Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

யென்னை கொண்டாட பிறந்தவன்...9..2

  • Thread Author
அத்தியாயம்….9..2

குருமூர்த்தி.. “ என்ன அத்தை…?” என்று கேட்ட வாறே அவன் அருகில் செல்லும் போதே விசுவநாதனும்… கூடவே… சென்றவர்..

“கஞ்சி கொடுக்குறேன் என்று சொல்லிட்டு தரையில் என்ன புதையலை தேடிட்டு இருக்க…?” என்று எப்போதும் போல மனைவியை கிண்டல் செய்து கொண்டே தான் அவர் சென்றார்…

ஆனால் அவர் செய்த கிண்டலுக்கு எதிர் பதமாய்… தரையை காண்பித்து… “ ரத்தமுங்க… சமையல் அறையில் ஆரம்பித்து நம்ம பொண்ணு ரூம் வரை போகுது… “ நின்ற இடத்தில் இருந்து ஸ்ருதியின் அறை வாசல் வரை ரத்த திட்டுக்கள் அந்த வெள்ளை தரைக்கு கண்களுக்கு பளிச் என்று தெரிந்தது..

கூடம் சமையல் அறை கருப்பு நிறத்திலான தரை. அதில் உற்று பார்த்தால் தான் தெரியும்..

சாப்பிடும் அறையில் இருந்து மற்றது எல்லாம் வெள்ளை பளிங்கு.. அதில் நன்றாக முதலில் ரத்தமா என்று சந்தேகமாக நினைத்த தாமரை கூட அந்த வெள்ளை தரையில் அது ரத்தம் தான் என்று உறுதியாக தெரிந்தவருக்கு உள்ளம் எல்லாம் பதறி போக.

விசுவநாதனுமே பயத்துடன் தரையையும் தன் மருமகனையுமே மாறி மாறி பார்த்தவரின் கண் முன் முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள் தான் அவர் கண் முன் வந்து நின்றது.

ஆனால் குருமூர்த்தியோ விரைந்து ஸ்ருதியின் அறையின் கதவு வரை வந்தவன் அதில் கை வைக்க ஸ்ருதி தாழ் போடாது போனதில் திறந்து கொண்டது…

அனைவரும் பயந்த… அது இருக்க கூடாது என்று நினைத்தவர்களுக்கு நீங்க பயந்தது தான் என்ற வகையாக மஞ்சள் நிறத்திலான படுக்கை விரிப்பின் சிவப்பு நிறத்தின் ரத்தம் பளிச் என்று தெரிந்தது..

தைரியமானவர்.. யார் என்ன என்றாலும் ஒரு கை பார்த்து விடுவேன் என்று இந்த அறுபது வயதை தொடும் நிலையிலும் இருக்கும் விசுவநாதன்.. மகளின் இந்த கோலத்தில் செயல் இழுந்து நின்று விட்டார்.

விசுவநாதனே அப்படி என்றால் தாமரையின் நிலை சொல்ல வேண்டுமா. ஆனால் குருமூர்த்தி ஸ்ருதியின் நாசி அருகில் விரல் வைத்து பார்த்தவன்.. தன் விரலின் உஷ்ண மூச்சு உணர்ந்ததில்,

சட்டென்று அவளை தூக்கி கொண்டவன்.. “ மாமா காரை எடுக்க சொல்லுங்க…” என்று சொல்லிய வாறே போர்ட்டிக்கோவுக்கு ஓட.. விசுவநாதனுமே தன் அதிர்ச்சியில் இருந்து சிறிது வெளி வந்தவராக மாப்பிள்ளையின் பின் ஓடினார்..

அடுத்து எல்லாம் மின்னல் வேகம் என்று சொல்வார்களே . அது தான் அங்கு நடந்தது… இவர்கள் பங்களாவின் அருகிலேயே ஒரு பெரிய மருத்துவமனை இருந்ததால் விரைந்தே ஸ்ருதிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்து விட்டது…

அதோடு இது போலான கேஸ்கள் எல்லாம் காவல் துறை வந்த பின் தான் என்ற அந்த விதியையுமே குருமூர்த்தி தன் செல்வாக்கு கொண்டும்.. பணத்தையும் கொடுத்து, காவல் துறையின் காதிற்க்கு செல்லாது பார்த்து கொண்டான்.

