Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...9..1

  • Thread Author
அத்தியாயம்…9…1

சித்தார்த் இது தான் தன் முடிவு என்பது போல ஸ்ருதியிடம் பேசி விட்டாலுமே, மன பாரத்தோடு தான் வீடு வந்தான்..

வீடு வந்தவனுக்கு தனிமை கிடைத்தால் போதும் யாருடனும் பேசும் நிலையில் அவன் மனநிலை இல்லை.. மணி பத்து ஆகி விட்டது.. கண்டிப்பாக சாப்பிட்டு அவர் அவர் அறையில் உறங்கி இருப்பர்…

தான் விரும்பும் தனிமை என்பதை விட.. தனக்கு இப்போது தேவைப்படும் தனிமை தனக்கு கிடைக்கும் என்று வந்தவனுக்கு யாரும் உறங்காது, குறைந்த பட்சம் அவர் அவர் அறையில் கூட இல்லது கூடத்தில் அனைவரும் இருப்பதை பார்த்ததுமே சித்தார்த்தின் சோர்ந்த உள்ளம் இன்னுமே சோர்ந்து தான் போய் விட்டது…

அனைவரையும் பார்த்ததுமே தலை வலி என்று சொல்லி தன் அறைக்கு தான் செல்ல பார்த்தான் சித்தார்த்..

ஆனால் அன்னையின் அழுத முகமும், தந்தையின் கோப முகத்தைம் பார்த்தவன் தன் பிரச்சனை மறந்து..

மகியிடம் என்ன என்பது போல் பார்த்தவனிடம் மகி ஒரு சங்கடமான பார்வை பார்த்தாள்..

அதனால் தன் தந்தையிடமே.. “என்னப்பா. என்ன பிரச்சனை.. டையாடா தெரியிறிங்க என்று தானே உங்களை சீக்கிரம் வீட்டிற்க்கு அனுப்பினேன்… சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தூங்காம இந்த நேரம் வரை என்ன செய்யிறிங்க…” என்று கேட்டவனின் குரலில் கொஞ்சம் சலிப்பு இருந்தது..

என்ன தான் குடும்பத்தின் மீது பற்று பாசம்.. மகியின் மீது அக்கறை அன்பு இருந்தாலுமே, தனக்கு பிடித்த பெண்ணிடம்.. நான் இன்னொரு பெண்ணை தான் மணக்க போகிறேன் என்று சொல்லி விட்டு வருவது என்பது.. கொதிக்கும் எண்ணையில் கை விடுவது போல.

அது போல எண்ணையில் கை விட்டு கை புண்ணாகினாலுமே நாள் சென்று அந்த ரணம் ஆறி விடும்.. ஆனால் காதல் தோல்வி என்பது.. இப்படி அவன் மனநிலை இருக்க..வீட்டிலும் யாரின் முகமும் சரியில்லை என்பது போல தெரிந்ததில்,

இன்னும் என்னவாம் இவங்களுக்கு.? அது தான் மகியை திருமணம் செய்ய ஒத்து கொண்டு விட்டனே…? இவ்வாறு தான் அவனுக்கு நினைக்க தோன்றியது..

ஆனால் இன்னும் உனக்கு இருக்கிறது என்பது போல் தான் அவன் தந்தையின் பேச்சு இருந்தது.

“எங்கு உங்க அம்மா என்னை நிம்மதியா இருக்க விடுறா… இரண்டு நாள் முன் கனவு அது இது என்று சொல்லி உனக்கும் மகிக்கும் கல்யாணம் செய்வது பற்றி பேசினால் என்றால், இன்னைக்கு ஜோசியர் அது சொன்னாரு இது சொன்னாரு.. என்று வந்து நிற்கிறா…இவள் சொல்வது போல எல்லாம் செய்ய கல்யாணம் என்ன விளையாட்டு விசயமா என்ன..?”

எப்போதும் அமைதியின் சொரூபமாக இருக்கும் தன் தந்தையின் இந்த கோப பேச்சில் சித்தார்த் அதிர்ச்சியாக தன் அன்னையையும் மகியையும் பார்த்தவன்.. மகியை விட்டு,

தன் அன்னையிடம். “ம்மா என்னம்மா பிரச்சனை.. அப்பா ஏன் இவ்வளவு கோபப்படுறார்.?” என்று கேட்டான்.

