Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்.... அத்தியாயம் 1

  • Thread Author
அத்தியாயம்…1

அந்த இரவு நேரத்தில் இது இரவா…? பகலா…? என்று நினைக்கும் படியான ஒரு இடமாக இருந்தது சென்னையின் மைய்யப்புள்ளியில் அமைந்திருந்தது அந்த கூடலகம்..(NIGHTCLUB)

கண்ணாடியில் கட்டப்பட்ட மாளிகையா …? இது என்று சந்தேகம் கொள்ளும் படியாக சுற்றிலுமே கண்ணாடி பொருத்தப்பட்டு மண்ணுலகத்தில் விண்ணுலகம் ஆக்க முயற்ச்சி செய்தது போலான ஒரு ஒரு இடமாக தான் அந்த கூடலகம் வடிவமைக்கப்பட்டு இருந்தது..

வயது வித்தியாசம் இல்லாது தன்னை மறந்து நடனமாடி கொண்டு இருந்தவர்களின் மனதில் இது சொர்க்கமா என்று எண்ணும் படியான ஒரு சூழல் தான் அங்கு நிலவிக் கொண்டு இருந்தது..

பாவம் அங்கு மது போதையில் ஆடிக் கொண்டு இருப்பவர்களுக்கு தெரியாது.. இந்த தற்கால சொர்க்கம் தான் நாளை நரகத்திற்க்கு வழி வகுத்து கொடுக்கும் என்பது…

நம் மக்கள் மது உடல் நலனை கெடுக்கும் என்று எழுதி இருந்தாலுமே, அதை குடித்து தன்னையும் கெடுத்து கொண்டு தன் குடும்பத்தையும் கெடுத்து கொண்டு தானே இருக்கிறார்கள்…

சொல்ல தான் முடியும்.. கையை பிடித்து தடுத்து நிறுத்தவா முடியும்.. இந்த தத்துவத்தை தான் இந்த கூடலகத்தின் உரிமையாளனும்… நம் கதையின் நாயகனுமான குருமூர்த்தி தன் தந்தையிடம் அடிக்கடி சொல்வது…

அவனின் கூடலகத்திற்க்கு பதினெட்டு வயது குறைந்தவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை… என்னால் செய்ய முடிந்தது இது தான்…

பதினெட்டு வயது முடிந்தவர்கள் நான் கெட்டு சீர் அழிந்து தான் தீருவேன் என்று கொழுப்பு எடுத்து கொண்டு பணம் இருக்கும் திமிரிலும் , அதிகார வர்க்கத்தின் வாரிசுகள் இங்கு வந்தால்…

“நீ இங்கு வராதேப்பா. இது எல்லாம் கெட்ட பழக்கம்…” என்று புத்தி சொல்லி அனுப்ப நான் என்ன மடமா நடத்துக்கிறேன்….? இப்போது எல்லாம் ஒரு சில மடத்திலேயே எல்லாம் எல்லா வேலைகளும் நடக்கிறது ப்பா…”

ஓரு சில சமயம்… அவனின் தந்தை கிருஷ்ண மூர்த்தி.. “வெளிநாட்டுக்கு எல்லாம் போய் படிச்சிட்டு வந்தது… இந்த கருமத்தை வைத்து நடத்த தானா…? ஊருல இருக்கிறவங்களை எல்லாம் கெடுக்க உங்க மாமன் காரனுக்கு துணையா நீ இதை வைத்து நடத்துறியா..?

“உன் மாமனின் வளர்ப்பு தானே நீ.. இப்படி தான் நீ இருப்ப…” என்று சொன்னவர் ஒரு ஐ.ஏ .எஸ் அதிகாரி… சென்ற வருடம் தான் வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்…

தந்தை இப்படி சொன்னால் , மகனோ.. கூடுதலாக இதுவும் சொல்லுவான்..“ஆமாம் பா… நான் என் மாமா விசுவநாதன் வளர்ப்பு தான்.. இன்னும் கேட்டால் என் ரோல் மாடலே அவர் தான்.. “

குருமூர்த்தி சொல்வது போல அவனின் ரோல் மாடலே அவனின் தாய் மாமன் விசுவந்தாதன் தான்… அவன் மாமனை போலவே அச்சு அசலாக தான் குருமூர்த்தி இருப்பான்..

