Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

நீயென் புதினம்....7

  • Thread Author
அத்தியாயம்….7

பாக்கிய லட்சுமி தன் இளைய மகன் இரட்டையர்களான விமலன் வர்மன் வீட்டில் தான் இருக்கிறார்.. ஒருவன் இரட்டை குழந்தைகள் இன்னொரு மகனுக்கு பிறந்த பெண்ணோ ஒன்னரை வயதில் இருக்கும் குழந்தை…

அது என்னவோ அந்த குழந்தை பிறந்ததில் இருந்தே கொஞ்சம் உடம்பு சரியில்லாது அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வது போல தான் உள்ளது.. அதுவும் அவளுக்கு என்று பார்த்து பார்த்து தான் சமைத்து கொடுத்து தனிப்பட்டு பார்த்து கொண்டாலுமே, அந்த பெண் குழந்தையில் ஆரோக்கியம் அந்த அளவுக்கு இல்லை.

இதில் கீர்த்திகா தீபிகா இருவருமே வேலைக்கு செல்வதால், பாக்கியலட்சுமியின் தேவை இவர்களுக்கு தான் தேவைப்பட்டது..

குடும்பம் ஒன்றாக இருந்த போதுமே பாக்கியலட்சுமி தான் குழந்தையை பார்த்து கொண்டார்… தமிழ் மாறன் தன் அன்னையிடம்..

“நீங்க எங்கு இருக்க விரும்புறிங்க…?” என்று கேட்ட போது தீபிகாவும் கிருத்திகாவும் உடனே எங்களோடு இருக்கட்டும் என்று சொல்ல… இதோ அதன் படி பாக்கியலட்சுமி இவர்களோடு வந்து ஒரு மாதம் முடிவடைந்து விட்டது…

ஆம் குடும்பம் உடைந்து.. தவறு தவறு சுயநலமாக குடும்பம் உடைக்கப்பட்டு மாதம் ஒன்று கடந்து விட்டது.

பாக்கியலட்சுமிக்கு தான் இங்கு இருந்தாலுமே அவர் மனது தன் பெரிய மகன் மீதே தான் இருந்தது… இப்படி அவன் நிலை ஆகும் என்று அவர் நினைத்தும் பார்க்கவில்லை…

பெரிய மகன் திறமையானவன். நிறைய தான் சம்பாதிக்கிறான்… செய்தால் அவனுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது.. ஆனால் தன் மற்ற பிள்ளைகள்.. மாத சம்பளக்காரன்.. மகளின் கணவன் ஸ்ரீ வச்சனோ.. இன்னுமே அவன் தந்தையின் கீழ் தான் வேலை பார்க்கிறான்..தனித்து செய்யும் அளவுக்கு எல்லாம் அவனுக்கு திறமை கிடையாது என்பது தெரிந்து தான் மகள் அத்தனை சீர் செய்ய கேட்டதும் செய்தது.. தன் பெரிய மகனிடம் செய்ய சொல்லியதும்..

அவரை பொறுத்த வரை தன் நான்கு பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்ற தாழ்வு இருக்க கூடாது… பெரியவன் வசதியாக இருந்து மற்றவர்கள் அவனுக்கு கீழ் இருந்தால், அது பார்க்க நன்றாக இருக்காது..

அதோடு அடுத்து பேரன் பேத்திகளுக்கு இடையில் இதனால் பிரிவுகள் வரும்.. அது வர கூடாது என்று நினைத்து தான் தன் பெரிய மகன் தமிழ் மாறன். அனைத்தையும் பார்த்து கொள்ளும் படி பாக்கிய லட்சுமி பார்த்து கொண்டது…

இவர்களின் சம்பாத்தியம் சேமிப்பாக ஆகட்டுமே என்ற நினைப்பும் பாக்கியலட்சுமிக்கு..

ஆனால் இன்று அனைத்தும் தலை கீழாக மாறியதில், ஒரு தாயாக அவர் மனது தவித்து போய் தான் விட்டது.. ஆனால் அதை வெளிக்காட்ட தான் அவரால் முடியவில்லை..

இரண்டு வாரம் முன் தான் இருமகன்களான விமலன் வர்மன் இருவரும் சேர்ந்து கார் வாங்கிய போது, இவரையுமே காரில் அழைத்து கொண்டு தான் இவர்களின் குல தெய்வ கோயிலுக்கு சென்று வந்தது.