மருத்துவர் கொஞ்சம் சீரியஸ் தான்… பன்னிரெண்டு மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும்.. சொல்வதற்க்கு இல்லை கோமாவுக்கு போகவும் வாய்ப்பு இருக்கு என்று சொன்னதுமே குருமூர்த்திக்கு ஒரு நிமிடம் தன் மூச்சு நின்று விட்டது போலான நிலை தான்..

ஸ்ருதிக்கும் அவனுக்கும் எட்டு வயது வித்தியாசம்… வீடு பக்கம் பக்கம் என்பதினால், இவன் பார்த்து வளர்ந்த பெண்.. அவள் மீது குருமூர்த்திக்கு பாசம் அதிகம்.

இப்படி மருத்துவர் சொன்னதில் அவனுமே இடிந்து தான் போய் விட்டான்.. அவன் நிலையே இப்படி என்றால், விசுவநாதன் தாமரையின் நிலை சொல்லவும் வேண்டுமோ…

இங்கு குருமூர்த்தி இல்லத்தில் கிருஷ்ண மூர்த்தி விசுவநாதன் விடியற்காலையில் அவர் தோட்டத்தில் நடை பயிற்ச்சி செய்தால், இவர் அவர் சென்ற பின் ஏழு மணிக்கு தான் செய்வது.. கிருஷ்ண மூர்த்தி கூடிய மட்டும் விசுவநாதனை பார்ப்பதை தவிர்த்து விடுவார்.

அன்றும் ஏழு மணி போல் தான் நடை பயிற்ச்சி செய்ய தன் தோட்டத்திற்க்கு வந்த போது தான் தன் மகன் ஸ்ருதியை தூக்கி கொண்டு காரில் போவது,.. விசுவநாதனும் தன் தங்கையும் பதட்டத்துடன் பின் செல்வதும் பார்த்தவர்..

அவருமே உடனே தன் காரை எடுத்து கொண்டு பின் சென்றதால், ஸ்ருதியின் நிலை தெரிந்ததில், அவருக்கும் அதிர்ச்சி தான்..

அதுவும் ஸ்ருதி தன் மனைவியின் அண்ணன் மகள் மட்டும் அல்லாது தன் தங்கையின் மகளும் அல்லவா. அதுவும் ஸ்ருதியை அவருக்கு பிடிக்கும் தான்..

ஆனால் ஒரு சில விசயங்களாக அவள் அடமாக நிற்கும் போது ஸ்ருதியின் அத்தையான தன் மனைவியின் மறு பிம்பமாக ஸ்ருதி அவர் கண்ணுக்கு தெரிய.

ஸ்ருதி சின்ன வயதாக இருக்கும் போதே கிருஷ்ண மூர்த்தி தன் தங்கையை அழைத்து சொன்னார் தான்.

“உன் வளர்ப்பு சரியில்லை .” என்று.

ஆனால் தாமரை அதற்க்கு … “அண்ணா உங்களுக்கு என் கணவரை பிடிக்காது என்று எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் ண்ணா. அதுக்கு காரணமும் இருக்கு… நான் அவரை கல்யாணம் செய்தது கூட உங்களுக்கு பிடிக்கல.. அதனால இப்போ என் கிட்ட கூட நீங்க சரியா பேசுறது இல்ல. ஆனா ஸ்ருதி என்ன ண்ணா செய்தா.. ஸ்ருதிக்கு அப்பா அவர் என்றதினாலா…?” என்று தங்கை கேட்டதும் கிருஷ்ண மூர்த்தி அதற்க்கு அடுத்து தன் தங்கையிடம் கூட ஸ்ருதியை பற்றி பேசவில்லை..

