Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...1

  • Thread Author
அத்தியாயம்…1

மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்த மகிபாலனுக்கு கீழே பேசிக் கொண்டு இருந்த விசயம் என்ன என்று தெரிந்தாலுமே, அவன் கீழே இறங்கி செல்லவில்லை… இன்னும் கேட்டால் இப்போது பேசிக் கொண்டு இருப்பது அவனின் திருமணம் பற்றிய பேச்சு தான்…

இந்த திருமணப் பேச்சு அவனுக்கு பிடித்து இருக்கிறதா..? பிடிக்கவில்லையா..? என்ற யோசனை கூட இல்லாது தான் மொட்டை மாடியின் சுவற்றின் கை பிடியை பிடித்து கொண்டு நின்று கொண்டு இருந்தவனின் மனநிலை இது தான் என்று சொல்ல முடியாத ஒரு நிலையில் தான் தத்தளித்து கொண்டு இருந்தது…

அப்பா இருக்கும் போதுமே இந்த மொட்டை மாடியில் தான் இரவில் உறங்குவது.. ஆனால் அப்போது உறங்கிய அந்த உறக்கத்திற்க்கும், இப்போது அவனின் தூங்கா இரவுக்குமே உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்…

சில நாள் தூங்காது கூட இரவை இங்கு கழித்து இருக்கிறான்.. கல்யாணம் செய்யும் நிலையிலா அவள் இருக்கிறான்..

நிலை என்றால் கல்யாண வயதை எட்டாதவன் எல்லாம் கிடையாது.. இன்னும் கேட்டால் சரியாக சென்ற வாரம் தான் இருபத்தி ஒன்பது முடிந்து முப்பதை தொட்டு உள்ளான்..

தனித்து அவனை மட்டும் வைத்து பார்த்தால், கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய அனைத்து தகுதிகளும் உடைய ஒரு ஆண் மகன் தான்.. அழகு ஆகட்டும், படிப்பு ஆகட்டும்.. வேலை ஆகட்டும்.. இன்னும் கேட்டால் அவன் படிப்புக்கே ஐடியில் வேலையில் கை நிறைய தான் சம்பாதித்து கொண்டு இருந்தான்..

தந்தை வீர ராகவன் இறந்த பின் அவனின் தந்தை வேலை செய்த ரெயில்வே வேலை இவனுக்கு கிடைக்க. இவன் மறுத்தான் தான்.. தங்கைக்கு கொடுக்கட்டும் என்று விட்டான்..

ஆனால் அவனின் அன்னை கெளசல்யா “மத்தவங்க வீட்டுக்கு போகும் பெண்ணுக்கு இந்த வேலை எடுத்து கொடுப்பாங்கலா..” என்று மகனிடம் போராடி தான் மகிபாலனை இந்த வேலையில் சேர வைத்து விட்டார்.

கெளசல்யாவை பொறுத்த வரை ஐடியில் என்ன தான் அதிகம் சம்பாத்திதாலுமே, அது என்னவோ அரசங்காம் உத்தியோகம் தான் மதிப்பு என்று நினைப்பவர்… முன் என்றால் முன் என்றால் அவனின் தந்தை இருக்கும் போது என்றால், இந்நேரம் கல்யாண கனவுகள் கூட கண்டு இருந்து இருப்பானோ என்னவோ…

ஆனால் வீட்டு சூழ்நிலையில் தூக்கமே சரியாக வராத போது எங்கு கல்யாண கனவு காண்பது..

இவனுக்கு மூத்தவள் ஒரு பெண் சுதா.. திருமணம் முடிந்து இரண்டு வருடமாக வாழாது வீட்டோடு இருக்கிறாள்..

ஏற்கனவே மகிபாலனின் அக்கா சுதாவுக்கு அவளின் ஜாதகம் காரணமாக வயது கூடி தான் திருமணம் செய்தது.. இதில் ஆறு மாதமே தான் அவள் கணவன் பாஸ்கரனோடு வாழ்ந்தது.. பின் இதோ மீண்டுமே அடித்த பந்தாக வீடு வந்து விட்டாள்..

