Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

மேவியமே மந்ராவின் மந்திரம்...6..1

  • Thread Author
அத்தியாயம்…6…1

வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்..

“என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை கொடுக்க… அதை பார்த்த தீக்ஷேந்திரன் சத்தமாக சிரித்தான்.

பின்… “ உன்னை நான் ரொம்ப மாத்த வேண்டி இருக்கும் போலவே….” என்று சொல்லி வினோத்தின் வயிற்றில் செல்லமாக ஒரு குத்தும் வைத்தான்..

பாவம் வினோத்திற்க்கு தான் இந்த திடிர் என்று வந்த மாற்றத்தை ஏற்க முடியாது திண்டாடி போனான்… நன்கு படித்தவன்.. ஐடியில் கை நிறைய சம்பளத்தில் வேலை செய்கிறான்… அவனை பொறுத்த வரை முன் அவர்கள் அதாவது இவனும் மந்ராவும் வேலைக்கு செல்வதற்க்கு முன்பு இருந்த பொருளாதாரத்தை விட இப்போது அவர்களின் குடும்பம் பரவாயில்லை…

இதை விட அடுத்த கட்ட நகர்வுக்கு வேலையின் மூலம் வெளிநாட்டிற்க்கு செல்வதற்க்கு முயன்று கொண்டு இருக்கிறான்..

தன் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால், அவன் வேலை பார்க்கும் அருகில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.. அதை வாங்கி விடலாம்… என்று இது போல் மெல்ல மெல்ல அவன் வாழ்க்கையில் மேல் நோக்கி செல்ல அவன் திட்டம் இட்டுக் கொண்டு இருப்பவனின் முன்..

இந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்… உன் சித்தப்பா… என்று வந்து நின்றால், அதுவும் மீடியாவின் மூலம் தீக்ஷேந்திரனின் செயல்களை எல்லாம் ஒரு வித பிரமிப்போடு பார்த்தவன்…

இன்று அவனே தன்னை கட்டி அணைத்து.. சகோதரத்துவம் உறவை வளர்த்தால், அவனால் எதையும் நம்பவும் முடியவில்லை… இந்த உறவுக்குள் முழுமையாக அவனால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..

ஒரு சமயம் இப்போது போல் தங்களின் உறவுகள் என்ன என்பது அரை குறையாக தெரியாது.. என்ன என்று முழுமையாக தெரிந்தால் தன் மனது ஏற்று கொண்டு விடுமோ… என்று நினைத்து பிரமிப்போடு நினறவனிடம் தீக்ஷேந்திரன் மீண்டும்..

“ப்ரோ எல்லாம் ஈசியா விடுங்க..அதுவா போக போக சரியாகிடும்… எனக்குமே இன்னும் முழுசா தெரியாது.. என்ன என்று தெரியலேன்னாலும்.. நீ என் ரத்த சொந்தம்.. அதுல மாற்றம் இல்லை தானே….?” என்று வினோத்திடம் கேட்டான்..

ஆம் மாற்றம் இல்லை தானே… அதனால் வினோத்தும்… “ ஆமாம்…” என்று ஒத்து கொண்டவனிடம்..

“பின் என்ன…?” என்று கேட்டவன் தன் பக்கத்தில் நின்று கொண்டு தன் பேச்சை வாய் பிளந்து கேட்டு கொண்டு இருந்த ராகவ்விடம்.

கண் காட்ட. அவனுமே இதயம் வடிவிலான இரு பூங்கொத்தை எடுத்து கொடுத்தான்.. தீக்ஷேந்திரன் முன்பே சொன்னதிற்க்கு ஏற்ப.

முதல் பூங்கொத்தை வினோத்திடம் கொடுத்தவன். அடுத்த பூங்கொத்தை தன்னையும் வினோத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்த மந்ராவிடம்..

நீட்டிக் கொண்டே… “ உன் வினோத் அத்தானிடம் சொன்னது போலவே… உன் கிட்டேயும் இத்தனை டையலாக் பேசினா தான் இதை வாங்கிப்பியா நீ….” என்று கேட்டவன் பின்…

“நானுமே உன் அத்தான் தான் வாங்கிக்கலாம்…” என்று சொன்னதுமே மந்ரா சட்டென்று அந்த பூங்கொத்து என்ன வடிவில் இருக்கிறது என்று கூட பார்க்காது அவனிடம் இருந்து வாங்கி கொண்டவள்..