இதில் தன் மகன் குருமூர்த்தி வளர வளர ஸ்ருதியின் அந்த அடமுக்கு வலு சேர்ப்பது போல விசுவநாதனாவது மகள் கேட்டால் தான் செய்து கொடுப்பார்.. ஆனால் குரு.. ஸ்ருதி பார்த்தால் போதும் அது அவள் கையில் இருக்கும் படி பார்த்து கொள்வான்..

இதில் தன் தங்கை மகள் மீது கிருஷ்ண மூர்த்திக்கு அதிருப்தி தான்.. ஆனால் இன்று அனைத்தையும் தான்டி.. சின்ன பெண் நல்லப்படியாக பிழைத்து கொள்ள வேண்டும்.. என்று கடவுளிடம் பிராத்தனையாக. பெரியவர்கள் செய்த பாவத்திற்க்கு சின்னவளுக்கு தண்டனை கொடுத்து விடாதே.. என்று வேண்டியவரின் பிராத்தனையா…? இல்லை இந்த புதியதில் பழையதும் அடங்கி இருக்கு.. அதுவும் ஒன்று தீர்க்க படாத கணக்கு மிச்சம் இருக்கு.. அந்த கணக்கையும் நான் சரி செய்ய வேண்டும் என்று கடவுள் நினைத்தாரா என்று தெரியவில்லை.

ஸ்ருதி மீண்டு விட்டாள்.. ஆனால் இன்னுமே பி,பி. சுகர் அளவு கம்மியாக தான் இருக்கு ஆனால் அது பிரச்சனை இல்லை சரி செய்து விடலாம் என்று சொன்ன மருத்துவர்.. அதையே அன்றைய நாளிலயே சரி செய்தும் விட்டார்..

பின் தான் அனைவருக்கும் உயிர் வந்தது.. கிருஷ்ண மூர்த்தி கூட அன்று முழுவதுமே மருத்துவமனையில் தான் இருந்தார்…

விசுவநாதனுமே கிருஷ்ண மூர்த்தி அன்று முழுவதுமே மருத்துவமனையில் இருப்பார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை.. தாமரையோ… தன்னை பிடித்த அண்ணனின் கையை விடாது கெட்டியாக பிடித்து கொண்டு இருந்தவருக்கு மனதில் பல யோசனைகள்..

ஸ்ருதி உயிர் பிழைத்து வரும் வரை யாருமே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவும் இல்லை… அந்த இடத்தை விட்டு அகலவும் இல்லை..

பின் இனி பயம் இல்லை என்றதுமே நடந்த விசயங்கள் கிருஷ்ண மூர்த்திக்கு தெரிய வந்தது..

அவருமே… தன் மகனிடம்… “கதவை திறந்து வைத்துக் கொண்டு சூசைட் அட்டெம்ட் செய்தாளா…?” என்று அவர் கேட்ட கேள்வியும்.. கேட்ட விதமே சொன்னது… அவர் எதை வைத்து கொண்டு கேட்டார் என்பது..

அதுவும் முடிவில் அவர் சொன்ன.. “ மீண்டும் ஒரு சரித்திரம்.. இதில் யார் பலியோ…” என்றவரை குருமூர்த்தி தான்..

“ப்பா என்னப்பா பேச்சு இது…? உங்களுக்கு மாமாவை பிடிக்காது.. நீங்க வகித்த பதவிக்கும் மாமா செய்யும் தொழிலுக்கும் ஒத்து வராது தான்.. ஆனால் உங்க இந்த ஒத்து வராது என்பதை குடும்பத்திற்க்குள் கொண்டு வராதிங்கப்பா. ஸ்ருதி உங்க தங்கை பெண் ப்பா.. நீங்க பார்த்து வளர்ந்தவள்…” என்ற மகனின் தோள் தட்டி..

“தங்க ஊசி என்பதினால் கண்னை குத்திக் கொள்ள கூடாது மகனே…” என்று சொன்னவர்..

ஸ்ருதி படுத்துக் கொண்டு இருந்த அறையின் பக்கம் கை காட்டி… “கண்டிப்பா இவளின் தேவை இன்னொரு பெண்ணின் வாழ்க்கையாக தான் இருக்கும்..” என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..