காரணம் இவர்கள் போட்ட நகைகள் அத்தனையும் கவரிங்க என்ற காரணத்தினால், தாங்கள் செய்த இந்த மோசடி காரணமாக முதலில் பேசிய நகைக்கு இரண்டு பங்காக நகை போட்டு அனுப்புங்க என்று இங்கு அனுப்பி வைத்து விட்டனர்..

முதலில் போட சொன்ன இருபத்தி ஐந்தே இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு முடியாத ஒன்று.. இதில் இரண்டு மடங்கு என்றால், ஐம்பதுக்கு… என்ன செய்வது.

இதில் இவனுக்கு அடுத்த தங்கை இருபத்தி ஏழு வயதில் இருக்கும் மகிளாவுக்கு மாப்பிள்ளை பார்த்து பார்த்து இப்போது தான் ஒன்று கை கூடி வரும் போலான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது..

அந்த பேச்சில் ஒரு வார்த்தையாக அவர்களுமே ஐம்பது சவரன் தான் போட வேண்டும்.. நாங்க எல்லாம் முன் சம்மந்தி போல ஏமாந்து போக மாட்டோம்.. நகை தங்கமா என்று பார்த்த பின் தான் என் மவன் உங்க பொண்ணு கழுத்தில் தாலியே கட்டுவான் என்று சொல்லி விட்டார்.. ஆச்சாரியை கைய்யோடு கூட்டிக் கொண்டு வருவாங்க போல.

இப்போ அது இல்லை பிரச்சனை… ஏற்கனவே மூத்த பெண் வாழாது இதே நகை விசயத்தில் தான் முப்பத்திரெண்டு வயதில் வீட்டில் இருக்கா. இதில் அடுத்த பெண்ணுக்கு எங்கு இருந்து சவரன் போடுவது..

அதற்க்கு தான் கீழே இவனின் கல்யாண பேச்சுக்கள் நடக்கிறது.. இந்த வீட்டில் இப்போது உருப்படியாக மதிப்பாக இருப்பது இவன் மட்டும் தானே… இவனை விலை பேசும் பேச்சாக தான் கல்யாண பேச்சு என்ற போர்வையில் பேச்சுக்கள் நடக்கிறது.. கீழே போகவே அவனுக்கு அவமானமாக இருக்கிறது..

நேற்று முழுவதுமே பேச்சு இதை வைத்து தான்..

“ம்மா வேண்டாம்.. நான் எப்படியாவது நகை பிரட்டிடுறேன்..” என்று சொன்னவனிடம் அவனின் அக்கா சுதா.

“எப்போ என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் முடிந்த பின்னா..?” என்று கேட்ட அக்காவை பார்க்கவும் மகிபாலனுக்கு பாவமாக தான் இருந்தது.

இரண்டு நாள் முன் தான் சுதாவின் மாமனார் மாமியார் வீட்டிற்க்கு வந்து.

“நீங்க செஞ்ச வேலைக்கு நம்ம சாதி ஜனம் முன்னே உங்க பெண்ணை அத்து விட்டு என் மவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்து இருப்பேன்.. ஆனா என்ன செய்யிறது என் மவன் தான் சுதா என்ன செய்வா. தப்பு அவங்க வீட்டு மேல தானே என்று சொல்லிட்டான்..

