Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்....4...2

  • Thread Author
அத்தியாயம்…4.2

மகேஷ்வரியின் பெற்றோர் அவளை விட்டு சென்று மூன்று மாதங்கள் கடந்து விட்டது.. சித்தார்த் சொன்னது போல மகி தன் பெற்றோரை மறக்க முடியாது இருந்தாலுமே, அவர்களின் இழப்பை ஏற்று வாழ ஆரம்பிக்க தொடங்கி விட்டாள்… என்று தான் சொல்ல வேண்டும்..



அவளின் தந்தை அவளுக்கு பாசத்தை கொட்டி வளர்த்த அளவுக்கு, அறிவையும் போதித்து தான் வளர்த்தார்.. அதனால் அவளுக்கு நிதர்சனம் புரிந்தது.. அதுவும் தான் இப்படி இருப்பதை தன் அத்தையையும், அவர்கள் குடும்பத்தையும் பெரிது பாதிக்கிறது என்பதை புரிந்து கொண்டவள்..



தன் பெற்றோர்களின் மறைவை தனித்து தான் உறங்கும் சமயம் அழுதாலும், அனைவரின் முன்னும் சாதாரணமாக தான் தன்னை காட்டிக் கொண்டாள்….



மகி தன் அத்தை சொன்னது போல அத்தையின் கணவன் அவளின் மாமா ராமசந்திரன்.. அவளின் அத்தான் சித்தார்த் லெக்சரராக இருக்கும் கல்லூரியிலேயே தன் மேல் படிப்பான எம். காம் படிப்பை தொடர ஆரம்பித்து விட்டாள்..

அதோடு தன் மாமா அத்தானிடம் டீச்சிங் சம்மந்தமாக அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் செய்து கொண்டவளாக எம். காம் முடித்த பின்.. தன் படிப்போடு தொடர்பு உடைய கணிதத்தில் பி.எச் டி படிக்க முடிவும் செய்தும் விட்டாள்..



முன்பே அவளின் தந்தை எப்போதும் போல வற்புறுத்தாது.. “ நீ ஏன்டா தங்கம் உன் மாமன் வேலை பார்க்கும் காலேஜ் வேணாம் என்று சொன்ன.?”



பன்னிரெண்டாம் முடித்து பி, காம் படிக்க போகிறேன் என்று சொன்ன மகி… தான் படிக்க விரும்பும் கல்லூரியையும் தன் தந்தையிடம் சொன்ன போது அவளின் அன்னை…



“உன் மாமனும் அத்தானும் வேலை பார்க்கும் காலேஜ் சேர்ந்தா அவங்க உன்னை பார்த்துப்பாங்க எங்களுக்கும் பயம் இல்லாது இருக்கும் லே..” என்று சொன்ன போது மகேஷ்வரி.



“ம்மா அது தான் ம்மா வேண்டாம் என்று சொல்றேன்.” என்று மகி சொன்ன போது அடுத்து ஏதோ சொல்ல அவளின் அன்னை முயலும் போது அவளின் தந்தை அவரை தடுத்து விட்டு, அவள் விரும்பிய கல்லூரியை சேர்த்த பின் தான்… மகளிடம் அதற்க்கு உண்டான காரணத்தை கேட்டது..



அதற்க்கு மகி ஒரே வரியில். “ நான் நானா அங்கு இருக்க முடியாது ப்பா… உங்களுக்கே தெரியும் மாமாவுக்கு அந்த காலேஜில் எவ்வளவு நல்ல பெயர் என்று.. அத்தான் இப்போ தான் ஜாயின் செய்து இருக்கார்.. ஆனால் அத்தான் அங்கு தானே படித்தார்… அவர் சாதாரணமாவே மாமாவுக்கு ஏற்ற புள்ள.” என்ற மகளின் தலை மீது கை வைத்த அவளின் தந்தை..



“அப்போ நீ.?” என்று கேட்டு விட்டு அவரே சிரித்தார்..



