Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...12...1

  • Thread Author
அத்தியாயம்….12…1

இங்கு சித்தார்த் தன் தாயை அழைத்து சென்றதுமே கோயில் வாசலில் தனித்து நின்று கொண்டு இருந்த ஸ்ருதியிடம் வந்த விசுவநாதன் தான் தன் அதிர்ச்சியில் இருந்து விலகி..

இனி என்ன நடந்தாலுமே சமாளித்து தான் ஆக வேண்டும்… பார்த்து கொள்ளலாம்.. திருமணம் முடிந்து விட்டது.. சித்தார்த் தன் மகளின் கழுத்தில் விருப்பட்டு தானே தாலி கட்டியது… என்று தனக்கு தானே தைரியம் அளித்து கொண்ட விசுவநாதன்… மகளிடம் சென்றவர்..

“வாம்மா போகலாம்.. குரு கிட்ட கேட்கிறேன்.. சித்தார்த் அம்மாவை எந்த ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க என்று.. ”

விசுவநாதன் ஓரு மருமகளாக தன் மகள் இப்போது அங்கு இருக்க வேண்டும் என்று நினைத்து ஸ்ருதியை அழைத்தார்..

கிருஷ்ண மூர்த்தியோ… விசுவநாதனிடம்.. “ என்னப்பா புதுசா சித்தார்த் அம்மா என்று மரியாதை எல்லாம் கொடுத்துட்டு பேசுற….. நீ அவங்களை ஆள் மயக்கி என்று தானே சொல்லுவ…” என்று முப்பது வருடங்கள் முன் தன் தங்கை காஞ்சனா விரும்பிய தன்னை சாரதாவும் விரும்பிகிறாள் என்று கேள்விப்பட்ட அன்று சாரதாவை பற்றி சொன்ன வார்த்தையை இப்போது கிருஷ்ண மூர்த்தி விசுவநாதனுக்கு நியாபகம் படுத்தினார்…

ஏற்கனவே சித்தார்த் அவன் அம்மா கீழே விழுந்ததுமே தன்னை விடுத்து ஓடி போன போது கூட அவள் கவலை படவில்லை..

அவளுமே பின் சென்றால் தான்.. ஆனால் காரில் ஏறி அமரும் முன் அவன் கழுத்தில் போட்டு இருந்த மாலையை வீசி ஏரிந்ததில் அவன் தன்னையே தூர ஏரிந்தது போலான ஒரு உணர்வு அவளுக்கு…

அதோடு மருத்துவமனைக்கு தன்னை அழைக்காது மகியை அழைத்ததில் இன்னுமே அவள் தனித்து உணர்ந்தவளுக்கு, தன் தாய் மாமனின் இந்த பேச்சில் இன்னுமே குழம்பி போனவளாக.. என்ன இது என்பது போல தன் மாமனையும் தந்தையையுமே மாறி மாறி பார்த்தவள் பின் தன் மாமனிடம்..

“மாமா என்ன மாமா இது பேச்சு..? எங்க அப்பாவை உங்களுக்கு பிடிக்காது தான்.. ஆனா நான் என்ன மாமா செய்தேன்…?” என்று வலி நிறைந்த குரலில் பேசிய ஸ்ருதியின் பேச்சு ஏனோ கிருஷ்ண மூர்த்திக்கு இறக்கத்தை கொடுக்கவில்லை.

தாய் தந்தை இல்லாது.. என்ன இது திருட்டு தனமான ஒரு கல்யாணம். அதுவும் அப்படி இறந்து விடுவேன் என்று சொல்லி சித்தார்த்தை யோசிக்க விடாது.. இது ஒரு எமோஷனல் ப்ளாக் மெயில் தானே..

இப்போது கிருஷ்ண மூர்த்திக்கு சித்தார்த் ஸ்ருதி.. விசுவநாதன் ஏன் தன் மகனை விட.. இனி சாரதா எப்படி இவர்களை எதிர் கொண்டு அமைதியாக இருப்பாள்.. தனக்கு அநீதி செய்த வீட்டு பெண் தான் தன் மருமகள்… இதை எப்படி அவளாள் ஏற்றுக் கொள்ள முடியும்..?

