அத்தியாயம்…12…2
தன் பேச்சுக்கு பிரதிப்பலிப்பாக தன் மனைவியின் முகம் தெளிவடைந்ததை கண்ட ராம்…
“குட்… இப்படி தான் இருக்கனும்.. புரியுதா சாரதா… இதை திரும்பவும் என்னை சொல்ல வைக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்…” என்ற கணவனின் பேச்சுக்கு புரியுது என்பது போல தலையாட்டியவரிடம்..
“ஓகே ரெஸ்ட் எடுத்துக்க… சீக்கிரமா வீட்டுக்கும் வந்துடும்மா மகி ரொம்ப பயந்து போய் இருக்கா.…” என்று விட்டு அறையை விட்டு செல்ல பார்த்த கணவனை சாரதா..
“என்னங்க…” என்று அழைத்ததில் திரும்பி பார்த்த ராம் சந்திரன்…
“யாரையும் உன்னை பார்க்க விட மாட்டேன் சாரும்மா.. ஆனாலும் நீ ஒரு நாள் அவங்களை பார்த்து தான் ஆகனும்… தைரியமா எல்லாத்தையுமே எதிர் நோக்கனும்.. முப்பது வருஷம் முன்னாடி இருக்கும் சாரதா இல்ல நீ… புரியும் என்று நினைக்கிறேன் ..” என்று சொன்ன ராம் சந்திரன் வெளி வந்த பின்..
சித்தார்த் உள் நுழைய பார்க்க.. மகனை பார்த்த ராம் சந்திரன்.. “ சாரி சித்தார்த்… நீ உள்ளே போக முடியாது.. என் ஓய்ப் யாரையும் பார்க்க விரும்பல…” என்று சொன்னவரை வருத்ததுடன் பார்த்த சித்தார்த்..
‘ப்பா நான் அம்மா கிட்ட கொஞ்சம் பேசனும் பா.. நான் எதுக்கு இந்த கல்யாணம் பண்ணேன்..” என்று விளக்கம் சொல்ல முயன்ற மகனின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய ராம் சந்திரன்…
“ஒரு சிலதை ஒரு சிலர் கிட்ட சொல்லிட்டு தான் செய்யனும் சித்தார்த்… அப்படி சொல்லாது செய்து முடித்து விட்டா. மத்தவங்க கேட்கும் போது தான் நீ சொல்லனும்.. இப்போ என் மனைவி யாரின் விளக்கத்தையும் கேட்க விருப்பம் இல்லை…” என்ற தந்தையின் பேச்சை மீறி சித்தார்த்துக்கு அன்னையை பார்க்க போக பயமாக இருந்தது.. தன்னால் மீண்டும் அன்னைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று..
சித்தார்த்துக்கே இப்படி என்றால், மற்றவர்கள் யாரும் போகாது இருக்க. இப்போது ராம் சந்திரனின் பார்வை கிருஷ்ண மூர்த்தியின் பக்கம் சென்றது..
அப்போது கிருஷ்ண மூர்த்தியுமே ராம் சந்திரனை தான் பார்த்து கொண்டு இருந்தார்.. இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்த போது அவர்கள் முகத்தில் ஒரு நட்பு தெரிந்தது..
பின் ராம் சந்திரன் தான் மகியின் கை பிடித்து கொண்டு கிருஷ்ண மூர்த்தியின் பக்கம் சென்றது.. இப்போது கிருஷ்ண மூர்த்தியின் முகத்தில் ஒரு விரிந்த சிரிப்பு வந்து தன்னால் ஒட்டிக் கொண்டது..
அதுவும் ராம் சந்திரன்.. “எப்படி இருக்க கிட்டு..?” என்ற விசாரிப்பில்.. அனைத்து தடைகளையும் அகன்று விட்டது போல கிருஷ்ண மூர்த்தி ராம் சந்திரனை அணைத்து கொண்டார்…
“நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க டா…?” என்று கேட்டவரிடம்..
“ம் நேத்து வரை நல்லா தான் இருந்தேன்.. இனி. ..” என்று சொன்ன ராம் சந்திரனின் பார்வை விசுவநாதனை தொட்டு மீண்டது…
இவர்களின் இந்த பேச்சுக்கள் அமைதியான அந்த இடத்தில் அனைவருக்குமே தான் கேட்டது.. கூடவே ராம் சந்திரனின் இந்த பேச்சு கிருஷ்ண மூர்த்திக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் புரியவும் செய்தது..