குருமூர்த்தி தான். “மாமா அவர் பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காதிங்க மாமா…” என்ற குருமூர்த்தியின் பேச்சுக்கு விசுவநாதன் எதுவும் சொல்லவில்லை..

அதோடு முப்பது ஆண்டுகளுக்கு முன்.. ஒரு பெண்ணும்.. அந்த பெண் தன்னிடம் பேசிய கோபமான பேச்சுமே மீண்டும் மீண்டும் வர..

அந்த நினைவை போக்கும் வகையாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பின் தான் மனைவி குருவோடு தன் மகளை பார்க்க சென்றது…

ஸ்ருதி மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள், கையில் ரத்தம் ஏற்றிக் கொண்டு இருந்தது… வெட்டிய இடத்தில் ஒரு பிளாச்சித்திரி ஒட்டப்பட்டு இருந்தது… நாள் கணக்கில் சாப்பிடாதது போல வதங்கி போய் இருந்தவளின் கோலத்தை பார்த்து மீண்டுமே முப்பது ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் அழுகை பாதி கோபம் மீதியுமாக பேசியவளின் உருவம்..

மனதில் முடிந்ததை இனி ஒன்றும் மாற்ற முடியாது.. இனி நடப்பதை தான் நான் பார்க்க வேண்டும்..’ இதை மனதில் நினைத்தவருக்கு தெரியவில்லை,..

அன்று முடிந்ததின் தொடர்ச்சியை தான் இனி உன் மகள் தொடர வைக்க போகிறாள் என்பதும், முன் கொடுத்ததை விட இன்னுமே அதிக வலியை கொடுக்க போகிறோம் என்பதும்…

ஸ்ருதியோ தன் சுற்றி நின்று இருப்பவர்களை பார்க்க முடியாது கண் மூடி படுத்து கொண்டாள்… கேட்டால் என்ன என்று சொல்லுவாள்… உண்மையையா. சொன்னாலும் நடந்து விடுமா என்ன..? சித்தார்த் தன் மாமா மகளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அத்தனை அழுத்தமாக சொல்லி விட்ட பின் என்ன தான் காசு பணம் இருந்தாலுமே… எனக்கு சித்தார்த் கிடைத்து விடுவானா..? அதனால் கண் மூடி அமைதி காத்தவளுக்கு தெரியவில்லை.

அவளின் தந்தை முன்… சித்தார்த்தாவது குறைந்த பட்சம் தம் மகளை விரும்புகிறான்… சூழ்நிலை கைதியாக ஸ்ருதியை திருமணம் செய்ய முடியாத நிலையில் நிற்கிறான்..

ஆனால் முன் இது கூட இல்லாது அதுவும் தன் தங்கை விரும்பியவன் தன் தங்கையை விரும்பாததோடு மட்டும் அல்லாது அவன் ஒரு பெண்ணை ஆத்மார்த்தமாக காதலித்து கொண்டு இருந்தவனையே தன் தங்கை ஆசைப்பட்டாள் என்று அவனையே தன் தங்கைக்கு திருமணம் முடித்து வைத்தவன் என்று..

அதோடு அவளின் தந்தையாவது வாய் திறந்து சொன்னால் தான் அவளின் ஆசையை நிறைவேற்றுவார்.. ஆனால் அவளின் அத்தை மகனோ… நீ எதுவுமே சொல்ல தேவையில்லை.. நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அமைத்து கொடுத்து விடுவான் என்று தெரியாது போய் விட்டாள்..

இதோ தாமரை… மனது பொறுக்காது… “ எதுக்கு டி இப்படி செய்த…?” என்று அழுகையுடன் கேட்டதற்க்கு இன்னுமே கண் மூடிக் கொண்டவளிடம் இன்னும் ஏதோ கேட்க போகும் போது தன் அத்தையை தடுத்து விட்டு குருமூர்த்தி..

“அவளுக்கு இப்போ ரெஸ்ட் தான் தேவை அத்தை. நீங்க எதுவும் கேட்காது அவளை பார்த்துக்கோங்க. மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொன்ன மாப்பிள்ளையின் பேச்சில் நம்பிக்கை வைத்து பெற்றோர் இருவரும் அமைதியாகி விட்டனர்..