ஆனா இப்போ அவனே இன்னும் எத்தனை நாள் நான் இப்படியே இருப்பது… சவரன் போட்டு பெண்ணை அனுப்புவாங்கலா…? இல்லையா…? என்று கேட்டுட்டு வர சொன்னான்.. அவன் வயசுல இருக்குறவன் எல்லாம் இரண்டு குழந்தைக்கு தகப்பனா ஆகிட்டாங்க.. உங்களுக்கு தான் உங்க பெண் மேல அக்கறை இல்லாம இருக்கலாம் ஆனா எங்களுக்கு இருக்கு…

உங்க பெண்ணுக்கு இப்போவே முப்பத்தி ரெண்டு வயசு ஆகுது.. இனியும் இப்படியே இருந்தா அவளுக்கு குழந்தை பிறக்கும் வயசும் கடந்து போயிடும்.. இப்போவே கடந்து தான் போயிடுச்சி.. எனக்கு எல்லாம் உன் மவ வயசுல என் மவ வயசுக்கே வந்துட்டா..” என்று சொன்னவர்..

போகும் போது கடைசியாக… “இன்னுமே ஒரு மாசம் தான் கெடு… இல்லேன்னா உங்க பொண்ணை அறுத்து விட்டுட்டு என் மவனுக்கு இன்னொரு கல்யாணத்தை முடிச்சிடுவோம்.” என்று சொல்லி விட்டு சென்றதில் இருந்து குடும்பமே பயந்து தான் போய் இருந்தது..

அதுவும் அவனின் அக்கா சுதா.. இரண்டு நாட்களாக தூங்கவில்லை சாப்பிடவில்லை என்றான நிலை தான்..

நேற்று காலை இப்போது இவனுக்கு பெண் கொடுக்க பேசிக் கொண்டு இருக்கும் பெண்ணின் சித்தாப்பாவின் மாமனார் இவர்களை தேடி வீடு வந்தவரை, இவனின் அன்னை கெளசல்யா அதிசயத்து தான் பார்த்து பின் அரக்க பறக்க..

“வாங்க வாங்க… “ என்று பர பரத்து போய் விட்டார்..

காரணம் அவர்கள் ஜாதியிலேயே மிகவும் செல்வாக்கான குடும்பம் இவர்களுடையது.. இவர்கள் எல்லாம் சாதாரணமாக ஒரு வீட்டுக்கு செல்வது எல்லாம் கிடையாது..

எதற்க்கு தன் வீடு தேடி வந்து இருக்கிறார்கள் என்று யோசித்தாலுமே, கெளசல்யா குடிக்க தண்ணீர் கொடுத்து பின் மோர் கொடுத்து என்று நல்ல முறையில் தான் உபசரித்தார்…

பின் நான் இங்கு வந்தது ஒரு காரணமாக தான் என்று அந்த பெரியவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

முதலில் இவர்கள் வீட்டு விசயமாக சுதாவை பற்றி தொடங்கியதுமே அங்கு ஒரத்தில் நின்று கொண்டு இருந்த சுதா அழ ஆரம்பித்து விட்டாள்…

கெளசல்யாவுமே நேற்று சம்மந்தி வீட்டவர்கள் வந்து பேசி விட்டு சென்றதை சொல்லி விட்டு அவருக்குமே லேசாக கண்கள் கலங்குவது போல் தான் ஆகிவிட்டது..

கெளசல்யா அவ்வளவு சீக்கிரம் மனம் தளர்ந்து விட மாட்டார்.. மிக தைரியமான பெண்மணி தான்.. இப்போது அவருக்குமே இரண்டு பெண்களின் வாழ்க்கையை நினைத்து கவலை.. அதுவும் தன்னால் என்பதில், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலுமே இன்னுமே தவித்து தான் போய் விட்டார்..

இது வரை மாப்பிள்ளைக்கு தன் பெண்ணை பிடித்து இருக்கு அவ்வளவு சீக்கிரம் அறுத்து எல்லாம் விட்டு விட மாட்டார்கள் என்று தைரியத்தில் இருந்த கெளசல்யா…

நேற்று வந்து சம்மந்தியம்மா பேசிய போது கூட. இவர்கள் சும்மா பயம் முறுத்த தான் இப்படி பேசுகிறார்கள் என்று தான் நினைத்தார்..

ஆனால் அவரின் அந்த நினைப்பு அவரின் முகத்தில் பிரதிபலித்து விட்டது போல. சம்மந்தியம்மா உடனே தன் பேசியில் தன் மகனை அழைத்து விட்டார்..

