Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Eengum Geetham...6

  • Thread Author
அத்தியாயம்….6

வீடு சென்றதுமே எப்போதும் போல மகிபாலன் தஞ்சம் அடையும் அந்த மொட்டை மாடிக்கு தான் இன்றும் தஞ்சம் அடைந்தான்..

“வந்ததும் என்ன டா மேல போற… கொஞ்சம் காபி குடிச்சிட்டாவது போ..” என்று தன் பெரிய மாப்பிள்ளை இங்கு இருக்க.. இப்படி செல்கிறானே என்ற எண்ணத்தில் தன் மகனை கிழே நிறுத்த பார்த்தார் கெளசல்யா..

மகிபாலன் கீழே இல்லாது அவசரமாக மாடிக்கும் போக அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையான பாஸ்கரனும் தானே ஒரு காரணம்..

பின் என்ன…? ஜவுளி கடையிலும் சரி ஓட்டலிலும் சரி தன் அம்மாவாகட்டும் அக்காவாகட்டும் அப்படி ஒரு உபசரிப்பு பாஸ்கரனுக்கு… அவனுக்கு பிடிக்கவே இல்லை…

கட்டிய மனைவியுடன் வாழ ஐம்பது சவரன் கொண்டு வந்தால் தான் ஆச்சி..? என்று நின்று வாங்கி கொண்டு சென்றவரை பார்க்க பார்க்க அப்படி ஒரு ஆத்திரம் அவனுக்கு, இங்கு இருந்தால் தான் ஏதாவது பேசிவிடுவோம் என்ற பயம் ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம்.. இதை கேட்க தனக்குமே தகுதி இல்லை என்பது மற்றோரு காரணம்..

அதனால் “ இப்போ தானே சாப்பிட்டு வந்தேன்.. நீங்க உங்க மாப்பிள்ளையை கவனிங்க…” என்று சொன்னவனின் பேச்சில் என்ன முயன்றும் அந்த மாப்பிள்ளை என்று சொன்ன போது அந்த வார்த்தையும் சரி.. அதை சொன்ன விதமும் சரி அவனை மீறி வெறுப்பாக தான் வந்து விழுந்தது…

இதோ மேல வந்து விட்டான். தன் ஆஸ்த்தான இடமான அந்த தென்னை ஓலையின் நிழலின் கீழ் அமர்ந்து கொண்டவன் தன்னை போல கண்ணை மூடிக் கொண்டவன் முன் செந்தாழினியின் பிம்பம்..

இன்று அவளின் உருவம் மட்டும் அல்லாது அனைத்து செயல்களுமே, அவனுக்கு பிடித்து இருந்தது..

கொண்டு சென்ற பணம் புடவை வாங்கவே சரியாகி போய் விடும் என்று நினைத்து கொண்டு இருந்தவனின் நிலையை சடுதியில் மாற்றி.. புடவை நகை வாங்கியதோடு கையில் மீதம் பணமாக மூன்றரை லட்சமும் இருக்கிறதே..

மேல் செலவுக்கு என்ன செய்வது என்று முழித்து கொண்டு இருந்தவனுக்கு, அத்தனை ஆசுவாசம்..

இனி கடன் என்று ஒருவன் முன் நிற்க தேவையில்லை… இதை நினைக்கும் போதே மகிபாலனுக்கு கடன் வாங்க.. ஒருவன் முன் நிற்கும் போது தான் தன் உண்மையான நிலை என்ன என்று தெரியும் என்பார்கள்..

இனி என்னை நானே சோதித்து பார்த்து கொள்ளும் இந்த நிலை எனக்கு வரவே கூடாது என்று நினைத்த நொடி.. இனி வராது தான்..

அதான் அனைத்து பிரச்சனையையுமே தன்னையும் தன் தன்மானத்தையும் அடமானமாக வைத்து.. தீர்த்து ஆயிற்றே.. பாவம் அவனுக்கு இன்னுமே தெரியாது தன் அன்னையிடம் காம்பளக்ஸ், அந்த அடுக்கு மாடி குடியிருப்பை கொடுப்பது பற்றியான பேச்சுக்கள்.