அதோடு தன் வாழ்வும் அவள் வாழ்வும் வெவ்வேறு என்று ஆன பின் இது வரை நானும் அவளும் பார்த்து கொள்ளும் படியான சூழல் வந்தது இல்லை.. ஆனால் இனி.. அதுவும் ராம் சந்திரனையும்.. இனி பார்க்கும் படியான நிலை…

இதனால் ராமின் மனநிலை என்று கிருஷ்ண மூர்த்தின் எண்ணம் முழுவதுமே சாரதா அதனை சுற்றிய இருக்க ஸ்ருதியின் இந்த பேச்சு சரியாக படவில்லை..

ஆனாலுமே அனைத்துமே எதிர் கொண்டு தான் ஆகவேண்டும்.. இதன் நடுவில் விசுவநாதன் குருவிடம் எந்த மருத்துவனைக்கு அழைத்து சென்று உள்ளான் என்று கேட்டு அறிந்து கொண்டவர் தன் மகளிடம்.

“நீ இருந்த ஆஸ்பிட்டல் தான் போகலாம் வா..” என்று மகளை அழைத்தவர் மனைவியிடம்..

“என்ன நீ அப்படியே நிற்குற…” என்று தாமரையிடம் ஒரு அதட்டல் போடார்.. பாவம் அவர் தாமரையோ என்ன என்று சொல்ல முடியாத நிலையில் அவரின் நிலை இருந்தது..

தாமரையினால் சாரதாவை மற்றவர்கள் போல சட்டென்று அடையாளம் கண்டுப்பிடிக்க முடியவில்லை.. தாமரை சாரதாவை ஒரே ஒரு முறை அதுவும் போட்டோவில் தானே பார்த்தது..

அவள் சாரதாவை அறிந்தது எல்லாம் சாரதாவிடம் இருந்து தன் அண்ணனுக்கு வரும் கடிதம் மூலம் தானே. இப்போது தாமரையின் பயம் எல்லாம் தான் செய்த செயலின் தாக்கம் தன் மகளை தாக்கி விடுமோ என்று தான்…

ஆம் சாரதா கிருஷ்ண மூர்த்தியின் காதலில் விவகாரம் முதலில் தாமரையின் மூலமாக தான் கிருஷ்ண மூர்த்தி வீட்டிற்க்கு தெரிய வந்தது என்று சொல்வதை விட. விசுவநாதனுக்கு தெரிய வந்தது என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்…

தாமரைக்கு அன்று தான் செய்த செயலை இன்று வரை நினைக்கவில்லை.. ஆனால் இன்று அது தன் மகளின் வாழ்க்கையை தாக்குமா என்றதில் அனைத்துமே நினைவுக்கு வந்து விட்டத்தில் தான் தன் கணவன் ஒரு அதட்டல் போடும் வரை திக் பிரம்மை பிடித்தது போல நின்று கொண்டு இருந்தவர் பின் குடும்பமாக மருத்துவமனைக்கு சென்றது..

அதற்க்குள் கிருஷ்ண மூர்த்தியின் கார் சாரதாவை அழைத்து சென்று இருந்த அந்த மருத்துவமனையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது விசு மகளிடம் சொன்ன போதே..

இதோ மருத்துவமனையில் சாரதாவை அவசர சிகிச்சை பிரிவில் தான் சேர்த்து இருந்தனர்… அனைவருமே அங்கு தான் இருந்தனர்..’அனைவரும் என்றால் ராம் சந்திரனையுமே சேர்த்து தான்.

கிருஷ்ண மூர்த்தி வரும் முன்பே ராம் சந்திரன் வந்து விட்டார்.. அவர் வரும் போதே சாரதாவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று விட்டு இருந்தனர்..

அதனால் பயந்து தனித்து நின்று கொண்டு இருந்த மருமகள் பக்கம் தான் ராம் சந்திரன் சென்றது..

சாரதாவை பரிசோதனை செய்த மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லுங்கள் என்று சொன்னதுமே மகி மிகவும் பயந்து போய் விட்டாள்..

