அத்தியாயம்…3..2
முதல் முறை மனதின் பக்கம் செவி சாய்த்து கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ…. ஒரு சில அரசியல் விசயத்திற்க்கு என்று அடி தடிக்கு என்று இருக்கும் ஒருவனை அழைத்தான்..
அந்த அடியாள் எடுத்ததுமே… தீக்ஷேந்திரன் .” சட கோபனையும் அவன் மகன் சுரேஷையும் தூக்கி நம்ம கஸ்டடியில் வைத்து விடுங்க…” என்ற பேச்சில் அந்த அடியாள் ஜான்..
“சார் நம்ம சட கோபன் சாரா… சார்….?” என்று தன் சந்தேகத்தை அத்தனை பவ்யமாக கேட்டான் அந்த ஜான் எனப்பட்டவன்…
காரணம் சட கோபன்.. இவர்கள் கட்சியில் ஆதி முதலே இருப்பவர்.. அவர் மகன் பெயர் எல்லாம் ஜானுக்கு தெரியாது.. இவர் வேறு யாரையாவது தான் தான் இவரை இவர் கட்சியில் இருக்கும் சட கோபனை தூக்கி விட்டால், முதல் அமைச்சரை கூட ஒரு விதத்தில் சமாளித்து விடலாம்.. ஆனால் தீக்ஷேந்திரனை முடியாதுப்பா என்று நினைத்து தான் ஜான் கேட்டது..
ஆனால் ஜான் சொன்ன… “ என்னது நம்ம சட கோபனா….இது எப்போ இருந்து…?” என்று ஒரு வித நக்கலாக கேட்டான்… வக்கீலுக்கு சொல்லியா தர வேண்டும். ஒருவன் பேச்சை வைத்தே மடக்குவதை..
தீக்ஷேந்திரனின் இந்த கேள்வியில் ஜான் உண்மையில் பதறி தான் போய் விட்டான்..
“சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கல சார்… நான் ஆள் மாத்தி தூக்கிட்டா அது தான் சார்.. நீங்க சொன்னது போல தூக்கிடுறேன் சார்..” வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசி வைத்த அந்த ஜான் தீக்ஷேந்திரன் சொன்னதை செயல் படுத்தும் வேலையை பார்க்க சென்று விட்டான்..
ஜானுக்கு அடுத்து தீக்ஷேந்திரன் அழைத்தது.. இவர்களின் சொத்துக்கள்.. கணக்கு வழக்குகளை கவனித்து கொள்பவனை தான்… யாருக்கும் தெரியாத நபர் அவர் .. இவர் கட்சி என்ன. எதிலும் இல்லாது தனிப்பட்ட ஒரு நபர். அவர் அரிச்சந்திரன்..
இவர்களின் சொத்தில் விவரங்கள்… யார் யார் பினாமி. ஒரு சிலது இவர்களுக்கே தெரியாது.. ஆனால் ஒன்று விடாது தெரிந்து வைத்து கொண்டு இருப்பவன்.. யார் யார் பினாமி… என்ற அனைத்து கணக்கையும் பார்ப்பவன்..
ஆடிட்டர் என்பது வேறு.. அது ஊருக்கு…. இது வரை ஸ்கீரினில் எந்த இடத்திலும் இந்த அரிசந்திரன் வர மாட்டான்..
ஐடி ரெய்டு நடத்தினால் கூட…. ரவிச்சந்திரன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பது தெரியாது… தீக்ஷேந்திரன் இப்போது அவனை தான் அழைத்தது..
ஜானை போல தான் இவன் அழைத்ததும் உடனே அழைப்பு ஏற்று மிக பவ்யத்துடன்.. “ சார்..” என்று அழைத்தது… கூடவே ஏன் அழைக்கிறார் என்ற யோசனையும்.. காரணம் இவர்கள் யாருமே அரிசந்திரனை காரணம் இல்லாது அழைக்க மாட்டார்கள் என்பதே…
தீக்ஷேந்திரன் சுற்றி வளைக்காது… “ சட கோபன் கிட்ட இருக்கும் நம்ம பிராப்பர்ட்டி எல்லாம் வேறு யாருக்காவது மாத்தி விடனும்.. யாருக்கு என்று சொல்லுங்க...” என்று சொல்லி வைத்து விட்டான்..
இதில் கூட அரிசந்திரன் முன் வர மாட்டான்.. இவர் இவர் வைத்தால் சரியாக இருக்கும் என்று அதற்க்கு உண்டான வேலைகளை திரை மறைவில் தான் அரிச்சந்திரன் செய்வது..
அந்த பினாமிகளுக்கே தெரியாது அரிச்சந்திரன் எனும் ஒரு நபர் இருப்பது..
