Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...12

  • Thread Author
அத்தியாயம்….12

வேலவ பாண்டியனின் குரலில் தான் மற்றவர்கள் ஒவ்வொருவராக கூடத்திற்க்கு வந்தது.. சரியாக அந்த நேரம் மதியம் சாப்பிட கடையில் இருந்து மருத மாண்டியனும் சரவண பாண்டியனுமே வந்த நேரமும் ஒன்றாகவும் போய் விட்டது…

வளர்மதி மட்டும் தன் இரண்டு நாத்தனார்களை பார்த்ததும் சட்டென்று அவரின் பார்வை தன் மருமகள் மீது தான் படிந்தது..

செண்பகமோ இத்தனை விரைவில் அவர்களை எதிர் பார்க்காததில் முதலில் அதிர்ச்சியானாலுமே, அடுத்து ஒரு நிம்மதி… ஓரம் நின்று வேடிக்கை பார்ப்போம் என்ற மனநிலையில், உண்மையில் கூடத்தில் மூலையில் ஒரு ஓரமாக நின்று கொண்ட செண்பகம் தன் கை பிடியில் ஒரவத்தியுமே நிற்கவும் வைத்து கொண்டாள்..

எத்தனுக்கு எத்தன் என்பது போல் தான் வித்யா வீட்டின் உள் நுழையும் போதே…

வளர்மதியிடம்.. “ என்ன அண்ணிம்மா எப்படி இருக்கிங்க…?” என்று ஒரு இழுவையாக அழைத்து கொண்டே தான் வந்து அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டது..

“ம் நல்லா இருக்கேன் நாத்தீ…” என்று அந்த தீயில் வளர்மதியும் ஒரு இழுவையாக இழுத்தவாறே தான் சொன்னது. ஆனால் பார்வை செண்பகா மீதும், செளமியா மீதும் ஒரு ஆராய்ச்சி பார்வை சென்று மீண்டது தான்..

மருது பண்டியனும் சரவண பாண்டியனுமே.. “ பொதுவாக வாங்க..” என்று அழைத்தவர்கள் என்ன விசயம் என்பது போல் தான் அந்த வீட்டின் மாப்பிள்ளையை பார்த்தது..

மகனுக்கு திருமணத்திற்க்கு பத்திரிக்கை வைக்கும் போதே வராத மனுஷன் இப்போது வந்து இருக்கிறாங்க என்றால், விசயம் இல்லாது வந்து இருக்க மாட்டார்கள் என்று மருது பாண்டியன் சரியாக தான் யூகித்தது.

ஆனால் மருமகளுக்கு தெரிந்த விசயம் இவருக்கு தெரியாததினால், என்ன விசயமாக இருக்கும்.. அதுவும் இவங்களுக்கு பத்திரிக்கை வைத்தவங்களோட வந்து இறங்கும் அளவுக்கு..

பாவம் அவருக்கு இதுவுமே தெரியவில்லை. இருவருமே தனி தனியாக தான் வந்து இறங்கியது…

முதலில் எல்லாம் வீட்டு மாப்பிள்ளை வந்து விட்டால், அத்தனை உபசரிப்பு நடக்கும் இந்த வீட்டில், ஆனால் இப்போதோ அனைவருமே அமைதியாக தான் என்ன என்பது போல பார்த்து கொண்டு நின்று இருந்தனர்..

வித்யா இதை எதிர் பார்க்கவில்லை.. இருந்தும் சமாளித்தவராக தன் தங்கை சங்கரியிடம் கண் காட்டினார்.. பின் வித்யா.

“ஆமா செந்தாழினி எங்கே ஆளையே காணும்.. நான் வந்தாலே அத்த அத்த என்று வந்துடுவா…” என்று முன் நடந்ததை நியாபகம் படுத்த

அதற்க்கு மட்டும் வளர் மதி.. “முன் போலவா எல்லாம் நடக்கும்… “ என்று ஒரு மாதிரியாக தான் சொன்னது.

முன் எல்லாம் மருது பாண்டியன் முன் ஒத்த வார்த்தை அவர் தங்கைகளை பற்றி சொல்லி விட முடியாது..

ஆனால் இப்போது தன் மகள் என்று வந்த போது… அனைத்துமே பின் தங்கி தான் போய் விட்டது..

என் புருஷன் வீடு தேடி போன போது… என்ன மாதிரியான வார்த்தைகளை எல்லாம் விட்டது என்ற கோபம் வளர் மதிக்கு..

அண்ணியின் இந்த பேச்சில் வித்யா அண்ணன் ஏதாவது சொல்லுவாரு என்று பார்க்க அவரோ…

“என்னம்மா என்ன விசயம்..?” என்று நேரிடையாக கேட்டதில்..

