Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்....8...1

  • Thread Author
அத்தியாயம்..8…1

தன் பேச்சில் தன் அத்தான் தன்னை சந்தேகத்துடன் பார்ப்பதை பார்த்த ஸ்ருதி சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவளாக சாதாரணமாக பேச..

ஸ்ருதியின் இந்த மாற்றம் தான் குருமூர்த்தியை இன்னும் யோசிக்க வைத்தது.. ஏதோ இருக்கிறது திட்டவட்டமாக நம்பினான்.. பேச வேண்டும்… பேசியே ஆக வேண்டும்.. என்ற முடிவு செய்தவனாக..

மீண்டும்.. “அது தான் எல்லாம் முடிந்து விட்டதே எங்களோடவே வா ஸ்ருதி..” என்று குருமூர்த்தி அழைத்த போது கூட

ஸ்ருதி மீண்டுமே.. “நீங்க போங்க நான் அப்புறம் வர்றேன்..” என்று சொன்னவள் வதனியை காட்டி அவளோடு வீட்டிற்க்கு வருகிறேன்.. அவள் வீட்டில் யாரும் இல்லை.. நம்ம வீட்டில் தான் தங்குவா…” என்று சொன்னதும் சரி நாளை பேசி கொள்ளலாம் என்று நினைத்து தான் தன் மாமனோடு குருமூர்த்தி தன் காரை எடுக்க வர.. அங்கு மகி தன் மாமனின் காரில் ஏறிக் கொண்டு இருந்தாள்..

காரின் வெளியில் சித்தார்த் நின்று கொண்டு இருக்க, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ராம் சந்திரனிடம் வீட்டுக்கு போனதும் மெசஜ் போடுங்கப்பா…” என்று சொன்ன போது ராம் சந்திரனோ…

“நீ மகியை அழச்சிட்டு வீட்டுக்கு போ… நான் இங்கு பார்த்துக்குறேன் என்று சொன்னா நீ தான் கேட்க மாட்டேங்குற..” என்ற பேச்சில் சித்தார்த்

“ப்பா உங்களுக்கு வயசு ஆகுதுப்பா … காலையில் இருந்து ஒரு இடத்தில் நீங்க உட்காரல.. சுகர் டேப்லேட் எல்லாம் ஒழுங்கா போட்டிங்கலா என்று கூட எனக்கு தெரியல “ என்ற சித்தார்த்தின் இந்த பேச்சுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மகி…

“இன்னைக்கே இன்னைக்கு உண்டான இந்த விழாவுக்காக மாமா ஒரு வாரமா நிற்காம தான் ஓடிட்டு இருக்காரு… “ என்று சொல்ல.

பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் மாமா. “ உன் அத்தான் கிட்ட போட்டா கொடுக்குற… இப்போவே இப்படின்னா நாளைக்கு கல்யாணம் முடிந்தால் அவ்வளவு தான் போல…” என்ற ராம் சந்திரனின் இந்த பேச்சுக்கு மகி சிரிக்க.. சித்தார்த்துமே சிரித்தான் தான்… ஆனால் அந்த சிரிப்பில் உயிர்ப்பு இருந்ததா என்று தான் தெரியவில்லை…

ஆம் ராம் சந்திரன் இன்று இருவரின் திருமணத்தை பற்றி இப்படி வெளிப்படையாக பேசுக்கிறார் என்றால்., இரண்டு நாட்கள் முன் சாரதா.. இவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டு விட்டார்.

அதுவும் தன் மகனிடம்.. “சித்து உனக்கு மகியை கல்யாணம் செய்து வைக்க தான் எனக்கும் உங்க அப்பாவுக்கும் விருப்பம்…” என்று சாரதா சொல்லும் போதே இடை புக நினைத்த தன் கணவனிடம்..

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க..இப்போ நான் கல்யாணம் பத்தி பேசினா நாளை மறுநாளுக்கே இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிக்க போறது இல்ல. எனக்குமே என் மருமகள் படிப்பு மீது அக்கறை இருக்கு.. அதுவும் என் அண்ணனின் விருப்பமான படிப்பை என் மருமகள் எடுத்து படிப்பதில் தடையா நான் இருக்க மாட்டேன்.

ஆனா எனக்கு இன்னைக்கு தெரிய வேண்டிய ஒரு விசயம். இவங்க இரண்டு பேருக்கும் இவங்க கல்யாணம் பண்றதில் விருப்பம் இருக்கா இல்லையா..? என்பது எனக்கு தெரியனும் அவ்வளவு தான் ..” என்று விட்டார்..