இதை எல்லாம் அதிசயம் போல் பார்த்து கொண்டு இருந்தான் அவனின் நண்பனும்… அவனின் உதவியாளனும்… இவனை போல வக்கீலுக்கு படித்தவனுமான. ராகவ்….
இவன் முன் தான் அந்த கணினியில் மந்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து முதலில் அந்த பெண்ணின் விவரங்களை பையன் ஊன்றி படிக்கிறான் போல என்று தான் நினைத்தது.. ஆனால் பின் தான் தெரிந்தது விவரங்களை பார்க்கவில்லை.. விவரமாக தான் பார்க்கிறான் என்பதும்..
அதுவும் தொடர்ந்து.. சட கோபனை.. அதுவும் குறிப்பாக சுரேஷை தூக்க சொன்ன போது அவன் குரலில் தெரிந்த அந்த கோபத்தை பார்த்த ராகவன்.. என்ன டா இது போட்டோவில் பார்த்தேவா… என்று தான் நினைக்க தோன்றியது..
ஆனால் அதையும் தாண்டி அவன் தன் நண்பனை கிண்டல் செய்ய எல்லாம் தோன்றவில்லை.. காரணம். நண்பனை பற்றி தான் அவனுக்கு தெரியுமே…
அவன் வாழ்வில் எத்தனையோ பெண்கள் அவன் அழகுக்கும் அவன் பணத்திற்க்கும். அவன் குடும்ப பதவியையும் பார்த்து வலிய வந்து அவன் மீது விழுந்து இருக்கிறார்கள்.
ஏன் காதல் கல்யாணம் அது போல் எல்லாம் கூட வேண்டாம். ஒன் நையிட் ஸ்டே. என்ற அளவில் கூட கேட்டு இருக்கிறார்கள்.. ஆனால் அனைவருக்குமே இவனின் பதில் நோவாக தான் இருக்கும்.
அப்படிப்பட்டவன் போட்டோவையே இப்படி பார்க்கிறான் என்றால், ஒன்றும் பேசாது கை கட்டி அமைதியாக நின்று இருந்தான்.. ராகவ்..
தீக்ஷேந்திரன் அனைவரிடம் பேசி விட்டு மீண்டும் மந்ரா புகைப்படத்திற்க்கே வந்து நிற்க. ராகவ் மீண்டுமா என்று நினைக்கும் சமயம் தான் மந்ரா வேலை செய்யும் மருத்துவமனையில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்.. தன் தாத்தாவுக்கு பிஸியோ செய்ய தன் வீட்டிற்க்கே வந்தவள் என்ற விவரமும் அதில் சொல்லப்பட்டதை பார்த்தவன்..
அவன் என்ன மாதிரியாக உணர்ந்தான் என்பதே அனுமானிக்க அவனாலேயே முடியவில்லை..
ஐந்து நாட்களுக்கு முன் நான் இங்கே இல்லை.. டெல்லியில் தான் நான் இருந்தேன்.. மந்ரா எந்த நாள் இந்த வீட்டிற்க்கு வந்ததை கவனித்தவனின் மூளை வேக அன்று தான் எங்கு இருந்தோம் என்பதை கணக்கு போட்டது…
ஆனால் மனமோ.. நீ இங்கு… அந்த சமயம் இந்த வீட்டிலேயே இருந்து இருந்தால் கூட… நீ கவனித்து இருந்து இருக்க மாட்டே என்றும் சொன்னது..
அது என்னவோ மந்ரா தன் வீட்டிற்க்கு வந்து சென்று இருக்கிறாள் என்பதிலேயே. மனது அவனுக்கு என்னவோ பண்ணியது….
பின் அவனே… என்ன நினைத்தானோ அடுத்த புகைப்படமாக வந்த அவனின் சித்தப்பா மகேந்திரனை பற்றி விவரங்கள் தான்.
ட்ரைவிங்க ஸ்கூல் வைத்து நடத்துக்கிறார்…. பார்க்க தன்னை போலவும் தந்தை போலவும் இருக்கும் ஒரு நபர்.. அதுவும் தன் ரத்தம் சம்மந்தப்பட்ட நபர்.. ஒருவர் ட்ரைவிங் பள்ளி வைத்து நடத்துவது… என்ற நினைப்பே.. அவனை என்னவோ செய்தது..
பின் அடுத்த தகவலாக அத்தை ஜீவிதாவின் புகைப்படத்தை பார்த்தவன்… சுதாகரன்.. சுதாகரனின் தோற்றம் சாதாரணமாக தான் இருந்தது.. மகேந்திரன் என்ன தான் நடுத்தர வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்தாலுமே, பார்த்த உடன் ஒரு கம்பீரம் தெரிந்தது.. ஆனால் சுதாகரிடம் அது இல்லை. என்று நினைத்தவன்..
