அத்தியாயம்…5
ஸ்வேதாவினால் நம்பவே முடியவில்லை.. தனக்கு நிச்சயம் நடந்து விட்டது என்பதனை… அதுவும் மாப்பிள்ளை இல்லாது என்று நினைக்கும் போதே தன்னால் அவளின் கண்கள் மெலிந்த தன் விரல் மீது தான் பதிந்தது…
அவன் வாங்கி கொடுத்த மோதிரம் தான் அது… நிச்சய மோதிரமும் கூட… ஆனால் அவன் தன் கை விரல் தீண்டி மாட்டவில்லை.. ஆனால் அவன் தான் மாட்டினான்…என்பதை அக்னி சொல்லவில்லை.. அவளே உணர்ந்தாள்..
அப்படி உணர வைத்தவனின் நினைவு தான் இப்போது ஸ்வேதாவுக்கு… அவள் நினைத்து கூட பார்க்கவில்லை… இப்படியான மனநிலையில் தான் ஒரு மாதம் முன் இருப்போம் என்பதை…
இவர் தான் மாப்பிள்ளை என்று முதலில் ஒருவரின் விவரத்தை இவள் வேலைக்கு கிளம்பும் முன் தான் அவளின் அன்னை கெளசல்யா இவளிடம் சொல்ல ஆரம்பித்தது….
வேலைக்கு நேரம் ஆகிவிட்டதில் அவசர அவசரமாக ஒரு இட்லியை பாதி இட்லியாக பிய்த்து வாயில் அதக்கி கொண்டு இருந்த சமயம் தான்..
கெளசல்யா… உன் பெரியப்பா ஒரு இடம் சொன்னாரு…. அவர் பெண் மச்சினன் என்ற பேச்சை ஆரம்பித்ததும்.. வரண்ட இட்லி தொண்டையில் அடைத்ததை தண்ணீர் குடித்து உள்ளே தள்ளியவள்.. ஆனால் சொல்ல நினைத்த வார்த்தைகளை வெளியில் தள்ள ஆரம்பித்து விட்டாள்…
“ம்மா நான் வேலைக்கு போய் ஒரு வருஷம் தான் ஆச்சு….குறைந்தது இரண்டு வருஷம் வேலைக்கு போன பின் தான் இடம் பார்க்க சொன்னேன். அது எப்படியோ முடிய ஒரு வருடம் ஆகும்…
அப்போ எனக்கு இருபத்தி ஐந்து வயத தொட்டு விடும் என்று நான் ஒரு கணக்கு போட்டு தான் சொன்னது..” என்று சொன்ன மகளை முறைத்த கெளசல்யாவோ…
மகளுக்கு மேல்… “ உன் கணக்கு எல்லாம் கல்யாணம் விசயத்தில் ஆகாது டி.. யாருக்கு யாரு…? எப்போ என்று மேல ஒருத்தன் கணக்கு போட்டு வைத்து இருப்பான்… அது தான் நடக்கும்…” என்று சொன்ன அன்னையை கிண்டலாக பார்த்த ஸ்வேதா…
“அது தான் நீங்க சொல்லிட்டிங்கலே மேல ஒருத்தன் கணக்கு போட்டு வைத்து இருப்பான் என்று.. அப்போ எதுக்கு நீங்க மென கெடுறிங்க… நடக்கும் போது நடக்கட்டும்.. ஆனா இப்போ இல்ல இரண்டு வருஷம் கழிச்சு…” என்று சொல்லி கொண்டே தன் கை பையை எடுத்தவள் அதில் இருந்த தன் இருசக்கர வாகனத்தின் சாவியை கையில் எடுத்து கொண்டு./..
“ம்மா எனக்கு டைம் ஆயிடுச்சி..” என்று சொல்லி கொண்டே வெளி வாசலை நெருங்கும் சமயம் கெளசல்யா..