இந்த பேச்சு மகியின் முன் நிலையில் தான் நடந்தது..

சித்தார்த் தான் ஒரு தர்ம சங்கடமான பார்வையை மகி மீது செலுத்தி ..”ம்மா…” என்ற மகனின் அழைப்பை கூட சாரதா சட்டை செய்யாது..

எனக்கு இப்போ தேவை.. விருப்பமா இல்லையா.? இந்த இரண்டில் ஒன்று சொல் என்பது போல் நின்றார்..

கூடவே இதுவும் சொன்னார்… “ மகி இங்கு வந்து பத்து மாதம் ஆகுது.. அடுத்த மாதத்தில் என் அண்ணன் அண்ணி இறந்து முதலாம் ஆண்டு திதியும் வர போகுது…

உனக்கு நான் மகியை அது போல நினைக்கல பார்க்கல.. என்று ஏதாவது சொல்றது என்றால் இப்போதே சொல்.. நான் அவளை ஆஸ்ட்டலில் விட்டு விடுகிறேன்..” என்ற சாரதாவின் இந்த பேச்சில் மகன் கணவன் இருவரும் ஒரு சேர.

“என்ன இது பேச்சு..” என்ற அவர்களின் அதட்டலை எல்லாம் கேட்கும் நிலையில் சாரதா இல்லை…

அதனால் சித்தார்த் “ முதல்ல மகி கிட்ட கேளுங்க…” என்று சொல்லி விட்டு ஒரு சங்கடமான பார்வையை மகி மீது செலுத்தி விட்டு குனிந்து கொள்ள..

பாவம் மகிக்கு தன் அத்தானின் அந்த பார்வைக்கு அர்த்தம் தெரியாது..

“உங்க விருப்பம் அத்தை..” என்று விட்டாள்..

சாரதா மகியின் இந்த பதிலில் அவளை திருஷ்ட்டி கழித்தவர்..

“என் ராஜாத்தி..” என்று மருமகளை பாராட்டியவர்… இப்போது சொல் என்பது போல மகனை பார்த்தார்.

இப்போது மகனுமே.. “ சரிம்மா மகியை மேரஜ் செய்து கொள்கிறேன்..” என்று சொன்னவன் கூடவே.

“ஆனா மகி படிப்பு முடிந்த பின் தான்..” என்று கூறி விட்டான்..

சாரதா அதன் பின் மற்றவர்கள் முன் நிம்மதியாக இருந்தாலும், அவர் படுக்கை அறையில் தூங்காது அப்படியும் இப்படியும் பிரண்டு படுத்ததில் அவர் கணவன் ராம் சந்திரன்..

“அது தான் நீ ஆசைப்பட்டதை தானே பசங்க சொல்லி விட்டாங்கலே.. இன்னும் என்ன.. நிம்மதியா தூங்க வேண்டியது தானே…” என்ற தன் பேச்சுக்கு மனைவி பதில் அளிக்காததில், அவர் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பியவர்…

மனைவியின் அந்த பயந்த முகத்தை பார்த்தவர்… “என்ன சாரும்மா…?” என்று கணவன் கேட்டது தான் தாமதம்..

சாரதா… கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டவர் ஒன்றும் பேசவில்லை.. ஆனால் அவர் மார்பு நனைந்ததிலும். மனைவியில் உடல் குலுங்களிலுமே..

“சாரும்மா என்ன டா என்ன விசயம்..? உங்க பெரியப்பா அன்னைக்கு மகியை நம்ம வீட்டுக்கு அழச்சிட்டு வரும் போது ஏதோ சொன்னாரே.. திரும்ப அவர் ஏதாவது சொன்னாரா.? அதுக்கு தான் இன்னைக்கு நம்ம பிள்ளைங்க கிட்ட கூட பேசினியா.. சாரும்மா..” என்று தன் மார்பில் பதிந்து இருந்த மனைவியின் முகத்தை நிமிர்த்தி சாரதாவின் முகத்தில் கண்ணீரை துடைத்தவரின் கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்த சாரதா..

பின்.. “ நேத்து ஒரு கனவு கண்டேனுங்க. அதுல என் அண்ணன்.. அண்ணியும் என் மகளை விட்டுடாதே விட்டுடாதே..” என்று சொன்னாங்க…” என்ற மனைவியின் இந்த பேச்சில் ராம் சந்திரனிடம் இருந்து ஒரு நிம்மதி பெரும் மூச்சு. இவ்வளவு தானா..? என்பது போல பார்த்தவர்..