“தேங்கஸ்…” என்றும் கூறினாள்.. சின்ன வயதில் இருந்து ஒருவரிடம் ஒரு பொருள் வாங்கினால் நன்றி என்று சொல்லும் வழக்கத்தில்..

அதற்க்கு தீக்ஷேந்திரனோ… “நீ வாங்கினதுக்கு நான் தான் உன் கிட்ட தேங்க்ஸ் சொல்லனும் மந்திரம்…” என்றவனிடம்.

மந்ரா… “ என் பெயர் மந்ரா….” என்று அவனிடம் திருத்தி சொல்ல.

“ஆ மந்ரா மந்ரா….” என்று அவள் பெயர் தெரியாது அழைத்து.. பின் இப்போது பெண்ணவள் சொன்னதும் தான் திருத்திக் கொண்டது போல் கூறியவன்.. பின் அவன் கண் அசைவில் அந்த பூங்கொத்து அனைவருக்கும் கொடுத்து ராஜ மரியாதையோடு தான் திரிபுர சுந்தரி குடும்பத்தினர்… தீக்ஷேந்திரனின் பங்காளாவுக்குள் பிரவேசித்தது…

இதை அனைத்துமே அந்த பங்களாவின் நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்த காவ்யா ஸ்ரீயும்.. தன் அறையில் இருக்கும் பால்கனியில் வீல் சேரில் அமர்ந்து கொண்டே பார்த்த சேக்கிழாருக்கும் சரி… இனி முன் போல் எல்லாம் நடக்குமா…? என்பது சந்தேகமாக இருந்தது..

அதுவும் சேக்கிழாருக்கு தன் பேரன் என்ன பேசினான் என்பது கேட்கவில்லை என்றாலும், பார்த்த காட்சி… திரிபுர சுந்தரியின் காலில் விழுந்தது… பின் வினோத்தை கட்டி அணைத்து கொண்டது.. கடைசியாக மந்ராவிடன் பூங்கொத்தை கொடுத்தது என்று பார்த்தவருக்கு மனது ஆறவில்லை.

தன் பேரன் இத்தனை சிரித்த முகத்துடனும் பேசுவான் என்பதையே சேக்கிழார் முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறார்….

அனைவரும் அந்த பங்களாவிற்க்குள் நுழைவதை பார்த்த சேக்கிழார் என்ன நினைத்தாரோ… தன் வீல் சேரை பிடித்து கொண்டு இருந்த செவிலியரிடம்…

“ம் சீக்கிரம் கீழே இருக்கும் ஹாலுக்கு போ….” என்று அவசரப்படுத்தினார்… அவருக்கு அவர்கள் வரும் முன் தான் அங்கு இருந்து அவர்களை வர வேற்க வேண்டும்.. இது தன் வீடு .. நீங்க இந்த வீட்டிற்க்கு வரும் விருந்தினர் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற அந்த வேகமானது முன் திரிபுர சுந்தரியை எப்படி எதிர் கொள்வது என்று தயங்கியது கூட தகர்த்து எரிந்து விட்டு அவர் ஹாலுக்கு வந்தார்…

ஆனால் பாவம்.. அவர் அவசரத்திற்க்கு மின் தூக்கி கூட சதி செய்து சிறிது நேரம் கழித்து தான் செயல் பட அதற்க்குள் வீட்டிற்க்குள் திரிபுர சுந்தரி வீட்டவர்கள் பிரவேசித்தது மட்டும் அல்லாது அங்கு இருந்த இருக்கையில் திரிபுர சுந்தரி ராஜ தோரணையாக அமர்ந்தும் கொண்டு இருந்தார்…

வீல் சேரில் சேக்கிழார் வந்தவரை பார்த்து…. “ என்ன சேக்கிழார் எப்படி இருக்க…?” என்று முன் அழைத்தது போலவே… இந்த மாநிலத்தின் முன் நாள் முதலமைச்சரை அழைத்தவரை பார்த்து சேக்கிழாரும்…

“எனக்கு என்னங்க….? ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கேனுங்க… பத்து ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டு…. இப்போ அதை என் மாப்பிள்ளை கிட்ட அந்த பதவியே கொடுத்து என்று… நான் ரொம்ப நல்லாவே இருக்கேனுங்க…..” என்று பதில் அளித்தார்..