கோபப்படாத மனிதரின் இந்த கோபத்தில் பிரச்சனை பெரியது என்று இவன் நினைக்க..

ஆமாம் என்பது போல் தான் சாரதா சொன்னார்…

“கண்ணா நீ மகியை கல்யாணம் செய்துக்கிற என்று சொன்ன தானே..?” என்ற கேட்டதற்க்கு..

“ம்..” என்று சொன்னவனின் கண் முன் ஸ்ருதியின் அழுத முகம் வந்து நின்றது.

“அது தான் கண்ணா அந்த கல்யாணத்தை இரண்டு மூன்று வருஷம் கழிச்சி செய்யிறதை இப்போவே செய்ய சொல்றேன். இதுல என்ன கண்ணா தப்பு இருக்கு….?” என்ற அன்னையின் கேள்வியில்..

சித்தார்த்…. “ இப்போவே வா… ம்மா மகி பி.எச்.டி முடிக்கனும்..” என்று அவன் சொல்லி கொண்டு வரும் போதே ராம் சந்திரன்..

“உன் அம்மா இப்போவே கல்யாணத்தை முடிக்கனும் என்று சொல்றாளே.. அது எப்போ என்று கேளு….” என்று கேட்டவரை பார்த்த சித்தார்த்…

தன் அன்னையை பார்த்தவன்.. அவன் ஒன்றும் கேட்கவில்லை.. ஆனால் சாரதாவே.. “ நாளைக்கு நல்ல முகூத்த நாள்…” என்றது தான்..

தந்தைக்கு மேல் கோபம் ஏறி விட்டது அவனுக்கு..

“என்னம்மா விளையாடுறிங்கலா….?” என்று கத்தினான்..

ஸ்ருதியை மறந்து விட்டு மகியை திருமணம் செய்து கொள்வதை நினைத்தாலே அவன் மனதில் பாரம் ஏறியது.. ஆனால் மகியோடான திருமணம் உடனே இல்லை.. அவள் படிப்பு முடிந்த பின் தான் என்பது தான் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.. இப்போது அதுவும் இல்லாது அதுவும் நாளையே என்றதில் சித்தார்த்துக்கு அப்படி ஒரு கோபம்..

இன்னுமே என்ன கத்தி இருப்பானோ… மகியின் நினைவில் அவளை தான் திரும்பி பார்த்தான்.. அவளுமே என்ன சொல்வது ஏது சொல்வது என்பது போல பாவனையில் தான் மூன்று பேரையுமே மாறி மாறி பார்த்தவளை பார்த்தவனுக்கு சாரதாவின் மீது இன்னும் தான் கோபம் வந்தது..

“உங்க ஆதரவில் இருக்கா என்று அவளை பத்தி கொஞ்சமும் யோசிக்காது உன் இஷ்ட்டத்திற்க்கு முடிவு எடுப்பிங்கலாம்மா…?” என்று கேட்டவனிடம்..

“நான் என் மருமகளை நினச்சி தான் இந்த முடிவையே எடுத்தேன்…அந்த ஜோசியக் காரன்.. மகிக்கும் உனக்கும் கல்யாணம் நடக்காதாம்.. மகிக்கு ஒரு கட்டாயத்திலும், உனக்கு காதல் கல்யாணம் தான் நடக்கும் என்று சொல்றாரு கண்ணா…”

அன்னையின் இந்த பேச்சில் சித்தார்த்தின் ஒரு மனது குளிர தான் செய்தது.. ஆனாலும் படித்தவன் இந்த ஜோதிடம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாது அறிவு பூர்வமான ஆதாரபூர்வமான விசயத்தை மட்டுமே நம்புபவன்.. சாரதாவின் இந்த பேச்சில் இன்னும் தான் கோபம் வந்தது.

“நாளைக்கு நாங்க கல்யாணம் செய்தா.. அதுவுமே மகிக்கு ஒரு விதத்தில் கட்டாய கல்யாணம் தான்ம்மா…” என்று சொன்னவன் கூடவே.

“ப்ளீஸ் எனக்கு ரொம்ப டையடா இருக்கு… நான் தூங்கனும்.. இந்த நாளைக்கு கல்யாணம் நாளான்னைக்கு கல்யாணம் இந்த பேச்சை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு போய் தூங்குங்க… என்றவன்.

