அத்தியாயம்..6.2
தம்பதியர்களின் வாழ்வில் உடல் மட்டும் அல்லாது உள்ளமும் தெரிந்து வாழ்பவர்களுக்கு தன் இணை வாய் மொழியாக சொல்லாத போதே கண் பார்வையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்து விடுமாம்…
அது போல் தான் அன்று நீல கண்ட பூபதி தன் மனைவியின் பார்வையில் தான் காவ்யா ஸ்ரீயை படிக்க வைப்பது பிடிக்கவில்லை என்பது புரிந்து கொண்டவர்..
மனைவியின் கையை பிடித்து கொண்டவர்… “ தாயி உனக்கு ஏன் சேக்கிழாரை பிடிக்கவில்லை என்று தெரியல தாயி… அவன் அப்பன் முப்பாட்டான் காலத்தில் இருந்தே அவங்க நம்ம நம்பி தான் இருக்காங்க.. ..நாம தானே அவங்களுக்கு எல்லாம் செய்து கொடுக்கனும்…” என்ற கணவனின் பேச்சுக்கு..
திரிபுர சுந்தரி…. “ இடம் கொடுத்தால் நம்ம படுக்கையில் இடம் கேட்க கூடாதுங்க மாமா….”
திரிபுர சுந்தரிக்கு தன் மகளை சேக்கிழார் அவர் மகனுக்கு கேட்டதை நினைத்தால் இன்னுமே மனது ஆறவில்லை.. அதை வைத்து இப்படி திரிபுர சுந்தரி சொல்ல…
அதற்க்கு நீல கண்ட பூபதி… “ சேக்கிழார் அவன் அப்பன் போல இல்ல தான் தாயி… எனக்கு தெரியும்… கொஞ்சம் ஆசைப்படுவான் அது… அது தவறு ஒன்றும் இல்லையே….. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்க்கு போக பார்க்கிறான்… ரொம்ப திறமையானவன்.. அதே போல் தான் அவங்க பிள்ளைங்களும் நல்லா படிக்குதுங்க….
ஒரு ஆணை படிக்க வைக்கிறதோட ஒரு பொம்பிள்ளை பிள்ளையை படிக்க வைத்தால், அந்த குடும்பமே உயரும் தாயி… அதோடு பணமா ஒருத்தவங்களுக்கு கொடுக்கிறதை விட.. ஒருத்தவங்களை படிக்க வைத்தால் அத்தனை புன்னியம் சொல்லுவாங்க… அது படி பார்த்தால் அந்த பெண்ணை படிக்க வைக்கிறது ஒரு குடும்பத்தை படிக்க வைக்கிறதுக்கு சமம்.. அந்த புன்னியம் நம்ம குடும்பத்துக்கு தானே தாயி… சொத்து பத்து எல்லாம் என் அப்பன் பாட்டன் முப்பாட்டான் என்று எல்லாம் சேர்த்து வைத்து போயிட்டாங்க… என் வழிக்கு நான் புன்னியம் சேர்க்கிறேன் தாயி….” என்ற கணவனின் பேச்சில் அன்று திரிபுர சுந்தரிக்கு அத்தனை ஒரு பெருமை..
யார் இப்படி நினைப்பார்கள்… அதில்… “உங்க விருப்பங்க.. அதோடு நீங்க ஒரு வாக்கு கொடுத்துட்டு.. நான் வேணா என்று சொல்லி விடுவேனா …” என்று சொன்ன மனைவியின் முகத்தை பற்றி கொண்ட நீல கண்ட பூபதி.
“எனக்கு தெரியும் தாயி.. எனக்காக உனக்கு பிடிக்கலேன்னானும்.. நீ ஒன்னும் சொல்ல மாட்டேன்னு…. ஆனா என் தாயி மனம் வாடுனா எனக்கு பிடிக்காதும்மா… இனி எது செய்யிறது என்றாலும்.. என் வீட்டம்மா கிட்ட கேட்டுட்டு தான் செய்யுவேன் என்ன..” என்று சொன்னவர் அதன் பின் அவர் சொன்னதை மீறவில்லை தான்.
ஆனால் நீல கண்ட பூபதி முன் செய்த செயலின் விளைவு.. அமெரிக்காவில் செடியாகி மரமாகி பூ பூத்து காய் காய்த்து… அது பழமாகும் ஆகி தன் குடும்பத்தை குலைக்க போகிறது என்றும்….. தெரியாது… அமெரிக்காவில் ராஜேந்திர பூபதி அமெரிக்காவுக்கு வந்த காவ்யா ஸ்ரீயை தான் படித்த கல்லூரியில் சேர்த்து இடம் பார்த்து என்று அனைத்துமே தன் தந்தையின் பேச்சுக்கு செய்து முடித்தான்..