“நான் இந்த இடம் பற்றி உன் அண்ணன் கிட்ட பேச போறேன்.. அவன் என்ன சொல்றானோ.. அது தான் முடிவு….” என்று சொன்ன அன்னையை திரும்பி பார்த்த ஸ்வேதா..
“அப்போ கல்யாணம் எனக்கு இல்லையா..? அண்ணாக்கா…? அண்ணி ஒத்துக்கிட்டாங்கலா…” என்று சொல்லி கொண்டே தன் வண்டியை எடுத்தவளின் சத்தமானது கெளசல்யா சொன்ன. “உனக்கு கொழுப்பி ஏறிடுச்சி…” என்ற வார்த்தை காத்தோடு பறந்து விட.. அவளும் காற்று போல் தான் தன் வாகனத்தை பறக்கவிட்டாள்…
வேலை நேரத்தின் இடையில் ஸ்வேதா அம்மா சொன்னதை யோசித்தாலும் அண்ணாவிடம் சொல்லி விட வேண்டும்..
“இன்னும் ஒரு வருஷமாவது போகட்டும் என்று… நினைத்தவளுக்கு அதை சொல்ல அவனின் அண்ணன் ஷ்யாம் சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை…
ஆம் அன்று மாலை மட்டும் இல்லை.. ஐந்து நாட்களாக தினம் கை பேசியில் பேசும் அண்ணன் ஆகட்டும்.. அண்ணி ஆகட்டும்.. ஏன் தன் அம்மா கூட பெரியப்பா சொன்ன இடத்தை பற்றி பேசாது இருப்பதில் தொல்லை விட்டது என்று தான் இருந்தாள்..
ஆனால் அந்த வாரம் சன்னிக்கிழமை அவளுக்கு அலுவலகம் விடுமுறை நாளில் மதியம் போல் தன் அருகில் வந்து அமர்ந்த அவளின் அன்னை..
“அண்ணனும் அண்ணியும் உன் கிட்ட பேசனுமாம்…” என்று சொல்லிக் கொண்டே தன் கை பேசியை மகளிடம் கொடுத்தவர்…
அவரும் போகாது மகளின் அருகில் சட்டமாக அமர்ந்து விட்டவரை ஒரு பார்வையும் தன் கையில் இருந்த அவரின் கை பேசியை ஒரு பார்வையும் பார்த்தாள்..
கை பேசியில் தன் அண்ணனும் அண்ணியும் தெரிவதை பார்த்தவள் ‘ஓ வீடியோ காலா அப்போ அந்த பெரியப்பா சொன்ன இடத்தை பத்தி தான் பேச போறாங்க…’ என்று நினைத்தவள்.
அண்ணன் பேசும் முன்பே…. “ அண்ணா பெரியப்பா பார்த்த மாப்பிள்ளை… சித்தப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு என் கிட்ட பேசாதிங்க சொல்லிட்டேன்….”
அண்ணன் தன் கல்யாண பேச்சை ஆரம்பிக்கும் முன்பே அதை முடித்து விட பார்த்தாள்..
வீடியோ காலில் இருந்த ஷ்யாம் தங்கையின் இந்த பேச்சில் சிரித்தான் என்றால், அவனின் அருகில் அமர்ந்திருந்த அவளின் அண்ணி….
“இப்போ உங்க அண்ணன் பெரியப்பா சித்தப்பா பார்த்த மாப்பிள்ளையை பத்தி பேச வரல. அவர் பார்த்த மாப்பிள்ளையை பத்தி பேசலாம் தானே…” என்ற அண்ணியின் பேச்சில் ஸ்வேதா ஒரு நிமிடம் அதிர்ந்தாலுமே பின் ஒரு மாதிரியான குரலில்..
