Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...டீசர்

  • Thread Author
அத்தியாயம்…1

மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்த மகிபாலனுக்கு கீழே பேசிக் கொண்டு இருந்த விசயம் என்ன என்று தெரிந்தாலுமே, அவன் கீழே இறங்கி செல்லவில்லை… இன்னும் கேட்டால் இப்போது பேசிக் கொண்டு இருப்பது அவனின் திருமணம் பற்றிய பேச்சு தான்…

இந்த திருமணப் பேச்சு அவனுக்கு பிடித்து இருக்கிறதா..? பிடிக்கவில்லையா..? என்ற யோசனை கூட இல்லாது தான் மொட்டை மாடியின் சுவற்றின் கை பிடியை பிடித்து கொண்டு நின்று கொண்டு இருந்தவனின் மனநிலை இது தான் என்று சொல்ல முடியாத ஒரு நிலையில் தான் தத்தளித்து கொண்டு இருந்தது…

அப்பா இருக்கும் போதுமே இந்த மொட்டை மாடியில் தான் இரவில் உறங்குவது.. ஆனால் அப்போது உறங்கிய அந்த உறக்கத்திற்க்கும், இப்போது அவனின் தூங்கா இரவுக்குமே உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்…

சில நாள் தூங்காது கூட இரவை இங்கு கழித்து இருக்கிறான்.. கல்யாணம் செய்யும் நிலையிலா அவள் இருக்கிறான்..

நிலை என்றால் கல்யாண வயதை எட்டாதவன் எல்லாம் கிடையாது.. இன்னும் கேட்டால் சரியாக சென்ற வாரம் தான் இருபத்தி ஒன்பது முடிந்து முப்பதை தொட்டு உள்ளான்..

தனித்து அவனை மட்டும் வைத்து பார்த்தால், கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய அனைத்து தகுதிகளும் உடைய ஒரு ஆண் மகன் தான்.. அழகு ஆகட்டும், படிப்பு ஆகட்டும்.. வேலை ஆகட்டும்.. இன்னும் கேட்டால் அவன் படிப்புக்கே ஐடியில் வேலையில் கை நிறைய தான் சம்பாதித்து கொண்டு இருந்தான்..

தந்தை வீர ராகவன் இறந்த பின் அவனின் தந்தை வேலை செய்த ரெயில்வே வேலை இவனுக்கு கிடைக்க. இவன் மறுத்தான் தான்.. தங்கைக்கு கொடுக்கட்டும் என்று விட்டான்..

ஆனால் அவனின் அன்னை கெளசல்யா “மத்தவங்க வீட்டுக்கு போகும் பெண்ணுக்கு இந்த வேலை எடுத்து கொடுப்பாங்கலா..” என்று மகனிடம் போராடி தான் மகிபாலனை இந்த வேலையில் சேர வைத்து விட்டார்.

கெளசல்யாவை பொறுத்த வரை ஐடியில் என்ன தான் அதிகம் சம்பாத்திதாலுமே, அது என்னவோ அரசங்காம் உத்தியோகம் தான் மதிப்பு என்று நினைப்பவர்… முன் என்றால் முன் என்றால் அவனின் தந்தை இருக்கும் போது என்றால், இந்நேரம் கல்யாண கனவுகள் கூட கண்டு இருந்து இருப்பானோ என்னவோ…

ஆனால் வீட்டு சூழ்நிலையில் தூக்கமே சரியாக வராத போது எங்கு கல்யாண கனவு காண்பது..

இவனுக்கு மூத்தவள் ஒரு பெண் சுதா.. திருமணம் முடிந்து இரண்டு வருடமாக வாழாது வீட்டோடு இருக்கிறாள்..

ஏற்கனவே மகிபாலனின் அக்கா சுதாவுக்கு அவளின் ஜாதகம் காரணமாக வயது கூடி தான் திருமணம் செய்தது.. இதில் ஆறு மாதமே தான் அவள் கணவன் பாஸ்கரனோடு வாழ்ந்தது.. பின் இதோ மீண்டுமே அடித்த பந்தாக வீடு வந்து விட்டாள்..

காரணம் இவர்கள் போட்ட நகைகள் அத்தனையும் கவரிங்க என்ற காரணத்தினால், தாங்கள் செய்த இந்த மோசடி காரணமாக முதலில் பேசிய நகைக்கு இரண்டு பங்காக நகை போட்டு அனுப்புங்க என்று இங்கு அனுப்பி வைத்து விட்டனர்..

முதலில் போட சொன்ன இருபத்தி ஐந்தே இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு முடியாத ஒன்று.. இதில் இரண்டு மடங்கு என்றால், ஐம்பதுக்கு… என்ன செய்வது.

இதில் இவனுக்கு அடுத்த தங்கை இருபத்தி ஏழு வயதில் இருக்கும் மகிளாவுக்கு மாப்பிள்ளை பார்த்து பார்த்து இப்போது தான் ஒன்று கை கூடி வரும் போலான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது..

அந்த பேச்சில் ஒரு வார்த்தையாக அவர்களுமே ஐம்பது சவரன் தான் போட வேண்டும்.. நாங்க எல்லாம் முன் சம்மந்தி போல ஏமாந்து போக மாட்டோம்.. நகை தங்கமா என்று பார்த்த பின் தான் என் மவன் உங்க பொண்ணு கழுத்தில் தாலியே கட்டுவான் என்று சொல்லி விட்டார்.. ஆச்சாரியை கைய்யோடு கூட்டிக் கொண்டு வருவாங்க போல.