ஆறடிக்கும் மேல் வளர்த்தியான உயரத்தில், தன் மாமம் தினம் செய்யும் உடற்பயிற்ச்சியை பார்த்து வளர்ந்ததால், அவனுக்குமே தினம் தோறும் தவறாது செய்த உடற்பயிற்ச்சியில் எய்ட் பேக் கட்டிளம் காளையாக பார்க்க அப்படியே மாடல் போல் காட்சி அளிப்பான்..

என்ன ஒன்று இவனின் மாமன் எப்போதும் வெள்ளை வேஷ்ட்டி வெள்ளை சட்டை மட்டுமே உடுத்துவது..

ஆனால் குருமூர்த்தி அவனின் இருபத்தி ஒன்பது வயதிற்க்கு ஏற்றது போல உடையில் என்ன ரகம் இருக்கிறதோ அத்தனை ரகத்தையும் உடுத்தி தன்னை அழகுப்படுத்தி கொள்வான்…

ஆனால் வீட்டில் ஏதாவது விசேஷம்… இல்லை கோயில் செல்வது என்றால் அவனின் மாமனை போல வேஷ்ட்டி சட்டையில் தான் போவது…

அப்படி இருவரும் ஒன்று போல உடையணிந்து சேர்ந்து பார்ப்பவர்கள் கண்ணுக்கு மாமன் மருமகன் போல தெரிய மாட்டார்கள்… தந்தை மகன் போல தான் தெரிவார்கள்..

மற்றவர்களின் கண்ணுக்கு தெரிவது போல விசுவநாதன் குருமூர்த்திக்கு தந்தையானவன் கிடையாது.. அதற்க்கு மேல் தயானவன் என்று சொன்னால் சரியாக இருக்கும்…

இவனின் தாய் இவன் மூன்று வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்…

தாய் இறந்ததும் தந்தை தான் அந்த தாய் ஸ்தானத்தை எடுத்து கொள்வர்.. ஆனால் குருமூர்த்தியை பொறுத்த வரை… அவன் தாய் மாமன் தான் அவனுக்கு தாயாக இருந்தார் என்று சொன்னால் அது மிகை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதற்க்கு என்று குருமூர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்தி கெட்டவர் என்றோ.. அவர் தன் பொறுப்பை செய்யவில்லை என்றோ சொல்லி விட முடியாது.

அது என்னவோ… கிருஷ்ண மூர்த்திக்கும், விசுவநாதனுக்கும் எந்த ஒரு விசயம் என்றாலுமே இருவருக்குள்ளும் முட்டிக் கொள்ளும்… மாமனும் மச்சானும் ஒரு இடத்தில் ஒன்றாக இருந்து யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.. அந்த அளவுக்கு ஒற்றுமை அவர்களுக்குள்..

கிருஷ்ண மூர்த்திக்கும், விசுவநாதனுக்கும் உண்டான இந்த பிரச்சனை விசுவநாதன் தங்கையும், கிருஷ்ண மூர்த்தியின் மனைவியுமான மஞ்சுளா இறந்ததினால் உண்டானது கிடையாது..

ஆரம்பித்தில் இருந்தே இவர்களுக்கு ஆகாது.. இன்னும் கேட்டால் கிருஷ்ண மூர்த்தியின் தங்கை பத்மாவை தான் விசுவநாதன் திருமணம் செய்து கொண்டது.. அதாவது பெண் கொடுத்து பெண் எடுத்தது..

இதையும் தான்டி இந்த திருமணம் பந்தத்தினால் இவர்கள் மாமன் மச்சான் ஆவதற்க்கு முன்னவே மாமன் மச்சான்கள் தான்.. அதாவது சொந்த மாமன் அத்தை மக்கள் தான் இவர்கள்..

இத்தனை சொந்தம் இருந்துமே இருவரும் ஒருவர் வட துருவம் என்றால், இன்னொருவர் தென் துருவத்தில் தான் நிற்ப்பர்…

அதற்க்கு காரணம் இருவரும் செய்யும் வேலையாக கூட இருக்கலாம்.. கிருஷ்ண மூர்த்தி மதிக்கதக்க ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னும் இன்று இல்லாத பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்கும் ஒரு சேவையை செய்து கொண்டு இருக்கிறார்..

