அத்தியாயம்…6…1
ஸ்ருதி அன்று எப்படியாவது தனித்து மகியை பார்த்து விட வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்தாள்.. அன்று முழுவதும் அவள் வகுப்பறையில் இருந்ததை விட கேண்டினில் இருந்த நேரமும், அந்த கல்லூரியின் வளாகத்தின்னுள் சுற்றி வந்த நேரமும் தான் மிக அதிகமாக இருந்தது..
இருந்தும் அவளை தனித்து அன்று கல்லூரி முடியும் தருவாயில் கூட ஸ்ருதியினால் மகியை பார்க்க முடியவில்லை…
இனி நாளை தான் அவளை பார்க்க முடியுமா…? நாளை கூட தனித்து அவளிடம் பேச முடியுமா…? அது என்ன எப்போதும் சித்தார்த் கூட வருவது.. ஏன் தனித்து வர அவளுக்கு வழி தெரியாதா….? என்று பலதும் யோசித்து கொண்டே தான் தன் அத்தான் குருமூர்த்தி வருகைக்காக அன்று ஸ்ருதி காத்து கொண்டு இருந்தாள்…
பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வதனி கூட… “ அந்த பெண் கிட்ட தனியா என்ன கேட்க போற டி..? இன்னைக்கு முழுவதும் பைத்தியக்காரி மாதிரி காலேஜ் முழுவதும் சுத்திட்டு இருக்க..
அதுவும் சித்தார்த் சார் க்ளாஸையே கட் செய்து விட்டு சுத்தும் அளவுக்கு அப்படி என்ன அந்த பெண் கிட்ட கேட்க போற..?” என்று வதனி கேட்டதற்க்கு…
ஸ்ருதியின் பதிலோ.. “ தெரியல அவள் கிட்ட என்ன கேட்க என்று தெரியல. ஆனா அந்த பெண் கிட்ட பேசனும்..” என்று சொன்னவளிடம் வதனி..
“அது தான் என்ன பேசனும்..?” என்று கேட்டதற்க்கு ஸ்ருதியிடம் பதில் இல்லை..
“தெரியல.. ஆனா பேசனும்.. “ இது மட்டும் தான் சொன்னது..
அன்று சித்தார்த் க்ளாஸை கூட அட்டன் செய்யாது.. மாலையில் சித்தார்த் சார் நடந்து வரும் அந்த அழகை கூட ரசிக்காது தன் அத்தானின் வருகைக்காக காத்து கொண்டு இருந்த போது தான்…
அந்த கல்லூரி வளாகத்தில் ..”ஏய் பார்த்து பார்த்து.. “ என்று பதறி நிறைய குரலை ஸ்ருதியும் வதனியும் கேட்டது..
கல்லூரியின் வாசல் பக்கம் கண் பதித்து கொண்டு இருந்த ஸ்ருதியும், வதனியும்,என்ன என்று இருவரும் திரும்பி பார்க்க.
மாணவ மாணவிகள் கல்லூரி கட்டிடத்தின் மேல் நோக்கி தான் அந்த குரலை எழுப்பிக் கொண்டு இருந்ததை பார்த்து ஸ்ருதியும் பார்த்தாள்..
பார்த்தவளுக்கு ஒரு வித பதட்டம் தொற்றிக் கொண்டு விட்டது.. காரணம் ஜன்னலின் ஷன் சைட்டின் மீது ஒரு பெண் நின்று கொண்டு இருக்க.. அந்த மூலையில் இருந்த ஒரு சின்ன பூனைக்குட்டியை பிடிக்க அந்த பெண் முயன்று கொண்டு இருந்தாள்..
கட்டிடத்தின் மேல் மதிலில் அந்த சின்ன பூனையின் தாய் போல.. மீயா… மீயா.. என்று சத்தம் இட்டுக் கொண்டு இருந்தது..
பார்த்த அனைவருக்கும் புரிந்து விட்டது.. பூனையை காப்பாற்ற தான் அந்த பெண் சன் சைட் மீது இறங்கி இருக்கிறாள் என்பது..
அதை பார்த்து பதறிக் கொண்டு இருந்த சிலரில் ஒரு சிலர் என்ன இது ஒரு பூனைக்காக தன் உயிரை பணையம் வைப்பாங்களா…? என்பது தான்.