வித்யாவுமே… “ இல்லேண்ணா நம்ம செண்பகா சொன்னா மாப்பிள்ளை வீடு அந்த அளவுக்கு வசதி இல்ல… அந்த வூட்டு பொண்ணுங்களுக்கே.. நீங்க தான் நகை செய்து போட்டது..” என்று வித்யா சொல்லி கொண்டு இருக்கும் போதே செந்தாழினி அங்கு வந்து நின்று விட்டாள்..

அவள் இரண்டு அண்ணிகளை போல ஒரமாக எல்லாம் நிற்கவில்லை.. நடு கூடத்தில் தான் கை கட்டிக் கொண்டு நீ பேசு.. நான் கேட்கிறேன் என்பது போல நின்றது..

இவர்கள் வந்ததுமே பேச்சு சத்ததில் செந்தாழினி வந்தவர்கள் யார்…? என்பது புரிந்து கொண்டு விட்டாள்..

ஏன் வந்து இருப்பார்கள் என்ற அனுமானமும் அவளுக்கு இருந்தது.. அதில் பேச்சு வரட்டும் பின் போகலாம் என்று நினைத்து தான் செந்தாழினி வித்யா தன்னை பற்றி கேட்ட போதும் போகாது இருந்தது..

இப்போது மகிபாலன் வீட்டை பற்றிய இந்த பேச்சில் அங்கு போய் கை கட்டி நின்றாலுமே, அதில் சிறிதளவு கூட பவ்யம் என்பது இல்லை..

செந்தாழினியின் இந்த பாவனையில் வித்யாவின் பேச்சு கொஞ்சம் தடைப்பட்டு தான் போனது..

முன் போல செந்தாழினி இல்லை என்பது அவருக்கு தெரிந்தாலுமே, அவருக்குமே வேறு வழி இல்லையே..

அதனால் தொடர்ந்து… “இல்ல நம்ம வீட்டு பெண்ணு இங்கு நல்லா வசதியா இருந்துட்டு அங்கு எப்படி இருப்பா.. நான் கெளசல்யா வீட்டிற்க்கு போய் இருக்கேன்.. சொல்லிக்கிறது போல எதுவுமே இல்லை…” என்று சொல்ல.

வித்யாவின் இத்தனை பேச்சுக்குமே செந்தாழினி வாய் திறந்தாள் இல்லை.. மருது பாண்டியன் யோசனையுடன் தங்கையை பார்த்து கொண்டு இருக்க.. செண்பகாவோ குழம்பி போனவளாக தான் வித்யாவின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தது.

நாம சொல்லிட்டு வந்த விசயத்துக்கு இந்த பேச்சுக்கே இடம் இல்லையே என்று நினைத்து கொண்டு..

சரவண பான்டியன் தான்.. “அதுக்கு என்ன செய்ய சொல்ற… வித்யா..” என்று கேட்டது தான் தாமதம்..

வித்யா கட கட என்று.. “ என்ன செய்ய முடியுமா…? நான் ஒரு கூறு கெட்டவ அண்ணா.. என்ன தான் என் அண்ணன் மகள் தப்பே செய்துட்டு வந்தாலுமே, நான் என் அண்ணன் மகளை கை விட்டு இருக்க கூடாது ண்ணா..”

“சொந்தம் தானே இது போலான ஒரு நிலையில் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியும்… அப்போ என் புத்திய மழுங்க அடச்சி புட்டாங்க ண்ணா.. இவங்க வீட்டு ஆளுங்க..”

தன் கணவனின் பக்கம் கை காட்டி சொன்னவள் மேலும்..

“நானே என் வீட்டிற்க்கு மருமகளா எடுத்துக்குறேன் ண்ணா. அப்படி என் மகனுக்கு இல்லேண்ணா. நம்ம சங்கரி மகனுக்கு கொடுங்க.. எது என்றாலுமே சொந்தம் என்றால் தான் முன்னாடி என்ன நடந்து இருந்தாலுமே அதை மறந்து ஒரு நல்ல வாழ்க்கையை நம்ம வூட்டு பெண்ணுக்கு கொடுக்க முடியும்.” என்று பேச.

மருது பாண்டியனோ.. யோசனையுடன் வித்யாவை பார்த்தது.. அதுவும் தன் மகனுக்கு எனும் போது இரண்டாம் மகனுக்கு வித்யாவின் நாத்தனார் மகளை எடுப்பதாக தான் பேச்சு…

அதே போல சங்கரியின் இளைய மகன் தன் மகளை விட ஆறுமாதம் சின்னவன்.. இந்த வயதில் திருமணமா என்று யோசனை செய்ய..

வித்யா அடுத்த பேச்சாக தன் மகனிடம் தன் தங்கை மகனிடமும்..” சொல்லுங்களேடா.. நான் என் மாமன் மகளை நல்ல முறையில் வைத்து குடும்பம் நடத்துவோம்.. முன் நடந்த விசயத்தை எடுத்து பேச மாட்டோம்.. “ என்ற பேச்சில் மருது பாண்டியன் அமர்ந்து இருந்தவர் எழுந்து நின்று விட்டார்..