ஆனால் மருது பாண்டியும் பக்க வியாபாரியாக தான்.. அந்த சொத்தை மகள் பெயரிலும் எழுதாது, மருமகன் பெயருக்கும் ஏழுதாதது நாளை இவர்களுக்கு பிறக்கும் குழந்தை.. அது ஆணோ பெண்ணோ… அந்த குழந்தைக்கு தான் இந்த அடுக்கு மாடி குடியிருப்பும்.. காம்பளக்ஸ்சும் சொந்தம்..

மகளும் மருமகனுமே அந்த சொத்துக்கு வெறும் கார்டியனராக தான் நியமித்து இருப்பது போல ஒரு பத்திரத்தை தயார் செய்து விட்டார்..

இது தெரியாத மகிபாலன்.. கண்டிப்பாக தன் நிலை செந்தாழினிக்கு தெரிந்து இருக்கும்.. என்று நினைத்த போதே. சிரித்து கொண்டான். வெட்கமாக.

ஆண்களின் வெட்கம் அழகானது தான்.. ஆனால் அந்த வெட்கம் ஒரு பெண்..அதுவும் தனக்கு பிடித்தமான பெண் தன்னை பார்க்கும் போது வருமே.. அந்த வெட்கம் அழகானதாக தான் தெரியும்..

ஆனால் தன்னை தானே கீழாக நினைத்து வெட்கி தலை குனிவது என்பது ஒரு ஆணுக்கு மட்டும் அல்லாது பெண்ணுக்குமே தன்னையே கண் கொண்டு பார்க்க முடியாத நிலையில் இருக்கும் போது எப்படி மற்றவர்கள் முன் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு முன் வந்து நிற்பர்… இப்போது அந்த நிலையில் தான் மகிபாலன் இருந்தான்..

இப்படி நினைக்கும் போது தான் அவன் ஒன்றை நினைத்தான்.. அது செந்தாழினி தன்னை போல வெட்கி தலை குனிந்து அவன் பார்க்கவில்லை என்பதை…

செந்தாழினியை மகிபாலன் சின்ன வயதில் பார்த்து இருக்கிறான் தான்..

ஆனால் செந்தாழியின் பெயர் அது போல பரவிய பின்.. அவள் வீட்டிற்க்கு பெண் பார்க்கும் போகும் போதும்.. இதோ இன்று அரை நாள் முழுவதுமே… ஒன்றாக தான் இருந்தனர்.

இத்தனை நேரத்தில் அவளின் உடையில், நகையில் எளிமை தெரிந்தது.. ஏன் சிரிப்பிலுமே அவளிடம் பஞ்சம் தான்.. முன் போல எல்லாம் அவளின் முகம் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவளை முன்பு பார்த்த அனைவருக்கும் தெரியும் படி தான் இப்போதைய அவளின் சிரிப்பை மறந்த முகம் சொன்னது..

ஆனால் யாரையுமே பார்த்து சிரிக்காதவள் தன்னை பார்த்து சிரித்தாள்.. அதே போல் முன்பு இல்லாத முகத்தின் அந்த தெளிவு கூடவே ஒரு கம்பீரம்.. இது தவறு செய்தவர்களிடம் காண முடியாத ஒன்று தானே… இரண்டையும் ஒன்றை ஒன்று முடிச்சு போட்டவன் மகிபாலனுக்கு அவள் ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிவதாய்..

ஆனால் புரிய வேண்டிய யாருக்குமே புரியாது போனது தான்.. இன்றைய அவளின் இந்த நிலைக்கும்.. நாளைய அவள் இருக்க போகும் நிலைக்கும் வித்திட்டது எனலாம்..

இதோ அதை ஒட்டி தான் மகிபாலன் இப்படி செந்தாழினியை நல்ல விதமாக நினைத்து கொண்டு இருக்க.

கீழே இவனின் அக்கா சுதா. தன் அம்மாவிடம் தன் கணவரை மதிக்காது தம்பி மாடிக்கு சென்று விட்டதில், அப்படி ஒரு கோபத்தை அவளுக்கு கொடுத்தது..

