Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...3

  • Thread Author
அத்தியாயம்….3

தன் முன் மிக எளிமையாக வந்து நின்ற செந்தாழினியை… மகி பாலன் இவள் தான் நாம் பார்க்க வந்த பெண்ணா…? என்பதை விட மருது பாண்டியன் மகளா என்ற சந்தேகமே மகிபாலனுக்கு வந்து விட்டது…

காரணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்த செந்தாழினிக்கும், இப்போது தான் பார்த்து கொண்டு இருந்த செந்தாழினிக்கும், ஆறு என்ன அறுபது வித்தியாசம் சொல்லும் அளவுக்கு உருவத்தில் மட்டும் அல்லாது உடை அலங்காரம் என்று அனைத்திலுமே அத்தனை மாற்றங்கள்..

முன் போல சிரித்து கொண்டோ இல்லை வெட்கப்பட்டு கொண்டோ தன் முன்பு செந்தாழினி நிற்ப்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை..

அவனுமே தனக்கு மனைவியாக வரப்போறவளை பார்க்கும் ஆர்வத்தில் ஒன்றும் இங்கு பெண் பார்க்க வரவில்லையே…ஆனால் ஒன்று மட்டும் மனதில் உறுதி எடுத்து கொண்டு தான் இங்கு வந்தது..

இந்த பெண் தான் தன் மனைவி.. அதில் எந்த வித மாற்றமும் கிடையாது.. ஆனால் முன்பு என்ன நடந்தது என்பதை தான் கேட்க கூடாது.. ஏன் மனதில் கூட நினைக்க கூடாது.. கூடிய மட்டும் நல்ல முறையில் பார்த்து கொள்ள வேண்டும்.. என்பது அவன் எண்ணமாக இருந்தது..

ஆனால் கூட்டு குடும்பம் எனும் போது இவன் ஒருத்தன் மட்டுமே வரும் பெண்ணை நல்ல முறையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் போதுமா…?

இதோ தன் முன் நின்று கொண்டு இருந்த செந்தாழினியின் அந்த எளிமையான புடவையும்.. சிம்புளாக ஒரு சின்ன கம்பல் மெல்லிய ஜெயின்.. இரண்டு கையிலும் மெல்லிய வளையல் என்று வந்து நின்றதை விட அவளின் நிறம் கொஞ்சம் மங்கி அவளின் உடலின் மெலிவு என்று பார்த்தவனுக்கே என்னவோ போல் ஆகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

மகி பாலனின் அம்மா கெளசல்யா மருது பாண்டியனிடமே.. “ண்ணா உங்க பெண் தானா..? என்று கேட்டும் விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

கெளசல்யா அப்படி கேட்டதுமே தன் மனைவியையும் மருமகளையும் முறைத்து பார்த்த மருது பாண்டி..

பின் சமாளித்தவராக.. “என்ன கெளசல்யா அண்ணன் மகளை கூட அடையாளம் தெரியாத அளவுக்கா உன் கண்ணுல கோலாரு வந்துட்டுச்சி…?”

மருது பாண்டியன் இது போல் தான் பேசுவார்… அவர் பேச்சு விளையாட்டு பேச்சா.. இல்லை குத்தி காட்டி பேசுகிறாரா என்று தெரியாத அளவுக்கு தான் இருக்கும்..

மகிபாலனிடம் அது போல் பேசியது கிடையாது.. பேசும் அளவுக்கு இருவரும் இது வரை பேசியது இல்லை என்பது வேறு விசயம்..

முதலில் ஆராய்ச்சியாக பார்த்தவரின் பார்வை இப்போது மகிபாலனை சொந்தத்துடன் பார்த்தது.. மகிபாலனுக்கு அந்த இரண்டு பார்வையுமே பிடிக்கவில்லை..

மகிபாலனுக்கு தான் செந்தாழினியை திருமணம் செய்யும் அளவுக்கு பிடித்து இருக்கா…? இல்லையா.? என்ற யோசனையையும் மீறி அவன் மனதில் ஆழ பதிந்து போன விசயம். வரதட்சணை வாங்கி கொண்டு ஒரு பெண்ணை நான் திருமணம் செய்ய போகிறேன்..

