Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்....4.2

  • Thread Author
அத்தியாயம்…4..2

தன் கையை பிடித்து கொண்டு இருந்த தந்தையின் அந்த பதட்ட முகத்தையே பார்த்து கொண்டு இருந்த தீக்ஷேந்திரன்…

“ப்பா.. என்ன ப்பா…. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.. ஆனா ஏதோ நடந்து இருக்கு… அந்த நடந்ததில் பாதிக்கப்பட்டதுல…” என்று தீக்ஷேந்திரன் சொல்லும் போதே ராஜேந்திர பூபதி..

“தீக்க்ஷா ப்ளீஸ்… ப்ளீஸ் அதை சொல்லாதே …. “ என்று சொன்னவர்..

பின்.. “ எனக்குமே முழுசா தெரியாது தீக்க்ஷா… ஆனால் என் மேலவும் தப்பு இருக்கு.. அது மட்டும் எனக்கு தெரியுது…” என்ற தந்தையின் பேச்சை மகன் புரியாது கேட்டு கொண்டு இருக்கும் போது தான் விவேகானந்தரிடம் இருந்து ராஜேந்திர பூபதிக்கு அழைப்பு வந்தது..

அழைத்து விவேகானந்தர்… “ சார் அவங்களை சேப்பா உங்க கெஸ்ட் அவுஸ்ஸில் தங்க வெச்சிட்டேன்…. அவங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க…” என்ற செய்தியை கேட்ட ராஜேந்திர பூபதி..

“ம்..” என்று மட்டும் சொன்னவர் பின்.. வருகிறேன் என்பது போல் எதுவும் பேசாது அமைதியாக பேசியை வைத்து விட்டார்..

பக்கத்தில் இருந்த தீக்ஷேந்திரனுக்கும் கேட்டது தான்.. தந்தை பேசியை வைத்ததும்… அவனே…

“ப்பா போகலையா..?” என்று கேட்டவன்.. பின்..

“போகலாம் ப்பா…” என்று தானும் வருவதாக சொன்னான்…

திரும்ப மகனின் கையை பிடித்து கொண்ட ராஜேந்திர பூபதி… “ எப்படி தீக்ஷா நான் அவங்க முகத்தை பார்ப்பேன்….” என்று கேட்டவரிடம்..

“ப்பா பார்த்து தானேப்பா ஆகனும்.. உங்களுக்கே முழுசா தெரியல எனும் போது நீங்க தெரிஞ்சிக்கனும் தானேப்பா…. என்ன நடந்தது என்று… கேட்கனும் ப்பா அவங்க கிட்ட கேட்கனும்.. ஏன் இத்தனை வருஷம் நீங்க எங்க கிட்ட வரல. என்று நீங்க அவங்க கிட்ட கேட்கனு ப்பா… ஒரு மகனா உங்களுக்கு அந்த உரிமை இருக்குப்பா ” என்று சொன்னான்..

அதற்க்கு அவனின் தந்தை… “ ஆமாம் ஆமாம்… தெரிஞ்சிக்கனும் கண்டிப்பா தெரிஞ்சிக்கனும்…” என்று சொன்னவர்.

பின்… “ ஆனா பாரு உன்னை மாதிரி உரிமை இருக்கு எல்லாம் கேட்க முடியாது.. என்ன ம்மா நடந்தது பணிந்து போய் தான் தீக்ஷா என் அம்மா கிட்ட கேட்கனும.. ஏன்னா என் அப்பா பேச்சை அந்த ஊரே மரியாதையோடு கேட்கும். ஆனா என் அப்பாவே என் அம்மா கிட்ட… தாயி என்று மரியாதையோடு தான் பேசுவாரு..” என்று தன் தந்தை தாயை பற்றி பேசும் போதே ராஜேந்திர பூபதி முகத்தில் மட்டும் அல்லாது குரலிலும் அத்தனை பெருமை தெரிந்தது…

கணவரின் பேச்சை கேட்டு கொண்டே அங்கு வந்து நின்ற காவ்ய ஸ்ரீ முகத்தில் தன் கணவன் முகத்தில் தெரிந்த அந்த பெருமையில், காவ்யா ஸ்ரீக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையும்… அதோடு கூடவே பயத்தின் சாயல் இன்னும் அதிகம் கூடியது போல் தீஷேந்திரனுக்கு தன் அன்னையிடம் தெரிந்தது..