தன் கணவன் தம்பியின் இந்த செயலை கவனிக்கவில்லை போல… அதனால் தான் அம்மா கொடுத்த காபியை குடித்து விட்டு… படுக்கை அறையில் ஏசியை போட்டு படுத்து கொண்டு விட்டான்..

“ஆறு மணிக்கு எழுப்பு சுதா.. கடைக்கு போகனும்…” என்று மனைவியிடம் சொன்னவன்..

“நீயும் என் கூடவே வந்துடுறியா.? இல்ல இரண்டு நாள் இங்கு இருந்துட்டு வர்றியா.? என்று கேட்டதற்க்கு சுதா இரண்டு ஆண்டுகள் முழுவதுமாக அம்மா வீட்டில் தான் இருந்தாள்..

கணவன் வீட்டிற்க்கு வாழ சென்றே ஒரு மாதம் தான் ஆகிறது.. இருந்துமே அம்மா வீட்டில் இருக்க தான் சுதா ஆசைப்பட்டாள்..

முன் அம்மா வீட்டில் இருந்த போது வாழவெட்டி என்ற பட்டம் தனக்கு வந்து விடுமோ…? தன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்ற பயத்தில் தாய் வீட்டில் இருந்தது..

ஆனால் இப்போது கணவனோடு தாய் வீடு வந்தது.. அதே போல கணவன் தன் தாய் வீட்டிற்க்கு வந்து தன்னை அழைத்து போனதில் அது என்னவோ சுதாவுக்கு ஒரு பெருமை போல.

அதனால்.. “ நான் ஒரு இரண்டு நாள் இருந்துட்டே உங்க வீட்டிற்க்கு வரேனுங்க…” என்ற மனைவியின் பேச்சில் அவள் கன்னத்தை தட்டிய பாஸ்கரன்..

“இந்த பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டில் எத்தனை நாள் இருந்தாலுமே சலிக்காதே ..” என்று சொன்ன கணவனின் பேச்சையும் ரசித்த ஒரு சில பெண்களின் வகை போல சுதா.

அதனால் தான்… நகை கொண்டு வா இல்லை என்றால் நான் இன்னொரு திருமணம் செய்து கொண்டு விடுவேன் என்று மிரட்டி.. தம்பி தன்னையே அடமானம் வைத்த பணத்தில் நகை கொண்டு போய் இதோ அனைத்தும் மறந்து கணவனோடு தாய் வீடு வந்தவள் தம்பி தன் கணவனை மதிக்கவில்லை என்று சமையல் கட்டில் மாப்பிள்ளைக்கு மாலையில் வடை சுட்டு கொடுக்க என்று உளுந்தை ஊர வைத்து கொண்டு இருந்த அன்னையிடம் சென்ற சுதா.

“ உங்க மகன் செய்யிறது ஒன்று கூட நல்லா இல்லேம்மா…?” என்று தன் மூத்த மகள் வாசித்த குற்றப்பத்திரிக்கைக்கு..

கெளசல்யா.. “ என்ன செய்தான்…” என்று கேட்ட கெளசல்யாவுக்கு மகளிடம் பேச்சு இருந்தாலுமே, வடைக்கு வெங்காயம் இருக்கா.. இல்லை கடைக்கு போய் வாங்கி வர வேண்டுமா என்று வெங்காயத்தின் எண்ணிக்கையை பார்த்த கெளசல்யா…

சரி ஊர வைத்தை உளுந்தை அரச்சிட்டு அதை சரி பாதியா வடை சுட்டு விடலாம்.. மீதியை அதன் தலையில் மிளகு தூளை போட்டு போண்டாவா சுட்டு எடுத்து விடலாம் என்ற யோசனையில் இருந்ததால் பெரிய மகள் சுதா அடுத்து பேசிய பேச்சை சரியாக கவனிக்கவில்லை போல.

