Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...2..2

  • Thread Author
அத்தியாயம்…2..2

குருமூர்த்தி அந்த ஒட்டலின் முதலாளியான கவுரவனை அழைத்த போது அழைப்பு நிற்கும் சமயம் தான் கவுரவன் இவனின் அழைப்பை ஏற்றது..

ஏற்ற உடனும் கூட கவுரவனால் பேச முடியவில்லை.. கொஞ்சம் மூச்சு வாங்கிய பின்.. தான்.. கவுரவன்..

“என்ன குரு சார்… இந்த நேரம் என்னை அழச்சி இருக்கிங்க…” என்று கேட்டவனின் குரலில் இடை இடையே இன்னுமே அந்த மூச்சு வாங்கால் முழுமையாக நிற்க்காததினால் கொஞ்சம் விட்டு விட்டு தான் கவுரவன் பேசியது..

அதிலேயே குருமூர்த்திக்கு புரிந்து விட்டது.. கவுரவன் என்ன கவுரவமான வேலையை பார்த்து கொண்டு இருந்தான் என்பதை..

அதற்க்கு ஏற்றது போல் தான்.. ஒரு பெண்ணின் குரலாக… “ டார்லிங்..” என்ற ஒரு அழைப்பு…

அதற்க்கு கவுரவன்.. “ஒன் மினிட் குரு.” என்று இவனிடம் சொல்லியவன் ..

“நாளைக்கு பார்க்கலாம்.. அந்த வேலட்டில் இருந்து உனக்கு தேவையானதை எடுத்துட்டு போ..” என்ற பேச்சு இவன் காதில் நன்றாகவே விழுந்தது..

அந்த பெண்ணிடம் பேசிய பின் குருமூர்த்தியிடம் மீண்டும் ஒரு மன்னிப்பை வேண்டிய பின்..

“என்ன குரு. என் எல்ப் ஏதாவது தேவையா…?” என்று கேட்டான்..

குருமூர்த்தியும் அவனுடன் பெண் இருந்ததை பற்றியதான பேச்சை விடுத்து தனக்கு தேவையான உதவியான…

“இன்னைக்கு உன் ஓட்டலில் ஒரு பர்த்டே பார்ட்டி நடந்தது… அந்த பார்ட்டி நடந்த ஹாலில் அங்கு கவர் ஆனா புட்டேஜ் எனக்கு வேண்டும்… இதை பத்தி இமிடியேட்டா உன் ஒட்டல் மேனஜர் கிட்ட பேசிடு.. ஏன்னா அவன் வேறு யாருக்காவது விலை போயிட போறான்.. நான் இப்போ உன் ஒட்டலுக்கு தான் வந்துட்டு இருக்கேன்..” என்று சொல்லி அழைப்பை கட் செய்தவன் தன் மாமனுக்கு ஒரு தலையாட்டல் மட்டும் கொடுத்தவன் ஸ்ருதியின் அருகில் சென்று அவள் தலையை கோதிக் கொடுத்தவனின் முகத்தில் அத்தனை இறுக்கம்…

சொன்னது போல கவுரவன் ஒட்டலுக்கு அவன் சென்ற போது அந்த ஒட்டலின் வரவேற்ப்பு பெண் இவனை பார்த்ததும்..

“சார் உங்களை அங்கு வர சொன்னார்..” என்று ஒரு அறையின் பக்கம் கை காட்டினாள்… குருமூர்த்தியும் அந்த பெண் கை காட்டிய அறைக்கு சென்ற போது கவுரவனும், அந்த ஒட்டல் மேனஜரும், அவன் பார்க்க நினைத்த அந்த புட்டேஜை தான் பார்த்து கொண்டு இருந்தனர்..

இடை இடையே அந்த ஒட்டல் மேனரை பார்த்து கவுரவன்… “இது போல எத்தனை வாட்டி நீ செய்து இருக்க…?” என்ற பேச்சை காதில் வாங்கி கொண்டே தான் குருமூர்த்தி அவர்கள் முன் சென்று நின்றது..

