அத்தியாயம்….11…2
தன் பேச்சுக்கு ஒன்றும் சொல்லாத மகி ஸ்ருதி இருக்கும் இடத்திலேயே பார்வை நிலைத்து இருப்பதை பார்த்த சாரதா மருமருகளிடம்..
“சரி டா தங்கம்.. உனக்கு அந்த பெண் அத்தனை நெருக்கம்.. அத்தனை பிடிக்கும் என்றால், போய் வாழ்த்து சொல்லிட்டு வாடா தங்கம்…” என்ற அத்தையின் பேச்சுக்கு இப்போது மகி தன் அத்தையை தான் தன் அதிர்ச்சி குறையாத பார்வையோடு பார்த்தாள் பெண்ணவள்..
இப்போது நான் என்ன செய்யனும்..? செய்ய வேண்டும்…? இரண்டு நாட்களாக அத்தை பயந்தது போலவே நடந்துடுச்சே…? நடந்து விடுமா என்ற பயத்திலேயே அத்தை தன்னை அத்தனை வருத்திக் கொண்டார்கள்.. இதோ தன் மகனை இப்போது பார்த்தால், என்ன செய்வார்கள் நினைக்க நினைக்க முகத்தில் வேர்த்து கொட்டியது…
ஆனால் சாரதா இப்போது வரை மருமகளின் முகத்தை தான் பார்த்து இருந்தாரே தவிர… தன் மகனை பார்க்கவில்லை..
ஆனால் சித்தார்த் தன் மாமனார் கேட்ட.. “ இப்போ நேரா உங்க வீட்டுக்கு போயிடலாமா மாப்பிள்ளை…?” என்ற கேள்விக்கு, ..
“ம் போயிடலாம் அங்கிள்…” என்று திரும்பி சொன்ன சித்தார்த்தின் கண்களுக்கு தெரிந்தார்கள்… மகியும் தன் அம்மாவும்.. அதுவும் தன்னை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த தன் மகியை பார்த்தவன் மனது அடித்து கொண்டது…
கண்களில் நீர் இப்போது வருமா..? அப்போது வருமா.? என்பது போல தன்னை பார்த்து கொண்டு இருந்தவளின் தோற்றத்தை பார்த்தவனுக்கு தான் செய்வது தவறு தான்..
ஆனால் இந்த தவறை இப்போது தான் செய்யவில்லை என்றால், நாளை மூன்று பேரின் வாழ்க்கையை பாழாக்கும் தவறை செய்து விடுவோம் என்று நினைத்து செய்தவனுக்கு மகியின் அந்த அதிர்ந்த பார்வையும்.. அத்தான் நீங்களா.? என்பது போல தன்னை பார்த்த பார்வையில் அப்படியே அவனுமே கழுத்தை திரும்பி நின்றவன்.. நின்றவனாக இருக்க.
விசுவநாதனும், ஸ்ருதியுமே… யாரை இப்படி பார்க்கிறான் என்று பார்த்தவர்களின் கண்களிலும் விழுந்தார்கள் மகியும் சாரதாவும்..
ஸ்ருதி… சித்தார்த்திடம்… “மகி பக்கத்தில் இருப்பது உங்க அம்மாவா சித்து..?” என்று அவள் கேட்கும் போதே…
விசுவநாதன்.. “சாரதா….” என்று அவர் வாய் தன்னால் அந்த பெயரை உச்சரித்து விட்டது..
அதில் மிக அருகில் நின்று கொண்டு இருந்த சித்தார்த்தின் காதில் விழுந்து விட… “ அங்கிள் உங்களுக்கு என் அம்மாவை தெரியுமா…”?” என்று ஒரு வித ஆர்வத்துடன் கேட்டான்.. விசுவநாதனை தெரிந்து இருந்தால், தங்கள் திருமணத்தை தன் அம்மா ஏற்றுக் கொள்வது கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்பது அவன் எண்ணம்..
மாப்பிள்ளையின் கேள்விக்கு விசுவநாதன் என்ன சொல்வது என்று தெரியாது நின்றவருக்கு மனதில் பலத்த அடி தான்.. அவர் இதை எதிர் பார்க்கவில்லை… முப்பது ஆண்டுகள் கழித்து தான். விசுவநாதன் சாரதாவை பார்க்கிறார்.. ஆனால் சித்தார்த்தின் அம்மாவாகா…?