மகேஷ்வரி சாதாரணமாக வெளிப்பார்வைக்கு மிக அமைதியான பெண்ணாக தான் தெரியும்.. ஏன் என்றால் தெரியாதவர்களிடம் அவள் அளவாக தான் பேசுவது.. அதனால் அவளின் நிஜ முகம் அவளின் அப்பா அம்மா அத்தை அவளின் குடும்பத்தினருக்கும், அவளிடம் நன்கு பேசி பழகும் நட்பு வட்டத்திற்க்கு மட்டும் தான் தெரியும்…



கல்லூரி என்றால் நட்பு இல்லாமல் இருக்க முடியுமா..? கல்லூரி வாழ்க்கையில் நட்புக்களோடு சேர்ந்து கலாட்டா செய்யாது தான் அந்த கல்லூரி வாழ்க்கையை வாழ முடியுமா.? அதனால் தான் ஏதாவது கலாட்டா செய்து அதனால் தன் மாமாவுக்கும், அத்தானுக்கும் கெட்ட பெயர் வருவதை அவள் விரும்பாது வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்தது..



ஆனால் எம். காம்.. சித்தார்த் அத்தான்…



“ உனக்கு எந்த காலேஜ் விருப்பமோ.. அங்கேயே சேர்ந்துடலாம் அம்மா சொன்னதுக்கு எல்லாம் நாங்க வேலை பார்க்கும் காலேஜில் தான் படிக்கனும் என்று இல்ல..” என்று தான் மேல் படிப்பு தாங்கள் வேலை பார்க்கும் கல்லூரியிலேயே படிக்கிறேன் என்று இந்த பேச்சு நடந்து இரண்டு நாள் கழித்து தன்னிடம் சொன்ன மகியிடம் சித்தார்த் சொன்ன போது மகி…



“இல்ல அத்தான். எனக்குமே நீங்க வேலை பார்க்கும் காலேஜில் படிக்க தான் பிடித்து இருக்கு..” என்று சொன்ன தன் மாமன் மகளையே சித்தார்த் யோசனையுடன் பார்த்தான்..



“என்ன அத்தான்…” என்று கேட்டவளிடம்..



“இல்ல நீ உன் காலேஜ் லைப் என்சாய் செய்யனும் மகி… எனக்காவோ அப்பாவுக்காக எல்லாம் பார்க்க கூடாது. என்சாய் வேறு.. தவறு பண்றது வேறு… என் மாமா பெண் தப்பு செய்ய மாட்டா… நீ நீயா இருப்ப என்றால் நீ நாங்க வேலை பார்க்கும் காலேஜிலேயே படிக்கலாம். இன்னும் கேட்டால் அம்மாவுக்கு ரொம்ப நிம்மதி…” என்று சொன்ன தன் அத்தானின் பேச்சுக்கு மகேஷ்வரி சரி என்பது போல தலையாட்டினாலும்..



உண்மையை சொல்வது என்றால், சித்தார்த் சொன்னானே. நீ நீயா இரு என்று.. அவளாள் இந்த வீட்டில் கூட அவள் அவளாக இல்லை என்பது தான் உண்மை…





இன்னும் கேட்டால் அத்தை மாமா அத்தான் அத்தனை பேரும் அவ்வளவு நல்லவர்கள்.. தன்னை துக்கத்தில் இருந்து மீட்க அத்தனை பேருமே தனக்கு பார்த்து பார்த்து செய்கிறார்கள்..





ஆனால் அவர்கள் செய்யும் அந்த பார்த்து பார்த்து தான் அவள் அவளாக இருக்க முடியாது போய் விடுகிறது..





அவள் அந்த வீட்டிற்க்கு சென்றது முதல்.. அவள் விருப்பம் போல் தான் அந்த வீடே மாறி விட்டது என்பதை விட அவளின் சாரதா அத்தை மாற்றி விட்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும்..





அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தனக்கு பார்த்து பார்த்து செய்வதில் தான் அவளின் இழப்பு பெரியதாக அவளுக்கு தெரிகிறது..





அவளின் தந்தையுமே அவளின் விருப்பத்துக்கு தான் விடுவார்.. அதாவது விடுவார்.. ஆனால் இவர்கள் அவளின் விருப்பம் கேட்டு அவளை மட்டும் அல்லாது அவர்கள் குடும்பமே தனக்காக மாறி கொண்டு இருப்பதில் , அவளுக்கு சங்கடத்தை தான் கொடுக்கிறது..





உதாரணம் சாப்பாட்டில், அத்தானுக்கு தக்காளி சட்னி பிடிக்காது… தேங்காய் சட்னி நிறைய தேங்காய் போட்டு கெட்டியாக பச்சை மிளகாய் அதிகம் வைத்து காரமாக இருந்தால் தான் பிடிக்கும்..





ஆனால் மகிக்கு கொஞ்சம் புளிப்பு கலந்தது போல உணவில் இருப்பது பிடிக்கும்.. முன் அத்தை வீட்டிற்க்கு எப்போதாவது வந்து போகும் போது சாரதா மருமகளுக்கு பிடித்தது போல் தான் சமைத்து இவளுக்கு கொடுப்பார்..





இவளுமே எந்த வித சங்கடமும் படாது நல்லா சாப்பிடுவாள் என்பது வேறு விசயம்.. ஆனால் இனி தான் இங்கு தான் என்றான பின். தனக்கு பிடித்த மாதிரியே செய்தால்,



அத்தான் மாமாவுக்கு பிடித்தது போல அவர்கள் எங்கு போய் சாப்பிடுவார்கள்.. அதுவும் மாமா அத்தான் வெளி சாப்பாட்டை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள் வேறு… இது எல்லாம் அவளை அவளாக இருக்க விடாது செய்து விட்டது..

அதுவும் எப்போதும் நான்கு தோசைக்கு குறையாது சாப்பிடும் அத்தான்.. அவருக்கு பிடித்த சட்னி இல்லாது இரண்டு தோசை சாப்பிடும் போதே…

“ம்மா என்னம்மா தக்காளி சட்னியே செய்யிறிங்க..” என்று சித்தார்த் அத்தான் ஏதோ நினைவில் சொல்லிய பின்.. தன்னை பார்த்து நியாபகம் வந்து தன் பேச்சை பாதியில் விட்டது..

பின் அத்தை தனக்கு பிடித்த சட்னியும், அத்தானுக்கு பிடித்த சட்னியுமாக காலை வேலை பர பரப்பில் செய்வது… செய்வது என்று அது ஒரு விதமாக மகிக்கு சங்கடத்தை கொடுத்தது என்றால்,



இவளுமே அத்தை மாமா அத்தான் என்று பார்த்து பார்த்து யோசித்து யோசித்து தான் செய்கிறாள்.. தன் அம்மா அப்பாவின் நியாபகங்கள் ஏதோ ஒன்றில் அவளுக்கு நியாபகம் படுத்தி விடும்…



ஆனால் அதை நினைத்து அழ மாட்டாள்.. அத்தைக்கு தான் இப்படி இருந்தால், அவர்களும் வேதனை படுவார்கள் என்று தனித்து இருக்கும் போது தான் அதை நினைத்து அழுவாள்..



இதோ அவள் தன் மாமா அத்தான் வேலை பார்க்கும் கல்லூரியிலேயே படிக்க சென்றது கூட தன் பாதுபாப்புக்கு வேண்டி அத்தை யோசனை செய்ய கூடாது என்று தான்..