முன்பே தீக்ஷேந்திரன் நினைத்தது உண்டு… தன் தந்தையின் ஒரு சில செயல்களை பார்த்து வெளி அரசியல் போலவே தன் வீட்டிலுமே செய்கிறாரோ என்று… கூடவே மறைமுக போராக தன் தந்தைக்கும் தன் தாத்தாவுக்கும் ஏதோ இருக்கிறதோ என்றுமே….ஆனால் இப்போது அது உறுதி ஆகி விட்டது தன் அன்னையின் இந்த முகத்தை பார்த்த போது….

பின் என்ன நினைத்தானோ… தன் அன்னையிடம் வந்தவன். “ ம்மா என்ன ம்மா…” என்று கேட்ட போது அவருமே தந்தையை போலவே…. தன் கையை கெட்டியாக பிடித்து கொண்டவரிடம்.

“ம்மா இது போல பயந்துட்டே இருந்தா.. பிரச்சனை தீர்ந்துட்டாது ம்மா.. எது என்றாலும் பேஸ் பண்ணி தான் ஆகனும்….” என்ன நடந்தது என்ன என்று தெரியாது தன் அன்னைக்கு தைரியம் அளித்தான்..

காவ்ய ஸ்ரீ என்ன நினைத்தாரோ…. “ இந்த அம்மாவை நீ எப்போவும் விட்டு விட மாட்டே தானே தீக்ஷா…?” என்று ஒரு வித எதிர் பார்ப்போடு மகனிடம் கேட்டவருக்கு தீக்ஷேந்திரன் தன் அன்னையின் கைக்கு அழுத்தம் கொடுத்தவன்.

“ம்மா நீங்க என் அம்மா மா.” என்று மட்டும் சொன்னான்.

இங்கு சேக்கிழார் தன் அறையில் தன் செவிலியல் கொடுத்த மாத்திரையில் உபயத்தில் மதியம் தூக்கமும் தூங்கி எழுந்தவர்….

தனக்கு உதவி செய்ய என்று தனிப்பட்டு நியமித்து இருந்த பெண்ணிடம்…

“என் மகள் வந்தாங்கலா…?” என்று தான் கேட்டது.

அவரின் கேள்விக்கு … “ இல்ல சார்…” என்று சொன்னவர்.. பின் அடுத்த கேள்வி கேட்கும் முன்னவே..

“இன்னைக்கு யாருமே இந்த ரூமுக்கு வரல சார்….” என்றும் கூறினார்… சேக்கிழார் கேட்பதற்க்கு முன்பே அந்த பெண் சொல்ல காரணம்..

காவ்யா ஸ்ரீ தினம் ஒரு முறை தன் தந்தையை அறைக்கு வந்து பார்த்து விட்டு செல்வார்.. அதே போல் தான் தீக்ஷேந்திரனுன் ராஜேந்திர பூபதியும் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக இவர் அறைக்கு வராது இருக்க மாட்டார்கள்…

இன்னும் கேட்டால் சேக்கிழார் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை தானே தவிர அறையை விட்டு வெளியில் செல்வார் தான்..

அதனால் தினம் காலை இரவு அனைவரும் சாப்பிடும் இடமான உணவு மேடைக்கு வந்து தான் சாப்பிட்டு விட்டு செல்வார்.. அப்படி இருந்துமே இது நடை முறை பழக்கமாக சேக்கிழார் செயல் இழந்த இந்த ஐந்து ஆண்டுகளில் நடப்பது..

