அத்தியாயம்…11…1
அதிகாலை நான்கு மணிக்கு விடியலில் எழுந்த குருமூர்த்தி நேற்று கொண்டு வந்த பேகை எடுத்து கொண்டு தன் மாமன் வீட்டை நோக்கி சென்றான்..
அப்போது கிருஷ்ண மூர்த்தி கூடத்தில் தான் அமர்ந்திருந்தார்.. குரு மாமன் வீடு தினம் செல்வது தான்.. ஆனால் இது போல விடிந்தும் விடியாத இந்த நேரத்தில், அதுவும் அந்த பைய்யோடு கிருஷ்ண மூர்த்திக்கு ஏதோ சரியாக படவில்லை..
பைய்யோடு தன் மாமன் வீட்டிற்க்கு சென்ற குருமூர்த்தி முதலில் தன் மாமன் அறைக்கு தான் சென்றது.. அவர் தயாராக இருப்பதை பார்த்து…
“ஒகே மாமா.. நான் இதை சித்தார்த் கிட்ட கொடுத்துட்டு ரெடியாக சொல்லிட்டு வந்துடுறேன்…” என்றவனின் கை பிடித்து கொண்ட விசுவநாதன்..
“குரு எல்லாம் சரியா நடந்து விடுமா…? நாம தப்பு செய்யவில்லையே.. ?” என்று கேட்டவரிடம்..
குரு மூர்த்தி.. “மாமா நாம என்ன மாமா தப்பு செய்யிறோம்.. நம்ம வீட்டு பெண் விரும்பும் பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறோம்.. இது ஒன்னும் தப்பான விசயம் இல்லையே.. சித்தார்த்துமே நம்ம வீட்டு பெண்ணை விரும்புகிறான்.. நாம என்ன அவனை கட்டாயப்படுத்தியா மேரஜ் செய்து வைக்கிறோம்…?” என்று கேட்டவனுக்கு விசுவநாதனால் இதை பற்றி . பதில் சொல்ல முடியவில்லை.
அதுவும் குருமூர்த்தி சொன்ன சித்தார்த்தும் நம்ம வீட்டு பெண்ணை விரும்புகிறான் நாம ஒன்னும் அவனை கட்டாய படுத்தவில்லையே என்ற அந்த வார்த்தை அவரை என்னவோ செய்தது.
அதில்.. “நான் என்ன செய்து இருந்தாலும்.. அது என்ன சார்ந்ததாகவே இருக்கட்டும்.. என் மகளையோ.. உன்னையோ ஒன்றும் செய்ய கூடாது.” என்றவரின் பேச்சில் குருமூர்த்தி தன் மாமனை ஆழ்ந்து பார்த்தான்.
பின்.. “அப்போ நீங்க என்னவோ செய்து இருக்கிங்க..” என்ற கேள்வியில் விசுவநாதன் உடனே தன்னை சுதாகரித்து கொண்டவனாக…
“நேரம் ஆகுது குரு..” என்று பேச்சை மாற்றி விட்டார்,
குருவுக்கு அது புரியவும் செய்தது தான்.. ஆனால் அதை பெரியதாக எடுத்து கொள்ளாது சித்தார்த் அறைக்கு சென்றவன் அவன் திருமண உடையை கொடுத்து தயாராக சொன்னான்..
சித்தார்த்தின் முகம் நேற்றைய விட இன்று இன்னுமே தெளிவாகவே இருந்தது.. காரணம் இரவு ஸ்ருதியிடம் பேசியில் பேசியதே காரணம்.. இப்போது ஸ்ருதியை திருமணம் செய்து கொள்ளலாம்..
பின் வருவதை பார்த்து கொள்ளலாம் என்ற ஒரு தைரியம்.. அதோடு மகி என்னை விரும்பவில்லை.. அது அவனுக்கு நிச்சயம். அவள் தன்னை விரும்பி இருந்தாளாவது… அவளை விடுத்து ஸ்ருதியை திருமணம் செய்து கொள்வதை பற்றி யோசிக்கலாம்..