எடுத்த உடன் தன் மகனிடம்.. “நான் சொன்னேன்லே… நீ உன் பொண்டாட்டியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்ட என்று தைரியத்தில் தான் இவங்க இருக்காங்க என்று.. இன்னும் கொஞ்ச நாள் போனா. நகை போடாமலேயே பெண்ணை அனுப்பி விடுறது தான் அவங்க திட்டம் என்று…”

நீ அறுத்து விட்டு விடுவேன் என்று சொல்றேன்.. அந்த மிதப்பு பார்வை பார்க்கிறாங்க. எல்லாம் உன்னாலே தான்..” என்று சம்மந்தியம்மா மகனையும் சாட..

மகனான பாஸ்கர் பேசியில் என்ன சொன்னானே… பேசி கெளசல்யாவிடம் நீட்டப்பட்டது..

“அம்மா சொல்றது நிஜமா… உங்க பெண்ணை விட மாட்டேன் என்ற தைரியத்தில் தான் இன்னுமே மெத்தனமா உங்க பொண்ணை வூட்டுல வெச்சிட்டு இருக்கிங்கலோ… “ என்று இது வரை மரியாதையாக பேசிய மாப்பிள்ளையிம் தோணி மாறி.. ஒரு முறை கூட தன்னை அத்தை என்று அழைக்காது இந்த பேச்சில் கெளசல்யா பதறி தான் போய் விட்டார்..

அதில்.. “என்ன மாப்பிள்ளை இப்படி சொல்றிங்க. நான் ஏமாத்த எல்லாம் நினைக்கல மாப்பிள்ளை.” என்று தாழ்ந்து பேச.

“நீங்க தான் ஏமாத்த மாட்டிங்க தானே.. ஆமா ஆமா ஏமாத்தாத ஆளு தான் தகரத்த தங்கம் என்று எடுத்து கொடுத்திங்க போல.. சும்மா வாய் இருக்கு என்று பேசிட்டு இருக்காதிங்க.. என் அம்மா சொன்னது தான் இனி நடக்கும்..” என்று சொல்லி வைத்து விட்டார்.

வயது கடந்து இன்னும் கல்யாணம் ஆகாத பெண்ணை பார்ப்பதா.? இல்லை கல்யாணம் ஆகி வீட்டோட இருக்கும் பெண்ணை பார்ப்பதா.? இரண்டு நாள் வீட்டில் நிலை இப்படி இருக்கும் சமயத்தில் இவர் வந்து கேட்க.. அனைத்துமே கொட்டி விட்டார் கெளசல்யா.

அன்னை அனைத்தும் சொல்லி முடிக்கும் சமயம் தான் மகி பாலன் வீட்டிற்க்கு வந்தது… அந்த பெரியவரின் பார்வை வந்தவனை மேலும் கீழுமாக எடை போட்டது…

பின் கெளசல்யாவிடம் மெல்ல தன் பேச்சை ஆரம்பிதார்.. “ நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. ஒரு விசயம் நான் சொல்லுவேன்.. அதை ஏத்துக்கிட்டா உன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போயிடும்.. “

“உன் பணம் பிரச்சனை என்ன என்பது எனக்கு நல்லாவே தெரியும்.. உன் மவன் என்ன தான் நல்லா சம்பாதித்தாலுமே.. அது தீர இன்னுமே எத்தனை வருஷம் எடுக்கும் என்பதும் எனக்கு தெரியும்.. அதனால நான் உனக்கு ஒரு நல்ல யோசனை சொல்றேன்..” என்ற அந்த பெரியவரின் பேச்சு மகிபாலனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

ஆம் வீட்டில் அத்தனை பணம் பிரச்சனை இருக்கு தான்.. ஆனால் இவர் இதை பற்றி பேச யார்..? உறவில் பெரிய மனுஷன் என்றால் அடுத்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன வேண்டும் என்றாலும் பேசுவாராம்..