பாக்கியலட்சுமிக்கு தன் இரு மகன்கள் சேர்ந்து கார் வாங்கியதில் மகிழ்ச்சி தான்.. ஆனால் தன் பெரிய மகன் தன் காரை விற்க போகிறான் என்ற செய்தி அவர் காதில் விழுந்ததில், இந்த மகிழ்ச்சியை அவரால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை…

அது அவர் முகத்தில் காட்டி கொடுத்து விட்டது போல.. கிருத்திகா … “ அத்தை உங்க மகன்கள் புதுசா கார் வாங்கி இருக்காங்க.. வீட்டுக்கு பெரியவங்க நீங்க இப்படி முகத்தை வைத்து கொண்டு இருக்கிங்க…?” என்று கேட்ட போது பாக்கியலட்சுமி மனது பொறுக்காது.

“இல்ல கிருத்திகா பெரியவன் அவன் காரை விற்க போறதா கேள்விப்பட்டேன்.. அதான்…” என்று சொல்லவும்..

இந்த இரண்டு மகன்களுக்கும் கோபம் வந்து விட்டது… அதில் “ ம்மா நாங்களுமே உங்க மகன்கள் தான் ம்மா… முதல் முறை கார் வாங்கி குடும்பமா கோயிலுக்கு வந்து இருக்கோம்.. பெரியவங்க நீங்க சந்தோஷமா வாழ்த்தாம என்னம்மா…?” என்று கொஞ்சம் கடிவது போல தான் கேட்டான்..

அதில் பாக்கியலட்சுமி தன் முக பாவனையை மாற்றி கொண்டவராக பூஜையில் பங்கு கொண்டு பின் வரும் வழியில் ஓட்டலில் சென்று சாப்பிட்டு வீடு வந்தாலுமே, பாக்கியலட்சுமியினால்.

தமிழ் மாறன் கார் வாங்கும் போது நடந்த விசயங்களை அவரால் நினைத்து பார்க்காது இருக்க முடியவில்லை…

தமிழ் மாறன் கார் வாங்கும் போதே இத்தனை சீட் உள்ள பெரிய கார் தான் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டு தான் வாங்கியது.. காரணம் தன் குடும்பமாக தம்பி குடும்பத்தையும் நினைத்ததினால், இன்று போல் அன்றும் தமிழ் மாறன் கார் வாங்கியதும் கோயிலுக்கு சென்றார்கள்.. வரும் வழியில் ஓட்டலிலும் சாப்பிட்டு விட்டு தான் வீடு வந்தனர்.. ஆனால் அனைத்திலுமே தன் தம்பிகளின் குடும்பத்தோடு தான் அவன் செய்தது.. ஆனால் விமலனும் வர்மனும்… செய்ததை பாக்கிய லட்சுமியினால் ஏற்று கொள்ள முடியவில்லை…

அதுவும் தன் அண்ணி மகள்களான கிருத்திகா தீபிகாவிடம் பேசியதை தற்செயலாக அவர் கேட்டதில் இருந்து அவர் மனது ஆறவில்லை…

“தோ பாருடி.. இனி தான் நீங்க இன்னுமே உஷாரா இருக்கனும்….பெரியவன் போண்டியா ஆகிட்டான். அவன் எங்கு எங்கு கடன் வாங்கி இருக்கான் என்று தெரியல… கடன் காரனுங்க அவன் போண்டியா ஆகிட்டான் என்று தம்பிங்க நீங்க கட்டனும் என்று உங்க கழுத்தில் கை வைத்து விட போகிறான்.. பார்த்து பெரியவன் குடும்பத்தை விட்டு கொஞ்சம் விலகியே இருங்க..” என்று பேசியதை கேட்டதில் இருந்து பாக்கியலட்சுமிக்கு கோபமும் வந்தது.. அதே சமயம் பயமாகவும் இருந்தது…

இவர்கள் சொன்னது போல் தமிழ் வெளியில் நிறைய கடன் வாங்கி இருப்பானா….? அவர்கள் வீட்டிற்க்கு முன் வந்து கேட்டால், அவன் என்ன செய்வான்…? இது போலான விசயத்தில் அவர் பார்த்த நிறைய சினிமாவில் வந்த காட்சிகள் எல்லாம் அவர் முன் வந்து சென்றன..