அதுவும் அவர்கள் நிலையை எங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்கிறேன்.. என்பதே.. மொத்ததுக்கு நான் என்னையே விற்றுக் கொண்டு விட்டேன்.. இந்த நினைப்பு வந்த உடனே அதை தான்டி தன் வயதுக்கு ஏற்றது போல அவன் மனமும் செல்லவில்லை. செந்தாழினியை அது போல அவன் பார்க்கவும் முடியவில்லை..

மகிபாலனுக்கு நிறைய செந்தாழினிக்கு கொடுக்கிறார்கள் என்பது தெரியும்.. ஆனால் என்ன என்பது எல்லாம் தெரியாது… அவனின் அம்மா அவனிடம் சொல்லவும் இல்லை.. இவன் கேட்கவும் இல்லை..

என்னவோ அங்கு அமர்ந்து கொண்டு இருப்பதே… ஒரு அவமானமாக எண்ணி தான் இங்கு வந்ததே.. இதில் அனைவரின் பார்வையும் தன் மீதே இருக்கே… அதுவே அவனுக்கு ஒரு வித அசவுகரியத்தை கொடுத்தது… தெரியும் மாப்பிள்ளை என்று தான் தன்னை பார்க்கிறார்கள் என்று..

ஆனாலுமே தன்னை பற்றி இவர்கள் மனதில் என்ன ஒடும்… அந்த நினைப்பு வந்த உடனே சீக்கிரம் பெண்ணை காமிச்சா நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன் தானே.. என்று தான் அவனுக்கு நினைக்க தோன்றியது.

அவன் நினைத்தது போல் தான் சமையல் அறை தான்டி தான் செந்தாழினியின் அறை இருந்தது அவளின் இரண்டு அண்ணிகளுமே அவள் அறைக்கு வந்தார்கள்..

வந்த பெரிய அண்ணி கையில் காபி தட்டு இருந்தது.. அதை செந்தாழினியிடம் கொடுத்த செண்பகம்..

“மாப்பிள்ளை வந்துட்டாரு… இதை எடுத்துட்டு போய் கொடு..” என்றவர் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த செளமியாவிடம் சைகை செய்ய..

அவளோ ஒரு நமுட்டு சிரிப்பை வெளியில் கேட்காத வாறு சிரித்து கொண்டவள் செண்பகத்திடம்..

“என்ன அக்கா காபி தட்டை கொடுத்துட்டு ஒன்னுமே சொல்லாம இருக்க… நம்ம அத்தைங்க சொன்னதை சொல்றது…” என்று ஒரு மாதிரியான குரலில் ஏற்ற இறக்கத்தோடு தான் சொன்னாள்..

இந்த வார்த்தைக்கு என்ற சைகை செய்த செண்பகம்..

“ம் ஒன்னும் தெரியாத பொண்ணை பெத்து வைத்து இருக்காங்க பாரு.. நம்ம சொல்லி அனுப்ப.. ஒன்னுக்கு ஐந்தை பார்த்தவள்..” என்று சொல்ல அதற்க்கு செளமியாவோ.

“ஆனா உனக்கும் எனக்கும் தெரியிறது. இப்போ வந்த மாப்பிள்ளைக்கு தெரியல பாரேன்.. ஆறாவதா இருந்தாலும் பரவாயில்லை என்று தாலி கட்ட உட்கார்ந்து இருக்கான்..” என்று சொன்னவளிடம்..

“ஆறாவதா என்ன ஐம்பதாவதா இருந்தா கூட வந்து இருப்பான். ஏன்னா அவங்க வீட்டு பணப்பிரச்சனை அந்த அளவுக்கு கழுத்து அளவுக்கு இருக்கு…”

அதை எல்லாம் நம்ம மாமனாரு தீர்த்து வைக்கிறது மட்டும் இல்லாம,… அந்த காம்பளக்ஸ்.. இப்போ கட்டிட்டு இருக்க அந்த அடுக்குமாடி வீட்டை கூட கொடுக்க போறார்…

மாதம் அதில் இருந்து வரும் வாடகையே.. இரண்டு லட்சத்துக்கு மேல போகும்.. ம்.. “ என்று ஒரு பெரும் மூச்சு விட்டார் செண்பகம்..