வாழ்க்கை உனக்கு என்ன என்ன வைத்து இருப்பது என்பது யாருக்கும் தெரியாது.. அதனால் தான் நீ நன்றாக இருக்கும் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அடங்கி இரு என்ற இந்த வார்த்தை எவ்வளவு உண்மையானது… விசுவநாதன் புரிந்த நொடி இதுவாக தான் இருக்கும்…
தன் அதிர்ச்சி மாறாத விசுவநாதனின் கண்கள் கிருஷ்ண மூர்த்தியிடம் தான் சென்றது..
கிருஷ்ண மூர்த்தியோ திருமணத்தை நடத்தி கொடுத்த அந்த ஐய்யரிடம் பணத்தை கொடுத்து கொண்டு இருந்த தன் மகன் குருமூர்த்தியிடம் சண்டை இட்டுக் கொண்டு இருந்தார்..
சித்தார்த்தின் முகம் எங்கோ பார்த்த மாதிரியான உணர்வு அவருக்கு.. ஆனால் எங்கு என்று புரியாது குழம்பி தவித்தவரின் கோபத்தை தன் மகனிடம் தான் கொட்டினார்..
“மாமனும் மருமகனும் சேர்ந்து இப்போ எந்த பெண்ணோட வாழ்க்கையை தட்டி பரிச்சி இருக்கிங்க…?” என்று கோபமாக கேட்ட தந்தையிடம்..
“ப்பா முதல்ல இவரை அனுப்பி விட்டு வருகிறேன்..” என்று சொல்ல.
தாமரையோ… “ண்னா என்ன ண்ணா… குழந்தைகளை வாழ்த்தாது.. இப்படி பேசுறிங்க…?” என்று தன் அண்ணனிடம் ஆதங்கத்துடன் கேட்டு கொண்டு இருக்க.
கிருஷ்ண மூர்த்தியோ தன் தங்கையை பார்க்க பார்க்க இன்னுமே தான் கோபம் அதிகரித்தது.
“நீ பேசாதே. நீ பேசவே பேசாதே. எல்லாம் சுயநல பீசாசுங்க.. தான் தன் வாழ்க்கை நல்லா இருந்தா போதும்.. யார் எக்கெடு கெட்டு போனா என்ன…? இது தானே நீ.. எல்லாம் தெரிந்தும் திரும்ப இப்படியா.?” என்று கத்தி கொண்டு இருந்த அண்ணனை ஒரு இயலாமை பார்வை பார்த்த தாமரை.. தன் கணவனையும் பார்த்தார்..
அப்போது தான் தன் கணவனும் தன் அண்ணனையே பார்த்து கொண்டு இருப்பதை தாமரை கவனித்தது. இருவருக்கும் சண்டை வந்து விடுமோ என்ற பயம் அவருக்கு..
அதுவும் ஸ்ருதியை பற்றி… கிருஷ்ண மூர்த்தி சொன்ன.. “ நேத்து தற்கொலை என்று நாடகம் ஆடிய போதே எனக்கு தெரியும்.. யாரையோ சாவடிக்க போறா என்று.. அதே ரத்தம் ஆச்சே.. புத்தி அப்படி தான் இருக்கும். அடுத்தவங்க வாழ்க்கையை தட்டி பரித்தவங்க அந்த வாழ்க்கையை முழுவதுமா வாழ்ந்துட முடியாது என்று பார்த்துமே நீங்க இதே தான் செய்யிறிங்க…?.” என்று சண்டை இடுவது போல பேசிக் கொண்டு இருந்தார்..
தாமரைக்கோ.. என்ன தான் அண்ணன் பக்கம் அனைத்து நியாயங்கள் இருந்த போதும்… இன்று தான் திருமணம் முடிந்த தன் பெண்ணை பற்றி அண்ணன் இப்படி பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.. அதுவும் சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தவளை பற்றிய இந்த பேச்சில், இன்னுமே பயந்து தான் போனார்..
அதுவும் தன் கணவனுக்கு மகள் என்றால், உயிரை கூட விட்டு விடுவார்.. அப்படி இருக்க. இது போல் பேசினால், தன் கணவனுக்குமே கோபம் வரும் தானே என்று நினைத்து தாமரை ஒரு வித பயத்துடன் தான் கணவனையும், அண்ணனையும் மாறி மாறி பார்த்த்து..
ஆனால் விசுவநாதன் கோபப்படவில்லை. அதற்க்கு மாறாக குருமூர்த்தி தான் ஐய்யரிடம் பணத்தை கொடுத்து விட்டு அவரை அனுப்பிய பின் தந்தையின் இந்த பேச்சை கேட்டு.
