அத்தியாயம்….4
ஆம் தாயும் மகளும் நீலகண்டனின் பேச்சை கேட்கவில்லை என்பதை விட அதை காதில் கூட வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அவர்களை பொருத்தவரை இருவருக்குமே இன்று அக்னி இத்தனை டாலர் சம்பாதித்து நன்றாக இருக்கிறான் என்றால் அது தங்களால் தான்..
அதுவும் ப்ரீத்தி ஒரு படி மேல் சென்று… “ அம்மாவுக்காவது பிள்ளை.. ஆனால் நான் என் நகையை அன்னைக்கு அடமானம் வெச்சி தானே படிச்சான்… “ இது தான் எண்ணம்..
அக்னி படித்த படிப்புக்கு அது ஒரு சிறு தொகை தான்… வங்கி லோன் தான் அதிகம் போட்டு படித்தான்..
அன்று ப்ரீத்தி என் நகையை நான் தர மாட்டேன் என்று சொன்னால் கண்டிப்பாக அதட்க்கு வேறு வழி செய்து எப்படியாவது வெளி நாட்டில் படித்து இருப்பான்..
அதோடு அடகு வைத்த நகை இருபத்தி ஐந்து சவரன் தான்.. அதுவும் அக்னி படிக்க சென்ற போது அவனின் வயது இருபத்தி ஒன்று தான்.. அவனை விட ப்ரீத்தி இரண்டு வயது சிறியவள்… பத்தொன்பது வயது பெண்ணுக்கு இப்போது திருமண பேசசுக்கே இடம் இல்லை தானே..
அதுவும் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து கொண்டு இருப்பவளுக்கு.. அதன் தொட்டு தான் நகையை வங்கியில் அடகு வைத்தது..
ஆனால் அக்னி தன் படிப்பு முடித்த உடன் வேலை கிடைத்ததுமே படிப்புக்கு என்று வங்கியில் வாங்கிய ஒரு தொகையை கொடுத்து கொண்டு இருந்தாலுமே ஒரு தொகை சேர்த்து வைத்து ஒரே வருடத்தில் அந்த நகைகளை மீட்டு தங்கைக்கு கொடுத்து விட்டான்…
அதோடு ஒரு சில காரணங்களால் இவனே இருபத்தி ஐந்து சவரம் வாங்கி போட்டு தான் அவளின் இருபத்தி ஐந்தாவது வயதில் அக்னி தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தது…
ப்ரீத்தி படிப்பு முடித்து ஐடியில் வேலை பார்க்க தொடங்கிய உடனே மரகதம் தன் பெண்ணுக்கு திருமணத்திற்க்கு பார்க்க தொடங்கி விட்டார் தான்.
சவரன் அதிகம் எல்லாம் இல்லாது இருக்கும் அந்த இருபத்தி ஐந்து சவரன் போட்டு தான் திருமணம் செய்யும் திட்டத்தில் அது போலாமன இடமாக தான் பார்த்தது..
ப்ரீத்தி கூட.. “ ஏம்மா இப்போ தான் அண்ணன் டாலரின் சம்பாதிக்கிறானேம்மா.. கொஞ்சம் அதிகமா சவரன் போட்டு கொஞ்சம் பெரிய இடமா தான் பார்த்தா என்னம்மா…?” என்று கேட்டாள் தான்..
அதற்க்கு மரகதம்… “இப்போ எல்லாம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க இத்தனை சவரன் போடுங்க என்று பெண் வீட்டவங்களை கேட்கிறது இல்ல டீ.. வீட்டை பார்த்துட்டு தான் இவ்வளவு பொடுவாங்க என்று வரது.. நம்ம இந்த வீட்டை பார்த்தா நம்ம அளவுக்கு கூட வர மாட்டாங்க… அது தான் வீட்டை பெருசா எடுத்து கட்ட இருக்கேன்…
அக்னி இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பிச்சி இருக்கான்… அவன் படிக்க வாங்கின கடன்.. உன் நகையை மீட்டு கொடுத்ததுல கொஞ்சம் தான் இருக்கும்.. அதையும் நகை வாங்கிட்டா எப்படி… அது தான் வீடு கட்ட கட்ட அவன் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா கூட ஆறுமாசத்துல வீட்டை பெரிய அளவில் எழுப்பிடலாம்..” என்று மரகதம் சொல்ல.
அம்மாவின் பேச்சில் இருந்த நிதர்சனத்தில் மகளும் அமைதியாகி போனாள் தான்… மரகதம் நினைத்தது போல் தான் பாதி அளவு திட்டம் நிறை வேறியது.