பணிப்பெண் சொன்னதில் சேக்கிழார் கொஞ்சம் யோசித்தவர் பின்… அவரே… “ ஏதாவது முக்கியமான வேலை வந்து இருக்கும்..” என்று சொன்னார்.. அந்த பேச்சு அந்த பெண்ணுக்கா.. இல்லை தனக்கு தானே சமாதானம் படுத்திக் கொள்ள சொல்லிக் கொண்டாரோ என்று தெரியவில்லை…



சேக்கிழாரின் இந்த பேச்சுக்கு அந்த பணிப்பெண்… “ இல்ல சார்.. இன்னைக்கு என்ன ஆச்சு என்று தெரியல…. யாருமே வெளியில் போகல….” என்ற செய்தியையும் அந்த பெண் சொன்னார்.. இதுவும் நடப்பது தான்.. சேக்கிழாரின் நடமாட்டம் நின்று விட்டதுமே….

இது போல் தனக்கு நியமிக்கப்பட்ட பணிப்பெண் மூலமாக தன் பார்வைக்கு படாத விசயங்களை அந்த பெண்ணிடம் கேட்டு தெரிந்து கொள்வது தான்..

அது போல இன்றும் சொல்ல. இப்போது சேக்கிழார்…” என்னது யாருமே வெளியில் போகலையா…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்..

மருமகனுக்கும் பேரனுக்கும் ஒவ்வொரு நாள் கிடையாது.. ஒன்னொரு மணி நேரம் கூட எத்தனை மதிப்பு மிக்கது என்பதை அறிந்தவர் ஆயிற்றே…

யாராவது ஒருவர் வீட்டில் இருக்கிறார்கள் என்று சொன்னால் கூட உடல் நிலை சரியில்லை என்று நினைத்து கொள்ளலாம்.. ஆனால் இரண்டு பேருமே என்றதில் .. கூட தீக்ஷேந்திரன் ஒர்க் டைம்டேபுல் தெரியாது தான்.

ஆனால் ராஜேந்திர பூபதியின் டைம் டேபுல் அவருக்கு தினமும் தெரிய வந்து விடும்.. இந்த கட்சியை ஆரம்பித்ததே அவர் தானே.. அதனால் ராஜேந்திரனிடம் இருக்கும் ஒரு சிலர்கள் இன்றுமே சேக்கிழாரிடம் தொடர்பில் தான் இருக்கிறார்கள்..

அப்படி அவர் சொன்ன விசயம். இன்று ராஜேந்திர பூபதிக்கு முக்கியமான ஒரு விசயமாக அனைத்து எம்.எல்.ஏக்களோடும் பேச்சு வார்த்தை ஒன்று ராஜேந்திர பூபதி நடத்துவதாக இருந்தது.. அதுவும் இந்த ஏற்பாடு ஒரு மாதம் முன்னவே செய்ததும் கூட.

அப்படி முக்கியமான பேச்சு வார்த்தைகளை கூட ரத்து செய்து விட்டு வீட்டில் இருக்கும் படியாக அப்படி என்ன சூழ்நிலை இந்த வீட்டிற்க்கு வந்து விட்டது.. அதுவும் தனக்கு தெரியாது என நினைத்தவர்..

உடனே தன் மகளுக்கு அழைப்பை விடுத்தார்… அப்போது தான் காவ்யா ஸ்ரீ. தன் மகனின் பேச்சான…

“நீங்க என் அம்மா…” என்று சொன்னதில் கொஞ்சம் தைரியம் வந்தவராக இருந்த போது தான் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது..

தன் கை பேசியில் தந்தையின் எண்ணை பார்த்ததுமே.. ‘ அப்பாவை எப்படி மறந்தேன்…’ என்று நினைத்தவர்..

பின் தீக்ஷேந்திரனிடம்… “ நான் உன் தாத்தா கிட்ட உங்க அப்பாவோட சைட் பக்கம் உயிரோட தான் இருக்காங்க என்று சொல்லனும் டா….” என்று இதை சொல்லும் போது காவ்யா ஸ்ரீக்கு.. கொஞ்சம் பதட்டம் தான்..

அன்னையின் இந்த பேச்சுக்கு மட்டும்.. “ ம்மா. உங்க அப்பா எனக்கு தாத்தான்னா. இவங்க என் பாட்டி… அத்தை சித்திம்மா…” என்று சொல்லி விட்டு தங்கள் பேச்சை கேட்டு கொண்டு இருந்த தந்தையிடம்.

