அத்தியாயம்…18
இன்னொருத்தன் உன் தம்பியா…? என்று கேட்டவனிடம்.. ஏதோ சொல்ல வந்த வேதாந்தை சொல்ல விடாது தன் கை சைகையில் தடுத்து நிறுத்திய மகிபாலன்… தன் மனைவியை பார்த்தான் மகிபாலன் செந்தாழினியுமே தன் கணவனையே தான் பார்த்து கொண்டு இருந்தாள்..
மகிபாலனும் தன் மனைவியை பார்த்து கொண்டே… “ எது என்றாலுமே எனக்கு அவளே சொல்லட்டும்…இத்தனை நாள் எதுவுமே என் கிட்ட சொல்லாம இருந்ததுமே அதுக்கு தானே…” என்று சொன்னவனின் பேச்சில் செந்தாழினியின் உதடு விரிந்தது.. முன் போல் வெடித்து சிரிக்கவில்லை என்றாலும். மெல்லிய ஒரு புன்னகை அவள் முகத்தில், அவலின் அந்த முன்னகை முன்பு கல கலத்து சிரித்ததை விச சக்தி அதிகம் என்பது அவளை தவிர யார் அறிவர்..
அதுவும் அடுத்து கணவன் பேச்சான… “ அது கூட சொல்ல விருப்பம் இருந்தால், சொல்லாம்.. அது கூட என்னை எத்தனை வருஷமா லவ் பண்றா. அது தெரிய தானே தவிர… மத்தது எனக்கு தேவையில்லாத விசயம்..” என்றவனின் இந்த பேச்சில் செந்தாழினியின் கண்கள் லேசாக கலங்குவது போல இருந்தது..
இந்த கலங்கும் கண்களுக்கு மகிழ்ச்சி ஒரு காரணம் என்றால், துக்கம் ஒரு காரணமாக இருந்தது.. இது போல தன் வீட்டில் நினைக்கவில்லையே.. பதினெட்டு வருடம் பெற்று வளர்த்த வீட்டினர் நினைக்கவில்லையே…
அன்று அந்த நிகழ்வு நடந்த பின் தந்தை அத்தனை பேச்சுக்கள்.. தான் அண்ணிமார்கள் என்று கேட்டதில் அப்படியே திகைத்து போய் நின்று விட்டான்.. தான் அன்று காவல் நிலையத்தில் அத்தனை தைரியத்துடன் அதை சொல்ல காரணமே.
என் வீட்டினர் என்று அந்த இருமாப்பில் தானே… மற்றவர்கள் ஒரு மாதிரி பேச கூடும்.. ஆனால் என் வீட்டினர் இருக்கும் போது எனக்கு என்ன நேர்ந்து விட போகிறது என்று தானே அவள் நினைத்தது..
அவளின் அந்த நம்பிடையை இதோ தன் கண்வன் இரண்டே வார்த்தையில் தனக்கு கொடுத்து விட்டான்.. அதிகம் பேசினான் இல்லை.. பழக்கமும் இல்லை.. எனக்கு அவனை தெரிந்த அளவுக்கு அவனுக்கு என்னை தெரியவும் தெரியாது.. ஆனாலுமே ஆனாலும் என்று நினைத்தவள் தன்னை மறந்து எல்லாம் சொல்ல முடியாது உணர்ந்தே தான் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு இருந்தவனின் இதழ் மீது தன் இதழை வைத்தாள் பெண்ணவள்…
எப்போதுமே முதல் முத்தம் ஆண்கள் தான் பெண்ணவளுக்கு கொடுக்க வேண்டுமா என்ன.. முத்தம் என்பது தாம்பத்திய உறவுக்கு மட்டும் அச்சாரம் கிடையாது.. அன்புக்குமே அது தான் நுழைவாயில்..
அன்பு என்பது யாருக்கு யார் மீது வரலாம்.. ஆனால் அன்பை தான்டி வேறு ஒன்று அதிகம் அளவில் இடம் பெறும் போது தான் முத்தத்தை கன்னத்தில் இடாது உதட்டில் கொடுக்கிறோம்..