இங்கு இருவருக்கும் விருப்பம் இல்லாது தன் திருமணம் மகியோடு நடைப்பெறுவதை விட. விரும்பிய நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது…
அம்மா அப்பாவிடம் சொன்னால் தன்னை புரிந்து கொள்வார்கள்… ஸ்ருதியும் நானுமே சேர்ந்து மகிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கலாம். என்று அவனுக்கு அவனே அவனுக்கு சாதகமானதாக ஆசை கொண்ட மனது நினைத்து கொண்டது..
ஆனால் இவர்களுக்கு முன்னவே. தீர்க்க படாத ஒரு கணக்கு இருக்கும் போது.. புதிய இவர்களின் கணக்கில் தீர்ப்பை யார் கொடுப்பது பார்க்கலாம்..
குருமூர்த்தியும் தன் அறைக்கு வந்து ரெடியாகி தயாராக இருந்த தன் மாமாவையும் சித்தார்த்தையும் அழைத்து கொண்டு முதலில் மருத்துவமனைக்கு சென்றான்..
அங்கு நேற்று இரவே.. ஸ்ருதிக்கும் அத்தை தாமரைக்கு தேவையான உடை நகைகள் அவர்களிடம் சேரும் படி பார்த்து கொண்டதில், அவர்கள் இருவருமே தயாராக தான் இருந்தனர்..
ஸ்ருதிக்கு விசயம் தெரிந்து தான் சித்தார்த்திடம் இரவு இதை பற்றி பேசியது… அதில் கிடைத்த தெளிவில்.. சிறிது மகிழ்ச்சியாகவே தான் ஸ்ருதி தன்னை தயார்படுத்தி கொண்டது… மருத்துவரின் அனுமதியோடு…
பின் குருமூர்த்தி அனைவரையும் அழைத்து கொண்டு அந்த பகுதியில் இருக்கும் ஒரு சின்ன கோயிலுக்கு தான் அழைத்து சென்றான்..
பெரிய கோயிலில் திருமணம் செய்வது என்றால் முன்னவே அதற்க்கு உண்டான ஏற்பாட்டை செய்து இருக்க வேண்டும்.. அதனால் சின்ன கோயிலுல் அங்கு இருக்கும் அர்ச்சகரை வைத்தே மிக எளிய முறையில் சித்தார்த் ஸ்ருதியின் திருமணத்தை முடித்து வைத்து விட்டு, பின் திருமணத்தை பதிவு செய்து விடலாம் என்ற எண்ணம் குருமூர்த்திக்கு,
இங்கு கிருஷ்ண மூர்த்தி தான் மகன் தினமும் தவறாது செய்யும் உடற் பயிற்ச்சி போன்றவற்றை அனைத்தும் விடுத்து விடியற்காலையில் ஓடுகிறான் என்றால்,
அவர் மனதிற்க்கு ஏதோ தவறாக பட. அவருமே சிறிது நேரம் கழித்து ஓட்டினரை காரை எடுக்க சொல்லி மருத்துவமனைக்கு சென்றார்..
அங்கு சரியாக அந்த சமயம் தான் திருமணகோலமாக தயார் நிலையில் அனைவரும் இரு காரில் ஏறுவதை கிருஷ்ண மூர்த்தி பார்த்தார்.. அவர் பார்க்கும் போது சித்தார்த் காரில் ஏறி அமர்ந்து விட்டதினால், கிருஷ்ண மூர்த்தி அங்கு சித்தார்த்தை பார்க்கவில்லை… ஆனால் கல்யாணம் செய்ய தான் அழைத்து செல்கிறார்கள் என்பது மட்டும் கிருஷ்ண மூர்த்துக்கு புரிந்தது.
அதனால் தன் ஓட்டுனரிடம்… “ குரு காரை பாலோ பண்ணு..” என்று கிருஷ்ண மூர்த்தி சொன்னதில், அந்த ஓட்டுனர் ஒரு அச்சத்துடன் தான் கிருஷ்ண மூர்த்தியை பார்த்தது… குருமூர்த்திக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் அவனுக்கு.