காரணம் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் தான் அந்த பெண் நின்று கொண்டு இருந்த சன் சைட் மூன்றாம் மாடியின் கட்டிடத்தின் வகுப்பில் இருக்கும் சன் சைட்.. கீழே விழுந்தாள் கண்டிப்பாக உயிர் போய் விடுவது நிச்சயம்…
இங்கு கீழே நின்று கொண்டு இருந்து கத்திக் கொண்டு இருக்க அந்த சன் சைட்டின் ஒட்டின் விளிம்பில் மகி மெல்ல மெல்ல அடி எடுத்து கொண்டு அந்த சின்ன பூனையை நோக்கி தன் கால் அடியை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் நம் மகேஷ்வரி…
ஆம் அந்த சன் சைட்டில் நின்று கொண்டு இருப்பது நம் மகியே தான்… அனைவரும் வகுப்பு முடிந்து வரும் சமயம் மகியுமே வர. இன்று தான் அவள் இந்த கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாள் என்பதினால், நெருங்கிய நட்பு என்று இன்னும் யாரையும் தன் வட்டத்திற்க்குள் மகி கொண்டு வரவில்லை..
மகி ஹலோ ஹலோ என்ற அளவில் தான் பேசியது.. இதே வேறு கல்லூரியாக இருந்து இருந்தால் கண்டிப்பாக இந்த நேரம் ஒரே பெண்ணையாவது நெருங்கிய தன் நட்பு வட்டத்தில் இணைத்து இருந்து இருப்பாள்..
இங்கு நட்பை கூட பார்த்து சேர்க்கும் நிலை. காரணம் தன் நட்பில் இருக்கும் அந்த பெண் ஏதாவது கல்லூரியிர் பிரச்சனை ஆனால் தோழி என்ற அளவில் தானுமே அவளோடு சேர்ந்து நிற்கும் சூழல் ஏற்படலாம்.
அது தன் அத்தானுக்கும், மாமாவுக்கும் பிரச்சனை கொடுக்கும் என்று சட்டென்று சேர்த்து கொள்ளாது பார்த்து தான் பழக வேண்டும் என்று நினைத்து தான் தன் கல்லூரியின் இரண்டாம் நாளான அன்று தன் வகுப்பு அறையை விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
மாமா இன்று கிளம்பும் போதே சொல்லி விட்டார்.. இனி தினமும் மாலையில் கார் நிற்கும் இடம் வந்து நின்று விட..
நானோ இல்லை சித்தார்த்தோ கண்டிப்பாக அந்த சமயம் கிளம்பு விடுவோம்.. யார் கிளம்புகிறோமோ அவங்க உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்க என்று சொன்னதால் அதையும் யோசித்து கொண்டே தான் பெண்ணவள் நடந்து வந்து கொண்டு இருந்தது..
தனக்காக இவர்கள் இருவரில் யாராவது சீக்கிரம் வீட்டிற்க்கு கிளம்பி விடுகிறார்களா… நாம் காலேஜ் வருவதற்க்கும் போவதற்க்கும் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாமா.
அவளுக்கு இரு சக்கர வாகனம் கூட ஒட்ட தெரியும்.. லைசன்சுமே வாங்கி உள்ளாள்.. வண்டி வாங்கி விடலாமா…?
ஏற்கனவே அத்தானும் மாமாவும் தங்களின் அந்த வீட்டை வாடகைக்கு விட நல்ல ஆட்களாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.. அதற்க்கு வேறு யாராவது போன் செய்தால் வீடு காட்ட என்று யாராவது போய் என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்…இதில் தனக்கும் ஒரு வண்டி வாங்க என்று அவர்களை தொந்திரவு செய்வதா..? என்று பலதும் யோசித்து மகி நடந்து வநது கொண்டு இருந்த போது தான்..
மீயா மீயா. என்று பூனையின் இடை விடாது சத்தம் கேட்டது.. உற்று கவனித்ததில் பூனை கிடையாது பூனைகள் என்பது போல இரண்டு பூனைகள் சத்தம்.
எங்கு இருந்து இந்த சத்தம் என்று பார்க்கும் போது தான் அவள் நடந்து வரும் பாதையின் மதின் மீது ஒரு பெரிய பூனை கீழே பார்த்த வாறு மீயா மீயா என்று பலத்த சத்தம் இட.