அவர்கள் இருவரின் பேச்சிலுமே… ஏதோ மறை முக போர் நடக்கிறது என்பது இந்த பேச்சு அங்கு இருந்த அனைவருக்கும் உணர்த்தியது…

சேக்கிழாரின் இந்த பேச்சு திரிபுர சுந்தரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை தான்… அந்த பேச்சு அவர் மனதை சுருக்கு என்று தைத்தது தான்….

இருந்தும் அதை காட்டாது… “ ரொம்ப ரொம்ப சந்தோஷம் சேக்கிழார்… என் கணவர்… உனக்கு புரியனும் என்றால் உன் முதலாளி சேக்கிழார்… நீ விருப்பபட்டே என்று… இந்த கட்சியை தொடங்கி உன் கிட்ட கொடுத்தார்… உன் கிட்ட கொடுக்காம அவரே நின்று இருந்தா… இன்னைக்கு அவர் பிரதம மந்திரியாவே ஆகி இருப்பார்..அது உனக்குமே தெரியும்…

ஆனா எது எப்படி இருந்தாலுமே, என் கணவர் ஆரம்பிச்சி கொடுத்த இந்த கட்சியை அவர் வாரிசு என் மகனுக்கே நீ கொடுத்த பாரு… ரொம்ப சந்தோஷம் சேக்கிழார்..” என்று சொன்ன திரிபுர சுந்தரி சேக்கிழாரை மிதப்பான ஒரு பார்வையும் பார்த்தார்..

இப்போதும் இந்த கட்சியை ஆளுவது என் மகன் தான்… அதாவது என் வாரிசு தான்…. உன் வாரிசு கிடையாது என்பது போல் பேசியவரின் பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாது அவர் இருக்க.

அடுத்து திரிபுர சுந்தரியின் தாக்குதல் காவ்யா ஸ்ரீயின் பக்கம் சென்றது….

காவ்ய ஸ்ரீக்கு திரிபுர சுந்தரியை பார்த்ததில் இருந்து சரியாக சொல்வது என்றால், திரிபுர சுந்தரி உயிரோடு இருக்கிறார் என்பது கிடையாது… அதற்க்கு முன்பு இருந்தே, திரிபுர சுந்தரி.. என்ற பெயர் ஏதாவது பேச்சில் வந்தால் கூட.. காவ்ய ஸ்ரீக்கு மனது அடித்து கொள்ளும்… உடல் தன்னால் ஒரு உதறல் கொடுக்கும்… இந்த உதறல் இப்போது இல்லை.. அவரின் சின்ன வயது முதலே அப்படி தான்..

இன்று தன் வீட்டில் தன் எதிரில் அதுவும் முதல் முறையாக தான் பயந்து நடுங்குபவருக்கு மருமகளாக நிற்பதில் இன்னுமே அவருக்கு உதறல் எடுத்தது தான்..

இருந்தும் தந்தையின் பார்வையில் இது தன் வீடு, இன்று பயந்து நின்றால் காலத்திற்க்குமே இனி இது தொடரும்.. அதுவும் முன் போல் எல்லாம் இல்லை..

இன்று அவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள்.. தான் அவர்கள் தலை தூக்கி பார்க்கும் உச்சாணி கொம்பில் நான் நிற்கிறேன் என்று மனதில் ஆயிரம் சொல்லி கொண்டாலுமே உண்மையில் காவ்ய ஸ்ரீயின் நிலையானது….

கள்ளோடு அரசியை வாயில் போட்டு கொண்டு… துப்புவது அரசியாகவும்.. விழுங்குவது கல்லாகவும்… சரி மென்று திண்ணலாம் என்றால் கல் பல்லில் தட்டுப்படுவது போலான நிலையில் தான் காவ்ய ஸ்ரீ.. தன் மாமியாரின் எதிரில் நின்று கொண்டு இருந்தார்…

“என்ன காவ்யா… எப்படி இருக்க….? என் மருமகளா இப்போ தான் முதல் முறையா உன்னை பார்க்கிறேன் நான்….” என்று சொன்னவர்.. பின் தன் மகனையும் பார்த்தார்.

அன்னையின் பார்வையில் ராஜேந்திர பூபதி என்ன நினைத்தாரோ….காவ்யா ஸ்ரீயின் கை பற்றி திரிபுர சுந்தரியின் காலில் விழுந்து எழுந்தார்…

திரிபுர சுந்தரியும்… தான் பெரிய மனுஷி என்பதை நிருபிப்பதை போல் ஆசீர்வாதம் செய்தார் தான்..

