அத்தியாயம்….9
மகள் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதை நம்பாத அந்த பேச்சில் பாக்கியலட்சுமி…
“உன் வீடு கட்ட என்று என் கிட்ட வாங்கினியே எட்டு லட்சம் அதை கொண்டு வந்து என் கிட்ட கொடு… உடனே நான் உனக்கு ஜாக்கெட் தைக்க பணம் கொடுக்கிறேன்…” என்று கேட்கவும் …
அழைப்பின் அந்த பக்கம் இருந்து ப்ரியா ஒரு நிமிடம் ஜெர்க்காகி விட்டாள் தான்.. பின் சமாளித்து கொண்டவளாக..
“என்னம்மா வட்டிக்காரன் பேசுவது போல பேசுறிங்க… நீங்க மகள் கிட்ட தானே கொடுத்திங்க…” என்று சொன்ன போது பாக்கிய லட்சுமி..
“நான் உன் கிட்ட வட்டி எல்லாம் கேட்கல ப்ரியா… நீயும் மாப்பிள்ளையும் என் கிட்ட வந்து கேட்கும் போது என்ன என்று கேட்டு வாங்கிட்டு போனிங்க.. இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கொடுத்து விடுவேன் ம்மா என்று தானே கேட்டது… இப்போ கேட்டா மகள் என்று சொல்ற…?” என்று கேட்ட அன்னைக்கு ப்ரியா என்ன என்று சொல்லுவாள்..
அதை அவள் வாங்கும் போதே கொடுக்கும் எண்ணத்தில் எல்லாம் வாங்கவில்லை…. ஆனால் இப்படி நேரிடையாக தன் அம்மா கேட்பார் என்று எல்லாம் ப்ரியா நினைக்கவில்லை..
அதனால்.. “ ம்மா உனக்கே தெரியும் என் வீட்டுக்காரர் இன்னுமே அவர் அப்பாவுக்கு கீழ் தான் இருக்கார்… வீட்டு பொறுப்பு எல்லாம் இன்னுமே என் மாமியார் தான் அது கையில் வைத்து இருக்கு…
என் வீட்டுக்காரர் வேலை செய்வதுக்கு அவர் அப்பா ஏதோ அவருக்கு கொடுக்குறார்… அதை வைத்து தான் நான் பிள்ளைங்க படிப்பு இது எல்லாம் பார்த்துட்டு இருக்கேன் ம்மா.. இதுல வீடு கட்டினது… அடுத்து பெண்ணுக்கு சடங்கு செய்தது என்று எங்களுக்கே ஏகப்பட்ட செலவு இழுத்து விட்டுச்சி ம்மா..” என்று ப்ரியா எப்போதும் போல தன் பஞ்சப்பாட்டை பாடினாள்.
ஆனால் பாக்கிய லட்சுமி எப்போதும் போல எல்லாம் இந்த முறை
“என்ன செய்யிறது உன் நிலை இப்படி இருக்கு… ஆனா இந்த வீட்டுக்கு வந்த மூத்த மருமகள்.. எப்படி இருக்கா தெரியுமா…?” என்று எல்லாம் சொல்லவில்லை…
அதற்க்கு மாறாக “அன்னைக்கு உன் வீட்டு கிரகபிரவேசம் வைக்கும் போதே உன் சின்ன அண்ணன் என்ன சொன்னான்… உன் பொண்ணு சடங்கையும் சேர்த்து ஒன்னா வெச்சிடு என்று தானே சொன்னான்.. ஆனா நீ தான் அதுக்கு தனிப்பட்ட சீர் அம்மா வீட்டில் இருந்து வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருபத்தி மூன்று சவரனை உன் பெரிய அண்ணன் கிட்ட இருந்து பிடிங்கிட்ட….” என்று சொன்னது தான் தாமதம் ப்ரியாவுமே…
“ அது எல்லாம் நீங்களா செய்திங்க… என் பெரிய அண்ணன் தானே செய்தாங்க…” என்று கேட்ட மகளிடம்..
“ ஒத்துக்குறியா எல்லாம் அவன் தான் செய்தது என்று.. இப்போ அவனுக்கு கொஞ்சம் பணம் முடக்கமா இருக்கு… அதை கொண்டு வந்து கொடுக்குறியா…?” என்று சொன்னதும் ப்ரியா தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்து விட்டாள்..
“என்னம்மா பேசுறிங்க நீங்க. வயசு ஆக ஆக புத்தி குறஞ்சிட்டு போகுதா என்ன..? எங்காவது அம்மா வீட்டு சார்பா வைத்த சீரை திரும்ப கேட்டு வாங்குவாங்கலா. உங்க பேச்சை என் மாமியார் வீட்டு ஆளுங்க காதுல விழுந்தா.. என் மானம் போகும் ம்மா…” என்று ப்ரியாவின் பேச்சுக்கு பாக்கிய லட்சுமி..
“என்னது மானம் போகுமா..? நீ தான் டி புத்தி கெட்டு பேசுற… உனக்கு கல்யாணம் முடிந்து பதினைந்து வருடம் ஆகுது.. இன்னுமே கல்யாணம் புதியதில் கொடுக்கும் போல மாமியார் வீட்டு சீரை எதிர் பார்க்குறாங்க… இங்கு வரும் முன்னவே.. இது இது வாங்கி வைங்க என்று சாப்பிட ஒரு லிஸ்ட்டை கொடுத்து விட்டு தான் இங்கேயே வருவே… அப்படி பட்ட புருஷன்.. அப்படி பட்ட மாமியார் வீடு.. இதுல மானமா மரியாதையா…? நல்ல வாயில வந்துடும் வைடி…” என்று சொன்ன போது கூட ப்ரியா..
பாக்கிய லட்சுமி சொன்னது போல மானம் மரியாதை எல்லாம் பார்க்காது தான் எதற்க்கு கை பேசியில் அழைத்தாளோ . அதை கேட்டார்..
“ம்மா அந்த தையல் பொண்ணு போனு மேல போனா போடுதும்மா. இந்த ஒரு முறை எனக்கு பணம் கொடும்மா…இனி இது போல ஜாக்கெட் எல்லாம் தைக்க கொடுக்க மாட்டேன்.. உங்களை நம்பி தான் ம்மா. இத்தனை விலைக்கு ஜாக்கெட் தைக்க கொடுத்ததே.” என்று சொன்ன மகளின் பேச்சில் பாக்கிய லட்சுமிக்கு தலையில் அடித்து கொண்டார்..
“ ஒரு ஜாக்கெட் தைக்க கூட அம்மா வீட்டை நம்பி தான் கொடுத்த.. “ என்று கேட்டவர்.
பின். “உண்மையில் என் கிட்ட பணம் இல்லேடி… பென்சன் வந்தா தான் என் கிட்ட பணமே… அப்போ தான்..இப்போதைக்கு ஏதாவது பிரட்டி கொடு… பென்சன் வந்ததும் கொடுக்கிறேன்…” என்றது தான்..