ஆனால் இதில் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஏன் சேக்கிழாருக்கு கூட தெரியாத ஒரு விசயம் என்ன என்றால் ராஜேந்திர பூபதிக்கு காவ்யா ஸ்ரீயை சின்ன வயதில் இருந்தே பிடிக்கும்… பெண் படித்து முடிக்கட்டும்… அன்னை தந்தையிடம் சொல்லி பெண் கேட்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தான்..
ஆனால் அதற்க்கும் முன் சேக்கிழார் தன் மகனுக்கு தன் பெரிய தங்கையை கேட்ட போது… தன் அன்னை தந்தை சொன்ன மறுப்பில், ராஜேந்திர பூபதி தன் விருப்பத்தை நெஞ்சோடு வைத்து கொண்டான்..
என்ன தான் குடும்பம் என்று அவன் மனது முன் நிறுத்தி அவன் அந்த முடிவை எடுத்து இருந்தாலுமே, காதல் தோல்வி… அதுவும் தான் காதல் கொண்ட பெண்ணிடம் கூட தன் விருப்பதை சொல்லாதது… இத்தனை பணம் இருந்தும் என்ன என்று நினைத்தவன். கூடபே தன் காதலை மறக்க தான் வெளிநாட்டிற்க்கு படிக்க வந்தது.
படித்து முடித்த பின் அங்கேயே ஒரு வேலையிலும் சேர்ந்து கொண்ட போது தான் தந்தை காவ்யா ஸ்ரீயும் படிக்க வருகிறாள் என்று சொன்னது..
ஏனோ தான் காவ்யாவை மறக்க இங்கு வந்தேன்.. இங்கும் அவள் வருகிறாள் என்றால், எனக்கு இவள் தானோ… காதல் கொண்ட மனது இப்படி தான் நினைக்க வைத்தது…
அவன் காதலுக்கு வலு கூட்டுவது போல் காவ்யாவுக்கு அனைத்தும் செய்யும் போது பெண் தன்னை பார்க்கும் அந்த பார்வ… கிறங்கி தான் போனான்.. பின் என்ன காதல்.. அதன் பின் திருமணம்…
ஆம் திருமணம் தான்… ராஜேந்திர பூபதி வீட்டில் சொல்லி இந்தியாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் சொன்னது..
ஆனால் மகள் காதல் தெரிந்து இங்கு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சேக்கிழார் நியாயஸ்த்தன் போல்…
“உங்க தங்கையை என் மகனுக்கு கேட்டேன்… உங்க வீட்டில் முடியாது என்று சொல்லிட்டாங்க தானே…. எந்த நம்பிக்கையில் நீங்க உங்க அப்பா அம்மா உங்க கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க என்று சொல்றிங்க..
படிக்க வந்த மகளை ஆசை காட்டி ஏமாத்த நினைக்கிறிங்க… பூபதி குடும்பம் வாக்கு தவற மாட்டிங்க என்று நினச்சேன்.. ஆனா நீங்க என் மகள் கிட்ட கொடுத்த வாக்கை காத்துல பறக்க விட பார்க்கிறிங்க…” என்று சொல்லி அவரே அங்கு திருமணம் செய்து வைத்து விட்ட பின் தான் இந்தியா திருமினார்…
பின் அவரின் அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று கொண்டு இருந்தார்.. நீல கண்ட பூபதி… ஏன் திருபுர சுந்தரி கூட மகள் தனியாக இருக்கிறாள்.. அதனால் சென்று வருகிறார் என்று தான் நினைத்தார்கள்.. இதனுடன் மகன் சிவக்குமாரும் அமெரிக்காவில் வேலை கிடைத்து விட.. ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து அமெரிக்காவுக்கு சேக்கிழார் அனுப்பியதால், மகனும் அங்கு தானே இருக்கிறான்..
அதனால் தான் மனைவியோடு அவ்வப்போது சென்று வருகிறார் என்று நினைத்து விட்டனர்.. ஆனால் இதில் மகேந்திரன் மட்டும்… ஏதோ இருப்பது போல் அனைவரும் இருக்கும் போது சொல்லுவான்..
ஜீவிதாவுமே.. “எங்க பணம் அமெரிக்காவுக்கு தாரை வார்க்கனும் என்று இருக்கு போல..” என்று சொல்லுவாள்..
அவளுக்கு ஏனோ சேக்கிழார் குடும்பத்தை பார்த்தால் பிடிக்காது…. தங்களிடம் அதிகம் சுரண்டு கிறார்களோ என்று நினைப்பாள்…
இங்கு இந்தியாவில் நீல கண்ட பூபதி அவர் வழிக்கு சேக்கிழாரை வளர்த்து விட ஆரம்பித்து விட்டார்…
அவர் ஊரில் நீல கண்ட பூபதி பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அது மக்களிடம் மட்டும் தான்… என்பது முதல் முறையாக தங்கள் ஊரில் ஒரு தொழிற்சாலை ஆரம்பம் ஆகும் போது நீல கண்ட பூபதி அரசாங்கத்திடம்.
