Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eangum Geetham...5

  • Thread Author
அத்தியாயம்…5

மூன்று ஆண்டுகளாக கூடிய மட்டும் தன் அறையை விட்டு வெளியில் வராத செந்தாழினி இன்று சமையல் கட்டிற்க்கு வந்ததோடு மட்டும் அல்லாமல் தன் அன்னை வளர்மதியிடம்..

“நானுமே புடவை வாங்க வரேன்..” என்ற இந்த பேச்சில், அங்கு மாமியார்களுக்கு உதவி செய்கிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு நின்று கொண்டு இருந்த செண்பகமும், செளமியாவும் என்ன இது என்பது போல இருவரும் செந்தாழினியை பார்த்தவர்கள் பின் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்ள…

தன் மகளின் பேச்சில் எதற்க்கு வரேன் என்று சொல்றா என்ற யோசனை வளர்மதியின் மனதில் ஒடிக் கொண்டு இருந்தாலுமே, அவரின் பார்வை மருமகள்களிடமும் சென்று வந்தது தான்..

அதில்.. “ இங்கு என்ன வேடிக்கை பார்த்துட்டு…. சாம்பார் கொதிச்சிடுச்சி பாரு.. அது தலையில் கரைத்து வைத்த புளியை ஊத்திட்டு, சாம்பார் பொடியையும் போட்டு இறக்கி வை…” என்று தன் மருமகளிடம் சொன்னவர்..

தன் மைத்துனர் மருமகளிடம்.. “ கொத்துமல்லியை சின்னதா வெட்டி அதுல போடு..” என்று அவளிடமும் ஒரு வேலை சொல்லிய பின் ஈரமாக கையை தன் முந்தியில் துடைத்து கொண்டே கூடத்திற்க்கு செல்ல...

தன் அன்னை இப்போது இல்லை.. எப்போதுமே தனித்து பேசுவது என்றால் இப்படி தான் என்று புரிந்த செந்தாழினியும் தன் அன்னையை பின் தொடர்ந்து கூடத்திற்க்கு சென்றாள்…

சமையல் கட்டில் செண்பகம்.. “ இது என்னடி அதிசயமா இருக்கு…? மூன்று வருஷமா நாம தான் தப்பு செஞ்சது போல யார் கிட்டேயும் பேசாதவள்… இப்போ சமையல் கட்டு வரை வந்து பேசுறா..” என்று மாமியார் சொன்ன வேலையை செய்யாது மோவாயில் கை வைத்து சொன்னவளிடம்…

செளமியா “ நானுமே அது தான் நினச்சேன் அக்கா.?” என்று பெரியவளுக்கு மேல் சின்னவள் அதிசயத்து கொண்டவளிடம் பெரியவள்..

“அது என்ன தெரிஞ்சிக்கலாம் என்று பார்த்தா இந்த மாமியார் கிழவி தான் நம்மைய இங்கேயே இருக்க சொல்லிட்டு அதிகாரம் செய்துட்டு போயிடுச்சே…” என்று செண்பகா சொன்னாள்..

அதற்க்கு சிறிது யோசித்த செளமியா கட கட என்று மாமியார் ஏவி விட்டு சென்ற வேலையில் இரண்டு வேலையான புளியை கரைத்து சாம்பாரில் ஊற்றியவள் கொத்து மல்லி தழையை நறுக்காகது கையிலேயே பிய்த்து அதன் தலை மீது போட்டவளின் செயல்களையே பார்த்து கொண்டு இருந்தவள்....

சாம்பார் பொடியின் டப்பாவை எடுத்து ஒரகத்தியின் பக்கம் நீட்டி ..

“இதையுமே அதன் தலையில் போடு…” என்ற செண்பகத்தை முறைத்து பார்த்த செளமியா.

“நம்ம மாமியார் தலையில் இதை கொட்ட சொல் கொட்டிட்டு வரேன்..” என்று சொன்னவள் அந்த சாம்பார் பொடி டப்பாவை கொஞ்சம் மறைந்தது போல் வைத்து விட்டு.

“அவங்க என்ன பேசுறாங்க என்று தானே அக்கா உங்களுக்கு தெரியனும்.. இப்போ பாரு..” என்ற ஒரவத்தியின் செயலின் காரியத்தை புரிந்து கொண்ட செண்பகம்..