இந்த நிலையில் நிற்க வைத்து விட்ட அன்னையை அவனால் திட்ட கூட முடியவில்லை.. தன் கோபத்தை அடக்க எப்போதும் போல பல்லை கடித்து கொண்டான். இப்போது எல்லாம் இவன் அடிக்கடி பல்லை கடிக்கும் நிலை ஏற்படுகிறது.

இப்போதுமே அடக்கி கொண்டு இருந்தவனின் நிலை அனுபவம் வாய்ந்த அந்த பெரியவருக்கு தெரிந்து விட்டது போல.

“இளம் ரத்தம் லே.. நம்ம வீட்டு நிலையை பேச இவன் யார் என்று நினைக்க தான் தோன்றும்..” என்று அவர் சொல்லும் போதே..

உடனே பதட்டமாக கெளசல்யா. “ ஐய்யா அப்படி எல்லாம் நினைக்கிறவன் இல்ல.. ரொம்ப அமைதி… ரொம்ப எல்லாம் பேச மாட்டான்.. எந்த கெட்ட பழக்கமும் இல்ல..” என்று தன்னை பற்றி நற்சான்றிதழ் வழங்கி கொண்டு இருந்த அன்னையை அவனால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

‘இவர் என்ன எனக்கு பெண் கொடுக்கவா வந்து இருக்காரு..’ என்னை பத்தி சொல்ல என்று அவன் நினைக்கும் போதே அந்த பெரியவர் அதற்க்கு தான் வந்து இருக்கிறேன் என்பது போல் தான் அவரின் அடுத்த பேச்சு இருந்தது.

“எனக்கு தெரியாதா கெளசல்யா. நம்ம சாதி சனத்திலேயே அதிகம் படித்த பையன் வெளிநாட்டுக்கு எல்லாம் ..” என்று சொல்லும் போதே.. வெளிநாடு இல்லை டெல்லி வெளி மாநிலம் என்று மீண்டுமே மனதில் தான் பேசிக் கொண்டு மகிபாலன்..

ஆனால் அடுத்து அவர் சொன்ன விசயத்தில் மகி பாலன் மனதில் கூட பேசாது தான் அதிர்ச்சியின் நின்று விட்டான்..

அவன் மட்டுமா அவன் குடும்பமே தான்..

“படிச்ச பையனும் தெரியும் பண்பான பையனும் தெரியும்.. அதோட இந்த ரெயில்வே வேலைக்கு முன்னவே இதோட நல்ல சம்பளத்தில் உன் மவன் வேலைக்கு போனது நம்ம ஜாதி சனத்துக்கே தெரியுமே… அதனால தான் என் சம்மந்தி வீட்டவங்க உன் மவனுக்கு பொண்ணை கொடுக்கனும்..” என்று அவர் சொன்னது தான் தாமதம்.

சம்மந்தி வீடு என்றால், உறவு முறை யோசித்து யார் என்று கண்டு கொண்ட பின்னே அதிர்ந்த கெளசல்யா..

“யாரு ஐந்து பையன்கள் கூட இரண்டு நாள் இருந்துட்டு வந்தாளே. அந்த பெண்ணா…?” என்று கெளசல்யா கேட்கும் போதே கண்கள் கலங்கி தான் போய் விட்டது..

அன்னையின் கலக்கமான முகத்தை பார்த்த மகி பாலன்.. “ம்மா என்ன இது…? அவங்க விருப்பத்தை சொன்னாங்க. நாம நம்ம விருப்பத்தை சொல்ல போறோம்.. அவ்வளவு தான்.. “ என்று இத்தனை நேரம் தூரம் நின்று கொண்டு இருந்த மகி பாலன் சட்டென்று தன் அன்னையின் அருகில் வந்ததோடு அரவணைத்து ஆறுதலும் கொடுத்தான்..