“ப்பா விவேகானந்தன் அப்போவே மாமா சித்தப்பா தம்பி எல்லோரும் அங்கு வந்துட்டாங்க என்று சொன்னாங்க.. வாங்க போகலாம்…” என்று அழைத்தவனை பார்த்த ராஜேந்திரன் ..

“போகலாம் தீக்ஷா போய் தான் ஆக வேண்டும்…” ஏதோ ஒரு மலையை புரட்டி எடுப்பது போல் தான் அவர் கட்டிலில் இருந்து இறங்கியது…

மகனின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த கவ்யாவுக்கோ…. போன பயம் மீண்டும் வந்து விட்டது.. தீக்ஷேதிரன்… தன் கணவன் வீட்டு ஆட்களை அழைத்த அந்த உரிமையான அழைப்பில்..

இன்னும் கேட்டால் இது வரை கணவனை தவிர. அவர் வீட்டவர்களை பற்றி ஒரு வார்த்தை பேசாதிருந்த காவ்யா ஸ்ரீ… அது நல்ல விதமாகவும் சரி கெட்ட விதமாகவும் சரி இது வரை காவ்யா ஸ்ரீ என்ன.. யாருமே பேசி தீக்ஷேந்திரன் கேட்டது கிடையாது..

ஆனால் இன்று முதல் முறையாக.. காவ்யா ஸ்ரீ தன் மகனிடம்…. “ நீ இப்படி உங்க அப்பா வீட்டு உறவை பார்க்க்காத போதே . இத்தனை உரிமையா உறவு சொல்லி அழைத்து மரியாதை கொடுக்குற. ஆனா அவங்க எல்லாம் என்னையும் சரி உன் தாத்தாவையும் சரி.. இது வரை மரியாதையா எல்லாம் அழைத்து பேசினது கிடையாது.. தெரியுமா.? இவங்க அம்மா அப்பா கூட விடு… இவர் தங்கை.. ரொம்ப சின்ன பெண்.. அந்த ஜீவிதா கூட.. என்னை இல்ல உன் தாத்தாவை கூட என்னவோ அவள் தான் பெயர் வைத்தது போல் சேக்கிழார் என்று தான் கூப்பிடுவா..” என்று மகனிடம் மாமியார் வீட்டவர்களை பற்றி குற்ற பத்திரிக்கையை வாசித்தார்..

என்ன தான் நாடாளும் வீடு என்றாலும், குடும்பமும்.. குடும்ப பிரச்சனையும் ஒன்று தான் போல்.. என்ன ஒன்று பிரச்சனைகள் தான் வேறுப்பட்டு தெரியும் போல்.. அன்னையின் பேச்சில் தீக்ஷேந்திரன் இதை தான் நினைத்து கொண்டான்..

பின் என்ன நினைத்தானோ… “ இனி கூப்பிட மாட்டாங்க… இந்த தீஷேந்திரன் அம்மாவையும் சரி தாத்தாவையும் சரி அப்படி கூப்பிட நான் விட மாட்டேன் போதுமா….” என்று சொன்னவனிடம் அவனின் அன்னை நம்பாத ஒரு பார்வை பார்த்தார்..

“ம்மா இன்னும் என்னம்மா…” இப்போது மகனின் குரலில் கொஞ்சம் சலிப்பு…

என்னவோ…தீக்ஷேந்திரனுக்கு உடனே தன் தந்தை வீட்டவர்களை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை… என்ன தான் அவர்கள் குடும்பம் நாடான்றாலுமே… அவனுக்கு தன் குடும்பம் . தன் கட்சி.. இரண்டும் இரு கண்களாக தான் நினைக்கிறான்.. அப்படி தான் பார்த்து கொண்டும் இருக்கிறான்..

அதனால் தான் இது வரை சும்மா கூட பேச்சாக கூட கேட்டு அறியாத தன் தந்தையின் உறவை பார்க்க அவனுக்கு அத்தனை ஆர்வம் அவனிடம்.. கூடவே… தங்களுக்கு தான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டோம்.