விசுவநாதனோ… டாஸ்மார்க் கடையை எடுத்து நடத்துபவர்… கிருஷ்ண மூர்த்தி தன் பதவி காலத்தில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காது தன் பணியை திறம் பட முடித்தவர்… அதற்க்கு அவருக்கு அரசாங்கம் கொடுத்த பரிசு. ஒரு வருடம் தொடர்ந்தார் போல ஒரு இடத்தில் பணியில் அவரை நிற்க வைக்க மாட்டார்கள்…

குருமூர்த்தி தன் தந்தையோடு தன் தாய் மாமனிடம் நெருக்கமாக இருக்க.. கிருஷ்ண மூர்த்தியின் இந்த பதவியினால் கூட இருக்கலாம்… அப்படி கிருஷ்ண மூர்த்தி ஒரு நியாயமான அரசாங்க அதிகாரி என்றால்,

நம் விசுவதாதன் இருபத்தி ஐந்து வயதில் ஒரு கடையாக இருந்த அவரின் மதுபான கடை.. இன்று பல்கி பெருகி.. எழுபதுக்கும் மேல் வந்து நிற்க்கிறது..

விசுவநாதனுக்கு தங்கை என்றால் அப்படி ஒரு பாசம்.. அதனால் தான் பிரிய கூடாது என்று… பக்கம் பக்கம் இடம் வாங்கி அந்த பங்களா கட்டியது… அதுவும் அடையாறில் அவ்வளவு பெரிய இடம் தங்கைக்கு வாங்கி தந்து தன்னை விட பெரிய பங்களா தங்கைக்கு கட்டி கொடுத்து உள்ளார் என்றால், அவரின் பாசமும் அந்த அளவுக்கு பெரியது தான்.

தங்கை மஞ்சுளா இறந்ததும். மனிதன் ஆடி தான் போய் விட்டார்.. ஆனால் தன் தங்கை சாகும் போது தன் கையில் பிடித்து கொடுத்த அவளின் மகன் குருமூர்த்திக்காகவே தன் தங்கையின் மறைவை தாங்கி கொண்டவர்..

அதோடு வேறு பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டால், தன் தங்கை மகன் மீது இத்தனை பாசத்தை காட்ட அவள் தடையாக இருப்பாள் என்று தான் கிருஷ்ண மூர்த்தியின் தங்கையை விசுவநாதன் திருமணம் செய்து கொண்டது..

விசுவநாத்தின் அந்த மதுகடை அப்போதே ஒன்றில் இருந்து ஏழாக வளர்ந்த அந்த சமயத்தில், தன் தங்கையை விசுவநாதனுக்கு திருமணம் செய்ய கூடாது…என்று அவ்வளவு மறுத்துமே அப்போது உயிறோடு இருந்த கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர்…

“மாப்பிள்ளை நம் பேரன் நல்லதுக்கு தான் சொல்றார்.. நீ என்ன இப்படி செய்யிற. தொழிலையும் குடும்பத்தையும் இணைக்காதே கிருஷ்ணா.” என்று சொல்லியும்..

கிருஷ்ண மூர்த்திக்கு தன் தங்கையை விசுவாதனுக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லாது தன் தங்கை தாமரையிடம் பேசினார்..

ஆனால் தங்கையின் பேச்சில் இருந்து அவர் புரிந்து கொண்டது… தனக்கு தான் விசுநாதனை பிடிக்கவில்லை… தங்கைக்கு அவனை மிகவும் பிடித்து இருக்கிறது என்பதை..

தன் வாழ்க்கை தான் இப்படி ஆனது,. தங்கையாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று கிருஷ்ண மூர்த்திக்கு பிடித்தம் இல்லாத போதும் தன் தங்கையை விசவநாதனுக்கு திருமணம் செய்து வைத்தார்..

இப்படி உறவில் இருந்து வீடு வரை பக்கம் பக்கம் அமைந்து விட.. குருமூர்த்திக்கு தாய் இல்லாத போதும், எந்த குறையும் இல்லாது தான் வளர்ந்தான்..

ஒரு விசயம் சொல்லியே ஆக வேண்டும்.. கிருஷ்ண மூர்த்திக்கு தான் விசுவநாதனை பிடிக்காது.. ஆனால் விசுவநாதனுக்கு கிருஷ்ண மூர்த்தியை மிகவும் பிடிக்கும். தன் தங்கைக்கு பிடித்த அனைத்துமே விசுநாதனுக்குமே பிடிக்கும்..