பெண்ணவளுக்கு அவனே அனைத்தும் என்று நினைத்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன.. இதோ தான் கொடுத்த முத்ததில் அதிர்ந்து தன்னை பார்த்தவனுக்கு நான் புதியவளாக இருக்கலாம். ஆனால் எனக்கு இவன் புதியவன் கிடையாதே.
இதோ அதிர்ந்து கணவன் தன்னை பார்க்க.. அதை விட அதிர்வில் வேதாந்த் தன் முகத்தை திருப்பி கொள்ள என்று இருந்த சமயம் இன்னுமே கணவனின் தாடை தொட்டு முதலில் அவசரமாக கொடுத்த முத்தத்தை இப்போது ஆழ்ந்து அனுபவித்து கொடுத்தாள் பெண்ணவள்..
முன் முத்தத்திற்க்கு கணவன் அதிர்ந்தான் தான். ஆனால் பின் முத்தம் கொடுக்கும் போது முதலில் நெகிழ்ந்தவன்.. பின் அவளை நெகிழ வைத்து கொண்டு இருந்தான்.. பாவம் வேதாந்து தான் இந்த இடத்திற்க்கு அதிகப்படி என்று சென்று விட்டான்..
பின் தான் இவர்கள் நிலை உணர்ந்து தங்களை பிரித்து கொண்டவர்களுக்கு வேதாந்த் முன் நிலையில் என்ன இது என்பது போல உணர்ந்தார்கள் போல… வேதாந்திடம் இருந்து மகிபாலனுக்கு வந்த..
“நல்லா இருடா வீட்டுக்கு போடா. எனக்கு இன்னுமே கல்யாணம் ஆகல.. செந்தா சொன்னது போல உன் வீட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவனிடம் அவ கல்யாண பத்திரிக்கை கொடுத்து சாப்பிட்டு போ என்று சொன்ன பார்த்தியா.” என்று நீண்ட நெடிய மெசஜூக்கு ஒரு சில வார்த்தைகளில் மகிபாலன் பதில் தந்தான்..
“உனக்கு நல்ல பெண்ணா கிடைக்கும்..” என்றவன் மீண்டும் மனைவியுடனான பயணம் தன் வீட்டை நோக்கி.. முன்பை விட இனிய பயணமாகவே அது இருந்தது இருவருக்கும்..
மகி பாலன் வீட்டில் இவர்கள் சென்றதுமே கெளசல்யா அதிர்ந்து தான் விட்டார்… செந்தாழினியை தன் மகனுக்கு பிடித்தது என்பதை விட செந்தாழினி இப்படி முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவாள் என்பது அவர் எதிர் பாராத ஒன்று…
தப்பு செய்த பெண்.. சின்ன வயதில் செய்து விட்டாள்.. இனி நாம் நம் கண் பார்வையில் வைத்து கொண்டால் போதும்.. பிரச்சனை கிடையாது.. இது வெளியில் சொன்னது…
ஆனால் கெளசல்யா மனதில் வேறு ஒன்றும் இருந்தது.. அதாவது தப்பு செய்தவங்க தழைந்து தான் போய் ஆக வேண்டும்.. தனக்கு அடங்கி தான் மருமகள் இருப்பாள் என்று நினைத்தார்..
அது தப்பு செய்தால் தான் என்பதை யோசிக்காது நினைக்க.. மகள்களுமே அதை தான் தாயுக்கு சொன்னது..
“பார்த்தியாம்மா. என்னம்மா பேசிட்டு மகியை கூட்டிட்டு போறதை…” என்று சுதா சொல்ல..
மகிளாவுமே… “ வேண்டாம் என்று தான் ண்ணா சொன்னது நாம தானேம்மா அவனை சரிக்கட்டி ஒத்துக்க வைத்தது என்னம்மா இது.” என்று முதலில் செந்தாழினியை பற்றி பேசியவர்கள் பின்..