ஆனால் என்ன என்று தான் தாமரையை தவிர்த்து யாருக்கும் புரியவில்லை… ஆனால் குருவுக்கும் சித்தார்த்துக்கும் மட்டும் லேசாக ஏதோ புரிவது போல் இருந்தது.. ஆனால் அதில் ஒரு தெளிவு இல்லாது இருந்தது என்றால்,
அதுவும் கிருஷ்ண மூர்த்தி ராம் சந்திரனின் இந்த நட்பு ரீதியான பேச்சு.. அதுவும் உரிமையுடன் டா என்று போட்டு அழைத்து பேசிக் கொண்ட அந்த பேச்சில் சித்தார்த் குரு இரண்டு பேருமே அதிர்ச்சியாக பார்த்தார்கள் என்றால்,
குரு மூர்த்தியோ.. அதிர்ச்சிக்கும் மீறி ஆராய்ச்சியும் அதில் தெரிந்தது… ராம் சந்திரனும் , கிருஷ்ண மூர்த்தியும் அதை கவனித்தனர் தான்…
கேட்டால் சொல்லி விட வேண்டியது தான்.. இதில் மறைக்க ஒன்றும் இல்லை.. தாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை… தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் நாம் ஏன் பயப்பட வேண்டும்..
கிருஷ்ண மூர்த்திக்கு மகேஷ்வரியை… காட்டி…
“இவள் யார் என்று தெரியுதா கிட்டூ….” என்று ராம் சந்திரன் கேட்ட போது கிருஷ்ண மூர்த்தி..
“தெரியலையே சந்திரா யார்..?”
“சாரதாவோட அண்ணன் மகள் கிட்டு…” என்று ராம் சொன்னதுமே… கிருஷ்ண மூர்த்தியின் பார்வை இப்போது ஆர்வத்தோடும் ஆவளோடும் மகியை பார்த்தவர்..
“நம்ம பெருமாள் மகளா..?” என்று ஆச்சரியத்தோடு கேட்டவர்.. பின்…
“எப்படி இருக்கான்…? நம்ம இரண்டு பேர் கிட்டேயும் அவன் அப்பா காட்டும் அக்கறையில் பொசுங்கி போய் விடுவானே. இப்போ எப்படி இருக்கான்…?” என்று கேட்டவருக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.. மூன்று பேரும் தான் ஒன்றாக படித்தது விளையாடியது சாப்பிட்டது.. ஏன் சில சமயம் பெருமாள் வீட்டில் ஒன்றாக தூங்கியும் இருக்கிறார்கள்..
ஒரு சில காரணங்களால் ஒருவர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. பார்க்க வேண்டும்.. பேச வேண்டும் என்று ஆசை இருந்தாலுமே, நடந்த விசயத்தின் வீரியத்தில் தன் ஆசைகள் அடக்கி இருந்த கிருஷ்ண மூர்த்திக்கு ராம் சந்திரனை பார்த்த உடன்..
அனைத்து கட்டுக்களும் கலைந்தது போலான ஒரு எண்ணம்.. அதுவும் இதில் அதிகம் பாதிக்கப்பட்ட ராம் சந்திரனே வந்து பேசியதில் கேட்டு விட்டார்.
ஆனால் ராம் சந்திரனுக்கு தான் இதற்க்கு உடனே பதில் சொல்லாது அமைதி காக்க..
மகி தான்.. “ அப்பாவும் அம்மாவும் போன வருஷம் ஒரு விபத்தில் இறந்து விட்டாங்க அங்கிள்…” என்றதில் கிருஷ்ண மூர்த்தி அதிர்ச்சியாகி விட்டார்..
“எப்படி எப்படி.. சந்திரா.. அவன் எல்லாத்திலும் நம்மை விட ரொம்ப ரொம்ப நிதானமா தானே இருப்பான்.. யாராவது வந்து மோதிட்டாங்கலா…?” என்று கேட்ட கிருஷ்ண மூர்த்தியிடன் ராம் சந்திரன்..
“யாரும் மோதல டா.. தண்ணி அடிச்சிட்டு இவனே மரத்து மேல மோதி விட்டானாம்…” என்ற ராம் சந்திரனின் பேச்சில்.
