கேட்டு கொண்டு இருந்த மாதுரி வர்மனின் இந்த பேச்சில்.
“கொஞ்சம் பார்த்து பேசுங்க..” என்று இதை கொஞ்சம் கோபமாக தான் மாதுரி சொன்னாள்.
இப்போது கிருத்திகாவும் தீபிகாவும்… “ ஆம்பிள்ளைங்க பேசிட்டு இருக்காங்க..? இப்போ நீ ஏன் இடையில் நுழையுற…?”
மாதுரி இந்த வீட்டின் மூத்த மருமகளாக இருந்தாலுமே, தீபிகா கிருத்திகாவோடு மாதுரி இரண்டு வயது சின்னவள் தான்… அதனால் அக்கா என்று எல்லாம் அழைக்க மாட்டார்கள்.. ஆனால் இது போல ஒருமையிலும் அழைத்தது இல்லை.. முதல் முறை இது போலான ஒருமை பேச்சில் மாதுரி தீபிகா கிருத்திகாவை பார்க்க.
தொடர்ந்து… “ வீட்டில் ஒருத்தர் இது போல ஆனால் அது வீட்டில் இருக்கும் மத்தவங்களையும் பாதிக்க தான் செய்யும்.. அதனால இதை பத்தி கேட்க தான் செய்வாங்க… ஆனா அவரு எனக்கு என்ன வந்தது என்பது போல இருந்தா கோபம் வர தானே செய்யும்… அதுல ஒரு சில வார்த்தைகள் சொல்ல தான் செய்வாங்க.. இதுல நீ என் புருஷனை அதிகம் பேசுற என்று கேட்பியா..?
மச்சினரா இருந்தாலுமே உன்னை விட அவர் பெரியவர். “ என்று இது வரை இல்லாத வகையாக பேச.. மாதுரி ஏதோ சொல்ல வரும் முன்..
இது வரை அமர்ந்திருந்த தமிழ் மாறன் எழுந்து நின்றான்…. நின்றவன் தன் தம்பிகளை பார்த்து.
“எனக்கு இத்தனை நஷ்டம் ஆனதில் குடும்பத்தில் இருக்கும் மற்றவங்களுக்கு என்ன பாதிப்பு…?” என்று கேட்டான்..
உண்மையில் நேற்று இரவு முழுவதுமே தன் மனைவி தன் இரு குழந்தைகள் இனி அவர்களின் எதிர் காலம் மொத்த பணத்தையும் அதில் போட்டு விட்டனே.. என்று தான் நினைத்தான்…
இதனால் தன் தம்பிகள் தம்பி மனைவிகள் இவர்களுக்கு பாதிப்பு ஆகும் என்று நினைக்கவில்லை.. உண்மையில் தெரியாது தான் கேட்டான்.
ஆனால் தமிழ் மாறனின் இந்த கேள்விக்கு தம்பி பதில் அளிக்காது… தம்பியின் மனைவி தீபிகா ஏதோ பேச வரும் முன்… கை நீட்டி அவளை பேச விடாது செய்த தமிழ் மாறன் மீண்டும் தன் தம்பிகளை பார்த்து…
“சொல் நான் என் மொத்த பணத்தையும் போட்டதில் உங்களுக்கு எல்லாம் என்ன பாதிப்பு…?” என்று கேட்க.
அண்ணனின் இந்த கேள்விக்கு வர்மனாலும் விமலனாலும் உடனே பதில் சொல்ல முடியவில்லை… அதனால் தத்தம் தன் மனைவிமார்களை . தான் பார்த்தார்கள்..
அவர் அவர் மனைவிமார்களின் கண்களில் என்ன படித்தார்களோ… “ இல்ல தமிழ் நாம இருக்கும் ஜாயின் பேமிலி… இதுல ஒருத்தவங்க பாதிப்பு பாதிச்சா அது குடும்பத்தில் இருக்கும் மத்தவங்களையும் தான் பாதிக்கும்…”
இதை தான் தீபிகாவும் சொன்னது.. இதை தானே எப்படி என்று கேட்டேன்.. இவனுமே அதே சொன்னால் எப்படி..” நெற்றியை நீவிக் கொண்டு தன் தம்பியின் பார்வையில் தம்பிகள் என்ன கண்டார்களோ..
இப்போது வெளிப்படையாகவே…. “ நான் வெளிப்படையாகவே சொல்லிடுறேன் இனி குடும்பம் எப்படி நடத்துவது..?” என்ற தம்பியின் இந்த கேள்வியில் தமிழ் மாறனுக்கு புரிந்து விட்டது… இவர்கள் சொன்ன இந்த குடும்பத்தின் பாதிப்பு..