சுதா முதலில்.. “ என்னம்மா இது அப்போ உங்க வசதிக்கு ஏத்த மாதிரின்னா என்னம்மா கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் பார்ப்பிங்கலா…?” என்று கோபத்துடன் கேட்டவள்..
பின் நாளை பார்க்க முன் பதிவு செய்து இருந்த அதே மருத்துவமையில் அதே பெண் மருத்துவரிடம் தான் நான் பார்த்துப்பேன் ஆமாம் சொல்லிட்டேன்.. உங்க மாப்பிள்ளையுமே அந்த ஆஸ்பிட்டலில் பார்த்தா நல்லது என்பது போல் தான் சொன்னாரு..
முன் நல்லா போயிட்டு இருந்தது.. பின் வீட்டில் பணப்பிரச்சனையில் என்னுடைய எத்தனை ஆசைகளை நான் அடக்கி வைத்து இருந்தேன் என்று உங்களுக்கு தெரியாதும்மா… அதுவும் எனக்கு மேரஜூம் லேட் இதுல… அவர் கூட வாழாது இரண்டு வருஷம் இங்கேயே இருக்கும் படி ஆனது எதனாலேம்மா…?” என்று கோபத்துடன் ஆரம்பித்த சுதா அழுகையுடன் தன் தாயிடம் கேட்டாள்..
அதாவது கெளசல்யா செந்தாழினியை தப்பு செய்தவள் தனக்கு அடங்கி இருப்பாள் என்று நினைத்த அதே வழியை தான் சுதாவும் தன் அன்னையிடம் பின் பற்றினாள் அதாவது என் ஆசையை அடக்கி நான் இரண்டு வருடங்கள் இங்கு இருக்க காரணம் நீங்க எனக்கு போட்ட அந்த போலி நகையினால் தான் என்று சொல்லாது சொல்லி விட்டவள்..
கெளசல்யாவே… ‘ நீ அழாதே சுதா. உன் ஆசைப்படி தான் எல்லாம் நடக்கும்.. “ என்று சொல்லி விட.. சுதாவுக்கு அத்தனை திருப்தி.. தெரியும் வீட்டில் அன்னை எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும் .. அதனால் கண்டிப்பாக அந்த மருத்துவமனையில் தான் தனக்கு டெலிவரி என்று மகிழ்ந்து மகிளாவின் அறைக்கு சென்றாள்.. முன் அந்த அறை சுதாவின் அறையும் தான்..
பாவம் அவளின் இந்த மகிழ்ச்சி நிலைக்காது என்பது சுதாவுக்கு தெரியவில்லை.. முன் தான் கெளசல்யாவின் முடிவாக இருக்கலாம்.. ஆனால் இனி அந்த வீட்டில் எடுக்கப்படும் அத்தனை முடிவுமே செந்தாழினியின் முடிவாக தான் இருக்கும் என்பது தெரியாது போயிற்று..
செந்தாழினி தன் கணவனின் நிம்மதிக்காகவும்.. அவனின் சுயமரியாதைக்காகவும் என்ன வேண்டும் என்றாலுமே செய்வாள்.. மகிபாலனின் மரியாதை வைத்து தான் செந்தாழினி அந்த வீட்டின் அடுத்த அடுத்த முடிவுகள் இருக்கும் என்பதும்.. அந்த முடிவுகள் அனைத்துமே வீட்டின் மூன்று பெண்மணிகளுக்கு எதிராக தான் இருக்கும் என்பது தெரியாது சுதா அறைக்கு சென்றாள் என்றால்,
கூடத்தில் தன் தாயின் கையை பற்றி கொண்ட மகிளாவோ… “ ம்மா முதல்ல தான் பணம் இல்ல பணம் இல்ல என்று இருந்துட்டோம்… இப்போ தான் இத்தனை வந்து இருக்கு தானேம்மா…கல்யாணம் சாப்பாடு எல்லாம் தான் ரொம்ப சிக்கனமா செய்துட்டிங்க.. இனியாவது கொஞ்சம் நல்ல மாதிரி செய்தா தானேம்மா எனக்கு மாமியார் வீட்டில் மரியாதை..” என்று மகள் இலகி பேசி.. கெளசல்யாவும்..