கிருஷ்ண மூர்த்தியோ.. “ நீ என் தனிப்பட்ட ட்ரைவர்.. நான் சொன்னதை நீ செய்யலேன்னா…. இப்போவே நீ சாவீயை என் கிட்ட கொடுத்துட்டு காரை விட்டு நீ இறங்கு…” என்று விட்டதில், அந்த ஒட்டுனர் காரை எடுத்து விட்டான்…
பாவம் இந்த இடைப்பட்ட நேரத்திற்க்குள் குருமூர்த்தி, விசுவநாதனின் காரை ஓட்டுனர் தவற விட்டு விட்டான்.. அதில் கிருஷ்ண மூர்த்தி ஏகப்பட்ட திட்டை திட்டு விட்டார்.. அந்த ஓட்டுனரை.
“அவங்களை மட்டும் நீ பிடிக்கலேன்னா இன்னைக்கே உன் சீட்டை கிழித்து விடுகிறேன். எனக்கு கிட்ட வேலைக்கு செய்யிறவன் எனக்கு தான் விசுவாசமா இருக்கனும்.. என் மகனுக்கோ என் மகனின் மாமனுக்கோ கிடையாது.. நீ என் மகனின் மாமா அழைச்சிட்டு வந்த ட்ரைவர் தானே நீ இப்படி தான் இருப்ப.. “ என்று திட்டிக் கொண்டு வர.
பின் ஒரு வழியாக ஒரு கோயில் வாயிலில் குரு மூர்த்தி விசுவநாதன் இருவரின் காரும் நின்று கொண்டு இருப்பதை பார்த்த பின் தான் அந்த ஓட்டுனரின் காது தப்பித்தது..
ஆனாலும் என்ன பிரயோசனம்… “ சரியாக சித்தார்த் ஸ்ருதியின் கழுத்தில் தாலி கட்டும் போது தான் அங்கு வந்தவர்… அவர் பார்த்த போது சித்தார்த் ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டிக் கொண்டு இருந்ததை தான்..
சித்தார்த்தை பார்த்த கிருஷ்ண மூர்த்தியோ.. அந்த முகம் எங்கேயோ பார்த்தது போலான ஒரு பிம்பம் அவர் மனதில் எழுந்தது… ஆனால் பாவம் கிருஷ்ண மூர்த்திக்கு நியாபகம் தான் வரவில்லை. நீண்ட நெடிய ஆண்டுகள் கடந்து விட்டதினாலும், இருவரின் வழி வெவ்வேறு என்று ஆனதினாலும், முன் அவர் மனதில் பதிந்த அந்த முகம்.. மனதில் ஆழம் புதைந்து போய் விட்டது போல…
இங்கு சாரதா வீட்டி சித்தாஎத் இரவு வீட்டிற்க்கு வராததில், கணவனிடம் ஒரு மூச்சுக்கு புலம்பியவர் பின் மகியிடமும் புலம்ப..
அவளுமே. “அத்தான் சின்ன குழந்தையா அத்தை.. அவர் சொல்லிட்டு தானே வெளியில் தங்குறார்… பயப்படாதிங்க அத்த. “ என்று தைரியம் மூட்டியவளின் கை பிடித்து கொண்டவர்.. ஒன்றும் பேசாது ஒரு மாதிரியாக இருந்தவருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையோடு தூக்க மாத்திரையையும் ஒன்று சேர்த்து தான் மகி அத்தைக்கு கொடுத்து விட்டு அவள் உறங்க சென்றது..
ஆனால் விடியற் காலையிலேயே கூடத்தில் சத்தம் கேட்க… மகிக்குமே தூக்கம் கலைந்து விட்டதில், கூடத்திற்க்கு வந்தாள்..