இது வரை யாரையும் எதிர் பார்க்காது தான் நடத்தினேன்.. ஆனால் இனி என்னால் நடத்த முடியாது என்று இன்னும் ஒரு நாள் கூட கடந்து இருக்கவில்லை… இதோ இப்போது கொஞ்ச நேரம் முன் இவர்கள் அனைவரும் சாப்பிட்டது கூட நான் வாங்கி போட்ட மளிகையை வைத்து சமைத்ததில் தான்.. ஆனால் ஒரே நாளில் தம்பியின் இந்த பேச்சு தமிழ் மாறனுக்கு அதிர்வை தான் கொடுத்தது..
அதில் தன் அம்மா பாக்கியலட்சுமியை தான் பார்த்தான்.. பாக்கியலட்சுமிக்குமே கண்கள் கலங்கி போய் தன் பெரிய மகனின் அதிர்ந்த முகத்தை பார்த்தவர் தன் மற்ற இரண்டு மகன்களிடம் கோபமாக.
“என்ன டா பேசுறிங்க… என்ன இது. அவன் தானே டா இது வரை இந்த குடும்பத்தை நடத்திட்டு போனது….?” என்று பேசிக் கொண்டு இருந்த மாமியாரின் வாயை தீபிகாவும் கிருத்திகாவும்..
“அத்த நீங்க என்ன பேசுறிங்க அத்த அவர் பிசினஸ் செய்தார்.. அவர் கணக்கு வழக்கு இல்லாம பணத்தை வாரி இரைக்கலாம்.. ஆனா மாதம் சம்பளம் வாங்கும் எங்களால் இது போல செய்ய முடியுமா..? அதுவும் இப்போ நாங்க இடம் வாங்க வீட்டு லோன் போட்டு இருக்கோம்.. இருக்கும் நகைகள் எல்லாம் பேங்கில் வைத்து வெளியில் கடன் வாங்கி இப்படி தான் வாங்க போறோம்.. இதுக்கு எல்லாம் வட்டி கட்டிட்டு பசங்களை படிக்க வெச்சிட்டு நாங்க எங்க குடும்பம் நடத்துவதே பெரிய விசயம் இதுல இவங்களுடையது சாப்பாடு மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. ஆனா பசங்க படிப்பு.. “ எனும் போதே தமிழ் மாறனும் மாதுரியும் ஒருங்கே…
“போதும்..” எனறு ஒரே நேரத்தில் சொன்னார்கள்.. அந்த போதும் என்ற வார்த்தை அதிக சத்தம் போட்டு எல்லாம் சொல்லவில்லை.. ஆனால் அதில் அதிக அழுத்தம் தெரிந்தது.
அந்த போதும் என்ற ஒரு வார்த்தையில் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை.. பாக்கியலட்சுமி மீண்டுமே..
“என்னங்க டா…” என்ற ஆரம்பிக்க இப்போது தமிழ் மாறன்.
“ம்மா இந்த பேச்சை இதோட விடனும்..யாரும் என் குடும்பம் இனி எப்படி போகும்…? இனி யார் பார்த்துப்பா…? என்று எல்லாம் யாரும் இனி பேச கூடாது…” என்றவன் பின் தன் அன்னையிடம்..
“ம்மா நீங்க எங்க கூட இருக்கிங்கலா அவங்க கூடவா…” என்ற கேள்வியில் பெரிய மகனின் முடிவு தெரிந்தவராக.
“தமிழ் வருமானம் இல்லாம எப்படி டா…?” என்ற தாயை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தவன்..
பின்.. “ பிச்சை எடுக்க மாட்டோம்… சொல்லுங்க யார் கூட இருக்க போறிங்க..?” என்று கேட்ட போது..
வர்மன்.. “ம்மா எங்க கூட தான் இருப்பாங்க… வயசான காலத்தில் ம்மா வாடகை வீட்டில் எல்லாம் இருக்க தேவை எதுக்கு…?” என்று கேட்டதில்.
தமிழ் மாறன் . “வாடகை வீடா…?” என்று வர்மனிடம் கேட்டவவன்.
“நான் எப்போ இந்த வீட்டை விட்டு போறோன் என்று சொன்னேன்…?” என்றும் கேட்டான்..
அதற்க்கு தீபிகா… “ அப்போ எங்களை வெளியில் போக சொல்றிங்கலா.? இது நீங்க வாங்கிய இடமோ.. நீங்க கட்டிய வீடோ இல்ல. மாமாவுடையது… இதுல எங்களுக்கும் உரிமை இருக்கு…” என்று சொன்னாள்..
எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை அத்தான் போட்டு பேசும் தாய் மாமனின் மகள்… இப்போது ஒரு முறை கூட அந்த அத்தான் என்ற அழைப்பு இல்லாது மிடுக்காக பேசும் தன் தம்பி மனைவியையே பார்த்து கொண்டு இருந்தவன்..