“ப்பா படிச்சங்க.. இது போல பேசுவது சரியில்ல ப்பா. பெண்ணுக்கும் பிடித்து இருக்கு பைய்யனுக்கும் பிடித்து இருக்கு… பிடித்தவங்களை கல்யாணம் செய்து வைக்காது போனா தான் தப்பே…” என்ற மகனின் பேச்சில்,
கிருஷ்ண மூர்த்தி.. முதன் முறையாக நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பின்… விசுவநாதனிடம் “உங்களை ஹீரோவா நினைக்கிற உங்க மருமகன்.. சொல்றது கேட்டுதா மிஸ்டர் விசுவநாதன்…
விரும்பினவங்களை பிரித்து வேறு ஒருவங்களை திருமணம் செய்து வைத்தால் தான் அது தப்பாம்… நீ எனக்கு செய்ததை உங்க மருமகனுக்கு நான் சொல்லவா…?” என்று கேட்ட கிருஷ்ண மூர்த்தியே அவரின் பேச்சுக்கு எதுவும் பேசாது அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த விசுவநாதனின் பார்வை அவரையும் மீறி சாரதாவை பார்க்க.
கிருஷ்ண மூர்த்தியுமே விசுவநாதனின் பார்வையை தொடர்ந்து அவரின் பார்வை செல்ல.. இப்போது கிருஷ்ண மூர்த்தி பார்வை வட்டத்திற்க்குள் விழுந்தார் சாரதா.. அதிர்ச்சி.. இந்த வார்த்தை ஒரு வார்த்தை தான்.. ஆனால் கிருஷ்ண மூர்த்தி சாரதாவை பார்த்த நொடி… அதிர்ச்சி என்ற ஓரு வார்த்தைக்குள் அடக்க முடியாத அளவுக்கு அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார்.. அதோடு இப்போது சித்தார்த்தின் முகம் யாரின் பிரதிபலிப்பு என்று தெரிந்த நொடி… கிருஷ்ண மூர்த்திக்கோ திரும்பவுமா…? இப்போது கிருஷ்ண மூர்த்தி சித்தார்த்தையும் சாரதாவையுமே மாறி மாறி பார்த்தவர்.. சித்தார்த்திடம்..
“உங்க அம்மாவை எந்த இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்து நீ நிறுத்தி இருக்க என்று உனக்கு தெரியுமாப்பா…?” என்று கேட்ட கிருஷ்ண மூர்த்தியை தான் யார் என்று சித்தார்த்துக்கு தெரியாமல் போனது…
சாரதாவோ தன் பேச்சுக்கு எந்த பதில் பேச்சும் பேசாது ஒரே இடத்தில் பார்வை பதித்து கொண்டு இருந்த மருமகளின் பார்வை தொடர்ந்து அவர் பார்வை தொடர்ந்து சென்ற அவரின் பார்வை வட்டத்திற்க்குள் அனைவரும் விழுந்தனர்…
தன் முன் நாள் காதலன்… கிருஷ்ண மூர்த்தியும்.. அந்த காதலுக்கு வில்லனாக போன விசுவநாதனும்… இரண்டு நாட்களாக எது நடக்க கூடாது என்று பயந்து பயந்து தன் தூக்கத்தை தொலைத்துக் கொண்டு இருந்தாரோ.. அது தன் முன் மகன் வடிவில் வந்து நிற்க. இதற்க்கு மேல் எதுவும் தாங்கும் சக்தி தன் தனக்கு இல்லை என்று.. தரையில் சாய்ந்து விட்டார்.
ஒவ்வொரு பக்கத்தில் இருந்து சாரதா விழுவதில் அத்த.. ம்மா. என்று சாரதாவை நோக்கி ஒட..
கிருஷ்ண மூர்த்தியோ…. “ரது…” என்று அழைத்து கொண்டு அனைவருக்கும் முன் ஓடியவர்… அருகில் சென்றவர் சாரதாவை தொடாது தொட முடியாது நிலையில் நின்று விட.
மகி தன் அத்தையை மடி தாங்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள் என்றால் சித்தார்த் மகியின் அருகில் அமர்ந்தவன் தன் அன்னையின் கன்னம் தட்டி..
“ம்மா ம்மா என்னை பாரும்மா பாரும்மா…” என்று தட்டி எழுப்ப முயன்றானே தவிர… அவனால் தன் தாயை கண் விழிக்க செய்ய முடியவில்லை,.