“மகி நீ பயப்படாதே. போய் தூங்கு..” என்று சித்தார்த் சொன்னதும் தான் மகேஷ்வரியின் மனது கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது.

பின் என்ன கல்லூரி விழா முடிந்து.. பரிசு கிடைத்ததில் இதமான மனநிலையில் வீடு வந்த மகி பார்த்தது அழுது வீங்கி இருந்த அத்தையின் முகம்..

மாமாவும் அவளுமே என்ன என்று விசாரித்தால் ஜோதிடர் சொன்னது. அதன் தீர்வாக நாளையே தனக்கும் அத்தானுக்கும் திருமணம் என்றதில் பெண் ஆடி தான் போய் விட்டாள்..

அவள் மனதில் ஒன்றும் இல்லை என்பதினால், சித்தார்த்தை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள்.. ஆனால் அது நாளையே என்ற உடன்… அதை ஏற்றுக் கொள்ள அவளால் முடியவில்லை.. தன்னால் அவள் மனது தன் தாய் தந்தையை நாடியது..

சித்து அத்தானின் இந்த பேச்சில் நிம்மதி ஆகி தன் அறைக்கு சென்றவள் தூங்கியும் விட்டாள்…

கோபத்துடன் தங்கள் அறைக்கு சென்ற சாரதா கோபத்துடன் ஏதேதோ மனது அலை கழிய கோபம் ஆதங்கம்.. என்ற கலவையான மனநிலையில் தன் கணவனிடம் பேசிக் கொண்டு இருந்த சாரதா கூட தன் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த கணவன் தூங்கி விட்டதால், வேறு வழி இல்லாது ஒரு நேரத்திற்க்கு பின் தூங்கி விட்டார்.

ஆனால் அனைவரையும் தூங்கு என்று சொல்லி விட்டு தன் அறைக்கு வந்த சித்தார்த்தினால் தான் சிறிது நேரம் கூட தூங்க முடியாது.. ஸ்ருதியை முதன் முதலில் தன் வகுப்பி சந்திக்கும் முன்…. ஒரு மருத்துவமனையில் சந்ததித்தது.. பின் தன் கல்லூரியில் தன் வகுப்பிலேயே ஸ்ருதியை பார்த்தவனின் மனதில் மத்தளம் கொட்டியது..

ஆனாலுமே தான் வகிக்கும் பதவி தொட்டு தன்னை வெளிக்காட்டாது இருந்தது.. ஸ்ருதியும் தன்னை பார்க்கிறாள் என்றதில் மனதில் அடைந்த மகிழ்ச்சி… பின் கடைசியாக இன்று காதல் சொன்னது… என்று ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றதில் அவன் தூக்கம் தூர போனது தான் மிச்சம்.

கூடவே அவன் மனதிற்க்குள் என்னவோ சரியில்லை.. என்பது போல் அவன் அடி மனது பிசைந்து கொண்டு இருந்தது..

சித்தார்த் நினைத்தது போல் தான் ஸ்ருதி தன் அறைக்கு வந்தவள். ஒரு மூச்சுக்கு அழுது தீர்த்தாள்…

அழுது ஒய்ந்தாளாவது தன் மனதில் அழுத்தும் பாரம் குறையாதா என்ற எண்ணம் அவளுக்கு…

ஆனால் அழ அழ இன்னுமே பாரம் ஏறியதே தவிர குறைவதாக இல்லை… அவளுக்குமே தூக்கம் கிஞ்சித்தும் இல்லை.. ஷவரின் கீழ் நின்று பார்த்தாள், தன் அறையில் பால்கனியில் நடந்தாள்…

சித்தார்த்தை மறக்க வேண்டும்.. மறக்க வேண்டும் என்று தனக்குள் பாராயணம் செய்ய செய்ய அவள் மனதில் இன்னுமே தான் சித்தார்த் விசுவரூபம் போல உயர்ந்து நின்றான்..

விடியற்காலையில் அவள் மனது சொன்னது சித்தார்த் இல்லாது தான் இல்லை என்று.. சித்தார்த்தோ தனக்கு இல்லை என்று சொல்லி விட்டதில்,

ஏதோ நினைத்து அவள் மனதில் பாரம் அழுத்தியதில், அதன் கணம் தாங்க முடியாது விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில் விடு விடு என்று சமையல் அறைக்கு சென்ற ஸ்ருதி அங்கு இருந்த கத்தியை கையில் எடுத்தாள்..