“சரி டி.. நீ இதையே எல்லாம் யோசிச்சிட்டு இருக்காதே.. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்க போகுது.. சந்தோஷமா இரு போ. நான் செய்யிறேன்.”
அம்மாவின் நான் செய்யிறேன் என்ற இந்த ஒரு வார்த்தையில் மகிளாவுக்குமே நம்பிக்கை தான்.. அவளுமே மகிழ்ச்சியோடு தான் அக்காவிடம் சென்று தன் எதிர்கால கணவனிடம் பேச ஆரம்பித்து விட்டாள்..
தங்கையின் பேச்சை யோசனையுடன் கேட்டு கொண்டு இருந்த சுதா தான்.. “ உனக்கு இவரை ரொம்ப நாளா தெரியுமா?” … என்ன…?..
சுதாவின் இந்த கேள்வி ஆனது பேசிக் கொண்டு இருந்த பேசியை அணைத்து விட்ட மகிளாவுக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தாலுமே, தன்னை நிதானம் படுத்தி கொண்டவளாக..
“எதை வைத்து கேட்கிற…?” என்று தன் பதட்டத்தை வெளிகாட்டி கொள்ளாது தான் கேட்டாள்..
“ இல்ல நீ பேசுறதை வைத்து தான்..” என்ற சுதாவின் பேச்சில்..
மகிளா.. “ க்கா நீ வேலைக்கு போகல வீட்டோட இருந்த தொட்டு உனக்கு ஒரு சில விசயங்கள் புரியல.. எங்க ஐடி பீல்ட்ல இவர் தான் லைப் பார்ட்னர் என்று முடிவு ஆகிட்டா என்ன என்ன எல்லாம் செய்யிறாங்க தெரியுமா…? “ என்று கேட்டவள்..
பின்..” நல்லா பேச ரொம்ப நாள் தெரிந்தவரா இருக்கனும் என்ற அவசியம் வேண்டாம்.. அவரை ரொம்ப தெரிஞ்சிக்க கூட பேசலாம்.. அப்போ தான் நாளை பின்னே நம்ம மேரஜ் லைப்பில் பிரச்சனை இல்லாது போகும்.” என்றவள் கூடவே..
“நீ மட்டும் மேரஜ் முன்னவே மாமா கிட்ட நல்லா பேசி.. ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு இருந்தால், அல்ப அந்த நகைக்காக எல்லாம் மாமா உன்னை அம்மா வீட்டிற்க்கு அனுப்பி இருக்க மாட்டார்.. அதோடு.. “ சுதாவின் வயிற்றில் கை வைத்த மகிளா..
“இந்த சின்ன குட்டி வயிற்றில் இல்லாது இந்நேரம்.. ஸ்கூலுக்கு கூட போய் இருந்து இருக்கலாம்..” என்றவளின் பேச்சில் சுதா வாய் அடைத்து அமைதியாகி விட்டாள்..
கூடத்தில் இருந்த கெளசல்யாவுக்கோ.. மகளை பார்ப்பதா மகனை பார்ப்பதா என்று எண்ணம் தான்.. திருமணத்திற்க்கு முன் மகனை பார்க்கும் தாய் மார்கள் திருமணத்திற்க்கு பின் அது என்னவோ மகனோடு மகளை தான் பார்க்கிறார்கள்.. காரணம் மகனின் பேச்சு அத்தனையிலும் மருமகளின் குரலாக மாமியார்களுக்கு கேட்பதினால்..