ஆனால் அதன் பின் தன் பேரனான தீக்ஷேந்திரனை பார்த்து,.. “ உன் வயசு என்ன தீக்ஷேந்திரா….?” என்று அவனின் முகம் பார்த்து கேட்டார்..

பாட்டியின் கேள்விக்கு உண்டான காரணம் தீக்ஷேந்திரனுக்கு புரியவில்லை..ஏன் இவர்களுக்கு தெரியாதா என்ற குழப்பம் இருதாலுமே…

“இந்த மந்த் தான் தேர்ட்டி இயர்ஸ் கம்ளீட் ஆச்சி பாட்டி….” என்று அனைவரிடமும் திமிராக பேசுபவன். பாட்டியிக்கு பவ்யமாக பதில் அளித்தான்…

“ம் உனக்கே முப்பது வயடு ஆகிடுச்சி…. ஆனா பாரு உன் அம்மா அப்பா இப்போ தான் அவங்க கல்யாணம் முடிஞ்சி முதல் முறையா என் காலில் விழுறாங்க…” என்று கிண்டலாக சொன்னவர்..

பின் சேக்கிழாரை பார்த்து…. “ என்ன சேக்கிழாரா…உங்க காலில் எப்போது விழுந்தாங்க…” என்று கேட்டவர் பின் அவரே…

“முன்ன இருந்து எல்லாமே செய்தது நீங்க தானே….?” என்றும் சொன்ன அந்த எல்லாமே… என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தது…

சேக்கிழாருக்கு அந்த வார்த்தை பலமாக தாக்க….

“ பார்த்து பேசு சுந்தரி…” என்று அவர் சொன்னது தான் தாமதம்..இத்தனை நேரம் முகம் இறுக்கத்தில் தன் அன்னையின் பின் நின்று கொண்டு இருந்த மகேந்திர பூபதி…

“பார்த்து பேசு சேக்கிழார்….என்ன ஒரு தைரியம்… என் அம்மா பேர சொல்லி கூப்பிடுற… என்ன சேக்கிழார்.. பழசு எல்லாம் மறந்து போயிடுச்சா என்ன….?” என்று கேட்ட மகேந்திர பூபதி…

“உன் இந்த ஆட்சி… எல்லாம் எனக்கு முன் ஒன்னுமே இல்ல சேக்கிழா.. இது எல்லாம் என் அப்பா உனக்கு போட்ட பிச்சை…. புரியுதா. ஒரு காத்துல கோபுரத்தில் போய் உட்கார்ந்த காகிதம்.. அடுத்த காத்துல குப்பைக்கு போயிடும் சேக்கிழா…” என்று எப்பொதுமே கள்ள பார்வையோடு சுற்றி கொண்டு இருக்கும் சேக்கிழாரை பார்க்கும் போது எல்லாம் இது போல் தான் மகேந்திர பூபதி முன் கூட பேசுவார்.. முன் என்றால் பத்தாம் வயதில் இருந்தே… அதனால் தான் என்னவோ… தன் மகளுக்கு மகேந்திர பூபதி ஈடாக இருந்து,.. முதல் மகனான ராஜேந்திர பூபதியை தேர்வு செய்ததோ.. அதே போல் தான்.. தன் மகன் சிவக்குமாருக்கு கூட ஜீவிதாவின் அக்காவான மகேஸ்வரியை கேட்டது..

நீல கண்ட பூபதி யோசித்தார் தான்.. ஆனால் திரிபுர சுந்தரி தான்.. அத்தனை திமிராக…

“இந்த பேச்சுக்கே இடம் இல்லை.. எப்போது என் வீட்டு பெண்ணை பெண் கேட்டியோ… இனி உன் வீட்டு பையன் என் வீட்டுக்குள் வரக்கூடாது.. அதே போல் எது என்றாலும் என் கணவரோடான பேச்சு வெளியில் வைத்து கொள் சேக்கிழார்….”

இன்றே திரிபுர சுந்தரி. இத்தனை கம்பீரமாக பேசும் போது.. அன்றைய திரிபுர சுந்தரி. வயது… வசதி.. ஊரே மதிக்கும் நீல கண்ட பூபதியே மதிக்கும்.. திரிபுர சுந்தரியின் பேச்சு எப்படி இருந்து இருக்கும்…

ஆம் சேக்கிழாருக்கு தன் மகனை மகிக்கு முடித்து விட்டு மகளை ராஜேந்திர பூபதிக்கு கொடுக்கும் எண்ணம்.. அன்று பெண் கேட்டாரே… அப்போது வந்தது கிடையாது..