அந்த கத்தியையும் தன் கையின் மணிக்கட்டையும் மாறி மாறி பார்த்தவள்… மனதில் கொஞ்சம் பயம் எடுத்தது தான்.

ஆனால் இந்த பயம் தன் அறைக்கு செல்லும் நேரத்தில் இன்னும் அதிகரித்து.. தன் இந்த தற்கொலை தடை செய்து விட்டால், இந்த பயம் இந்த கத்தியை கொண்டு என் கை மணிக்கட்டை கட் செய்யும் வரை தான்..

வலியோ என் உயிர் செல்லும் வரை தான்.. ஆனால் சித்தார்த் இல்லாது நான் வாழும் வாழ்க்கை ஆனாது.. அதுவும் சித்தார்த் இன்னொரு பெண் பக்கத்தில் பார்க்கும் திராணி தனக்கு கிடையாது… அது நரகத்திலும் கொடுமையானது..

அந்த கொடுமையான ரணமான வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்தவள்.. சட்டென்று தன் மணிக்கட்டை ஆழமாக மிக ஆழமாகவே வெட்டிக் கொண்டாள்..

அவள் நினைத்த அளவுக்கு அவள் வலியை உணரவில்லை…ஒரு சமயம் மனதில் வலி அதிகமாக இருந்தால் வெளி வலி எல்லாம் தெரியாது போல. நினைத்து கொண்டவள்..

அந்த கத்தியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து படுத்து கொண்டு விட்டாள்..

விசுவநாதனின் பக்கத்து பங்களாவில் இருக்கும் குருமூர்த்தி அன்றும் எப்போதும் போல ஐந்து மணிக்கு காரை எடுத்து கொண்டு பீச் சென்று அங்கு இன்னுமே அரை மணி நேரம் நடை பயிற்சி செய்தவன் திரும்ப வீடு வந்த போது மணி ஆறு தொட்டு இருந்தது..

அவனின் தினப்படி செயல்களாக அடுத்து தன் பங்களாவில் மேல் தளத்தில் இருக்கும் உடற்பயிற்ச்சி கூடத்தில் ஒரு மணி நேரம் செலவழித்து பின் சத்து மாவு கஞ்சியோ. இல்லை பழச்சாறோ அருந்துவான்..

ஆனால் இன்று போர்ட்டிகோவில் காரை விடும் போது குரு பக்கத்து பங்களாவான தன் மாமாவின் தோட்டத்தை தான் பார்த்தான்..

பார்த்தவன் தன் கை கடிகாரத்தையும் பார்த்தான்.. மாமா இந்த நேரம் தோட்டத்தில் நடை பயிற்ச்சி செய்யும் நேரம் ஆச்சே இன்று என்ன ஆளை காணும்..

விசுவநாதனுமே முன் வெளியில் சென்று தான் நடைபயிற்ச்சி செய்தது.. இப்போது கொஞ்சம் வயது ஆகி விட்டதால், தினம் தன் தோட்டத்தில் அதை தொடர்கிறார்..

இன்னும் கேட்டால் குருமூர்த்தியே உடல் கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதை கற்றுக் கொண்டதே தன் மாமாவிடம் இருந்து தான். அவர் ஒரு நாளுமே தன் உடற்பயிற்ச்சியை மட்டும் விட்டு விட மாட்டார்..

இன்று அவர் நடை பயிலாததை பார்த்து விட்டு தன் வீட்டிற்க்கு செல்லாது மாமன் வீட்டிற்க்கு அவசர அவசரமாக சென்றான்.

சென்றவன் பார்த்ததோ விசுவநாதன் ஹாலில் தனித்து அமர்ந்து இருப்பதை தான்.. உடல் நிலை நன்றாக இருக்கிறது.. தன் மாமனை பார்த்த உடன் தெரிந்து கொண்டவன்..