கல்லூரிக்கு போவதும் வருவதும் அத்தான் மாமாவோடு தான். யார் இவள் கல்லூரி செல்லும் நேரத்திற்க்கு செல்கிறார்களோ அவர்களுடன் காலேஜூக்கு போவதும் வருவதையும் பார்த்து கொள்வாள்…



அத்தையும் வீட்டில் தன்னை பற்றிய பயம் இல்லாது இருப்பார்கள் என்று நினைத்து சென்றவளுக்கு எதிர் பார்க்காத ஒரு நட்பு அவளுக்கு கிடைத்தது ஒரு வரம் தான் என்று சொல்ல வேண்டும்.. அது வரமா.? அது தான் அவளுக்கு வந்த சாபமா என்பது போக போக தான் தெரியும்..

ஆனால் முதலில் ஸ்ருதி அவளுக்கு நட்பானது.. ஆம் ஸ்ருதியும் இதே கல்லூரியில் தான் பி.காம் முடித்து. பின் எம் காம் படிப்பில் இரண்டாம் வருடத்தில் இருக்கிறாள்…



இவர்களின் நட்பின் தொடக்கம் மகேஷ்வரி முதல் நாள் கல்லூரி சென்ற முதல் நாளில் இருந்தே தொடங்கியது எனலாம்…



மகேஷ்வரி அவளின் அத்தையை போலவே வெள்ளையும் இல்லாது கருப்பாகவும் இல்லாது பொன்னிறமாக இருப்பாள்.. மூக்கும் முழியுமே சின்னது பெரியது என்று சொல்ல முடியாது திட்டமாக இருப்பாள்..



உயரமும் அப்படியே அவளின் நிறத்திற்க்கும், உடல் வடிவுக்கும் எந்த உடை அணிந்து சென்றாலுமே அவளுக்கு அந்த உடை அத்தனை பாந்தமாக பொருந்தி விடும்…



அன்று கல்லூரிக்கு முதல் நாளில் ஒரு சுடி செட் தான் அணிந்து சென்றது… மஞ்சளில் ரோஸ் நிறம் கலந்து அவளின் தந்தை அவளுக்கு கடைசியாக வாங்கி கொடுத்த அந்த சுடியை தான் கல்லூரிக்கு முதல் நாளில் அவள் அணிந்து கொண்டு சென்றது..



கல்லூரிக்கு முதல் நாள் அவளின் அத்தான் சித்தார்தோடு தான் காரில் அவள் கல்லூரிக்கு சென்றது..



சித்தார்த் மகியிடம்… “நான் காரை பார்க் செய்துட்டு வரேன் நீ போ.. “ என்று சொன்னவன் அவளின் வகுப்புக்கு எந்த பக்கம் செல்ல வேண்டும் என்றும் சொல்ல, மகியுமே அவளின் அத்தான் காட்டிய திசைக்கு சென்றவளை ஒரு கேங்க அவளை வழி மறித்து நின்றது…



பார்த்த உடனே மகி கண்டு கொண்டாள் ராக்கிங்க.. என்று… ராகிங்க இல்லை என்றாலுமே ஒரு சிலது இது போல கல்லூரி நிர்வாகத்திற்க்கு தெரிந்தும் தெரியாதும் நடப்பது தான்..



ஏன் இவளே சென்ற வருடம் பி.காம் கடைசி வருடத்தில் இருந்த போது முதலாம் ஆண்டு படிக்க வந்தவர்களை அழைத்து சின்னதாக ஒரு ராகிங்க செய்தாள் தான்..



அதனால் அவளை அழைத்ததும். பயம் இல்லாது தான் அவர்கள் அருகில் சென்றது.. அவளின் இந்த தைரியமே அவளை அழைத்த அந்த கேங்கில் இருந்த ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை போல..



அழைத்து பாடு ஒடு ஆடு.. இல்லை அவர்களின் அன்றைய உணவு செலவை ராக்கிங்க செய்பவர்களின் மீது கட்டி விடுவார்கள்..



ஆனால் இவளின் அந்த நிமிர்வை பிடிக்காத ஒருவன்… மகியின் தலையில் இருந்த பூவையே எடுத்து அவள் கையில் கொடுத்தவன்..