அவருக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை.. ஆனால் சரவண பாண்டியன்..

“என்ன வித்யா சொல்ற… இவங்க இரண்டு பேருக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே.. நாங்க தானே தாய் மாமன் சீர் எல்லாம் செய்தது. என்று கேட்டவரிடம்..

“அது ஏண்ணே கேட்கிற. இரண்டுமே போயிடுச்சி ண்ணா. அதை பத்தி எல்லாம் பேச்சு எடுத்தாலே எனக்கு தலை எல்லாம் கிறு கிறு என்று சுத்தி விடும் ண்ணா.” என்று கூறிய வித்யா.

அடுத்து நடந்த விசயங்கள் அனைத்துமே சொல்லி முடிக்க.

இத்தனை நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சங்கரி.. “ உங்க மருமகள் செண்பகாவுக்கு கூட தெரியுமே ண்ணா.” என்று செண்பகாவை மாட்டி விட்டு விட்டார்..

செண்பகாவோ அடி சண்டாளி.. இத்தனை நேரம் அமைதியா தானே இருந்த. அப்படியே இருந்து தொலைக்க வேண்டியது தானே.,.

அதோடு நான் ஒன்னு நினச்சி.. இதுங்க கிட்ட போனா.. நான் இங்கு வருவதுக்குள்ளே இதுங்க ஒரு ப்ளான் போட்டு பின்னாடியே வந்தது மட்டும் இல்லாம என்னையுமே மாட்டி விட்டுட்டாளே என்று நினைத்து நிமிர்ந்து கூட பாராது தலை குனிந்து கொள்ள..

அந்த வீட்டின் அனைவரின் பார்வையுமே செண்பகா மீது தான் கோபத்துடன் படிந்தது..

வேலவ பாண்டியனோ ஒரு படி மேல போய்… அவளை அடிக்கவே பாய்ந்து போக.. மருது பாண்டியன்..

“வேலவ நம்ம வூட்டு பெண்கள் விசயத்தை பொரவு பார்த்து கொள்ளலாம்.. முதல்ல பார்க்க வேண்டியதை பார்த்து அனுப்பி விடலாம்..” என்ற இந்த பேச்சில் அக்கா தங்கை இருவருமே..

“என்ன அண்ணே சொல்றிங்க. செண்பகா இந்த வீட்டு பெண் என்றால், அப்போ நாங்க… நம்ம அப்பா அம்மாவுக்கு பொரவு நீங்க தானே அண்ணா. எங்களுக்கு எல்லாமே..” என்று கண்ணீர் வடிக்க..

முன் போல கண்ணீர் வடித்து இருந்தால், மருதுவும் சரவணனும் துடி துடித்து தான் போய் இருப்பர்.. ஆனால் அன்று தன் மகளை கட்டிக் கொள்ளுங்கள் என்று கேட்க போகும் போது..

எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இல்லை… ஆனால் ஒரு பிச்சைக்காரனை நடத்துவது போல தன்னை நடத்திய அந்த விதத்தை அவரால் ஜென்மத்துக்குமே அவரால் மறுக்க முடியாது..

அதனால் இரண்டு தங்கைகளின் கண்ணீரை ஒரு பார்வையாளராக தான் பார்த்து கொண்டு இருந்தனர்.. இரண்டு அண்ணன் மார்களும்..

இனி இப்படி சென்டிமெண்டாக பேசி எல்லாம் வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொண்ட வித்யா…

தன் கண்ணீரை துடைத்து கொண்டவராக.. “ இப்போ நீங்க என்ன அண்ணா சொல்ல வர்றிங்க….? உங்க பொண்ணை ஒன்னு என் மவனுக்கு கட்டி வைங்க.. இல்ல சங்கரி மவனுக்கு கட்டி வைங்க.. இரண்டாம் தாரம் தான்.. ஆனா உன் மவள் நடந்துக்கிட்டதுக்கு.. இதுவே பெருசு தான்..” என்று பேச்சில்..

இத்தனை நேரம் கை கட்டிக் கொண்டு பார்த்து கொண்டு இருந்த செந்தாழினி.

“எனக்கு அந்த பெருசு எல்லாம் வேண்டாம்… இப்போ பார்த்து முடித்ததே போதும்..” என்று விட்டு இருந்தாள்..

செந்தாழினியின் இந்த பேச்சில் நீலம் சாயம் வெளுத்து போச்சு என்பது போல தன் முகத்தை மூடி இருந்த கொஞ்ச நஞ்சம் முக மூடியையும் அகற்றியவளாக வித்யா.