கடவுளே தன் கணவனின் பென்ஷன் பணத்தின் பாதியை மகள் வீடு கட்ட கொடுத்து விட்டாயிற்று, மீதியை இப்போது மகன்கள் இருவருமே வாங்கும் இடம் எங்கள் கை மீறி போய் விட்டது என்று சொல்லி அதையும் வாங்கி கொண்டு விட்டார்கள்..

அது இருந்தாலாவது பெரிய மகனுக்கு கொடுத்து உதவலாம் என்று நினைத்த நொடி தன் பெரிய மகனை காண ஓடி விட்டார்.

அப்போது தான் தமிழ் மாறன் வெளியில் சென்றவன் வீடு வந்து சாப்பிட அமர்ந்து இருந்தவன் தன் அன்னையை பார்த்ததும்..

சாப்பிட்டு கொண்டு இருந்தவன். “ ம்மா வாங்க சாப்பிடுவிங்க.” என்று அழைத்தவன் மனைவியிடம்..

“மாதும்மா அம்மா சாப்பிட தட்டு வை..” என்றும் சொன்னான்..

பாக்கியலட்சுமியும் பிகு எல்லாம் செய்யாது மகனோடு அமர்ந்து சாப்பிட்டார்…

சாப்பாடு பரிமாறும் போது மாதுரியின் கையை கவனித்தார்… மாதுரி எப்போதும் வீட்டிலேயே மெல்லியதாக இந்த கையில் மூன்று வளையலும், அந்த கையில் மூன்று வளையலும் எப்போது வீட்டிலேயே போட்டு கொண்டு இருக்கும் மாதுரியின் கையில் ஒற்றை ஒற்றையாக இரண்டு வளையல் மட்டும் போட்டு கொண்டு இருந்தார்.. அதுவும் அந்த வளையல் மாதுரி திருமணம் செய்து கொண்டு வரும் போது அவள் தாய் வீட்டில் போட்டது…

திருமணத்திற்க்கு மாதுரிக்கு போட்டது எல்லாம் பழையது தான். அவள் அம்மாவுடையது தான் அப்படியே போட்டு அனுப்பியது.

திருமணன் ஆன புதியதில் பாக்கியலட்சுமி கூட மாதுரியிடம் இதை பற்றி கேட்டார்….

“இதை புதுசாவது மாத்தி கொடுத்து இருந்து இருக்கலாம் தானே… இப்போ எல்லோர் வீட்டிலும் உங்களை விருந்துக்கு கூப்பிடுவாங்க. இந்த பழைய நகையே போட்டுட்டு போனா நல்லாவா இருக்கும்…?” என்று பாக்கியலட்சுமி மாதுரியிடம் கேட்கும் போது தமிழ் மாறன் அங்கு தான் இருந்தான்.

அப்போது தன் தாய் பேச்சுக்கு ஒன்றும் சொல்லாது அமைதியாக இருந்தவன் அன்று மாலையே அனைத்துமே அதாவது கம்பல் முதல் கொண்டு ஆரம் நெக்லஸ்,, வளையல் என்று செட்டாக புதியதாக வாங்கி கொண்டு வந்து விட்டான்..

அதை பார்த்த பாக்கியலட்சுமிக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை… அவர் தான் சொன்னது.. பழையது போட்டு கொண்டு எப்படி விருந்துக்கு போவது என்று.. ஆனால் அது உன் தாய் வீட்டில் இதை மாத்த கூட வக்கு இல்லையா என்று குத்தி காட்ட தான் அப்படி சொன்னது…

கூட பழையது போட்டால் அது தங்களுக்கு அசிங்கம் என்பதும் அவர் நினைத்தார் தான்… காரணம் அந்த சமயம் தன் பெரிய மகன் அப்போது தான் மெல்ல மெல்ல உயர்ந்து வந்த சமயம் அது…

பாக்கியலட்சுமி அத்தனை பெருமை பேச்சு பேசுவார் தன் மகனை பற்றி… அப்படி இருக்க… அப்படி பட்ட மகனுக்கு இப்படியான பெண் தான் கிடைத்தாளா….? என்று யாராவது கேட்டு விட்டால், ஏற்கனவே தன் அண்ணி இப்படி கேட்டும் விட்டார் என்பது வேறு விசயம்…

அதை எல்லாம் நினைத்து தான் மாதுரியிடம் சொன்னார்.. ஆனால் அதற்க்கு என்று மகன் உடனே இப்படி வாங்கி கொண்டு வந்து விடுவான் என்று அவர் எதிர் பார்க்கவில்லை..

திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் இருபத்தி ஐந்து சவரனுக்கு மேல் நகையா…? இது வரை தன் மகனின் அன்னையாக மகனின் வளர்ச்சியை நினைத்து பூரித்து கொண்டவர்…

இப்போது மருமகளின் மாமியாராக தன் மருமகளின் கையில் இருந்த நகைகளை அப்போது பாக்கிய லட்சுமி வெறித்து பார்த்து கொண்டு இருந்தார்..

இவர் எதிரில் தான் தமிழ் மாறன் நகை பெட்டியில் இருந்து அந்த ஆறு வளையல்களை எடுத்து மாதுரியின் கையில் இருந்த பழைய வளையல்களை கழட்டி தான் வாங்கிய அந்த வளையல்களை போட்டு விட்டது..

போட்டு விட்டவன்.. “ எனக்கு தெரியும் மாது… அத்தை நியாபகமா தான் நீ மாத்தாது இருக்க என்று… இந்த நகைகள் எல்லாம் அத்தை நியாபகமா அப்படியே பத்திரமா இருக்கட்டும்.. இனி நீ இதை வீட்டில் போட்டுட்டு இரு…”

மகனின் இந்த பேச்சில் பாக்கிய லட்சுமி தான் வாய் மீது கை வைத்து கொண்டார்.. தான் வக்கத்த குடும்பம் என்று சொன்னா இவன் என்னவோ நியாபகம் மண்ணாங்கட்டி என்று டையலாக் பேசுறான்…

அப்போது மாதுரிக்குமே அந்த சமயம் கணவனின் இந்த பேச்சில் அப்படி ஒரு சிலிர்ப்பு தான் உண்டானது… புதிய நகைகளை பார்த்து அவள் மகிழ்வதற்க்கு பதிலாக இவருமே அத்தையை போல தான் நினைக்கிறாரா என்று..

ஆனால் புதியது வாங்கி கொடுத்து தன் மனம் நோகாது பேசி போட்டு விட்ட அந்த வளையல்கள் மாதுரிக்கு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல் தான்.

அன்று தன் கணவன் மாட்டி விட்டதை அதற்க்கு பின் அவள் அதை கழட்டவே இல்லை… எத்தனையோ புதிய வளையல்கள்.. ஏன் சமீபத்தில் வைர வளையல் கூட தமிழ் மாறன் மாதுரிக்கு வாங்கி கொடுத்து விட்டான்..

ஆனால் வெளியில் போகும் போது இந்த வளையலோடு தான் அந்த புதிய வளையல்களை போடுவாளே தவிர.. இதை கழட்ட மாட்டாள்…

இதோ சமீபத்தில் ப்ரியாவின் மகளின் மஞ்சல் நீராட்டு விழாவுக்கு கூட கிருத்திகா.. “ இந்த வளையலோடு வைர வளையல் போட்டால், வைரம் தனித்து எப்படி தெரியும்.. இதை கழட்டி வைத்து விட்டு வைரம் மட்டும் போட்டுங்கோங்க…” என்று சொன்ன போது கூட மாதுரி அன்று கழட்டாது அந்த வீட்டில் போட்டு கொண்டு இருக்கும் அந்த வளையலோடு தான் வைர வளையல் போட்டுக் கொண்டாள்..

அது எதற்க்கு என்ற காரணம் தமிழ் மாறனுக்கு தெரிந்ததால், அவன் ஒன்றும் சொல்லாது சிரித்து கொள்வான்…

அப்படி எப்போதுமே கழட்டாத அந்த வளையல் இன்று மாதுரியின் கையில் இல்லாததை பார்த்து உண்மையில் பாக்கியலட்சுமியின் கண்கள் கலங்கி தான் போயின.

அந்த வளையல்களை மகன் மருமகள் கரத்தில் போடும் போது அன்று அதை பார்த்து ஒரு மாமியாராக பாக்கிய லட்சுமி பொறாமை பட்டார் தான்.