அவர்களின் அந்த நம்பிக்கையை காக்கும் வகையாக தான் அடுத்து அடுத்து குருமூர்த்தியின் நட வடிக்கைகள் இருந்தனர்..

ஸ்ருதி ஆபத்து கட்டத்தை கடந்து விட்டாள் என்று தெரிந்ததுமே குரு செய்த முதல் வேலை நம்பிக்கையான ஒருவனை ஸ்ருதி கல்லூரிக்கு அனுப்பியது தான்.



இதோ ஸ்ருதியின் அறையில் இருந்து வெளி வந்ததுமே குரு ஸ்ருதியின் கல்லூரிக்கு அனுப்பி வைத்தவனிடம் இருந்து கைய் பேசிக்கு அழைப்பு வந்து விட்டது.

அழைப்பை ஏற்றதுமே குரு கேட்டது.. “ காலேஜில் என்ன பிரச்சனை…?” என்பதே..

அதற்க்கு அவன்.. “ பிரச்சனை எல்லாம் இல்ல சார். ஆனால் ஸ்ருதி மேடம் ரொம்ப நேரமே ஒரே இடத்தில் நின்று இருக்காங்க. அதோட கூட இருந்த அவங்க பிரண்ட் போன பின் கூட அதே இடத்தில் தான் அமர்ந்து இருக்காங்க..

பின் அந்த காலேஜ் லெக்ச்சர்.. போகும் போது ஸ்ருதி மேடம் கிட்ட ரொம்ப நேரமா பேசி இருந்து இருக்காங்க… இது வரை தான் தெரிந்தது சார்..” என்று சொன்னதில்.

குருமூர்த்தி உடனே… “அவங்க உட்கார்ந்த இடத்தில் ஏதாவது கேமிரா இருக்கா..?” என்று தான் கேட்டது…

“நேத்து பங்க்ஷன் என்றதினால் எக்ஸ்ட்ராவா கேமிரா வைத்து இருக்காங்கா சார்… மேடம் உட்கார்ந்த இடத்துக்கு நேர் எதிரா இரு கேமிரா இருக்கு தான்..” என்ற உடனே…

குருமூர்த்தி.. “அப்போ அந்த புட்கவரேஜ் கேட்டு வாங்க வேண்டியது தானே…” என்று சொன்னதற்க்கு..

மறுப்பக்கத்தில் இருந்தவனிடம் உடனே பதில் வராது கொஞ்சம் தயங்கி கொண்டே தான்..

“சார் கேட்டு பார்த்தேன்.. அது எல்லாம் தர முடியாது. என்று சொல்றாங்க..” என்றதும் குருமூர்த்தி தன் மாமனிடம் விசயம் இது தான் என்று சொல்லாது கல்லூரிக்கு கிளம்பும் முன் விசுவநாதனிடம்…

“ஸ்ருதியை பார்த்துக்கோங்க மாமா.. அவள் கிட்ட ஒன்னும் கேட்காதிங்க.. “ என்று சொன்னவன் தன் மாமனின் கை மீது கை வைத்து..

மீண்டுமே… “எல்லாம் நான் பார்த்துக்குறேன் மாமா…” என்று சொல்லி விட்டு கிளம்பியவனிடம் விசுவநாதன்.. எங்கு போற என்று எல்லாம் கேட்கவில்லை..

அவருக்கு தெரியும் குரு எங்கு போவது என்றாலும் அது தன் மகள் சம்மந்தப்படதாக மட்டும் தான் இருக்கும்.. தன் மகளின் விசயம் தெரியும் வரை… அதை தீர்க்கும் வரை குரு தூக்கம் கொள்ள மாட்டான் என்று..

விசுவநாதன் நினைத்தது போலவே தான் கல்லூரிக்கு வந்தவன் முன் குரு அனுப்பிய ஆள் கேட்டும் கொடுக்காத அந்த புட்டேஜ் கவரேஜை… குருமூர்த்தி பேச வேண்டியதை பேசி கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்கி விட்டான்..