இவனை பார்த்ததுமே கவுரவன்.. “நீ சொன்னது சரி தான் குரு.. நான் இவனை பார்க்க கீழே வந்து ரிசப்ஷன் கிட்ட சாரை பத்தி கேட்டா சார் இங்கு இருக்கார் என்று சொல்லுது.. சாருக்கு இந்த இடத்தில் என்ன வேலை என்று பார்த்தா.. இவர் கூட இன்னொருத்தன் இந்த பர்த்டே பார்ட்டி புட்டேஜை தான் பார்த்துட்டு இருக்காங்க.. சாருக்கு முன் இதோ இந்த கட்டு பணம் இருக்கு..” என்று சொன்ன கவுரவன் இப்போதும் அங்கு இருந்த அந்த பணக்கட்டை காட்டினான்

குருமூர்த்தி அந்த பணத்தை பார்க்காது… “ இதை கொடுத்தவன். “ என்று குருமூர்த்தி தன் பேச்சை முடிக்கவில்லை… அதற்க்குள் கவுரவ்… “ நம்ம ஆளுங்க நல்லா கவனிச்சிட்டு தான் இருக்காங்க. அவனை பார்க்கும் போகும் முன்.. இதை கொஞ்சம் பாரு குரு என்று சொன்ன கவுரவன் தான் பார்த்ட புட்டேஜை குருமூர்த்தி பார்க்க ஏதுவாக அவன் பக்கம் திருப்பி காட்டியவன்..

தான் கவனித்த பகுதியையும் சொல்ல…குருமூர்த்தியுமே அதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்..

ஸ்ருதி பர்த்டே பார்ட்டி நடக்கும் அந்த ஹாலுக்கு வந்தது.. தோழிகளோடு பேசியது.. கேக் கட் செய்த பின்.. சாப்பிட்டது ஒரு சில பெண்கள் ட்ரிங்கஸ் எடுத்து கொண்டு இருப்பது…

ஒரு பெண் ஸ்ருதியிடம் தன் கையில் இருந்த மது பானத்தை காட்டி ஏகோ கேட்டது.. ஸ்ருதி அதை வேண்டாம் என்று மறுத்தவளிடம் பிறந்த நாள் கொண்டாடிய பெண்ணின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு ஆடவன்..

ஏதோ கேட்க. அதற்க்கு ஸ்ருதி தலையாட்ட… சிறிது நேரம் கழித்து அவளிடம் ஒரு சர்வர் ஒரு கண்ணாடி கோப்பையை கொடுப்பது…

பின் அந்த சர்வரிடம் ஸ்ருதியிடம் பேசிய அந்த ஆடவன் ஏதோ கண் ஜாடை காட்டுவது.. ஸ்ருதி அந்த பானத்தை குடிப்பதை ஒரு எதிர் பார்ப்புடன் பார்த்து கொண்டு இருந்ததையும்,

அதை குடித்து முடித்த ஸ்ருதி சிறிது நேரத்திற்க்கு எல்லாம் சிறிது தள்ளாட்டத்துடன் அந்த பார்ட்டி ஹாலை விட்டு வெளியேறும் காட்சியும் பதிவாகி இருந்தது…

ஸ்ருதி அங்கு இருந்து செல்வதை ஒரு பதட்டத்துடன் பார்த்து கொண்டு இருந்த அந்த இளைஞன்… ஸ்ருதியை பின் தொடர முயன்ற போது பிறந்த நாள் கொண்டாடிய பெண் அவனின் கை பிடித்து ஏதோ பேசுவதும்.. அந்த இளைஞன் பதட்டமாக ஏதோ பதில் சொல்லி போக பார்க்க அந்த பெண் அவனை விடாது கை பிடித்து கொண்டு இருந்த காட்சி தான் பதிவாகி இருந்தது…

அனைத்தையும் கூர்ந்து கவனித்து பார்த்த குருமூர்த்தி… மேனஜரை காட்டி… “ இவனிடம் பணம் கொடுத்தவன் இவன் தானா..?” என்று கேட்க.

அந்த மேனஜர் பயந்த வாறு.. “ஆமாம்..” என்றதும் தான்.. பட் என்று அவனின் கன்னத்தில் ஒரு அடி அடித்த குருமூர்த்தி..

“இவங்க இரண்டு பேரோடு அந்த சர்வரையும் என் கஸ்டடியில் எடுத்துக்குறேன் கவுரவ்…” என்றவன்.. பின்..

“ஆ உன் ஒட்டலுக்கு வேறு ஒரு நம்பிக்கையான மேனஜரை வேலைக்கு வைத்து கொள் கவுரவ்.. இவன் உயிரோடு இருந்தாலும். ஒன்னுத்துக்கும் பிரயோசனம் பட மாட்டான்.” என்றவனின் பேச்சை கேட்ட மேனஜர்.

“சார் சார் நான் ஒன்னும் செய்யல சார்.. நான் ஒன்னும் செய்யல.. “ என்று குருமூர்த்தியின் பின்னால் சென்றவனின் கோர்ட்டை பிடித்து இழுத்து நிறுத்திய கவுரவ்….