தான் திருமணம் செய்து கொண்டு மனைவியோடு சந்தோஷமாக வாழும் போது கிருஷ்ண மூர்த்தி தனித்து இருப்பதில், ஒரு நாள்…

“குருவை நான் பார்த்து கொள்கிறேன்.. நீங்க இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளுங்க மச்சான்..” என்றும் சொல்லி இருக்கிறார்.. அதற்க்கு கிருஷ்ண மூர்த்தி அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டார்…

அது என்னவோ.. அவருக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாது மகனே வாழ்க்கை என்று வாழ்ந்தவருக்கு மகன் கூட தன் பேச்சை கேட்பதை விட. அவன் மாமன் பேச்சை கேட்டு நடப்பதில் துளி கூட விருப்பம் கிடையாது..

அதுவும் மகன் தன் மாமனை ஒரு நாயகன் அளவுக்கு மனதில் ஏற்றி வைத்து இருப்பவனிடம் சின்ன வயது முதலே கிருஷ்ண மூர்த்தி எத்தனையோ முறை திட்டி இருக்கிறார்.. ஆனால் அதை எல்லாம் குருமூர்த்தி காதில் போட்டு கொள்வது இல்லை..

அதற்க்கு என்று குருமூர்த்திக்கு தந்தையை பிடிக்காது என்பது எல்லாம் கிடையாது.. அவர் மீது அத்தனை மரியாதை வைத்து இருக்கிறான்… இந்த காலத்தில் பணம் சம்பாதிக்க அத்தனை வழி வகை இருந்துமே அது எல்லாம் வேண்டாம். என்று அனைத்திலும் இருந்து ஒதுங்கி நிற்க்கும் தந்தை மீது குருமூர்த்திக்கு அத்தனை மரியாதை இருக்கிறது.

ஆனால் அவனுக்கும் அவன் தாய் மாமனுக்குமான அந்த உறவு இது தான் என்று சொல்லி ஒரு சின்ன வட்டத்திற்க்குள் அடைத்து விட முடியாது..

அவன் மாமன் ஒன்று சொன்னால் அது செய்யாது விட மாட்டான்… இதோ இந்த பப் உரிமையாளனாக இங்கு நின்று கொண்டு இருக்கிறானே.. இதுவே அதற்க்கு ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.

அமெரிக்காவில் எம் எஸ் முடித்து விட்டு அங்கு நான்கு ஆண்டு வேலை செய்து இந்தியா வந்தவனிடம் விசுவநாதன்…

“என்ன பிசினஸ் செய்யலாம் என்று இருக்கிற குரு.. சொல்.. புதுசா ஆரம்பிக்கும் ஐடியாவா…? இல்ல ரன் ஆகி இருக்கிற ஏதாவது டேக் ஒவர் செய்யும் என்னம்மா…. ? சொல்லு செய்து முடித்து விடலாம்…”

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் அடர்ந்த மீசைக் கொண்டு அவர் கேட்கும் தோரணையையே அவன் எப்போதும் ரசிப்பது உண்டு.’

இப்போதும் அந்த ரசனை பார்வையில் தன் மாமனை பார்த்து கொண்டே …” பிசினஸ் தான் மாமா. நானே தான் ஆரம்பிக்கனும்.. அது சம்மந்தமா தான் அங்கேயே இது சம்மந்தமான வேலை பார்த்தேன் மாமா… அதுல சம்பாதித்தது.. பின் அப்பாவுடையது.. அப்பா சொந்த ஊரில் சொத்து இருக்கு.. இது எல்லாம் வைத்து தான் பிசினஸ் ஆரம்பிக்கனும். “ என்று தன் மாமனிடம் பேசிக் கொண்டு இருந்த சமயம் தான்..

விசுவநாத்னின் வலது இடது கைய்யான தண்டாயிதபாணி அனுமதி கேட்காது இவர்கள் பேசிக் கொண்டு இருந்த அறைக்குள் நுழைந்தது…

தண்டாயிதபாணி பேச ஆரம்பிக்கும் முன்னவே… “நான் என் மாப்பிள்ளை கூட பேசிட்டு இருக்கும் போது யாரும் என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று சொல்லி இருக்கேன்னா…? இல்லையா..?” என்று விசுவநாதன் கோபமாக கேட்டதற்க்கு..