இது தான் மகி பாலன்.. இவன் மட்டுமே கிடையாது.. பெரும் பாலும் மகன்கள் மகி பாலனை போல தான். அன்னை செய்வது எரிச்சலை தான் கொடுக்கும்.. ஆனால் அவர்கள் கண்கலங்கினால் தாங்கி கொள்ள மாட்டார்கள்…

அதுவும் மத்தியதர வர்க்கத்து மகன்களிடம் இந்த பண்பு அதிகம் தெரியும்…
இது தானே அவர்களின் பலமும் பலவீனமும்…

பெரியவர் கொஞ்சம் நேரம் அமைதியாகி விட்டார்.. ஒன்றும் பேசவில்லை அன்னை மகனின் உரையாடல்களை கேட்டு கொண்டு மட்டும் இருந்தார்.

பின் சிறிது நேரம் கழித்து.. “ நீங்க நினைப்பது எனக்கு நல்லாவே புரியுது கெளசல்யா.” என்று அவர் ஆரம்பிக்கும் போதே.

கெளசல்யா. “ இல்லைங்க ஐய்யா கண்டிப்பா என் நிலை உங்களுக்கு புரியாது. புரிஞ்சி இருந்தா என் கிட்ட இந்த சம்மந்தம் கொண்டு வந்து இருக்க மாட்டிங்க… என் மகனுக்கு என்ன குறச்சல்… அவனுக்கு கெட்டு போன..” என்று சொல்லும் போதே மகிபாலன்..

“ம்மா..” என்று கத்தி விட்டான்..

“என்ன பேச்சும்மா இது.. ? நம்ம வீட்டிலுமே இரண்டு பெண்கள் இருக்கு.. முதல்ல அதை நியாபகத்தில் வெச்சிக்கோங்க.” என்று அன்னையை அதட்டியவன்..

அந்த பெரியவரிடம்.. “ மன்னிச்சிக்கோங்க. ம்மா பேசுனது தப்பு தான்.. “ என்று தன்னிடம் மன்னிப்பும் கேட்டவனை அந்த பெரியவருக்கு மிகவும் பிடித்து விட.

இத்தனை வருஷ தன் அனுபவ அறிவை கொண்டு எப்படி பேசினால், காரியம் நடக்கும் என்று நன்கு அறிந்தவராக…

“எனக்கு புரியுதும்மா. அந்த பெண் தப்பு செய்துடுச்சி தான்.. ஆனா பாரு அப்போ அந்த பெண்ணுக்கு விவரம் புரியாது.. படிச்சி காலேஜ் போன புதுசு.. பதினெட்டு தான்.. ஏதோ தெரியாம… இது தான் மாடல் போல என்று செய்துடுச்சி… அதுக்கு என்று நான் அந்த பெண் சரி என்று நான் சொல்ல வரல.. தப்பு தான் தப்பு தான்..” என்று சொன்னவர் பின் தொண்டையை கணைத்து கொண்டு..

“வெளியில் இருந்து கட்டிக் கொண்டு வரும் பொண்ணை பத்தி நமக்கு என்ன தெரியும்.. சொல்லுங்க… இந்த பெண் விசயம் வெளியில் வந்துடுச்சி… வெளியில் வராத பெண்ணுங்க நல்ல பெண்ணா தெரியிறாங்க.. அவ்வளவு தான்.. நம்ம நேரம்.. அந்த பொண்ணுங்கலே ஒன்னு இந்த வீட்டுக்கு வந்துட்டா…?” என்ற பெரியவரின் பேச்சில்..

கெளசல்யா ..” பெரியவங்க அப்படி எல்லாம் சொல்ல கூடாது.. நாங்க எப்படி வாழ்ந்தோம் என்று எல்லாம் உங்களுக்கு தெரியும்.. புது ஆள் எல்லாம் கிடையாது.. இந்த வீட்டின் இந்த நிலமைக்குமே நான் மட்டுமே தான் காரணம்.. நான் செய்ததுக்கு என் மகன் மகள்கள் கஷ்டப்பட கூடாது.” என்று பதறி போய் சொன்னவரின் பேச்சையே அந்த பெரியவர் பிடித்து கொண்டவர்..