ப்ரியா.. “ம்மா என்ன ம்மா சொல்ற..? என் கிட்ட எட்டு லட்சம் கொடுக்கும் போது கூட உங்க கிட்ட பன்னிரெண்டு லட்சத்துக்கு டெப்பாசிட் இருந்ததேம்மா.. அது என்ன ஆச்சு..?” என்று கேட்டவளிடம்…
“ம் உன் இரண்டு அண்ணன்கள் சேர்ந்தார் போல வாங்கிய அந்த இடத்துக்கு பத்தல என்று கேட்டாங்க கொடுத்தேன்…”
“ம்மா எப்படிம்மா நீங்க எல்லா பணத்தையும் துடைத்து கொடுப்பிங்க.. கொடுக்கும் போது என் கிட்ட ஒரு வார்த்ததை சொல்லிட்டு கொடுத்து இருக்கலாம் தானே..
என் கிட்ட மட்டும் திருப்பி கொடுக்கனும் என்பது போல கொடுத்திங்க.. ஆனா அண்ணனுக்கு மட்டும் ஒன்னும் சொல்லாம தூக்கி கொடுத்திட்டிங்கலா.. என்ன இருந்தாலுமே உனக்கு ஓர வஞ்சனை தான் ம்மா… ஆம்பிள்ளை பிள்ளை என்று தானே கொடுத்த…” என்ற மகளின் இந்த பேச்சில் .பாக்கிய லட்சுமி அமைதியாகி விட்டார்…
அதோடு வர்மன் விமலன் கிருத்திகா தீபிகா ஒருவர் பின் ஒருவாரக வர ஆரம்பித்து விட.
குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார்… குழந்தைகளை விடும் போது கூட கிருத்திகா.
“அத்த நாங்க இப்போ தான் வந்தோம்.. கொஞ்சம் பசங்களை வைத்து கொள்ளுங்களேன்… நாங்க ரெஸ்ட் எடுக்கனும்… ஆபிசில் அத்தனை வேலைகள் சொல்லி கொண்டே அவள் எப்போதும் போல அவள் அறைக்கு செல்ல பார்த்தாள் தான்..
ஆனால் பாக்கிய லட்சுமி எப்போதும் போல இப்போது விட்டு விடவில்லை.. மகளிடமே அப்படி பேசியவர் மருமகளின் பேச மாட்டாரா என்ன…
“தோ பாரும்மா எனக்குமே வயசு ஆகுதும்மா… பொழுது அன்னைக்குமே நான் தான் பார்த்துக்குறேன்.. ஒன்னுக்கு மூன்று குழந்தைகளை இந்த வயதில் பார்த்து கொள்ளும் வயசா எனக்கு.. சொல்…
இனி கொஞ்சம் உங்க அம்மா வீட்டிலுமே குழந்தைகளை விட பழக்கி கொள்..” என்றவர் மருமகளின் அதிர்ந்த முகத்தை கண்டும் காணாது தன் அறைக்குள் வந்து விட்டார்…
தன் அறைக்கு வந்தவர் மனதில் ப்ரியா சொன்ன அந்த ஓரவஞ்சனை.. என்ற வார்த்தையே மீண்டும் மீண்டும் அவரின் நினைவுக்கு வந்தன…
ஆம் நான் ஓரவஞ்சனை பார்த்தேன் தான். ஆனால் இவர்களுக்கு கிடையாது.. என் மூத்த மகனுக்கு நான் ஓரவஞ்சனை தான் பார்த்து இருக்கேன்… மாதுரி சொன்னதில் தவறே கிடையாது…
தான் என்ன தவறு செய்கிறேன் என்று எல்லாம் நல்லப்படியாக செல்லும் போது அவருக்கு தெரியவில்லை. புரியவும் இல்லை..
ஆனால் இந்த இரண்டு மாத காலத்தில் பாக்கிய லட்சுமிக்கு மெல்ல மெல்ல புரியலாயிற்று.
பெரிய மகன் வீட்டில் அப்படி பேசி விட்டு வந்தும் ஒரு மாதம் கடந்து விட்டது.. ஆக மொத்தம் குடும்பம் பிரிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது…
பென்சன் தருகிறேன் என்று சொல்லி விட்டு வந்த பாக்கியலட்சுமிக்கு அவர் மருந்து செலவுக்கே கையில் பணம் இல்லாது போக.
மருந்து கடையில் .” அடுத்த மாதம் தந்து விடுகிறேன்..” என்று சொல்லி தான் பாக்கிய லட்சுமி வாங்கி கொண்டு வந்தது..
தமிழ் மாறனை அனைவருக்கும் தெரியும்… மனைவிக்கு பேட் வாங்க அந்த மருந்தகத்திற்க்கு தமிழ் மாறன் சென்ற போது அந்த மருந்தகத்தின் முதலாளி..பேச்சு வாக்கில்..
“உங்க அம்மா கூட இரண்டு நாளு முன்ன மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிட்டு போனாங்க சார்.. பணம் அப்புறம் கொடுக்கிறேன் என்று தான் வாங்கிட்டு போனாங்க…” என்று சொன்னதும் தமிழ் மாறன் அப்படியா என்று கேட்டவன் பின் எவ்வளவு என்று கேட்டு அந்த பணத்தை அவனே கொடுத்து விட்டான்..
பாக்கிய லட்சுமி பென்சன் பணம் வந்ததும் அதை கொடுக்க அந்த மருந்தகத்திற்க்கு சென்ற போது அந்த மருந்தகத்தின் முதலாளி..
“உங்க மகன் கொடுத்து விட்டார் ம்மா. இனி பில் என் கிட்ட கொடுங்க நானே செட்டில் பண்ணிடுறேன்..” என்றும் சொன்னாரும்மா என்று அவர் சொன்னதை கேட்டதும் பாக்கிய லட்சுமிக்கு கண்கள் கலங்கி போய் விட்டது..
அதை அவருக்கு காட்டாது நடந்து வந்த பாக்கிய லட்சுமிக்கு பெரிய மருமகள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான்.. இவர்கள் எல்லாம் பணம் என்றால் பிணம் தின்னி கழுகுகள் போல தான் சுற்றி சுற்றி வருகிறார்கள்..
முதலில் வீட்டு செலவை தமிழ் மாறன் பார்த்தான் என்றால், இப்போது பாக்கிய லட்சுமியின் தலையில் கட்டி விட்டார்கள்..
என்ன செய்வது.. இதன் முதல் தவறு பாக்கிய லட்சுமியுடையது தான்.. ஒரு குடும்பம் என்றால் அதுவும் கூட்டு குடும்பம் என்றால், அனைத்தும் அனைவரும் சேர்ந்து தான் பார்க்க வேண்டும்…
அனைவரும் சேர்ந்து பார்ப்பது என்பது பணம் தேவைகள் மட்டும் கிடையாது.. வேலைகளுமே பிரித்து கொடுத்து தான் செய்ய வேண்டும்…
அப்போது தான் முதலில் இருந்தே அனைத்தும் அனைவருக்கும் பழக்கம் ஆகும்.. ஆனால் பாக்கிய லட்சுமி என்ன செய்தார்..?