இதோ யோசனையுடன் தான் இருக்க வீட்டிற்க்குள் நுழைந்த செந்தாழினிக்கும், மகிபாலனுக்கும்.. அனைவருமே ஆப்ட்டாப் போக்கஸ் எனும் போது தாய் மட்டும் கண்ணுக்கு தெரிவார்களா என்ன.. தெரியாது தான் ஏதோ ஒரு மயக்கத்தில் அவர்கள் அறைக்கு சென்றது..
இதை கவனித்த கெளசல்யாவின் மனது இதுவா அதுவா என்ற தராசில் ஊஞ்சாலாடி கொண்டு இருந்த மனது.. இது.. அதாவது மகளுக்கு இன்னொரு வீட்டிற்க்கு போன பெண்கள் அவர்களை தான் பார்க்க வேண்டும் என்று கெளசல்யாவின் மனது என்ற தராசு மகள்களின் பக்கம் சாய்ந்தது.
கெளசல்யாவை என்ன சுதா மகிளா யாரும் இவர்களுன் கண்ணுக்கு தெரியாது தான் இரவு உணவும் ம முடித்து கொண்டு மீண்டும் படுக்கை அறைக்கு வந்தனர் செந்தாழினியும். மகிபாலனும்..
இந்த இடைப்பட்ட நேரத்தில் செந்தாழினி கொஞ்சம் தெளிந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.. வேதாந்த் எதிரில் கொடுத்த முத்தத்தை மீண்டும் இப்போது தனித்து மகிபாலன் கொடுக்க வந்த போது இரு உதட்டுக்கு இடையில் தன் கை கொண்டு மறித்த செந்தாழினியை என்ன என்பது போல பார்த்த மகிபாலன் முகத்தில் கோபம் கிஞ்சித்தும் இல்லை.. காரணம் மனைவியின் எந்த ஒரு செயலிலும் காரணம் கண்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு..
அதற்க்கு ஏற்றது போல தான் செந்தாழினி… “ நான் உங்க கிட்ட பேசனும்ப்பா…” என்று சொன்னதில்..
மகிபாலனுக்கு தெரிந்து விட்டது.. அவள் எதை பற்றி பேச போகிறாள் என்று..
“ எனக்கு தெரிந்தே ஆக வேண்டிய ஒரே ஒரு விசயம்.. நீ என்னை எப்போ இருந்து லவ் பண்ற. அது தான்.. மத்ததை எல்லாம் வேண்டாம்.. எனக்கு தெரியனும் என்ற எந்த அவசியமும் இல்ல. ஏன்னா நீ சொல்லாமலேயே எனக்கு தெரியுது.. நீ ஐந்து பேரு கூட இருந்த. இருந்த என்பதுக்கு எத்தனையோ அர்த்தம் இருக்கு. ஆனால் நீ சொன்னதுக்கு அர்த்தம் சகோதரனா இருந்து இருப்ப நட்பா இருந்து இருப்ப. இது இல்லேன்னா எதோ ஒரு காரணம். ஆனால் அந்த காரணம் தப்பா மட்டும் இருக்காது.. அது நிச்சயம்..”
கணவன் சொல்லி முடித்தது.. அவன் கொடுக்க மறுக்கப்பட்ட அந்த முத்தத்தை அவள் அவனுக்கு கொடுத்தாள்.. ஆழமான ஒரு முத்தம். மருத்துவ முத்தம் போல இது நம்பிக்கை முத்தம்..
முத்தம் கொடுத்தவளுக்கு உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் கண்ணீர்.. ஒரு சில சமயம் பார்ப்போம் வெயில் அடித்து கொண்டே மழையும் பெய்யும்.. அதே போல தான் செந்தாழினியின் முகத்தில் சிரிப்பும் அழுகையும் இரண்டும் தெரிந்தது..
மனைவியை வாரி எடுத்து தன் மார்பில் புதைத்து கொண்டவன்,..
“வேண்டாம் ஆழி. எனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம்.. நீ ஒன்னும் சொல்லவும் வேண்டாம்..” என்று சொன்னவனிடம் தலையை நிமிர்ந்து கணவனை பார்த்த பெண்ணவள் மறுப்பாக தலையாட்டியவள்..