“இது விவாசாய பூமி… இங்கு தொழிற்சாலை கட்ட கூடாது…” என்று தன் பலம் கொண்டு பணம் அத்தனை செலவு செய்தும் அது முடிவது போல் காணும்..
அப்போது தான் சேக்கிழார் என்று ஆலோசனை கூறியது… அது… “ ஐய்யா நான் சொல்றேன் என்று தப்பா நினைக்காதிங்க… உங்க பேச்சு எல்லாம் நம்ம ஊர் வரை தான் எடுப்படுதுங்க ஐய்யா.. உங்க பேச்சை எல்லா ஊரும் கேட்கனும் என்றால், நீங்க அரசியலில் இருந்தா தான் சரி….” என்று சொல்ல..
நீல கண்ட பூபதியும்.. “ அப்படியா சொல்ற.. சரி யோசிக்கிறேன்..” என்று சொன்னவர்..
பின் எப்போதும் போல் நீல கண்டன் அன்று இரவு தன் மனைவியிடம் அதை சொல்ல. அது என்னவோ திரிபுர சுந்தரிக்கு இந்த அரசியல் எல்லாம் வேண்டாம் என்ற எண்ணம்..
அதனால்…” நீங்க அரசியலுக்குள் போகாதிங்க மாமா….” என்று சொல்லி விட.
“சரி நம்ம ஆளை நான் நிற்க வைக்கிறேன்…” என்று சொன்னவரிடம். “ம் சரிங்க மாமா.. ஆனா நீங்க நிற்க கூடாது…. “ என்று விட்டார்…
அது யாரை என்று திரிபுர சுந்தரியும் கணவனிடம் கேட்கவில்லை.. கேட்டு இருந்தாலுமே நீல கண்ட பூபதி இன்னார் என்று சொல்லி இருக்க முடியாது தான். ஏன் என்றால் அப்போது யாரை முன் நிறுத்துவது என்று அவரே முடிவு செய்யவில்லை.
பின் தான் சேக்கிழாரின் சாதுர்யமான பேச்சில் நீல கண்ட பூபதி மீண்டும் அவரின் வலையில் விழுந்தது…
பின் என்ன அடுத்து வந்த தேர்தலில் நீல கண்ட பூபதியின் செலவில் தனி கட்சி ஆரம்பித்தார்…சேக்கிழார் தான் அந்த கட்சிக்கு தலைவராக நிறுத்தினார்…
அப்போதும் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை தான்.. மற்ற கட்சியும் நீல கண்ட பூபதியின் செல்வாக்கு தெரியாது சேக்கிழார் நிற்பதை மட்டும் பார்த்து விட்டு அதை பெரியதாக எடுத்து கொல்ளவில்லை..
ஆனால் நீல கண்ட பூபதி தன் ஊர் மக்களிடம்…
சேக்கிழாரை கை காட்டி.. “என் மீது மதிப்பு மரியாதை வைத்து இருப்பது உண்மை என்றால், இவரை ஜெயிக்க வைக்கனும்…” என்று நீல கண்ட பூபதி சொன்ன அந்த ஒரு வார்த்தை சேக்கிழாரை எதிர்த்து நின்ற வேட்பாளரை டெப்பாசிட் இழக்க செய்து… சேக்கிழார் அமோக வெற்றி பெற்றார்….
அமெரிக்காவிலோ… ராஜேந்திர பூபதி மனைவி மகன்.. என்று குடும்பமாக வாழ ஆரம்பித்து இருந்தாலும், அவரால் முழுமையாக வாழ முடியவில்லை என்பது தான் உண்மை… ( முப்பது வருடங்கள் முன் கை பேசி கிடையாது)
வாரம் ஒரு முறை தன் வீட்டவர்களிடம் பேசும் போது… அவனால் சரியாக பேச முடியவில்லை…
திரிபுர சுந்தரி தான்… அவ்வப்போது… “ என்ன விசயம் ராசா…” என்று கேட்பார்….
அதற்க்கு… “ஒன்னும் இல்லேம்மா உங்க எல்லார் நியாபகம் தான்…” என்று ராஜேந்திர பூபதி சொன்னால்,
“அப்போ வந்துடு ராசா… பணம் என்ன நமக்கு குறையா…. அது இருக்கு ஏகப்பட்டது…” என்று சொன்னால்,
அதற்க்கு மட்டும் ராஜேந்திர பூபதி… “ இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ம்மா…” என்று சொல்லி விடுவார்….