பெரிய மகன் நல்லா சம்பாதிக்கிறான்.. அவன் செலவு பார்க்கட்டும்.. அதே போல மேல் வேலைகள் வீட்டின் பொறுப்பு அனைத்துமே மாதுரி தான் பார்த்து கொள்வாள்..
இதற்க்கு காரணமாக பாக்கிய லட்சுமி சொன்னது…. அந்த இரண்டு மருமகள்களும் வேலைக்கு போகிறாங்க.. பாவம் அவங்களே அங்கு வேலை செய்து அலுப்பா தான் வீட்டுக்கு வராங்க. இங்குமே அவங்க தான் பார்ப்பது என்றால், பெரிய மருமகள் வீட்டில் தானே இருக்கா… பாக்கிய லட்சுமி இதற்க்கு சொல்லும் காரணம் இது தான்..
அதே பழக்கத்தில் தான் விமலனும் வர்மனும் தன் கை பணம் வெளியில் எடுப்பது என்றால் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.. இத்தனை ஆண்டுகள் தன் சம்பாத்தியத்தை அனைத்தும் சேமிப்பாக இருந்து கொண்டு வந்தது.. இப்போது புதியதாக தன் கை காசு கொண்டு தான் குடும்பம் நடத்துவது என்றால் கஷ்டப்பட தானே செய்வார்கள்..
பணம் சேமிப்பும் ஒரு வகையில் ஒரு போதை தான்.. ஒரு ஆண்டில் நான் இத்தனை வகையில் இத்தனை முதலீடு போட்டேன்.. அது எனக்கு இத்தனை ரிட்டன் கொடுத்தது.. என் சேமிப்பில் இந்த ஆண்டு.. ஒரு கோடி அதிகம் ஆகி விட்டது… அந்த போதை கொடுத்த மயக்கத்தில் தான் முன் தமிழ் மாறன் தலையில் கட்டியது போல இப்போது தன் அன்னையின் தலையில் கட்ட பார்க்கிறார்கள் பிள்ளைகள்…
அவர்கள் இப்படி என்றால் மருமகளான தீபிகா கிருத்திகா இரண்டு பேரையும். அவர்கள் தன் அண்ணன் மகள்கள்.. அதோடு வேலைக்கு போகிறார்கள்… மாதுரி பிடிக்காத மருமகள்.. அதோடு வீட்டில் தானே இருக்கிறார்கள் என்று நினைத்து கிருத்திகா தீபிகா குழந்தைகளை பார்க்கும் பொறுப்பை கூட.
“சிந்தியாவுக்கு ஊட்டும் போது இவளுக்கும் ஊட்டி விட்டு விடு.. ஷரத்துக்கு குளிக்க வைக்கும் போது இவளையும் குளிப்பாட்டி விட்டு விடு.” என்று மாதுரியிடம் வேலைகளை வாங்கி விடுவார்.
அதனால் கூட்டு குடும்பமாக இருந்த போது பாக்கிய லட்சுமிக்கு இப்போது இருப்பது போல குழந்தைகளை பார்த்து கொள்வதில் அத்தனை சிரமம் கிடையாது.. அது தான் பாதி நேரம் மாதுரி தலையில் கட்டு விடுவாரே.. ஆனால் இப்போது… அதனால் தான் மருமகளிடம் பாக்கிய லட்சுமி இப்படி பேசும் படி ஆகி விட்டது..
அனைத்தும் நினைத்து பார்த்த பாக்கிய லட்சுமிக்கு இப்போது அவர் தவறு தெள்ள தெளிவாக புரிந்தது..
அவர் அவர் தொழில் செய்வதோ.. வேலைக்கு செல்வதோ.. அவர் அவர் விருப்பம் திறமை.. அதே போல கிருத்திகா தீபிகா வேலைக்கு போகிறார்கள் என்றால், அவர்கள் குடும்பம்பொருளாதாரத்தில் ஏற்றம் வர வேலைக்கு போகிறார்கள்..
அவர்கள் தனிப்பட்ட குடும்பம் முன்னேற மற்றவர்களை வேலை வாங்கியது தவறு தானே…
இதோ அன்று பெரிய மகன் அத்தனை செய்தான்… இப்போது அவனுக்கு ஒரு பணம் தேவை என்று வந்து இருக்கிறது.. இவர்கள் அனைவரும் அன்று அண்ணன் குடும்பத்தை அவன் பார்த்தான் இன்று அவன் குடும்பத்தை தான் பார்க்க வேண்டும் என்று யோசிக்கவாவது செய்கிறார்களா….?
எங்கு இருந்து யோசிப்பது…? அது தான் பேச்சு வாக்கில் மகளின் அவன் கொடுத்த நகையை திருப்பி கொடுப்பியா என்று கேட்டதற்க்கே அந்த பேச்சு பேசுகிறாள்..
தமிழ் அதே பணத்தில் தன் மனைவிக்கு நகைகள் வாங்கி கொடுத்து இருந்து இருந்தால், இப்போது அவன் தேவைக்கு உபயோகம் பட்டு இருந்து இருக்குமே என்று இன்று நினைக்கும் நானே அன்று…
மகன் வித விதமாக.. அதுவும் அவனே டிசைன் செய்து ஆச்சாரியாரிடம் செய்ய கொடுத்து தான் மனைவிக்கு நகைகளை தமிழ் வாங்கி கொடுப்பான்..
தங்கைக்கு என்றால் மட்டும் கடையில் போய் வாங்கி கொடுப்பது.. அதுவும் அவன் வர மாட்டான் மனைவியின் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு விடுவான்… கேட்டால் வேலை என்று ஒரு சாக்கு சொல்லுவான்..
ஆனால் மனைவிக்கு நகை வாங்குவது என்றால் மட்டும் அவனுக்கு வேலை இல்லையா என்ன…? இவனே ஆச்சாரியாரிடம் போய் இப்படி அப்படி என்று செய்து வாங்கி பொண்டாட்டிக்கு கொடுக்குறான் டி உன் அண்ணன்…
“அது தான் அவள் நகைகள் எல்லாம் அப்படி தனித்து தெரியுது… ம் அவளுக்கு வந்த வாழ்வு பாரு… இவள் தங்கை கல்யாணம் செய்த வீட்டில் இவங்க வீட்டில் போட்ட நகையோடு தான் அவள் சுத்திட்டு இருக்கா.. ஆனா இவள்.. என்ன செய்யிறது.. என் மகனால் இவள் வாழ்வு வளமாகனும் என்று இருக்கு.?”