“அது எப்படி அப்படியே விட்டு விட முடியும்.. உன் கல்யாணத்துக்கு எழுதி வைக்கும் அந்த அடுக்குமாடியும், வணிகவளாகம்.. வேண்டும் என்றால் உங்க அப்பன் தலை எடுத்து வாங்கினதா இருக்கலாம்…”

“ஆனா உன் பெயரில் இப்போ இருக்கும் அந்த நகைக்கடை தான் பாண்டி குடும்பத்தின் பேரே. அது எல்லாம் எவனோ ஒரு அண்டாடி காச்சிக்கு எல்லாம் தூக்கி கொடுத்துட முடியாது..” என்று ஆவேசத்துடன் கத்தினாள் வித்யா..

இது இவங்களுக்கு எப்படி தெரியும் என்பது போல அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு இருக்க..

“செண்பகா சொல்லலேன்னா நான் எல்லாம் என் மவனுக்கு உன்னை கட்ட வருவேனா என்ன..?” வித்யா மெல்ல மெல்ல தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்தாள்...

இங்கு அதற்க்குள் வேலவ பாண்டியன் தன் மனைவியை ஒரு அடி அடித்து விட்டவன் இரண்டாம் அடி அடிக்க கை ஓங்கும் முன்..

திரும்ப மருது பாண்டியன்.. “முதல்ல இந்த பிரச்சனை முடித்து விட்டு நம்ம வூட்டு பிரச்சனையை பார்க்கலாம் வேலவா.” என்று மகனை அடக்கியவன்..

பின்.. “இப்போ நீ என்ன சொல்ற.. என் வீட்டிலுமே ஒன்னுக்கு நான்கு ஆம்பிள்ளை பிள்ளை இருக்க. நம்ம ஆத்தா அவங்க பேருல இருக்கும் சொத்தை பேத்திக்கு தான் எழுதி கொடுத்தாங்க. அது முறையா பதிவுமே செய்தாச்சு.. உன்னால என்ன செய்ய முடியுமே செய்து கொள்…” என்று அடித்து பேச..

இப்போது வித்யா மட்டும் அல்லாது வந்த அனைவருமே “பொண்ணுங்க இருக்கும் போது அது எப்படி அம்மா எழுதி இருப்பாங்க நீங்க போலி பத்திரம் தயார் செய்து வெச்சி இருக்கிங்க.” என்று வேறு மாதிரியாக பேசியவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே மருது தன் தம்பியிடம் கண் காட்ட..

தம்பி ஒரு அறைக்கு சென்றவர் திரும்பி வந்த போது ஒரு பத்திரம் அவர் கையில் இருந்தது..

“இது என்னது என்று தெரியுதா… அக்காவும் தங்கச்சியும்.. நாங்க இருக்க போறது சென்னை தான்.. அங்கு சொத்தும் பெரிய வீடுமா இருந்தா தான் எங்களுக்கு மதிப்பு என்று நம்ம ஆத்தா இருக்கும் காலத்திலேயே… உங்க பங்கை பணமா நகையா வாங்கி கொண்டு, என் அம்மா வீட்டு சொத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நீங்களே எழுதி கொடுத்த பத்திரம்.. அதை பதிவுமே செய்தது… அதுவும் சாட்சியா உங்க புருஷன் மாருங்க தான் கைய்யெழுத்தும் போட்டது..? உனக்கு இது நியாபகத்தில் இருக்கா…?” என்று மருது பாண்டி பேச..

வந்த இரு பெண்களுமே வாய் அடைத்து நின்று விட்டனர்.

மருது பாண்டியன் மேலுமே.. “ அன்னைக்கு உங்களுக்கு எல்லாம் கொடுக்கும் போது ஆத்தா பத்திரம் தயார் செய் என்று சொன்ன போது கூட இதுல என்னத்துக்கு ஆத்தா என்று தான் கேட்டேன்..ஆனா நம்ம ஆத்தா இரு தீர்க்கதரசி தான்.. நாளை பின்னே எந்த பிரச்சனையுமே வந்துட கூடாது என்று தான் சொல்லுச்சி.” என்ற அண்ணனின் முன் வாய் அடைத்து தான் நின்றனர் . அக்காவும் தங்கையும்..

உண்மை தான் மதுரையில் இருக்கு.. என்ன வருவாய் வருது என்ன ஏது என்று தெரியுது.. அந்த நகை கடையில் வரும் பணத்தில் அவங்க சொத்தா சேர்த்துட்டு போயிட்டு இருக்காங்க உன் இரண்டு அண்ணனுங்களும்.. என்று இரு பெண்களின் கணவர் வீட்டு சொன்னதில் பிரித்து வாங்கி வந்து தந்து விட்டனர்..

ஆனால் அதில் எதையும் உருப்படியாக செய்யவில்லை… வித்யாவின் கணவன் லாரி வாங்கி போடுறேன் என்று போட்டது நஷ்டத்தில் முடிய..