“அதுக்கு தான் நான் வழி சொல்றேன் கெளசல்யா… மூத்த பெண் கல்யாணம் ஆகி இரண்டு வருஷமா இங்கு தான் இருக்கா.. கல்யாணம் ஆகாத ஆம்பிள்ளை எத்தனை வருஷம் ஆனாலுமே பெண் துணை இல்லாது இருந்துப்படலாம்..”

“ஆனா கல்யாணம் முடிந்து தாம்பத்தியம் சுகம் கண்டு விட்டு எத்தனை வருஷம் தான் ஒரு ஆம்பிள்ளை தனியா கிடப்பான்..” என்று சொன்னவரின் பேச்சு வாஸ்தவமான பேச்சு தான்..

நேற்று மாப்பிள்ளையின் பேச்சும் கெளசல்யாவுக்கு அதை தான் உணர்ந்தியது..

பாஸ்கர் இங்கு வீடு வந்தது கிடையாது தான். ஆனால் உறவு முறை விசேஷ வீட்டில் பார்த்தால்,

“என்ன அத்த எப்படி இருக்கிங்க.?” என்று முறைக்கு விசாரித்து விட்டு அடுத்த பேச்சாக.

“சீக்கிரம் நகையை பிரட்டி பெண்ணை வீட்டுக்கு அனுப்புங்க அத்தை..” என்று சொல்பவர்..

கூடவே..” எனக்கு பொண்ணும் கொடுக்க இன்னுமே மாமன் அயித்த பொண்ணுங்க ரெடியா தான் இருக்கு அத்த… “ என்றும் சொல்லுவார் தான்..

ஆனால் நேற்று போல அவர் பேசியது கிடையாது.. இவர் சொல்வது போல் எத்தனை நாட்கள் தான் தனித்து இருப்பது என்று அவர் அடி மனது கலங்கியது என்றால், தன் இன்னொரு பெண்ணான மகிளாவை பார்த்து விட்டு சென்ற இடம்.. அவர்கள் கேட்டது என்று இதை எல்லாம் நினைக்க நினைக்க அவர் அடி மனது கலங்கி தான் போயின…

அதோடு ஒரே மகன்.. அவனுக்குமே முப்பது வயது.. அவனுக்குமே திருமணம் செய்ய வேண்டும் அல்லவா…? என்று இது வரை கெட்டு போன பெண் என்று.. எப்படி என் மகனுக்கு கேட்கலாம் என்று மனதில் பொங்கியவர்.. கட்டையை இழுத்து விட்டால் நெருப்பு அணைவது போல.

தன் குடும்ப சூழல் என்ற பிரச்சனை அணைத்தும் அணைத்து விட. இதோ கெளசல்யா

“நான் பேசிட்டு உங்களுக்கு போன் செய்யிறேன்.. “ என்று கெளசல்யா சொன்னதிலேயே அந்த பெரியவருக்கு நம்பிக்கை வந்து விட்டது போல.

சிரித்த முகத்துடன் தான் விடை பெற்று சென்றார்... செல்லும் போது மகிபாலனிடம்..

“மருது பாண்டியனுக்கு மருமகனா போக போற கொடுத்து வைத்தவன் தான்பா நீ.” என்று சொல்லி விட்டு அவன் தோளையும் தட்டி விட்டு சென்றவரையே பார்த்து கொண்டு இருந்தவன் என்ன மாதிரி உணர்கிறான் என்பதை அவன் மனமே அறிய முடியவில்லை..

பின் இரவு முழுவதுமே.. அம்மா பேச்சு.. பேச்சு தான்… குடும்ப சூழல் அக்கா தங்கை என்று சினிமாவிலும் கதையிலுமே இது என்னடா ஒவர் சென்டி மென்டா இருக்கு என்று இந்த காலத்து பிள்ளைகள் சொல்வது போல் தான் கெளசல்யா அம்மாவின் பேச்சுக்கள் இருந்தது..