வந்தவள் பார்த்தது அத்தை குளித்து முடித்து விட்டு பூஜை செய்து முடித்து விட்டு கூடம் முழுவதும் சாம்பிராணி புகையை போட்டு கொண்டு இருந்தவரை தான்..
அதோடு அவரை பார்த்த உடனே தெரிந்து விட்டது … இரவில் அவர் சரியாக உறங்க வில்லை என்பதும்…
தூக்க மாத்திரை கொடுத்தும் அத்தை உறங்காததில் மகி.. “அத்த என்ன அத்த பிரச்சனை.. அத்தான் ஒரு நாள் நையிட் வீட்டுக்கு வராததுக்கு நீங்க இப்படி இருக்கிங்க…?” என்று கேட்டதுக்கு மருமகளின் கையை பிடித்து கொண்ட சாரதா..
“எனக்கு என்னவோ மனசு பண்ணுது டா தங்கம்.. ஆனா அது என்ன என்று சொல்ல தெரியல.. பயமா இருக்கு…” என்று சொன்ன அத்தையை பார்த்த மகிக்குமே.. என்ன இது என்பது போல் ஆகி விட்டது.
பின் மகி… “ அத்த மனசை போட்டு குழப்பி கொள்ளாதிங்க அத்த. இன்னைக்கு உங்களுக்கு பிடித்த அம்மன் கோயிலுக்கு போயிட்டு வரலாம் ஒகேவா அத்த .” என்று மகி சொன்னதுமே சாரதாவுக்குமே… அம்மனை பார்த்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.
ஆனாலுமே… “ உனக்கு காலேஜ் இருக்கே மகிம்மா…?” என்று கேட்டவரிடம்..
“ஒரு நாளுக்கு லீவ் எடுத்துக்குறேன் அத்த.. நீங்க காபி கலந்து வைங்க.. நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்..” என்று சொல்லி தன் அறைக்கு செல்ல பார்த்தவளின் பேச்சை முழுவதுமாக கேட்டு கொண்டு வந்த விசுவநாதன்…
“இந்த வீட்டில் ஒருத்தருக்கு இரண்டு லெக்கச்சரை வெச்சிக்கிட்டே நீ காலேஜ் லீவ் போடுவதை பத்தி தைரியமா பேசிட்டு இருக்க… சும்மா கோயிலுக்கு பூஜைக்கு எல்லாம் லீவ் எடுக்குறது அவ்வளவு நல்லதுக்கு இல்ல மகிம்மா…” என்ற மாமனின் கன்னத்தை பிடித்து கொண்ட மகேஷ்வரி..
“மாமா இன்னைக்கு ஒரே ஒரு நாள் தான் மாமா. நான் காலேஜ் திறந்து இது வரை ஒரு நாள் லீவ் போட்டு இருக்கேன்னா.. லாஸ்ட் மந்த் ஃபீவர்.. அப்போ கூட டேப்லட் போட்டுட்டு காலேஜ் வந்தேன் தானே மாமா…” என்று கொஞ்சிய மருமகளின் தலை மீது கை வைத்த ராம் சந்திரன்..
“அது தான் டா தங்கம் நான் சொல்றேன். உடம்பு சரியில்லை என்ற அப்ப கூட நீ லீவ் போடல. இப்போ எதுக்கு வீணா..” என்றவரை பாவம் போல் பார்த்து நின்ற மகியின் பாவனையில்.
“சரி சரி இன்னைக்கு ஒரு நாள் தான்.. இனி இது போன்ற காரணத்துக்கு எல்லாம் லீவ் எடுக்க கூடாது..” என்று கண்டிப்புடம் கூறினார் ராம் சந்திரன்..
மகியோ மாமனின் இந்த கண்டிப்பான பேச்சுக்கு வேகமாக தலையாட்டி விட்டு இனி இருந்தால், மாமாவின் மனது மாறி கலேஜூக்கு போக சொல்லிடுவார் என்று பயந்து தன் அறைக்கு ஓடி விட்டாள்.