அதற்க்கு எதிர் சத்தமாக ஒரு சின்ன குரலாக மீயா மீயா என்ற சத்ததில் அவளுமே பெரிய பூனை பார்த்து சத்தம் இடம் இடத்தை குனிந்து பார்த்தது..
ஒரு சின்ன பூனை ஒரு சன் சைட் விளிம்பில் நின்று கொண்டு மீயா மீயா என்று அழைக்க. அந்த தாய் பூனை துடித்து கொண்டு இருப்பதை பார்த்தவள் நொடியும் யோசிக்காது..
அந்த சன் சைடில் இறங்கி விட்டாள்.. ஆம் இறங்கி விட்டாள். ஆனால் அந்த சின்ன பூனைக்கு என்ன தெரியும்.. இவள் தன்னை காப்பற்ற தான் வந்து இருக்கிறாள் என்று..
பயத்தில் பின் நகர்ந்து இன்னுமே விளம்புக்கு போகும் சமயம் தான் கல்லூரி விட்டு அந்த அந்த வகுப்பை விட்டு வெளி வளாகத்தில் வந்த போது மகியை பார்த்தது..
சன் சைடில் நின்று கொண்டு இருந்த மகியோ தன்னை பார்த்து பயந்த அந்த குட்டி பூனையை எப்படியோ தன் கை பிடியில் பிடித்து கொண்டு விட்டாள்…
அதற்க்குள் கீழே இருந்த ஒரு சில மாணவர்கள் மேல் பகுதிக்கு வந்து விட்டவர்கள் அவள் கை பிடித்து ஏறுவதற்க்கு இலகுவாக இரு மாணவர்கள் தன் கைகளை நீட்ட.
மகியுமே கையில் பூனைக் குட்டியை வைத்து கொண்டு எப்படி ஏறுவது என்று திணறி தான் போனாள்.
.மேல் இருந்து கீழே குதிப்பது என்பது எளிது. ஆனால் கீழ் இருந்து மேல் வருவது கடினம் தானே… அதுவும் கையில் பூனைக்குட்டியையும் வைத்து கொண்டு துள்ளிக் குதித்து கொண்டு இருந்த பூனையை தன் துப்பட்டாவை எடுத்து அதை ஊஞ்சல் போல செய்து அதில் அதை வைத்தவள் அதை தன் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டவளாக இரு மாணவர்களின் இரு கையை பிடிக்கும் நோக்குடம் அந்த சன் சைட்டின் கொஞ்சம் ஓரம் நின்று கை கொடுக்கும் வேளயில்..
அந்த பூனைக் குட்டி என்ன பயந்ததோ… அந்த துப்பட்டாவை மாலையாக போட்டதில் சரியாக அவளின் கழுத்து பகுதியில் இருந்த அந்த பூனைக் குட்டி அவளின் கழுத்தில் தன் நகத்தை கொண்டு கீரி விட்டு விட.
சட்டென்று அது கொடுத்த வலியிலும் எரிச்சலிலும் சூ என்று சொல்லி கொண்டு தான் நின்று கொன்டு இருந்த இடத்தை மறந்தவளாக இன்னுமே அவள் தன் பாதத்தை பின் நோக்கி எடுத்து வைத்து விட.. சன் சைட் மேல் நின்று கொண்டு இருந்த மகி அந்த சன் சைட்டை பிடித்து கொண்டு தொங்கும் படியான நிலை..
கீழே நின்று கொண்டு இருந்த மாணவ மாணவியர்கள்.. ஓ.. என்று கூச்சலிட. மேல் நின்று கொண்டு இருந்த இரு மாணவர்களில் ஒரு மாணவன் அந்த சன் சைட்டில் இறங்கி மகி மேல் நோக்கி எழுப்ப தன் கை நீட்டினான்…
இது வரை அந்த பூனை குட்டியை மட்டும் காப்பாற்றுவதில் இருந்த மகிக்கு அந்த சன் சைடில் தொங்கும் சமயம் பயம் பற்றி கொண்டது..
இப்போது என்னவோ அவள் கழுத்தில் தொங்கு கொண்டு இருந்த அந்த பூனைக்குட்டி சமத்தாக. இப்போது தாயை விட்டு மகியிடம் மீயா மீயா என்று அழைக்க.