அதில் சுதா. “ ஒ என் புருஷனை பார்த்தா உன் மகனுக்கு மட்டும் இல்லேம்மா.. உனக்குமே எலக்காரமா தான் ஆகிடுச்சி போல… ஆமா ஆமா ஆகும் தான்.. புதுசா இன்னொரு மாப்பிள்ளை வர போறாரு.. அடுத்து பெரிய வீட்டில் இருந்து பெண் மருமகளா வந்து பெரிய வீட்டிற்க்கு சம்மந்தியாக போறிங்கலே…”

“ இப்போ என் புருஷன் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க தான் போல..” என்று பாதி அழுகையும் மீதி கோபமாக பேசிய மகளின் பேச்சில் தான் கெளசல்யாவின் மொத்த கவனமும் மகள் பக்கம் வந்தது..

“என்னடி சொல்ற. உன் புருஷனை மதிக்காது யாரு இங்கு போனா.. உன் புருஷனுக்கு தான். தூங்கி எழுந்து வந்தா வடை சுட்டு தர ஏற்பாடு செய்துட்டு இருக்கேன்..” என்று சொன்னதும்..

இன்னுமே ஏறிக் கொண்டால் சுதா.. “ உன் இரண்டாம் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை வீடு வந்தா முந்திரி பக்கோடா பாதாம் அல்வா.. என்று பெரிய கடையில் வாங்கிட்டு வந்து கொடுப்பிங்க.. என் புருஷனுக்கு மட்டும் வீட்டில் இருப்பதை வைத்து ஒப்பேத்தி விட்டு விடுவீங்கலா.. போங்க போங்க நான் போறேன்..” என்று சொன்னவள் தன் கணவனை எழுப்ப அவன் தூங்கி கொண்டு இருக்கும் அறைக்கு செல்ல பார்த்த சுதாவின் கை பிடித்து தடுத்து நிறுத்திய கெளசல்யா.

“ஏய் என்ன டி இது புதுசு புதுசா எல்லாம் செய்யிற. என்ன இப்போ முந்திரி பக்கோடா பாதம் அல்வா… வாங்கனும் அது தானே விடு..” என்று சொல்லி அந்த பிரச்சனையை அப்போதே தான் முடித்து வைக்க பார்த்தார் கெளசல்யா..

ஆனால் அதற்க்கு சுதாவும் விட வேண்டுமே.

“ஓ என் புருஷன்.. இந்த முந்திரி பக்கோடாவுக்கும், அல்வாவுக்கும் தான் நாக்கை தொங்க போட்டுட்டு இங்கு வந்து இருக்கார் என்று நினச்சிட்டிங்கலா..” என்று மகள் இன்னொரு வழியில் பிரச்சனைய கொண்டு சென்றதில்.

பாவம் ஐம்பத்தி ஐந்து வயதில் இருக்கும் கெளசல்யாவினால் ரொம்ப நேரம். சமையல் கட்டில் உட்கார்ந்து பேச முடியாத காரணத்தினால் கூடத்திற்க்கு வந்து அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

பின் தொடர்ந்து வந்த சுதா.. “ என்னம்மா நான் பேசிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு வந்துட்டே…” என்று அதற்க்கும் சத்தம் போட..

தன் காலை இருக்கைக்கு முன்பு இருந்த டீப்பாவின் மீது வைத்து கொண்டவர்..

“காலையில் இருந்து அலச்சல் சுதா.. கால் குடையுது கொஞ்சம் ரொம்ப நேரம் நிற்க முடியல.. அதான்..” என்றதுமே சுதா மகளாக சட்டென்று அம்மா எப்போதுமே தேய்க்கும் தைலத்தை எடுத்து வந்து அவளே தேய்த்தும் விட்டாள்.. பின் மீண்டுமே தன் பிரச்சனையை இப்போது அது இது என்று சொல்லாது.

“ம்மா பாலா செய்யிறது சரியில்லேம்மா.. நீங்க இங்கு இரு என்று சொல்லி கூட மாடிக்கு போனா என்னம்மா அர்த்தம்..?” என்று மகள் கேட்டதுமே.

“அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே சுதா. அதுவும் இல்லாம நம்ம சொன்னோம் என்றதுக்கு தான் விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்ததுமே…அது தான் மாடிக்கு போயிட்டான்.. கொஞ்சம் அவன் நிலமையும் யோசிக்கனும் சுதா…” என்ற அன்னையின் பேச்சுக்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் தான் சுதா..