பின் என்ன நினைத்தானோ இல்ல இல்லை நான் அப்படி எல்லாம் நினைக்க கூடாது.. நாளை இவர் என் மாமனாராக கூட ஆகலாம்.. பின் அவர் விவரம்… பின் சித்தியாக கவிதா…. சுதாகரனும் கவிதாவும் அண்ணன் தங்கை என்ற விவரம்.. பின் அடுத்து அத்தை என்று ஜீவிதா புகைப்படத்தை பார்க்க மந்ரா போலவே இருக்கிறார்கள் என்று பார்த்தவன் பின் கடைசியாக தான் தன் பாட்டி திரிபுர சுந்தரியின் புகைப்படத்தை பார்த்தான்.
பார்த்ததுமே ஏனோ அவன் கண்கள் அவனையும் மீறி கலங்க பார்த்தது… இவருமே மந்ரா போல் தான் இருந்தார்.. இல்லை இல்லை இவர் போல் இவரின் மகள் ஜீவிதா… ஜீவிதா போல் மந்ரா என்று தன்னை திருத்திக் கொண்டவன்.
தன் பாட்டி பேசியில் பேசிய அந்த குரலை நினைவு கூர்ந்தான். அப்போது ஆராய்ச்சியாக கேட்டு கொண்டு இருக்கும் போது தெரியாத அவரின் அந்த கம்பீரம் இப்போது அவனுக்கு தெரிந்தது…
கூடவே பாட்டி போல் தான் பேத்தியும் இருப்பாளோ என்ற யோசனையும்… பாவம் அவனுக்கு தெரியவில்லை… தைரியமான பாட்டிக்கும்.. பயந்த அன்னைக்கும் இடையில் வளர்ந்த பெண்ணவள்…. தன் அன்னையின் பக்கம் இருக்கும் போது அவள் அன்னை பயப்படும் போது எல்லாம் அவள் தைரியசாலியாக.. அன்னையை பார்த்து கொள்பவள்…
அதே சமயம் பாட்டியுடன் இருக்கும் போது யாராவது கத்தி பேசினாலே.. தன் பாட்டியின் கையை கெட்டியாக பிடித்து கொள்ளும் பெண்ணள்… அதாவது இன்னது என்று ஒரு வட்டத்திற்க்குள் அவளை அனுமானித்து விட முடியாது என்பதை… கடைசியாக வினோத்தை பார்த்தான்.
தன் சித்தப்பாவின் மகன்…. தன்னை போல் எல்லாம் இல்லை.. அவனின் மாமன் சுதாகரன் போல் தான் இருந்தான்… என்னவோ அனைவரை பற்றியும் முழுமையாக படித்ததில்… அவர்கள் தன் உறவு தான் இருபத்தி ஆறு வருடத்திற்க்கு முன்பு சிங்க வாசல் தான் அவர்களின் பிறப்பிடம் என்ற விவரம் இருக்க….
தாங்கள் இப்படி அனைத்து வசதிகளையும் அனுபவித்து கொண்டு இருக்க… இப்படி இவர்கள் மத்தியதர வாழ்க்கை வாழ்வது அவன் மனதிற்க்கு என்னவோ செய்தது தான்.
அவர்கள் இப்போது வாழும் வாழ்க்கையே இப்படி மனம் வருந்துபவன்.. அனைத்து விசயங்களும் முழுமையாக தெரிந்தால்.
தெரிகிறது.. ஏதோ இருக்கிறது என்பது மட்டும் இப்போதே தீக்ஷேந்திரனுக்கு தெரிகிறது தான்… பாட்டி தன் தந்தையிடம்..
எரிந்த வீட்டில் பிண எண்ணிக்கை பார்க்காது வாக்கு எண்ணிக்கையை பார்த்தவன்… அந்த வார்த்தை அவனை எதேதோ யோசிக்க வைத்தது…
பின் என்ன நினைத்தானோ ராகவிடம். “ அப்பா எங்கே இருக்கார்…?” என்று கேட்டான்.
“அவர் ரூமில் இருக்கார்..” என்று ராகவன் சொல்லவும்..
“ஏன் இன்னுமா சித்தப்பா மாமாவை வினோவை அப்பா கெஸ்ட் அவுஸ்க்கு கூட்டிட்டு வரல…” என்று கேட்டுக் கொண்டே தன் தந்தையின் அறையை நோக்கி சென்றான் தீக்ஷேந்திரன்..
அது என்னவோ… நேரில் பார்க்காது … அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாத போதும் தீக்ஷேந்திரன் அவர்களை நெருக்கமாக உணர்ந்தான்.. அதன் தாக்கம் தான் யாரும் சொல்லாமலேயே உரிமையுடன் உறவு வைத்து அழைத்தது…
அவர்கள் அறைக்கு சென்ற போது அவனின் அன்னை படுக்கை அறைக்கு முன் அறையில் அமர்ந்திருந்தார்.. பார்த்ததும் தெரிந்தது. அன்னை அழுது இருக்கிறார் என்று..