ஆம் பாதி அளவில் தான் நிறைவேறியது.. அவர்கள் இருக்கும் இடம் பரம்பரை சொத்து… இடம் மட்டுமே பெரியது.. வீடு பழைய காலத்து ஓட்டு வீடாக தான் இருந்தது.
மரகதம் பெரிய அளவில் கீழ் மேல் என்று கட்ட நினைத்தார்..
ஆனால் அக்னி “ வீடு கட்டி தான் ஆகனும்.. நானே இதை பற்றி பேசனும் என்று தான் நினச்சேன்…” என்று மகன் சொன்னதுமே இந்தியாவில் இருந்த தாய்க்கு வயிறு குளிர்ந்து விட்டது தான்..
ஆனால் அடுத்து சொன்ன… “ ஆனா நீங்க என்ன மேல கீழே என்று அத்தனை பெரிய வீடா கட்ட சொல்றிங்க… அத்தனை பெரிய வீடு எதற்க்கும்மா…? மூன்று பெட் ரூம் போட்டு ஆயிரம் இல்ல ஆயிரத்து இருநூறு… சதுர அடி இவ்வளவு போதும்மா.” என்று விட்டான்.
மரகதம் தான்.. “ மூன்று பெட் ரூமா. நாளைய பின்ன எல்லாருக்கும் கல்யாணம் ஆன ரூம் தேவை அக்னி.. அப்போ இன்னொரு முறை செலவு செய்ய முடியுமா. உன் நல்லதுக்கு தான் சொல்றேன் அக்னி..” என்று மரகதம் சொல்ல.
அதற்க்கு அக்னி சொன்ன. “ அதுக்கு எல்லாம் யோசிச்சு தான்ம்மா மூன்று ரூம் சொன்னேன்… “ என்று விட்டவனிடம் மரகதம் அடுத்து பேசவில்லை என்பதை விட அக்னி பேச இடம் கொடுக்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..
மரகதம் நினைத்தது போல் வீடு கட்டி முடித்து விட்டார் தான்.. ஆனால் பெண்ணுக்கு ஒரு நல்ல இடம். அனர் எதிர் பார்த்தது போல் கிடைக்கவில்லை.
காரணம் பெண்ணுக்கு இருக்கும் ஒரு சிறு குறைப்பாட்டால். ஆம் சிறு குறைப்பாடு தான்.. உறவுகள் சொல்லும் மரகதம் பெற்ற குழந்தைகள் எல்லாம் அவள் பெயருக்கு ஏற்றது போல அழகு என்று… ஆனால் கூடவே ஆனால் பெண்ணுக்கு மட்டும் அதுல திருஷ்ட்டி வெச்சது போல் கொஞ்சம் மாறுகண் என்று…
பெற்றவர்களுக்கு அது பெரியதாக தெரியவில்லை.. ஆனால் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளை வீட்டவர்களுக்கு அது தான் ஒரு பெரிய விசயமாக அவர்கள் கண்ணுக்கு பட்டது போல்…
அதனால் தான் நல்ல படிப்பு சம்பளம் குடும்பமும் ஒர் அளவுக்கு வந்த பின்னுமே இருபத்தி ஐந்து வரை ஒரு நல்ல இடம் அமையாது பின் தான் இப்போது ப்ரீத்தி கல்யாணம் செய்து இருக்கும் சுந்தரம் வந்தான்..
என்ன ஒன்று இவர்கள் அளவுக்கு இல்லை என்பது மரகத்திற்க்கு குறையே … அக்னி தான்…
“இவளும் சம்பாதிக்கிறாள்.. மாப்பிள்ளைக்கும் நல்ல வேலை சம்பளம்… நாமுமே இப்போ தானே மெல்ல மெல்ல வரோம்….” என்ரதில் மரகதம் தன்னை கொஞ்சம் தேற்றிக் கொண்டார் தான்.
இந்த தேற்றிக் கொண்டது எல்லாம் அம்மா வரை தான். மகளுக்கு மாப்பிள்ளை பார்த்ததுமே பிடித்து விட்டது..
அதனால் எந்த வித பிரச்சனையும் இல்லாது அடுத்த கட்ட நகர்வாக நல்ல நாள் பார்த்து நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்து இருந்த நாளில் தான்.
அதே நல்ல நாளில் அனைவருக்கும் கடை குட்டியாக அப்போது தான் அவனுமே ஐடியில் வேலைக்கு சேர்ந்து இருந்த அந்த வீட்டின் இளைய மகன்.. அகரன் திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக மணமக்களாக வந்து நிற்க..