தண்டாயிதபாணி.. “இல்ல ஐய்யா அந்த பப் வேறு ஒருத்தவங்களுக்கு விலை பேசிட்டு இருக்காங்க…” என்று சொன்னதும்..

“அது எப்படி வேறு ஒருத்தனுக்கு விலை பேசலாம்.. நான் தான் வாங்கிக்கிறேன் என்று சொன்னேன் தானே.. கூப்பிடு அந்த தங்கப்பனை…”

அப்போதைய பப்பின் உரிமையாளனை அழைத்து கோபமாக.. “என் கிட்ட விலை பேசிட்டு நீ எப்படி இன்னொருத்தனுக்கு அதை விலை பேசி முடிப்ப..?” என்று கேட்டதற்க்கு..

அவரோ… “ உங்களை விட பத்து கோடி அதிகம் கொடுக்கிறேன் என்று சொன்னான்.. யார் அதிக பணம் கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு தானே நான் கொடுக்க முடியும்..” என்றவனிடம்..

“அதை விட இன்னும் இரண்டு கோடி நான் அதிகம் தரேன்.. அது எனக்கு தான் சொந்தம் ஆக வேண்டும்..”

சாதாரணமாக விசுநாதன் நல்ல மனிதர் தான்.. என்ன ஒன்று எனக்கு இது வேண்டும் என்று ஒன்றை நினைத்து விட்டால்.. கண்டிப்பாக அது அவரிடம் வந்து சேர்ந்து விட வேண்டும்.. அதற்க்கு என்று அவர் என்ன என்றாலுமே செய்து விடுவார்.. இந்த பழக்கம் இவர்கள் குடும்ப பழக்கம் என்று நினைக்கிறேன்..

ஏன் என்றால் இவரின் தங்கை அதாவது குருமூர்த்தியின் அம்மாவும் இவரை போன்று தான் ஏதாவது ஒன்றில் அடமாக நின்று விடுவார்…

இதோ அதே பழக்கம் இப்போது விசுவநாதனின் மகளான ஸ்ருதிக்குமே இருக்கிறது..

விசுவநாதனின் அந்த பழக்கத்தில் விலை அதிகம் என்று தெரிந்தே விலை பேசியவருக்கு.. சரியாக நாளை அந்த இடத்தை தன் பெயருக்கு மாற்றி அமைக்கும் சமயம்..

முன் நாள் அவரின் அனைத்து மதுபான கடையிலும் அவர் வீட்டிலும் வருமானவரி சோதனை நிகழ்த்த பட்டது… அதில் சிறிது பிரச்சனை என்று அவரின் அனைத்து அக்கவுண்டுமே… சீஸ் செய்து விட.

மறு நாள் அந்த பப்புக்கு பணம் கொடுக்க முடியாத நிலை.. இந்த சமயம் தான்.. முன் அதிகம் விலைக்கு விலை பேசிய அவரே..

“இப்போவாவது எனக்கு கொடுக்கிறிங்கலா..?” பப்பின் உர்மையாளன் தங்கப்பனிடம் கேட்க.. பின் தான் தெரிய வந்தது விசுவநாதன் வீட்டில் வருமான வரிசோதனை வர காரணமே அவர் தான் என்பது.

இந்த நேரத்தில் தான் குருமூர்த்தி முன் வந்தான்.. “நான் வாங்கிக் கொள்கிறேன்.. “ என்று..

அந்த சமயம் அனைத்து பணமும் ஒன்று திரட்டி அவனிடம் இருக்க. அந்த பப் தன் பெயருக்கு வாங்கி கொண்டவன்.. பின் மாமனுக்கு மாற்றி கொடுக்க நினைக்க.

விசுவந்தாதன் மறுத்து விட்டார்… உன் பெயரிலேயே இருக்கட்டும் என்று.. பின் ஒன்று இரண்டு நாளில் அந்த வருமானவரி பிரச்சனை அனைத்தையும் சரி செய்து தன்னுடையதை மீட்டெடுத்து கொண்டவர்.. தன்னை செய்தவனுக்கு பதில் அடியாக அவனின் டெக்ஸ்டைல்ஸ்ஸை தீ விபத்துக்கு உள்ளாக்கி விட்டார் என்பது வேறு விசயம்…

இந்த பிரச்சனை முடிந்த பின் விசுவநாதன்…. “உன் பிசினஸுக்கு ஆரம்பி..” என்று சொன்ன போது தான் குருமூர்த்தி..