ஏற்கனவே தன் தாய் தந்தையை இழந்து ஒரு பெரிய இழப்பில் இருக்கும் மகிக்கு, தன் ஒரே ரத்த சொந்தமான அத்தையின் இந்த நிலையை பார்த்து பெண்ணவள் மிகவும் பயந்து போய் விட்டாள்..

சித்தார்த்துமே பயந்து தான் போய் விட்டான். இதில் தன்னால் தானே என்ற குற்றவுணர்வுமே அவனுக்கு சேர்ந்து விட்டது. இருந்துமே இப்போது மகிக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்று சித்தார்த் அவள் பக்கத்தில் செல்ல.

அவளோ அவனை முறைத்து பார்த்து அவனை விட்டு கொஞ்சம் தூரம் போக… அவள் பின் செல்ல பார்த்த சித்தார்த்திடம் குருமூர்த்தி…

“அவளை கொஞ்சம் ப்ரீயா விடுங்க சித்தார்த்,.. இப்போ நீங்க பேசினா இன்னும் தான் இரிடேட் ஆவா…” என்ற இந்த பேச்சில் சித்தார்த்.. குரு மூர்த்தியை ஒரு மாதிரியாக பார்த்தான்.. எனக்கும் என் மாமா மகளுக்கும் இடையில் இவன் யார் என்பது போல..

அதுவும் குரு மூர்த்தி மகியை அவள் இவள் என்பது போலான இந்த உரிமை பேச்சு சித்தார்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

அதை சட்டென்று சொல்லியும் விட்டான்… “அவளை கொஞ்சம் மரியாதை கொடுத்து சொல்லுங்க மிஸ்ட்டர் குரு மூர்த்தி…” என்று சொன்னவனின் பேச்சில் குரு மூர்த்தியின் புருவங்கள் இரண்டும் யோசனையில் சுருங்கியது..

பின்… “ நீங்களுமே இப்போ அவள் என்று தான் என் கிட்ட சொன்னிங்க சித்தார்த்.. அதோட என்னை விட சின்ன பெண் தானே…” என்று சொன்ன குரு மூர்த்தியின் இந்த பேச்சுக்கு சித்தார்த் பதில் அளிக்க முயலும் சமயம் தான் ராம் சந்திரன் அங்கு வந்தது…

மருமகள் தனித்து நின்று கொண்டு இருப்பதை பார்த்து அவளிடம் சென்றதும். மகியும் மாமனை பார்த்ததுமே

“மாமா எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு மாமா. அத்தைக்கு எதுவும் ஆகாது தானே மாமா…?” என்று கேட்டவளிடம்..

“உன் அத்தைக்கு ஒன்னுமே ஆகாது டா தங்கம்… உன்ன நினச்சாவது. அவள் வந்து விடுவா நீ பாரேன்..” என்று மருமகளுக்கு தைரியம் அளித்து கொண்டு இருந்தாலுமே, ராம் சந்திரன் மனதிற்க்குள்ளும் மகியை போல பயந்து கொண்டு தான் இருந்தது.

சித்தார்த் ராம் சந்திரன் பக்கம் வந்தவர்… “ ப்பா நான் நான்…” என்று ஏதோ சொல்ல வந்த மகனை அவர் திரும்பியும் பார்க்கவில்லை..

பின் தான் அடுத்து கிருஷ்ண மூர்த்தி அந்த மருமத்துவமனைக்கு சாரதா எங்கு அனுமதிக்க பட்டு இருக்கிறார் என்று விசாரித்து அங்கு வந்தார்..

அவர்கள் இருக்கும் தளத்தின் நுழைவாசலில் கிருஷ்ண மூர்த்தி தொடும் போது தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இருந்த மருமகளின் தலையை ஆறுதலாக தடவி விட்டு கொண்டு இருந்த ராம் சந்திரனின் மனதில் அத்தனை வேதனை..