அந்த புட்டேஜ்ஜை யாரையும் அருகில் வைத்து கொள்ளாது தனித்து தான் பார்த்தான்.. இதில் என்ன விசேஷம் என்றால், அந்த புட்டேஜில் பேசியது கூட அவ்வளவு தெளிவாக கேட்கும் படி தான் இருந்தது..

காரணம் கல்லூரி விழாவின் பாதுகாப்புக்கு வேண்டி தரம் வாய்ந்த கேமிராவை தான் வைத்து இருந்தனர்.. அதோடு விழா முடிந்து அனைவரும் சென்ற பின் தனித்து அமைதியான சூழ் நிலையில் இருவரும் பேசியதில் குருமூர்த்திக்கு அவர்கள் பேசிக் கொண்டது தெளிவாகவே கேட்டது..

முதலில் குரு பார்த்து கொண்டு இருந்த அந்த புட்டேஜில் ஸ்ருதியை மட்டுமே தான் கவர் செய்தவாரு இருந்தது..

அதனால் ஸ்ருதி ஒரு இடத்தை மட்டுமே அவளின் பார்வை அடிக்கடி சென்று கொண்டு இருந்தது தெரிந்தது.. அதில் அவள் யாரையோ தான் பார்க்கிறாள் என்பது மட்டும் தான் குருமூர்த்திக்கு தெரிந்தது.. ஆனால் அது யார் என்று தெரியவில்லை..

பின் தெரிந்த நொடி. அதாவது சித்தார்த் ஸ்ருதியின் அருகில் வந்து நின்றவனை பார்த்த உடனே குருமூர்த்தி தெரிந்து கொண்டு விட்டான்…

இவன் மார்பில் தானே அந்த பெண் சாய்ந்து கொண்டு இருந்தாள்… நேற்றுமே இவனோடு தானே அவ்வளவு உரிமையாக பேசி கொண்டும் இருந்தாள் என்பது..

அந்த பெண்ணை காதலிப்பதால் ஸ்ருதியின் காதலை இவன் ஏற்றுக் கொள்ளவில்லையா…? என்று நினைத்தவனுக்கு அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தும் கேட்டும் முடித்த பின்… ஒரு ஆழ்ந்த அமைதி அவனுக்குள்…

அமைதியாக யோசித்தவனுக்கு ஒரு திட்டம் மனதில் உதித்தது.. அவன் திட்டத்தில் ஒரு சிறிது பிழந்தாலுமே… அதன் பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும் என்று தெரிந்தே.. தன் திட்டத்தை செயல் படுத்த தொடங்கினான்..

அதன் முதல் படியாக அவன் சந்தித்த நபர் சித்தார்த்….. சொல்லி விட்டான். உன்னால் ஒரு பெண் தன்னையே மாய்க்க இருந்தால், என்று அது மட்டும் பேசாது அனைத்தும் பேசினான்.

அதன் விளைவு சித்தார்த் குருமூர்த்தியோடு ஸ்ருதி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு சென்றதோடு… மறுநாளே இருவருக்கும் திருமணத்தை முடித்து விட்டான்..

அதற்க்கு சாட்சியாக ஸ்ருதியின் பெற்றோர்.. குருமூர்த்தியோடு குருமூர்த்தியின் தந்தை கிருஷ்ண மூர்த்தியுமே தான் அந்த இடத்தில் இருந்தார். முன் அவர் செய்த செயலின் வீரியமே இன்னுமே ஆராது தன் மனதில் பதிந்து போய் இருக்க… இந்த நிகழ்வின் வீரியம் அவரை எந்தளவுக்கு தாக்குமோ பார்க்கலாம்.








 
Active member
Joined
Aug 16, 2024
Messages
245
கல்யாணம் முடிந்து விட்டதா. சித்தார்த் பெற்றோர் பாவம் இல்லையா.
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Sathiyama enekku intha Guru family ah pidikkave illa… 😡😡😡
Sharadha romba pawam… Krishna Moorthy ku Siddarth yarunu theriyala pola
 
Top