தன் மொத்த பணத்தையும் வாங்கிய அந்த பப்பை சீர் செய்ய மாற்றியமைத்து கொண்டு இருந்த சமயத்தில் குருக்கு இதே ஏன் நாம் நடத்த கூடாது என்ற ஒரு எண்ணம்.. அதை தன் மாமனிடம் சொல்ல.

“உன் விருப்பம் தான் குரு.. ஆனா உன் அப்பா என்ன சொல்லுவார்… தெரியல…” என்று சொன்ன மாமனிடம் .

பார்த்து கொள்ளலாம் மாமா..” என்றவன்.. இதோ ஐந்து ஆண்டாக இந்த பப் முதலாளியாக இருக்கிறான்..

இன்று சென்னையில் மட்டும் அல்லாது வெளி மாநிலத்தில் இருந்து வரும் பணக்காரப்பசங்கள் மட்டும் அல்லாது கிழட்டு சிங்கங்களுமே க்ளாஸ் பப்க்கு தான் வருகை தருவது..

பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.. இப்போது குருமூர்த்தியுமே மாமனின் வழியை பின் பற்றி…

மதுபானக்கடைகளையும் ஏலத்தில் எடுத்து நடத்திக் கொண்டு இருக்கிறான்…

வளர வளர எதிரிகள் அதிகம் ஆக தானே செய்வார்கள்.. அதுவும் இது போல தொழிலில் வளர்ச்சி என்றால்,இந்த தொழிலில் விரோதிகள் மொள்ள மாரி முடுக்கி அவுச்சியாக தானே இருப்பார்கள்..

குருமூர்த்தி ஆண்.. பிரச்சனை கிடையாது.. அதை தவிர. அவனோடு எப்போதுமே இரு பவுன்ஸசர் கூடவே இருப்பார்கள்.. விசுவநாதன்.. இந்த தொழிலில் கால் வைத்த உடனேயே தன்னை சுற்றி நான்கு பேரை வைத்து கொண்டு விட்டார்..

குருமூர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்திக்கு இதற்க்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. அதோடு அவர் பதவியின் பெருமை இன்றும் அவருக்கு கிடைத்து கொண்டு இருப்பதினால், அவருக்கு இவர்களின் இந்த தொழிலால் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு கிடையாது..

அதே போல் தான் விசுவநாதநின் மனைவி தாமரை கோயில் ஏதாவது ஒரு விசேஷம் அதை தவிர வெளியில் அதிகம் செல்ல கூடியவர் அவர் கிடையாது… வெளியில் செல்லும் சமயம் வீட்டில் காவலுக்கு என்று இரண்டு பேர் எப்போதும் இருப்பர்..

அவர்களின் துணையோடு தான் போக வேண்டும் என்று தீர்த்து சொல்லி விட்டனர்.. மாமனும் மருமகனும் .. கணவன் என்ன சொன்னாலும் தாமரை அதை கேட்டுக் கொள்வார்..

அதனால் அவரின் பாதுகாப்பு பற்றிய பயம் கிடையாது.. இந்த பாதுகாப்பு விசயத்தில் மாமனும் மாப்பிள்ளையும் பயப்படும் ஒரே நபர் ஸ்ருதி தான்.

ஸ்ருதி பதினெட்டு வயதில் அடி எடுத்து வைத்து இருக்கும் சமயம் அது… கல்லூரியில் பயிலும் பெண்… வெளியில் செல்லும் போது எப்போதும் பாடிகாட்டோடு தான் செல்ல வேண்டும் என்று சொன்னால் கேட்கும் வயதா அவளுக்கு.. அதுவும் அவள் அவளின் அப்பாவின் வார்ப்பு எனும் போது கேட்டு தான் விடுவாளா…

“தனியா தான் போவேன்.. என் கூட இது போல தடிமாடு வந்தா என் சுதந்திரம் என்ன ஆவது…?”

குருமூர்த்தி தன் பப்பில் வேலை செய்யும் இரண்டு பவுன்ஸர்களை காட்டி..

“வெளியில் போகும் போது நீ இவர்களுடன் தான் போக வேண்டும்..” என்று சொன்னதற்க்கு தான் இதை சொன்னாள்..