கிருஷ்ண மூர்த்தி… “இருக்காது இருக்கவே இருக்காது.. இதுல ஏதோ இருப்பது போல எனக்கு தோனுது சந்திரா..” என்று சொன்னவரிடம் ராம் சந்திரனுமே.
“எனக்கும் அப்படி தான் தோனுது கிட்டூ.. அதுவும் அந்த பக்கம் இருக்கும் எந்த கேமிராவுமே அன்னைக்கு பார்த்து ரிப்பாரா போய் இருக்கு…” என்று ராம் சந்திரன் சொல்ல..
கிருஷ்ண மூர்த்தி… “ எந்த ஏரியா …? எந்த நாள்…? சந்திரா. நான் விசாரிக்க சொல்றேன்..” என்று கிருஷ்ண மூர்த்தி கேட்டார்..
கிருஷ்ண மூர்த்தி தன் ஐ.ஏ. எஸ் பதவியில் இருந்து ஒய்வு பெற்று இருந்தாலுமே, அதற்க்கு உண்டான மரியாதை இருக்க தானே செய்யும்.. அதனால் கேட்க.
ராம் சந்திரனுக்கும் அது புரிந்ததினால் விபத்து உண்டான இடம் நாள் சொல்ல..
இதை கேட்டு கொண்டு இருந்த குரு மூர்த்தியும் விசுவநாதனும்… அவர்களா…? என்று அதிர்ச்சியாகி ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்ட இருவர் மனதிலும் இருக்க கூடாது என்ற எண்ணம் தான்..
தங்கள் வீட்டு பெண் அந்த வீட்டிற்க்கு மருமகள் ஆனால். அந்த வீட்டவர்களை.. அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை குருமூர்த்தியினால் விசுவநாதனுமே தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டார்..
தாமரைக்கு முன்பு தாங்கள் செய்த பாவ கணக்கு மட்டும் தானே தெரியும்.. தன் மகள் அவளுக்கு நினைவு இல்லாத போதும் செய்த விபத்தின் கணக்குகள் அவளுக்கு தெரியாது தானே.. அதனால் இந்த விசயம் தாமரைக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை..
அவருக்கு இருக்கும் கவலை.. தன் மகள் ஸ்ருதியின் வாழ்க்கை …? சாரதாவின் மகனாக சித்தார்த் இருப்பான் என்று அவர் நினைத்து கூட பார்க்கவில்லை… சாரதா பழையதை நினைத்து தன் மகளை வாழ விடாது செய்து விடுவாளோ… தன் மகனிடம் உண்மையை சொன்னால் சித்தார்த் எப்படி தன் மகனோடு வாழ்வான்.. தாமரை அன்றும் சரி.. இன்றும் சரி.. தன்னை பற்றி மட்டும் கவலை பட்டவளாக தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்..
அதோ இதோ என்று சாரதா ஐந்தாவது நாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டார்கள் மகியும் ராம் சந்திரனும்.. கூட அனைத்திற்க்குமே உதவியாக இருந்தது கிருஷ்ண மூர்த்தி தான்.. ஆனால் சாரதா முன் வந்து மட்டும் அவர் நிற்கவில்லை.. அது சாரதாவுக்கு சங்கடத்தை கொடுக்க கூடும் என்று…
மகியும் கிருஷ்ண மூர்த்தியோடு நன்கு பேசினாள்… மகி கிருஷ்ண மூர்த்தியோடு பேசுவதற்க்கு, கிருஷ்ண மூர்த்தி நன்றாக பேசுகிறார் நல்லவர்.. அந்த அபிப்பிராயம் மட்டும் தான் மகிக்கு…
ஆனால் கிருஷ்ண மூர்த்திக்கு மகி சிங்கப்பெருமாள் மகள்.. தன் குருவின் பேத்தி… என்ற பாசத்திலும் அக்கறையிலும். அவளின் படிப்பு ஆசை என்று அனைத்துமே கேட்டு அறிந்து கொண்டவர்… மகிக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமுமே அவருக்கு இருந்தது..
ஆனால் சாரதாவை அந்த மருத்துவமனையில் இருந்து வீடு செல்லும் வரை அவரை ராம் சந்திரன் மகியை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை.. பார்க்க அனுமதிக்கவும் இல்லை..
அந்த மருத்துவமனைக்கு சித்தார்த் தினம் தினம் காலையில் வருபவன் மாலை தான் தான் தங்கும் ஓட்டலுக்கு செல்வான்..