“நீ ஏங்கா இப்படி மூச்சு விடுற… பெண்ணுக்குமே இந்த சொத்து கொடுக்கனும் என்று தானே சொன்னாரு… ஏன் முதல்ல அந்த தங்கம் கடல் நகை கடையிலேயே கூட பொண்ணுக்கும் பாத்தியம் என்று தானே சொல்லிட்டு இருந்தாரு” என்று செந்தாழியின் பக்கத்தில் நின்று கொண்டு அவள் மனது வேதனை அடைய வேண்டும் என்றே பேசிக் கொண்டு இருந்தார்கள்…

இன்னும் என்ன பேசிக் கொண்டு இருப்பார்களோ… அதற்க்குள் செந்தாழினியின் தாய் வளர்மதி..

“இன்னுமா அந்த காபி தட்டை கொடுக்கல.. சீக்கிரம் கொடுத்துட்டு கூட்டிட்டு வாங்க..” என்ற ஒரு அதட்டலில் இரு மகள்களூமே கப் சிப் தான்..

இருந்தும் மெல்ல ஒருவருக்கு ஒருவர்… “ இத்தனை நடந்துமே இது அடங்கல பாரேன்..” என்று குசு குசுக்கவும் தவரவில்லை..

இவர்கள் இந்த பேச்சு சுவாஸ்யத்தில் செந்தாழினி உடுத்தி இருந்த புடவையோ.. இல்லை நகை ஏதும் போடாது வந்து நின்றதையோ கவனிக்கவில்லை..

ஆனால் கூடத்தில் இப்படி வந்து நின்ற மகளின் கோலத்தில் தன் இருமருமள்களையுமே வளர்மதியும் மரகதமும் யாரும் பார்க்காத போது முறைத்து பார்க்க. வாய் மட்டும் அடக்கியதோடு இப்போது பார்வையையுமே அடக்கி கொண்டவராக தலை குனிந்து கொண்டனர் இருமருமகள்களுமே…

தன் இரு அண்ணிகளின் பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியாத குழப்பத்திலேயே காபியை அனைவருக்கும் கொடுத்து விட்டு செந்தாழினி சென்று விட.

செந்தாழினியின் இந்த மாற்றத்தின் ஆராய்ச்சியில் மகிபாலன் இருந்து விட.. இப்படியாக பெண் பார்க்கும் நிகழ்வு முடிவடைந்து அடுத்து கல்யாண பேச்சாக..

அங்கு கூடியிருந்தவர்களில் ஒரு பெரியவர்.. “ அப்புறம் என்னப்பா… எப்போ கல்யாணம் பெண்ணுக்கு என்ன என்ன செய்யிறது என்று சொன்னா. ஒரு நல்ல நாளை பார்த்துடலாம்..” என்ற இந்த பேச்சில் தன் அறையில் அமர்ந்து இருந்த செந்தாழினி பின் பக்கம் வழியாக விடு விடு என்று மேல் ஏறியவள் மொட்டை மாடியில் ஒரு இடத்தில் நின்று கொண்டு விட்டாள்..

காரணம் அந்த இடத்திற்க்கு சரியாக கீழ் கூடத்தில் ஒரு ஜன்னல் உள்ளது… இங்கு நின்றால் கீழே பேசுவது தெளிவாக கேட்கும் என்ற காரணத்தினால்,

ஆனால் இவள் மொட்டை மாடிக்கு சென்றதே வீண் என்பது போல் தான் மருது பாண்டி..

பேசிய அந்த பெரியவரிடம்.. “ கல்யாணத்துக்கு நாள் மட்டுமே குறிச்சா போதும் சித்தப்பூ.. பொண்ணுக்கு செய்ய வேண்டியதை நாங்க பேசியாச்சி..” என்று சொல்லி அந்த பேச்சை முடித்து கொண்டார்..