சங்கரியின் கணவன் ரியல் எஸ்டேட் செய்யிறேன் என்று வாங்கிய நிலம் சீலிங்க் லேண்ட் ஆகி விட.. இருவருமே அந்த பணத்தை விரையம் தான் செய்து விட்டனர்..

பின் வித்யா மீண்டுமே கோபத்தை விடுத்து.. “ மன்னிச்சிக்கோ அண்ணா.. உன் பொண்ணு தப்பு செய்தா மன்னிக்கலையா அது போல நினச்சிக்கோ அண்ணா.. உன் பொண்ணை எங்க இரண்டு பேரில் ஒரு மவனுக்கு கொடுக்கலாம் லேண்ணா.” என்று பேச..

செந்தாழினி.. “ ஏன் இரண்டு பேரில் ஒருவருக்கு நான் இரண்டு பேரையுமே கட்டிகிறேன்னா.” என்ற மகளின் இந்த பேச்சில் மருது பாண்டியன்..

“என்ன இது அசிங்கமான. பேச்சு.” என்று மகளை கண்டிக்க.

மகளோ… “ அன்னைக்கு நீங்க என்னை பேசியதோட இது ஒன்னும் அவ்வளவு அசிங்கமான பேச்சு எல்லாம் இல்லை..” என்று மருது பாண்டியனை பார்த்து கூறியவள்.

தன் இரு அத்தை மகங்களை பார்த்து.. “ என்ன அன்னைக்கு இது போல தானே சொன்னிங்க.. உன்னை பத்தி தெரிந்து இருந்தால், நாங்களுமே அந்த ஐந்தில் ஆறாவது ஏழாவதா இருந்து இருப்போம்.. என்னை பார்த்தா ஆம்பிள்ளையா தெரியலையா…? இப்போ கூட கெட்டு போகல.. இந்த முறை எங்க இரண்டு பேரு கூட தங்கு ஆனா இரண்டு நாள் இல்லை இரண்டு வாரம்..” என்று செந்தாழினி பேச பேச.

மருது பாண்டியனுக்கு அப்படி இருந்தது.. தன் வீட்டிற்க்கே வந்து இப்படி பேச என்ன தைரியம் இருக்க வேண்டும் என்று.. அன்று தன் மகள் எதோ திட்டனாள்.. ஆனால் இப்படி என்று மருது பாண்டி யோசிக்கும் முன்னவே செந்தாழினியின் இரண்டு அண்ணங்களுமே தன் அத்தை மகங்களை பின்னி எடுத்து விட்டனர்.

ஆனால் செந்தாழினியோ இதற்க்கு எல்லாம் மகிழ்ச்சி அடையவில்லை.. நீங்களுமே என்னை இப்படி தானே நினைத்து கொண்டு இருந்திங்க என்பது போல் தான் ஒரு பார்வை பார்த்து மீண்டுமே தன் அறைக்கு சென்று அடைந்தவள்.

இங்கு இருக்கும் வரை தான் எனக்கு இந்த சிறை.. கணவன் வீட்டிற்க்கு சென்று விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று தான் நினைத்தாள்..

அவளின் இந்த எண்ணம் நிஜம் ஆகுமா.? இல்லை ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறையில் போய் அகப்பட்டு கொள்வாளா பார்க்கலாம்..

ஆனால் இன்று அவளின் இரண்டு அத்தைகளுமே வந்த வேகத்தை விட சென்ற வேகம் இன்னும்.. அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

இதோ அதோ என்ற திருமண நாளும் வந்தது…மாப்பிள்ளை அழைப்பு என்பது அந்த சின்ன சத்திரத்தில் முன்பு இருந்த ஒரு விநாயகர் கோயிலில் இருந்தே மகிபாலன் அழைத்து திருமண மண்டபத்திற்க்கு வர வழைக்கப்பட்டான்..

வரிசை என்று ஒன்றும் வேண்டாம்.. மங்கள பொருட்களை மட்டுமே வைத்து அழைத்தால் போதும் என்று மகிபாலன் சொல்லி விட. அனைத்துமே மிக மிக எளிமையான முறையில் தான் அந்த மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டு இருந்தது..

மருது பாண்டியனும் சரவண பாண்டியனும் வந்தவர்களை வர வேற்று கொண்டு இருந்தாலுமே பார்வை அப்போது போது மேடையை தழுவி தழுவி தான் வந்தது.

கண்ணுக்கு நிறைந்த ஜோடியாக தான் காட்சி தந்தனர் மகிபாலனும் செந்தாழினியும்… இருந்தும் செந்தாழினி வீட்டினருக்கு உறுத்திய விசயம். அவள் காதில் இருந்து எதிலுமே துளி தங்கம் கிடையாது.. அனைத்துமே கவரிங்க தான்..