“அண்ணி மாப்பிள்ளை அங்கு இருக்காரா…..?” என்று கேட்டவள் பின் அவளே…
“என் அண்ணனுக்கு தெரியும் அண்ணி… வத்தலோ சொத்தலோ… குட்டையோ நெட்டையோ… யாரா இருந்தாலும் என் அண்ணன் பார்த்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் செய்துப்பேன் என்று அண்ணாவுக்கு தெரியும்…
ஆனா அதே போல இதுவும் தெரியும்… எனக்கு இந்தியாவில் இருக்கும் மாப்பிள்ளையை தான் நான் மேரஜ் செய்துப்பேன்… அதுவும் சென்னையில் இருக்கும் மாப்பிள்ளையை தான் நான் மேரஜ் செய்துப்பேன் என்று அண்ணா அங்க படிக்கும் போகும் போதே நான் சொல்லிட்டேன்…” என்றவளின் இந்த பேச்சில் அவள் கண்ணுக்கு தெரிந்த ஷ்யாம் தேவி மட்டும் சிரிக்கவில்லை..
அவள் கண்ணுக்கு தெரியாது அமந்திருந்த அக்னிவேஷ்வரன் கூட சத்தம் போடாது சிரித்தான்..
பின் சித்ரா தான். “ அடியே உன் அண்ணன் இங்கு படிக்க வரும் போது நீ ஒன்பதாவது படிச்சிட்டு இருந்த டி… அப்பவே உனக்கு மாப்பிள்ளை இப்படி தான் வேணும் என்று நீ உன் அண்ணன் கிட்ட சொல்லிட்டியா…?” என்று இது அனைத்தும் தெரிந்தே கேட்டாள்..
“ஆமாம் சொன்னேன் தான். உன் புருஷன் தான் அம்மா இங்கு தனியா இருக்காங்க என்று கூட யோசிக்காம வெளி நாட்டில் படிச்சு வேலைக்கு போனா தான் பவுசு என்று பொறுப்பு இல்லாம அங்கு போய் உட்கார்ந்துட்டாரு.. அதே போல நானும் இருந்தா அம்மாவை யாரு பார்த்துப்பா….?” என்று விரைப்பாக கேட்டவளிடம்…
“ஆ அதுக்கு அம்மணி கல்யாணம் செய்துக்காம உங்க அம்மாவை பார்த்துக்கனும்….” என்று சித்ரா தேவி தன் கிண்டல் பேச்சியை தொடர..
அவளுக்கும் மேலாக ஸ்வேதா… “ஆ கல்யாணம் செய்யாம நான் இருந்தா மொத்த சொத்தையும் நீங்களும் உன் புருஷனும் ஆட்டைய போடவா….” என்று கேட்டதில் சித்ரா.
“ஆமா டி நூறு ஏக்கர் நஞ்சை இரு நூறு ஏக்கர் புஞ்சை என்று இருக்கு . நான் அத ஆட்டைய போட பார்க்கிறேன்.. என்று சொன்ன சித்ராவின் பேச்சுக்கு ஸ்வேதா என்ன சொல்லி இருந்து இருப்பாளோ..
ஆனால் அதற்க்குள் இங்கு ஸ்வேதா பக்கத்தில் இருந்த கெளசல்யாவும் அங்கு ஷ்யாமுமே…
“என்ன சொல்லனுமோ அது சொல்லாம என்ன இது பேச்சை இழுத்துக்கிட்டு ..” என்றதில்..
ஸ்வேதா இப்போ தன் அண்ணனை பார்த்தாள். என்ன என்பது போல்.. அண்ணி சொல்வது உண்மையா…? என்பது போல்.
ஷ்யாமுமே… “ எனக்கு ரொம்ப தெரிஞ்ச மாப்பிள்ளை உன்னை பிடிக்கும் என்று சொல்றான்ம்மா. எனக்கு அவனை பத்து வருஷமா தெரியும் ரொம்ப நல்ல பையன்…” என்றதில் ஸ்வேதா அமைதியாகி போனாள்.
இங்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் தன் அம்மாவும் சரி… விசயத்தை சொல்லிக் கொண்டு இருக்கும் தன் அண்ணனும் சரி.. ஏன் இத்தனை நேரம் விளையாட்டு பேச்சை பேசிக் கொண்டு இருக்கும் தன் அண்ணிக்கும் சரி.. இந்த மாப்பிள்ளையை மிகவும் பிடித்து இருக்கிறது என்பதை பெண்ணவள் கண்டு கொண்டாள்..