தன் இரு பிள்ளைகள் பிறந்த போதே…. அந்த எண்ணம் அவர் மனதில் ஆரம்பித்து விட்டது…

போக போக. நீல கண்டனின் சொத்து பெயர். மரியாதை கூட கூட தனக்குமே அது கிடைக்க வேண்டும் அன்ற ஆசையை விட பேராசை அவர் மனதில் துளிர்த்து பின் வளர ஆரம்பித்து விட்டது.

தன் மகன் சிவக்குமார் வெளிநாட்டு படிப்பு படித்து விட்டு இந்தியாவுக்கு வந்த போது மகனின் ராஜ தோற்றத்தில், படிப்பு கொடுத்த வேலை.. அதில் கிடைத்த வருமானம். அதுவும் அப்போது எல்லாம் வெளி நாட்டு படிப்பு என்றால் அத்தனை மதிப்பு… அதை வைத்து பெண் கேட்டால் கொடுத்து விடுவார் என்று சேக்கிழார் தப்பு கணக்கு போட்டு விட்டார்..

ஆனால் திரிபுர சுந்தரி… மகன் என்ன இனி மகளுக்கு கூட இங்கு சம்பந்தம் செய்ய முடியாத அளவுக்கு சொல்லி விட அன்று சேக்கிழார் போட்ட திட்டம் தான்…

ராஜேந்திர பூபதி படிக்க வெளி நாட்டுக்கு சென்ற போது நீல கண்டன் அந்த முறை திரிபுர சுந்தரி எதிரில் இல்லாது..

திரிபுர சுந்தரி சொன்னது போல் எது என்றாலும் இந்த வீட்டு வெளியில் பேசிக் கொள் என்று சொன்னது போலவே… சேக்கிழார் நைச்சியமாக ராஜேந்திர பூபதி படிக்க சென்ற நாட்டிற்க்கே தன் மகளையும் அனுப்பி வைத்தார்.

ஆம் சேக்கிழார் மகனுக்கு முறையாக வீட்டில் பேசியது தான் முடியாது போய் விட்டது…. திரிபுர சுந்தரி முடியாது என்று சொன்ன ஒரு விசயத்தை நீல கண்ட பூபதி இனி அதை பற்றி யோசிக்க கூட மாட்டார் என்பது… இத்தாய் வருடங்களாக நீல கண்டன் பூபதி கீழ் வேலை பார்த்த சேக்கிழாருக்கு தெரியும்..

அது என்னவோ ஊரே நீல கண்ட பூபதியின் பேச்சை கேட்டு நடக்க… நீல கண்ட பூபதியோ… தன் மனைவியான திரிபுர சுந்தரியின் பேச்சை கேட்டு தான் நடப்பார்…

மனைவியின் பெயர் சொல்லி கூட நீல கண்டன் அழைத்து யாரும் பார்த்தது கிடையாது.. தாயி… இந்த அழைப்பு தான்…. அதனால் இனி முறையாக முயன்றால் வேலைக்கு ஆகாது… தன் ஒரு கனவான தன் மகனை நீல கண்டனுக்கு மருமகனாக்க தான் முடியவில்லை….

மகளையாவது அவருக்கு மருமகளாக்கும் முயற்ச்சியாக நீல கண்டனிடம் தனித்து தான் பேசாது மகளை பேச விட்டார்…

எப்போதும் படிப்புக்கு முக்கியத்துவம்.. “மாமா அமெரிக்கா போய் படிக்க அப்பா கிட்ட கேட்டேன் மாமா.. ஆனா அப்பா அதுக்கு எல்லாம் என் கிட்ட வசதி இல்ல.. என்று சொல்லிட்டாரு மாமா..” என்று காவ்யா ஸ்ரீ சொன்னதும்..

படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீல கண்ட பூபதி… காவ்யா ஸ்ரீயிடம்… “ நான் உன்னை படிக்க வைக்கிறேன் ம்மா…” என்று சொல்ல.