இனி அவள் உடம்பில் ஏறும் நகை என்றால் அது மகிபாலன் கட்டும் தாலி மட்டும் தான் அவள் உடம்பில் தங்கமாக இருக்கும்.. நேற்றில் இருந்து இது குறித்து தான் அத்தனை பேச்சுக்கள் வீட்டில் நடந்து கொண்டு இருந்தது.

எப்போதும் போல வேலன பாண்டியன் தான் ஏதாவது விசேஷம் என்றால் வங்கி லாக்கரின் இருந்து நகைகளை வீட்டு பெண்களுக்கு கொண்டு வந்து கொடுப்பது..

வீட்டில் இருக்கும் போதே பெண்களின் உடம்பிலேயே குறைந்தது முப்பது நாற்பது சவரனுக்கு நகைகள் இருக்கும் தான்.. அதை தவிர.., வீட்டின் பீரோவில் ஆள் ஆலுக்கு ஒரு ஐம்பது சவரன் இருக்கும்..

ஆனால் இது போல திருமணம் என்று செல்லும் போது முன் தினமே..

எந்த புடவை உடுத்துக்கிறார்களோ அதற்க்கு தகுந்தது போல நகைகளை கொண்டு வந்து கொடுக்க சொல்வது தான் அந்த வீட்டின் பெண்கள்..

இன்று வீட்டு பெண் திருமணம் கேட்கவும் வேண்டுமோ..

அதனால் வேலவ பாண்டியன் அன்று காலையிலேயே .. “ எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு என்ன என்ன நகைகள் வேண்டும் என்று சொன்னிங்கனா நான் எடுத்து வந்து கொடுத்துட்டு போயிடுவேன் என்று சொன்னதுமே முதல் ஆளாக சொல்லும் செண்பகா. அன்று எதுவும் சொல்லாது தங்கள் அறையின் நிலவாசப்படியில் தயங்கி நின்று கொண்டு இருந்தாள்..

அன்று வாங்கிய பேச்சுக்கள் அத்தனை.. செளம்யாவுமே வாங்கினாள் தான்.. ஆனால் குற்றத்தில் அவள் இரண்டால் குற்றவாளியாக இருந்ததினால் வாங்கியது கொஞ்சம் குறைவு தான்..

அதனால் அவளுமே தயங்கி நிற்க. அம்மா சித்தி சொன்னதை தன் கை பேசியில் குறித்து கொண்டவன்.

செந்தாழினியை கூப்பிடுங்க. அவளுக்கு தானே முக்கியமா வேண்டும்.. கல்யாணத்துக்கு புது நகை தான் கடையில் இருந்து எடுத்துக்கல இருக்கும் நகை என்ன வேண்டும் என்று சொன்னா எடுத்துட்டு வருவேன்..” என்று சொல்ல மூன்று முறை அழைத்த பின் தான் செந்தாழினி தன் அண்ணன் முன் வந்து நின்றாள்..

அண்ணன் பேசாத போதே.. “ எனக்கு எந்த நகையுமே வேண்டாம்..” என்று சொன்னதுமே குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சியாகி விட்டனர் தான்.

அதுவும் அவள் கையில் இரு செட் கவரிங்க நகைகள் இருக்க. என் புடவைக்கு ஏத்தாது போல ஆன்லைனில் ஆர்டல் போட்டு வாங்கிட்டேன்..” என்றதில் அன்று நான் நகை வேண்டாம் என்று வேறு என்னவோ மகள் சொன்னதை பெரியதாக மருது பாண்டியன் எடுத்து கொள்ளவில்லை..

ஆனால் இன்று இதை தான் அணிந்து கொள்வேன் என்றதில் என்ன இது என்று ஆள் ஆளுக்கு அத்தனை சொல்லியும் கேட்கவில்லை.. முடிவில் செந்தாழினி விருப்பத்திற்க்கு தான் அனைவரும் விட்டு விடும்படி போனது.

இதோ இன்று வந்தவர்கள் அனைவர்ய்மே நகையினால் ஜொலிக்க. செந்தாழினியோ.. கவரிங்க நகையில் மேடையில் நின்று கொண்டு இருப்பதை பார்த்த மருது பாண்டியனின் உள்ளம்.. அன்று நான் பேசியது மிக அதிகப்படியோ.. மகளிடம் என்ன நடந்தது..? என்று தனியே அழைத்து கேட்டு இருக்க வேண்டுமோ என்று நினைத்து கொண்டார்..

காலம் கடந்து வரும் நியாயத்தினால் யாருக்கு என்ன லாபம்…?

இதோ தாங்கள் வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து கொண்ட மகிபாலனின் சகோதரிகள் அங்கும் இங்கு சுற்றி வர.. பார்த்தவருக்கு என்னவோ போல் தான் போனது.. ஒரு நகை கடையே இருப்பவளின் இன்றைய நிலையை நினைத்து.