“சொல்லனும்.. உங்க கிட்ட தான் நான் எல்லாத்தையுமே சொல்லனும்.. இப்போ இப்போ நீங்க சொன்னிங்கலே.. ஐந்து பேரு கூட இருந்ததுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்.. ஆனால் அது தப்பான காரணமா மட்டும் இருக்காது என்று..
இதை இதை தான் நான் என் குடும்பத்தவங்க கிட்ட இருந்து எதிர் பார்த்தேன்ப்பா.. அதுவும் குறைப்பா எங்க அப்பா..ஆனா ஆனா அவங்க…” இதை சொல்லும் போது முன் போல எல்லாம் அவனின் ஆழினிக்கு அழுகை வரவில்லை..
இதை நினைத்து அழுது அழுது ஒய்ந்து போனதால் கூட இருந்து இருக்கலாம்..
சொன்னாள் அனைத்துமே சொன்னாள்… “ உங்கள பஸ்ட் டைம் நான் பார்த்தது பஸ்ஸில்..” என்று செந்தாழினி ஆரம்பிக்கும் போதே.
“ஏய் பொய் சொல்லாதே.. எத்தனை பங்கஷனின் என்னை நீ பார்த்த..” என்று செல்ல கோபத்துடன் கேட்டவன் கணவனை அதை விட செல்லமாக … ‘
“அது எல்லாம் உங்களை அங்கிளா பார்த்தது.. வேறு மாதிரி எனக்கு பிடித்த மாதிரி பார்த்தது பஸ்ஸில் தான்..” என்று பெண்ணவள் சொன்ன விதத்தை ரசித்தவன்..
ஆனால் பொய் கோபமாக. “ ம் உனக்கு எட்டு ஒன்பது வயசு பெரியவன் அங்கிளா…?” செந்தாழினி தன்னை முன் அழைத்த அந்த அழைப்பு நியாபகத்தில் வர சிரித்து கொண்டு கேட்டவனிடம்..
“பின் இல்லையா…?” என்று சொன்னவள் பின்..
‘பீ சீரியஸ்ப்பா.. பஸ்ட் டைம் பஸ்சுல தான் பார்த்தேன்.. எங்க வீட்டு ட்ரைவருக்கு டிமிக்கி கொடுத்து முதல் பஸ் பயணம் அது எனக்கு என் பிரண்ட் கூட…
ஒருத்தவங்க உட்காருவது போல தான் எனக்கு இடம் கிடச்சது.. நான் என் பிரண்டை உட்கார வெச்சிட்டு நான் நின்னுட்டு இருந்தப்ப தான் பின்னாடியில் இருந்து என்னை யாரோ பேட் டச் செய்வது போல இருந்தது.. எனக்கு ஒரு மாதிரி.. எனக்கு இது போல பஸ் ட்ரவல் பழக்கம் இல்லை.. அதே போல தான் இந்த பேட் டச்சும் பழக்கம் இல்லை..” என்ற மனைவியின் பேச்சில்.
“நீ சும்மாவா இருந்த. காலில் போட்டுட்டு இருந்து இருப்ப தானே அதை எடுத்து அவனை அடிக்க வேண்டாம்..”
ஏதோ இப்போது தன் மனைவியை எவனோ தவறாக தொட்டது போல மகிபாலனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது அவனுக்கு..
“எனக்கு பதில் நீங்க தான் அவனை பின்னி எடுத்துட்டிங்கலே.. “ என்ற மனைவியின் பேச்சில்.
“நானா..?” என்று மகிபாலன் சந்தேகமாக கேட்டான்..