“என்ன சாரு ஒரு கனவுக்கு நீ இப்படி பயந்துப்பியா.. நானுமே என்னவோ ஏதோ என்று நினச்சிட்டேன்..” என்று கணவன் பேச்சில் அவரையே பார்த்திருந்தார்..

மனைவியின் அந்த பார்வையில்.”சாரும்மா…” என்றவரிடம்..

“என் அண்ணா.. என் அண்ணா சரித்திரம் திரும்ப போது.. என்று சொன்னாருங்க…”

சாரதாவின் இந்த பேச்சில் ராம் சந்திரனுமே சிலையாகி தான் போனார்… முகத்தில் அத்தனை வருத்தம்..

அது கனவினாலா..? இல்லை கனவின் அவள் அண்ணன் சொன்ன வார்த்தையினாலா..? இல்லை அதை சொல்லும் போது சாரதானின் முகத்தில் தெரிந்த மித மிஞ்சிய அந்த வேதனையினாலா…?

ராம் சந்திரனுக்கு தெரியவில்ல.. ஆனால் கடைசியானதாக இருந்தால், அதை யோசிக்கும் போதே ராம் சந்திரன் வாயில் இருந்து…

“நீ இந்த வாழ்க்கையில் சந்தோஷமா தானே இருக்க சாரும்மா..?” என்ற கணவனின் கேள்வி எதற்க்காக.? அதுவும் இப்போது என்று குழப்பமான முக பாவனையுடன் கணவனை பார்த்த சாரதாவுக்கு கணவனின் முகதோற்றதில் இத்தனை வருட வாழ்க்கையின் அனுபவம் கணவர் என்ன நினைக்கிறார் என்று புரிந்து கொண்ட சாரதா.

இப்போது மீண்டுமே கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டவர். “ என் சந்தோஷத்திற்க்கு என்னங்க குறச்சல்.. இதோ மனசு அரிஞ்சு நடக்கும் கணவன் ஒழுக்கமான மகன்… என் பழை..” என்று சாரதா சொல்லும் போதே ராம் சந்திரன்.. அழைத்த.

“சாரும்மா..” என்ற அந்த அழைப்பில் அடுத்த வார்த்தை சாரதா அதை வைத்து பேசவில்லை…

ஆனால்.. “ என் மருமகளுக்கும் என்னை போலவே ஒரு வாழ்க்கை கிடைக்கனுமுங்க.. எனக்கு அது தான் வேண்டும்…” என்ற மனைவியின் பேச்சில்.

“அது தான் நீ ஆசைப்பட்டது போல நடக்க போகுதே… சாரும்மா. இன்னும் என்ன கவலை. உனக்கு….” என்று கணவன் என்ன தான் தேற்றினாலும் சாரதாவுக்கு மனது என்னவோ போல தான் இருந்தது..

அதில் காலையில் இவர்கள் கிளம்பும் போதே சாரதாவும் எங்கோ வெளியில் கிளம்புவது போல தயாரகி நின்று கொண்டு இருந்தவரை பார்த்து.

சித்தார்த்.. “ ம்மா என்னம்மா நீங்களும் எங்க கூடவே வரிங்கலா.. உங்க மருமகள் ஈவிங் தான்ம்மா பாட போறா…” என்றதற்க்கு

சாரதா. “ நான் உங்க கூட வரல கண்ணா.. நம்ம மங்களம் கூட வெளியில் போறேன். “ என்றவரிடம்..

“ஈவினிங்க சீக்கிரம் வந்துடுங்கம்மா..” என்று மகன் சொன்ன போது தான் சாரதா.

“இல்ல கண்ணா நான் வர லேட் ஆகும்… எறு சொன்னவர் தான் ஜோதிடரை பார்க்க செல்வதாக சொன்ன போது.

மகியும் சித்தார்த்தும்.. ஜோசியரை இன்னொரு நாள் போய் பார்க்கலாம் லே என்று கேட்டது போது சாரதா ஒன்றும் பேசாது இருக்க ராம் சந்திரன் தான்.

இரவு மனைவியின் மன நிலை புரிந்தவராக… போய் பார்த்தால் நிம்மதியாகி விடுவாள் என்று நினைத்து..

“அவள் போகட்டும்” என்றதும் மகனும் மருமகளும் என்ன நினைத்தார்களோ அதன் பின் சாரதாவை வற்புறுத்தவில்லை…

ராம் சந்திரன் கல்லூரி விழா முடியும் வரை கூட அந்த விழா நல்லப்படியாக முடிய வேண்டும் இது மட்டும் தான் எண்ணமாக இருக்க மனைவியை பேசியில் அழைக்கவில்லை..