தன் மனைவி… இப்படி படுத்து கொண்டு இருந்ததில், தன் ஒரே மகன் வீட்டிற்க்கு தெரியாது செய்த இந்த காரியத்தை நினைத்து என்று இரண்டு பட்ட சிந்தனையில் இருந்த ராம் சந்திரனின் கண்கள் நுழைவாசலில் தான் பதித்து இருந்தது…

கிருஷ்ண மூர்த்தி வருவதை ராம் சந்திரன் பார்த்தார் தான்.. ஆனால் உருவம் பார்த்தவரின் கண்கள் தன் மனதில் பதியாததில் தூரத்தில் யாரோ நடந்து வருகிறார்கள் என்ற அளவில் தான் ராம் சந்திரன் தன் நினைவில் பார்த்து கொண்டு இருந்தது…

ஆனால் கிருஷ்ண மூர்த்தில் உருவம் அருகில் நெருங்க நெருங்க மகியின் தலையை தடவி விட்டு கொண்டு இருந்த ராம் சந்திரனின் கைகள் அப்படியே நின்று விட்டது… அதுவும் அவரை நோக்கி குருமூர்த்தி..

“ப்பா…” என்று அழைத்து கொண்டு சென்றதும்.. கிருஷ்ண மூர்த்தி மகனிடம் கோபமாக..

“நீ என்ன காரியம் செய்து வைத்து இருக்க தெரியுமா குரு…? நீ எத்தனையோ விசயம் எனக்கு பிடிக்காது செய்து இருக்க. ஆனா இது இது…?” தீவிர சிகிச்சை பிரிவையும் ராம் சந்திரனின் பக்கம் கை காட்டி…

“இவங்களுக்கு ரொம்ப ரொம்ப அநியாயம் செய்துட்ட குரு… “ என்று சொன்ன தந்தையின் பேச்சில் முன்பு இருந்த கோபத்தை விட வேதனையே அதிகம் இருந்ததை குரு மூர்த்தி உணர்ந்து தான் இருந்தான்..

அதுவும் சித்தார்த்தின் அன்னை விழுந்த போது சித்தார்த் அம்மா என்று ஓடினான்.. தான் தன் தாய் வயது உடைய பெண்மணி விழுந்தால் என்றதில் பதட்டத்தில் ஓடியது..

மகி கதறி அத்தை என்ற உறவு முறையில் சாரதாவை மடி தாங்கி கொண்டாள்..

ஆனால் கிருஷ்ண மூர்த்தி… “ரது.” என்று அழைத்து கொண்டு இந்த வயதில் ஓடி வந்ததும் பின் சாரதா அவர்களை நெருங்க முடியாது தன் கையை இறுக்க பிடித்து கொண்டதையும் குருமூர்த்தி கவனித்தான் தான்.. புரிந்து விட்டது.. இன்னது என்று சரியாக தெரியவில்லை என்றாலுமே ஏதோ இருக்கிறது என்பதை குரு மூர்த்தி புரிந்து கொண்டு விட்டான்..

இதை அனைத்துமே குரு மூர்த்தி மட்டுமா கவனித்தான்.. சித்தார்த்துமே தான்.. ஆனால் காலம் கடந்து கவனித்து புரிந்து கொண்டால், யாருக்கு என்ன லாபம்.. கதை சினிமாவில் வருவது போல நிஜத்தில் நடக்கும் இந்த இரண்டாம் பாகத்தை அனைவருமே சந்தித்து தானே ஆகவேண்டும்…

குருமூர்த்தி மட்டும் கிருஷ்ண மூர்த்தியின் இந்த பேச்சுக்கு அமைதியாகி விடவில்லை.. சித்தார்த்துமே கிருஷ்ண மூர்த்தி வந்ததுமே அவரின் பேச்சை கவனித்தான்.. அவனுக்குமே மனதில் பல குழப்பங்கள்…

இவர்களின் குழப்பங்களை அதிகம் செய்தது போல அடுத்து வந்த விசுவநாதனை கிருஷ்ண மூர்த்தி மட்டும் கோபமாக முறைக்கவில்லை… இப்போது ராம் சந்திரனுமே தான் முறைத்து பார்த்தார்.. அதுவும் ராம் சந்திரனின் அந்த பார்வையில் கோபத்தை விட.. சீ நீ இவ்வளவு தானா என்பது போலான அந்த பார்வை..