மருது பாண்டியனின் இந்த பேச்சு செந்தாழினிக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றால், மகிபாலனுக்கு நிம்மதியை கொடுத்தது எனலாம்… எந்த ஆண்மகன் தான் தன் விலை இன்னது என்று கேட்க நினைப்பான்..

இப்படியாக அன்றைய பேச்சி இன்னும் ஒன்னரை மாதத்தில் திருமணம் என்று ஒரு நல்ல நாளில் குறிக்கப்பட்டது.. இருவருக்குமே பெயர் பொருத்தம் பார்த்து விட்டோம்.. ஜாதகம் பொருத்தம் பார்க்க தேவையில்லை என்பது இரு வீட்டார்களின் முடிவாக இருந்தது..

இது போல காதல் திருமணத்திற்க்கு செய்வது உண்டு ஆசைப்பட்டு விட்டார்கள்.. இருவருக்கும் தான் திருமணம் செய்து வைக்க போகிறோம்… ஜாதகம் பார்த்து அவங்க ஏதாவது சொன்னா மனசு தான் கஷ்டப்படும் என்று..ஆனால் இங்கு இருவருக்குள்ளூம் காதல் இல்லாமலேயே இந்த முடிவை இரு வீட்டு பெரியவர்கள் முடிவு எடுத்தனர்…

ஒன்னரை மாதத்தில் திருமணம் என்றதும் மகிபாலனுக்கு தான் பகீர் என்று இருந்தது.. வீட்டு சூழ்நிலைக்கு திடிர் என்று எல்லாம் பணத்தை எப்படி பிரட்டுவது என்ற கவலை அவனுக்கு..

அதனால்.. மகி பாலன்.. “ மேரஜ் கொஞ்சம் தள்ளி வைக்கலாமே…” என்று சொல்லவும்..

அவன் எதற்க்கு அப்படி சொல்கிறான் என்பது வியாபாரம் யுக்தி உடைய சரவண பாண்டிக்கு புரிந்து விட்டது போல.

அதனால் உடனே. .. “ கல்யாணத்துக்கு நீங்க செய்ய வேண்டியதுக்கு என்ன ஆகுமோ அதையுமே நாங்க தந்து விடுகிறோம் மாப்பிள்ளை.. நீங்க பொண்ணுக்கு போடும் அந்த தாலி கொடியை நம்ம கடையிலேயே கூட வாங்கிக்கலாம்..” என்ற சரவண பாண்டியனின் இந்த பேச்சு மகிபாலனுக்கு அத்தனை அவமானமாக இருந்தது..

“நீங்களும் வேண்டாம்.. உங்க பொண்ணுமே வேண்டாம்…” என்று சொல்லி எழுந்து சென்று விடலாம் என்று கூட நினைத்தான்..

ஆனால் முகத்தில் பயத்தை கொட்டி தன்னையே பார்த்து கொண்டு இருந்த மகிளாவை பார்த்தவன் எழுந்து போகவில்லை என்றாலுமே..

“நீங்க சொன்ன நாளிலேயேயே கல்யாண தேதியை வைங்க.. ஆனா மாப்பிள்ளை சார்ப்பா என்ன என்ன செய்யனுமோ.. என் சக்திக்கு நானே தான் செய்து விடுவேன்..” என்ற மகிபாலனின் இந்த பேச்சு யாருக்கு நிம்மதியை கொடுத்ததோ இல்லையோ.. மொட்டை மாடியில் நின்று கொண்டு இதை கேட்ட செந்தாழினிக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது…

பின் கை நனைக்கும் நிகழ்வு முடிந்து மாப்பிள்ளை வீட்டார்கள் செல்லும் வரை செந்தாழினி கீழே இறங்கி வரவில்லை.. கீழே யாருமே அவளை தேடவில்லை என்பது வேறு விசயம்.

ஏன் மாப்பிள்ளையான மகிபாலன் கூட செந்தாழினியிடம் விடைப்பெற்று செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாது தான் சென்றான்.