அவர் பக்கத்தில் அமர்ந்தவன். “ என்ன மாமா என்ன யோசனை…?” ஸ்ருதியை பற்றியதாக தான் இருக்கும். நினைத்தான்.. விசுவநாதனும் அதையே தான் கூறினார்…

“நையிட் எல்லாம் தூக்கமே இல்ல குரு. மனசு என்னவோ பண்ணுது…” என்ற மாமனின் பேச்சுக்கு அவர் தோள் தொட்டு..

“நான் பார்த்துக்குறேன் மாமா. என் மேல நம்பிக்கை இல்லையா…?” என்று கேட்டவன் கை பிடித்து கொண்ட விசுவநாதன்..

“நீ நான் வளர்த்தவன் குரு.. ஒருத்தவங்களுக்கு செய்யனும் என்று நினைத்தா அதுக்காக எந்த எல்லை தொடவும்.. எந்த எல்லையை தாண்டவும் தயங்க மாட்ட… என்னை போலவே.. உன்னை நம்பாது எல்லாம் இல்ல….” என்று சொன்ன பின்னுமே விசுவநாதனின் முகம் தெளியாது இருப்பதை பார்த்த குருமூர்த்தி..

“இன்னும் என்ன மாமா.?” என்று கேட்டவனிடம்..

“ஸ்ருதி யாரையாவது லவ் பண்றாளோ… அந்த பையன் இவளை விரும்பாது வேறு யாரையாவது..” என்று இழுத்து நிறுத்தியவரிடம்..

“மாமா நீங்களே அதுவா இதுவா யோசிக்காதிங்க பேசலாம்..” என்று மாமனும் மருமகனும் பேசிக் கொண்டு இருந்த போது தான் தாமரை குளித்து முடித்து விட்டு அறையில் இருந்து வெளி வந்தார்.

குரு தன் கணவனுடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து.. “அட குருவா. அதிசயமா இருக்கு… இந்த நேரம் பளு தூக்கிட்டு இருப்ப. உன் மாமா தோட்டத்தில் எத்தனை செடி.. எத்தனை மரம் என்று எண்ணிட்டு இருப்பார்… ஆனா இன்னைக்கு பேசிட்டு இருக்கிங்க.” என்று வியந்து கேட்டுக் கொண்டே…

அவர்களின் பதிலை எதிர் பாராது சமையல் அறைக்குள் சென்று கொண்டே… “குரு சத்து மாவூ கஞ்சியா. ஜூஸா…?” என்று கேட்டு கொண்டே சென்றவரின் கண்ணில் சமையல் அறையில் தரையில் சிவப்பு நிறத்தில் திட்டு திட்டாக இருப்பதை பார்த்து..

“என்ன இது.?” என்று யோசனை செய்து கொண்டே மேல் தட்டில் இருக்கும் அந்த சத்து மாவை எடுத்து மேடையின் மீது வைத்தவரின் கண்ணுக்கு சமையல் அறை மேடையின் கீழ்.. அது போல நிறைய சிவப்பு நிறத்தில் ஏதோ இருப்பது போல தெரிய.

என்ன இது.? ரத்தமா..? அது ரத்தமாக இருக்க கூடுமோ என்ற சந்தேகம்.. தாமரைக்கு அப்போது தான் எழுந்தது…

அதுவும் ஸ்ருதி தான் எடுத்த கத்தியை மேலோட்டமாக வைத்ததும் தாமரையின் கண்ணுக்கு பளிச் என்று தெரிந்தது.. அதை விட. அதிலுமே சிவப்பாக.. அதை பார்த்த நொடி..

நெஞ்சின் மீது கை தன்னால் வைத்து கொண்டவர்… அந்த சிவப்பு நிறத்திட்டுக்கள் சமையல் அறையில் மட்டும் அல்லாது தொடர்ந்து ஹால் பின் சாப்பிடும் இடம் அதை கடந்தும் சென்றதில் தாமரை அதை தொடர்ந்து செல்ல.

குருமூர்த்தி தான்.. தன் அத்தை கீழே குனிந்து ஏதோ பார்த்து கொண்டு முகத்தில் பயம் அப்பிக் கொண்டு சென்றவரை பார்த்தவன் அவனுமே யோசனையுடன் எழுந்து கொண்டு..

“என்ன அத்தை.?” என்று கேட்டுக் கொண்டு தாமரையின் அருகில் சென்றான்…








 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Siddarth oda love Magi parents death ku Shruthi than reason nu therinja pinnadiyum irukkuma???
 
Top