மகன் மருமகளுக்கு நகைகள் வாங்கி கொடுக்கும் போது பாக்கிய லட்சுமி ஒவ்வொரு முறையும் தன் மகளிடம் இப்படி தான் புலம்பி தள்ளுவார்..
ஆனால் இப்போது மகன் அவள் மனைவிக்கு வாங்கி கொடுத்த அந்த நகைகள் தான் அவனுக்கு உதவியாக இருக்கிறது.
வீட்டுக்கு பொதுவாக செய்த செலவுகளோ தங்கைக்கு வைத்த சீர் இது எதுவுமே மகனுக்கு கை கொடுக்கவில்லை.. இன்று அவனுக்கு கை கொடுத்தது எல்லாம் மனைவிக்கு அவன் வாங்கி போட்ட நகைகள் தான்..
ஆம் மாதுரி கணவன் வாங்கி கொடுத்த அனைத்து நகைகளையும் விற்று விட்டாள்.. அம்மா வீட்டில் போட்ட நகைகள் அந்த பழைய நகைகளை மட்டும் வைத்து கொண்டாள்..
இது கேள்விப்பட்ட பாக்கிய லட்சுமி கூட மாதுரியிடம்..
“விற்பதா இருந்தா அந்த பழைய நகைகளை விற்பது தானே .. எதுக்கு புதுசை வித்த.. ஒரு சில நகைகள் அதை நீ போட்டு கூட இருந்து இருக்க மாட்டியே.. புதுசா மெருகு போகாத நகையை வித்திட்டு உன் வீட்டில் போட்ட இந்த பழசை வைத்து இருக்கனுமா…?” என்று கேட்டார்.
அப்போது மகனுமே அங்கு தான் இருந்தான்.. பாக்கிய லட்சுமிக்கு மனது பொறுக்கவில்லை ஒரே வீட்டில் நடுவில் ஒரு சுவர்… அதனால் இந்த வீட்டில் நடப்பது அந்த வீட்டிற்க்கும், அந்த வீட்டில் நடப்பது இந்த வீட்டிற்க்கும் தெரியும் படியாக தான் இருந்தது.
மாதுரி இந்த நகைகளை வித்த விசயமே தன் மற்ற மருமகள்கள் தீபிகாவும் கிருத்திகாவும் பேசி கொண்டு இருந்ததை கேட்டதினால் தான் பாக்கிய லட்சுமிக்கு தெரிந்தது.
கிருத்திகா தீபிகாவிடம்.. “அந்த மாதுரி ஒவ்வொரு முறையும் புது புது நகைகளா போட்டு அலட்டிட்டு இருப்பா லே… அது எல்லாம் இப்போ வித்திட்டாலாம்… என்ன அலட்டல் என்ன மிரட்டல் அதுக்கு தான் ரொம்ப ஆட கூடாது என்பது…”
இந்த பேச்சை கேட்ட உடனே பாக்கியலட்சுமி பெரிய மகன் வீட்டிற்க்கு வந்து விட்டார்…
கிருத்திகா சொன்னது போல எல்லாம் மாதுரி அலட்ட வில்லை மிரட்டவும் இல்லை.. கணவன் கல்யாண நாளுக்கு பிறந்த நாளுக்கு… மனைவிக்கு வாங்கி கொடுக்கும் தமிழ் மாறன் அதை மனைவி போட்டு தான் பார்க்க வேண்டும் என்று ஒரு கணவனாக ஆசைபடும் போது மாதுரி போட்டு காட்டுவாள்..
அதோடு குடும்பமாக கோயிலுக்கு அந்த புது நகைகளை போட்டு கொண்டு சென்று வருவார்கள்… அவர்கள் திருமண நாள் அவர்கள் போகிறார்கள் என்று எல்லாம் இவர்கள் இருக்க மாட்டார்கள்..
தமிழ் மாறன் இரண்டு நாள் முன்பே… இங்கு போகிறோம்.. நீங்க ப்ரி செய்து கொள்ளுங்கள் என்றதுமே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு விடுவார்கள்..
பின் எடுக்க மாட்டார்களா..? விடியற் காலையில் அந்த பெரிய காரில் ஏறினால் இரவு தான் வீடு வருவர்… ஒவ்வொரு வருடமும் புது புது இடமாக தான் தமிழ் மாறன் அழைத்து செல்வான்…
அவன் எப்படி தான் அது போலான இடத்தை கண்டு பிடிப்பானோ… மூலை முடுக்கில் தான் அந்த இடம் இருக்கும்..
ஆனால் மிகவும் ஏகாந்தமாக குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கும் படியான இடத்தை தேர்வு செய்து தான் அழைத்து செல்வான்.. அதே போல உயர் தரம் வாய்ந்த உணவகத்தில் தான் சாப்பாடு என்று அனைத்துமே தமிழ் மாறன் தான் பார்த்து கொள்வான்.
ஓசியில் இப்படி கிடைக்க வேலைக்கு விடுமுறை எடுத்து கொண்டு வருபவர்கள் மாதுரியின் புது நகைகளை பார்த்து வயிறு எரிந்து சாவார்கள்.. அப்போது அந்த வயிறு எரிச்சலில் நம் பாக்கிய லட்சுமியும் பங்கு பெறுவார் ..
இது எல்லாம் பார்த்து தான்.. நல்லா வசதியா தானே என் மகன் இவளை வைத்து கொண்டு இருக்கான்… மனைவியா இவளுக்கு இருக்கும் உரிமை தனக்கும் தம்பிகளுக்கும் தங்கைக்கும் இல்லையா.. என்று தான் மாதுரியை நினைத்து பாக்கிய லட்சுமி நினைத்து கொள்வார்…
அது எத்தனை பெரிய தவறு என்று பாக்கிய லட்சுமிக்கு இன்று புரிந்தது…
********************************************************
அத்தியாயம்…10
தன் மற்ற பிள்ளைள் இவர்கள் தங்களின் சேமிப்பை எல்லாம் இடத்தில் போட்டு விட்டார்கள்.. இது பார்க்கும் கண்களுக்கு பளிச் என்று தெரியாது… இதற்க்கு தான் அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்வார்கள் கல் அடி பட்டாலும் பரவாயில்லை கண் அடி பட கூடாது என்று…
இது போலான கண் தான் போல இப்படி ஆகி விட்டது.. இருமருமகள் பேசும் போது பாக்கிய லட்சுமி இதை தான் நினைத்து கொண்டவர்.. இதையும் நினைத்தார் தான்… மருமகள் வசதியாக இருக்கிறாள் என்று நானுமே தானே என் பங்குக்கு கண் வைத்து விட்டேன் என்று..
அந்த ஆதங்கத்தையும் சேர்த்து தான் மாதுரியிடம் ஏன் புதிய நகைகள் வித்தே பழைய நகைகளை விற்க வேண்டியது தானே… தன் மகன் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தது ஆச்சே..” என்று கேட்ட போது அதற்க்கு மாதுரி சொன்னது..