“என் பெயருக்கு ஏற்றது போல கவுரவமா கோர்ட் ஷூட் கொடுத்து.. லட்சத்தில் சம்பளத்தையும் கொடுத்து நான் உன்னை வேலைக்கு வைத்தால், நீ உன் விசுவாசத்தை கட்டு பணம் கொண்டு வந்து நிற்கிறவன் கிட்ட காட்டுற..” என்று கேட்டவன் அவன் பங்குக்கு இரண்டு அடியை அவனுக்கு கொடுத்த பின் தான் கவுரவ் பணம் கொடுக்க வந்தவனையும், பணம் வாங்க இருந்த மேனஜரையும் கூட அந்த சர்வரையுமே, குருமூர்த்தியிடம் ஒப்படைத்தது..

தங்கள் இடத்திற்க்கு அந்த மூவரோடு குருமூர்த்தி வந்ததும்.. குருமூர்த்தியின் மாமன் விசுவநாதனும் அங்கு வந்து சேர்ந்து விட்டார்..

இருவரும் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய பெண்ணின் அருகில் நின்று கொண்டு இருந்தவனிடம் விசாரிக்கும் வகையில் விசாரித்ததில் அவன் சொன்ன விசயம் இது தான்..

விசுவநாதன் ஏலம் எடுக்கும் மதுமான கடையை ஏலம் எடுக்க வந்து எடுக்க முடியாது எப்போதும் செல்லும் மாரிமுத்துவின் மகன் தான் இந்த இளைஞன் பெயர் சந்தோஷ்…

தொழில் பிரச்சனையில் பழி வாங்க முதலில் ஸ்ருதியை காதலிப்பது போல நடிக்க தான் ஸ்ருதியை நான் அனுகினேன்.. “ என்று அந்த சந்தோஷ் சொன்ன விநாடி குருமூர்த்தியின் கை இடி என அவன் கன்னத்தில் விழுந்தது…

“ம் மேல சொல்…”

கன்னத்தில் அடி வாங்கிய சந்தோஷுக்கோ. வாயை திற்க்க முடியாத அளவுக்கு வலி… அதனால் கன்னத்தில் அவன் தடவி விட்டு கொண்டு இருக்க.

குருமூர்த்தியோ… இன்னொரு அடி அடித்து விட்டு,. நீ நேரம் தாழ்த்த தாழ்த்த உனக்கு அடி விழுந்துட்டே தான் இருக்கும்.. “

குருமூர்த்தி இந்த பேச்சுக்கள் பேசி முடிக்கும் முன் இன்னுமே ஐந்து அடியை சந்தோஷ் கன்னத்தில் இறக்கி விட்டு இருந்தான்…

இன்னும் அடி வாங்கினால் நாம் செத்து விடுவோம் என்ற பயந்த அந்த சந்தோஷ் தன் வலியை பொறுத்து கொண்டு..

“அவங்க கிட்ட நெருங்க முடியல… என்று சந்தோஷ் சொல்ல.

“அவள் என் மாமா மகள் டா..” என்று சொன்னவனின் குரலில் அத்தனை பெருமை..

குருமூர்த்தி மீண்டும்.. “ம் மேல..” என்றதும் சந்தோஷ் இந்த முறை அடி வாங்காது..

“அதனால ஸ்ருதி பிரண்ட் மேனகாவை காதலிப்பது போல நடிச்சேன்… மேனகா பர்த்டே பார்ட்டியை நான் தான் ஏற்பாடு செய்தேன்.. உன் பிரன்ஸ் எல்லோரையும் இன்வைட் செய் என்று சொன்னேன்.. எனக்கு தெரியும் மேனகா ஸ்ருதியை இன்வைட் செய்வா என்று… நான் நினைத்தது போல தான் மேனகா ஸ்ருதியை இன்வைட் செய்தா.. நான் திட்டம் போட்டது போல கூல்ரிங்கஸில் அபினை கலக்கி நான் ஏற்பாடு செய்த சர்வர் மூலம் கொடுக்க வைத்தேன்..”

“ஆனா ஸ்ருதி உடனே பார்ட்டி விட்டு கிளம்பிடுவா என்று நான் நினைக்கல… அவள் பின் தொடர முடியாது மேனகா என் கை பிடிச்சி பேச ஆரம்பிச்சிட்டா..”

“முதலில் நான் ஸ்ருதி ரெஸ்ட் ரூம் போய் இருப்பா என்று தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தான் தெரிந்தது அவள் பார்ட்டியை விட்டுட்டு போனது.”.

“வீட்டிற்க்கு போய் விசயம் தெரிந்தா பார்ட்டியில் என்ன நடந்தது என்று நீங்க வீடியோ புட்டேஜை தான் பார்ப்பிங்க என்று தான்..” என்று நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்த சந்தோஷ்.