அதனால் அவளும் தன் விளையாட்டு பேச்சை விடுத்து…
“அண்ணா நான் இன்னும் இரண்டு வருஷமாவது போகட்டும் என்று சொன்னனே ண்ணா….” என்று தங்கை சொன்ன விதத்தில் ஷ்யாம் சரி டா என்று தான் சொல்ல நினைத்தான்..
ஆனால் தன் எதிரில் அமர்ந்திருக்கும் அக்னியை பார்த்ததுமே அந்த எண்ணம் பறந்து விட்டது..
தன் வயதுடையவன்.. தனக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. அவன் எதிரில் நான் குடும்பம் நடத்தி குழந்தை குட்டியுமாக இருந்து கொண்டு..
“என் தங்கைக்காக இரண்டு வருடம் வெயிட் பண்ணுடா …” என்று சொல்ல அவனுக்கு மனது இல்லை.. அப்படி சொன்னால் தனக்கும் அக்னி வீட்டவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்..
ஆம் ஷ்யாமுக்கு அக்னி வீட்டவர்கள் மீது நல்ல அபிப்பிராயம் வராது போக இதுவுமே ஒரு காரணம் ஆகும்…
இத்தனை படித்ட்து இத்தனை டாலரில் சம்பாதிக்கிறான்… தன் கடமைகள் அனைத்தும் முடித்து தனக்காக ஒரு சொத்தையும் வாங்கி போட்டவனுக்கு பெண் கிடைக்கவில்லையா….? என்ற எண்ணம் அவனுக்கு…
அதன் தொட்டு தன் தங்கை தான் பெண் என்றால் அவனை காக்க வைக்க விருப்பம் இல்லாததினால்,
“மாப்பிள்ளைக்கு கல்யாணம் வயசும்மா. இன்னுமே தள்ளி போட முடியாது…” என்று ஷ்யாம் சொன்ன நொடி அவன் எதிரில் அமர்ந்திருந்த அக்னி அவனின் பெயருக்கு ஏற்றது போல் முறைத்தான் என்றால்,
ஸ்வேதா… “ ண்ணா என்ன ண்ணா சொல்றிங்க… வயசு கூடியா.. அண்ணா உனக்கு நம்ம சொந்தாக்காரங்க எதிரில் நம்ம குடும்பத்தை எப்படியாது மேல கொண்டு வரனும் என்ற ஆசை இருக்கு என்று எனக்கு தெரியும்.. இன்னும் கேட்டால் எனக்குமே எப்போவும் நம்மை கீழா பார்க்கும் பெரியப்பா சித்தப்பா எதிரில் நல்ல இருக்கனும் தான்.
ஆனால் அதுக்கு என்று ஒரு பணக்காரன் கிழவனை என்னை கட்டி வெச்சி…” என்று வீடியோ காலில் தன் அண்ணனை பார்த்து கொண்டே இவள் பேசும் போது அண்ணன் மீது ஒரு தலையணை வந்து விழுந்ததில்.
தன் விளையாட்டு பேச்சை கை விட்டவளாக. “ ண்ணா யார் உங்க மேல அதை வீசினது… “என்று கேட்டவள் பின் தான் அண்ணன் அமர்ந்திருக்கும் பின் பக்கத்தை ஆராய்ந்தாள்..
இது அண்ணனின் படுக்கை அறை கிடையாது.. ஹால்.. இப்போ அண்ணன் அண்ணி தன் கண் முன் இருக்காங்க… அந்த தலையணையை வீசியது அண்ணன் பிரண்ட் அக்னிவேஷ்வரனா… அவரை வைத்து கொண்டா இவங்க பேசினாங்க..’ என்ற நொடி அண்ணனை முறைத்து பார்த்தாள்..