அப்பா திட்டி இருப்பாரா…? என்று நினைக்கும் போதே…. அவனின் அன்னை இவனை பார்த்ததும் கெட்டியாக இவன் கை பிடித்து கொண்டவர்..
சொன்ன வார்த்தை… “ தீக்ஷா எனக்கு பயமா இருக்கு தீக்ஷா..?” என்பது தான்… மகனுக்கு புரியவில்லை.. வக்கீலாக இருந்து கொண்டு ஒரு சின்ன நுனி கிடைத்தால் கூட போதும் அடி ஆழம் வரை ஆராய்ந்து விட்டு தான் அமருவான்.. .
ஆனால் தன் நெருக்கமானவர்கள். விசயம் என்று வரும் போது.. அதுவும் தன் அன்னை இப்படி பயந்து போகும் அளவுக்கு என்று யோசிக்கும் போது.. ஒரு வக்கீலாக தன் அம்மா ஏதோ செய்து இருக்கிறார் என்று தான் அவனை நினைக்க தோன்றுக்கிறது..
ஆனால் அதற்க்கு மேல் அவன் வக்கீலாக யோசிக்காது தன் அன்னைக்கு மகனாக.. “ ம்மா என்ன பிரச்சனை வந்துட போகுது.. அப்படி வந்தாலுமே நான் பார்த்துக்கிறேன் ம்மா….” என்று சொல்லி தைரியம் அளித்து விட்டு தன் தந்தையை பார்க்க அவர் படுக்கை அறைக்குள் சென்றான்..
அங்கு தன் கையில் கட்டி இருந்த அந்த கோல்ட்டன் வாட்ச்சையே தான் அவர் பார்த்து கொண்டு இருந்தார்..
இவனை பார்த்ததும்.. “ வா தீக்க்ஷா…” என்றவர் பின் மகன் கேட்காமலேயே தன் கையில் இருந்த வாட்ச்சை காட்டி..
“இது உன் தாத்தா நான் வெளிநாட்டுக்கு படிக்கும் போகும் போது என் கையில் கட்டி விட்டது தீக்ஷா…” என்றவர் பின்..
“நான் அவருக்கு நியாயம் செய்யல தீக்க்ஷா….?” என்று அவர் சொல்லி கொண்டு இருக்கும் போது தான் ராஜேந்திரன் தனிப்பட்ட பேசிக்கு அழைப்பு வந்தது…
அவரின் தனிப்பட்ட கெஸ்ட் அவுஸ்க்கு மகேந்திரன் வினோத்… சுதாகரனை பாதுக்காப்பாக அழைத்து வந்தாயிற்று என்று…
“ம்..” என்றவர்.. பேசியை வைக்காது இருக்க,, அழைப்பை விடுத்த விவேகானந்துமே பேசியை அணைக்கவில்லை.
பின் ராஜேந்திர பூபதி… “அவங்க மூன்று பேருக்கும் காயம் ஒன்னும் இல்லையே….?” என்று இதை கேட்கும் போதே தந்தையின் முகத்தில் தெரிந்த சொல்ல முடியாத அந்த பாவத்தில்..
“ப்பா….” என்று அழைத்து அவர் கை மீது தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தவன் பின் என்ன நினைத்தானோ… அவர் கையில் இருந்த கை பேசியை வாங்கியவன்..
விவேகானந்திடம்… தந்தை கேட்டதையே தான் கேட்டான்.. ஆனால் அவனுக்குமே அதை கேட்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை…
இவன் கேள்விக்கு விவேகானந்திடம்… இருந்து சட்டென்று பதில் வராது போகவே தெரிந்து விட்டது.. தீக்ஷேந்திரனுக்கு… ஆனால் தெரிந்த விசயம் அவன் தொண்டை வரை கசந்தது..
தன் கையில் இருந்து பேசியை வாங்கிய பேச ஆரம்பித்ததில் இருந்து தன் மகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த ராஜேந்திர பூபதி மகனின் முகத்தில் தெரிந்த பாவனையிலேயே தெரிந்து விட்டது என்ன என்பது…
“ஈஸ்வரா…. பூபதி வாரிசுக்கா… இத்தனை செல்வாக்காக நான் இருந்து என்ன பிரயோசனம்… ”
ராஜேந்திர பூபதி ஈஸ்வரா என்று அழைத்தது அந்த கடவுளையா.. இல்லை அவரின் தந்தை நீலக்கண்டன் பூபதியையா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்…