முடிவில் “ உங்க விருப்பம் ம்மா.” என்று சொல்லி விட்டு மொட்டை மாடிக்கு செல்ல படி ஏறிக் கொண்டு இருக்கும் போது சுதா..

“ம்மா என்னம்மா அந்த பொண்ணு காதலிச்சி ஏமாந்து போய் வந்து இருந்தாலுமே பரவாயில்லை.. ஏதோ புரியாத வயசுல தப்பு செய்து விட்டது என்று சொல்லலாம்.. ஆனா இந்த பொண்ணு பிஞ்சிலேயே பழுத்தது போல. இரண்டு நாள் ஆளையே காணும்.. எங்கு எங்கோ தேடி இரண்டு நாள் கழித்து வீடு வந்து இருக்கு.. அந்த இரண்டு நாளும் ஐந்து ஆம்பிள்ளைங்க கூட இருந்தேன்.. அவங்க கடத்திட்டு எல்லாம் போகல. நானா தான் விரும்பி போனேன் என்று போலீஸ் ஸ்டேஷனில் அவ்வளவு தைரியமா சொல்லுது.. பதினெட்டு வயசுல. இந்த வயசுல நான் ஒரு சினிமாவுக்கு போக உங்க கிட்ட கேட்க கூட அத்தனை பயந்து போய் இருந்தேன்ம்மா..” என்று சொன்னவளின் பேச்சை கெளசல்யா.

“அப்போ நிறந்தரமா நீ இதே வீட்டிலேயே இருந்துடுறியா…? உன் புருஷன் இன்னொரு கல்யாணம் செய்துக்கட்டும்.. உன் தங்கைக்கும் நகை போட வக்கு இல்லாது இப்படியே வீட்டோட கிடக்கட்டும்.. உன் தம்பிக்கு நீ நினச்சது போல.. ஒழுக்கமான பெண்ணா பார்த்து கூட்டிட்டு வரேன்.. ஆனா பாரு.. அந்த பெண் வீட்டோட இருக்க உங்களை எப்படி நடுத்துவா என்பதை என்னால சொல்ல முடியாது..” என்று சொல்லவும் சுதா அமைதியாகி விட்டாள்..












 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
மகிபாலன் வீட்டில் பிரச்சினை அதிகம் ஆகும் போதே உங்க அம்மா என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று இந்த வேலையை விட்டுட்டு ஐடி வேலைக்கு போயிருக்கலாம்😕😕😕

அந்த பொண்ணு பக்கம் என்ன நடந்தது என்று தெரியல 🤔 🤔 🤔 🤔 இரண்டு நாள் எங்கோ போயிட்டு வந்திருக்கா அதை வச்சு இவங்களே கதை எழுதுறாங்க 🥶🥶🥶🥶🥶🥶 ஆனால் ஒன்னு பதினெட்டு வயசுலே அவ்வளவு தைரியமா பேசி இருக்கா 🙂🙂🙂🙂🙂
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
அருமையான ஆரம்பம்.... 💚

அப்பா நல்ல வேலையில இருந்துருக்காரு மகியும் IT ஜாப்... ஆனா கவரிங் நகையைப் போட்டு ஏமாத்தி கல்யாணம் பண்ணி குடுத்துருக்காங்க... கௌசல்யா தான் இந்த நிலைக்கு காரணம்ன்னு சொல்லறாங்க... என்னவா இருக்கும்... 🤔🤔🤔

என்ன நடந்ததுன்னு தெரியாம ஒரு பொண்ணை பத்தி எல்லாரும் தப்பா பேசியிருக்காங்க.... இவங்களும் அதே தான் செய்றாங்க... இப்போ பணத் தேவைக்காக கல்யாணம் பண்ணிட்டு வந்து அவளை படுத்தப் போறாங்க.... 😔😔😔
 
Top