“நானு கூட என்ன டா இது .. நம்ம தங்கச்சி திருந்திட்டா என்று இல்லே நினச்சேன்…” என்று பேசியவளை ஒழுங்கு காட்டி விட்டு கூடத்திற்க்குள் மெல்ல அடி எடுத்து வைத்து சென்றாள்..

ஆனால் அதற்க்குள் வளர்மதி தன் மகளிடம்.. “ என்ன புதுசா கடைக்கு எல்லாம் வரேன் என்று சொல்ற..?” என்று தன் மகளை சந்தேகம் கண் கொண்டு தான் ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டே கேட்டது..

இந்த பார்வைக்கு ஆரம்பத்தில் தான் செந்தாழினியின் மனது வேதனை பட்டது.. இப்போது எல்லாம் கிடையாது.. பழகி விட்டது போல..

அதனால்.. “ என் கல்யாணம் தானே… என் கல்யாணத்திற்க்கு உண்டான புடவை நகை நான் தானே செலக்ட் செய்யனும்..” என்று பதில் அளித்தவளை…

வளர்மதி இவளை நம்பலாமா..? வேண்டாமா..? என்பது போல் பார்த்தார்..

“மூன்று வருஷமா காலேஜ் போயிட்டு தானே வந்துட்டு இருக்கேன்.. என் கூட யாராவது ஒருத்தவங்க தினமுன் வந்துட்டு தானே இருக்கிங்க. அதே போல இன்னைக்குமே என்னை கூட்டிட்டு போங்க… அதுவும் இன்னைக்கு ஒருத்தர் இல்ல. மொத்த பேருமே என் பக்கத்தில் தானே நிற்க போறிங்க…” என்று செந்தாழினி சொல்லி முடித்து விட்டாள்..

மகளின் பேச்சில் யோசனையில் இருந்த போது தான் செளமியா.. கூடத்திற்க்கு வந்தது.. வரும் போதே ..

‘என்ன ஆத்தாலும் , மவளும் ஒன்னும் பேச காணும்.. பேசுறதே பேசி முடிச்சிட்டாங்கலோ… இந்த அக்கா வேற கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டு நேரத்தை கடத்திட்டாங்க..’ என்று நினைத்து கொண்டே வளர்மதியின் முன் வந்து நின்றாள்..

இந்த யோசனயில் தான் சாக்கு வைத்து கேட்க வந்ததை கேட்காது நிற்க. வளர்மதி முறைத்து பார்த்து கொண்டே.

“இப்போ என்ன வேண்டும்..?” என்று இரண்டு முறை கேட்டும் பதில் சொல்லாது அதே நியாபகத்தில் செளமியா நின்று விட்டாள்..

அதில் வளர்மதி… “ என்ன ஒட்டு கேட்க வந்து இருக்கியா…?” என்று மச்சினன் மருமகளை கோபமாக பார்த்து கொண்டே கேட்டே கேட்டார்..

என்ன சொன்னாங்க என்று கவனியாத செளமியாவும்.. “ ஆமாம்.. ஆமாம்..” என்று தலையை ஆட்ட..

“ என்ன தைரியம் இருந்தால், ஒட்டு கேட்க தான் வந்தேன் என்று என் கிட்டேயே சொல்லுவே…. உன்னை எல்லாம் உன் மாமியார் கிட்ட சொன்னா தான் நீ அடங்குவே..” என்றதில்..

பாவம் செளமியா அலண்டு தான் போய் விட்டாள்..

“பெரிய அத்த அது இல்ல. அது இல்ல.. சாம்பார் பொடி எங்கு இருக்கு.. அதை கேட்க தான் வந்தேன்..” என்று பட படத்து எப்படியோ சொல்லி முடித்து விட்டாள்..

வளர்மதி அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவர் பின்.. “ சாம்பார் பொடி இல்லாமலேயே அதை இறக்கி வை…” என்று சொல்லி விட்டு மகள் பக்கம் பார்க்க. மகளோ அங்கு இல்லாது எப்போதோ.. அதாவது செளமியா தங்கள் முன் வந்து நின்ற போதே தன் அறைக்கு சென்று விட்டு இருந்தாள்..

மகள் அமர்ந்து இருந்த இருக்கை காலியாக இருக்க. மீண்டும் இந்த பக்கம் திரும்பி பார்த்தவரின் கண் முன் செளமியா போகாது நின்று கொண்டு இருக்க..