“நாளை பின்னே. என் அண்ணனோ அண்ணிகளோ.. நாங்க போட்ட நகைகளை என் கணவர் வைத்து வாழவில்லை என்று ஒரு வார்த்தை அவரை பார்த்து கை நீட்டிட கூடாது அத்தை.” என்ற வார்த்தையில் பாக்கிய லட்சுமி சிலையாகி தான் போனார்..
தன் மகன் மாதுரி மீது ஏன் இத்தனை காதலை வைத்து இருக்கிறான் என்பது அப்போது அவருக்கு தெளிவாக புரிந்தது.. இதுவும் புரிந்தது.. நீங்க நல்லா இருக்கும் போது மனைவிக்கு செய்யுங்க… நீங்க செய்தது உங்களுக்கு இரண்டு மடங்காக அவள் உங்களுக்கு செய்வாள்..
பொருளாதாரத்தில் தாழ்ந்தாலும்.. உங்களை ஏத்தி விட அவளால் ஆன அனைத்துமே செய்வாள்.. அதே போல உங்களுக்கு ஆரோக்கியத்தில் கொஞ்சம் சீர் கெட்டாலுமே உங்களுக்கு பக்க பலமாக அவள் இருப்பாள்…
ஆனால் இதை ஒரு சிலர் புரிந்து கொள்ளாது பட்டு தான் புரிந்து கொள்வேன் என்றால் யாரால் மாற்ற முடியும்…?
தமிழ் மாறனும்.. என்ன தான் மனைவி மீது காதலாக இருந்தாலுமே, ஒரு சிலதில் மனைவி பேச்சை கேட்க வில்லை தானே…
ஆனால் அவனுக்கு ஒரு கஷ்டம் என்று வரும் போது அவன் மனைவி தானே துணை நிற்பது… என்ன தான் அம்மா மகனின் நிலை பார்த்து வருத்தப்பட்டாலுமே அவராலும் மகனுக்கு உதவ முடியவில்லை தானே.
இதோ அன்றும் மருமகளிடம் பேசி விட்டு வந்து விட்டார் பாக்கிய லட்சுமி.. அதற்க்கு பின் கார் கூட விற்று விட்டான்..
குழந்தைகளை பெரிய பள்ளியில் இருந்து ஒரு சாதாரண பள்ளிக்கும் மாற்றி விட்டார்கள்… முதலில் படித்த பள்ளியில் பள்ளி கட்டணம் ஒரு வருடத்திற்க்கு இரண்டு லட்சம் .. இதில் அந்த பள்ளி தொலைவில் என்பதால் பள்ளி பேருந்தில் தான் குழந்தைகள் சென்று வருவது..
அதற்க்கு என்று ஐம்பது ஆயிரம் தனியாக கொடுக்க வேண்டும்.. இரண்டு குழந்தைகளுக்கு சேர்த்து ஐந்து லட்சம் அதற்க்கே வைத்து விட வேண்டும் என்று மாதுரி தான் கணவனிடம் பேசி பள்ளியை மார்றியது..
பாக்கிய லட்சுமிக்கு இது அனைத்துமே தன் இரு மருமகள்கள் கிருத்திகாவும் தீபிகாவும் பேசும் போது கேட்பது தான்..
இந்த நாள் வரை தமிழ் மாறனும் சரி மாதுரியும் சரி அவரிடம்.. எதுவும் சொன்னதும் கிடையாது.. எதுவும் கேட்டதும் கிடையாது. கேட்டாலுமே பாக்கிய லட்சுமியிடம் கொடுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
இன்னும் கேட்டால் இன்றுமே மருந்துக்கு கூட தமிழ் மாறன் தான் கொடுக்கிறான்… மகன் மிகவும் கஷ்டப்படுகிறானா என்று பாக்கிய லட்சுமி இங்கு ஒரு தாயாக கவலைப்பட்டு கொண்டு இருக்க.
ஆனால் தமிழ் மாறனோ வாழ்க்கை என்ன என்றால் என்று அவன் மெல்ல மெல்ல அவன் புரிந்து கொண்டு இருந்தான்..
அன்று அவர்களுக்கு திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் தொட்ட தினம்.. ஆம் அவர்களுக்கு அன்று திருமண நாள்..
ஒவ்வொரு திருமண நாளுக்கும் தமிழ் மாறன் ஏதாவது ஒரு நகையை பரிசளிப்பான்.. தன் மனைவிக்கு என்ன நகை வாங்க வேண்டும் என்று ஒரு மாதம் முன்பே முடிவு செய்து அவனே டிசைன் செய்து ஆச்சாரியரிடம் கொடுக்கும் போது..
“அவரே நான் நினைச்சேன் தம்பி இன்னுமே நீங்க காணலையே என்று..” கேட்கும் அளவுக்கு மனைவியிண் பிறந்த நாளுக்கும் தங்களின் திருமண நாளுக்கும் நகைகளை பரிசாக கொடுப்பான்…
அதுவும் அது அவன் கொடுக்கும் நேரம் நல்லிரவு நேரம்… குழந்தை பக்கத்து அறையில் படுத்து கொள்வதால், தன் மனைவியை எந்த நேரம் எப்படி நாடவும்.. அவனுக்கு பிரச்சனை இருந்தது இல்லை…
பன்னிரெண்டு மணியளவில் மனைவியை எழுப்பி. தவறு தவறு.. தன் கணவன் தன்னை எழுப்புவான் என்று தெரிந்தே தூங்குவது போல பாசாங்கு செய்யும் மனைவியின் நடிப்பு தெரிந்தே தமிழ் மாறன் எழுப்பி தான் வாங்கிய நகையை அணிவித்து அந்த நாளை நினைத்து கொண்ட தமிழ் மாறன் பக்கத்தில் படுத்து கொண்டு இருந்த தன் மனைவியை பார்த்தான்..
இன்று மாதுரி தூங்குவது போல பாசாங்கு எல்லாம் செய்யவில்லை.. இவன் அசைவில் பக்க வாட்டாக திரும்பி தன் கணவனை பார்த்தாள்…
கலக்கமான கணவன் முகத்தை பார்த்த மாதுரிக்கு தன் கணவனின் கலக்கம் எதற்க்கு என்று புரிந்து விட படுத்து கொண்டு இருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்..
“ மாறா….” தன் கணவனின் தோள் பற்ற… தொட்ட தன் மனைவியின் கையை கெட்டியாக பிடித்து கொண்ட கணவனின் கை நடுக்கத்தை பார்த்த மாதுரி மீண்டுமே.. “ மாறா…” என்று அழைத்தாள்…
மாதுரியின் இது போலான இந்த மாறா என்ற அழைப்பு எல்லாம் அவர்களின் அந்தரங்கமான நேரத்தில் தான் அழைப்பாள்..