ஆனால் இத்தனை நேரம் ஜவுளி கடையில் இருந்து வந்ததில் இருந்து இந்த வீட்டில் இருக்கும் மற்றோரு அறையில் புகுந்து கொண்ட மகிளா.

தன் எதிர்கால கணவனும் இந்த நாளின் காதலனுமான நரேந்திரனிடம்.. இன்று சென்ற ஜவுளிக்கடை தொடங்கி.. அங்கு இருந்த பட்டின் ரகம்… பின் நம் திருமணத்திற்க்கும் அங்கு தான் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை முதல் கொண்டு பின் கடைசியாக காதல் பேச்சாக… சிலது பேசி விட்டு அப்போது தான் கூடத்திற்க்கு வந்த மகிளாவின் காதில் கெளசல்யா கடைசியாக பேசிய பேச்சான…

மகிபாலனுக்கு பிடிக்காத திருமணம் என்றதில்.

“ம்மா சும்மா அண்ணனுக்கு பிடிக்காத கல்யாணம் என்று சொல்லிட்டு இருக்காதிங்கம்மா.. இன்னைக்கு பார்த்திங்க தானே.. அந்த பொண்ணு அம்மா அவங்க அண்ணன் அண்ணி யார் பேச்சுமே கேட்கல. கம்மி விலையில் புடவை எடுத்தது… அடமா எடுத்ததை..” என்ற சின்ன மகளின் பேச்சில் கெளசல்யா..

“இது நமக்கு நல்லது தானேடி மகி…அந்த கடை என்றதுமே பாலா. இந்த கடையா.? இங்கு எவ்வளவு விலை இருக்கும் தெரியுமா. ..?கையில் இவ்வளவு தான் இருக்கு…நகை வாங்கனும் இன்னுமே செலவு எல்லாம் இருக்கு என்று கோபமா சொல்லிட்டு இருந்தான். இப்போ பார் பாலா கொண்டு போன பணத்தில் பாதி மிச்சம் தானே ஆச்சு ..” என்று கெளசல்யா சரியாக யோசித்து சரியாக தான் சொன்னது…..

ஆனால் கெளசல்யா நல்ல முறையில் யோசித்தாலுமே மாமியார் மருமகள் ஒன்று கூடி விட்டால், அம்மா வீட்டில் எங்க உரிமை என்ன ஆகிறது என்ற எண்ணத்தில்,

மகிளா. “ம்” என்று ஒரு ம் கொட்டியவள்..

“ம்மா உங்களுக்கு ஒரு சில விசயம் புரியவே இல்லேம்மா…” ( ஆமாம் கெளசல்யாவுக்கு தன் மகளை பற்றியே தான் சரியாக புரியாது… இப்போது முடிந்த இடம் தானே முடித்து வைத்தது என்று மார்த்தட்டி கொண்டு இருக்கிறார்…)

“உனக்கே தெரியும்.. கடையில் செந்தாழினியின் அம்மா சொன்னதை நீங்களுமே கேட்டிங்க தானே. அவங்க பொங்கலுக்கு தீபாவளிக்கு கூட இருபத்தி ஐந்தாயிரத்துக்கு குறைந்து வாங்க மாட்டாங்க என்று அவங்க சொன்னதை…”

மகிளாவின் பேச்சில்.. “ ஆமாம் தான்டி.. பாண்டி வூட்டு பெண்களின் பட்டுப்புடவை பத்தி நம்ம ஜனத்துக்கே தெரியுமேடி.. ஏன் இன்னைக்கு கட்டிட்டு வந்த புடவையை கூட தானே பார்த்த. அவங்க பெருமைக்கு எல்லாம் அப்படி சொல்லலேடி..” என்று தன் சின்ன மகள் எதற்க்கு இந்த பேச்சை எடுத்தார் என்பதை புரிந்து கொள்ளாது தன் புதிய சம்மந்தியின் புகழ் பாடியது.. அவரின் இரு பெண்களுக்குமே பிடிக்கவில்லை.