ஸ்ருதி சொன்னது சொன்னது தான் கண்டிப்பாக இவர்களோடு செல்ல மாட்டாள் என்று நினைத்த குருமூர்த்தி தான் தன் மாமன் மகளின் பாதுகாப்புக்கு வேண்டி…

அவள் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்தில் அவள் இருக்கும் இடத்தை அறியும் சாதனத்தை பொருத்தியவன்.. அதற்க்கு உண்டான கனைக்டிவ்யூ தன் கை கடிகாரத்திலும் தன் மாமனின் கை கடிகாரத்திலும் பொருத்தி கொண்டான்…

இந்த முன் ஏற்பாடு செய்து மூன்று வருடம் கடந்த பின் இன்று வரை அந்த சாதனத்திற்க்கு வேலை வந்தது இல்லை..

அன்று முதல் அமைச்சரின் பேத்தியின் பிறந்த நாளை ஓட்டி வீட்டில் குடும்பமாக குடும்ப உறுப்பினரை வைத்து பிறந்த நாள் கொண்டாடிய அந்த பெண்… பிரன்ஸ்க்கு என்று தனிப்பட்டு குருமூர்த்தியின் பப்பில் தான் கொண்டாடம் நடைப்பெற உள்ளது.

இதை முதலமைச்சரே இவனை அழைத்து.. “ மகள் அங்கு வரப்பா. பாதுகாப்பு பத்திரம்…”

என்பதை இரண்டு நாளுக்கு முன்பே இவனை அழைத்து சொல்லி விட்டார்… தந்தையே இப்படி எல்லாம் மகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க… அங்கு நம்ம வீட்டில் என் அப்பா..

“நீ சின்ன பிள்ளைகளை கெடுக்குற என்று என்னை திட்டிட்டு இருக்கார் மாமா..” என்று தன் பப்பின் மேல் தளத்தில் தனக்கு என்று தனிப்பட்ட அறையில் நின்று கொண்டு கீழே நடக்கும் அந்த கூத்தை பார்த்து கொண்டே தான் தன் மாமன் விசுவநாதனிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்..

முதலமைச்சரே கேட்டு கொண்டதால் மேலும் அதிக அளவில் பவுன்சரை ஏற்பாடு செய்து இருந்தாலுமே, அவனுமே வேறு எங்கும் செல்லாது தன் அறையில் இருந்து அங்கும் ஒரு கண்ணை வைத்து கொண்டு தான் இருந்தான்..

அப்படி கவனித்ததில் தான் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டு இருந்த பெண்.. ஒரு ஆணுடன் மிக நெருக்கமாக டான்ஸ் ஆடிக் கொண்டு இருப்பதை பார்த்தது.

சரி பாய் பிரண்ட் போல என்று அவன் நினைத்து கொண்டு இருந்த சமயம் தான் அந்த பெண் வேறு ஒரு ஆடவனுடன் மிக நெருக்கமாக ஆடிக் கொண்டு இருந்ததை பார்த்தது..

இது எல்லாம் அவனுக்கு புதியது கிடையாது.. அதை பார்த்துக் கொண்டு இருந்தவன் இதை தான் நினைத்தான்.

நாளைக்கு கல்யாணம் ஆனா அவங்க அவங்க துணைக்கு இவங்க ஏதை தான் தனிப்பட்டு வைத்து கொண்டு இருப்பாங்க என்று.. ஏன் என்றால் அந்த அளவுக்கு டான்ஸ் என்ற போர்வையில் அனைத்தும் பார்த்து விட்டான் அவன்..

அதை எல்லாம் பார்த்து கொண்டே தான் அவன் தன் மாமனிடம் பேசிக் கொண்டு இருக்கும் சமயம் தான்..

குருமூர்த்தியின் கை பேசிக்கு வேறு ஒரு அழைப்பு வந்தது… மாமனின் அழைப்பை துண்டிக்காது யார் என்று பார்க்க. அழைத்தது ஸ்ருதி தான்..

இது வழக்கம் தான்.. ஸ்ருது கல்லூரி விட்டு வீடு வந்து விட்டாளே.. குருமூர்த்திக்கும் விசுவநாதனுக்கும் அழைத்து வீடு வந்ததை சொல்லி விட வேண்டும்..