“என்ன இன்னுமா அந்த சாம்பாரை போய் இறக்கல… இந்த நேரத்துக்கு அந்த சாம்பார் சுண்டியே போய் இருக்கும்..” என்று சொல்லியும் போகாத செளமியா…

“இல்ல அத்த சாம்பார் பொடி போடலேன்னா சாம்பார் நல்லா இருக்காதே அத்த…” என்று சொன்னவளிடம்..

“நீ வைக்கும் அந்த சாம்பாரில் என்ன போட்டாலுமே நல்லா தான் இருக்காது போய் இறக்கி வை… ஜவுளி கடைக்கு போக நேரம் ஆச்சி..” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட்டார்..

“நாங்களுமே ஜவுளி கடைக்கு வரோம்மா பெரிய அத்தை…” பேச்சில் அத்தனை பவ்யம் தான்..

வளர்மதியோ.. அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு… “ நீங்க தானே இந்த வூட்டு மருமகளுங்க..?” என்று கேட்டதற்க்கு உடனே..

“ஆமா ஆமா..” என்று தலையை வேகமாக ஆட்டினாள் ..

“அப்போ போய் வெரசா கிளம்பும் வழிய பாருங்க..” என்று விட்டும் போகாது நின்று கொண்டு இருந்தவளை பார்த்த வளர்மதி.

“ உனக்கு இன்னுமே என்ன தான்டி வேணும்..” என்று ஒரு அதட்டல் போட்டார்..

இந்த அதட்டலுக்கு செளமியா இந்த இடத்தை விட்டு ஒடி விட தான் நினைத்தாள்…

ஆனால் விசயம் தெரியாது போனா.. சாப்பாடு இறங்காத வியாதி அவளுக்கு இருக்கே..

அதனால் திட்டு கிடைத்தாலுமே, பரவாயில்லை என்று…

“இல்ல பெரிய அத்த.. செந்தாழினியும் வருதா..?” என்ற இந்த பேச்சில்..

வளர்மதி மகள் தன்னிடம் சொன்னதையே மருமகளிடம்.. “ அவளுக்கு தானே கண்ணாலாம்.. இப்போ போறது அவள் கண்ணாலாத்திற்க்கு ஜவுளி எடுக்க தானே… அப்போ அவள் வராமா யாரு வருவா…?” என்ற பதில் கேள்விக்கு செளமியா ஒன்றும் பேசாது சென்று விட்டாள்..

ஆனால் சமைல் கட்டில் தன் ஒரவத்தியிடம்.. “ ஆனாலுமே இந்த கிழவிக்கு திமிர் ஜாஸ்த்தி தான் டி. இந்த மாதிரி பொண்ணை பெத்து வைத்த இவங்களுக்கு இவ்வளவு திமிர் ஆகாது ப்பா..” என்று செண்பகத்திடம் சொல்லி கொண்டு இருந்த போதே… அந்த இடத்திற்க்கு இரண்டாம் மாமியார் மரகதம் வந்து நின்றதுமே..

இரண்டு மருமகள்களும் அந்த இடத்தை விட்டு சிட்டாக பறந்து சென்று விட்டார்கள்..

இப்படியாக தான் பாண்டியன் வீட்டு பெண்கள் அந்த ஜவுளிக்கடை மாளிக்கைக்கு வந்து சேர்ந்தது..

வளர்மதிக்கு மகள் ஏன் அவளே நான் வரேன் என்று சொன்னா சொன்னா என்ற இந்த கேள்வியே மனதில் ஒடி கொண்டு இருந்ததால், அவரின் பார்வை மொத்தமும் மகள் மீதே தான் இருந்தது.

இங்கு மகிபாலனோ… தன் குடும்பத்தோடு இவர்களுக்கு முன் அந்த ஜவுளிக்கடை வாசலில் நின்று கொண்டு இருக்க.

ஒரு பெரிய ஆடி கார்… பின் ஒரு கார் என்று பாண்டியன் குடும்பத்தினர் வந்தனர்..

முதலில் ஆண்கள் தான் இறங்கி வீட்டு பெண்கள் இறங்க காரின் கதவை திறந்து வைத்து அவர்கள் வீட்டு பெண்கள் இறங்க ஏதுவாக கதவை பிடித்து நின்று கொண்டு இருந்தனர்.