அதன் பின் அதிக பேச்சுக்கள் எல்லாம் வைத்து கொள்ளவில்லை…
தாங்கள் இருக்கும் பகுதியை அன்று மாலையே தன்னிடம் வேலை செய்யும் ஆட்களை வைத்து ஒரு மதில் சுவரை எழுப்பி விட்டவன்.. தங்களுக்கு என்று வந்து போக தனி பாதையும் அதில் கேட்டும் வைத்து விட்டான்..
வீட்டில் இருக்கும் பொருட்களான பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி…குக்கர் ஓவன் என்று இருக்கும் அனைத்து பொருட்களும் தமிழ் மாறன் தான் வாங்கி போட்டது…
அதனால் இது எதுவும் வாங்க தேவையில்லாது அனைத்து பொருட்களோடு தனி வீடு இரண்டே நாட்களில் தமிழ் மாறனும் மாதுரியும் உருவாக்கி விட்டனர்..
ஆனால் இங்கு விமலனும் வர்மனும் தான்… புதியதாக அனைத்தும் வாங்க அத்தனை பணம் கொடுத்து வாங்கியது…
இவர்கள் இருவரும் சேர்ந்து தான் இருப்பது .. அதனால் இருவரும் பணத்தை சரி பங்காக போட்டு தான் வாங்கியது.. அதற்க்கே இத்தனை பணம் போகுதே. என்று சொல்லி சொல்லி தான் வாங்கியது.
அதற்க்கு தீபிகா தான்… “ உங்க அண்ணன் தான் மனசாட்சியே இல்லாம எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாரே… என்ன டா இது இப்படி எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டா தம்பிங்க என்ன பண்ணுவது என்று யோசிக்க வேண்டாமா…? என்று சொல்ல..
முதல் முறையாக பாக்கியலட்சுமி தன் பெரிய மகன் சார்பாக யோசித்து தன் பெரிய மகன் சார்பாக பேசினார்..
“யோசிப்பதா.. அவன் இனி தான் யோசிக்கவே ஆரம்பித்து இருக்கான் மா..” என்று ஒரு விதமாக சொல்ல.
அதில் கோபம் ஆன கிருத்திகா…. “என்ன யோசித்து என்ன பிரயோசனம்.. அது தான் மொத்த பணத்தையும் விட்டு விட்டாரே… “ என்று சொல்ல பாக்கியலட்சுமி ஒன்றும் சொல்லவில்லை.. ஆனால் சிரித்து கொண்டவர்…
“அவனை பத்தி உங்களுக்கு இன்னுமே ஒன்னும் தெரியல என்று தான் நினைக்கிறேன்…” என்ற இந்த பேச்சுக்கு தாய் வீட்டின் பிரச்சனையில் மாமியார் வீட்டிற்க்கு போகாது இங்கு இருந்த பிரியா தன் அம்மாவின் பேச்சுக்கு..
“ஆமாம்மா ஆமாம் உங்க பெரிய மகனை பத்தி தெரியாது தான் இருந்து விட்டோம்… நான் கூட பெரிய புத்திசாலி என்று தான் இது வரை நினைத்து கொண்டு இருந்தேன்.” என்று தன் தாயிடம் சொன்னவள்..
கிருத்திகாவிடம்… “ என்ன கிருத்திகா வீட்டை ஒழுங்கு படுத்த நான் ஏதாவது உதவி செய்யட்டுமா..?” என்று கேட்க.
தீபிகா உடனே… “ இல்ல இல்ல நானும் அவளுமா செய்து விடுவோம்..” என்று சொன்னவள் பின் மெல்ல முனு முனுப்பாக…
கிருத்திகாவிடம்.. “ இவளை மட்டும் ஒட்ட விட கூடாது கிரு.. பார்த்த லே.. இத்தனை நாள் பெரிய அண்ணா பெரிய அண்ணா என்று அவர் பின்னாடி சுத்திட்டு இருந்தவ ஒரே நாளில் அந்தர் பல்டி அடிப்பதை… இவள் ஆசைக்கு எல்லாம் நம்மால் சீர் செய்ய முடியாது டி..
நீ உன் புருஷன் கிட்ட சொல்லி வை நான் என் புருஷன் கிட்ட சொல்லி வைக்கிறேன்..” என்று சொன்னவள் சொன்னது போல செய்தும் விட்டாள்..
பிரியாவும் இனி முன் போல அம்மா வீட்டில் இருந்து ஒன்றும் தேறாது என்று தாய் வீட்டிற்க்கு அடிக்கடி எல்லாம் வருவது கிடையாது.. ஆனால் வருவாள் வரும் போது எல்லாம் இந்த வீட்டில் எனக்குமே பங்கு இருக்கு என்று அடிக்கடி நியாபகம் படுத்தி விட்டு செல்வாள்…