குருமூர்த்தி தான் சட்டென்று அவர்கள் அருகில் சென்றவன்.. சாரதாவை தூக்கி கொண்டான்…
சித்தார்த்தும் குருமூர்த்திக்கு முன் ஓடியவன் காரை திறந்தவன் தன் கழுத்தில் இருந்த மாலையை காரின் பின் பக்கம் வீசி விட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான் குருமூர்த்தியுமே காரின் பின் பக்கம் அமர்ந்து சாரதாவை தாங்கி கொள்ள.
சித்தார்த்..
“மகி சீக்கிரம் வா…” என்ற அழைப்புக்கு காத்துக் கொண்டு இருந்தவள் போன்று சித்தார்த் அழைப்புக்கு ஓடி போய் தன் அத்தான் பக்கத்தில் அமர்ந்து கொண்டதும் திரும்பவும் இன்று ஸ்ருதியை அழைத்து கொண்டு இருந்த மருத்துவமனையை நோக்கி கார் சென்றது…
மகி காரில் சென்று கொண்டு இருந்த போதே தன் மாமாவுக்கு அழைத்து அனைத்துமே சொல்லி விட்டவள் காரை செலுத்திக் கொண்டு இருந்த சித்தார்த்திடம்.
“எந்த ஆஸ்பிட்டலுக்கு போகிறோம்..?” என்று கேட்டவளின் தொண்டை அடைக்க கர கரத்த குரலில்.. தான் செல்லும் மருத்துவமனையின் பெயர் சொல்ல.. அது மகி சொல்லாமலேயே ராம் சந்திரன் காதில் விழுந்து விட்டது..
அதனால் நான் வந்து விடுறேன் மகிம்மா பயப்பாடாதே நான் வந்து விடுகிறேன்..” என்று சொன்னவரின் குரலில் அத்தனை வேதனை ..
பாவம் அவருக்கு தன் மகன் திருமணம் செய்து கொண்டான்.. அதன் அதிர்ச்சியில் மனைவிக்கு மயக்கம்.. அதற்க்கே. இனி அடுத்து என்ன.. தன் மனைவியை எப்படி தேற்றுவது என்ற கவலையும், தன் மகனின் செயலில் வேதனையும் கொண்டவருக்கு… தன் மகன் யாரின் பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்ற விவரம் தெரிந்தால், அதுவும் இன்று யார் யாரை எல்லாம் தன் மனைவி பார்த்தார் என்ற விவரம் தெரிய வந்தால் ராம் சந்திரனின் மன நிலை எப்படி இருக்குமோ…
இங்கு மகி அனைத்தும் சொன்ன பின் பேசியை வைத்தவள் தன் அத்தான் பக்கம் பார்வையை திருப்பவில்லை… சித்தார்த் கவனித்தான் தான்.
அதுவும் தன்னை உறவு முறை வைத்து அழைக்காது பேசியவளின் மகியின் இந்த பேச்சு சித்தார்த்துக்கு புதியது… ஏற்கனவே தன் அன்னையின் இந்த நிலையில் மனம் வருந்தி இருந்தவன் தன் அத்தை மகளின் இந்த ஒதுக்கத்தில் இன்னுமே ஒரு மாதிரியான நிலையில் தான்…
பின் இருக்கையில் அமர்ந்திருந்த குருமூர்த்தியோ…. முன் இருக்கையில் அமர்ந்திருந்த மகியின் தோள் தொட்டு…
“நீ படித்த பெண் தானே.. உங்க மாமா கிட்ட சும்மா மயக்கம். இந்த ஆஸ்ப்பிட்டலுக்கு வாங்க என்று மட்டும் சொல்லி இருந்து இருக்கலாம்.. அவருமே வயது ஆனவர் தானே… இந்த பதட்டத்தில் எப்படி கார் ஓட்டிட்டு வருவார்.. ட்ரைவர் அது போல் எல்லாம் இல்லை தானே…” என்று குருமூர்த்தி சொன்ன வார்த்தையில் தான் மகிக்கு தன் தவறு புரிந்தது.. ஆனால் தன் தோள் மீது கை வைத்த குருமூர்த்தியின் இந்த செயலை அவள் உணராது போனாலுமே சித்தார்த் உணர்ந்தான்.
அதன் தொட்டு… “ வாயில் சொன்னால் போதும் மிஸ்டர்… குருமூர்த்தி தொட்டு தான் சொல்ல வேண்டும் என்பது கிடையாது…” என்ற சித்தார்த்தின் இந்த பேச்சில் சித்தார்த்தை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்த குருமூர்த்தி.
“ஹா ஹா அப்படியா…?” என்று கேட்டவன். அதன் பின் மருத்துவமனை வந்து அடையும் வரை யாரும் பேசவில்லை…