அதை பார்த்து கொண்டு இருந்த மகிபாலனுக்கோ பரவாயில்லையே… பாண்டியன் வீட்டு ஆண்கள் பெண்களை கட்டிப்படுத்தி தான் வைத்து இருப்பார்கள் என்று கேள்வி பட்டது பொய் போல என்று வெளி இடத்தில் நடந்ததை வைத்து தவறாக கணித்து கொண்டு இருந்த சமயம் தான்.

வளர்மதி மரகதம் முதலில் இறங்கியது.. அவர்களின் தோற்றத்தை பார்த்த மகி பாலன் இதை தான் நினைத்தான்..

என்ன.. இன்னைக்கேவா கல்யாணம் என்று..? ஏன் என்றால் பட்டு புடவையின் ஜரிகையின் அளவு அத்தனை பெரியதாகவும் நகைகள் அதற்க்கு ஈடாகாவும் இருந்தது..

அடுத்து காரை விட்டு இறங்கிய இரு மருமகள்களின் அலங்காரத்தில் மாமியார்களே பரவாயில்லை என்று நினைத்து சரி அவர்கள் வருவார்கள் என்று இவன் கடையை நோக்கி திரும்பும் சமயம் தான்.. சரியாக செந்தாழினி கடைசியாக மிக மிக எளிமையாக ஒரு காட்டன் புடவையை கட்டிக் கொண்டு இறங்கியது..

இன்று ஏனோ அவளின் இந்த எளிமையான தோற்றம்.. அவன் மனதுக்கு இதத்தை அளித்தது. அவள் இறங்கியது சுற்றும் முற்றும் பார்த்து நின்றது.. பின் தங்கள் குடும்பத்தினரை ஒவ்வொருவாராக பார்த்து கொண்டு வந்தவளின் பார்வை கடைசியாக தன் முகத்தின் மீது படிந்தது… மற்றவர்களோடு தன் முகத்தை சில நொடிகள் பார்த்து பின் அவளின் அன்னையின் கை பற்றலில் அனைவர்களோடு தங்களை நோக்கி வந்தவளையே தான் மகிபாலன் தன்னை மறந்து பார்த்து கொண்டு நின்றது..

அவனின் அன்னையின்.. “ பாலா பாலா…” என்ற அழைப்பில் தான் தன் அன்னையை திரும்பி பார்த்தான்..

“என்ன பாலா இங்கேயே நின்னுட்ட…?” என்று கேட்ட அன்னையின் பேச்சில் தான் மகி பாலனுக்கு

மீண்டுமே பணக்கணக்கு நியாபகத்தில் வந்தது… கடவுளே இங்கு சாதாரணமாகவே புடவையின் விலை அதிகம் என்று தான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்த மகி பாலன் கேள்வி பட்டது..

இதில் திருமணம் பட்டு என்றால், இவர்கள் சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டு சார்பாக மூன்று பட்டு புடவைகள் எடுத்து கொடுக்க வேண்டும்..

இருக்கும் பணத்தை புடவைக்கே செலவு செய்து விட்டால், நகைக்கு. அதற்க்கு எங்கு கடன் வாங்குவது…? முதலில் புடவை எடுத்த பின் அடுத்து நகை தானே என்று பெண் வீட்டார்கள் சொன்னால், என்ன சொல்வது இப்படி தயங்கி ஏன் பயந்தே தான் மகிபாலன் அந்த ஜவுளிக்கடைக்குள் சென்றது..

அந்த கடையில் ஆரம்ப விலையே பத்தாயிரத்தில் இருந்து தான் ஆரம்பம்.. பெண்ணவள் அந்த பகுதி முன் தான் கடைக்குள் சென்ற போது அனைவருக்கும் முன் போய் நின்று கொண்டது..

அந்த வீட்டு ஆண்கள் என்ன இது என்று பார்த்தனேரே தவிர. பெண்ணை அனைவரும் முன்னும் கண்டிக்கவில்லை..

ஆனால் வளர்மதியோ… “ என்ன டி இது.. சாதாரணமா நாம தீபாவளி பொங்கலுக்கே இருபத்தி ஐந்தி ஆயிரத்துக்கு குறைந்து எடுக்க மாட்டோம்.. இப்போ நாம வந்து இருக்குறது கல்யாணத்துக்கு புடவை எடுக்க…”

அப்பா முதலாளிக்கு தகவல் சொல்லிட்டார்.. பாரு முதலாளியே நிற்கிறார்.. வா நீ…” என்று மகளின் கை பிடித்து இழுத்தார் தான்..