அந்த பார்வையில் விசுவநாதன் தலை குனிந்து நின்று இருக்க… ஸ்ருதியோ சித்தார்த்தின் பக்கம் சென்றவள் அவன் கை பிடிக்க முயல.. சித்தார்த்தோ தன் தந்தையை ஒரு வித சங்கடத்துடன் பார்த்து கொண்டு ஸ்ருதியை விட்டு கொஞ்சம் தூரம் நின்றதையும் பார்த்த ராம் சந்திரனுக்கு புரிந்து விட்டது..

மனைவியின் இந்த நிலைக்கு காரணம் மகனின் திருமணம் மட்டும் கிடையாது.. திருமணம் செய்து கொண்ட பெண்ணும்… அதன் விளைவாக அவர்களின் உறவுகளை பார்த்த தாக்கமும் தான் என்று..

ஆம் மகி தன் அத்தானின் திருமணத்தை பற்றி சொன்னாளே தவிர.. யாரை திருமணம் செய்து கொண்டான் என்று அந்த பெண்ணின் பெயரை சொல்லவில்லை..

மகிக்கு ஸ்ருதி என்பவள் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்.. தனக்கு தோழியாக அவளே வந்து நட்பு கொண்டாள்.. இப்போது மகிக்கு புரிந்தது ஏன் வலிய வந்து தன்னிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டாள் என்பது..

அதனால் ஸ்ருதியை தான் சித்தார்த் திருமணம் செய்து கொண்டான் என்பதை சொல்லவில்லை..

ஆனால் ராம் சந்திரனுக்கு தெரியும்.. ஸ்ருதி என்பது யார் என்று.? சென்னையில் விசுவநாதனை தெரியாது போனால் தான் அதிசயம்.. விசுவநாதன் பெண் ஸ்ருதி என்பதும் தெரியும்.. அவள் மகியின் தோழி என்பதும் அவருக்கும் தெரியும்..

ஆனால் அவர்களின் நட்பில் அவர் இடை புகவில்லை.. அதற்க்கு காரணம் பெரியவர்கள் செய்த செயல்களை இளையவர்களுக்கு கடத்த அவருக்கு பிடிக்கவில்லை..ஆனால் இப்போது சொல்லி இருக்க வேண்டுமோ… குறைந்த பட்சம் தன் மகனிடமாவது ஸ்ருதியை பற்றி சொல்லி இருக்க வேண்டுமோ என்று நினைத்த அதே வேளையில்..

தன் மகன் இது போல தன்னிடம் படிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வான் என்று அவர் நினைத்தும் பார்க்கவில்லையே…

மகனுக்கு தாங்கள் திருமணம் செய்ய நினைத்த மகியுமே அந்த கல்லூரியில் தான் இப்போது படிக்கிறாள்..

ஆனால் தான் திருமணம் செய்யும் பெண்ணை தான் படிப்பிக்கும் கல்லூரியில் சேர்ப்பதும்… தன்னிடம் படிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதும் வேறு வேறு தானே..

அதுவும் ராம் சந்திரன் மகியை தாங்கள் வேலை செய்யும் கல்லூரியில் சேர்க்கும் போதே தன்னை போல தன் மகனுக்கும், தன்னிடம் படிக்கும் பெண்ணை வேறு மாதிரி பார்க்க கூடாது என்பது போலான எண்ணம் இருக்கா..? என்று கேட்டார் தானே… என்று எதை எதையோ நினைத்து கொண்டு இருந்த போது தான் சாரதாவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் அங்கு வந்தது..

சாரதாவை இங்கு சேர்த்த குரு மூர்த்தியின் பக்கம் தான் அந்த மருத்துவர் முதலில் சென்றது.

ஆனால் குருமூர்த்தி தான் ராம் சந்திரன் பக்கம் கை காட்டி… “ அவர் தான் பேஷண்ட் ஹஸ்பண்ட்..” என்று சொல்ல. இப்போது அந்த மருத்துவர் ராம் சந்திரனிடம் சென்றவர்…

“இதயத்தில் அடைப்பு இருக்கு… சர்ஜரி எல்லாம் தேவையில்லை… ஆஞ்சியோ செய்தா போதும்.. ஆனால் அதுக்கு முன்ன அவங்க கொஞ்சம் ஸ்டப்புல்லா ஆகனும்… அவங்க ஏதோ நினைத்து அவங்க ட்ஸ்ஸே இருக்காங்க போல.. இப்போ கூட மகி… மகி என்று தான் சொல்லிட்டு இருக்காங்க..” என்று சொன்னவர்..