சில சமயம் கணவனின் மீது அளவு கடந்த காதல் வந்தால் அழைப்பாளாக இருக்கும்.. அது இன்று வரை தமிழ் மாறனுக்கு தெரியாது.. ஏன் என்றால் இது போலான மாறா என்ற அழைப்பு எல்லாம் மாதுரியின் வாயில் இருந்து அத்தி பூத்தது போல தான் வரும்..
தமிழ் மாறன் மனைவியின் இந்த மாறா என்ற அழைப்புக்கு அடிமை … அழைத்து விட்டால் போதும் தேன் குடித்த வண்டு போலான நிலையில் அவன் கண்கள் போதையில் மிதக்கும்… அதில் எப்போதையும் விட அன்று மனைவியை கொஞ்சி தீர்த்து விடுவான்…
கேட்பான்.. “ நீ என்னை எப்போதுமே மாறன் என்று அழைக்கலாமே மாதும்மா…” கூடலின் முடிவில் தான் கலைத்து போட்ட அவளை அவனே சரி செய்தவனாக கேட்பான்..
அதற்க்கு இன்று வரை மாதுரி பதில் சொல்லியது இல்லை.. ஒரு கள்ளப்புன்னகை புரிவாள் அவ்வளவே.
“மாதும்மா கிருத்தி தீபிகா. ஏன் உன் தங்கை கூட என்னை அத்தான் என்று தான் கூப்பிடுறாங்க… நீயுமே என்னை அதே கூப்பிடுவது எனக்கு பிடிக்கல மாதும்மா… மாறா.. அதுவும் நீ கூப்பிடும் போது ரொம்ப கிக்கா இருக்கு மாதும்மா…” என்று சொல்லும் போது எல்லாம் சிரிப்பாள்.. ஆனால் அந்த அழைப்பை அவள் சாதாரணமாக எல்லாம் பயன் படுத்த மாட்டாள்…
அவனுமே அதற்க்கு அடுத்து அழுத்தி எல்லாம் என்னை இப்படி தான் கூப்பிட வேண்டும் என்று எல்லாம் வற்புறுத்த மாட்டான்.. ஆனால் மனைவி மாறா என்று அழைத்து விட்டால் போதும்.. குதுகலமாகி விடுவான்.
இன்று மனைவியின் அந்த அழைப்பு ஒரு முறைக்கு இரு முறை அழைத்து கூட அவனின் மனதில் அது பதியவில்லை..
மீண்டுமே மாறா என்று அழைத்தவன் சட்டை இல்லாத அவனின் ரோமம் மார்பில் தன் முகத்தை பதிய வைத்து தேய்த்தவள்..
“மாறா என்ன யோசனை..?” என்று கேட்டாள். தெரியும் கணவனுக்கு யோசனை இல்லை. கவலை.. அதுவும் குற்றவ்ணர்ச்சியோடு சேர்ந்த கவலை என்று மாதுரிக்கு தெரியும்..
ஆனாலுமே கேட்டால்… இது வரை ஏதோ யோசனையுடன் மனைவியின் முகத்தை பார்த்து கொண்டு இருந்த தமிழ் மாறன். மனைவியின் முகம் தன் வெற்று மார்பில் படவும் குனிந்து மனைவியின் முகத்தை பார்த்தான்..
பார்த்தவன் தன் இரு உள்ளங்கையில் அவளின் முகத்தை பற்றி கொண்டவன்…
“உனக்கு என் மேல கோபமே வரலையா மாதும்மா…” என்று கேட்டான்…
“ஏன் கோபப்படனும் மாறா…?” என்று கேட்டவளிடம் தயங்கி கொண்டே…
“எல்லாமே விட்டுட்டு உன் கிட்ட இருக்கும் நகைகளை கூட என் கிட்ட வித்து கொடுத்துட்டு.. உன்னையும் நம்ம பெண்களையும் இப்படியா நிற்க வைத்து இருக்கேன்னே.. உனக்கு கோபம் வரலையா…?” என்று கேட்ட தமிழ் மாறன்..
பின் அவனே… “ நீ என் சட்டையை பிடித்து நான் அப்போவே சொன்னனே சொன்னனே.. கேட்டியா கேட்டியா என்று என் கன்னத்தில் மாறி மாறி அரைந்தால் கூட தப்பு இல்ல மாதும்மா.
ஆனா அது பற்றி இது வரை ஒரு வார்த்தை என் கிட்ட கேட்காம… ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்ததை திரும்ப வாங்கிட்டு வரேன் என்று சொன்னதுக்கு… அந்த இடம் எவ்வளவுக்கு அட்வான்ஸ் செய்திங்க என்று கேட்டு..
ஒரு நாள் டைம் கொடுங்க என்று மட்டும் சொல்லி விட்டு இரு நூறு சவரன்.. இரு நூறு சவரன்.. என் அம்மா சொன்னது போல என் கிட்ட இந்த அறையில் என் கிட்ட மட்டும் போட்டு காட்டிட்டு வைத்த நகையை கூட அப்படியே விற்க உனக்கு எப்படி மனசு வந்தது மாதும்மா..?
அதுவும் மூனு மாசத்துக்கு முன்ன என் தங்கைக்கு இருபது லட்சம் செலவு செய்தேன்.. அந்த பணம் இருந்து இருந்தா கூட முப்பது சவரன் உன் நகை விற்காம இருந்து இருக்கும்.. உண்மையில் நான் ரொம்ப கில்டியா பீல் ஆகுறேன் மாதும்மா….
அதுவும் இன்னைக்கு என்ன நாள்..? போன வருஷம் இந்த வருடத்தில் நாம என்ன என்ன செய்யனும் ..” என்று தமிழ் மாறன் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கி விட்டது..
மாதுரியின் கண்களுமே தான்… ஆம்.. சென்ற வருடம் அவர்களின் ஒன்பதாவது வருடத்திற்க்கு தான் அந்த வைர நகைகள் மனைவிக்கு வாங்கி கொடுத்து விட்டு அவன் பேசிய பேச்சுக்கள் தான் இப்போது இருவரின் நியாபகத்திலும் வந்தது..
தமிழ் மாறன் வைரத்தை பூட்டியவன்.. “ அடுத்த வருஷம் நமக்கு திருமணம் முடிந்து பத்து வருஷம் ஆகுது மாதும்மா… ஆனா முதல் இரவு நீ எப்படி இருந்தியோ நீ அப்படியே தான் இருக்க… ஆனா பாரு பத்து வருஷம் ஆயிடுச்சி….
நம்ம பத்தவாது வருஷன் திருமண நாளை நாம நல்லா செலபரேட் பண்ணனும் மாதும்மா..” என்று சொன்ன கணவனின் கண்களில் அன்று அத்தனை ஒரு கற்பனை.. அதை பார்த்த மாதுரி கேட்டாள்..
“எல்லோரையும் கூப்பிட்டு கிராண்டா செய்ய போறிங்கலா என்ன…?” அப்படி இருந்தால் மாதுரிக்கு அதில் விருப்பம் இல்லை தான் இருந்தும் கேட்டாள்..