அவன் நினைவு முழுக்க திருமணத்திற்க்கு என்று ஆபிசில் லோன் போடலாம்.. எவ்வளவு போடுவது.. அது எப்போது சாங்கஷன் ஆகும் என்பதிலேயே இருந்தது..

மாப்பிள்ளை வீட்டவர்கள் சென்றதுமே மருது பாண்டியன் உறவுகள் அனைவரும் போகும் வரை பொறுத்து இருந்தவர்..

அனைவரும் சென்ற பின்.. “வளர்மதி.” என்று மனைவியின் பெயரை அழைத்த விதமே சொன்னது அவரின் கோபத்தை..

சமையல்கட்டில் வேலையாளுக்கு பாத்திரத்தை ஒழித்து போட்டுக் கொண்டே தன் ஒரவத்தியிடம்..

“ஓன்னுக்கு இரண்டு மருமகள்கள் வீட்டுக்கு வந்த பின் கூட.. இதை கூட நாம தான் பார்க்க வேண்டி..” என்ற வார்த்தை முடியும் போது தான் கணவனின் கணீர் குரலில் தன் பெயரை கேட்டதுமே..

அந்த வயதிலுமே ஓடி கூடத்திற்க்கு வரும் வழியிலேயே தன் முந்தி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டு அதையும் சரி செய்து கொண்டே அவரின் முன் மூச்சு வாங்க நின்றார் செந்தாழினியின் அன்னை..

என்ன தான் மருமகள்களை தன் கண்பார்வையில் கட்டி வைத்து இருக்கும் வளர்மதி… கணவன் அழைத்தால், சின்ன பெண் போல ஒடி வந்து நின்று விடுவார்.

அவர் மட்டும் கிடையாது அந்த வீட்டின் அடுத்த மருமகளான சரவண பாண்டியனின் மனைவி மரகதமும் நிலையும் அதுவே… முன் மூத்தவர்களுக்கே இந்த நிலை என்றால், அடுத்த தலை முறையாக இந்த வீட்டிற்க்கு வாழ வந்து உள்ள மருமகள்களின் நிலை இதற்க்கு மேல் தான் என்று சொல்ல வேண்டும்..

இருப்பது மதுரை.. ஆனால் அந்த வீட்டை பொறுத்த வரை சிதம்பரம் தான்…

தன் முன் வந்து நின்ற மனைவியிடம் தன் கோபத்தையும் குறைக்காது தன் குரலையும் தாழ்த்தாது.

“எதுக்கு நீ ஒரு பெரிய மனுஷின்னு இந்த வீட்டில் இருக்க.?”

அவர் உடுத்தி இருந்த பட்டுப்புடவையையும், போட்டு கொண்டு இருந்த நகைகளையும் காட்டி..

“இது எல்லாம் போட்டுக்கிட்டு இந்த வூட்டுல நடமாடிட்டு இருக்க மட்டும் தானா…? இன்னைக்கு பெண் பார்க்க வராங்க.. அந்த பெண் என்ன கட்டி இருக்கா… என்ன நகை போட்டுட்டு இருக்கா..? என்று? பார்க்காது.. ஆள் ஆளுக்கு கல்யாண பெண் போல சிங்காரிச்சிட்டு வந்து கூடத்திற்க்கு நிற்கிறிங்க.. இதை எல்லாம் கூட ஆம்பிள்ளைங்க நாங்க தான் பார்க்கனும் என்றால், அப்போ நீங்க இந்த வூட்டுல பொம்பளைங்க என்று நீங்க எதற்க்கு இருக்கிங்க..?” என்று மனைவியிடம் ஆரம்பித்து கடைசியில் அவரின் பார்வை அங்கு நின்று கொண்டு இருந்த மற்ற பெண்களின் மீதும் சென்றது..

இத்தனை நேரம் பெண்களாக ஒருவர் மீது ஒருவர் பேசிக் கொண்டு இருந்த பெண்களின் வாய் கப் சிப் தான்..

இதில் கூட சரவண பாண்டியனும்… தன் மனைவியிடம்..

“அண்ணிக்கு தான் சமையல் கட்டில் வேலை இருக்கும்.. நீ என்ன செய்யிற..?” என்று அதட்டினார்.