தங்கையின் திருமணம் அதை தொடர்ந்து அடுத்து பதினைந்து நாளில் திருமணம் என்றதில் இருபது நாள் விடுமுறை எடுத்து வந்த அக்னிக்கே தம்பி வந்து நின்ற கோலத்தில் அதிர்ச்சியாகி நின்று விட்டான்..
பின் இருக்காதா….? அக்னிக்கே அப்போது இருபத்தி ஏழு வயது தான்… அவனை பொறுத்தவரை அவன் தம்பி சின்ன பையன்.
ஆம் இருபத்தி மூன்று வயது தான் அகரனுக்கு… இப்பயி திடுதெப்பென்று.. அதுவும் கூட பிறந்தவளின் நிச்சயம் என்று மாப்பிள்ளை வீடும் உறவு முறையும் கூடி இருக்கும் சமத்தில் இப்படி வந்து நின்றால் யாராக இருந்தாலும் அதிர்ச்சியாகுவார்கள் தான்.
ஆனால் இது என்ன அதிர்ச்சி.. என்பது போல் அக்னி…
“ லவ் பண்ண பெண்ணை மேரஜ் செய்வது தப்பு இல்லடா.. ஆனா இந்த வயசுல.. அதுவும் இன்னைக்கு ப்ரீத்திக்கு நிச்சயம். இன்னைக்கு இப்படி கல்யாணம் பண்ணி வந்து நிற்கிறியே.. அப்படி என்ன டா உனக்கு அவசரம் .” என்று கேட்டவனுக்கு பதிலாக.
அந்த பெண்ணே. தன் வயிற்றின் மீது கை வைத்து அவசரம் தான் என்று விட்டாள்.. அவ்வளவு தான் மாப்பிள்ளை வீடு சென்று விட்டது.
அதில் மரகதம் தன் சின்ன மகனை வீட்டிற்குள் விடாது அனுப்பி விட.. ப்ரீத்தி தற்கொலைக்கு முயல.
பின் அக்னி தான் மாப்பிள்ளை வீட்டிற்க்கு சென்று பேசியது.. அதில் பேரமாக தான் இருபத்தி ஐந்து சவரனில் இருந்து ஐம்பது சவரன் போட்டால் மாப்பிள்ளை வீடு சம்மதிக்க..
இதில் அக்னிக்கு சுத்தமாக விருப்பம் இல்லை தான்.. ஆனால் மரகதம்… “ ப்ரீத்தி அந்த பையன் மீது ஆசை வெச்சிட்டா தம்பி… அதோட ஊரு உறவுக்கு எல்லாம் இவன் தான் மாப்பிள்ளை என்று பத்திரிக்கை அடிச்சி கொடுத்த பின் அதை முடிக்காது போனா அப்புறம் நம்ம வீடு பெண் வாழ்க்கை தான் அக்னி கேள்வி குறியாகும்…. நம்ம வீடு கட்டி முடித்தே இரண்டு வருஷம் முடிஞ்சிடுச்சி… கண்டிப்பா உன் கிட்ட கை இருப்பு இருக்கும்…” என்று சொன்னதில்..
அக்னி ஒன்றும் சொல்லாது அந்த இடத்தையே முடித்து விட்டான்….உண்மையில் அப்போது அக்னி அப்போது வேண்டாம் என்று மறுக்ககாரணம் நகையை வைத்து இந்த திருமணமா… அதில் சுத்தமாக ஆணவனுக்கு விருப்பம் இல்லாததே காரணம். அன்னை இப்படி பேசியதில் ஒன்றும் சொல்லாது முடித்தாலுமே அக்னிக்கு இன்று வரை வீட்டு மாப்பிள்ளையான சுந்தரத்தின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை… அதற்க்கு என்று கொடுக்க வேண்டிய மரியாதை பார்த்தால் கொடுத்து விடுவான் தான்..
என்ன ஒன்று என்ன…? என்றால், என்ன…? என்ற பேச்சோடு நிறுத்திக் கொள்வான்…
இன்று ப்ரீத்தி அதை அனைத்தையும் வைத்தும் தான் தன் அன்னையிடம்….