அதோ வரார் பார் அவர் கையில் இதை கொடுத்துட்டு.. ஐ. லவ். யூ என்று சொல்லனும்.. இதுவுமே நடப்பது தான். ஆனால் இன்னொன்றும் அந்த பையன் சேர்த்து சொன்னான்..



அதாவது அவர் கையில் பூ கொடுத்து ஐ. லவ். யூ சொன்ன பின் பக்கத்தில் நிற்பவர் காலில் விழுந்து .



“நீங்க என்னை மருமகளா ஏத்துக்கனும் மாமா…” என்று சொல்லி அவர் காலில் விழுந்து அவர் உன்னை ஆசிர்வாதம் செய்யாது அவரின் காலை நீ விட கூடாது…” என்று சொன்ன நபர்கள் சித்தார்த்தும் , ராமசந்திரனும்..



யாரிடம் இந்த பூவை கொடுக்க சொல்றாங்க என்று மகி திரும்பி பார்க்க, சித்தார்த் அத்தானும், தன் மாமாவும் வருவதை பார்த்து அவளுக்கு சிரிப்பு தான் வந்து விட்டது…



அவளுக்கு தன் கையில் இருக்கும் பூ தன் சித்தார்த் அத்தான் கையில் கொடுத்து ஐ.லவ்.யூ சொல்வதும் தன் மாமனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதிலும் அவளுக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது..

காரணம் தன் தந்தைக்கு தன்னை சித்தார்த் அத்தானுக்கு திருமணம் செய்து வைக்க தான் விருப்பம். அது அவளிடம் அவள் தந்தை சொல்லாமலேயே தன் அன்னையிடம் பேசிக் கொண்டு இருந்த பேச்சான…



“உங்க தங்கை சாரதா மகியை தான் தன் மருமகளா ஆக்கிக்க விருப்பம். இப்போ நம்ம பெண் காலேஜ் எல்லாம் போக ஆரம்பித்து விட்டா.. இதில் உங்களுக்கும் விருப்பம் என்று எனக்கு தெரியும்..



இதை நீங்க உங்க பெண் கிட்ட எனக்கு உன்னை சித்தார்த்துக்கு கொடுக்கனும் என்று ஒரு வார்த்தை சொன்னா போதும்.. அவள் வேறு எதுவும் காதல் கீதல் என்று வந்து நிற்க மாட்டாலே…” என்ற மனைவியின் பேச்சுக்கு அன்று தன் தந்தை சொன்னது அவளுக்கு நன்றாக நியாபகத்தில் உள்ளது…

“இதோ இப்போ நீ பேசும் போதே இரண்டு விசயம் சொன்ன பார்த்தியா… நீங்க சொன்னா உங்க பெண் கேட்பா என்று. என் பெண் நான் சொல்லி சித்தார்த்தை கல்யாணம் செய்துக்க கூடாது.. அவளுக்கே சித்தார்த்தை பிடிக்க வேண்டும்..

ம் இன்னொன்னும் சொன்ன பாரு.. அவள் காதல் கீதல் வந்து நின்னுட கூடாது என்று.. அவளுக்கு அப்படி ஒருத்தனை பிடித்து இருந்தா அவளை கல்யாணம் செய்து வைப்பதில் என்ன டி தப்பு இருக்கு…?” என்று கேட்டவரின் குரல் இறுதி வார்த்தை சொல்லும் போது கர கரத்து தான் விட்டது…

அன்று தான் தன் தந்தையின் விருப்பம் தெரியும். ஒரு தந்தையாக மகளின் விருப்பதை நிறை வேற்ற நினைக்கும் போது, ஒரு மகளா நான் என் தந்தையை ஆசை யை நிறைவேற்றி வைப்பதில் தவறு இல்லையே..

அதுவும் அத்தையுமே அவள் முன் தங்கள் திருமணத்தை பற்றி பேசியதில், சித்தார்த் தான் தன் வாழ்க்கை துணை என்பதை முடிவு செய்து விட்டாள்..