ஆனால் நாங்கள் இருப்பது ஊருக்கே தெரியும் போது அவர்களுக்கு தான் இருப்பது.. அதுவும் எங்கு இருக்கிறோம் என்பது தெரியும் தானே… ஏன் பார்க்க வரவில்லை.. அதோடு தானுமே சோஷியல் மீடியாவில் வர கூடியவன் தான்.. இன்னார் மகன் என்பதும் அனைவருக்கும் தெரிந்தது தான்.. ஏன் என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் தன்னை பார்க்கவாவது அவர்கள் வந்து இருக்கலாமே…. பாசம் வந்த அதே சமயம். இதில் அவனுக்கு கோபமும்… அதையும் கேட்க நினைத்தான்..

பார்க்கலாம் கோபமாக கேட்கிறானா. இல்லை கேட்க முடியாத நிலையில் அவன் இருக்க போகிறானா என்பதை…. ஆனால் எது என்றாலும் அங்கு போய் ஆக வேண்டுமே என்று நினைத்தவன்..

அன்னையிடம் ஒரு வித சலிப்பை வெளிப்படுத்தினான்..

ஆனால் அவனின் தந்தையோ… “ உன்னால என் அம்மாவிடம் இருந்து உன் அம்மாவுக்கோ.. உன் தாத்தாவுக்கே. அந்த மரியாதை வாங்கி தர முடியாது தீக்ஷா…” என்று சொன்ன தந்தையின் பேச்சில் அத்தனை உறுதி தெரிந்தது….

அதை கேட்ட காவ்யா ஸ்ரீ… தன் மகனிடம்… “ பார்த்தியா பார்த்தியா….” என்று சொல்லும் போதே …

தீக்ஷேந்திரன்… “ ஏன்…. ப்பா. தாத்தா பாட்டி கூட சரி வயதுல பெரியவங்கல இருக்கலாம்…” என்று அவன் சொல்லும் போதே இடையின் காவ்யா ஸ்ரீ…

“ஏன் அப்பா இவர் அம்மாவை விட நாளு வயசு பெரியவங்க தீக்ஷா….” என்று சொல்ல…

தீக்ஷேந்திரன் மீண்டுமே தன் பேச்சின் தொடர்ச்சியாக. “ பெரியவங்க கூட பரவாயில்லை.. ஆனால் அத்தை எப்படிப்பா தாத்தாவை பெயர் வைத்து கூப்பிடலாம்… இதை பெரியவங்க கண்டிக்க மாட்டாங்கலா…” என்றும் கேட்டான். அவனுக்கு அவன் தாத்தா. அன்னையுமே முக்கியம் தானே… புது உறவை ஏற்றுக் கொள்ள துடிப்பவன். தன் பழைய உறவை எப்படி விட்டு விடுவான்.

ஆவால் ராஜேந்திர பூபதியோ மகனின் பேச்சுக்கு சத்தமாக சிரித்து விட்டார்..

சிரிப்பினிலேயே… “ என்னது வளர்ப்பு சரியில்லையா.?” என்று கேள்வியும் கேட்டவர்.. பின் தன் மனைவியிடம்.

“என்ன காவ்யா… உன் மகன் எங்க அம்மா அப்பா வீட்டு வளர்ப்பை பத்தி பேசுறார்…? “ என்று அவர் கேட்ட அந்த கேள்கியில் அத்தனை கிண்டல் மித மிஞ்சி இருந்தது..

பின் தன் மகனிடம்… “ தீக்ஷா என் பி.ஏ என் வயசு.. நீ ஏன் அவரை விவேகானந்தா என்று கூப்பிடுற… அப்போ எங்க வளர்ப்பும் சரியில்லையா என்ன….?” என்று தந்தை தன்னிடம் கேட்ட கேள்வியில் தீக்ஷேந்திரனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது….








 
Well-known member
Joined
May 12, 2024
Messages
327
Kaavya Villi ah???
Sekkizhar Neelakanda Boopathi veetla velai senjavar pola… avar than erichirukkanum…
Kaavya Rajendran ah trick panni kalyanam pannirukkanum…
 
Top