அதில் மகிளா தான் சொல்ல நினைத்ததை நேரிடையாகவே.. “ அது தான்மா நான் சொல்லுறேன்.. நம்ம உறவுக்கு என்ன..? நம்ம மதுரைக்கே தெரியும் அவங்க எல்லாம் எத்தனை விலைக்கு புடவை எடுப்பாங்க என்று,,”

“ஆனால் இன்னைக்கு உங்களுக்கு மருமகளா வரவ... என்ன விலைக்கு எடுத்தா.. அதுவுமே கல்யாணத்திற்க்கு… யோசி.. உங்க மகன் கிட்ட எத்தனை பணம் இருக்கு.. கடன் வாங்கியது எல்லாமே எப்படி தெரியும்..? யோசிங்க.. அப்புறம் இதையுமே யோசிங்க… புடவை நகை வாங்கும் போதும் சரி வாங்கிய பின்னுமே சரி…

உங்க மருமகள் அவள் அம்மாவை கூட பார்க்கல. உம் மவனை தான் பார்த்தது.. ஆ இன்னொன்னு ஒரு முக்கியமான ஒரு விசயம். இன்னைக்கு நீங்க கவனிச்சிங்கலா என்று எனக்கு தெரியல.

செந்தாழினி அவள் அம்மா பேச்சை கூட சட்டை செய்யல. மதிக்கல… எவ்வளவு பெரிய தப்பு செய்தது அந்த பொண்ணு.. நீங்கலா இருந்தா என்ன செய்து இருப்பிங்க.” என்று மகிளா சொன்னது தான் தாமதம் கெளசல்யா..

“வெட்டி போட்டு இருப்பேன்..” என்ற அன்னையின் இந்த பேச்சில் மகிளாவுக்கு மனதில் கொஞ்சம் பயம் வந்தது என்னவோ நிஜம் தான்…

ஆனால் அம்மாவுக்கு தெரியவா போகுது.. அதுவும் தன் அண்ணன் சொல்ல மாட்டான். தன் உடன் பிறப்பை பற்றி நன்கு தெரிந்தவளாக அது கொடுத்த தைரியத்தில், மேலும்.

“அது தான் சொல்றேன் ம்மா. ஆனா அவங்க வீட்டில் அப்படி செய்யல.. அந்த அளவுக்கு அந்த பெண் அந்த வீட்டில் முக்கியம் ..” என்று சொன்ன மகளையே பார்த்திருந்த கெளசல்யா.

“நீ என்ன எனக்கு தெரிந்த விசயத்தையே சொல்ற… அந்த வீட்டில் என்ன அவங்க குடும்பத்திற்க்கே செந்தாழினி தான் பெண்… அது இந்த ஊருக்கே தெரியும்.. அதே போல அந்த பெண்ணை கொண்டாடியதும் இந்த ஊருக்கே தெரியும்.. அந்த பெண் அப்படி செய்யலேன்னா…” என்று கெளசல்யா சொல்லி கொண்டு வந்த போது..

அன்னையின் பேச்சை தடுத்து நிறுத்திய மகிளா.

“அது தாம்மா நான் சொல்றேன்.. அந்த வீட்டில் தூக்கி வைத்து தலையில் கொண்டாடியதால் தான் தெனவெடுத்து அந்த வேலை பார்த்தது.. இங்கு எல்லாம் வந்ததுமே வைக்கும் இடத்தில் வைத்தா தான் கொஞ்சம் அடக்கம் ஒடுக்கம்மா இருப்பா.. கொஞ்சம் பார்த்து நடந்துக்க அவ்வளவு தான் நான் சொல்வேன்..

அதே போல இன்னைக்கு வைத்து பார்த்தால், அண்ணன் பிடிக்காம எல்லாம் இந்த கல்யாணம் செய்துக்கல என்று தான் தோனுது… எனக்கு என்னவோ அண்ணன் கடன் வாங்கியது முதல் கொண்டு சொல்லி இருப்பாங்க. அது தான் கம்மி விலையில் வாங்கி இருக்காங்க என்று எனக்கு தோனுது…” என்று மகிளா பெசிக் கொண்டு இருக்கும் போதே பாஸ்கரன் படுக்கை அறையில் இருந்து எழுந்து வர.