மகியை கூட்டிட்டு போங்க.. ஒவ்வொருத்தரா போய் பாருங்க.. ரொம்ப பேர் வேண்டாம்.. அவங்க டென்ஷன் ஆகாது பார்த்துக்கோங்க…” என்று சொல்ல.

ராம் சந்திரன் தான் மகியோடு சாரதா இருந்த அறைக்கு சென்றது.. இவர்கள் சென்ற போது சாரதா கண் முழித்து தான் படுத்திருந்தார்…

ஏதோ யோசித்து கொண்டு படுத்திருந்த சாரதா கணவனை கண்டதுமே கண்கள் கலங்க தொடங்கி விட்டது.. அதை கவனித்த ராம் மனைவியின் கை பிடித்து கொண்டவர்..

ஒரே வார்த்தை தான் சொன்னது… “ சாரும்மா நான் இருக்கேன்.. எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீ எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை… நீ நல்ல படியா வீட்டுக்கு வந்தா தான் எனக்கும் நம்ம மகிக்குமே தைரியம் புரியுதா…?” என்ற கணவனின் முதல் பேச்சில் மனது திடம்பட்டு கொண்டு தான் வந்தது..

ஆனால் மகி என்றதுமே சாரதாவின் கண்கள் கலங்கி விட்டது… “நம்ம மகி.” என்று மருமகளின் பெயரை சொல்லும் போதே சாரதாவின் கண்கள் இன்னுமே கலங்கி போய் விட.

இத்தனை நேரம் மாமா அத்தையின் பேச்சை கேட்டு கொண்டு அவளுமே பயந்து போய் பார்த்து கொண்டு இருந்த மகி.. அத்தை தன்னை நினைத்து கவலைப்படுவதை பார்த்து சாரதாவின் இன்னொரு கையை பிடித்து கொண்ட பெண்ணவள்..

“அத்த எனக்கு என்ன அத்த..? அம்மா அப்பாவ போல பாசம் காட்ட அத்த மாமா இருக்க… அப்பா நினச்ச படிப்பை படிக்க போறேன்… என்னை நினைத்து கவலைப்பட என் கிட்ட என்ன குறை இருக்கு அத்த.. இப்படி நீங்க அழ…? நீங்க இப்படி அழுவது உங்க மகன் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தா தான் எனக்கு கல்யாணமே இல்லேன்னா என்னை யாரும் சீண்ட மாட்டாங்க என்பது போல இருக்கு அத்த..” என்ற மகியின் இந்த பேச்சு சாராதாவிடம் நன்றாகவே வேலை செய்தது…

“என் மருமகளுக்கு என்ன.? என் அண்ணன் விரும்பிய படிப்பு படிச்சு வேலை பார்க்க ஆரம்பித்தா போதும்.. நாம மாப்பிள்ளை என்று பார்க்க ஆரம்பித்து விட்டால். மாப்பிள்ளை க்யூ கட்டி வந்து நிற்ப்பாங்க..” என்று சாரதா மருமகளை பற்றி பெருமையாக பேச.

“ஆ இது போதும் அத்த. நீங்க தைரியமா இருங்க..” என்று பேசிய மகியையே பெருமையாக பார்த்து கொண்டு இருந்த சாரதாவை பார்த்த ராம் சந்திரன் என்ன நினைத்தாரோ.

மகியிடம்.. “நீ கொஞ்சம் வெளியில் இரும்மா…” என்ற மாமனின் பேச்சுக்கு மகி எந்த எதிர் பேச்சும் பேசாது அமைதியாக வெளியில் வந்தாள்..

வெளியில் நின்று கொண்டு இருந்தவர்கள் மகியை பார்த்ததுமே ஆவளோடு ஏதாவது சொல்வாளா என்று பார்த்தார்கள்.. கூடுதலாக சித்தார்த்.. மகியின் அருகில் சென்றவன்..