“நீங்க தான்.. சாட்சாத் நீங்களே தான்.. ஆனா என்னை பார்க்கல.. அப்புறம் என் பிரண்ட் கூட சொன்னா இந்த அண்ணா ரொம்ப நல்ல அண்ணா… வழியிலே என் அக்காவை ஒருத்தன் வழி மரிச்சி பிரச்சனை செய்யும் போது நீங்களும் ஒன்னொரு பிரண்டும் தான் காப்பாத்தினாரு என்று.. “சொன்னவ கூடவே. இன்னொரு பிரண்ட் வேதாந்த் அண்ணாவையும் அவ காட்டினாள்..
“ஓ..” செந்தாழினியின் இத்தனௌ பேச்சுக்கும் மகிபாலன் பதில் ஒரே வார்த்தையாக இருக்க.
“என்னப்பா…” என்று அவன் கை பிடித்தவளிடம்..
“சினிமா கதையில வருவது போல உனக்கு உதவி செய்ததுமே என் மீது உனக்கு லவ் வந்துடுச்சா..? என்று கேட்டவனிடம் இல்லை.. என்றாள்..
முதக் முறை எனக்கு நியாபகம் இருக்கு.. என் ட்ரஸ் நகை எல்லாம் எனக்கு கம்பர்டபுலாவே இல்ல.. முதல்ல அது எனக்கு தெரிய கூட இல்ல. ஆனா நீங்க சொன்னிங்க.. இது எல்லாம் போட்டா உனக்கு அசவுகர்யமா இருக்கு என்றால் எதுக்கு போடுற..” என்று இரண்டு முறை அது போல வெளியில் போனப்ப உண்மையில் நான் ரொம்ப ப்ரீயா பீல் பண்ணேன் என்றும் சொன்னவள் பின் இதுவுமே சொன்னாள்..
“ஒருத்தவங்களை பிடிக்க பெருசா எல்லாம் காரணம் தேவையில்லைப்பா சின்ன சின்ன விசயமே போதும்.. எனக்கு பிடிச்சிடுச்சி காரணம் எல்லாம் பெருசா இல்ல போல.. அதனால தான் சொல்ல முடியல..” என்றவனின் பேச்சில் மகிபாலன் ..
“வேதாந்த் என் வீட்டு மாப்பிள்ளையாக என்று ஏதோ சொன்னியே அது உனக்கு எப்படி தெரியும் அது நடந்து நாளு வருஷம் முன்..” என்று மகிபாலன் சொல்லும் போதே செந்தாழினி சிரித்து விட்டாள்..
“நீங்க என்ன யாரும் இல்லாம இடத்திலேயே பேசிட்டு இருந்திங்க. எங்க காலேஜ் வெளியில் நின்னுட்டு.. ராகவ் கிட்ட காசு கொடுத்திங்க ராகவ காலேஜ் உள்ளே போன பின்னே…
சுதாவுக்கு இடமே அமையல என்று நீங்க புலம்ப. பேசாம நானே சுதாக்காவை கல்யாணம் பண்ணிக்கிறேன் மச்சான்.. இதுக்க எல்லாம் கவலை படுவீயா.. என்று வேதாந்த் அண்ணா சொல்ல.
ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிறவன் தான் அக்கா என்று சொல்லுவாங்கலா என்று நீங்க வேதாந்த் அண்ணா தலையில் அடித்தது..” என்று சொல்லும் போதே அந்த காட்சி இருவருக்கும் கண் முன் வந்தது போல. இருவருமே ஒரு சேர சிரித்து விட்டனர்…
பின் இது வரை சிரிப்பாக சென்ற பேச்சுக்கள் பின் சீரியஸாக தான் சென்றது..