அதுவும் இன்று வீட்டில் விசுவநாதனின் மனைவி வேறு இல்லை.. உறவு முறை திருமணத்திற்க்கு சென்று இருக்கிறார்.

இதில் ஸ்ருதி கல்லூரியில் இருந்து அவளின் தோழிக்கு இன்று பிறந்த நாள் என்பதில் ஒரு ஸ்டார் ஒட்டலில் பார்ட்டி வைக்கிறாள்..

காலேஜ் முடிந்து வீடு வந்தவள்.. பர்த்டே பார்ட்டிக்கு செல்லும் முன் இவர்கள் இருவருக்கும் தெரியப்படுத்தி விட்டு தான் சென்றது..

வீடு வந்ததும் இதே போல் சொல்லனும்.” என்று முருமூர்த்தி சொன்னதற்க்கு தான்..

“அது தான் தினம் தினம் செய்யிறேன்னா அத்தான்.. புதுசா என்ன சொல்லாது ஒரு மறதியில் விட்டு விட்டா உங்க மாமா கூட பரவாயில்லை. ஆனா நீங்க. அதுக்கு பயந்தே சொல்லி விடுவேன் அத்தான்.. நீங்க கவலை படாதிங்க..” என்று சொல்லி விட்டு தான் இன்றைய பர்த்டே பார்ட்டிக்கே ஸ்ருதி சென்றது…

ஸ்ருதியின் அழைப்பை பார்த்த குருமூர்த்தி… “ வீட்டிற்க்கு வந்ததை தெரியப்படுத்த தான் தன்னை அழைக்கிறாள் என்று நினைத்தவன் அழைப்பில் இருந்த தன் மாமனிடமும்..

“உங்க மக தான் மாமா…” என்று சொல்ல.

விசுவநாதனும்… கான்பிரன்ஸ் கால் போடு மாப்பிள்ளை.. உனக்கு சொல்லிட்டு எனக்கு சொல்ல எனக்கு கூப்பிடுவா… ஏன் அது வேறு குழந்தை டையாடா இருப்பா எனக்கும் சொல்லிட்டா தூங்கிடுவா..” என்று சொன்னவரின் பேச்சில் குருமூர்த்தி ஸ்ருதியின் அழைப்பை ஏற்றவன் அந்த அழைப்பை தன் மாமனின் அழைப்போடும் இணைக்க..

ஸ்ருதியோ… தன் தந்தையும் அழைப்பில் இணைந்து உள்ளார் என்று கூட உணர முடியாத நிலையில் தன் குருமூர்த்தியிடம்..

“ மா…மா மா..” என்ற ஸ்ருதியின் அந்த அழைப்பே சொன்னது அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை.. அதுவும் அவள் இன்னும் வீடு போய் சேரவில்லை என்பதை அவள் அழைப்பு வழியாக கேட்ட வண்டி சத்தமும் சொல்ல…

இங்கு மாமனும் மாப்பிள்ளையும் ஒரு சேர…

“ஸ்ருதி நீ வண்டி ஒட்டாதே.. ஒரமா நிறுத்திட்டு பேசு…” என்று குருமூர்த்தி பதட்டத்துடன் சொன்னதற்க்கு..

ஸ்ருதி அதே குழலான குரலில்.. “ மா…மா எ..னக்கு ட கூல் ட்ரிங்கஸ்ல ஏ..தோ கலந்து கொடுத்துட்டாங்க போல மாமா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு… அங்கு இருப்பவங்க தான் செய்து இருப்பாங்க.. எனக்கு அங்கு சேப் இல்ல மாமா அது தான் நான் முழுசா என் நிலை இழுக்கும் முன் அந்த இடத்தை விட்டு வந்துட நினைத்தேன்…”

இதே ஸ்ருதி விட்டு விட்டு தான் சொன்னது.. பின் ஸ்ருதி பக்கம் இருந்து எந்த பேச்சும் இல்லை.. கார் மட்டும் ஓடிக் கொண்டு இருக்கும் சத்தம்… பின் படால் என்று ஒரு பெரிய சத்தம்.. இது தான் விசுவநாதனும், குருமூர்த்தியும் கடைசியாக கேட்டது…






 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Nice start…
Shruthi ku ivanunga enemies yarachum edhum pannittangala???

Vishwanathan wife name Thamarai thane??? Oru idathula Padma nu irukku
 
Top