மகி சென்றதுமே . “ சாரும்மா மகி அவள் உடம்பு சரியில்லாத போது கூட காலேஜ் லீவ் எடுக்காத பெண்.. நீ பண்ற இந்த அலப்பறைக்கு லீவ் போட்டுட்டு உன் கூட கோயிலுக்கு வரா.. எதுவும் இல்லாத போதே நீ இது போல பயந்துக்குறது உன்னை மட்டும் பாதிக்கல சாரு.. நம்ம மகியையும் பாதிக்கும்..” என்ற கணவனின் பேச்சில்,
சாரதாவும்.. கணவன் சொன்னது போல உண்மையில், நான் ஒன்றும் இல்லாத விசயத்துக்கு பயந்து மற்றவங்களையும் குழப்பி விடுகிறோமோ என்று நினைத்து கொண்டவர். கணவனிடம்..
“சரிங்க.. மகி காலேஜுக்கு போகட்டும்.. நான் சாப்பாடு கட்டும் வேலையை பார்க்கிறேன்..” என்ற சாரதாவிடம்..
“கோயிலுக்கு போக நினைத்தா போயிடனும்.. இன்னைக்கு நீங்க இரண்டு பேருமே போயிட்டு வாங்க.. ஆனா இனி நீ இது போல பயந்து வீட்டில் இருக்கிறவனங்களையும் பய முறுத்த கூடாது..” என்று விட்டு அவர் தன் முன் இருந்த செய்திதாளை படிக்க ஆரம்பித்தார்.
சாரதாவும் காபி கலந்து கணவனிடம் கொண்டு வந்து கொடுக்க.. அதே சமயம் மகியுமே குளித்து முடித்து விட்டு வந்தவளிடமும் காபி கொடுத்த சாரதா தானுமே குடித்து விட்டு கணவனுக்கு காலை மதியம் கட்டு கொடுக்க என்று உணவை தயார் செய்ய சமையல்கட்டுக்கு சென்றார்.
மகியுமே கூடவே… சாரதா பின் சென்று அவருக்கு சமையலில் உதவி செய்ய.. அன்று மற்ற நாள்களை விட சாரதா விரைவாகவே சமையலை முடித்து விட.
மகேஷ்வரி… “ அத்த நீங்க போய் பட்டு புடவை கட்டிட்டு உங்க மேக்கப்பை முடிச்சு வாங்க. நான் இங்கு மத்ததை பார்த்துக்குறேன்..” என்று சொன்ன மருமகளின் கன்னத்தை ஆசையாக கிள்ளய சாரதா..
“நான் மேக்கப் செய்யிறேன்னா…?” என்று கோபம் போல கேட்டாலுமே, அவருக்கு சிரிப்பே..
காரணம் சாரதா கோயிலுக்கு என்று செல்வது என்றால் தன்னை அம்மன் -போலவே தான் அலங்கரித்து கொண்டு செல்வார்…
கோயில் என்றால் பட்டுப்புடவை தான்.. பட்டுப்புடவை என்றால் புதியது என்பது இல்லை… முப்பது வருடத்திற்க்கு முன் அவர் திருமணப்புடவையை கூட அவ்வளவு அழகாக பாதுகாத்து புது புடவை போலவே வைத்து கொண்டு.. கோயிலுக்கு கட்டிக் கொண்டு செல்வார்..
இன்று அவர் கையில் எடுத்த புடவை… அவரின் சீமந்த புடவை… அடர் பச்சை நிறத்தில் குங்குமம் கரை வைத்து முந்தியில் குழந்தை கிருஷ்ணர் இழையோடிய அந்த பட்டுப்புடவை கையில் எடுத்த சாரதாவுக்கு தன் அண்ணனின் நினைவில் கண்கள் கலங்கி விட்டது..