“சே சே.. செகண்ட் ஹனி மூன்.. போக போறோம்… எங்கு எல்லாம் சொல்ல மாட்டேன் சர்பிரைஸ்… சிந்தியாவையும், ஷரத்தையும் அம்மா கிட்ட விட்டுட்டு நாம மட்டுமே போக போறோம்…” என்று சொன்னவனின் பேச்சில் அன்று மாதுரி களூக் என்று சிரித்து விட்டாள்..
கூடல் முடிந்து கண்கள் கற்பனையில் மிதக்க பேசிக் கொண்டு இருந்த தமிழ் மாறனின் பேச்சு.. மனைவியின் இந்த சிரிப்பில் தடைப்பட.. இன்றும் போல அன்றுமே தன் வெற்று மார்பில் முகம் புதைத்து கொண்டு இருந்த மனைவியின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்த தமிழ் மாறன்..
“நான் என்ன ஜோக்கா சொன்னேன்.. சிரிக்கிற..?” என்று கொஞ்சம் கோபமாக தான் அன்று கேட்டான்..
பின் கோபம் வராதா. தன் பேச்சுக்கு மனைவி வெட்கம் பட்டால், ஒரு கணவனாக அவன் மனது பெருமை பட்டு இருக்கும்.. காமெடியனாக நினைத்து சிரித்தால், கோபம் வர தானே செய்யும்…
தன் கணவனின் கோபத்தை எல்லாம் அப்போது மாதுரி கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.. இன்னுமே பலமாக தான் சிரித்தாள் .
பின்.. “ நம்ம முதல் ஹனி மூன் என்னை எப்படி கூட்டிட்டு போனிங்க என்று நினச்சி பாருங்க... ஒரு டூர் போல தான் நீங்க என்னை கூட்டிட்டு போனிங்க.. அது உங்களுக்கு நியாபகம் இருக்கா…?” என்று கேட்ட மனைவியின் பேச்சில் அவனுக்குமே சிரிப்பு வந்து விட்டது..
ஆம் அவன் ஹனி மூன் கூட குடும்பமாக தான் சென்றான்.. அப்போது இரு தம்பிகளுக்கும் திருமணம் ஆகவில்லை… ஆனால் மாமா பெண்ணை நான் கட்டவில்லை என்று அப்போது உயிரோடு இருந்த அவனின் தாய் மாமனுக்கு இருந்தது..
அதில் அத்தை பெண்ணான மாதுரியுடனான என் திருமணம் முடிந்ததில் கோபமாக பேசிய போது அவனின் தந்தை தான் எனக்கு என்ன ஒரு மகன் மட்டும் தான் இருக்கானா மச்சான்.. உங்க இரு மகள்களையுமே நான் என் வீட்டிற்க்கு மருமகளாக எடுத்துக்குறேன் என்று சொல்ல.
அப்போது கூட அவனின் தாய் மாமனுக்கு முழு திருப்தி இல்லை… அதனால் அவரை சமாதானம் செய்ய.. என்று ஒரு டூர் அரெஞ்ச் செய்ய பார்த்தவனுக்கு அவனின் கல்யாணம் வேலை.. அதோடு ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி தரும் வேலை என்று அதில் அவனை இழுத்து கொள்ள.
இதில் இவன் அவன் தாய் மாமனிடம் வேறு வாய் விட்டு விட. அதை அவ்வப்போது வேறு கேட்க
பின் என்ன கல்யாணம் முடிந்து அவனின் ஹனி மூன் போதே அனைவருக்கும் சேர்த்து புக் செய்து விட்டான். . அம்மா அப்பா தம்பிகள். அவனின் வருங்கால மனைவி மாமா மாமி தங்கை தங்கை கணவன் என்று மாதுரி சொல்வது போல அதை ஒரு டூர் போல தான் ஏற்பாடு செய்து விட்டான்..
அப்போது அவனுக்கு விவரம் பத்தவில்லையா..? இல்லை மனைவிக்கு வெட்கம் போகவில்லையா என்று தெரியவில்லை… அங்கு சென்றதும் தான் அவன் தான் செய்த மடத்தனத்தை புரிந்து கொண்டான்..
அவன் சென்ற இடம் ஹனி மூனுக்கு என்றே பிரத்தியோகமான இடம்.. இளம் காதல் ஜோடிகள்… திருமணமான இளம் தம்பத்தியர்கள் என்று அங்கு வந்தவர்கள்..
அங்கு எதற்க்கு வந்தார்களோ அதை சரியாகவே செய்து கொண்டு இருந்தார்கள்..
அது தாங்க. எப்போதுமே அணைத்துக் கொண்டும், உரசிக் கொண்டும். அங்கு நிலவிய தட்ப வெட்பத்தை சமன் படுத்தும் முயற்சியை செய்து கொண்டு இருந்தார்கள்..
ஆனால் பாவம் தமிழ் மாறன் தான்.. மெல்லவும் முடியாது முழுங்கவும் முடியாது.. புதுமாப்பிள்ளை தத்தளித்து போய் விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்…
மாதுரிக்கு அது போல எல்லாம் இல்லை போல. இன்னும் கேட்டால் இது ஒரு வகையில் அவளுக்கு நல்லதாக தான் பட்டது.. ஆம் நல்லது தான் என்று அப்போது மாதுரி நினைத்தது..
மாதுரி அப்போது தான் தன் கல்லூரி படிப்பான பி.பி.ஏ முடித்த உடனே திருமணம். இருபது வயது தான் முடிவடைந்த சமயம்.. அப்போது தமிழ் மாறனுக்கு தானே மாதுரியை விரும்பி திருமணம் செய்து கொண்டது.
மாதுரிக்கு அவனின் மாறன் மீது அது போல் விருப்பம் எல்லாம் இல்லை.. வீட்டில் பார்த்து வைத்த இடம் என்பது போல தான் மாதுரி தமிழ் மாறனை திருமணம் செய்து கொண்டது..
இன்னும் கேட்டால் முதலில்.. “ப்பா என்னப்பா. இப்போ தானேப்பா படிப்பை முடித்தேன்.. ஒரு இரண்டு வருஷம் வேலைக்கு போயிட்டு அப்புறம் கல்யாணம் செய்து கொள்கிறேனே…” என்று தான் தன் தந்தையிடம் அப்போது மாதுரி சொன்னது..
ஆனால் அவளின் தந்தை… “ உன் மாமாவே வந்து கேட்கிறார் மாது… நானே உன்னை கேட்பாங்க என்று நான் நினச்சி பார்க்கல.. அதுவும் தமிழ் இப்போ தனியா தொழில் செய்து நல்லா சம்பாதிக்கிறான்… நான் தமிழுக்கு உன்னை கேட்டது எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு…
தமிழ் என் கண் முன்னாடி வளர்ந்த பையன்.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. அதோட உன் அம்மாவோட அண்ணன் மகன் ம்மா. “ என்று சொல்லும் போதே..தந்தையை இன்னும் பேச விடாது…
மாதுரி… “ சரிப்பா.” என்று விட்டாள். இப்படியாக தான் மாதுரி தமிழ் மாறனை திருமணம் செய்து கொண்டது..