விழா முடிந்ததும்… மனைவிக்கு அழைத்து பேசினார்.. மனைவியின் குரலில் தெரிந்த மாற்றத்தில், மகன் நீங்கள் வீட்டிற்க்கு போங்க நான் இங்கு பார்த்துட்டு வரேன் என்று சொன்னதும் மற்ற நேரமாக இருந்து இருந்தால் எடுத்த வேலையை முடித்து கொடுக்காது, வீட்டிற்க்கு சென்று இருக்க மாட்டார்.. ஆனால் இப்போது மகன் இன்று பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையில் மனைவியை பார்க்க மருமகளோடு சென்று விட்டார்.

ஆனால் பாவம் ராம் சந்திரனுக்கு நடக்க போவது தெரிந்து இருந்தால் மகனை இங்கு விட்டு சென்று இருக்க மாட்டாரோ என்னவோ..

அதே போல் தான் குருமூர்த்தியும் இதோ காரை எடுக்கும் சமயம் ஒரு குடும்பமாக மகி சிரித்து கொண்டு பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அவர்களிடம் தன்னை அறிமுகம் படுத்தி கொள்ள தான் நினைத்தான்..

ஆனால் விசுவநாதன்.. “ மாப்பிள்ளை காரை எடுங்க மாப்பிள்ளை.. கடையில் ஏதோ பிரச்சனை போல.. “ என்றதுமே குருமூர்த்தி மற்றதை மறந்து விட்டவனாக எந்த கடை என்று கேட்டு காரை அந்த கடையை நோக்கி செலுத்தினான்..

இங்கு சித்தார்த் மட்டும் இருப்பதை கவனித்து தான் அனைவரையும் அனுப்பி விட்டு ஸ்ருதி கல்லூரியில் இருந்தது..

சித்தார்த் கூட ஸ்ருதி இன்னுமே வீடு போகாது இருப்பதை கவனித்தான் தான். இதுவுமே கவனித்தான் தான்.. அதாவது சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் ஸ்ருதி அத்தனை அழகாக நடனம் ஆடியவள்.. இன்றைய விழாவில் அதில் கால் வாசி அளவுக்கு கூட ஆடவில்லை என்பதுமே. கவனித்தான் தான்..

ஆனால் எதுவும் கேட்கவில்லை.. சித்தார்த் எப்போதும் ஸ்ருதியிடம் தனிப்பட்டு பேசியது எல்லாம் கிடையாது தான்.. ஆனால் பார்வை.. கண்டிப்பாக அவளிடம் மட்டும் அவனின் பார்வை தனிக்கவனம் செலுத்தும் தான்..

ஆனால் இரண்டு நாள் முன் அன்னையிடம் சொன்ன மகியை திருமணம் செய்துக்க எனக்கு சம்மதம் என்று சொன்னதில் நேற்று முழுவதுமே… ஸ்ருதியிடம் தன் பார்வையை செலுத்தவில்லை..

ஸ்ருதி புரிந்து கொள்வாள் என்று நினைத்தான்.. ஆம் தான் அவளை பார்ப்பது அவளுக்குமே தெரியும் என்பது இவனுக்கு தெரிந்தது தான்..

அதே போல் இப்போது தான் அவளை தவிர்ப்பதுமே புரிந்து கொள்வாள் என்று சித்தார்த் நினைத்தான்..

அவன் நினைத்தது போல் தான் ஸ்ருதி சித்தார்த்தின் அந்த பார்வையின் மாற்றத்தை புரிந்து கொண்டு விட்டாள்..

ஒரே நாளில் சித்தார்த்தின் தந்தை தன் தந்தையை பற்றியான அது போலான ஒரு எண்ணம்.. அன்றே சித்தார்த் தன்னை தவிர்த்தது.. இரண்டையும் ஒன்றோடு ஒன்று முடிச்சி போட்டவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

அதனால் தான் அவளாள் எதிலும் கவனம் செலுத்த முடியாது என்று சித்தார்த்திடம் பேசி விட வேண்டும் என்று இரு முடிவில் இருக்க்ச்..

சித்தார்த்தோ இது வரை அவளிடம் தனிப்பட்டு பேசியது கிடையாது.. இனியும் பேசி விட கூடாது என்று இருக்க.

ஆனால் சூழ்நிலை ஸ்ருதியிடம் சித்தார்த் பேசும் படி ஆகி விட்டது.. விழாவுக்கு உண்டான கணக்கு வழக்கு என்று அனைத்தும் முடித்து விட்ட பின் கூட ஸ்ருதி வீட்டிற்க்கு செல்லாது அங்கேயே ஆனால் அவன் கண் படும் தூரத்தில் அமர்ந்து கொண்டு இருந்தாள்..