ஆம் இந்த ஐந்து நாட்களுக்கும் சித்தார்த் அவன் வீட்டிற்க்கும் செல்லவில்லை.. ஸ்ருதியோடு அவள் வீட்டிற்க்கும் செல்லவில்லை… ராம் சந்திரன் வீட்டிற்க்கு வராதே எல்லாம் சொல்லவில்லை தான். ஆனால் அவனுக்கே போக விடாது அவனின் குற்றவுணர்ச்சி அவனை தடுத்தது என்றால்,
ஸ்ருதி வீட்டிற்க்கு.. அதுவும் ஸ்ருதி விசுவநாதன் தாமரை அத்தனை முறை அழைத்தும்.. அவன் அங்கு போகாததிற்க்கு காரணம்..
தங்கள் குடும்பத்திற்க்கும் இவர்களுக்கும் ஏதோ ஒரு வித தொடர்பு இருக்கிறது.. அது என்ன என்று தெரியாது அவனால் அங்கு போக முடியவில்லை.. ஏன் ஸ்ருதியிடம் கூட சாதாரணமாக கூட அவனால் பேச முடியவில்லை…
ஸ்ருதி .. “சித்து நான் என்ன செய்தேன்..?” என்று கேட்டவளிடம்.
அவனால் இன்னது என்று சொல்ல முடியாத நிலையில் அவன் இருந்ததினால் அமைதியாக இருக்க..
ஸ்ருதி மீண்டும் மீண்டும் கேட்ட…
உங்க அம்மா இப்படி இருக்க நான் தான் காரணமா..? ஏன் சித்து என் கிட்ட பேச மாட்டேங்குற…? நம்ம வீட்டுக்கு வாங்க சித்து.. அம்மா கூட கல்யாணம் ஆன உடனே இப்படி இரண்டு பேரும் தனி தனியா இருப்பது நல்ல சகுனம் இல்லை என்பது போல சொல்றாங்க…” என்ற இந்த பேச்சு சித்தார்த்துக்கு சட்டென்று கோபத்தை கொடுத்து விட்டது..
“இப்போ என்ன நான் உங்க வீட்டிற்க்கு வந்தா உங்க அம்மா நமக்கு சாந்தி குகூர்த்ததிற்க்கு ஏற்பாடு செய்வாங்கலா.. எங்க அம்மா படுக்கையில் படுத்து இருக்க நான் உன் கூட கட்டிலில் படுக்கனுமா…?” என்று ஒரு மாதிரி கேட்டதில் ஸ்ருதி..
“என்ன பேச்சு இது சித்தார்த்.. நான் நம்ம வீட்டுக்கு வர மட்டும் தானே சொன்னேன்…” என்றவளை சமாதானம் படுத்தும் நிலையில் அவன் இல்லை…
அவன் தன் அன்னையை பார்த்தே ஒரு வாரம் ஆகிறது..ஆஞ்சியோ.. செய்து இருப்பவங்களை நான் தான் பார்த்துக்கனும்.. ஆனா இந்த வயதில் தன் அப்பா ஆஸ்பிட்டல் வீட்டு மெடிகல் வாங்க என்று அலஞ்சிட்டு இருக்கார்.. மகி காலேஜிக்கு லீவ் போட்டுட்டு அம்மாவை பார்த்துட்டு இருக்கா.. இவங்க அனைவரையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது.. ஆனா நான் ஹாயா கல்யாணம் செய்துட்டேன்.. முன் விருப்பத்தோடு தான் கல்யாணம் செய்யனும்.. அப்படி இப்படி என்று நினைத்த சித்தார்த்தின் மனது அன்னை உடல் நிலை சரியில்லாது போனதில், மீண்டும் தன் குடும்பம் என்று மனதில் முதன்மையாக வந்து நின்றது..
அதோடு கிருஷ்ண மூர்த்தியும் தன் தந்தையு பழகுவதும், பேசுவதை பார்த்தால் இப்போது இவர்களுக்கு ஏற்பட்ட நட்பாக தெரியவில்லை.. என்னவோ காலம் காலமாக பழகியது போல் அல்லவா பேசிக் கொள்கிறார்கள்..
இதின் எதற்க்கும் முதன்மையாக நிற்கும் தன் மாமனார் இவர்களை பார்த்தால் மட்டும் பதுங்கி கொள்வதையும் கவனித்தான்.. முன்னவே அவர் செய்யும் தொழிலிம் அத்தனை மதிப்பு அவனுக்கு இல்லை தான்..