ஆனால் இன்று அதே பாக்கிய லட்சுமி தான் அந்த வளையல்கள் தன் மருமகளின் கரத்தில் இல்லாததை பார்த்து விட்டு மகனின் பிரச்சனையை நினைத்து கலங்கி போனார்…

கலங்கிய கண்களை மகனுக்கு காட்டாது தான் சாப்பிட்டார்… பெரிய மகனோடு சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகி விட்டது… இந்த ஒரு மாத காலம் அவருக்கு என்னவோ பல யுகமாக தான் தெரிந்தது…

சமைத்தது மாதுரி தான்.. ராணி தான் அந்த வீட்டிற்க்கு வேலைக்கு அழைத்து கொண்டு விட்டார்களே.. ஆம் இப்போது ராணி விமலன் வர்மன் வீட்டில் தான் சமைப்பது…

பொருட்களை பிரிக்கும் சமையம்.. கிருத்திகா .. “ராணி எங்க வீட்டில் வந்து சமைக்கட்டும் எங்க வீட்டில் முடித்த பின் வேணா உங்க வீட்டில் வந்து சமைத்து கொடுக்கட்டும்… நாங்க எல்லோரும் வேலைக்கு போறவங்க.. நீ வீட்டில் தானே இருக்க…” என்றும் சொன்னவள்..

ராணியிடமும்… “எல்லோருக்கும் சமைக்கும் போது கொடுக்கும் சம்பளத்தை கொடுக்க முடியாது… எங்க வரை சமைப்பதுக்கு இவ்வளவு கொடுக்கிறோம்..” என்று தீர்த்தும் பேசி விட்டாள்…

மாதுரியுமே அப்போதே… “ ராணி நான் என் வீட்டு சமையலை நான் பார்த்து கொள்கிறேன்..” என்று விட்டாள்..

இந்த பேச்சு எல்லாம் பொதுவில் தான் நடந்தது..

ஆனால் ராணி இங்கு சமைக்கும் முன் இன்னுமே விடியலில் மாதுரி வீட்டிற்க்கு தான் முன் செல்வாள்…

மாதுரி சமைத்து கொண்டு இருப்பதை பார்த்து… “ நீ கொஞ்சம் ஒதுங்கி நில்லும்மா நான் அரை மணி நேரத்தில் சமைத்து வைத்து விட்டு அங்கு போறேன்..” என்று சொல்ல.

மாதுரி.. “ வேண்டவே வேண்டாம்.. நான் பார்த்து கொள்கிறேன்…” என்று அழுத்தம் திருத்தமாக மறுத்து சொன்ன போது ராணி கூட…

“எனக்கு நீங்க சம்பளம் எல்லாம் கொடுக்க தேவையில்லை ம்மா…”

மாதுரியின் பணம் கஷ்டத்தினால் தான் இப்படி சொல்வதோ என்று சொல்ல.

மாதுரி.. “ இன்னும் நாங்க அந்த நிலைக்கு வரல ராணி.. வரவும் வராது… எல்லாம் ஒன்னா இருக்கும் போது அத்தனை பேருக்கு சமைப்பது.. அதோடு அத்தனை வகை.. அது என் ஒருத்தியால் முடியாது.. ஆனா இங்கு நாங்கு பேருக்கு… அதுவும் சிம்பிளா தான் முடித்து கொள்கிறேன்… இதுக்கு நானே பார்த்து கொள்வேன் ராணி.. இனி நீ இங்கு வந்துட்டு அங்கு போகாதே.. அப்புறம் அதை வைத்து ஏதாவது பிரச்சனை வர போகுது..” என்று சொல்லி அனுப்பி விட்டாள் மாதுரி..

அதை பாக்கியலட்சுமியிடம் ராணி ஒரு நாள் பேச்சு வாக்கில்..

“பாவம் ம்மா மாதுரியம்மா… எல்லா வேலையும் மாதுரியம்மா தான் செய்யிறப்பலே… வேலை செய்துட்டே இருந்தா கஷ்டமா தெரியாது.. பத்து வருஷன் செய்யாது இப்போ செய்யிறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்…”

வேலை செய்யும் பெண்மணியான ராணி சரியாக கணித்து தான் கூறினாள்..

ஆம் மாதுரிக்கு இது வரை இது செய் அது செய் என்று மட்டும் கூறி கொண்டு மேனஜ்மெண்ட் போல மட்டும் பார்த்து கொண்டு இருந்தவள் தானே இறங்கி அனைத்துமே செய்ய ஒரு வாரம் முதலில் கஷ்டம் தான் பட்டாள்..