அப்படி சின்ன வயது. எதிர் பாராத திருமணம்…மாதுரிக்கு… தமிழ் மாறனுக்கோ… மாதுரி தன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்.. அதை பதிவு செய்ய இங்கு வந்த போது பார்த்தவனின் மனதை நிறைத்து விட்டவளை… மூன்று ஆண்களாக காத்திருந்து கை பிடித்த தமிழ் மாறன்.. திருமணம் ஆன முதல் இரவை வீண் செய்வானா என்ன….?
பாவம் அறைக்கு வந்ததும் மாதுரியிடம் பேசி கொண்டே இருந்தவன் அவள் கை பற்றி..
“உனக்கு ஒகே தானே…?” என்று கேட்டான்.. இத்தனை நேரமும் அவன் என்ன பேசுகிறான் என்று கூட உள்வாங்காது ஒரு வித பதட்டத்துடன் அவன் பேச்சுக்கு எல்லாம் ம் ம் என்று ம் கொட்டி கொண்டு இருந்த மாதுரி..
இதற்க்கும் ஒரு ம் கொட்ட. அவ்வளவு தான்… விளக்கை அணைத்தவன் அவளையும் அணைத்து விட்டான்..
அதில் சின்ன பெண் பயந்து போய் தான் விட்டாள்.. அதில் இது போல அனைவரோடு அந்த ஹனி மூன் அவளுக்கு ஒரு நிம்மதியை தான் கொடுத்தது…
ஆனால் பின் கணவனோடு இணைந்து வாழ்ந்து கொண்டு இருந்தவளுக்கு அது கோபத்தை கொடுத்தது..
இவர் தான் அழைத்தார் என்றால் அவங்க எப்படி வந்தாங்க… மச்சினர் இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் முடிந்து இருவரும் வெவ்வேறு இடம் பார்த்து தங்களின் தேன் நிலவுக்கு சென்ற போது மாதுரி நினைத்து கொண்டாள்…
தங்களின் ஒன்பதாம் ஆண்டு திருமண நாளில் மாதுரி இதை சொல்ல… தமிழ் மாறன்.. “ மாதும்மா என்னை கிண்டல் செய்யாதே டி.. உன் மாறன் நம்ம பத்தாவது ஆண்டு திருமண நாளுக்கு கண்டிப்பா நீயும் நானும் மட்டும்.. நம்ம இரண்டாவது ஹனி மூன்..” என்று சொல்லி கொண்டு வந்தவன் தன் மனைவியின் பார்வையில்..
“ தப்பு தப்பு.. நம்ம முதல் ஹனி மூனை நம்ம இரண்டு பேர் மட்டும் தான் கொண்டாட போறோம்…இதை நான் சர்பிரைஸை வைத்து இருந்தேன்.. ஆனா ஒரு க்ளூ கொடுக்கிறேன்.. லாஸ்ட் வீக் உனக்கு பாஸ்போர்ட் எடுத்தது ஒரு காரணத்திற்க்காக தான்..” என்றதும்..
மாதுரி… “ வெளி நாடா. …?” என்று கேட்டாள்..ஆம் என்று தலையாட்டியவன்..
இன்று ஒன்றும் இல்லாது தானாக வந்து அணைத்து கொண்டு இருக்கும் மனைவியை கூட அணைக்காது. இருந்த தமிழ் மாறனை அன்று மாதுரி அனைத்து வகையிலும் அவனை சமாதானம் செய்தாள்..
எப்போதுமே தமிழ் மாறன் தான் தன் மனைவியை நாடுவான்.. தேடுவான்… அனைத்துமே அவனாதாக தான் இருக்கும்.
ஆனால் அன்று… தேடலும் அவள் ஆரம்பித்து வைத்தவள்.. இந்த பத்து ஆண்டுகளில் தன் கணவன் தனக்கு சொல்லிக் கொடுத்த இல்லற பாடத்தை மொத்தமாக தன் கணவனிடம் சொல்லி முடிக்க…
தமிழ் மாறனின் நிலையோ முற்றிலும் மாறி போனவனாக. “ மாதும்மா.” என்று அணைத்து கொண்டான்..
விடிந்து குழந்தைகளை பள்ளிக்கு விட்ட பின்.. கணவன் மனைவி இருவரும் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வந்ததும்.. வீட்டிற்க்கு வந்ததும் தமிழ் மாறன் மனைவியின் கை பிடித்தவன்..
“ மாதும்மா ஏதாவது கேள்… நம்ம திருமண நாள் பரிசாக ஏதாவது கேள் மாதும்மா…” என்றதும்..
மாதுரியுமே.. “ நானே கேட்கனும் என்று தான் இருந்தேன்..” என்று சொன்னதுமே தமிழ் மாறன்..
“ம் கேள் மாதும்மா…” என்று சொன்னவனின் மனதோ என்ன கேட்க போகிறாள் என்று பயந்தது.. வாழ்க்கையில் இது போலான இந்த பயம் தமிழ் மாறனுக்கு புதியது…
இது வரை யாரையும் கேட்கும் அளவுக்கு கூட அவன் வைத்து கொண்டது கிடையாது.. ஆனால் இன்று..
இன்றுமே அவனிடம் பணம் இருக்கிறது தான்.. அது தான் மனைவி தன் நகைகள் வித்த பணம் ஒரு கோடியும்.. வைர நகைகள் அடகு வைத்ததில் ஒரு இருபது லட்சமும் இருந்தது.
அதில் ஒரு கோடிக்கு தான் அட்வான்ஸ் செய்த இடத்தை பவர் வாங்கி கொண்டவன் கையில் மீதம் இருப்பது சில லட்சங்கள் தான். இன்னுமே லோன் ஏதாவது வாங்கினால் தான் வாங்கிய இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி முடிக்க முடியும்.. உடனுக்கு உடன் விற்று விட்டால், பிரச்சனை இல்லை..
அப்படி இல்லை என்றால், இதில் அனைத்து பணத்தையும் போட்டு முடக்கியது போல் தான் ஆகி விடும்… அதனால் மனைவி என்ன கேட்க போகிறாள் என்று பயந்து இருந்த கணவனின் கை பற்றி கொண்ட மாதுரி..
கேட்டாள்.. அவர்களின் பத்தாவது திருமண நாள் பரிசாக அவள் கேட்ட விசயத்தில் தமிழ் மாறன்..
“மாதும்மா என்னை இனி நம்பினால் நட்டாத்துல தான் நிற்கனும் என்று நீ முடிவு செய்து விட்டியா மாதும்மா…?” என்று ….