ஆனால் பெண்ணவள் அசைந்தால் இல்லை.. அதே சமயம் பேச தயங்கவும் இல்லை..

“இது என் கல்யாணம்.. என் கல்யாணத்திற்க்கு எனக்கு பிடித்த மாதிரியும்.. அவருக்கு பிடித்த மாதிரியும் தானே எடுக்கனும்..” என்று மகிபாலனை கை காட்டி கேட்டதில்.. வளர்மதியினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை தான்..

ஆனாலுமே… . “ இல்ல டி.. ஒரு ஐம்பது ஆயிரத்துக்காவது எடுக்கனும் டி..” என்று சொல்லியும் மறுத்து விட்டாள்..

“நான் என் உடம்பில் பட்டு கட்டி மூன்று வருஷம் ஆகுது… இன்னுமே இத்தனை ஆயிரம் என்று நீங்க கணக்கு பார்த்தால், நான் கல்யாணத்திற்க்கு அன்னைக்குமே இதே போல தான் நிற்பேன்..” என்று பெண்ணவள் சொன்னதில் வளர்மதி தன் கணவனை தான் சமாளிக்க வேண்டி ஆகி விட்டது..

பின் ஒரு வழியாக மூன்று பட்டு புடவையை அரை மணி நேரத்தில் தேர்வு செய்து எடுத்து விட்டாள்..

ஒன்று பத்தாயிரத்து ஐநூறு.. இன்னொன்று பன்னிரெண்டாயிரம் இன்னொன்று பதிமூன்று ஆயிரம்.. தனியாக எடுத்து வைத்தவள் மகி பாலனிடம் சைகையாக எல்லாம் கேட்கவில்லை…

அனைவரும் பார்க்க. அனைவரும் கேட்கவே… “ உங்களுக்கு ஒகே தானே…?” என்று கேட்டதும் மகிபாலனின் தலை தன்னால் ஆடி சம்மத்தம் தெரிவித்து விட்டது..

அதே போல தான் நகை கடையிலுமே.. மூன்று சவரனில் தான் தாலி கொடி எடுத்தது.. அவர்கள் இனத்தில் குறைந்தது ஒன்பது சவரனில் தான் போடுவர்..

மாப்பிள்ளை வீட்டவர்கள் தான் போட வேண்டும்.. இதிலும் செந்தாழினியின் பேச்சை தான் அனைவரும் கேட்கும் படி ஆகி விட்டது…

அதே போல் தான் மகிபாலனிடம்.. “ உங்களுக்கு பிடித்து இருக்கா.?.” என்று யாரையும் கேட்கவில்லை கேள்வி பார்வை மகிபாலனிடம் மட்டுமே வைத்தாள்.. கேட்டாள் வாங்கியும் கொண்டாள்…

புடவை நகை வாங்கும் வேலை மதியத்திற்க்குள் முடிந்து விட்டதால் ஒரு நல்ல ஒட்டலில் சாப்பிட்டு விட்டு பெண் வீட்டார்.. அவர் அவர் வீடு சென்றனர்…
















 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
செந்தாழினி மகிபாலனை புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு ஏத்தது போல எடுக்கிறாளா 🤔🤔🤔🤔 இல்லை மகி பணத்துக்காக தன்னை கல்யாணம் செய்ய நினைக்குறானா என்று டெஸ்ட் பண்ண இப்படி செய்றாளா 🤔🤔

மகி கிட்ட ஏதோ பேருக்கு ஓகேவா என்று கேட்குறா 😄😄😄 அவனும் நல்லா தலைய ஆட்டுறான் 🤓🤓🤓🤓🤓

மகி குடும்பம் ஒன்னும் சொல்லலையா 😕😕😕😕


செந்தாழினி இதே நிமிர்வோடு மகி வீட்டிலும் இருக்கணும் 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
மகி கஷ்டம் புரிஞ்சு அவனுக்காக தான் அவளாவே வந்து புடவை நகை செலக்ட் பண்ணிருக்கா... 🥰
சூப்பர் செந்தாழினி... 👌
 
Active member
Joined
Aug 16, 2024
Messages
267
எனக்கு தெரிந்து செந்தாழினி வீட்டை விட்டு போனதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று தோன்றுகிறது.
 
Top