சேக்கிழாருக்கு இது மட்டும் போதாதே… அவர் என்ன உண்மையில் மகள் வெளிநாட்டில் படித்து வேலை பார்க்கவா அவனுப்புவது.. அவர் மகளை வெளி நாட்டிற்க்கு அனுப்பும் விசயமே வேறு ஆச்சே…

அதனால் சேக்கிழார் அவர் நினைத்த விசயம் நடக்க வேண்டி…. “ பணம் நீங்க கொடுத்து விடுவிங்க முதலாளி… ஆனா பாதுகாப்பு…. பொம்பளை பிள்ளையை அவ்வளவு தூரம் அனுப்பி வைத்து விட்டு… இங்கு நானும் இவள் அம்மாவும் வயித்துல நெருப்பையா கட்டிட்டு இருக்க முடியும்.. சொல்லுங்க… இவள் அண்ணன் ஆம்பிள்ளை பிள்ளை பயம் இல்ல… வெளி நாட்டில் படிக்க ஆசைப்பட்டான்… நீங்களும் அனுப்பி படிக்க வெச்சிங்க… ஆனா இவள் பொம்பிள்ளை பிள்ளை ஆச்சே நாளையும் தானே யோசிக்க வேண்டி இருக்கு…” என்று சேக்கிழார் சொல்லவும்….

உடனே நீல கண்ட பூபதி… “ அதுக்கு என்ன சேக்கிழா…. என் மகன் படித்த காலேஜிலேயே படிக்க வைக்கலாம்.. என் மகன் இருக்கும் இடத்துக்கு பக்கமாவே… உன் மவளையும் தங்க வைத்து விடலாம்… உன் மகளை பாத்துக்க வேண்டிய பொறுப்பு என் மகனுடையது…. “ என்று நீல கண்ட பூபதி அன்று சேக்கிழாருக்கு கொடுத்த அந்த வாக்குறுதி தான்…

நாளை தான் மட்டும் அல்லாது தன் இரண்டு மகளை தீக்கு இரையாகவும் தன் கடைசி பெண் அந்த வீட்டின் கடை குட்டி என்று கொண்டாடும்.. ஜீவிதாவையும் சின்னா பின்னாம்மாக்க போகிறது என்று தெரியாது காரணமாக அமைய போகிறது என்று தெரியாது போய் விட்டது….

ஒரு நபருக்கு ஆளுமையும்… பண பலமும். மக்கள் செல்வாக்கும் மட்டும் இருந்தால் மட்டும் போதாது.. ஒரு சில தந்திரமும் தெரிந்து இருந்து இருக்க வேண்டும்…. அது தெரியாது சேக்கிழார் விரித்த வலையில் அன்று நீல கண்ட பூபதி விழுந்து விட்டார்..

என்றும் போல் அன்றும் வீடு வந்து நீல கண்ட பூபதி.. அன்று இரவு தனிமையில் தன் மனைவியிடம் ஒன்று விடாது பேச.. பேசிய விசயத்தில் காவ்யா ஸ்ரீ படிப்பு விசயமும் வந்து விட்டது…

திரிபுர சுந்தரி உடனே…. “ நீங்க படிக்க வைக்கிறிங்க என்று சொல்லிட்டிங்கலா அத்தான்….?” என்று பதட்டமாக கேட்டார்….

“என்ன தாயி… ஏன் இந்த பதட்டம்…?” என்று கேட்டதற்க்கு ஒன்றும் சொல்லாது கணவன் முகத்தை பார்த்தார் அன்று திரிபுர சுந்தரி….








 
Well-known member
Joined
Jun 23, 2024
Messages
205
திரிபுர சுந்தரி 🤩🤩🤩🤩

சேக்கிழார் எவ்வளவு கேவலமா பிளான் போட்டு பொண்ணை கட்டி வச்சிருக்க 😑😑😑😑😑😑😑

மகேந்திரன் 🥳🥳🥳🥳🥳 வார்த்தைக்கு வார்த்தை ஒருமையில் கூப்பிடுறாரு 🤓🤓🤓தீஷேந்திரன் ரியாக்சன் எப்படி இருக்கும் 😏 😏 😏 😏
 
Last edited:
Well-known member
Joined
Jun 1, 2024
Messages
217
கூட இருந்தே குழி பறிச்சுருக்காரு சேக்கிழார் எவ்வளவு கேவலமா திட்டம் போட்டு வேலை பார்த்துருக்காரு 🤬
 
New member
Joined
Jun 14, 2024
Messages
8
இந்த சேக்கிழார் கிழவனுக்கு பேரன் கையால் தான் பாவத்தின் சம்பளம் கிடைக்கும்.
 
Well-known member
Joined
May 12, 2024
Messages
327
Adappavi… plan pottu than ellam senjirukkan…
Jeewitha valkaiya nasamakkinathu Antha Siva Kumar ah?
 
Top