தான் மனதால் பலத்த ஆடி வாங்கி நின்ற போது தன் அண்ணன் மட்டும் இல்லாது போனால், இன்று தான் இல்லை.. தான் குழந்தை உண்டாகியதில் தன்னை விட தன் கணவனை விட அதிக மகிழ்ச்சி அடைந்தட்து அவரின் அண்ணன் தான்…
“ராம் சந்திரம் ரொம்ப நல்லவர் சாரும்மா.. நம்ம அப்பா படிக்க வைத்தவர்.. உன்னை பத்தி எல்லாம் தெரியும்… உன்னை நல்லப்படியா வைத்துப்பார். எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் மீது நம்பிக்கை இருந்தா ராம் சந்திரனை கல்யாணம் செய்துக்க சாரும்மா…” என்ற அண்ணன் பேச்சில் நம்பிக்கை வைத்து தான் சாரதா தன் கணவன் கை பிடித்தது.
பின் அண்ணன் பேச்சு உண்மை இருந்ததில் தான் அவர் தாயாக முடிந்தது. தான் கற்பமாக இருக்கிறேன் என்று தெரிந்த பின் தான் அண்ணன் தன் திருமணத்திற்க்கு பெண்ணை பார்க்க சொன்னது.
என்ன தான் தன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து சாரதா ராம் சந்திரனை திருமணம் செய்து கொண்டாலுமே, தங்கை அவரை ஏற்று நல்லப்படியாக வாழும் வரை அவர் தன் திருமணத்தை பற்றி நினைக்கவில்லை என்பது சாரதாவுக்கு தெரியும் தானே.
இதோ தன் கையில் இருக்கும் இந்த சீமந்த புடவை காஞ்சிப்புரத்தில் அண்ணன் வரைந்து கொடுத்து நெய்த புடவை ஆயிற்றே.. இதோ இன்றுமே புத்தம் புதியதாக பாதுகாத்து வந்த அந்த புடவையின் பழைய நினைவுகள் மேல் எழுந்து வந்து விட்டது சாரதாவுக்கு.
பின் தன்னை தேற்றியவராக அதில் இருந்து விடுப்பட்டு பட்டுப்புடவை கட்டி, கழுத்தில் கெம்பு அட்டிகை. தாமரை பதக்கம் வைத்த கழுத்து சயின் அணிந்து கையிலுமே கெம்பி வளையல் போட்டுக் கொண்டவர்.
கொண்டை இட்டு கொண்டு.. அதை சுற்றி இரண்ரு முழத்துக்கு மல்லிகை பூவை சுற்றிக் கொண்டவர் வந்து நின்ற இடம் பூஜை அறை தான்..
அங்கு இருந்த மஞ்சள் குங்குமம் சந்தனம் , பச்சை அம்மனின் பச்சை நிறத்திலான குங்குமம் என்று நெற்றி முழுவதும்.. ட்ராபிக் சிக்னலில் இருக்கு அனைத்து நிறத்திலுமான நிறத்தில் தன் நெற்றி முழுவதுமே நிறப்பி வைக்க.
மகியோ அதற்க்குள் தன் காலை சாப்பிட்டு செல்ல வேண்டிய இட்லியை ஹாட்பேக்கில் வைத்தவள்.. மதியம் கல்லூரிக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டிய உணவையும் வைத்து விட்டு அவளுமே சிறிது தன்னை திருத்திக் கொண்டவளாக தன் அத்தையுடன் அத்தைக்கு மிகவும் பிடித்த அந்த அம்மன் சந்நிதிக்கு சென்றவள் பார்த்தது ஸ்ருதி கழுத்தில் தாலி ஏறுவதை தான்..
அவளுமே தாலி ஏற்றுக் கொண்ட ஸ்ருதி முகத்தை பார்த்தவள், தாலி கட்டிய தன் அத்தானை பாராது..
சாரதாவை தொட்டு… “ அத்த அத்த அவங்க தான் சீனியர் ஸ்ருதி.. அவங்களுக்கு இன்னைக்கு மேரஜ் போல அத்த. அது தான் நேத்து காலேஜூக்கு வரல போல …” என்று சொன்னவள்..