சித்தார்த் அத்தான் மீது காதல் இல்லை என்றாலும், அவளுக்கு சித்தார்த் அத்தனை பிடிக்கும்..

அதனால் சீனியர் தன்னிடம் கொடுத்த இந்த பூவை அத்தானிடம் கொடுத்து மாமாவிடம் ஆசி வாங்குவதில் அவளுக்கு என்ன தயக்கம்.

அதுவும் இல்லாது இன்று கல்லூரி முதல் நாள் என்பதினால் தன் பெற்றோர் புகைப்படம் முன் நின்று வணங்கும் போது தந்தையின் புகைப்படத்தில் இருந்து விழுந்த பூவே ஆசிர்வாதம் என்று நினைத்து அதை தலையில் வைத்து கொண்டாள்..

சீனியர் அந்த பூவை தான் சித்தார்த் அத்தானிடம் கொடுத்து லவ் யூ என்று சொல்ல சொன்னது.. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மகி முதலிலேயே முடிவு செய்தது தான்.. இப்போது இந்த நிகழ்வு அதை உறுதி செய்வது போல இருக்க.

சிரித்த முகமாகவே அவர்களை நோக்கி செல்ல பார்த்தவளை தான் ஒரு கை தடுத்தது..

அதோடு பூவை கொடுக்க சொன்ன அந்த சீனியரையும்,

“நம்ம மாதிரி ஸ்டூண்ட் கிட்ட ப்ரபோஸ் செய்ய சொன்னா பரவாயில்லை.. ஆனா இது என்ன… விளையாட்டு வேண்டாம் முகுந்த்.. நாமலே மேனஜ்மெண்ட்க்கு தெரியாது ராகிங்க செய்துட்டு இருக்கோம்… நீயே நம்மளை மாட்டி விட்டு விடுவே போல..

அதுவும் ராம் சாருக்கும், சித்தார்த் சாருக்கும் நம்ம காலேஜில் எத்தனை மதிப்பு இருக்கு என்று தெரியும் தானே… இவங்க நம்மளை பத்தி மேனஜ்மெண்ட் கிட்ட சொன்னா அவ்வளவு தான்.. புரியுதா.” என்று ஸ்ருதி கேட்டாள்…

ஆம் மகியை தடுத்த அந்த கை ஸ்ருதிய்டையது தான்…

அந்த கேங்கில் மற்றவர்களும் . “ ஸ்ருதி சொல்வது தான் சரி.” என்பது போல சொல்ல..

ஸ்ருதி மகியிடம். “ நீ போ… பூ கொடுக்க சொன்னா உடனே பூ கொடுக்க போயிடுவீயா..அவங்க யார்..? கிட்ட உன்னை மாட்டி விட பார்த்தாங்க தெரியாது.. நீ பாட்டுக்கு சிரிச்சிட்டே போறா. போ.” என்று ஸ்ருதி தான் அன்று உரிமையுடன் மகியை கண்டித்து அவளை அனுப்பி வைத்தது..

அது என்னவோ மகிக்கு ஸ்ருதியின் அந்த அதட்டல் பிடித்து விட்டது.. இந்த மூன்று மாதகாலமாக அவளின் பெற்றோர் இறந்ததில் இருந்து, அவளை பாதுக்காக்கிறேன் என்ற பெயரில் அவளிடம் காட்டும் அந்த அதிகப்படியான அக்கறை கூட அவளுக்கு ஒரு வித பிடித்தமின்மையை தான் கொடுத்தது.

அதனால் தான் என்னவோ.. இந்த அதட்டலில் ஸ்ருதியை பார்த்து சிரித்துக் கொண்டே…

“ஓகே அக்கா..” என்று சொல்ல.

அதற்க்கும் ஸ்ருதி.. “ ஒய். என்ன அக்கா என்று கூப்பிடுற. ஒழுங்கா சீனியர் என்று கூப்பிடு போ..” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட. ஸ்ருதியின் இந்த அதட்டலுக்குமே மகி சிரித்து கொண்டு தான் சென்றது..