“நானே போய் தான் ராகவோட கேங் கிட்ட போய் பேசினேன்.. ராகவ் அண்ணா சரண் அண்ணா சுரேஷ் அண்ணா கபிலன் அண்ணா… நானே போய் பேச இரண்டு காரணம் ஒன்னு உங்களுக்கு ராகவை ரொம்ப பிடிக்கும் அவன் கிட்ட வேதாந்த் கொடுத்த பணத்தோட நீங்க பணம் கொடுத்து ப்ரீலீம்ஸ் தேர்வு எழுத க்ளாஸ்க்கு போக சொன்னது.. அவன் தயங்கினப்பா நீ அப்படி அவனை கோச்சிக்கிட்டு.. அவ்வளவு பெரிய மனுஷனா ஆகிட்டியா என்று கேட்டு திட்டி தான் நீங்க ராகவ் அண்ணா கிட்ட பணத்தை கொடுத்தது.. இந்த ஒரு காரணம் போதாதா.. நானே போய் அவங்க கூட பிரண்ஸ் ஆக.. முதல்ல சேர்த்துக்கல… நீ எல்லாம் சும்மா டைம் பாஸ்ஸுக்கு தான் காலேஜ் வருவே என்று .. பின் என் படிக்கு பின் தான் நானுமே அவங்க கனவு படிப்பு தான் எனக்குமே எனும் போது தான் அவங்க கூட சேர்த்துக்குனாங்க..ஆனாலுமே கொஞ்சம் இடை வெளி விட்டு தான் பேசுவாங்க அது ஏன் என்று தான் எனக்கு புரியல..” என்று மனைவி சொன்ன போது அதற்க்கு உண்டான காரணம் ஆண் மகனாக மகிபாலனுக்கு புரிந்தது தான்..
என்ன தான் நல்ல பையன். நன்றாக படிப்பவன். கனவு என்று ஆயிரம் இருந்தாலுமே, அந்த வயதுக்கு உரிய பேச்சுக்களும் அவர்களிடம் இருக்க தான் செய்யும். அதனால் தான் இவளை அவனுங்க சேர்த்து கொள்ளவில்லை என்று நினைத்த மகிபாலனுக்கு ராகவையும் அவன் நண்பர்களையும் நினைத்து கொஞ்சம் பெருமையாகவே இருந்தது..
ஆனால் அடுத்த நொடியே செந்தாழினி சொன்ன… “ ஆனா அன்னைக்கு அவங்களே என்னை அழைத்து பேசினாங்க… எனக்கு ஒரு உதவி வேண்டும் செய்யிறியா..?” என்று கேட்டுட்டு என் போனை கேட்டாங்க கொடுத்தேன் போன் பேசனும் என்று சொல்லிட்டு கொஞ்சம் தூரமா கொண்டுட்டு போயிட்டு திரும்பவும் என் கிட்ட வந்து கொடுத்தாங்க..
நானுமே வாங்கிட்டு என் க்ளாஸ்க்கு போயிட்டேன்.. கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் திரும்பவுமே சரண் என்ற பையன் வந்தான்.. என் கிட்ட தான் உட்கார்ந்தான்.. நான் கலெக்ட்டர் படிக்க ஆசை.. ஆனா அதுக்கு என்ன என்ன செய்யனும் என்று எல்லாம் எனக்கு தெரியாது அவங்க தான் சொல்வாங்க. ஒரு புக் கொண்டு வந்து கொடுத்துட்டு.. இதை படி உனக்கு ரொம்ப யூஸ் ஆகும்.. “ சொல்லிட்டு அவங்க போயிட்டாங்க..”
“அப்புறம் தான் தெரிந்தது என் பக்கத்தில் உட்கார்ந்துட்டு என் பேகில் இருந்த போனை எடுத்து அத ஸ்வீச் ஆப் செய்துட்டு டேஸ்க் கீழே வைக்க தான் வந்தாங்க என்று…”
இது வரை எதோ கதை கேட்பது போன்ற பாவனையில் கட்டில் அமர்ந்து முதுகுக்கு தலையணையை வைத்து கொண்டு இலகுவாக கேட்டு கொண்டு இருந்த மகிபாலன் அதிர்ந்து நிமிர்ந்து அமர்ந்தவன்..
“அப்போ அப்போ உண்மையில் உன்னை கிட்நாப் தான் செய்தாங்களா அவங்க ராஸ்க்கல்..” என்று சொல்லி பல்லை கடித்தான் மகிபாலன்…
.