சித்தார்த் ஸ்ருதியை சட்டை செய்ய கூடாது என்று இருந்தாலுமே நேரம் ஆக ஆக அதுவும் வதனியும் சென்ற பின்.. இந்த பெண் போகாது என்ன செய்கிறாள் என்று அவனையும் மீறி, தன் கை கடிகாரத்தையும் அவளையும் மாறி மாறி பார்க்க ஆரம்பித்து விட்டான்..

சரி தான் இருப்பதால் தான் அவளும் இங்கு இருக்கிறாள்.. தான் கிளம்பி விட்டால் அவளுமே கிளம்பி விடுவாள் என்று விழாவின் கணக்கு வழக்குக்களை ஒப்படைத்து விட்டு அவனுமே விரைந்து கிளம்பி விட தன் காரை நோக்கி நடந்தான்..

ஆனால் தான் கிளம்பினாள் அவளுமே கிளம்பி விடுவாள் என்று நினைத்த சித்தார்த் ஸ்ருதி அமர்ந்த இடத்திலேயே அசையாது அமர்ந்து இருப்பதை பார்த்து பல்லை கடித்தவன் காரில் அமர்ந்து இருந்தவன்.. அதை எடுக்காது மீண்டும் ஸ்ருதியை நோக்கி நடந்தான்..

பேசாது இது முடியாது என்ற முடிவில்.. ஸ்ருதியுமே இதற்க்கு தானே காத்து கொண்டு இருந்தாள்..

சித்தார்த் தன்னை நோக்கி நடந்து வருவதை உணர்ந்தாலுமே, அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.. தலை குனிந்து அமர்ந்திருந்தவன் பக்கத்தில் வந்து நின்றவன்..

“இங்கு என்ன பண்ணிட்டு இருக்க..?” என்று சித்தார்த் ஸ்ருதியிடம் பாடத்தை விடுத்து தனிப்பட்ட முறையில் பேசிய வார்த்தை இது.

அந்த நிலையிலுமே ஸ்ருதி அதை உணர்ந்தாள் தான். ஆனாலுமே சித்தார்த்தின் கேள்விக்கு அவள் பதில் அளிக்கவில்லை..

இப்போது மீண்டுமே சித்தார்த். “ இங்கு என்ன செய்யிற ஸருதி வீட்டுக்கு போகாது…” என்று கேட்டவனின் வார்த்தையில் அத்தனை அழுத்தம் …

தன் பெயர் சொல்லி அழைத்ததுமே தான் ஸ்ருதி சித்தார்த்தை தலை நிமிர்ந்து பார்த்தது..

பார்த்தவள்.. “ உங்களிடம் பேச தான்..” என்ற பதிலில்..

“பாடம் சம்மந்தமா எந்த டவுட் என்றாலுமே நாளைக்கு க்ளாஸில் கேள்.. இப்போ வீட்டுக்கு கிளம்பு…”

ஸ்ருதி தன்னிடம் என்ன பேசுவாள் என்று தெரிந்தே… அதை தவிர்க்க சித்தார்த் இப்ப்ஸ்டி சொல்ல..

ஆனால் ஸ்ருதியோ… “ படிப்பு சம்மந்தம்மா இருந்தா க்ளாசில் கேட்டுக்கலாம்.. வாழ்க்கை சம்மந்தம்மா இருந்தா.. நான் நம்ம வாழ்க்கை சம்மந்தம்மா பேசனும்..” என்று சொன்னவளின் பேச்சில் சித்தார்த் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டவன்..

தன்னை நிதானம் படுத்தி கொள்ள வேண்டி ஒரு ஆழ்ந்து மூச்சு எடுத்து விட்ட பின்..

“ உன் வாழ்க்கை பற்றி என் கிட்ட பேச என்ன இருக்கு..?” என்று சித்தார்த் கேட்க.

ஸ்ருதி.. “ நான் நம்ம வாழ்க்கை என்று சொன்னேன்.. அது உங்களுக்கு தெரியும்.. புரியவும் செய்யும்..”

இப்போது ஸ்ருதியிடம் ஒரு அழுத்தம் வெளிப்பட .. அதை கவனித்த சித்தார்த்தோ இதை இனியும் வளர விட கூடாது என்ற முடிவில் அவன் பேச முடிவோ.. ஸ்ருதி தன் வீட்டில் தன் அறையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கும் படியான நிலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது…






 
Top