அண்ணனின் மன அறிந்தவராக தம்பி சரவண பாண்டியன்.. “ ண்ணா எல்லாம் சரியா போயிடும் ண்ணா.. நம்ம பொண்ணு உடம்பில் இருக்கும் பொன்னை பார்க்காதிங்க ண்ணா. முகத்தில் இருக்கும் புன்னகையை பாருங்க ண்ணா.. இது போல நம்ம மகள் சிரித்து நாம பார்த்து எத்தனை நாள் ஆச்சு..” என்று தம்பி கேட்க..

தம்பி சொன்னதும் உண்மை தானே என்று மற்றது மறந்து மனம் நிறைவுடன் பார்த்த மருது பாண்டியவன் நாளைக்கு தேவையான ஏற்பாட்டை கவனிக்க சென்று விட்டார்..

இங்கு மேடையிலுமே மகிபாலன் செந்தாழினி அணிந்து இருந்த அந்த அணிகலங்களை தான் அவ்வப்போது பார்த்து கொண்டு இருந்தான்..

இது விற்கும் நகை போல உள்ளதே என்ற சந்தேகத்தில், ஏன் என்றால் இப்போது கவரிங்க நகையே தங்கம் போல இருக்கிறது தான்.ஆனால் செந்தாழினி அதை போல் எல்லாம் இல்லாது தன் பட்டுப்புடவைக்கு ஏதுவாக இருப்பது போல வாங்கிக் கொண்டதால், அது கவரிங்க என்று அப்பட்டமாக தெரியும் படி தான் இருந்தது.

இதில் மாப்பிள்ளை அறையில் இவன் தயாராகி கொண்டு இருந்த போது சுதா மகிளாவிடம்..

“இது என்ன ட்ராமா… விற்கும் நகை போட்டுக்கிட்டு இருக்கிறது…” என்று சொன்னதில் மகிபாலன் யாரை சொல்கிறார்கள் என்று தெரியாது..

“யார் என்ன போட்டா உங்களுக்கு என்ன….?” என்று கடிந்து கொண்டான்..

அவன் அப்படி கடிய காரணம்.. இல்லாதவர்களுக்கு தங்கம் இல்லை என்றால் இது போல அணிவது ஒரு குற்றமா என்று நினைத்து தான்..

ஆனால் அதையே மகிபாலனின் சகோதரிகள் ஒரு பஞ்சாயத்தை வைத்து விட்டனர்.

“பார்த்தியாமா உன் மகனை இப்போதே அவன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணுவது.” என்ற பேச்சில் தான் ..

மகிபாலன்.. “ செந்தாழினியா…?” நினைத்ததை கேட்டு விட்டான்.

அப்போது தான் அக்கா தங்கை இருவருக்கும் ஒரு நிம்மதி.. யார் என்று தெரியாது தான் பேசி இருக்கிறான் என்று நினைத்து.

அது தொட்டு தான் மேடை ஏறியதில் இருந்து வந்தவர்களை வர வேற்றுக் கொண்டு இருந்தாலுமே அவ்வப்போது திரும்பி திரும்பி செந்தாழினியையும் பார்த்து கொண்டது.

இதில் அவன் பார்வை அந்த அணிகலங்களில் மட்டும் படாது அவளின் முகம் முகத்தில் தெரியும் அந்த சிரிப்புமே பட… உண்மையில் தன்னை பிடித்து திருமணம் செய்து கொள்கிறாளா..? என்று நினைத்துமே அவன் பார்வை செந்தாழினியின் மீது படிந்தது..

செந்தாழினியும் உணர்ந்தாள் தான்.. மகிபாலன் தன்னை பார்ப்பது,, நானே எத்தனை நாள் தான் உன்னை பார்த்தது.. இனி நீ என்னை பார் என்று பார்க்காது வந்தவர்களை வணக்கம் சொல்ல.. ஒரு சிலர் முன் இவளின் அந்த செயலில் இவளை ஒரு மாதிரியாக பார்த்தவர்களுக்கு முறைப்பு என்று கொடுத்து கொண்டு இருந்தவளாள் ஒரு நிலைக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது..

திரும்பி மகிபாலனை பார்த்தவள் என்ன என்று வாயினால் கேட்காது கண்ணால் கேட்ட அந்த பாவனையில் அன்றே அவளிடம் விழுந்து விட்டான் தான்.. பாவன் குடும்பம் கத்டத்தில் இருப்பவன் அதை உணராது.. அதை ரசிப்பு தன்மையில் சேர்த்தவன்..

அவளின் அந்த பாவனைக்கு.. தான் நினைத்ததை கேட்டு விட்டான்.

“இது விற்கும் நகையா.?” என்று .

அதில் ஒரு நொடி செந்தாழினியின் முகம் மாறி விட்டது தான்.. பின் மீண்டுமே புன்னகை முகமாக .