ஸ்ருதி இதை பார்த்து.. மற்றவர்களிடம். “ இவள் என்ன லூசா டா.. நீ பூ கொடுக்க சொன்னதிற்க்கும் சிரிச்சிட்டு கொடுக்க போறா. நான் திட்டினாலும் சிரிச்சிட்டு போறா.? என்று கேட்டவளிடம் மற்றவர்கள்…

“அவளை விடு.. நீ இப்போ எதுக்கு அன்னை தெராசா போல அவளை காப்பாற்றி விட்ட.? அவள் நாம கூப்பிட்டதுக்கு பயம் இல்லாது வந்து நிற்கிறா. கொஞ்சம் பயப்படுத்தி பார்க்க நினச்சா.?” என்று கோபமாக கேட்டவனிடம்.

“விடு விடு.. அடுத்து மாட்டினா அப்போ பார்த்து கொள்ளலாம்..” என்று சொன்னதும்.. மற்றவர்கள் அமைதியாகி விட்டனர்..

ஆனால் ஸ்ருதியின் அனைத்தும் தெரிந்தவளான அவளின் உயிர் தோழியான வதனி…

ஸ்ருதியிடம் ரகசிய குரலில்.. “ம் நீ அவளை காப்பத்தினது எதுக்கு ?ம்” என்று ஸ்ருதியிடம் கேட்ட வதனி..

பின்.. “ இதே நம்ம பசங்க வேறு பிரபசர் கிட்ட லவ் பிரபோஸ் பண்ணு என்று பூவை கொடுக்க சொன்னா நீயுமே தானே அந்த ராகிங்கை ரசிச்சிட்டு இருந்து இருப்ப…கொடுக்க சொன்ன ஆளு உன் ஆளு என்றதும்.. யப்ப்பா..” என்று கேலி செய்தவளின் இந்த பேச்சே ஸ்ருதிக்கு நாணத்தை கொடுத்தது..

ஆம் ஸ்ருதி சித்தார்த்தை இந்த கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்தே காதலித்து கொண்டு இருக்கிறாள்..

பி.காம் முடித்து வெளிநாட்டில் போய் படிக்கிறாயா என்று அவளின் தந்தை குருமூர்த்தி அத்தான் கேட்ட போது..

“இல்ல நான் இங்கேயே இதே காலேஜிலேயே படிக்கிறேன்..” என்று ஸ்ருதியை சொல்ல வைத்து ஸ்ருதிக்கு சித்தார்த் மீது இருந்த காதல்..இன்னுமே தன் விருப்பதை சித்தார்த்திடம் அவள் சொன்னது கிடையாது.

இந்த படிப்பு முடித்த பின் சொல்லலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறாள்.. ஆனால் பல சமயம் தன் விருப்பத்தை சித்தார்த்திடம் சொல்லி விடலாமா என்று ஸ்ருதி யோசிக்கும் அளவுக்கு கூட மற்ற பெண்கள் சித்தார்த்திடம் பாடத்தில் சந்தேகம் கேட்கும் பாவனையில் அவரிடம் பேசுவது…

சித்தார்த் பாடம் நடத்தும் போது பாடத்தை கவனிக்காது சித்தார்த்தை கவனிப்பது.. இதை எல்லாம் பார்த்து அவளுக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுக்கும் தான்..

ஆனால் சித்தார்த் யாரையுமே சட்டை செய்யாது தன் கடமை இது என்று இருப்பது ஸ்ருதிக்கு சந்தோஷம் தான்..

ஆனால் தன்னையுமே சட்டை செய்யாது இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.. இந்த காலேஜே என்னை பார்க்க.. நீ மட்டும் ஏன்டா என்னை பார்க்க மாட்டேங்குற…? சித்தார்த்தின் சட்டையை பிடித்து கேட்க தோன்றும் தான்..