இப்போ அது இல்லை பிரச்சனை… ஏற்கனவே மூத்த பெண் வாழாது இதே நகை விசயத்தில் தான் முப்பத்திரெண்டு வயதில் வீட்டில் இருக்கா. இதில் அடுத்த பெண்ணுக்கு எங்கு இருந்து சவரன் போடுவது..

அதற்க்கு தான் கீழே இவனின் கல்யாண பேச்சுக்கள் நடக்கிறது.. இந்த வீட்டில் இப்போது உருப்படியாக மதிப்பாக இருப்பது இவன் மட்டும் தானே… இவனை விலை பேசும் பேச்சாக தான் கல்யாண பேச்சு என்ற போர்வையில் பேச்சுக்கள் நடக்கிறது.. கீழே போகவே அவனுக்கு அவமானமாக இருக்கிறது..

நேற்று முழுவதுமே பேச்சு இதை வைத்து தான்..

“ம்மா வேண்டாம்.. நான் எப்படியாவது நகை பிரட்டிடுறேன்..” என்று சொன்னவனிடம் அவனின் அக்கா சுதா.

“எப்போ என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் முடிந்த பின்னா..?” என்று கேட்ட அக்காவை பார்க்கவும் மகிபாலனுக்கு பாவமாக தான் இருந்தது.

இரண்டு நாள் முன் தான் சுதாவின் மாமனார் மாமியார் வீட்டிற்க்கு வந்து.

“நீங்க செஞ்ச வேலைக்கு நம்ம சாதி ஜனம் முன்னே உங்க பெண்ணை அத்து விட்டு என் மவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்து இருப்பேன்.. ஆனா என்ன செய்யிறது என் மவன் தான் சுதா என்ன செய்வா. தப்பு அவங்க வீட்டு மேல தானே என்று சொல்லிட்டான்..

ஆனா இப்போ அவனே இன்னும் எத்தனை நாள் நான் இப்படியே இருப்பது… சவரன் போட்டு பெண்ணை அனுப்புவாங்கலா…? இல்லையா…? என்று கேட்டுட்டு வர சொன்னான்.. அவன் வயசுல இருக்குறவன் எல்லாம் இரண்டு குழந்தைக்கு தகப்பனா ஆகிட்டாங்க.. உங்களுக்கு தான் உங்க பெண் மேல அக்கறை இல்லாம இருக்கலாம் ஆனா எங்களுக்கு இருக்கு…

உங்க பெண்ணுக்கு இப்போவே முப்பத்தி ரெண்டு வயசு ஆகுது.. இனியும் இப்படியே இருந்தா அவளுக்கு குழந்தை பிறக்கும் வயசும் கடந்து போயிடும்.. இப்போவே கடந்து தான் போயிடுச்சி.. எனக்கு எல்லாம் உன் மவ வயசுல என் மவ வயசுக்கே வந்துட்டா..” என்று சொன்னவர்..

போகும் போது கடைசியாக… “இன்னுமே ஒரு மாசம் தான் கெடு… இல்லேன்னா உங்க பொண்ணை அறுத்து விட்டுட்டு என் மவனுக்கு இன்னொரு கல்யாணத்தை முடிச்சிடுவோம்.” என்று சொல்லி விட்டு சென்றதில் இருந்து குடும்பமே பயந்து தான் போய் இருந்தது..

அதுவும் அவனின் அக்கா சுதா.. இரண்டு நாட்களாக தூங்கவில்லை சாப்பிடவில்லை என்றான நிலை தான்..

நேற்று காலை இப்போது இவனுக்கு பெண் கொடுக்க பேசிக் கொண்டு இருக்கும் பெண்ணின் சித்தாப்பாவின் மாமனார் இவர்களை தேடி வீடு வந்தவரை, இவனின் அன்னை கெளசல்யா அதிசயத்து தான் பார்த்து பின் அரக்க பறக்க..

“வாங்க வாங்க… “ என்று பர பரத்து போய் விட்டார்..

காரணம் அவர்கள் ஜாதியிலேயே மிகவும் செல்வாக்கான குடும்பம் இவர்களுடையது.. இவர்கள் எல்லாம் சாதாரணமாக ஒரு வீட்டுக்கு செல்வது எல்லாம் கிடையாது..

எதற்க்கு தன் வீடு தேடி வந்து இருக்கிறார்கள் என்று யோசித்தாலுமே, கெளசல்யா குடிக்க தண்ணீர் கொடுத்து பின் மோர் கொடுத்து என்று நல்ல முறையில் தான் உபசரித்தார்…

பின் நான் இங்கு வந்தது ஒரு காரணமாக தான் என்று அந்த பெரியவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

முதலில் இவர்கள் வீட்டு விசயமாக சுதாவை பற்றி தொடங்கியதுமே அங்கு ஒரத்தில் நின்று கொண்டு இருந்த சுதா அழ ஆரம்பித்து விட்டாள்…










 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
🤩🤩பணத்துக்காக இவனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப போறாங்களா 😨 🥺 😨 😨
 
Last edited:
Top