அந்த சன் சைட்டை விட்டு தன்னை நோக்கி கை நீட்டிக் கொண்டு இருந்தவனின் கை பற்ற பயந்து கொண்டு தொங்கி கொண்டே இருக்க.
அதற்க்குள் கீழே நின்று கொண்டு இருந்த மாணவர்களில் ஒரு சிலர்…
பதறி போய் கல்லூரி முதல்வரிடம் சொல்லி விட, அந்த சமயம் சித்தார்த் அங்கு தான் இருந்தான். யார் என்ன என்று தெரியாத போதே அவனுமே பதறி போனவனாக எமர்ஜென்ஸி என்று வரும் போது பயன் படுத்தும் பொருட்களை வைத்து இருக்கும் இடத்தை நோக்கி ஓடியவன். அந்த வளைப்பின்னலை எடுத்து கொண்டு அவனுமே மகி நின்று கொண்டு இருக்கும் அந்த சன் சைட் கீழே சரியாக அந்த வளைப்பின்னலை அந்த பெண் யார் என்று கூட பாராது விரிக்க. ஆரம்பிக்க.. உடனே உடன் நின்று கொண்டு இருந்த மாணவ மாணவியர்களும் சித்தார்த்தின் நோக்கம் புரிந்து கொண்டவர்களாக அந்த வலை பின்னலை ஒரு வட்ட வடிவமாக சரியாக அந்த சன் சைட் கீழே பிடித்து கொண்டு நிற்க.
கீழே சரியாக ஒரு நிலைக்கு வந்த பின் தான் சித்தார்த் நிமிர்ந்து யார் என்று பார்த்தது.. தன் வகுப்பு மாணவியாக இருந்தால் தெரியும் அவ்வளவே… யார் என்று பார்த்தவனுக்குமே முதலில் அது மகி என்பது அவனுக்கு தெரியவில்லை…
சித்தார்த் சத்தமாக… அந்த மாணவனின் கை பற்றிக் கொள்.. என்று வேகமாக சொல்ல.. அந்த உயர்ந்த குரல் மகிக்கி கேட்டு விட்டதோடு அந்த குரல் யாரோருடையதும் என்று புரிந்ததில் சட்டென்று திரும்பி கீழ் நோக்கி பார்த்தவள்..
பயந்த குரலில்.. அவளுமே… “ அத்தான்….” என்ற அந்த அழைப்பில் தான் இது வரை தன் கல்லூரி மாணவி என்று இருந்த சித்தார்த் பயத்தில் உச்சத்தை தொட்டவனாக.
“மகிம்மா…” என்று அழைத்த சித்தார்த்தின் குரலிலும் பயம் பதட்டம் இரண்டும் சேர்ந்து தெரிந்தது..
அதற்க்குள் அந்த இடத்திற்க்கு ராம்சந்திரனும் வந்து விட,..
அவருமே பயந்து போனாலுமே மகியிடம்..
தைரியமா அந்த பையன் கை பிடித்து கொள் மகி..” என்று சொல்ல தன் அத்தான் மாமனின் பேச்சு கொடுத்த அந்த தைரியத்தை சன் சைட்டில் இருந்து கை எடுத்து நீட்டிக் கொண்டு இருந்த அந்த மாணவனின் கை பிடிப்பதற்க்குள் ஒரு பிடிமானம் இல்லாது பிடிக்க முடியாது போய் விட.. அவளின் உடல் கீழ் நோக்கி விழுந்தது.. அதுவும் சரியாக கீழே இவர்கள் விரித்த வலையில் வலைக்குள்…
கீழே விழும் போதே. மகி தான் அவ்வளவு தான் என்ற முடிவோடு பூனைக் குட்டியை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு கண்களை மூடிக் கொண்டவளின் கண் முன் தன் பெற்றோர்களை நினைத்து கொண்டவள்.. தான் கீழே விழாது வலையில் விழுந்தாலுமே அவளின் அந்த பயந்த மனமானது தான் பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என்பதை உணரவே அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது..
பின் மற்றவர்களின் உதவியோடு அந்த வலையில் இருந்து வந்தவள் தன் பயம் போகாது தன் சித்தார்த் அத்தானின் மார்பில் தஞ்சம் அடைந்த அந்த சமயம் தான் மகியின் மதி முகத்தை குருமூர்த்தி பார்த்தது…