அதற்க்கு அவரின் மனைவி மெல்லிய குரலாக முனு முனுப்பாக.. “ மருமகளுங்க கிட்ட கொடுத்து தானுங்க விட்டேன்..” என்று எப்படியோ ஒரு வழியாக சொல்ல வேண்டியதை சொல்லி விட..

இப்போது அடுத்த வாரிசுகளான மருது பாண்டியனின் மூத்த மகனான வேலவ பாண்டியன்..தன் மனைவியை முறைத்தான் என்றால், சரவண பாண்டியனின் மூத்த மகன்.. கதிர் பாண்டியன் தன் மனைவியை முறைத்து பார்த்தான்..

இங்கு கெளசல்யாவின் குடும்பமோ வீடு வந்து சேர்ந்தனர்.. எப்போதும் போல தன் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து கொண்டான் மகிபாலன்..

மொட்டை மாடி என்றால் அங்கு அறை எல்லாம் கிடையாது.. ஆனால் உச்சி வெயிலில் கூட நிழலாக இருக்கும்..காரணம் இரண்டு பக்கம் மட்டும் அல்லாது இவர்களின் வீட்டில் பின் பக்கமும் வீடு இருக்கிறது..

அனைவருமே அவர்களின் வீட்டை சுற்றி தென்னை மரத்தை வைத்து உள்ளனர்.. மூன்று வீட்டின் தென்னை மரத்து நிழல் மட்டும் அல்லாது இவர்களின் வீட்டின் முன் வைத்து இருந்த இவர்கள் வீட்டின் தென்னை மரத்தின் நிழலும்.. எப்போதுமே இவர்கள் வீட்டின் மொட்டை மாடியின் அனைத்து பகுதியிலுமே படுவது போல இருந்தது…

மாலை மூன்று மணி.. இன்னுமே சூரியன் தன் வெப்பத்தை இந்த உலக்குக்கு கொடுத்து கொண்டு இருந்த போதுமே.. நிழலாக இருக்க.

அடர்த்தியாக நிழல் படியும் இடமாக.. எப்போதுமே இவன் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டவனின் சிந்தனை இப்போது பெண்ணை பற்றி இல்லாது பணத்தை பற்றியதான யோசனை தான் அவனுக்குள் ஒடிக் கொண்டு இருந்தது.

அப்போது மெல்லிய கொலுசு ஒலியின் சத்தம் இவனின் சிந்தனையும் மீறி இவன் காதிற்க்குள் கேட்கும் வேலையில் தான் செந்தாழியினியின் நினைவு மீண்டுமே அவனுக்கு வந்தது..

இன்று கொலுசு அவள் அணிந்து இருந்தாளா..? முன் எல்லாம் தூரம் அவள் நடந்து வந்தாளே ஜல் ஜல் என்ற ஓசை அத்தனை சத்தமாக கேட்கும்.. அவளுமே மெல்ல எல்லாம் நடந்து வர மாட்டள் தொம் தொம் என்று தான் நடப்பது.

ஆனால் மூன்று ஆண்டுகள் முன் தான் பார்த்த அந்த செந்தாழினிக்கும், இன்று தான் பார்த்து வந்த செந்தாழினிக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்..

செந்தாழினியை சின்ன பிள்ளையில் இருந்தே மகிபாலன் பார்த்து இருக்கிறான்.. சின்ன பிள்ளைகள் உடுத்தும் உடையான பிராக்.. இது போன்ற உடையை உடுத்தி எல்லாம் அவளை அவன் பார்த்தது கிடையாது..எப்போதுமே பட்டு பாவடை இது போல தான் பார்த்து இருக்கிறான்.. அது போல நகைகள் இல்லாதுமே பார்த்தது கிடையாது.

முதன் முதலில் இது இரண்டும் இல்லாது… இன்று தான் முதல் முறையாக பார்க்கிறான்.. இவனின் இந்த நினைப்பை தடை செய்யும் வகையாக தூரத்தில் கேட்ட கொலுசின் ஒலி மிக அருகில் கேட்கவும்.. யார் என்று தெரிந்து இருந்ததால் தலை நிமிர்ந்து பாராது.