“எனக்கு ஆரம்ப முதல்ல என்ன இது என் வீட்டுக்காரனோட அந்த ஷ்யாம் கிட்ட அப்படி பாசமா இருக்கான் என்று ஒரு டவுட் இருந்ததும்மா… ஆனா இப்படி என்று நினைக்கல.. கூட பிறந்த தங்கையையே இப்படி பழக விட்டு இருக்கான்… அவன் என்ன மாதிரியான அண்ணன்… அந்த குடும்பம் என்ன மாதிரியான குடும்பமா இருக்கும்..” என்று அதே பேச்சு தான் தொடர்ந்தது..
இருந்துமே… மகன் விருப்பத்தை ஏற்று…. ஸ்வேதாவின் வீட்டிற்க்கு பெண் கேட்டு தான் செல்லும் படியாக ஆகிவிட்டது…
ஆம் மரகதம் அக்னி சொன்னதை தான் செய்தார்.. ஆனால் விருப்பம் இல்லாது… அதிலுமே அவர் ஒரு கணக்கு வைத்து இருந்தார் தான்.
“அந்த பெண் இங்கு நம்மோடவா இருக்க போகுது… கல்யாணம் முடிஞ்சதும் அவன் கூட அங்கு தானே இருக்க போகுது.. அதோட உன் தம்பியையும் இந்த கல்யாணத்தை வைத்து கூட சேர்த்துக்கலாம் இருக்கு டி… என்ன தான் இருந்தாலும் அவனை அப்படியே விட்டு விட முடியுமா.?
அதோடு அந்த பெண் ஒன்னும் இவன் பிடிச்சது போல ஒன்னும் இல்லாத வீட்டு பெண் இல்ல. கேரளாவில் நல்ல பெரிய குடும்ப வீட்டு பெண் தான். அதுவும் வீட்டுக்கு ஓரே பெண்… இப்போ நம்மை போல பேசுறது இல்ல தான்.. ஆனா என்னைக்கு இருந்தாலுமே அந்த சொத்து எல்லாம் இந்த பெண்ணுக்கு தாமே வந்து சேரும்… கூட குழந்தை உண்டாகியது கலஞ்சி போய்… அதோட இந்த நாளு வருஷத்தில் குழந்தையும் உண்டாகாம இருக்குறதில் பாவம் அகரன் அன்னைக்கு உன் அப்பா வீட்டில் இருக்கும் போது வந்து அத்தனை வேதனை பட்டான்..
என் பொண்டாட்டி யாரும் இல்லாம வேலைக்கும் போய் வீட்டையும் பார்க்கும் அழுத்தம் எல்லாம் சேர்ந்து தான் குழந்தை உண்டாகல.. அதோட இரண்டு பக்கமும் சொந்தம் இருந்தும் அநாதை போல இருக்கோம்.. அது கூட உஷாவுக்கு கவலை என்று சொல்லி அழுதான்…” என்ற மரகதம் பேச்சில் ப்ரீத்தி..
“என்னம்மா புதுசா சொல்ற.. என் கிட்ட சொன்னது தானேம்மா.. அதோட எனக்கு சேர்த்துக்க விருப்பம் தான்.. அக்னியை நினச்சி தான் தயங்குறேன் என்று சொன்னிங்கலே…” என்று ப்ரீத்தியின் பேச்சுக்கு மரகதம்.
“அது தான்டி சொல்றேன். இதை வைத்து திரும்ப உன் தம்பியை கூட்டிக்கலாம் இருக்கேன்.. கேட்டா நீயுமே விருப்பமான பெண்ணை தானே கல்யாணம் செய்துக்க போறேன் என்று சொல்லிட்டா போச்சு..” என்று சொன்ன அந்த தாய்க்கு புரியவில்லை.
ஒரு மகனாக ஒரு அண்ணனாக அனைத்து கடமையும் முடித்த பின் திருமணம் வயதையும் தான்டி.. அதுவும் தான் விருப்பப்பட்ட பெண்ணிடம் கூட தன் விருப்பத்தை சொல்லாது அவள் அண்ணனிடம் சொல்லி தன் அன்னையிடம் பெண் கேட்க சொல்லும் தன் பெரிய மகனும்..
வேலைக்கு சென்ற மூன்று மாதத்திலேயே… இருபத்தி மூன்று வயதில் அதுவும் தன் அக்காவின் நிச்சயம் அன்று காதலிக்கு மட்டும் அகரன் தாலி கட்ட வில்லை… தன் குழந்தையின் அன்னைக்கு தாலி கட்டி கூட்டி கொண்டு வந்த அவனையும் இணை சேர்க்கலாமா என்று மரகதம் கொஞ்சம் யோசித்து இருந்து இருக்கலாம்….