“ மகிம்மா…” என்ற அவனின் அழைப்பை என்ன யாரையும் சட்டை செய்யாது திரும்பி நின்று கொண்டாள்..

ராம் சந்திரம் வெளியில் வராததினால், மற்றவர்கள் சாரதாவை பார்க்க செல்லாது போக. இங்கு அறையிலோ…

மகி வெளியிறியே உடன்.. “ சாரும்மா உனக்கு எதை நினைத்து கவலை.. எதை நினைத்து பயம் சாரும்மா. இல்ல என் மீது நம்பிக்கை இல்லையா…?” என்று கேட்ட கணவரின் கையை கெட்டியாக பிடித்து கொண்ட சாரதா..

“உங்க மீது நம்பிக்கை இல்லாமலோ… இல்ல அவங்களை பார்த்து பயந்தோ கவலையோ கூட இல்லங்க.. என் வளர்ப்பு தப்பா போச்சே. அதோட திரும்ப திரும்ப அவன் கிட்ட தோத்தது போல.” என்ற மனைவியின் இந்த பேச்சை தொடர விடாது மனைவியின் வாய் மீது கை வைத்து மூடிய ராம் …

“என்ன இது பேச்சு சாரும்மா.. தோற்பது ஜெயித்தது என்று.. உங்க அப்பா என் கையில் தாலி எடுத்து கொடுத்த போது என்ன சொன்னாரு என்று உனக்கு நியாபகம் இருக்கா..?” என்று கேட்ட ராம் மனைவியின் பதிலை எதிர் பாராது அவரே…

“ஒருத்தவங்க மனைவியை இன்னொருத்தர் கட்ட முடியாது.. எனக்கு என் மகளை உனக்கு கொடுக்க தான் ஆசை… ஆனா இடையில் என்ன என்னவோ நடந்துடுச்சி… கடைசியில் நான் ஆசைப்ப முடிச்சை தான் அந்த கடவுள் போட்டு இருக்கார்… என்று சொல்லி தான் முப்பது வருஷம் முன் தாலியை என் கையில் கொடுத்து உன் கழுத்தில் கட்ட சொன்னது. இன்ன வரை… இந்த முப்பது வருஷமா உன் கணவன் என்ற இந்த உறவில் சந்தோஷமா நிம்மதியா இருக்கேன் சாரும்மா.

அதே போல இப்போ நான் சொல்றேன்… நம்ம மகிக்கு புருஷன் சித்தார்த் இல்ல… மகிக்கு உண்டானவன் இனி தான் பிறக்க போறது இல்ல. பிறந்து வளர்ந்து ராஜாவாட்டம் வருவான்.. மகி சித்தார்த்தை கல்யாணம் செய்து கொண்டு இருந்து இருந்தால் கூட இந்த அளவுக்கு சந்தோஷமா இருந்து இருப்பாளா.. என்று நீயே நினைக்கும் அளவுக்கு அவள் சந்தோஷமா இருப்பா பாரு.. அதோட வெளியில் நிற்குறவங்களை பத்தி நீ எப்போவும் கவலை பட கூடாது..

அவங்க எல்லாம் உன்னை பார்த்து தான் வெட்கி தலை குனியனும்.. பயப்படனும்.. நீ கிடையாது… ஒரு நல்லாசிரியர் விருது வாங்கினவரோட தங்கை.. நானுமே இது வரை என் டீச்சிங் துறையில் எந்த கெட்ட பெயருமே எடுக்காத ஒரு கவுரவ மிக்கவன் நான்.. நீ என் மனைவி… நீ… எந்த நிலையிலும் நீ தைரியாம நிமிர்ந்து நிற்கனும்.. சாரும்மா புரியுதா..? உனக்கு…” என்ற கணவனின் பேச்சில் சாரதாவின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது…
 
Active member
Joined
May 12, 2024
Messages
198
Ram 🥰🥰🥰 Gem of a person…
Ithukke intha nilai na Sharadha annan family ah konnathu antha Shruthi and antha thappai maraichathu antha Vishuwamathan and Guru nu theriya vadhaal???

Siddarth atleast un mama family kkaga vabathu ne nyayam sei
 
Top