“என்ன மகிளா வேறு ஏதாவது சொல்லனுமா என் கிட்ட.?” என்று கேட்டவனை தயங்கி தயங்கி பார்த்து நின்ற அவனின் தங்கை மகிளா..

அதே தயக்கமான குரலில்.. “ ண்ணா என் மேல கோபமா ண்ணா…?” என்ற கேள்விக்கு..

“இப்போ என்ன பதில் சொல்ல சொல்ற மகிளா…?” என்று தங்கையின் கேள்விக்கு பதில் அளிக்காது திரும்பி தங்கையை பார்த்து கேட்க..

“ண்ணா.. காதலிக்கிறது தப்பாண்ணா…?” என்று இவள் புதிய ஒரு கேள்வி கேட்டவளையே பார்த்திருந்த மகிபாலன்..

பின் சிரித்து கொண்டவன்.. “ தப்பு இல்லே என்று தான் நினைக்கிறேன்.. ஆனால் அனுபவ ரீதியா எனக்கு அதை பத்தி எல்லாம் எனக்கு தெரியாதுமா.. எனக்கு இருக்கும் பிரச்சனையில் யாராவது ஒரு பெண் என்னை லவ் பண்றேன் என்று சொல்லி என் முன் வந்து நின்னா கூட. இருக்கும் பிரச்சனையில் இது வேறு புது பிரச்சனையா..? என்று மறுக்க தான் தோனும்.. ஆனால் உனக்கு அந்த அனுபவம் இருக்கு தானே.. நீ தான் சொல்லனும்.. நீ சொன்னா தான் சரியாவும் இருக்கும்.. இப்போ நீ சொல் லவ் பண்றது தப்பா இல்லையா..?” என்ற அண்ணனின் பேச்சில் வாய் அடைந்து நின்று இருந்தாள் மகிளா…








 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
மகி அவன் பக்க செலவை அவனே பார்த்துக்கிறேன் என்று சொல்லி செந்தாழினி மனசை குளிர வச்சுட்டான் 😀 😀 😀 😀 😀 😀 இவன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்திருக்கு 😉😉😉😉

மருமகளுங்க தைரியம் இருந்தால் மாமனார் முன்னாடி பேச வேண்டிய தானே 🥶 🥶 🥶 🥶 🥶 🥶

மகிளா 😕😕😕 அதான் உங்க வாழ்க்கை நல்லா இருந்தா போதும் என்று முடிவு எடுத்தாச்சே 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ கல்யாணத்துக்கு பிறகு செந்தாழினிய இங்க நிம்மதியா வாழ விட்டா போதும் 🤗 🤗 🤗 🤗
 
Last edited:
Active member
Joined
Jun 1, 2024
Messages
105
மாமனாருக்கு பயந்து அடங்கி இருக்கும் போதே அண்ணிங்க இந்த பேச்சு பேசுதுங்க... 😡 பெத்தவங்க பொண்ணை சரியா நடத்தி இருந்தா இவங்க எல்லாம் பேச முடியுமா.....

செந்தாழினிக்கு மகி மேல நல்ல அபிப்பிரயம் வந்துருக்கும்.... 😊

அதான் உனக்காகவும் உங்க அக்காக்காகவும் அவனை அடகு வச்சாச்சே அப்புறம் சமாதானப் படுத்தி மட்டும் என்ன ஆகப்போகுது... 😏

மகிளா உனக்கு தான் எல்லாம் தெரியுதே அப்புறம் ஏன் உங்க வீட்டு நிலைமை தெரியல... வரதட்சணை கேட்குறவனை காதலிச்ச.... 🤨🤨🤨
 
Active member
Joined
May 12, 2024
Messages
199
Mahipalan pawam… avanoda sontha selavula kalyana velai parkkurenu sollittan 👏🏻👏🏻👏🏻 thangachi yaraiyo love panni avanga than ponnu kettu vandhanga pola… 🙄🙄🙄
 
Top