“சாரி சார். மன்னிச்சிக்கோங்க.. இனிமே நான் இது போல பண்ண மாட்டேன்…” என்று சொன்னவனின் பேச்சை கேட்டு சத்தமாக சிரித்த குருமூர்த்தி..

“என்ன சொன்ன. இனிமே செய்ய மாட்டியா…? இனி நீ என்ன மத்தவங்களுக்கு செய்யிறது…? இனி மத்தவங்க உனக்கு செய்தா தான் திங்கிறது முதல் கழுவுறது வரை நடக்கும் இல்லேன்னா நீ நாறி போயிடுவே டா..? தொழிலில் ஜெயிக்க முடியலேன்னா வீட்டு பெண்களை மிரட்டுவீங்கலா டா நீ…?” என்று இன்னுமே இரண்டு அடி கொடுக்க..

விசுவநாதன் தான் குருமூர்த்தியின் கை பிடித்து தடுத்தவன்… “ இவனுங்களை நீ அடிச்சு உன் எனர்ஜீயை நீ ஏன் குறச்சிக்குற குரு…விடு அவனுங்க பார்த்துப்பங்கா… வா வீட்டிற்க்கு போகலாம்.. டாக்டர் சொன்ன ஸ்ருதி முழிக்கிற டைம் ஆக போகுது. என்று விசுவநாதன் சொல்லவும் தான் குருமூர்த்தி அவனை தான் அடிக்காது அங்கு இருப்பவர்களிடம் கண் காட்டி விட்டு தன் மாமனுடன் அந்த இடத்தை விட்டு வந்தது…

குருமூர்த்தி அந்த இடத்தை விட்டு அகன்றதுமே குருமூர்த்தி சொன்னது போல உயிர் மட்டுமே விட்டு விட்டு மற்றது ஒன்றும் வேலை செய்ய முடியாத வேலையில் இறங்கி விட்டனர்..

காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்த குருமூர்த்தி . “ ஸ்ருதிக்கு ஒன்றும் தெரிய வேண்டியது இல்லை மாமா… தன்னால் இரண்டு பேர் இறந்து இருக்காங்க என்று தெரிந்தால், அவள் வாழ் நாள் முழுவதுமே இதையே நினச்சிட்டு தான் இருப்பா.. அது அவள் படிப்பு பியூச்சர் இரண்டும் சேர்ந்து பாதிக்கும் மாமா…” என்று சொன்ன மருமகனை பார்த்து சிரித்த விசுவநாதன்..

“ம் நானுமே இதை தான் நினச்சேன் குரு.. ஆனா ஸ்ருதி கொஞ்சம் மேம் போக்கா இருந்து இருந்தா… அதை நினச்சா தான் எனக்கு நெஞ்சி எல்லாம் பதறுது குரு..” என்று சொல்லும் போதே விசுவநாதனின் முகத்தில் இப்போதும் பதட்டம் தெரிந்தது.

அதற்க்கு குருமூர்த்தி.. “ விடுங்க மாமா. . இனி இன்னுமே கேர் புல்லா இருந்துக்கலாம். அதோட ஸ்ருதி ரொம்ப ஸ்மாட்.. அந்த சூழ்நிலையில் வேறு யாராவது இருந்து இருந்தா கண்டிப்பா இத்தனை சீக்கிரம் சுதாகரிச்சு இருந்து இருக்க மாட்டாங்க. பரவாயில்லை அந்த இடத்தில் இருக்க கூடாது என்று டக்குன்னு வெளியில் வந்துட்டா.” என்று மாமனும் மருமகனும்.. ஸ்ருதி என்ற பெண்ணின் மனது வாழ்க்கை. அவள் எதிர்கால வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்தும் செய்த இவர்களின் இந்த செயல் இன்னொரு வீட்டி.. ஸ்ருதியோடு ஒரு வயது சின்ன பெண்ணை அம்மா அப்பா இல்லாது ஆக்கியதோடு..

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டியதில் சிங்கப்பெருமாளே ஒரு மரத்தின் மீது வண்டியை விட்டு விட்டார் என்று கேசை முடித்ததில், அந்த பெண்ணின் மனது எவ்வளவு பாதிப்பிற்க்கு உள்ளாகும் என்பதை தான் மாமனும் மருமகனும் யோசிக்க மறந்து விட்டனர்…
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Thangalukku vandha ratham adithavanukku vandha thakkali chutney 😡😡😡
Guru ippo antha ponnukku enna badhil solla pora
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
யார் எப்படி போனால் என்ன நம்ம வீட்டு பொண்ணு நல்லாயிருக்கனும் என்று நினைக்கும் வர்க்கத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
 
Top