ஆனால் இதை செய்ய விடாது தடுப்பது ஸ்ருதிக்கு சித்தார்த்தின் மீது இருக்கும் காதலையும் தான்டி அவன் மீது அவளுக்கு இருக்கும் மரியாதை தான்…

அத்தனை பெண்கள் அவன் மீது விழ. ஆனால் அவனோ. பெண்களை கண்களை தான்டி பார்க்காது பேசும் அவனின் அந்த கண்ணியத்தை பார்த்து அவளுக்கு அவனிடம் அத்தனை மரியாதை ஏற்பட்டு விட்டது.

வாய்ப்பு கிடைக்காத வரை ஒருவன் நல்லவனாக இருப்பது பெரிய விசயம் கிடையாது.. ஆனால் கிடைத்துமே நல்லவனாக இருக்கிறான் பாரு..அவன் தான் உண்மையில் நல்லவன்.. அந்த நல்லவனனா சித்தார்த்தை ஸ்ருதிக்கு பிடித்து போய் விட்டது.

மகி ராகிங்காக இருந்தாலுமே, சித்தார்த்திடம் பூவை கொடுத்து பிரபோஸ் செய்ய அனுமதிக்காதவள்…

ஸ்ருதி மகி சித்தார்த்துக்கு அனைத்திற்க்கும் சொந்தமான பெண் என்றும். சித்தார்த் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதும் தெரியவந்தால், அதுவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பவர்கள் என்பது அவளுக்கு தெரிய வந்தால்..

ஸ்ருதிக்கு அன்று மாலையே முழுவதுமாக இல்லை என்றாலுமே மகி சித்தார்த்துக்கு உறவுப்பெண் என்பது அவளுக்கு தெரிய வந்தது…

அன்றும் ஸ்ருதி பாடம் நடத்தும் போது சித்தார்த்தையே பார்த்து கொண்டு இருந்தவள்… பின் மாலை வீடு போகும் முன்.. அவனின் தனி தரிசனத்திற்க்காக சித்தார்த் கார் கண் படும் தூரத்தில் நின்று கொண்டு இருந்தாள்..

அனைவரும் பார்க்கும் போது மட்டும் நான் சித்தார்த்தை பார்த்தால் அப்போ மற்றவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு…? என்று கேட்டாள். வதனியிடம்..

வதனி “இப்போ தானே ஸ்ருதி சித்தார்த் சாரை க்ளாஸில் பார்த்த..?” என்று கேட்ட போது ஸ்ருதி சொன்னது..

ஆனாலுமே வதனி ஸ்ருதியோடு தான் அவள் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த போது தான் சித்தார்த் தன் சட்டையின் கை பகுதியை மேல் தூக்கி கொண்டே அவனின் கார் இருக்கும் இடத்திற்க்கு நடந்து வந்து கொண்டு இருந்தான்..




 
Active member
Joined
May 12, 2024
Messages
169
Nan ninaichen… ithan nadakkum nu…
Yamma Shruthi… ne than Avan maman athai ah accident panni konnenu avanukku therinjithu… ne gaali
 
Active member
Joined
May 12, 2024
Messages
169
Enekku oru doubt… M.Com padichittu eppdi Maths la PhD padikkirathu??? Rendum vera vera stream thane? M.Com Commerce la varum… Maths Engineering la varum.. SL la apdi than… Indian Education system eppadi nu theriyala… explain pannunga plz
 
Administrator
Staff member
Joined
May 9, 2024
Messages
852
Enekku oru doubt… M.Com padichittu eppdi Maths la PhD padikkirathu??? Rendum vera vera stream thane? M.Com Commerce la varum… Maths Engineering la varum.. SL la apdi than… Indian Education system eppadi nu theriyala… explain pannunga plz
திருத்தி கொள்கிறேன் பா... அக்கவுண்ட் மாற்றி விட்டேன்
 
Top