பின் அவளுக்கு அவளே சொல்வது போல.. “ ஆனா சீனியர் ரொம்ப வசதி அத்த. எப்படி.. இப்படி சின்ன கோயில்ல வைத்து மேரஜ்..” என்று பேசிக் கொண்ட மருமகளின் பேச்சை கேட்ட சாரதாவுமே எட்டி எட்டி பார்த்தார் ஸ்ருதியின் முகத்தை,,
சாரதா ஸ்ருதியை பார்க்கவில்லை என்றாலுமே தினம் தினம் தன் மருமகளின் வாய் வழி மூலமாக தான் ஸ்ருதியை பற்றி தெரிந்து வைத்து இருக்கிறாரே. அதனால் ஸ்ருதியின் முகத்தை மிக ஆவளோடு தான் பார்க்க எண்ணி அதற்க்கு முயற்ச்சி செய்து கொண்டே.
“லவ் மேரஜா இருக்குமோ… மகிம்மா… வீட்டுக்கு தெரியாம இப்படி அவசரமா மேரஜ் செய்துக்குறாங்கலோ… ?” என்று கேட்டுக் கொண்டே பார்த்தவரின் கண்ணுக்கு இப்போது ஸ்ருதி மிக தெளிவாகவே தெரிந்தாள்..
அதற்க்குள் மகி.. “ இல்ல அத்த அவள் அம்மா அப்பா அத்தான் எல்லாம் கூட இருக்காங்க….” என்று சொன்னவள் இப்போது கூட மாப்பிள்ளை யார் என்று தெரியாது தான் தன் அத்தையிடம்..
“மாப்பிள்ளை தெரியல அத்த.. முதுகு தான் தெரியுது..” என்று தன் அத்தையிடம் குறைப்பட்டு கொண்ட மகேஷ்வரி..
“அத்த வாங்க அந்தப்பக்கம் போனா மாப்பிள்ளை முகம் தெரியும்.. போய் ஒரு விஷ் பண்ணிட்டு வந்துடலாம்…” என்று சொன்ன மகியை ஒரு புன்னகையுடன் திரும்பி பார்த்த சாரதா..
“அத்தனை உனக்கு நெருக்கம்.. நான் பேசலேன்னாலும்.. என் சீனியர் வந்து பேசுவாங்க.. என்று சொல்லுவ.. அந்த பெண் கல்யாணத்துக்கு உன்னை கூப்பிடுவது என்ன. அதை பத்தி ஒன்னுமே உன் கிட்ட சொல்லலே அந்த பெண்.. இப்போ நீயே போய் வலிய அந்த பெண்ணை வாழ்த்த போறியா. அது எல்லாம் வேண்டாம் மகி.. என்ன தான் நம்ம கிட்ட நல்லா பேசினாலுமே. நம்மை அழைக்காத இடத்துக்கு போய் நாம நிற்க கூடாது….” என்று அத்தையின் பேச்சை கேட்டுக் கொண்டே இருந்தவளின் பார்வை என்னவோ ஸ்ருதி மாப்பிள்ளையின் முதுகு பக்கம் தான்..
அப்படி மகேஷ்வரி பார்த்து கொண்டே இருந்த போது தான் சித்தார்த் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த விசுவநாதன் ஏதோ கேட்க பதில் சொல்ல வேண்டி பக்கம் என்றாலுமே கொஞ்சம் சித்தார்த்தின் பின் பக்கம் நின்றுக் கொண்டு இருந்ததினால் திரும்பிய போது தான் மகி மாப்பிள்ளையின் முகத்தை பார்த்தது..
பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.. முதலில் நம்பவில்லை.. தன் அத்தான் போல இருக்கும் வேறு யாரோவா என்று இன்னுமே உத்து பார்த்த அவள் கண்கள் அவளுக்கு காட்டி கொடுத்தது அத்தானின் ஒரு பிறந்த நாளுக்கு அவளின் தந்தை வாங்கி கொடுத்த அந்த கை கடிகாரம்.. சொன்னது அது உன் அத்தானே தான் என்பது…..