அதுவும் முன் எல்லாம் அனைத்து வேலைகளும் வேலையாள் பார்த்ததினால், மாதுரி தான் பள்ளி செல்வதற்க்கு குழந்தைகளுக்கு பள்ளி சீருடையில் இருந்து என்று அனைத்தும் பார்த்து பார்த்து எடுத்து கொடுப்பாள்..

அதோடு மகள் சிந்தியா சாப்பிடாது வைத்து இருந்தால் ஷரத்துக்கு ஊட்டும் போது சிந்தியாவுக்கும் ஊட்டி விடுவாள்..

ஆனால் இப்போது மாதுரியே அனைத்தும் பார்த்து கொள்வதால், குழந்தைகளுக்கு தேவையானதை அவளாள் பார்க்க முடியவில்லை..

இதில் முதலில் குழந்தைகள் அடம் பிடித்து பின் அம்மாவின் நிலை தெரிந்து சிந்தியா அவள் வேலைகாய் முடித்து கொள்வதோடு தம்பிக்குமே உதவி செய்து அவனையுமே பள்ளிக்கு கிளப்பி விடும் அளவுக்கு தேறி விட்டாள்..

இது சாதாரணமாக இதை சிந்தியா செய்து இருந்தால் , உண்மையில் மாதுரி சந்தோஷம் தான் பட்டு இருப்பாள்..

ஆனால் சூழ் நிலை மாற்றத்தினால் சிந்தியாவுக்கு வந்த இந்த பொறுப்பில் மாதிரிக்கு கண்கள் கலங்கி தான் போய் விட்டது.

தமிழ் மாறன் கூட சொன்னான் தான்… வேலைக்கு ஆள் வைத்து கொள் மாதும்மா.. நான் வேறு காலையிலேயே வெளியில் போயிடுறேன்… உனக்கு என்னால உதவ முடியல… நீ மட்டும் எத்தனை தான் பார்ப்ப.” என்று சொன்ன போது மாதிரி மறுத்து விட்டாள்..

“வேண்டாம் அத்தான் எல்லாம் நான் சமாளித்து கொள்வேன்..” என்று சொன்னது போல… இந்த ஒரு மாதகாலத்தில் அனைத்தும் தன் கை வசத்துக்கு கொண்டு வந்து விட்டாள் தான்….

இப்போது அதை தான் பாக்கிய லட்சுமியும்… “ ராணி தான் வந்து செய்து கொடுக்கிறேன் என்று தானே சொன்னா… நீ ஏன் ஒன்டியா எல்லாம் பார்த்து கொள்ற…?”

சிந்தியா ஷரத்துக்கு ஊட்டி விடுவதை பார்த்து… மாதுரியிடம் கேட்டார்..

மாதிரிக்கு தன் மாமியாரின் பேச்சில் தன் மீது அக்கறை எப்போது இருந்து என்று நினைத்து கொண்டவள்..

“எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்ல அத்த..” என்று விட்டாள்..

பாக்கிய லட்சுமி அப்போது கூட விடாது. “ இல்ல நம்ம பெரியவங்க கஷ்டம் தெரியும்…ஆனா குழந்தைக்கு என்ன தெரியும் சொல்லு…? நேத்து அவள் ஷு அவள் தம்பி ஷூக்கும் சேர்த்து பாலிஷ் போட்டுட்டு இருக்கா…?” என்று தன் பேத்தி கஷ்டப்படுவதை சொன்னவர்..

அதோடாவது விட்டு இருந்து இருக்கலாம்.. ஆனால் தொடர்ந்து… “ அவங்களுக்கு உண்டான சம்பளத்தை நான் என் பென்ஷனில் இருந்து கொடுத்து விடுகிறேன்.” என்ற அந்த வார்த்தை கணவன் மனைவி இருவரையும் பலமாக தாக்கியது…


 
Well-known member
Joined
Jul 13, 2024
Messages
226
Suyanala pisasugal. Ivangalai eppovumae kittae serkathinga. Kids adjust to the needs and demands. Nothing wrong in learning life skills but not out of situation
 
Last edited:
Active member
Joined
Aug 16, 2024
Messages
321
பாக்கிய லெட்சுமி நல்ல எண்ணத்தில் சொன்னாலும், இந்த சூழ்நிலையில் சொன்னால் அவர்கள் மனசு கஷ்டப்படும் தானே.
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
246
Tamil inime un limit la irunthukko… un amma va pakurathu un kadamai… adhai sei… aanal thambi thangachi nu poai help pannidathe
 
Top