ஆனால் குடும்பம் வேறு.. தொழில் வேறு என்று இந்த கால இளைஞனாக தான் அவன் யோசித்தது.. இப்போது அனைத்தும் போட்டு குழப்பி கொண்டதில் சித்தார்த் ஸ்ருதியிடம் திட்டவட்டமாக சொல்லி விட்டான்.
“ நிலை சரியாகும் வரை…. நீ கொஞ்சம் காத்து தான் இருக்கனும் ஸ்ருதி… நீ தற்கொலை என்று செய்யாது இருந்து இருந்தால், நாம நம்மை பத்தி புரிய வெச்சி… இருந்து இருக்கலாம். அப்போ தா அவசரப்பட்ட இனியாவது அமைதியாக இரு என்றதில் ஸ்ருதி அமைதியாக இருக்கும் படியான நிலை தான்…
சாரதாவின் உடல் நிலை மெல்ல மெல்ல தேறி வந்தார்.. மகி தான் அனைத்துமே பார்த்து கொண்டாள்..
அத்தைக்கு அதிகம் காரம் இல்லாது எண்ணைய் இல்லாது அதே சமயம் சத்து உள்ள சமையலாக தான் செய்து போட்டாள். நேர நேரத்திற்க்கு சாப்பாடு பழங்கள் மருந்து என்று கொடுத்ததில் சாரதா உடல் நிலை ஒரே மாதத்தில் நல்ல முன்னேற்றம் தான்.. இதை மருத்துவரே சொல்லி விட்டார்..
இனி நார்மலா இருக்கலாம்.. ஆனா நான் எழுதி கொடுக்கும் மாத்திரை நடை பயிற்ச்சி உணவு கட்டுப்பாடு என்று மட்டும் பாலோ செய்ங்க..” என்று சொன்னதில் வீடு வந்த சாரதா.
தன் கணவனிடமும் மகியிடமும்.. “ இப்போவாவது நீங்க இரண்டு பேரும் காலேஜ் போறிங்கலா.. இல்ல இனி வீட்டிலேயே இருக்கும் ஐடியாவா..?” என்று சாரதா கிண்டலாக தான் கேட்டார்..
ஆனால் அதற்க்கு ராம் சந்திரன் … “ நான் ஒய்வுக்கு எழுதி கொடுத்து விட்டேன் சாரும்மா. போதும் நான் வேலை பார்த்தது.. இனி உன் கூட உனக்கு உதவியா இருக்க போறேன்..” என்ற கணவரின் பேச்சு சாரதாவுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது…
கணவனுக்கு அந்த கல்லூரி எத்தனை பிடித்தம் என்று தான் சாரதாவுக்கு தெரியுமே, அவரின் முதல் மனைவி அந்த கல்லூரி என்று கூட சில சமயம் சாரதா கணவனை கிண்டல் செய்வாரே.. இப்போது தனக்காக என்றதில் கணவனை நெகிழ்ச்சியோடு பார்த்த மனைவியின் தோள் பற்றி கொண்டார் ராம் சந்திரன்..
மகி கூட வீட்டில் இருந்தே படித்து கொள்கிறேன் என்று தான் சொன்னது.. ஆனால் அதற்க்கு மட்டும் சாரதா ஒத்து கொள்ளவே இல்லை..
“ சமையல் மட்டும் தானே மேல் வேலைக்கு தான் ஆள் இருக்கே.. அதோடு உன் மாமா இனி வீட்டில் தான் இருக்க போகிறார்.. அவர் என்னை பார்த்து கொள்வார்.. படிப்பு ரொம்ப முக்கியம் மகிம்மா. என் அண்ணனின் ஒரு ஆசையை தான் என்னால் நிறைவேற்ற முடியல.. அவரின் இன்னொரு ஆசையாவது நிறைவேத்துடா தங்கம்..” என்றதில் மகி கல்லூரிக்கு சென்று படிக்க ஒத்து கொண்டு விட்டாள் தான்.
ஆனால் சமையலுக்கு காலையில் ஏழு மணிக்கே வந்து காலை மதியம் செய்து வைத்து விட்டு செல்லும் ஒரு பெண் மணியை ஏற்பாடு செய்து வைத்த பின் தான் மகி கல்லூரிக்கு செல்லவே ஆரம்பித்தது..