“ஆமாம்..” என்று சொன்னவள் பின்.. “ இனி நான் போடும் நகை எல்லாமே என் கணவன் வாங்கி கொடுத்ததா தான் இருக்கனும்.” என்று கூறியவள் வாங்கி கொடுப்பிங்க தானே. என்ற கேள்விக்கு தன்னால் மகிபாலனின் தலை அசைந்து செந்தாழினிக்கு இசைந்து கொடுத்தது..

மறுநாள் மூகூர்த்தத்திற்க்குமே மணமேடையில் சிரித்த முகத்துடன் அமர… மகிபாலனுமே முன் இருந்த சஞ்சலங்களை அனைத்துமே விடுத்து ஒரு மனம் நிறைந்த மனதோடு தான் செந்தாழினியின் கழுத்தில் தாலியை கட்டியது..

அவன் தாலி கட்டும் நேரம் அந்த நாதஸ்வரத்திற்க்கும் மீறிய ஒரு சத்தம்.. இருந்துமே மகிபாலன் கவனம் மட்டும் இல்லை.. செந்தாழினியின் கவனமும் எனும் சிதறாது இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு தாலியை கடுவ்வதும் வாங்குவதுமாக முடிந்த பின் தான் மகிபாலன் யார் என்று நிமிர்ந்து பார்த்தது..

பார்த்தவன் கண் முன் அவனின் கல்லூரி தோழனும் இன்றைய கலெக்கடருமாக வேதாந்த நின்று கொண்டு இருக்க..

“ஏய் மச்சான்..” என்று எழுந்து கொள்ள பார்த்தவனை எழ விடாது அவன் தோள் மீது கை பிடித்து.

“ஏழுந்துக்காதே.” என்று உரிமையுடம் சொல்ல மகிபாலனுமே நண்பனின் பேச்சுக்கு அமர்ந்து கொண்டவன்.. செந்தாழினி பக்கம் திரும்பி..

“இவன் என் டியர்ஸ்ட் .” என்ற பேச்சை மகிபாலனை முடிக்க விடாது செந்தாழினி..

“வரும் நேரம் இது தானா..” என்று வேதாந்திடம் கேட்க.

அவனோ தன் பதவி மறந்து தன் இரு காதிலும் கை பிடித்து மன்னிப்பு வேண்ட. இதை அதிசயமாக மகிபாலன் பார்த்து கொண்டு இருந்தான் என்றால் பதட்டத்துடன் மருது பாண்டியன் வேதாந்தை பார்த்து கொண்டு இருக்க..

சரவண பாண்டியனோ… “ ண்ணா அது அது அன்னைக்கு அந்த ஐந்து பேருல ஒருத்தன் தானே..” என்ற கேள்விக்கு மருது பாண்டியக் தகை அசைத்து ஆம் என்றார்…








 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
வேதாந்த் அந்த ஐந்து பேரில் ஒருத்தனா 🧐🧐🧐செந்தா இப்பவும் கான்டக்ட்ல இருக்காளா 🤩 🤩 😉 😃 மகிபாலனுக்கும் ப்ரண்டா 😏 😏 😏 😏

அத்தை மகனுங்க எவ்வளவு தப்பா பேசி இருக்காங்க 🥶🥶🥶 அதுக்கு இப்போ வந்து அடி வாங்குறாங்க 🤭🤭🤭🤭🤭

செந்தா இந்த சிறையில் இருந்து தப்பிச்சு அங்கு சந்தோஷமா வாழணும் என்று நினைக்கிறா 🤗🤗🤗🤗🤗🤗 ஆனால் அந்த குடும்பம் 😓😓😓😓😓
 
Last edited:
Active member
Joined
May 24, 2024
Messages
194
Sentha lv mahi thana
Friends Kum triumo
Nalla sutha viduvazho

Semmaya ketta super sentha

Paandi brothers romba late
Ini yosichum waste
Porumaiya irunthiruntha annaike trinjirukum

Hey oruthar collector micha naalu per enna va irukanga
 
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
வேதாந்த் அஞ்சு பேர்ல ஒருத்தனா.... கலெக்டர் & மகி பிரெண்ட் கூட....
செந்தா மகியை லவ் பண்ணி இருக்காளா அப்போ அந்த பண உதவி கூட மகிக்கு தானா🧐🧐🧐🧐

அத்தைகளும் அத்தை மகன்களும் நல்லா வாங்குனாங்க 🤭
செண்பகா தான் தப்பிச்சுட்டா....

செந்தா சூப்பரா பேசுனா... இதே நிமிர்வு புகுந்த வீட்லயும் வேணுமே என்னா அவ எதிர்பார்க்குற மாதிரி அங்க இல்லையே... 😐
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Yaru da antha Vedhanth??? Avan than unmaiya ellam solla poran pola… annaikku enna nadanthuthu nu
 
Top