இதை பற்றி திட்ட கூட முடியவில்லை… அவன் எதிரில் இருக்கிறான் போல் என்று நினைத்த நொடி தன் கையில் இருந்த கை பேசியை அணைத்து விட்டாள்..
பின் தொடர்ந்து தன் கை பேசிக்கு முயல… முதல் கோபமாக இருந்தவள்.. பின் மாலை பொழுதில் கொஞ்சம் கோபம் குறைந்து தன் அண்ணின் அழைப்பை ஏற்றாள்..
அண்ணன் பேச தொடங்கும் முன்பே… “ ண்ணா அவர் உன் பிரண்ட் ண்ணா. எனக்கு தெரியும் நீங்க ரொம்ப க்ளோஸ் என்று.. ஆனா என் கிட்ட பேசும் போது.. அதுவும் என் மேரஜ்… நம்ம பேமிலி பர்சனல் ண்ணா. நானுமே உங்க கிட்டயும் அண்ணி கிட்டேயும் கிண்டலா பேசிட்டு இருக்கேன்.. என்ன அண்ணா…” என்று கோபமாக பேசியவளிடம் ஷ்யாம் ஒன்றே ஒன்று தான் சொன்னான்.
“ அது அவன் தான் நான் உனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை டா…” என்றதும் ஸ்வேதா முதலில் அதிர்ந்து… “ ண்ணா.” என்றவள் பின் பெண்ணிடம் அமைதி..
இதற்க்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.. அதனால் அமைதியாகி போனாள்.. இதை அனைத்தையிடம் விட இதை அவள் எதிர் பார்க்கவில்லை.
புகைப்படத்திலும் ஒரு சில முறை.. இவள் அண்ணனோடு வீடியோ காலில் பேசும் போது பின் பக்கம் நடந்து செல்வதை பார்த்து இருக்கிறாள்..
பார்த்து இருக்கிறாளே தவிர உற்று கவனித்தது கூட கிடையாது …அதை விட தன் அண்ணனோடு பேசும் போது சகஜமாக பேச முடியவில்லையே என்ற எண்ணம் தான் அப்போது அவளுக்கு தோன்றும்..
அப்படி பார்த்தது கூட தன் அண்ணனுக்கு திருமணம் ஆகும் முன்பு தான்.. அப்போது ஒரே படுக்கை அறை என்று இருக்கும் போது அதை தவிர்க்க முடியாது.. அதுவும் தன் அண்ணனின் வருமானத்தில் என்ற உணர்ந்தவள் அதை பற்றி தன் அண்ணனிடம் கேட்டதும் கிடையாது… குறைப்பட்டதும் கிடையாது..
பின் திருமணம் முடிந்துமே அவரோடு அண்ணனா… ? என்று நினைக்கும் சமயம் அண்ணி சொன்ன விளக்கத்தில் பெண்ணவள் புரிந்து கொண்டாள்..
நேரில் பார்த்தது கிடையாது… அண்ணன் திருமணத்திற்க்கு வராததில் இவள் தான் அண்ணனிடம்.
“என்ன அண்ணா பிரண்ட் பிரண்ட் என்று சொல்லுவீங்க. உங்க மேரஜிக்கு கூட வரல.?” என்று இவன் கேட்ட போது.
“ லீவ் கிடைக்கல டா. அதோட இப்போ தான் அவன் சிஸ்டருக்கு குழந்தை பிறந்ததுக்கு வந்து போனான். அமெரிக்க காரன் நம்ம இந்தியரை எடுப்பதே வேலை வாங்க தாம்மா.” என்ற பெச்சில் இருந்து உண்மையில் ஒத்து கொண்டாள்..
அவ்வளவு தான்.. அவ்வளவு தான் ஸ்வேதா அக்னிவேஷ்வரை பற்றி தெரிந்ததும் பேசியதும்.. இப்போது அவன் தான் மாப்பிள்ளை என்று அண்ணன் சொன்னால் அதிராமல் எப்படி இருப்பாள்…