கெளசல்யா மாப்பிள்ளைக்கு தேவையானதை செய்ய சமையல் கட்டுக்கு செல்ல. சுதாவோ…

“ம்மா தம்பியை கீழே இறங்கி வர சொல்லி.. அந்த முந்திரி பகோடாவும். அல்வாவும் வாங்கி வர சொல்.. மகி மாப்பிள்ளை வீடு வரும் போது வாங்கி வந்த கடையிலேயே வாங்க சொல்..” என்று சொல்ல.

கெளசல்யாவும் சின்ன மகளை மாடிக்கு அனுப்பி மகனை வர சொல்லி சுதா சொன்னதை செய்து விட்டு காபி மட்டுமே கலக்க சமையல் கட்டுக்கு சென்று விட்டார்..

பின் வீட்டு பெரிய மாப்பிள்ளையாக அனைத்து மரியாதையும் பெற்றுக் கொண்டே பாஸ்கரனும் மாமியார் வீட்டில் இருந்து மனைவியை இரண்டு நாட்கள் கழித்து அழைத்து செல்கிறேன் என்று விட்டு சென்றது..

இங்கு செந்தாழினியின் நாத்தனார்கள் அவளுக்கு எதிராக தன் அம்மாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் அதே வேளையில் தான் செந்தாழினி தன் அப்பாவிடம்..

அதுவும் மூன்று வருடங்கள் முன் தன் தந்தையிடம் பேசிய பேச்சே கடைசி பேச்சாக இருக்க. இன்று மூன்று ஆண்டுகளுக்கு பின் தன் தந்தையிடம் தன் மெளனத்தை உடைத்து பேசிக் கொண்டு இருந்தாள்..

மகிபாலன் போலவே தான் இரண்டு மணிக்கு எல்லாம் செந்தாழினி குடும்பமும் வீடு வந்து சேர்ந்தது..செந்தாழினி எப்போதும் போல தன் அறைக்கு செல்லும் போது தான் மருது பாண்டி தன் மனைவியிடம்..

“நகை எது எது புதுசு எடுக்கனும் . ஒரு நாள் உன் மகளை கூட்டிட்டு கடைக்கு வா..” என்ற பேச்சில் தன் அறைக்கு செல்லாது தன் தந்தையின் முன் வந்து நின்றவள்..

“அது தான் எமக்கு போட வேண்டிய நகைகளை என் நாத்தனாருங்களுக்கு போட்டிட்டிங்கலே..” என்ற பேச்சை தன் தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்..






 
Active member
Joined
Jun 23, 2024
Messages
71
சுதா 🥶🥶🥶🥶🥶 இரண்டு வருஷம் துரத்தி விட்ட புருஷன் உனக்கு பெருசு 😣😣😣😣😣 அவனோட மரியாதை பத்தி யோசிக்கிற 🤧🤧🤧🤧 உனக்கு எல்லாம் நல்ல புருஷன் கிடைச்சிருந்தா 🥶🥶🥶🥶

மகிளா 😡 😡 😡 உன் திருட்டு தனம் வெளியே வரட்டும் 😕😕😕😕

இரண்டு பேரும் சேர்ந்து செந்தாவுக்கு எதிரா இப்பவே அம்மாவை தயார் செஞ்சு வைக்குறாங்க 🥶🥶🥶🥶

செந்தா இப்போ இருக்கிற நிமிர்வோடு இந்த குடும்பத்துக்கு நீ வேப்பிலை அடிக்கணும் 🤨🤨🤨🤨

தப்பே செய்யாத நிமிர்வு 🤓🤓🤓🤓 மகிக்கு நல்ல புரிதல் 😉😉😉😉

அப்பா கிட்ட நல்லா கேள்வி கேளு 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Active member
Joined
May 12, 2024
Messages
199
Pawam Mahipalan 😥😥😥
Intha Akka kari pesura pechai paru…. Vittirukkanum ne vaala vettiyavr irunnu 🙄🙄🙄
Ithula thangachi vera… un vandavaalam ellam thandavaalam erinal theriyum…

Kaushalya… innume unga magalgal sollura pechai kettu aadatheenga… marumagal ah olunga nadathunga
 
Top